Everything posted by தமிழ் சிறி
-
ஆகஸ்ட் 30 - சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தன்று விசேட கவனயீர்ப்புப் பேரணிக்கு அழைப்பு
யாழில் 30ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே போராட்டம் தொடர்பில் அறிவித்துள்ளனர். அதன்படி யுத்தம் நிறைவுக்கு வந்த நாட்கள் தொடக்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி போராடி வருகிறோம்.இது வரையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை. உள்ளக விசாரணைகளின் ஊடாக நீதி கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை எனவே தான் நாம் சர்வதேச விசாரணைகளை கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம் அந்த வகையில் எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். மேலும் எமது போராட்டத்திற்கு தமது அரசியல் நிலைப்பாடுகளை கடந்து கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். https://athavannews.com/2024/1397129
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
அரச நிர்வாகத்தில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும் – அநுரகுமார! தமிழர்களின் மொழிக்கான உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழ் அதிகாரியின், தமிழ் மொழி மூலமான கேள்விக்கு, தமிழ் மொழியிலேயே பதிலளிப்பது கட்டாயமாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வளமான நாடு சுகமான வாழ்வு என்றும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் இன்று காலை வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால் இன்று இந்த கொள்கைப்பிரகடனம் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் விடுதியில் இந்நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதலாவது பிரதிகள், மத தலைவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த அநுரகுமார திஸாநாயக்க, ”நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை எமது அரசாங்கத்தில் நீக்கப்படும். அதற்கு மாற்றீடாக புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவரவுள்ளோம். நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்றும் உருவாக்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சி கோட்பாட்டை செயல் வடிவில் அமுல்படுத்துவோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக 2015-2019 வரையான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும். குறிப்பாக புதிய சந்தனையில் அனைத்து இன மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை நாம் உருவாக்குவோம். தமிழர்களின் மொழிக்கான உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம். அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம். அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்து உண்ணும் நிலைமைகளில் மாற்றம் ஏற்படவேண்டும். தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தை நாம் நாட்டில் கட்டம் கட்டடமாக செயற்படுத்துவோம். பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலனை நியாயமான முறையில் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்போம். நடுத்தர மக்களை ஏழ்மையில் வைத்துக்கொண்டு நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது. பாடசாலை கல்வி கட்டமைப்பை மறுசீரமைப்போம். உணவு, கல்வி, சுகாதாரம் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவோம். நீர் மற்றும் மின்சார கட்டணத்தையும் குறைப்போம். இதற்கு மக்களின் அங்கீகாரம் எங்களுக்கு மிகவும் அவசியமானது” என அநுரகுமார திஸாநாயக்க மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1397131
-
யாழ். குறிகட்டுவானில் பொதுமகனை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் பணியிடை நீக்கம்!
தமிழ் பொலிஸ்காரன் என்று நினைக்கின்றேன். அதுதான்... வேலையை விட்டு, தூக்கி விட்டார்கள். சிங்களவன் என்றால்... பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்திருப்பார்கள்.
-
திராவிடக் கட்சிகளை அகற்றுவதே குறிக்கோள் – அண்ணாமலை!
