Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய சட்டம்! இன்று (01) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சீட் பெல்ட் (ஆசனப் பட்டிகள்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட முடிவை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய வீதிகள் பாதுகாப்பு சபை தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார். எனினும், தற்போது சீட் பெல்ட்கள் பொருத்தப்படாத சில வாகனங்களில் அவற்றைப் பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 அன்று, அதிவேக ‍நெடுஞசாலைப் பேருந்துகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையில், ஆகஸ்ட் 30 அன்று, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும், சபைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க, இந்த முயற்சி “க்ளின் ஸ்ரீலங்கா” திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக செயல்படுத்தப்படுகிறது என்று விளக்கினார். Athavan Newsஅதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய சட்டம்!இன்று (01) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சீட் பெல்ட் (ஆசனப் பட்டிகள்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட முடிவை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவ
  2. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கடுமையாக சாடிப் பேசிய பிரதமர் மோடி! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சீனப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (01) தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தனது உரையைப் பயன்படுத்தி பயங்கரவாதம் குறித்து ஒரு கூர்மையான செய்தியை வழங்கினார். அதில் பயங்கரவாத அமைப்புகளுக்கு “சில நாடுகள்” வழங்கும் வெளிப்படையான ஆதரவை இனியும் பொறுத்துக்கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் 25 ஆவது SCO உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். இதன்போது தனது உரையினை உறுதியாக வெளிப்படுத்திய பிரதமர் மோடி, “பயங்கரவாதம் எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தலாகும்” என்று அடிக்கோடிட்டுக் காட்டினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியா நான்கு தசாப்தங்களாக “பயங்கரவாதத்தின் தாக்குதலை” அனுபவித்து வருவதாகவும், புது டெல்லியின் போராட்டத்தில் துணை நின்ற பங்காளி நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். அத்துடன், பயங்கரவாதம் தொடர்பாக எந்த இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நாம் தெளிவாகவும் ஒருமனதாகவும் கூற வேண்டும். இந்தத் தாக்குதல் (பஹல்காம்) மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு நாட்டிற்கும், நபருக்கும் ஒரு வெளிப்படையான சவாலாக இருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது நமக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுவது இயல்பானது. பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் நாம் ஒருமனதாக எதிர்க்க வேண்டும் – என்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டினை அடுத்து பிரதமர் மோடி, இந்தியா திரும்புவதற்கு முன்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடம் சந்திப்பில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 80 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் தலைநகர் பெய்ஜிங்கில் ஒரு பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, வடக்கு துறைமுக நகரமான தியான்ஜினில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 01) SCO உச்சிமாநாடு தொடங்கியது. நேற்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன், மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு மற்றும் மியான்மர் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் ஆகியோரையும் சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445468
