Everything posted by தமிழ் சிறி
-
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
சிலருக்கு... புட்டின் என்ன செய்தாலும் பிழை கண்டு பிடிப்பதே முழு நேரத் தொழில். அவர்கள்... கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதில் ஒரு அற்ப திருப்தி. அதுக்கு ஜால்ரா போட பின்னாலை இரண்டு பேர் திரியும் போது.. அவர்களுக்கும் குசி வந்து பினாத்திக் கொண்டு இருப்பது வாடிக்கை. இதுகளை எல்லாம் கணக்கில் எடுக்காமல், கடந்து போவதே புத்திசாலித்தனம்.
-
கருத்து படங்கள்
ஹ... ஹா... ஹா.... ராஜபக்ச கோஷ்டியின் சிவப்பு சால்வைகள் கழட்டப் பட்டு, சிறைச்சாலை சீருடை (Uniform) வழங்கப் பட இருக்கின்றது.
-
இன்று முதல் கடுமையாகும் போக்குவரத்து சட்டம்
- இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!
- பாதாள உலக குழுவுடன் தொடர்பு- வெளியாகவுள்ள முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள்!
ஹ... ஹா... ஹா.... ராஜபக்ச கோஷ்டியின் சிவப்பு சால்வைகள் கழட்டப் பட்டு, சிறைச்சாலை சீருடை (Uniform) வழங்கப் பட இருக்கின்றது.- பாதாள உலக குழுவுடன் தொடர்பு- வெளியாகவுள்ள முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள்!
பாதாள உலக குழுவுடன் தொடர்பு- வெளியாகவுள்ள முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள்! ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குற்றக் கும்பல்களுடன் தொடர்புகளை வைத்திருந்த முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற உயர் மட்ட நபர்களின் பட்டியலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் விரைவில் அவையில் அறிக்கையொன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1446497- முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் (ரத்து) தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்!
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் (ரத்து) தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்! முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தை அறிவித்தார். இதன்படி குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார். https://athavannews.com/2025/1446489- இந்த ஆண்டு வீதி விபத்துக்களினால் 1,870 பேர் உயிரிழப்பு!
இந்த ஆண்டு வீதி விபத்துக்களினால் 1,870 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 4 வரை நடந்த 1,757 வீதி விபத்துகளில் நாடு முழுவதும் மொத்தம் 1,870 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். வீதி விபத்துகளால் தினமும் சுமார் ஏழு முதல் எட்டு பேர் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, வாகன சாரதிகள், பாதசாரிகள் மற்றும் பயணிகள் உட்பட அனைத்து வீதிப் பயனர்களும் போக்குவரத்து சட்டங்களை அவசியம் பின்பற்ற வேண்டும். விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க சுய ஒழுக்கத்துடன், அவதானத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1446451- இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!
சந்தேகத்திற்கிடமான இரசாயனங்கள் குறித்த அறிக்கை இரண்டு நாட்களுக்குள்! நாட்டின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் குறித்த சோதனை அறிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை (NDDCB) தெரிவித்துள்ளது. தொடர்புடைய பொருட்களின் மாதிரிகளை சோதிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் இந்திக வன்னிநாயக்க தெரிவித்தார். இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஒரு குற்றக் கும்பலின் உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மீத்தெனிய பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் தங்காலை பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் இதேபோன்ற பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நேற்று (08) கந்தானை பகுதியிலும் இதேபோன்ற பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொருட்களின் மாதிரிகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், சோதனை விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் NDDCB தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1446460- அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளுங்கள் - இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல்
போர் முடிந்து 20 வருடமாகி விட்டது. இந்தியா போன்ற செம்மறி நாடுகளால்... விடுதலைப் போராட்டத்தை நசுக்கி, பாதிக்கப் பட்ட அந்தத் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வை கொடுக்க முன்வராத கையாலாகாத "பொன்னை" நாடுகள் எல்லாம் இன்னும் ஸ்ரீலங்காவுக்கு உதவி செய்து கொண்டு உலக மேடைகளில் பொய் வேசம் போட்டுக் கொண்டு பிதற்ரித் திரிவது பைத்தியக்காரத்தனமாக உள்ளது.- கைது செய்யப்பட்ட கே.பி.யுடன் தனித்து உரையாடிய கோத்தா!