திராவிடக் கட்சிகளை அகற்றுவதே குறிக்கோள் – அண்ணாமலை! திராவிட அரசியலை அடியோடு ஒழிப்பதற்கு 2026 தேர்தல்தான் சரியான தருணம் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தொிவித்துள்ளாா். சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபேதாதே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா். அத்துடன், பிரதமர் மோடியைப்போலவே நடந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆசைப்படுவதாகவும், இரண்டு திராவிடக் கட்சிகளை அகற்றவே தன்னை மாநிலத் தலைவராக நியமித்து உள்ளனர் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளாா். அத்துடன், 2024 தேர்தலில், ஒரு மாற்றுச் சக்தியாக தமிழகத்தில் பாரதிய ஜனதா நிரூபித்துள்ளது எனவும், கருணாநிதியின் அரசியல், தனிமனித வாழ்க்கையை பிரித்துப் பார்க்கும் பக்குவம் தமது கட்சிக்கு உள்ளதெனவும் அவா் தொிவித்தாா். தி.மு.கவுடன் எப்போதும் பாரதிய ஜனதா கூட்டணி வைக்காது என்பதுடன், தொண்டர்களை கேட்டுத்தான் தேசிய கட்சியான பாரதிய ஜனதா முடிவு எடுக்கும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை மேலும் குறிப்பிட்டாா். https://athavannews.com/2024/1397097
-
இசைந்து வரும் ஏனம் - சுப.சோமசுந்தரம்
ஜேர்மன்காரரின் காலை, மதியம், மாலை நேர உணவு நேரத்தில்... பன்றி இறைச்சி முக்கிய இடத்தை பிடிக்கும். 🙂 முரண்நகை என்னவென்றால்... கோவம் வந்தாலும், பன்றியையும், நாயையும் சேர்த்து Schweinehund என்று திட்டுவார்கள். 😂 ஆனால், அவர்கள் மிக விரும்பும் விலங்குகளில்.. பன்றியும், நாயும் முதல் இடத்தில் இருக்கும். 🤣 பிற் குறிப்பு: திரு. சுப.சோமசுந்தரம் அவர்களே... தங்களுக்கு இந்தப் படங்களைப் பார்க்க சங்கடமாக இருந்தால்... தயவு செய்து சொல்லுங்கள், உடனே நீக்கி விடுகின்றேன். 🙂
-
கருத்து படங்கள்
- இசைந்து வரும் ஏனம் - சுப.சோமசுந்தரம்
அருமையான கட்டுரை 👍 சுப.சோமசுந்தரம் அவர்களே. நீங்கள் கணிதப் பேராசிரியராக இருந்து கொண்டு, தமிழிலும் சிறப்பான ஆளுமை உங்களிடம் உள்ளதை எண்ணி வியந்தேன். 🙂- வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
அப்படி போடுங்க. 👍🏽- வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
விசுகர்... சிலரின் பழக்க தோசத்தை மாத்துறது கஸ்ரம் என்றாலும், முயற்சிப்பதில் தவறு இல்லை. 😂 நெடுக... முதுகு முட்ட, அழுக்குடன் இருப்பதும்... அவர்களுக்கு அரிப்பாக.. இருக்கும்தானே... 🤣- வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
அமுதலிங்கம், சம்பந்தன் போன்றோர் எதிர்க்கட்சி தலைவராக வர முடியுமாயின்... இப்போது நடக்கும்... ரணில், சஜித், அனுரா.. எனும் முக்கோண போட்டியில்.... தமிழன் ஜனாதிபதியாகவும் வர சந்தர்ப்பம் வரலாம். வண்டியின்... சக்கரம் நெடுக ஒரு இடத்தில் நிற்பதில்லை. 🙂- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
தாயகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்... பிரித்தானியாவில் கருத்தாடல். 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 முதல் 8:30 வரை.- வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
அலறும்.. சஜித் பிரேமதாசா. 😂 🤣 //தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்கவேண்டாம்; தனக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் - தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் சஜித் வேண்டுகோள். 👇 //- வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
தமிழர் மட்டுமன்றி சிங்களவர், முஸ்லீம்களும் அரியத்தாருக்கு வாக்கு போட்டுள்ளார்கள் போலுள்ளது. ஏராளன், சஜித்தும்… தமிழ் பொது வேட்பாளரினால் தனது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று பேட்டி கொடுத்துள்ளது உண்மையாகி விட்டது. 😁- வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
அடேங்கப்பா…. போற போக்கிலை, அரியநேந்திரன்… ரணிலையும் முந்தி விடுவார் போலுள்ளது. 😂 சங்கு சின்னம்… பொதுமக்களிடம் நல்ல வேகமாக பரவியிருக்கு. 😁- கப்டன் பிறந்தநாள் – 71 நிமிடங்களில் 71 டாட்டூ.
