Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சஷேந்திர ராஜபக்ஷவுக்கு 4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்! நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள் முன்னாள் அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷவிற்கு 4000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷவின் மகனான சஷேந்திர ராஜபக்ஷ, அரசியலில் முன்னதாக ஊவா மாகாண சபையின் தலைவராகவும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றினார். அவரிடம், BMW கார், V8 வகை கார், நிஷான் வகை பெட்ரோல் கார் மற்றும் யாரிஸ் வகை கார் போன்ற நான்கு ஆடம்பர மோட்டார் வாகனங்கள் உள்ளன. இவை மனோஜ் ஏகநாயக்க என்ற எழுத்தாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சஷேந்திர ராஜபக்ஷவிற்கு நுகேகொடை, நாவல வீதியில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீடு மற்றும் நிலமும், பாலவத்த வீதியில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடும், கொழும்பு 7, ரோஸ்மீட் பிரதேசத்தில் 4 அடுக்கு கொண்ட 55 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடும், தெஹிவளையில் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் நாரஹென்பிட்டவில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலமும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவைதவிர நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான, பத்தரமுல்லையில் 70 பெர்ச் அளவுள்ள ஒரு நிலத்தை, சஷேந்திர ராஜபக்ஷ, தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தவறான ஆவணங்களை உருவாக்கி, தனது பெயரில் பெற்றுள்ளார். அதன் மதிப்பு 70 கோடி ரூபாய் ஆகும். அத்துடன் சீதுவ பிரதேசத்தில் ஒரு வீடு மற்றும் நிலம் 300 கோடி மதிப்பில் சமீபத்தில் விற்கப்பட்டதாகவும், கதிர்காமம் பிரதேசத்தில் ஒரு ஹோட்டல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சஷீந்திர ராஜபக்ஷவிடம், அவுஸ்திரேலியாவில் சொகுசு வீடுகள் இரண்டு உள்ளன. அவற்றை அங்கு அவரது மகன் கண்காணிக்கிறார் எனக் கூறப்படுகின்றது. இவை தவிர, சஷேந்திர ராஜபக்ஷவிடம் இன்னும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக ஊகிக்கப்பட்டு வருகிறது. சில சொத்துக்கள் அவர் பெயரிலும், சில நெருக்கமான நபர்களின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முழுமையான விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445387
  2. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்! ”செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்” என புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு நேற்று லண்டன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது. ‘இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு, கண்ணீரால் நினைவுக்கூரப்படும் உயிர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதுடன், இலங்கையில் காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை வழங்க முடியும் என வலியுறுத்தினர். அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்களுக்கு சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதன் ஊடாகவே நீதியை பெற முடியும் எனவும், இந்த விடயத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரித்தானிய அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். செம்மணி மனித புதைகுழியில் பல 50 இற்கும் அதிகமான எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுவதன் ஊடாகவே செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445381
  3. அந்த மர்ம நபர் - புட்டின். 😛 😂 புட்டினுக்கு... கண்டனம் தெரிவிக்கின்ற குரூப் ஒன்றையும் காணவில்லை. 😂 இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையோ. 🤣 முன்னாள் சபாநாயகரையே சத்தம் இல்லாமல் போட்டுத் தள்ளியதை பார்த்த, செலென்ஸ்கிக்கு இப்ப குலைப்பன் காய்ச்சல் எடுத்திருக்கும். 😂 🤣
  4. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் அதிருப்தி! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் அண்மைய அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃபிரேஞ்ச்சுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான இலங்கையின் பதில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் முன்வைக்கப்படுவதற்காக வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்டமா அதிபரின் பதில், இலங்கை அரசின் முழுமையான அறிக்கையின் ஒரு பகுதியாக இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இம்மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட தனது அறிக்கையில், சட்டமா அதிபர் திணைக்களம் நீதிக்கு ஒரு தடையாக இருப்பதாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக அந்த திணைக்களத்தில் திருத்தங்கள் அவசியம் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445327