கே.பி. யை... கைது செய்தவுடன், இலங்கை அரசு தாங்கள் கைது செய்த மாதிரி... மாதக்கணக்கில் பத்திரிகைளில் பீலா விட்டுக் கொண்டு திரிந்தவர்கள். அதை... நம்பின சிங்கள சனமும்... மகிந்தவையும் , கோத்தாவையும்... பாராக்கிரமபாகு மாதிரி தூக்கி கொண்டாடி அடுத்தடுத்து வந்த தேர்தலிகளில் வெல்ல வைக்க அவங்கள் கே.பி.யிடம் இருந்த தமிழ் மக்களின் சொத்துக்களையும் வறுகி எடுத்து... நாட்டை கொள்ளையடித்து விட்டுப் போய் விட்டார்கள். பொய் உடனே பலன் கொடுத்தாலும்... உண்மை ஒரு நாளும் உறங்காது என்பதற்கு மேலே உள்ள சம்பவம் நல்ல உதாரணம். திருட்டு கூட்டங்கள்.- தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை!
தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை! தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரவுக்கு (Thaksin Shinawatra) அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருடம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இது செல்வாக்கு மிக்க அரசியல் வம்சத்திற்கு மற்றொரு அடியாகும். அவர் முன்பு ஒரு மருத்துவமனையில் சிறைத்தண்டனை அனுபவித்ததால், அதன் ஒரு பகுதியை அவர் சிறையில் கழிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த உயர்மட்ட வழக்கு, முந்தைய ஊழல் தண்டனையுடன் தொடர்புடையது. 2001 ஆம் ஆண்டு முதன்முதலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தாக்சினும் அவரது குடும்பத்தினரும் தாய்லாந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவரது மகள் பேடோங்டார்ன் முன்பு பிரதமராகப் பணியாற்றினார். ஆனால் கம்போடியாவின் ஹுன் சென்னுடனான கசிந்த தொலைபேசி அழைப்புடன் தொடர்புடைய வழக்கில், அரசியலமைப்பு நீதிமன்றம் நெறிமுறைத் தரங்களை மீறியதாகத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், 76 வயதான தாக்சினின் அண்மைய வழக்கு அவரது பிரதமர் பதவியுடன் தொடர்புடைய முந்தைய தண்டனையிலிருந்து உருவாகிறது. முன்னாள் பிரதமர் 2006 இல் ஒரு இராணுவ சதியில் பதவி நீக்கம் செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சுயமாக நாடுகடத்தப்பட்டார். 2023 ஆம் ஆண்டு அவர் தாய்லாந்துக்குத் திரும்பியபோது, அவர் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பதவியில் இருந்த காலத்தில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார். அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தாக்சின் அரச மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து, தாய் மன்னர் அவரது தண்டனையை ஒரு வருடமாக குறைத்தார். ஆனால் இதய பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு அளித்த பின்னர் அவர் விரைவாக பொலிஸ் பொது மருத்துவமனையின் சொகுசுப் பிரிவுக்கு மாற்றப்பட்டதால், அவர் ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தை மட்டுமே சிறைச்சாலையில் கழித்தார். அவர் ஆறு மாதங்கள் அங்கேயே இருந்தார், பின்னர் பிணை பெற்று போங்கொக்கில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றார். https://athavannews.com/2025/1446479- சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்