தே.மு.தி.க தலைமை அலுவலகம் இனி ‘கேப்டன் ஆலயம்’ என அழைக்கப்படும் – பிரேமலதா விஜய்காந்த். மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் விஜயகாந்தின் முழு உருவ வெண்கல சிலையை கட்சியின் பொதுச்செயலாளரும், விஜய்காந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “தே.மு.தி.க தலைமை அலுவலகம் இனி ‘கேப்டன் ஆலயம்’ என்று அழைக்கப்படும். புதிதாக யூடியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும்.” என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397073- அமெரிக்காவை தொடர்ந்து இலங்கைக்கு விரையும் சீன கப்பல்
இலங்கைக்கு ஒரு பேராபத்தும் இல்லை. எல்லா இடத்திலும் தண்டினால்... அவனும் உரித்துடன் வரத்தான் பார்ப்பான். இந்த போர்க்கப்பல்கள் கண்டபடி வருவதைப் பற்றி... புத்த பிக்குகளோ, கடும் சிங்கள போக்குடையவர்களோ... வாயே திறக்க மாட்டார்கள். தமிழர் பிரச்சினைகளை இவர்கள் சுமுகமாக அணுகி தீர்த்திருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? ஆனால் அதன் மூலகாரணத்தைக் கூட தெரிந்தும்... தெரியாத மாதிரி நடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் கெட்ட கேட்டிற்கு... இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டி வரும்.- பால் சமநிலையை பேணத் தவறிய தமிழ் அரசியல்! நிலாந்தன்.
பால் சமநிலையை பேணத் தவறிய தமிழ் அரசியல்! நிலாந்தன். அண்மையில், தமிழ் கட்சிகளையும் குடிமக்கள் சமூகத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்த ஐரோப்பிய நாடு ஒன்றின் ராஜதந்திரிகள் தங்களைச் சந்தித்த தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் ஏன் ஒரு பெண்கூட இல்லை என்று கேட்டிருக்கிறார்கள். அவரை சந்தித்து குழுவில் மட்டுமல்ல, அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு என்று அழைக்கப்படுகின்ற மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கட்டமைப்புக்குள் மொத்தம் 14 பேர்கள் உண்டு. அதில் ஒருவர் கூட பெண் இல்லை. அதுபோலவே தமிழ் கட்சிகள் மத்தியில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் என்று பார்த்தால் அனந்தி சசிதரனின் கட்சியைத் தவிர ஏனைய பெரும்பாலான கட்சிகளில் மேல்நிலைப் பொறுப்புகளில் பெண்கள் இல்லை. இவை விட முக்கியமாக அண்மையில் ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த மொத்தம் 39 பேர்களில் ஒருவர் கூட பெண் இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதே சமயம் சிவில் சமூகங்கள்,செயற்பாட்டாளர்கள்,மாணவர்கள், தொழிற்சங்கங்கள் போன்றவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய ஆகப்பிந்திய மக்கள் அமைப்புக்குள் ஒப்பிட்டுளவில் பெண்களின் தொகை அதிகமாக உள்ளது.அந்த அமைப்பு ஒப்பிட்டுளவில் பால் சமநிலையைப் பேண முயற்சிக்கின்றது.ஆனால் கட்சி அரசியல்வாதிகளின் மத்தியில் பால் சமநிலை மிக குறைவாகவே காணப்படுகின்றது. வெளிநாட்டுத் தூதரகங்களின் சந்திப்புகளில் அல்லது வெளிநாட்டு தூதுவர்கள் வரும்போதெல்லாம் ஆகக்கூடியபட்சம் பால் சமநிலையைப் பேண முயற்சிக்கிறார்கள். தமிழ் அரசியலில் பெண்களின் வகிபாகம் என்பது கடந்த 15 ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது எனலாம். உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் உண்டு. அந்தச் சட்டம் காரணமாகவே பெண்களை அதிகமாக உள்வாங்க வேண்டிய ஒரு தேவை கட்சிகளுக்கு