Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார். நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார். “மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார். பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார். அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.!!!! 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 👩‍❤️‍💋‍👨பேசும் கவிதைகள்💞 Tamil Kavithai ·
  2. ஈஸ்டர் தாக்குதல்; கைது செய்யப்படவுள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள்! 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் தொடர்ச்சியான விசாரணைகள் கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார். தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணைகளை நடத்த வேண்டியிருக்கலாம். சாட்சியங்கள் அழிக்கப்பட்டு மறைக்கப்படுவதும், விசாரணை தவறாக வழிநடத்தப்படுவதும் நடந்த பிற சம்பவங்களில் அடங்கும். அமெரிக்காவிற்கு தனது விஜயத்தின் போது நடைபெற்ற அங்கு வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பின் போது இந்த அறிவிப்பினை ஜனாதிபதி வெளியிட்டார். https://athavannews.com/2025/1448672
  3. மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன்! -டொனால் ட்ரம்ப் உறுதி. மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேற்கு கரையில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன். இஸ்ரேல் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கமுடியாது. இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். காசா முனை மற்றும் மேற்கு கரை என இரு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. அதேவேளை, மேற்கு கரையில் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனிடையே, மேற்கு கரையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக பல்வேறு நாடுகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனாலும், பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி மேற்கு கரையில் இஸ்ரேல் குடியிருப்புகளை அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448657
  4. வெளிநாட்டில் உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு! வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர் ஒருவர் பணியின்போது உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக வெளிநாட்டில் பணியாற்றும் போது மரணம் ஏற்பட்டால், குடும்பத்தினருக்கு 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு மேலும் 14 இலட்சம் ரூபாய் சேர்த்து மொத்தம் 20 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வெளிநாட்டு ஊழியர்களின் கணவர் அல்லது மனைவி தொழில் தொடங்குவதற்காக கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் சிறுவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்படவுள்ளதாகவும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரை வெளிநாட்டு தொழிலாளர்கள் 5.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தை நாட்டிற்கு அனுப்பியிருப்பதாகவும், ஆண்டு இறுதிக்குள் இது 7.2 பில்லியன் டொலர்கள் வரை உயரும் எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போது 226,240 இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருவதாகவும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 3 இலட்சத்தை அண்மிக்கும் என்றும் கோசல விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1448549
  5. குமாரசாமி அண்ணே… கடைசியாக எடுத்த ஆயுதம் என்ன என்பதையும் சொல்லுங்கண்ணே. 🙂 எனது தோட்டத்திலும் சில குரங்குகள், 🐒🐒🐒 குரங்கு சேட்டை விட்டு கொண்டு திரிகுதுகள்… அதுகளின் வாலை ஒட்ட நறுக்க வேண்டி இருக்குது. 🐒🐒 🐵 😂
  6. 100 வருடங்களை தாண்டிய வீரகேசரி…. டெல்ஃப்ட் தீவு என்று நெடுந்தீவை எழுதும் கொடுமையை என்னவென்று சொல்வது.
  7. இந்தத் திரி ஒருவரின் கண்ணிலும் படவில்லையா.... அல்லது, வாசித்து விட்டு "கோமா நிலை"க்கு போய் விட்டார்களா.