19 பேர் உயிரிழப்பு; சமூக ஊடகத் தடையை நீக்கிய நேபாளம்! 19 பேர் உயிரிழந்த போராட்டங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நேபாளம் நீக்கியுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வலுக்கட்டாயமாக நுழைந்து, பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்கள் மீதான தடையை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஊழலை எதிர்த்துப் போராடவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். நிலைமையைக் கருத்திற் கொண்டு திங்கள்கிழமை (08) இரவு நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், சமூக ஊடகத் தடையை நீக்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந் நாட்டு தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தலைநகருக்கு வெளியே உள்ள நகரங்களிலும் நடந்த போராட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேபாளத்தில் மில்லியன் கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களை நம்பியுள்ளனர். அவர்கள் பொழுதுபோக்கு, செய்திகள் மற்றும் வணிகத்திற்காக அவற்றை அணுகுகின்றனர். ஆனால், அரசாங்கம் கடந்த வாரம், போலி செய்திகள், வெறுப்புப் பேச்சு மற்றும் ஆன்லைன் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற போர்வையில் சமூக ஊடகங்கள் தொடர்பான தடையை அமுல்படுத்தியது. இதற்கு எதிராக திங்களன்று வீதிகளில் இறங்கிய இளைஞர்கள், அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்துப் போராடுவதாகக் கூறினர். சில போராட்டக்காரர்கள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் சொந்த ஊரான டமாக்கில் உள்ள அவரது வீட்டின் மீதும் கற்களை வீசினர். காத்மாண்டுவில் பொலிஸார் போராட்டக்காரர்களை கலைக்க தண்ணீர் பீரங்கி தடியடி பயன்படுத்தியதுடன் இறப்பர் தோட்டாக்களால் சுட்டனர். பிரதமர் கே.பி. சர்மா ஒலி, வன்முறை மற்றும் உயிரிழப்புகளால் “மிகவும் வருத்தமடைந்தேன்” என்று கூறினார். அத்துடன், போராட்டங்களை விசாரிக்க அரசாங்கம் ஒரு குழுவை அமைக்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிதி நிவாரணம் வழங்கும் என்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் என்றும் அவர் உறுதிபடுத்தினார். இதனிடையே, போராட்டங்களின் போது தனது நிர்வாகம் பலத்தைப் பயன்படுத்தியது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தமையினால், உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் மாலையில் தனது இராஜினாமாவை வழங்கினார். கடந்த வாரம், நேபாளத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மீறுவதற்காக 26 சமூக ஊடக தளங்களைத் தடை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். சமூக ஊடகங்களைத் தடை செய்யவில்லை, ஆனால் அவற்றை நேபாள சட்டத்தின்படி கொண்டு வர முயற்சிப்பதாக நேபாள அரசாங்கம் வாதிட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446466- பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
இந்த புற்றுநோய் தடுப்பூசியை கண்டு பிடிக்க ஊக்கம் கொடுத்து அதனை வெற்றிகரமாக கண்டு பிடிக்க வைத்தது மட்டுமல்லாது அந்த மருந்தை இலவசமாக கொடுக்க முன் வந்த புட்டின் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும். 👏🏻 🤝 👍🏽- பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
150 வருடம் உயிர் வாழ்வது, பெருங்குடல் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி என்று ரஷ்யா வேறை லெவலில் குதிரைப் பாய்ச்சல் பாய்ந்து முன்னேறிக் கொண்டு இருக்கின்றது. 😂 அமெரிக்கா, ஐரோப்பா எல்லாம்… முடியை புடுங்கிக் கொண்டு நிற்கிறார்கள். 🤣- இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!
