Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. எனது வெற்றியானது நாட்டின் வெற்றியாகும் -நாமல் ராஜபக்ஷ. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை இடம்பெற்ற விசேட நிகழ்வின் போது இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றியீட்டினால் அது தனது தனிப்பட்ட வெற்றி அல்ல எனவும் , அது நாட்டின் வெற்றியாகவே கருதப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது ” கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் இந்த இடத்தில் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். நெருக்கடியான சந்தர்ப்பங்களிலேயே முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் .தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயமாக வெற்றிபெறும். இது தேர்தலில் எனது தனிப்பட்ட வெற்றியல்ல. கட்சியின் ஏகோபித்த வெற்றியாகும்.தேர்தலில் நெருக்கடிக்கு மத்தியில் பாரிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பயணத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களையும் மீண்டும் எம்முடன் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். எமது கட்சியின் கொள்கை திட்டம் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. கட்சியின் வெற்றியானது நாட்டின் வெற்றியாகும். தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம்” இவ்வாறு நாமல் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1395048
  2. வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு! வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளைய தினம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய தேரில் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு காலை 10.00 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது. அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது இதேவேளை நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395096
  3. மீசாலையில்... சிறுவர்கள் உட்பட 14 பேரை சுட்டுக் கொன்ற இராணுவத்தினனை அடையாளம் கண்டு கைது சிறையில் அடைக்கப் பட்ட போதும்... ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் வெளியே வந்த கொடுமையை என்ன வென்று சொல்வது. இவற்றுக்கெல்லாம்.. உங்களிடம் நீதியும், தீர்ப்பும் இல்லையா... 😡
  4. தினேஷ் சாப்டர் என்ற தமிழ் கோடீஸ்வர வர்த்தகரின் கொலைக்கு எப்போ நீதி கிடைக்கும். இந்த நாட்டில்... சிங்களவனுக்கு ஒரு நீதி, முஸ்லீமுக்கு ஒரு நீதி, தமிழனுக்கு ஒரு நீதி. உங்களுடைய நாடு, பாழ் பட்டுப் போனதுக்கு இதுக்கும் ஒரு காரணம்.
  5. இவ்வளவு காலமும் ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது... மகிந்த உட்பட ஊழல் செய்த அரசியல்வாதிகளை என்ன செய்தீர்கள். மக்களை முட்டாளாக்குவதில் எல்லா அரசியல்வாதிகளும் ஒன்றுதான். பைத்தியக்காரங்கள். 😡
  6. உங்களது ஹவாய் பயணக் கட்டுரை, படங்களுடன் மிகவும் சிறப்பாக உள்ளது. 👍 தொடர்ந்து வாசிக்க மிகவும் ஆவலாக உள்ளோம்.
  7. நம்ம கச்ச தீவு மாதிரி 5 அல்லது 6 தீவு கூட்டம் தான் இந்த நாடு. ஏறத்தாழ 6 லட்சம் குடி மக்களை கொண்ட நாடு... தங்க பதக்கம் 😍😍😍 140 கோடி கொண்ட நாடு ஹிந்தி!!!! பாணி பூரி, இரயில்வே சாய்.... நாடு முழுக்க தேசபக்தர்கள்... தங்க பதக்கம் நகி ஹே... தங்கமெல்லாம் குஜராத்தி கடையில தான் அடகு வச்சு இருக்கிறோம் 😃😃 குகன் அருமைநாட்டார்
  8. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுத்த பொதுபல சேனா அமைப்பு! எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைப்பதற்கு பொதுபல சேனா அமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்துத் தெரிவிக்கையில் ” அடுத்த ஜனாதிபதி யார் என்பதை மக்களே தீர்மானிக்கவுள்ளனர். ஆனால் மக்கள் அதனை தீர்மானிப்பதற்கு பொதுவான கொள்கை ஒன்று அறிவிக்கப்படவேண்டும். தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இதனை அறிவிக்கவேண்டும். இதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம். எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் பாரிய அளவிலான மாநாடு ஒன்றை நாம் ஏற்பாடு செய்யவுள்ளோம். இந்த மாநாட்டினை அரசியல் செல்வாக்கு இல்லாத 5 ஆயிரம் பௌத்த பிக்குகளின் பங்களிப்புடன் நடத்தவுள்ளோம். இந்த நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த காலப்பகுதியில் பல அரசியல் தலைவர்கள் தற்களுக்கு ஏற்ற கொள்கையை அடிப்படையாக கொண்டே இந்த நாட்டை ஆண்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் அவர்களது கொள்கைகளை மகாசங்கரத்தினத்திடம் தனித்தனியாக