  5. ஜெனீவா பயணத்திற்கு முன்னர் ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ள விஜித ஹேரத்! செப்டம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகும் 60வது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் கலந்து கொள்ள ஜெனீவாவுக்குச் செல்வதற்கு முன்னர், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பை தளமாகக்கொண்ட ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார். இதன்போது, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த கண்ணோட்டத்தை வழங்குவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகத்தை அமைத்தல் ஆகியவை இதில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445311
  6. கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்த இந்தோனேசிய பொலிஸாருக்கு பாராட்டு! கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட இலங்கை பாதாள உலகக் குழுத் தலைவர்களைக் கைது செய்த இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த 27ஆம் திகதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவர்கள் ஐவர் நேற்று இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்களைக் கைது செய்து நாட்டிற்கு கொண்டு வருவதில் முன்னிலை வகித்த இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளும், இலங்கை பொலிஸ் அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்கப்பட்டனர். இந்நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445298
  7. மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உக்ரைனின் முன்னாள் சபாநாயகர் உயிரிழப்பு. உக்ரைனின் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி (Andriy Parubiy )மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். ஆண்ட்ரி பருபி (54) மீது மேற்கு நகரமான லிவிவ்வில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இந்த தாக்குதல் மிகக் கொடூரமான சம்பவமாகும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்ததுடன், பருபியின் குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்தார். உக்ரைனின் வெகுஜன போராட்டங்களின் போது முக்கியத்துவம் பெற்ற பருபி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவுகளை ஆதரித்ததோடு, 2014 இல் ரஷ்ய சார்பு முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை பதவி விலகச் செய்ய வழிவகுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445303
  8. சுமந்திரனின் சிங்கள சம்பந்திகள். https://jvpnews.com/article/mixed-marriage-is-an-element-of-genocide-1640823701
  9. 👉 சுமந்திரனின்... பதினாறு சுத்துமாத்துக்கள். பாகம் - 1 THAMILKINGDOMவிடுதலையை விலைபேசும் சுமந்திரன் ? -பாகம்-1 (காணொளி)Tamilkingdo.com,இலங்கை,சுமந்திரன்,ஈழம்,பிரபாகரன்,செய்திகள்,
  10. கைதான குற்றவியல் கும்பல் உறுப்பினர்களை நாளை நட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை! இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 05 பேர் நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இலங்கையிலிருந்து ஒரு சிறப்பு பொலிஸ் குழு இன்று (30) அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இந்தோனேஷியா புறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர்களாகக் கருதப்படும் இவர்கள், கடந்த ஆகஸ்ட் 28 அன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இலங்கை பொலிஸார் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் ஒன்றிணைந்த சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பாதாள உலக நபர்களில் கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்தா, பாணந்துறை நிலங்கா, தெம்பிலி லஹிரு மற்றும் பேக்கோ சமன் ஆகியோர் அடங்குவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதேவ‍ேளை, இவர்களுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் நாட்டை வந்தடைந்த போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) அவர்களை கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445284
  11. செத்தான்டா சேகர். 😂 🤣 ஜெயிலில் இருக்கும் புருஷனை பார்த்து விட்டு காவல்துறை அதிகாரியிடம் சென்று மனைவி : ஐயா என் புருஷன் ரெம்ப வீக்கான ஆளு . அவருக்கு இது மாதிரி கஷ்டமான வேலையை கொடுக்காதீங்க காவல்துறை அதிகாரி: என்னம்மா விளையாடுறீங்களா? உங்க புருஷன் மூணு நேரமும் சாப்புடுறது தூங்குறதை தவிர வேறு எந்த வேலையும் செய்வது இல்லையே மனைவி: மூன்று மாதமாக தினமும் இரவு அஞ்சு மணி நேரம் சுரங்கம் தோண்டுவதாக சொல்றார் காவல்துறை அதிகாரி: ???????
  12. சுமந்திரனுக்கு தான் என்ன பேசுகின்றோம் என்பதே புரிவதில்லை. சரியான ஒரு விளம்பரப் பேய். தனது விளம்பரத்துக்காக லூசுத்தனமான வேலைகளை செய்து மக்கள் முன் அம்மணமாக நிற்பதே இவரது சுபாவம். 😂 முதல் நாள் தான் பேசிய பேச்சையும், செய்கையையும் அடுத்த நாள் தலைகீழாக மாற்றி பொய் பேசும் வழக்கம் உடைய அயோக்கியன் சுமந்திரனுக்கு முட்டுக் கொடுத்து வெள்ளை அடிப்பவர்கள்... "செக்குக்கும், சிவலிங்கத்துக்கும்" வித்தியாசம் தெரியாதவர்கள்... எப்படிப் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். 🤣
  13. வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ரணில் விக்ரமசிங்க!