ஏற்பட்டது. ஆனால் எத்தனை கட்சிகள் பொருத்தமான பெண் ஆளுமைகளை உள்வாங்கியுள்ளன? என்ற கேள்வி உண்டு. பெண்கள் மத்தியில் தலைமைத்துவ பண்பு மிக்கவர்கள் குறைவு என்று யாராவது சொல்வார்களாக இருந்தால், திருப்பிக் கேட்கலாம் ஆண்கள் மத்தியில் மட்டும் அவ்வாறு தலைமை பண்புள்ளவர்கள் அதிகமாக உண்டா? அப்படி இருந்திருந்தால் ஏன் கட்சிகள் இப்படிச் சிதறிக் காணப்படுகின்றன? ஏன் கட்சிகள் நீதிமன்றம் ஏறுகின்றன? ஆனால் 2009க்கு முன்பு ஆயுதப் போராட்டத்தில் கணிசமான அளவுக்கு பெண் போராளிகள் காணப்பட்டார்கள்.யுத்த களங்களில் பெண்கள் வீரதீரச் செயல்களைச் செய்தார்கள். பெருமளவுக்கு ஆண் மையச் சமூகமாகிய தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் அவ்வாறு துணிந்து முன்வந்தமையும் கற்பனை செய்ய முடியாத வீரத்தை வெளிக்காட்டியமையும் தியாகங்களை செய்தமையும் தமிழ் நவீன வரலாற்றில் ஒரு பெருந்திரூப்பம் என்றே கூறலாம். ஆனால் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் நிலைமை தலைகீழாகிவிட்டது. புனர்வாழ்வு பெற்ற ஒரு பெண் போராளி ஒரு முறை ஒரு கதிரையை வைத்து அதில் ஏறி,ஓரமாக நின்ற பப்பா மரத்தில் ஒரு பழத்தைப் பிடுங்க முயற்சித்திருக்கிறார். அவருடைய தாயார் அவரை எச்சரித்திருக்கிறார். “அயலில் இருப்பவர்கள் கண்டால் என்ன நினைப்பார்கள் இறங்கு, அதில் ஏறி நிக்காதே” என்று. அந்தப் பெண் தனது நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார் “இயக்கத்தில் இருந்த காலத்தில் தென்னை மரம் ஏறிதேங்காய் பிடுங்கியவர்கள் நாங்கள். ஆனால் கதிரை வைத்து மதிலில் ஏறி பப்பாப் பழம் பிடுங்க வேண்டாம் என்று எனது தாயார் கூறுகிறார்” என்று. அவருடைய கவலை நியாயமானது. ஆனால் எந்தக் குடும்பங்களில் இருந்து பெண்கள் ஆயுதப் போராட்டத்திற்கு போனார்களோ,அதே குடும்பங்களில் பால் சமத்துவம் தொடர்பான விழிப்பு உருவாக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி இங்கு முக்கியம். குடும்ப மட்டத்திலும் அந்த விழிப்பு ஏற்படவில்லை. சமூகத்தின் ஏனைய எல்லா நிறுவன மட்டங்களிலும் அது பெருமளவுக்கு ஏற்படவில்லை. அரசு சார்பற்ற நிறுவனங்கள், அனைத்துலக அரசு சார்பற்ற நிறுவனங்களில் பால் சமத்துவத்தைப் பேண வேண்டிய ஒரு நிலைமை உண்டு. ஏனென்றால் அவை அனைத்துலக நியமங்களுக்கு உட்பட்டு பால் சமநிலையை பேண வேண்டும். ஆனால் உள்ளூர் நிறுவனங்கள் எல்லாவற்றிலும் அந்த நிலைமை இல்லை. பள்ளிக்கூடங்களில் பால் சமத்துவம் முழுமையாகப் பேணப்படுகிறது என்று எடுத்துக் கொள்ள முடியாது. பிள்ளைகளை உருவாக்கும் பள்ளிக்கூடங்களில் பேணப்படாத பால் சமத்துவத்தை சமூகத்தில் ஏனைய மட்டங்களில் எப்படி எதிர்பார்ப்பது? சில முன்னணிப் பாடசாலைகளில் பெண்கள் முன்னிலையில் மிடுக்காகக் காணப்படுகிறார்கள்.ஆனால் அது எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக ஆசிரியைகள் பண்பாட்டு ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என்று கல்வி அமைச்சு வற்புறுத்துகிறது.அதற்கு கீழ் உள்ள திணைக்களங்கள் வற்புறுத்துகின்றன.பாடசாலை வேளை அல்லாத வேளைகளில் பிள்ளைகளுக்கு ஏதாவது பயிற்சியைக் கொடுப்பதற்காக பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியைகள் சேலை அணிந்து வருமாறு நிர்பந்திக்கப்படுகின்றார்கள். சேலையும் பிளவுஸும் ஒரு பண்பாட்டு உடுப்பா என்ற கேள்வி தனியாக ஆராயப்பட வேண்டும். ஆனால் கல்வித் திணைக்களம் பெண்களை பண்பாட்டு உடுப்போடு வருமாறு நிர்பந்திக்கின்றது.