இவன் எல்லாம் பிடிபட்டால்.... பிணை கேட்க ICU ல் படுத்து கிடநது நாடகம் ஆட வெளிக்கிடுவாங்கள்... Ice Production family. 😂 உண்மை உரைகல்- பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு. பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி, பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்திருந்தார். பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ பரிசோதனையில் இருந்தது எனவும் தற்போது இந்த ஊசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் அரசின் ஒப்புதலுக்கு பின்னர் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ரஷ்ய மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பின் தலைவர் வெர்னிகோ கோவோர்ட்சோவா (Vernika Govortsova) தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாகவும் புற்றுநோய்க்கு எதிராக வேலை செய்கிறது எனவும் மேலும் பல புற்றுநோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446390- கருத்து படங்கள்
- 83 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!
83 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது! கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர். கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆண் சந்தேக நபர் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்றும், பெண் சந்தேக நபர் கணேமுல்லயைச் சேர்ந்த 62 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1446379- யாழில் நூலகம் ஒன்றை திறந்த ரில்வின் சில்வா
சிங்கள காடையர்கள்..... இதனையும் மீண்டும் எரிக்காமல் பாதுகாக்க வேண்டும்.- 5 பில்லியன் டொலர்களை எட்டிய வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்புதல்
5 பில்லியன் டொலர்களை எட்டிய வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்புதல். 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்புதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. 2025 ஆகஸ்ட் மாதம் மொத்த பணம் அனுப்புதல் US$680.8 மில்லியனாக இருந்தது. இது 2024 ஆகஸ்ட்டில் US$577.5 மில்லியனிலிருந்து 19.3% அதிகமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், மொத்த பணம் அனுப்புதல் US$5,116 மில்லியனை எட்டியது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் US$4,288.2 மில்லியனாக இருந்தது. https://athavannews.com/2025/1446366- தேங்காய்க்கு... ஏன் Coconut என்று பெயர் வந்தது தெரியுமா?
நியாயப்படி.... 🥑 அவகோடா வாங்கும் போது, நான் தான் உங்களை நினைக்க வேண்டும். நிச்சயமாக பென்னாம் பெரிய அவகோடாவை வாங்கி, உங்களை நினைப்பேன்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- கருத்து படங்கள்
- செம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் – நிலாந்தன்.
செம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் – நிலாந்தன். ஐநாவின் அறுபதாவது கூட்டத்தொடர் இம்மாதம் எட்டாம் தேதி அதாவது நாளை ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வதற்கு இடமில்லை.ஏனென்றால் ஈழத் தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் ஐநா அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ்வதற்குரிய ஒரு களம் அல்ல.போராடும் மக்கள் மத்தியில்தான் அதிசயங்களும் அற்புதங்களும் நிகழும். எனினும், எல்லாவிதமான வரையறைகளோடும், தமிழ் மக்களுக்கு என்று கடந்த 16 ஆண்டுகளாக திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஒரே அனைத்துலக அரங்கு மனித உரிமைகள் பேரவைதான். அந்த மனித உரிமைகள் பேரவைக்குள் காலை ஊன்றிக் கொண்டுதான் தமிழ் மக்கள் அடுத்த கட்டத்திற்கு பாயலாம். ஐநாவுக்கு கூட்டுக் கடிதம் எழுதும் ஒரு சந்திப்பின்போது சிவாஜிலிங்கம் அதை ஓர் உவமையோடு சுட்டிக்காட்டியிருந்தார். மனித உரிமைகள் பேரவையை முற்றாக நிராகரிக்க முடியாது. ஏனென்றால் நாங்கள் பாயப் போகிறோம் என்று சொன்னால் எங்கேயாவது ஒரு காலை ஊன்ற வேண்டும்.