  14. சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்றுவதற்கு முதலீடு செய்யுங்கள் – ஜனாதிபதி. சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய வெறும் ஊக்குவிப்புத் திட்டங்கள் மட்டும் போதாது என்றும், அரச மற்றும் தனியார் துறைகளை ஒருங்கிணைக்கும் புதிய மூலோபாயத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா, அனுராதபுரம், மஹியங்கனை மற்றும் கதிர்காமம் போன்ற பகுதிகளில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு, வசதியான சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதில் முதலீடு செய்யுமாறு வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இது தொடர்பாக விரைவில் முறையான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். சுற்றுலாத் துறையில் தற்போது நிலவும் குறைபாடுகள் மற்றும் சவால்கள் குறித்து வர்த்தகர்களினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்தார். நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அப்பொன்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்திஅதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், ஏற்றுமதி அபிவிருத்தி சபைத் தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் தனியார் துறை வர்த்தகர்கள் மற்றும் தரப்பினர்கள் குழு இந்த சந்திப்பில் பங்கேற்றனர். https://athavannews.com/2025/1445262
  15. ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட உக்ரேனிய கடற்படை கப்பல்! உக்ரேன் கடற்படையால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இயக்கப்பட்ட மிகப்பெரிய கப்பலான சிம்ஃபெரோபோல் (Simferopol), கடற்படையின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வியாழக்கிழமை (28) அறிவித்தது. உளவுத்துறை நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட குறித்த கப்பல், டானூப் நதியில் வைத்து தாக்குதலுக்கு இலக்கானது. இதன் ஒரு பகுதி உக்ரைனின் ஒடெசா பிராந்தியத்தில் அமைந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்ததாக ஆர்டி தெரிவித்துள்ளது. உக்ரேனிய கடற்படைக் கப்பலை அழிக்க கடல் ஆளில்லா விமானம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும் என்று ரஷ்யாவின் TASS செய்தி அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. கப்பல் தாக்கப்பட்டதை உக்ரேனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்தத் தாக்குதலில் ஒரு பணியாளர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று உக்ரேனிய கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி கியேவ் இன்டிபென்டன்ட்செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா, அண்மைய மாதங்களில் உக்ரேன் மீதான மோதலில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் பிற ஆளில்லா அமைப்புகளின் உற்பத்தியை துரிதப்படுத்த நகர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445160
  16. ட்ரம்பின் கட்டண வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பானது அமெரிக்க ஜனாதிபதியின் வெளிவிவகாரக் கொள்கை நிகழ்ச்சி நிரலை மாற்றக்கூடிய சாத்தியமான சட்ட மோதலாக தற்சமயம் மாறியுள்ளது. இந்தத் தீர்ப்பு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளின் மீது விதிக்கப்பட்ட ட்ரம்பின் “பரஸ்பர” வரிகளையும், சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட பிற வரிகளையும் பாதிக்கிறது. குறித்த தீர்ப்பில், அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் வரிகள் அனுமதிக்கப்பட்டன என்ற ட்ரம்பின் வாதத்தை அமெரிக்க ஃபெடரல் சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததுடன், அவை “சட்டத்திற்கு முரணானவை என்பதால் செல்லாது” என்றும் கூறியது. எனினும், இந்த வழக்கை மேன்முறையீடு செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தத் தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 14 வரை நடைமுறைக்கு வராது. ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் ஒரு தூணாக பல நாடுகளுக்கான வரிகளை உயர்த்தியுள்ளார். அவற்றைப் பயன்படுத்தி அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தவும், அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யும் பணிகளையும் ஆரம்பித்துள்ளார். இந்த வரிகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு வர்த்தக பங்காளிகளிடமிருந்து பொருளாதார சலுகைகளைப் பெறுவதற்கு வாய்ப்பளித்துள்ளன, ஆனால் நிதிச் சந்தைகளில் ஏற்ற இறக்கத்தையும் அதிகரித்துள்ளன. https://athavannews.com/2025/1445216
  17. இப்ப நல்ல ஆரோக்கியமாக இருக்கின்ற கோத்தாவுக்கும், மைத்திரிக்கும்… இதயத்தில் அடைப்பு, இரத்த அழுத்தம், கொலஸ்ரோல், கிட்னியில் கல்லு, மூத்திரம் போவதில் சிக்கல் என்று வியாதிகள் வர ஆரம்பிக்குமே. 😂 🤣