அதே சமயம் ஆண்கள் மேலைத்தே உடுப்புகளான சேட்,லோங்ஸ் என்பவற்றோடு வருகிறார்கள். அதை யாரும் பிரச்சினையாகப் பார்ப்பதில்லை.அப்படியென்றால் பெண்கள் மட்டுமா கலாச்சார காவிகள் ?இந்த விடயத்தில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. இவ்வாறாக பிள்ளைகளின் ஆளுமையை உருவாக்கும் கல்விப் புலத்திலேயே பால் சமத்துவம் பேணப்படாத ஒரு நிலை. இங்கிருந்து தொடங்குகிறது எல்லாம்.. பிள்ளை படிக்கும் பொழுதே பால் சமத்துவத்தை கற்றுக் கொள்ள தவறுகின்றது. அது பின்னர் வளர்ந்து ஆளாகும் பொழுது தான் கற்றுக் கொண்டதை பிரயோகிக்கின்றது. குறிப்பாக அரசியலில் அதுவும் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்குப் பின்னரான அரசியலில் பால் சமத்துவத்தைப் பேணுவதில், பால் சமநிலையை பேணுவதில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு அதுவும் ஒரு காரணம். அதோடு ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் போராளிகள் எதிர்கொண்ட பாலியல் சார்ந்த இன்னல்கள் காரணமாகவும் பெண்கள் பெருமளவுக்கு பின்வாங்கும் ஒரு நிலைமை காணப்படுகிறது.அது ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் நேரடி விளைவு என்னலாம். எதுவாயினும், கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியலில் பெண் ஆளுமைகளை அரிதிலும் அரிதாகவே காண முடிகின்றது. அண்மையில் தமிழ் பொது வேட்பாளராகிய அரியநேத்திரன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் ஒரு தொகுதி ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அது ஒரு சிநேக பூர்வமான சந்திப்பு. அதில் ஒரு மூத்த ஊடகவியலாளர் கேட்டார்… “இங்குள்ள ஊடகவியலாளர்களில் எத்தனை பேர் பெண்கள்? ஒருவருமில்லை. உங்களுடைய பொதுக் கட்டமைப்பில் எத்தனை பேர் பெண்கள் ? ஒருவரும் இல்லை. உங்கள் மேடைகளில் ஏறும் பேச்சாளர்களில் எத்தனை பேர் பெண்கள்? ஒருவரும் இல்லை.” என்று. அது நியாயமான கேள்வி. ஆயுதப் போராட்டத்திற்கு முந்தைய மிதவாத அரசியலில் மங்கையற்கரசி போன்ற பெண் ஆளுமைகள் இருந்தார்கள். அவர்கள் மீதும் பெண்கள் என்ற காரணத்திற்காகவே அவதூறுகள் அதிகமாக முன்வைக்கப்பட்டன. ஆயுதப் போராட்டம் பல பெண் பேச்சாளர்களை உற்பத்தி செய்தது. சமாதானப் பேச்சுவார்த்தை மேசைகளிலும் பெண்கள் காணப்பட்டார்கள். வெளிநாட்டு தூதுக் குழுக்களிலும் பெண்கள் காணப்பட்டார்கள்.ஆனால் ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சியோடு பெண் ஆளுமைகளை அரசியலில் அரிதாகவே காண முடிகிறது.வடக்கில்,அனந்தி,வாசுகி கிழக்கில் ரஞ்சனி…போன்ற சிலரைத் தவிர. இந்த விடயத்தில் உள்ளூராட்சி சபைகளில் 25% பெண்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் வரவேற்கத்தக்கது. அதை ஒரு பண்பாடாக வளர்த்தெடுக்க வேண்டும். சமூகத்தையும் அரசியலையும் அதை நோக்கிப் பண்படுத்த வேண்டும். எல்லாக் கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் பால் சமநிலையை பேண வேண்டும் என்பதனை ஒரு விதியாக,பண்பாடாக பின்பற்ற வேண்டும். ஆளுமை மிக்க பெண்கள் இல்லை என்பதனை ஒரு சாட்டாகக் கூறாமல் பெண்களை ஆளுமை மிக்கவர்களாக எப்படி உருவாக்கலாம் என்று யோசிக்க வேண்டும். ஆண் தலைவர்கள் மட்டும் என்ன ஆளுமையாகாவா இருக்கிறார்கள்? எனவே தலைமைத்துவ பண்பை வளர்த்தெடுப்பது என்ற விடயத்தில் பால் சமநிலையை பேணினால் அரசியல் கட்சிகளின் மத்தியில் அதனை ஒரு ஒழுக்கமாக உருவாக்கலாம். வெளிநாட்டுத் தூதுவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைப் பார்த்து ஏன் உங்கள் மத்தியில் பெண்கள் இல்லை என்று கேட்கும் ஒரு நிலை தொடரக்கூடாது. https://athavannews.com/2024/1397065- அமெரிக்காவை தொடர்ந்து இலங்கைக்கு விரையும் சீன கப்பல்
அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து... இலங்கை விரையும் இந்திய போர்க் கப்பல். 😂 🤣 இலங்கை வரும் இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பல். இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பலான ஐஎன்எஸ் மும்பை, மூன்று நாள் பயணமாக நாளை 26ஆம் திகதி இலங்கை வந்தடையவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல், தமது இடைக்கால மேம்படுத்தலை முடித்து, 2023 டிசம்பர் 08 ஆம் திகதி, விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை கட்டளையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், ஐஎன்எஸ் மும்பை, முதல் தடவையாக, இலங்கையில் உள்ள துறைமுகம் ஒன்றுக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்த ஆண்டுக்குள் இந்திய கப்பல்களின் இலங்கைக்கான எட்டாவது துறைமுக அழைப்பாக இந்த பயணம் அமைந்துள்ளது. இந்தியக் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட, உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட கப்பல்களில் மூன்றாவது கப்பல் இது என்பதுடன், இந்தக் கப்பல், மும்பையில் உள்ள மசாகன் டாக் லிமிடெட்டில் கட்டப்பட்டது என்று இந்திய உயர் ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஐஎன்எஸ் மும்பை இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் டோர்னியர் கடல் கண்காணிப்பு விமானத்திற்கான அத்தியாவசிய உதிரிப்பாகங்களை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இலங்கை வரும் ஐஎன்எஸ் மும்பை, ஆகஸ்ட் 29 ஆம் திகதியன்று கொழும்பில் இருந்து புறப்படும் என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397052- போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
சுனிதாவை மீட்க ‛‛ஸ்பேஸ் எக்ஸை” நாடும் நாசா. விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புஜ் வில்மோர் ஆகிய இருவரும் 2025 பெப்ரவரியில் பூமிக்கு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியுடன் அவர்களை மீட்டுவர நாசா நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ம் தேதி விண்வெளிக்கு ஆய்வுக்கு சென்றனர். திட்டமிட்டபடி பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்பும் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 2025 பிப்ரவரி மாதம் வரை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்திலேயே இருக்க வேண்டியிருக்கும் என நாசா அறிவித்துள்ளது. இந்நிலையில் க்ரோ-9 (Crew 9” ) என்ற திட்டத்தின் கீழ், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செப்டம்பர் மாதம் 2 பேர் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழு உதவியுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புஜ் வில்மோரை பூமிக்கு மீட்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://athavannews.com/2024/1397057- சிரிக்கலாம் வாங்க
- வெள்ள அரிப்பால் வெளிவந்த... 233 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமம்!