ஒரு காலை ஊன்றினால்தான் பாயலாம்.இப்போதைக்கு மனித உரிமைகள் பேரவைதான் எங்களுக்குத் தளம். எனவே அதில் ஊன்றியிருக்கும் காலையும் எடுத்து விட்டால் நாங்கள் விழுந்து விடுவோம் என்று சிவாஜி சொன்னார். மனித உரிமைகள் பேரவையில் கடந்த நான்கு ஆண்டுகளாக சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. அது தொடர்பாக தமிழ் மக்களுக்கு விமர்சனங்கள் உண்டு.எனினும் அந்த அலுவலகத்தின் அடுத்த கட்டம் தொடர்பாக இந்தமுறை கூட்டத் தொடரில் தீர்மானிக்கப்படும்.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்து சென்றிருக்கும் ஒரு பின்னணியில்,அவர் இங்கு அவதானித்தவற்றின் தொகுப்பாகவும் ஐநாவின் நடவடிக்கைகள் அமையும். அனுர அரசுத் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டு ஓராண்டு முடியும் ஒரு மாதத்தில் ஐநாவின் 60ஆவது கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த அரசாங்கம் தனக்கு தமிழ் மக்களின் ஆணையும் இருப்பதாகக் கூறிக் கொள்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனக்குக் கிடைத்த ஏழு ஆசனங்களையும் அது தமிழ் மக்கள் தனக்கு வழங்கிய ஆணை என்று ஐநாவிலும் உலக அளவிலும் புதுடில்லியிலும் கூறி வருகிறது. ஐநாவும் புதிய அரசாங்கத்தின் கழுத்தை நெரிப்பதற்குப் பதிலாக அதற்க ஒரு சந்தர்ப்பத்தை வழங்கலாம் என்று சிந்திப்பதாகத் தெரிகிறது. இலங்கை வருகையின் பின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வாறு கருதத்தக்கவையாக உள்ளன. இவ்வாறு ஐநா இலங்கைக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கலாம் என்று சிந்திக்கும் ஒரு காலகட்டத்தில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது கடந்த ஓராண்டு காலப்பகுதிக்குள் பொறுப்புக் கூறல் தொடர்பில் என்னென்ன செய்திருக்கிறது ? முதலாவதாக, அவர்கள் செம்மணிப் புதை குழியும் உட்பட எல்லாப் புதைகுழிகளின் விசாரணைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். இந்த விடயத்தில் அரசாங்கம் உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பாக செம்மணியைப் பார்க்கின்றது. இரண்டாவதாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இந்த மாதம் நீக்கப்போவதாக ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது.எனினும் இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரையிலும் அதுதொடர்பாக உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் எவையும் வெளி வந்திருக்கவில்லை. மூன்றாவதாக,ஊழலுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.இதுவரை 70 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணிலும் உட்பட முன்னாள் அமைச்சர்கள்,பிரபல அரசியல்வாதிகள்,படைத்துறைப் பிரதானிகள்,காவல்துறைப் பிரதானிகள்,உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளோடு தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படுகின்ற பாதாள உலகத் தலைவர்கள் போன்ற பலரும்அடங்குவர். இக்கைது நடவடிக்கைகளின் மூலம் நாடு ஊழலுக்கு எதிராகத் துணிச்சலாக முன்னேறி வருகிறது என்ற ஒரு தோற்றத்தை அரசாங்கம் கட்டி எழுப்பி வருகிறது.இதுவும் ஐநாவில் அரசாங்கம் காட்டக்கூடிய ஒரு வீட்டு வேலையாக இருக்கும். நாலாவதாக,அரசாங்கம் அதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களையும் தொடங்கியிருக்கிறது.