  18. குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு! 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஒவ்வொரு கல்வி வலயத்திலும் உள்ள பாடசாலைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு திட்டம் ஏற்கனவே நடந்து வருகின்றது. ஒரு குறிப்பிட்ட பாடசாலைகளைப் பராமரிக்கும் போது மட்டுமே மூடுவதற்கான பரிசீலனை மேற்கொள்ளப்படும். நாடு முழுவதும் உள்ள 10,194 பாடசாலைகளில் மொத்தம் 1,486 பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். மேலும் வட மாகாணத்தில் இதுபோன்ற பாடசாலைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. குறிப்பாக வடமாகாணத்தில் 275 பாடசாலைகளும், அதைத் தொடர்ந்து மத்திய மாகாணத்திலும் 240 பாடசாலைகளும், சப்ரகமுவ மாகாணத்தில் 230 பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் 158 பாடசாலைகளும், கிழக்கு மாகாணத்தில் 141 பாடசாலைகளும், வடமேற்கு மாகாணத்தில் 133 பாடசாலைகளும், தெற்கு மாகாணத்தில்125 பாடசாலைகளும், வடமத்திய மாகாணத்தில் 111 பாடசாலைகளும், மேற்கு மாகாணத்தில் 73 பாடசாலைகளும் காணப்படுகின்றன” இவ்வாறு தெரிவித்துள்ளார். குறைந்த மாணவர் சேர்க்கை உள்ள பாடசாலைகளை மூடிவிட்டு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையில், இலங்கை அதிபர்கள் சங்கம் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மாணவர்களை அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாற்றுவது நகர்ப்புற வகுப்பறைகளில் நெரிசலை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445085
  19. 2025 ஆசியக் கிண்ணத்துக்கான இலங்க‍ை அணி அறிவிப்பு! அடுத்த ஆண்டு ஐ.சி.சி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தை இந்தியாவுடன் இணைந்து நடத்தத் தயாராகி வரும் இலங்கை, 2025 ஆசியக் கிண்ணத்துக்கான தனது அணியை அறிவித்துள்ளது. 16 பேர் கொண்ட இந்த அணியினை சரித் அசலங்க வழிநடத்துகிறார். இதில் நட்சத்திர சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவும் இடம்பெற்றுள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான உள்நாட்டு தொடரின் போது சுழற்பந்து வீச்சாளரும், துடுப்பாட்ட வீரருமான ஹசரங்க காயமடைந்தார். இதனால், இன்று (29) ஆரம்பமாகும் சிம்பாப்வே சுற்றுப்பயணத்திலும் அவர் இடம்பெறவில்லை. ஆனால், அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஆரம்பகவுள்ள ஆசியக் கிண்ணத்துக்கு அவர் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் இலங்கை அணி, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுடன் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஹசரங்காவைத் தவிர, ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் சாமிக கருணாரத்ன, முன்னாள் தலைவர் தசுன் ஷனக உள்ளிட்ட பல வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர்களும் உள்ளனர். இதற்கிடையில், மஹீஷ் தீக்ஷன மற்றும் துனித் வெல்லலகே ஆகியோருடன் சேர்ந்து, ஹசரங்க இந்த போட்டிக்கான அவர்களின் முதன்மையான சுழற்பந்து வீச்சாளராக இருப்பார். போட்டிகள் செப்டெம்பர் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அணி செப்டம்பர் 13 ஆம் திகதி பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்துடன் தனது 2025 ஆசியக் கிண்ணத் தொடரை ஆரம்பிக்கும். ஐசிசி ஆசியக் கிண்ண அரங்கில் இரண்டாவது வெற்றிகரமான அணியாக இலங்கை உள்ளது. அவர்கள் ஆறு முறை கிண்ணத்தை வென்றுள்ளனர். இறுதியாக அவர்கள் தசுன் ஷானக தலைமையில் 2022 ஆம் ஆண்டில் வெற்றி கொண்டனர். இலங்கை அணி சரித் அசலங்க (தலைவர்), பத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டீஸ், குசல் ஜனித் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டீஸ், கமில் மிஷாரா, தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, சாமிக கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார மற்றும் மதீஷா பத்திரன. https://athavannews.com/2025/1445115
  20. சம்பந்தன், சிங்களத்துக்கு சேவை செய்து… எதிர்கட்சி தலைவராகவும் இருந்து சாகும் மட்டும்... அரச மாளிகையில் சொகுசாக வாழ்ந்து செத்துப் போனார். ஆனால் சுத்துமாத்து சுமந்திரனை…. பாராளுமன்றத்துக்குள் நுளைய விடாமல், சாணி அடி கொடுத்து வீட்டில் குந்த வைத்துள்ளார்கள். சம்பந்தனுக்கு உள்ள கெட்டித்தனம் இதுக்கு இல்லை. 😂 🤣 அந்தளவுக்கு இனி சுத்துமாத்து சுமந்திரனை நிமிர விடாமல் விழுந்த மரண அடிதான், இவர் அண்மையில் தான் தோன்றித்தனமாக அறிவித்த ஹர்த்தாலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அது புரியாமல்… தான் ஒரு ஆள் என்று வாக்குப் பிச்சை எடுக்க, மக்கள் முன் பல்லைக் காட்டிக் கொண்டு திரியுது. 🤣 சுமந்திரன்.... இப்போ ஒர் அரசியல் அனாதை. சாயம் வெளுத்த ஓநாய். தமிழ்ப் பகுதிகளில்... இனி இவரின் சுத்துமாத்து எடுபடாது. வேணுமென்றால்... கொழும்பு, அம்பாந்தோட்டை போன்ற சிங்களவர்கள் இவருக்கு வாக்கு போடலாம். அங்கு முயற்சி செய்வது நல்லது. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.