  3. ஆப்கானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 20 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் காயம்! ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 20 பேர் உயிரழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள தொலைதூர மலைப்பகுதிகளில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குனார் மாகாணத்தின் நோர்கல் மாவட்ட மசார் பள்ளத்தாக்கில் பல வீடுகள் நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் புதைந்துவிட்டதாக தலிபான் அரசாங்கத்தின் பல வட்டாரங்கள் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடரும்போது இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். அதேநேரம், மனிதாபிமான அமைப்புகளிடமிருந்து அவசர உதவிக்கு தலிபான் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சில கிராமங்களை விமானம் மூலம் மட்டுமே அடைய முடியும். இப்பகுதியில் உள்ள வைத்தியசாலைகள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. அதே நேரத்தில் குடியிருப்பாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி இடிந்து விழுந்த கட்டமைப்புகளில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். 2023 ஒக்டோபர் மாதம் மேற்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது அண்மைய ஆண்டுகளில் ஆப்கானை தாக்கிய மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445443
  4. நாங்கள், மீன் தலையில் சொதி வைப்பது மாதிரி…. அவங்கள் பாம்புத் தலையில் சொதி வைப்பார்கள் போலுள்ளது. 😂
  5. ஊரில் உள்ள கஸ்ரப் பட்டவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று…. “யூ ரியூப்” நடத்தி, புலம் பெயர் தேசம் எங்கும் வசூல் வேட்டை நடத்தி தனக்கு புது மாடி வீடும், சொந்தமாக காரும், உடல் முழுக்க நகையும் போட்ட அந்த புளிச்சல் ஏவறை விடும் யூ ரியூப்காரனை சொல்கிறீர்கள் என நினைக்கின்றேன். 😂
  6. ஆக எந்த அரசாங்கமும்…. தமிழருக்கு நீதி வழங்கப் போவது இல்லை. 😡 அலுவோசு சுத்துமாத்து சுமந்திரன்…. ஏற்கெனவே உள்நாட்டு விசாரணை போதும், சர்வதேச விசாரணை தேவை இல்லை என்று முந்திரிக் கொட்டை மாதிரி, தனது நாறல் வாயால் உளறியது, அரசாங்கத்துக்கு நல்ல வாய்ப்பாக போய் விட்டது. 😡😡 ஆபிரஹாம் சுமந்திரனுக்கு வெள்ளை அடிப்பவர்கள்…. உடனடியாக 🧹 🪣 பெயின்ற் வாளியுடன் வரவும். 😂
  7. பக்கிரிகள்… 30 லட்சம் ரூபாய் லஞ்சம், என்று அதிகமாய் பேராசை பட்டு விட்டார்களோ…. இப்ப, நல்ல ஒரு அரச உத்தியோகம் போச்சே… 😂 🤣
  8. கோத்த பாயாவின் உடலில்…. என்ன என்ன வருத்தங்கள் இருக்குது என்று நாட்டு மக்கள் அறிய… அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 🤣 அரகலய நடாத்திய “Go Home Gotta” போராட்டத்தின் போது… ஜனாதிபதி மாளிகையில் வைத்து அப்போதைய ஜனாதிபதி கோத்தாவின் ஜட்டியையும் சிங்கள மக்கள் பார்த்தவர்கள் என்பதும் மறக்க முடியாத சம்பவம். எதற்கும்… கொழும்பு ஆஸ்பத்திரியில் குளிரூட்டப் பட்ட அறை ஒன்றை இப்போதே ஒதுக்கி வைப்பது நல்லது. 😂
  9. சுவராசியமானதும், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியதுமான நல்ல ஒரு பகிர்விற்கு நன்றி @ஏராளன் . பல வருடங்களுக்கு முன் பத்திரிகைகளிலும், “யூ ரியூப்” காணொளிகளாகவும் இது சம்பந்தமாக வந்த செய்தியையும் பகிர்ந்து கொள்கின்றேன். ⬇️ அது ஒரு கிழக்கு ஆசிய பிரபல உணவகம். அங்கு உயிருடன் உள்ள பாம்புகளை கண்ணாடி பெட்டிகளில் காட்சிப் பொருளாக வைத்து உணவு உண்ண வரும் வாடிக்கையாளர் காட்டும் பாம்பை பிடித்துக் கொன்று, உடனேயே அங்கு சுடச்சுட சமைத்துக் கொடுப்பார்கள் என்பதால் சனம் அலை மோதும். வழமை போல் வாடிக்கையாளர் காட்டிய பாம்பை… சமையற்காரர் பிடித்துக் கொண்டுபோய், சமையலறையில் வைத்து துண்டு துண்டாக வெட்டி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு விட்டு…. சமையலுக்கு வேண்டிய மசாலா போன்றவற்றை எடுத்துக் கொண்டு வந்து சமைக்க ஆரம்பிக்கலாம் என்று…. வெட்டி வைத்த துண்டுப் பாம்பு உள்ள சட்டியை தூக்க முற்பட்ட போது…. அதற்குள் இருந்த வெட்டிய பாம்பின் தலைப்பகுதி சமையற்க்காரரின் கையில் கொத்தி விட்டதை காணொளியாக போட்டு இருந்தார்கள். அக்காலத்தில் இந்தச் சம்பவம் செய்தி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. நானும் அந்தக் காணொளியை பார்த்தேன். அந்த சமையற்காரர் பின்பு இறந்து விட்டதாக அறிந்தேன். உலகில் எமக்குத் தெரியாமல் எத்தனையோ வினோதமான விடயங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது.