இவ்வாறு தொடங்கப்பட்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களில் சர்வதேச விளையாட்டு மைதானம், வட்டுவாகல் பாலத்தைப் புதிதாகக் கட்டுவது, தெங்கு முக்கோணத் திட்டம், வவுனியா,மத்திய பொருளாதாரம் மையத்தைத் திறந்து வைத்தமை, யாழ்ப்பாணத்தில் ஒரு கடவுச்சீட்டு அலுவலகத்தைத் திறந்தமை, மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம்கட்ட அபிவிருத்தியைத் தொடக்கி வைத்தமை,யாழ் பொதுசன நூலகத்தை டிஜிட்டல் தளத்தில் நுகர்வதற்குரிய ஏற்பாடுகளைத் தொடக்கி வைத்தமை ….போன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் அடங்கும். இந்த அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அரசாங்கம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகப் பாரபட்சமின்றி உழைக்கிறது என்ற ஒரு தோற்றத்தை வெளியே காட்ட முடியும். அனுர ஜனாதிபதியாகத் தெரிவு தெரிவு செய்யப்பட்ட ஓராண்டுக்குள் அவர் தமிழ் மக்களுக்குச் செய்தவற்றின் பட்டியல் ஒன்றை அரசாங்கம் ஐநாவில் காட்ட முடியும். மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்கலாம் என்று சிந்திக்கின்ற ஒரு ராஜதந்திரச் சூழலில் அரசாங்கம் மேற்கண்டவாறு ஐநாவை நோக்கி ஒரு தொகுதி வீட்டு வேலைகளைச் செய்து வருகிறது. இதுவரையிலுமான கைது நடவடிக்கைகளில் போர்க் குற்றங்கள் அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களோடு தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அநேகமாக இல்லை. ஒரு கடற்படை பிரதானி கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் தென்னிலங்கையில் இடம்பெற்ற ஒரு கடத்தல் சம்பவத்தோடு தொடர்புடையது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மீதான குற்றச்சாட்டுகளில் நேரடியாகப் போர் குற்றங்கள் சம்பந்தப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. தவிர,ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடவடிக்கையின்போது அவரை 40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்து இருந்திருக்க வேண்டும் என்ற பொருள்பட அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சொன்னார். அதன் பொருள் என்னவென்றால், 40 ஆண்டுகளுக்கு முன்பு போர்க்காலத்தில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் எதிராக அவர் அங்கம் வகித்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்திருக்க வேண்டும் என்பதாகும். ஆனால் ரணில் அண்மையில் கைது செய்யப்பட்டது அவ்வாறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அல்ல. பொதுச் சொத்தைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான். எனவே தொகுத்துப் பார்த்தால் இதுவரை கைது செய்யப்பட்ட 70க்கும் அதிகமானவர்களில் யாருமே போர்க் களத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே இப்பொழுது நடக்கும் கைது நடவடிக்கைகள் நாட்டின் ஒட்டுமொத்த ஊழல் கட்டமைப்புக்கு எதிரானவைகளாகத்தான் காணப்படுகின்றன. ஐநாவில் ஏற்கனவே இயங்கி வருகின்ற சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் கட்டமைப்பினால் இனங்காடப்பட்ட படைப்பிரதானிகளுக்கு எதிரானவைகள்கூட அல்ல.அவ்வாறு அடையாளம் காணப்பட்ட சில படைப் பிரதானிகளுக்கு எதிராக ஏற்கனவே கனடா,அமெரிக்கா,பிரித்தானியா போன்றன பயணத் தடைகளை விதித்து, நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. ஆனால் அரசாங்கமோ அவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கி வருகிறது. எனவே நாட்டில் தற்பொழுது இடம்பெறும் பெரும்பாலான கைது நடவடிக்கைகள் தமிழ் நோக்கு நிலையில் ஐநாவின் பொறுப்புக்கூறும் செய்முறைகளின் பிரதான பகுதிக்குள் வரவில்லை.அதை ஒரு வீட்டு வேலையாக அரசாங்கம் ஐநாவில் காட்ட முடியாது.