முன்வைக்க வேண்டும். நாட்டு மக்கள் அரசியலமைப்பு திருத்ததினை எதிர்பார்க்கவில்லை. நாட்டில் புதிய சட்டங்களையும் மக்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அவர்கள் தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம், பொருளாதார முன்னோற்றம் போன்ற அன்றாட பிரச்சனைகளுக்கான தீர்வையே எதிர்பார்க்கின்றனர். எனவே, புதிய ஜனாதிபதி தொடர்பில் மக்கள் கருத்தறியும் தீர்மானத்தை மேற்கொள்ளும் வகையில் பொதுவான கொள்கையொன்று அவசியம். இதனை நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்களை ஒரே மேடையில் ஒன்றிணைந்து அறிவிக்கவேண்டும். இந்த புதிய தீர்மானத்தினை பொதுபலசேனா அமைப்பு எடுத்துள்ளது” இவ்வாறு கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1395020
  9. குறுகிய காலத்தில்… பாராளுமன்றத்தில் இருந்து விளக்கமறியல் வரை.. பல்வேறு விதமான பல அனுபவங்களை பெற்று விட்டார். இனி… நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தால்…. வெற்றிதான்.
  10. அர்ச்சுனாவின் விளக்க மறியல்… அவருக்கு இன்னும் அதிக அனுதாபிகளை பெற்றுக் கொடுத்துள்ளது போல் தெரிகின்றது. மன்னார் பொலிசாரும், நீதிமன்றமும்… அர்ச்சுனாவுக்கு அனுதாப அலையை பெற்றுக் கொடுத்துள்ளதால், அவர்களுக்கும் நன்றி. 😂 🤣
  11. இருக்கும்… இருக்கும். 😁 உண்மையில் நாமலின்ரை ஆள்… அங்கஜன் தான். 😂 ஆனால் அவர் இப்ப… ரணிலின்ரை கூடாரத்துக்குள்ளை இருக்கிறார். 🤣 அங்கஜனும், டக்ளசும்… போகாத இடம் இல்லை. 😂🤣
  12. கீத் நாத் காசிலிங்கம் இவ்வளவு நாளும் எங்கை இருந்தவர்? 😂 இப்பதான் இவரின் பெயரை கேள்விப் படுகின்றேன். 🤣
  13. வாங்கின கதிரையை... பெட்டியை திறந்து வைக்க, அவ்வளவு பஞ்சி. 😂
  14. வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு! கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த 2 ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வைத்தியசாலை நிர்வாகம் முறைப்பாடு செய்திருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கடந்த 3 ஆம் திகதி வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்தனர். இதனையடுத்து வைத்தியர் அர்ச்சுனா நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்த நிலையில், வைத்தியர் அர்ச்சுனா இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது வைத்தியர் அர்ச்சுனாவை இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1395010
  15. நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை-ஜனாதிபதி! என்னைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு போர் அல்ல. நான் யாரிடமும் சண்டையிட வரவில்லை. நான் எனது கொள்கைகளுடன் வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களின் பிரதிநிதிகளை இன்று சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். உண்மையைச் சொல்லி நாட்டைக் காப்பாற்றத் தயாரா அல்லது பொய்யைக் கூறி நாட்டைக் குழப்பத் தயாரா என்பதைச் மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் நாட்டை முன்னெடுத்துச் செல்வேன். நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை. செய்து காட்டியுள்ளேன். ஏனையோர் வாக்குறுதிகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். மேலும் மற்ற வேட்பாளர்கள் எனக்கு சவாலாக இல்லை என்றும் நான் நாட்டின் எதிர்காலத்திற்காக வருகிறேன். ஏனைய வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திற்காக வரவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார் . இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும் அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1394978
  16. மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பும் பசில் ராஜபக்ஷ!ராஜபக்ச குடும்பத்தில் பிளவா? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மை முன்னிறுத்துவதற்கு நாமல் ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் காரணமாகவே பசில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நிறுத்தும் தீர்மானித்தினால் ராஜபக்ச குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்இ பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவரும் அதனை நிராகரித்ததையடுத்து, நாமல் ராஜபக்சவின் பெயரை முன்மொழிந்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பசில் ராஜபக்ச செயற்பட்டு வந்ததுடன் இது தொடர்பில் பல்வேறு மட்ட கலந்துரையாடலில் ரணில் – பசில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394989