வெள்ள அரிப்பால் வெளிவந்த 233 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமம்! இயற்கை நினைத்தால் எதை வேண்டுமானாலும் உருவாக்கும்; எதை வேண்டுமானாலும் அழிக்கும். சமீபத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் வயநாடு மண்ணிற்குள் புதையுண்ட சம்பவம் இதற்கு ஓர் சமீபத்திய சாட்சி. இது ஒருபுறம் இருக்க... பிரேசிலில் பெய்த கனமழையால் 233 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த டயனோசரின் புதை படிவம் ஒன்று வெளியே தென்பட்டுள்ளது. இதுபற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்... பிரேசில் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பெய்த கனமழையால், 5,00,000-க்கும் அதிகமான மக்கள் வீடு வாசலை விட்டு இடம் பெயர்ந்தனர். அந்த நாடே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்நிலையில், ரியோ கிராண்டே டோ சுலில் (Rio Grande do Sul) என்ற இடத்தில் உள்ள சாவோ ஜோனோ டோ போலசின் (São João do Polêsine) நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஏற்பட்ட வெள்ள அரிப்பில், சுமார் 233 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் புதை படிமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஃபெடரல் யுனிவர்சிட்டி ஆஃப் சாண்டா மரியாவின் (Federal University of Santa Maria), பழங்கால ஆராய்சியாளாரான ரோட்ரிகோ டெம்ப் முல்லர் (Rodrigo Temp Müller) தலைமையிலான குழு இந்த படிமானத்தை கண்டுபிடித்தது. இந்த படிமானமானது ஹெர்ரெராசௌரிடே (Herrerasauridae) என்ற டயனோசர் குடும்பத்தைச் சேர்ந்தது என்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். ஆராய்சியாளார்களின் இந்த கண்டுபிடிப்பானது டயனோசர்களின் வாழ்க்கை முறை, அதன் அழிவுக்கான காரணம் பற்றிய விரிவான ஆய்வுக்கும் வழிவகுக்கலாம் என்கிறார்கள். ட்ரயாசிக் காலத்தில் பூமியில் சுற்றித் திரிந்த ஹெர்ரெராசௌரிடே டயனோசர் இரு கால்களைக் கொண்டது என்றும், இதன் கூர்மையான நகங்கள் இரையைப்பிடிக்க பயன்பட்டுள்ளன என்றும் இதன் கால்கள் எட்டு அடி நீளம் கொண்டதாக இருக்கவேண்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் வெள்ளப்பெருக்கினால், சில படிமானங்கள் அழிந்தும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. எனினும், கிடைத்த படிமானங்களை பாதுகாக்க ஆராய்சியாளார்கள் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கண்டுபிடிப்பு, பூமியின் வரலாற்றில் மறைக்கப்பட்ட அத்தியாயங்களை எப்படியான சூழ்நிலைகளிலும் நம்மால் கண்டறிய முடியும் என்பதற்கான சான்றாக சொல்லப்படுகிறது. Robinson Pathinathan- இந்தியாவில் 156 மருந்துகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி தீர்மானம்.
இந்தியாவில் 156 மருந்துகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி தீர்மானம். இந்தியாவில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 156 மருந்துகளுக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த மருந்துகளின் பயன்பாடு மனித உடலுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி குறித்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் 328 மருந்துகளுக்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397047- ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் பலி
சந்தேகப்படும்படியான சோலிங்கன் தாக்குதலாளி பொலிஸாரிடம் சரணடைந்தார். சோலிங்கனில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். Nordrhein-Westfalens உள்துறை மந்திரி ஹெர்பர்ட் ரியுல் (CDU) ARD இன் "Tagesthemen" தொலைக்காட்சிக்கு இதை அறிவித்தார். மற்றும் நாள் முழுவதும் தேடப்பட்ட ஒரு "உண்மையில் சந்தேகத்திற்குரியவர்" பற்றி பேசினார். "Spiegel" மற்றும் "Bild" செய்தித்தாளின் தகவலின்படி, 26 வயதான Syrer Issa al H. சனிக்கிழமை மாலை "இன்னும் இரத்த வெள்ளத்தில்" சோலிங்கன் பொலிஸ் ரோந்து அதிகாரிகளை அணுகி... "நான் தான், நீங்கள் தேடுகிற ஆள்" என கூறினார். சந்தேகத்திற்குரிய கொலையாளி சிரியாவின், டெய்ர் அல்-சோர் நகரில் பிறந்தார். அவர் டிசம்பர் 2022 இறுதியில் ஜெர்மனிக்கு வந்து Bielefeld நகரத்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்தார். ஒரு வருடம் கழித்து, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து அகதிகள் அடிக்கடி பெறும் துணை பாதுகாப்பு என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு சன்னி முஸ்லீம் மற்றும் ஒரு இஸ்லாமிய தீவிரவாதியா என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இன்னும் தெரியவில்லை. https://www.morgenpost.de/panorama/article407086955/anschlag-stadtfest-solingen-news-aktuell-messerangriff-taeter-flucht.html- பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!
பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு! வன்னி ராஜ்ஜியத்தின் இறுதி மன்னனான பண்டார வன்னியனின் 221 வது ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகர சபை மற்றும் பண்டார வன்னியன் விழா குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், வவுனியா மாவட்ட செயலத்துக்கு முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரதீஸ்வரன், நகரசபை செயலாளர் அ.பாலகிருபன் மற்றும் தமிழ்மணி அகளங்கன், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397034- கருத்து படங்கள்
- இசைந்து வரும் ஏனம் - சுப.சோமசுந்தரம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.