ஆனால் உள்நாட்டு நீதியின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு அவை அரசாங்கத்திற்கு உதவும். எனவே கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வரும் திருப்பகரமான மாற்றங்களில் ஐநாவில் காட்டக்கூடிய மாற்றங்கள் ஒப்பீட்டளவில் குறைவுதான்.தமிழ் நோக்கு நிலையில் இருந்து உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கும். “அரசாங்கம் போர் வீரர்களை வேட்டையாடுகிறது” என்ற பொருள்பட நாமல் அண்மையில் எச்சரித்திருந்தார்.இந்த எச்சரிக்கையானது அரசாங்கம் அதன் கைது நடவடிக்கைகளில் எதுவரை போகலாம் என்பதை உணர்த்தும் நோக்கிலானது. எது எவ்வாறு இருப்பினும்,ஜெனிவா கூட்டத்தொடரில் இம்முறை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பலவீனமாக இல்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் தமிழ்த் தரப்பு? இதுவரை நான்குக்கும் குறையாத கடிதங்கள் ஐநாவுக்கு போயிருக்கின்றன. ஒரு கடிதம், தமிழ் தேசிய பேரவையும் சிவில் சமூகங்களும் இணைத்து அனுப்பியது. இரண்டாவது கடிதம், தமிழரசுக் கட்சி அனுப்பியது. மூன்றாவது கடிதம் தமிழ்த் தேசியப் பேரவையின் கடிதத்தில் போதாமைகள் உண்டு என்று கூறி புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவரும் தாயகத்தில் உள்ள அவருடைய சிவில் சமூக நண்பர்களும் இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளர் உட்பட சில அரசியல்வாதிகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டு அனுப்பிய ஒரு கடிதம். நாலாவது கடிதம் பிரித்தானியத் தமிழர் பேரவை அனுப்பியது. இப்படியாக நான்குக்கும் குறையாத கடிதங்கள் ஐநாவை நோக்கிப் போயிருக்கின்றன.அரசில்லாத சிறிய தேசிய இனமாகிய தமிழ் மக்கள் தங்களுக்குள் ஐக்கியப்படாமல் கட்சிக்கொரு கடிதம் சிவில் சமூகத்துக்கு ஒரு கடிதம் என்று “ஈகோ”க்களாகப் பிரிந்து போய் நிற்கிறார்கள். செம்மணி எதிர்பாராத புதிய வாய்ப்புகளைத் தமிழ் மக்களுக்குத் திறந்து விட்டுள்ளது.அதேசமயம் அரசாங்கத்திற்கு அது எதிர்பாராத ஒரு சோதனைக் களம்.ஆனால் அந்தச் சோதனைக் களத்தை அரசாங்கம் ஒருமுகமாக எதிர்கொள்கிறது அந்த விடயத்தில் அரசாங்கம் உள்நாட்டு நீதியின் நம்பகத் தன்மையைப் பலப்படுத்துகிறது என்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் செம்மணி திறந்து வைத்திருக்கும் புதிய வாய்ப்புகளைத் தமிழ்த் தரப்பு எவ்வாறு கையாளப் போகின்றது? அதுவும் ஜெனிவா கூட்டத் தொடர் நாளை தொடங்கும் பொழுது? செம்மணிக்கு நீதி கேட்டும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் அனைத்துலக விசாரணையைக் கேட்டும் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றன. அது வரவேற்கத்தக்கது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த விடயத்தை முன்னெடுத்து வருகிறது. அதில் கட்சி பேதமின்றி தமிழரசுக் கட்சியும் உட்பட அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.அது வரவேற்கத்தக்க விடயம். ஐநா கூட்டத் தொடருக்கு சில கிழமைகளுக்கு முன்னராவது அப்படி ஒரு ஞானம் உதித்ததைப் பாராட்ட வேண்டும்.ஐநா கூட்டத் தொடர்களில் தேசிய மக்கள் சக்திக்கு அனுகூலமான நிலைமைகள் அதிகமிருக்கும் ஒரு ராஜதந்திரச் சூழலில் தமிழ்த் தரப்பு அவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவதுதான் பலமானது பொருத்தமானது. Athavan Newsசெம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் - நிலாந்தன்.ஐநாவின் அறுபதாவது கூட்டத்தொடர் இம்மாதம் எட்டாம் தேதி அதாவது நாளை ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வதற்கு இடமில்லை.ஏனென்றால் ஈழத் தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்த - இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.