  17. உலகையே ஆழப்போகும் இந்திய வீராங்கனை – குவியும் புகழாரம் ஒலிம்பிக் போட்டிகளில் பல சுவாரஷ்யங்கள் , பல வரலாற்று வெற்றிகள் என்பன பதிவாகி கொண்டிருக்கும் நிலையில், மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில், கியூபா வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றிபெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார். வரலாற்றுச் சாதனை படைத்த வினேஷ் போகத்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சிங் வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய வீராங்கனைகள் பலர் டெல்லியில் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் முன்னிலையில் நின்றவர் வினேஷ் போகத். இதனால் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி அவரை அவமதித்தவர்களுக்கு எதிரான அடி என்று சக விளையாட்டு வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரே நாளில் உலகின் தலைசிறந்த மூன்று மல்யுத்த வீராங்கனைகளை வினேஷ் போகத் வீழ்த்தியுள்ளார். வினேஷ் மற்றும் அவரது சக வீராங்கனைகளின் போராட்டத்தை விமர்சித்தவர்கள், அவர்களின் எண்ணம் மற்றும் திறன் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் ஆகிய அனைவருக்கும் தற்போது பதில் கிடைத்துள்ளது. இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளுக்கு முன்னால் வீழ்ந்துவிட்டது. இதுதான் சாம்பியன்களின் அடையாளம், அவர்கள் களத்தில் இருந்துதான் பதிலளிப்பார்கள். வாழ்த்துகள் வினேஷ். பாரிஸ் நகரில் உங்கள் வெற்றியின் எதிரொலி டெல்லி வரை தெளிவாகக் கேட்கிறது” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். முன்னதாக சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, சொந்த நாடே உதறித்தள்ளியது இப்போது அவர் உலகையே ஆளப்போகிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394966 #################### ################## ############# ஒலிம்பிக் 2024: வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி! நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக பாரீசில் உள்ள மருத்துவமனையில் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக உள்ள காரணத்தினால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன்காரணமாக இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோயுள்ளது. குறித்த சம்பவம் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பதக்கத்தைப் பறிகொடுத்த வினேஷ் போகத்துக்கு அனைவரும் தமது ஆறுதலைத் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை இரவு முழுவதும் உடல் எடையைக் குறைக்க தீவிர பயிற்சி மேற்கொண்ட காரணத்தினால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு பாரீசில் உள்ள மருத்துவமனையில் வினேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394988
  18. அமெரிக்காவில் கைதான ஈரான் உளவாளி. அமெரிக்காவில் பாகிஸ்தானை சேர்ந்த ஈரான் உளவாளி ஆசிப் மெர்ச்சன்ட் (வயது 46) என்பவரை உளவுத்துறையினர் சமீபத்தில் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உற்பட பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு ஆசிப் மெர்ச்சன்ட் ஈரான் சென்று வந்ததாகவும், அமெரிக்காவில் அரசியல் கொலைகளை செய்வதற்காக சதித்திட்டத்துடன் அவர் ஈரானில் இருந்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அமெரிக்காவில் தனது சதித்திட்டத்தை நிறைவேற்ற சிலரை அணுகியுள்ளார். ஆனால் அந்த நபர்கள் பொலிஸ் அதிகாரிகள் ஆவார்கள். கூலிப்படை போல் நடித்த அதிகாரிகளிடம் ஆசிப் மெர்ச்சன்ட் தனது திட்டத்தை தெரிவித்துள்ளார். ஆவணங்களைத் திருடுதல், அரசியல் பேரணிகளில் போராட்டங்களை ஏற்பாடு செய்தல், ஒரு அரசியல் நபரை கொல்வது ஆகிய மூன்று திட்டங்களை அவர் தெரிவித்துள்ளார். மேலும் முன்பணமாக 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளார். அதன்பின் அமெரிக்காவில் இருந்து புறப்பட முயன்றபோது ஆசிப் மெர்ச்சன்ட்டை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்று நேரடியாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சில முக்கிய ஆதாரங்களின்படி டிரம்பை கொலை செய்யும் திட்டமும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் சென்றபோது அவரை அமெரிக்கா கொலை செய்தது. இதற்கு பதிலடியாக முன்னாள் ஜனாதிபதி டிரம்பை பழி வாங்குவோம் என்று ஈரான் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஈரான் உளவாளி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394970

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.