Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஓ... நான் கேள்விக் கொத்தில் பிழையாக எழுதி விட்டேன் என நினைத்து விட்டேன் ஈழப்பிரியன்.
  2. ஐயோ... ஈழப்பிரியன் நான் சங்கி இல்லை. 😂 நானும் உங்கள் கட்சிதான். எங்கள் பரம்பரையே... நாம் தமிழர் கட்சிக்குதான் ஓட்டு போடுறது. எனக்கும் நாம் தமிழர் வெல்ல வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் கள நிலைமை இன்னும் கனிந்து வரவில்லை என நினைக்கின்றேன்.
  3. வீரப் பையா..... அண்ணாமலை போட்டியிடும் தொகுதி கோயம்புத்தூர். கோயம்புத்தூர் பொதுவாக பா.ஐ. க. அனுதாபிகள் நிறைந்த ஊர். அத்துடன் அங்கு தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார் என்பவரும், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச் சந்திரன் என்பவரும் நிற்கிறார்கள். அவர்கள் புதிய முகங்கள் என நினைக்கின்றேன். அதனால்... ஆட்டுக்குட்டி அண்ணாமலைக்கு வெற்றி கிடைக்கும் என கணித்துள்ளேன்.
  4. ஈழப்பிரியன்... வெற்றி 50 என்பது புரியவில்லை. கேள்வி 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? திமுக சின்னத்தில் போட்டியிடுபவர்கள் 22 பேரில்... 21 பேர் வெற்றி பெறுவார்கள் என பதிந்துள்ளேன். அல்லது நான் கேள்வியை தவறாக விளங்கிக் கொண்டேனா...
  5. 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 1´ம் இடம். 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3´ம் இடம். 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3´ம் இடம். 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன். 2´ம் இடம். 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 2´ம் இடம். 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 2´ம் இடம். 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 1´ம் இடம். 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1´ம் இடம். 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 1´ம் இடம். 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் கட்சி) 1´ம் இடம். 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1´ம் இடம். 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள்) 3´ம் இடம். 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1´ம் இடம். 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 2´ம் இடம். 15) தயாநிதிமாறன் திமுக) 1´ம் இடம். 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 1´ம் இடம். 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 1´ம் இடம். 18)ரி ஆர் பாலு ( திமுக) 1´ம் இடம். 19)எல் முருகன் (பிஜேபி) 2´ம் இடம். 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1´ம் இடம். 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 1´ம் இடம். 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1´ம் இடம். 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 1´ம் இடம். 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 8% க்கு மேல். 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 5 இலட்சத்துக்கு கூட. 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? ஒன்றும் இல்லை. 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? இரண்டு. 28)இந்திய கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? இரண்டு. 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? இரண்டு. 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? ஒன்றும் இல்லை. 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ஒன்று. 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ஒன்றும் இல்லை. 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ஒன்றும் இல்லை. 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? ஐந்து தொகுதிகள். 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? ஒன்றும் இல்லை. 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ஒன்று. 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? மூன்று. 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34. 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? 21. 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? ஒன்று. 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? நான்கு. 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? இரண்டு. 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? இரண்டு.
  6. சிங்களம் தான் தப்ப... வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரங்கள் மீதுபழியை போட நினைக்கின்றது. எத்தனை சுத்து மாத்துகளை செய்தவர்களுக்கு... இது ஜூஜுப்பி Matter. 😂 🤣
  7. இது, கனடா பொலிஸ் அதிகாரி துரையப்பாவின் தனிப்பட்ட விஜயம் என்றால்.... கனடா பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்டதும், இலங்கையின் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதும் தவறு என்றே கருதுகின்றேன். பொறுப்பு வாய்ந்த கனடா பொலிஸ் அதிகாரி இதன் பின் விளைவுகளை யோசிக்காமல் செய்தது... ஆச்சரியம் அளிக்கின்றது. சிங்களவனுக்கு... முட்டுக் கொடுக்கப் போய், தான் முட்டுப் பட்டு நிற்கிறார். 😂
  8. இலங்கை வந்துள்ள ஈரானிய அமைச்சரைக் கைது செய்யுமாறு ஆர்ஜென்டினா கோரிக்கை! 1994 ஆம் ஆண்டு யூத சமூக மையத்தின் மீது குண்டுவீசி 85 பேரைக் கொன்றது தொடர்பாக ஈரானின் உள்துறை அமைச்சரை கைது செய்யுமாறு அர்ஜென்டினா பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் விஜயம் செய்துள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தலைமையிலான குழுவில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அஹமட் வஹிதியும் தெஹ்ரானில் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி அவரை சர்வதேச சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் ‘வாஹிதி’க்கு கைது பிடியாணை பிறப்பித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு முதல், அர்ஜென்டினாவின் வேண்டுகோளின் பேரில் இன்டர்போல் அவரைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது மேலும் ஈரானின் முன்னாள் மூத்த உறுப்பினரான வஹிதி 1994 ஆம் ஆண்டு AMIA மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று அர்ஜென்டினா மேலும் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2024/1379601
  9. உக்ரேன் – ரஷ்ய போரில் இலங்கை இராணுவம்? : நாளை நாடாளுமன்றில் அறிக்கை! உக்ரேன் ரஷ்ய போரில் இலங்கை இராணுவத்தினர் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக பொதுபாதுகாப்பு அமைச்சரினால் நாளை நாடாளுமன்றில் அறி;க்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ரஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரங்கள் ஊடாக இவ்வாறான மோசடி இடம் பெற்றுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி ஒரு சில தரப்பினர் மோசடி செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெளிவிவகார அமைச்சு இது தொடர்பான காரணிகளை ஆராய்ந்து வருகின்றது. இந்த விடயம் தொடர்பான முழுமையான அறிக்கை பொதுபாதுகாப்பு அமைச்சரினால் நாளை கையளிக்கப்படும்” என நீதியமைச்சர் விஜயதாச ரஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1379622
  10. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தோவியங்களை வரைந்து தள்ளுகிறார்கள். சிங்களம் மட்டுமே சட்டத்தை கொண்டு வந்து இலங்கையில் ஓற்றுமையாக இருந்த இனம் மீது, விஷ விதையை விதைத்து... சிங்கப்பூர் மாதிரி இருக்க வேண்டிய நாட்டை குட்டிச் சுவராக்கியதன் பலனை அந்தக் கட்சி அனுபவிக்கின்றது.