  8. ☢️🌊 ஐரோப்பிய நாடுகள் கடலில் 2 லட்சம் அணுக்கழிவு டிரம்முகளை கொட்டியுள்ளன – இதன் விளைவுகளை மனிதர்கள் விரைவில் சந்திக்க நேரிடலாம். பல தசாப்தங்களாக, சில ஐரோப்பிய நாடுகள் 2 லட்சம் அணுக்கதிர் கழிவு டிரம்முகளை நேரடியாக கடலில் கொட்டியுள்ளன. அது சேதமில்லாமல் இருக்கும் என்று நம்பப்பட்டாலும், விஞ்ஞானிகள் இப்போது எச்சரிக்கிறார்கள் – காலப்போக்கில் அவை அழுகி, அபாயகரமான கதிர்வீச்சு கடல் சூழலுக்கு கசியக்கூடும் என்று. இதனால் கடல் உயிரினங்கள் மட்டுமின்றி, மனிதர்களின் உணவு பாதுகாப்பும் ஆபத்தில் சிக்கக்கூடும். உலக மக்கள் பல கோடிகள், கடல் உணவையே முக்கிய உணவாக நம்புகின்றனர். கதிர்வீச்சு கசிவு, மீன்களையும் கடலையும் மட்டுமல்லாது, மனித ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். இந்த அதிர்ச்சி செய்தி, குறுகிய கால நன்மைக்காக மனிதர்கள் எடுத்த தவறான முடிவுகள், நீண்டகால துன்பத்தை உருவாக்கும் என்பதை நினைவூட்டுகிறது. சுற்றுச்சூழலை காக்க உடனடி நடவடிக்கை அவசியம். Tamil Trending Newsz
  9. 🐛 பிளாஸ்டிக்கைத் தின்னும் பூச்சிகள்! வாக்ஸ்வார்ம் (Waxworm) பூச்சிகள் 24 மணி நேரத்தில் ஒரு பிளாஸ்டிக் பையை முழுவதும் தின்றுவிடும் – ஆனால் சில நாட்களில் அவை இறந்துவிடுகின்றன. அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்தது என்னவென்றால், வாக்ஸ்வார்ம் பூச்சிகள் பிளாஸ்டிக்கையே உணவாக எடுத்துக்கொள்ளும் தன்மையுடையவை. சில பூச்சிகள் சேர்ந்து ஒரு பிளாஸ்டிக் பையை 24 மணி நேரத்திலேயே தின்றுவிடும் சக்தி கொண்டவை. இது பிளாஸ்டிக் மாசுபாடு குறைப்பதில் புதிய நம்பிக்கையைத் தருகிறது. ஆனால், இந்த உணவு அவற்றுக்கு இயற்கையானதல்லாததால், சில நாட்களில் அவை உயிரிழந்து விடுகின்றன. எனவே, பூச்சிகளை நேரடியாகப் பயன்படுத்துவதற்கு பதிலாக, விஞ்ஞானிகள் அவற்றின் உடலில் இருக்கும் சிறப்பு என்சைம்களை (enzymes) ஆராய்ந்து, அதை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் வழிகளைத் தேடி வருகின்றனர். இது வெற்றிகரமாக செயல்பட்டால், உலகளாவிய பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 🌍♻️ Tamil Trending Newsz
  10. 🏆 100 வயது முதியவர், ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணியாற்றி உலக சாதனை படைத்தார். அரிதான வரலாற்றுச் சாதனையாக, 100 வயதுடைய ஒருவர் உலகின் ‘மிக விசுவாசமான ஊழியர்’ என கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அவர் ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். இன்றைய வேகமான தொழில்சூழலில், இப்படியான அர்ப்பணிப்பு மற்றும் நீண்ட கால உறுதிப்பாடு வியப்பை ஏற்படுத்துகிறது. ஓய்வு பெற்றிருக்கும் வயதில் கூட, வேலைக்கான பாசமும், கட்டுப்பாடும், ஒழுக்கமும் அவரை முன்னெடுத்துச் சென்றது. இந்த சாதனை, மனித உள்ளத்தின் வலிமையையும், வாழ்க்கையில் அர்த்தமுள்ள நோக்கத்தை தக்கவைத்துக்கொள்ளும் சக்தியையும் நிரூபிக்கிறது. 🌟 அவரது பயணம், அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு பேருத்வேகமாக திகழ்கிறது. உண்மையான உழைப்பும் விசுவாசமும் எப்போதும் பாராட்டப்படும் என்பதற்கான சான்றாக இந்த சாதனை விளங்குகிறது. Tamil Trending Newsz
  11. எங்கடை ஆட்களும் லேசுப்பட்ட ஆட்கள் இல்லை. ஒரு தமிழ் பொம்பிளை நீதிபதிக்கு கீழே தங்கள் வேலை செய்வதோ என்று "பெட்டிசன்" போடுற ஆட்கள் இருக்கும் மண் என்பதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும். நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு சாத்தான்.
  12. பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி குற்றவாளி என நிரூபிப்பு! பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி ஒரு முக்கிய ஊழல் விசாரணையில் குற்றவியல் சதித்திட்டத்தில் குற்றவாளி என வியாழக்கிழமை (25) நிரூபிக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிப்பதற்காக லிபிய சர்வாதிகாரி முஅம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களே நிரூபிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை பிற்பகுதியில் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதேநேரம், பாரிஸ் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், 2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த வலதுசாரி அரசியல்வாதியை, சட்டவிரோத பிரச்சார நிதி மற்றும் மோசடி போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சர்கோசிக்கு உரிமை உண்டு. மேலும் இந்த வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் மறுத்துள்ளார். வழக்குரைஞர்களுக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு. https://athavannews.com/2025/1448540
  13. பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு! கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் குற்றச் செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்வதற்கு வீடு சென்ற வேளை பொலிஸாரை கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணறொன்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ” நேற்றிரவு மாலை சுமார் 6.30 மணி அளவில் குறித்த பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றுள்ள நிலையில், பொலிஸாரைக் கண்டு அதிர்சியடைந்த சந்தேக நபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் விசாரணையில் அதே பகுதியைச்சேர்ந்த 24வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1448513
  14. கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்! மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறித்த போக்குவரத்தில் ஈடுபட்ட ஏழு பிக்குகள் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், காயமடைந்த ஆறு பிக்குகள் குருணாகலை போதனா வைத்தியசாலை மற்றும் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த துறவிகளில் மூன்று வெளிநாட்டு துறவிகளும் நான்கு இலங்கை துறவிகளும் அடங்குவதாக பன்சியகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர். இந்த விபத்து நேற்று (24) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது கேபிள் காரில் 13 பிக்குகள் இருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வன மடத்தில் தற்போது பல வெளிநாட்டு துறவிகள் வசித்து வருவதாகவும் ஊடகப் பிரிவு கூறுகிறது. துறவிகள் கேபிள் காரில் ஏறி மலை உச்சியில் உள்ள தியான பீடங்களுக்கு செல்ல புறப்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பன்சியாகம போலீசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1448454
  15. உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக 5000 ரூபாய்! உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இதேவேளை, மாணவர்கள் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்க்கவும், நல்ல இசையைக் கேட்கவும், கடற்கரைகளுக்குச் செல்லவும், கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்கவும் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினர் வயதுக்கு மாறும்போது இது ஒரு முக்கியமான படியாகும் என்பதால், இந்த விஷயத்தைப் பற்றி தான் ஒரு முறை பிரதமருக்கு நினைவூட்டினேன், என்று அவர் கூறினார். இந்த ஒதுக்கீடு கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1448480
  16. ஹ்ம்ம்... நல்ல ஒரு கண்ணியமான பதவி கிடைத்தும், அதனை காப்பாற்றத் தெரியாத முட்டாள் நீதிபதி. ஆமா.... இவர் தமிழா, சிங்களமா, முஸ்லீமா, பறங்கியா.... 😂 இப்போதான்... பார்த்தேன். தமிழ் பெண்மணியாம்.