  11. சம்பந்தர் காலத்திலேயே... சட்டு புட்டு என்று ஒரு முடிவுக்கு வாங்கப்பா. 😂
  12. போரில் 5 இலட்சம் இராணுவ வீரர்களைப் பறிகொடுத்த உக்ரேன். ரஷ்யா உடனான போரில் உக்ரேன் இதுவரை 5 இலட்சம் இராணுவ வீரர்களை பறிகொடுத்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் இராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு கருத்துத் தெரிவிக்கையில் ”போர் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை உக்ரேன் இராணுவமானது சுமார் 5 லட்சம் இராணுவ வீரர்களை இழந்துள்ளன. அத்துடன் உக்ரேன் இராணுவத்தின் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்கள், 1,000 ஏவுகணைகள், சுமார் 900 விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை ரஷ்யா அழித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379493
  13. நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு பிரித்தானிய நாடாளுமன்றம் அங்கீகாரம்! பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவது குறித்தான, ருவாண்டா நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்மூலம், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள், இன்னும் 10 முதல் 12 வாரங்களுக்குள் விமானம் மூலம் ருவாண்டா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்கள். இதனை செயற்படுத்துவதற்காக பிரித்தானிய அரசாங்கம், வாடகை விமானங்களை ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும், இவ்வாறு சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை அனுப்பி வைக்க தடுப்புக்காவல் இடத்தை அதிகரித்துள்ளதுடன், வழக்கறிஞர்களையும் பணிக்கமர்த்தியுள்ளது. குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவாண்டா நாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக ருவாண்டா நாடு கடத்தல் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டமூலம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் இருந்தது. இந்நிலையில்தான் இன்று செவ்வாய்க்கிழமை, இந்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. பல்வேறு நாடுகளிலிருந்து சிறிய படகுகள் பிரித்தானியாவுக்குள் நுழையும் நபர்கள், அங்கு அகதிகளாக வசிக்க உரிமை கோரலாம். இதனால் பல்வேறு நாடுகளிலிருந்தும் பிரித்தானியாவுக்கள் வருபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. 2021ஆம் ஆண்டுக்கு முன்னதாக 4 ஆண்டுகளில் மட்டும் 299 பேர் மாத்திரம் பிரித்தானியாவுக்கு சென்றுள்ள நிலையில், 2022ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 45,774 ஆக உயர்ந்தது. இந்நிலையில், இதனை கட்டுப்படுத்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உரிய சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் ரிஷி சுனக் இந்த விடயத்தில் உறுதியாக இருந்தார். இதனிடையே, பணம் பெற்றுக் கொண்டு மக்களை சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் கும்பலைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளையும் பிரித்தானிய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மேலும் இங்கிலாந்துக்கு வரும் அல்பேனிய நாட்டினரை அவர்களுடைய நாட்டிற்கே திருப்பி அனுப்புவதற்கும் லண்டன் அந்த நாட்டுடன் ஒப்பந்தம் போட்டது. https://athavannews.com/2024/1379480
  14. சாத்தான்… ஆண் பேரப் பிள்ளை என்றால் தமிழ் சிறி என்றும், பெண் பிள்ளை என்றால்… சிங்கள சிறி என்றும் வையுங்கள். 😂 (சும்மா பகிடிக்கு… ரென்சன் ஆகாதீங்க.) 🤣
  15. யாழ் களத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் போட்டியில் கலந்து கொள்ள தயக்கம் காட்டுவதால்… @nilmini ஐ போட்டியில் கலந்து சிறப்பிக்கும்படி அழைப்பு விடுக்கின்றேன். 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.