  17. தமிழக அரசியல்வாதிகளில் முதலிடத்தில் விஜய்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய், தமிழக அரசியல்வாதிகளுக்கிடையே சமூக வலைதளங்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி, முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடத்தினார். அப்போது பா.ஜ.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளை தனது அரசியல் எதிரிகளாக சுட்டிக்காட்டி உரையாற்றினார். சமீபத்தில் மதுரையில் நடந்த இரண்டாவது மாநாட்டிலும் அவர் தி.மு.க. அரசைக் கடுமையாக விமர்சித்தார். இதன் தொடர்ச்சியாக, “உங்கள் விஜய் நான் வரேன்” என்ற கோஷத்துடன் மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களைக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பில் அண்மையில் ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த ஆய்வில் நடிகர் விஜய் முதல் இடத்தைப் பெற்றுள்ளார் . நடிகர் விஜயை Instagram இல் 1.46 கோடிபேரும் Facebook க்கில் 77 லட்சம் பேரும் X தளத்தில் 55 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். அந்தவகையில் சராசரியாக 93 லட்சம் பேர் விஜயை பின்தொடர்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. அதே சமயம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மொத்தமாக 30 லட்சம் பேரும் எடப்பாடி பழனிசாமியை 2.95 லட்சம் பேரும் , அண்ணாமலையை 10.25 லட்சம் பேரும் , உதயநிதி ஸ்டாலினை மொத்தம் 16.25 லட்சம் பேரும் பின்தொடர்கவதாகத் தெரிய வந்துள்ளது. எவ்வாறு இருப்பினும்சமூகவலைதளங்களில் அதிக பின்தொடர்பவர்கள் இருப்பது அரசியல் ஆதரவு அல்லது வாக்குகள் என்பதைக் குறிக்காது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு Instagram-இல் 9.75 கோடி பின்தொடர்பவர்கள் இருக்க, கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அதைவிட அதிகமான 27.3 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர். அதுபோல, விஜய்க்கும் அவரது திரை உலகப் புகழ் காரணமாக உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம் உள்ளதால், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448457
  18. விஷயலச்சுமிக்கு, சமூக ஊடகங்களில் பேட்டி கொடுக்க... பின்னுக்கு நின்று கதை, வசனம், டைரக்‌ஷன் செய்யிற ஆட்களுக்கும், விசயலச்சுமிக்கு வெள்ளை அடிக்கிற ஆட்களுக்கும்…. வேலையில்லா திண்டாட்டம்தான். அய்யோ பாவம். இனி… மூடிக் கொண்டு இருக்கச் சொல்லி, உச்ச நீதிமன்றம் சொல்லிப் போட்டுது. 😂
  19. ஆமா…. வருகின்ற வெள்ளிக்கிழமை, “ஜும்மா தொழுகை” முடிந்த பின்…. வீதியில் இறங்கி கதறுவதை பொறுத்துத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். 😂
  20. அந்தக் கடைசிப் பந்தி அருமை. 👍🏽 வல்லரசுகளுக்கு இது… விளங்க கனகாலம் எடுக்கும் அல்லது கண்ணை மூடிக் கொண்டு, பால் குடித்த பூனையின் நிலைமைதான்.
  21. இலங்கை முஸ்லீம்களுக்கு இது இனிப்பான செய்தி அல்ல. 😂
  22. தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் – வெளியான அதிர்ச்சி தகவல்! ஹம்பாந்தோட்டை தங்காலை, சீனிமோதர பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21ஆம் திகதியன்று இரண்டு கப்பல்கள் மூலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குடவெல்ல, மாவெல்ல ஆகிய கடற்கரைகளில் தரையிறக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். இதன் பின்னர் குறித்த போதைப்பொருள் அங்கிருந்து, கடற்கரைக்கு அருகிலுள்ள வீடொன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிறிய ரக பாரவூர்தியில் ஏற்றப்பட்டு, சீனிமோதர மற்றும் கொடெல்லவெல பகுதிகளுக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மாவெல்ல கடற்கரையிலிருந்து சீனிமோதர வீட்டிற்குப் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற குழுவினர், அந்த வீட்டில் மது அருந்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட உடலங்களுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும் பொலிசார் குறிப்பிட்டிருந்தனர். முன்னதாக, தங்காலை – சீனிமோதர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், மூன்று சிறிய ரக பாரவூர்த்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 705 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்படி, குறித்த போதைப்பொருள் கையிருப்பின் சந்தை மதிப்பு, சுமார் 988 கோடி ரூபா என்றும் பொலிசார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்த கண்டுபிடிப்பு தரைப்பகுதியில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பாரியளவிலான போதைப்பொருள் தொகையாக பொலிசார் வரையறுத்துள்ளனர். https://athavannews.com/2025/1448426

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.