  10. முன்னொரு காலத்தில், ஒரு பசியெடுத்த சிங்கம், நரியிடம் சொன்னது: "எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் உன்னை சாப்பிட்டு விடுவேன்" நரி ஒரு கழுதையிடம் சென்று சொன்னது: "சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. உனக்கு நல்ல நாட்கள் வரப்போகின்றன.. கழுதையும் சென்றது..... கழுதையைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் கழுதையின் காதுகள் அறுபட்டாலும், கழுதை தப்பித்து விட்டது. கழுதை நரியிடம் சொன்னது: நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது..... அதற்கு நரி சொன்னது: சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம். கழுதைக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது. மீண்டும் கழுதையைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது.. கழுதை மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது. நரி சொன்னது: நீ அரியாசனத்தில் வசதியாக அமரவேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம். நரி கழுதையை மீண்டும் அழைத்து சென்றது. இந்த முறை, சிங்கம் கழுதையைப் பிடித்து கொன்றது. சிங்கம் நரியிடம் சொன்னது: பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப கழுதையை அழைத்து வந்துவிட்டாயே. போய் கழுதையின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா. நரி கழுதையின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது; கழுதையின் நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது. சிங்கம் கோபமடைந்து கேட்டது: மூளை எங்கே? நரி பதிலளித்தது: அந்த கழுதைக்கு மூளை இல்லை அரசே. மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி மூன்றாம் முறை வந்திருக்குமா? மகிழா
  11. கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 6 குற்றவாளிகளை வெற்றிக்கரமாக கைது செய்து இலங்கைக்கு கொண்டுவந்து சேர்த்த பொலிஸ் குழுவினர் கௌரவிப்பு! Vaanam.lk
  12. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வல்வை மண்ணின் மகத்தான புதல்வன், சந்நிதியான் அருளில் திகழும் தொண்டர், “அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல்” எனப் புகழப்படும் கலாநிதி செ. மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நாளை (31.08.2025) தனது 76ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். 🌺 சந்நிதியான் சுவாமியின் பணி பெரியபுராண நாயன்மார்களின் வழியில், “அடியார்க்கு அமுதூட்டல் தான் உயர்ந்த தர்மம்” என்ற கருத்தை வாழ்வின் கடமையாக ஏற்று நிற்கும் மோகன் சுவாமி, 1989 ஆம் ஆண்டில் தொண்டைமானாற்றில் சந்நிதியான் ஆச்சிரமத்தை நிறுவினார். அன்று தொடங்கிய அந்த தர்மம் இன்றும் 37ஆண்டுகளாக, வருடம் 365 நாட்களும், தினம் மூன்று வேளையும் அன்னதானமாக தொடர்கிறது... சந்நிதிக்கு வரும் அடியவர்கள் எவரும் பசியோடு செல்லக்கூடாது எனும் உயரிய சிந்தனையில் சந்நிதியான் ஆச்சிரமத்திலிருந்து அன்னதானப் பணியை அரும்பணியாக செய்து வருகிறார். அன்னதானப்பணியுடன் நின்று விடாது சந்நிதியான் ஆச்சிரமம் ஊடாக பல சமூக, சமய பணிகளையும் ஆற்றுகின்றார். 65 முதியோருக்கு உடை, உணவு, மருத்துவம், கல்விக்கான உதவித்தொகை மற்றும் கற்றல் உபகரணங்கள், சமூக நலத்திற்கான வீடமைப்பு, கிணறு அமைப்பு, மருந்து வழங்கல் என பரந்து விரிந்த அறப்பணிகளின் பெருங்கடலாக வளர்ந்து நிற்கிறது. தன்னடக்கம் மிக்க தொண்டர் அவரை எவ்வளவு பாராட்டினாலும், சுவாமி தன் வாக்கில் தாழ்மையுடன் – “நான் ஒன்றும் செய்யவில்லை; சந்நிதியான்தான் செய்கிறான்; நான் வெறும் கருவிதான்” என்று கூறுவர். இத்தகைய தன்னடக்கமே அவரை அடியார்க்கு அடியார் என்ற உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. 🌺 சைவக் கலாச்சாரச் சேவைகள் 1992 இல் தொடங்கிய சைவகலை பண்பாட்டுப் பேரவை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சைவ நிகழ்வுகளை நடத்தி வருகின்றது. 1998 முதல் மாதந்தோறும் வெளிவரும் “ஞானச்சுடர்” ஆன்மிகச் சஞ்சிகை ஆயிரக்கணக்கானோரின் இல்லங்களுக்குச் சென்று சந்நிதியான் அருள்வாக்கினை பரப்பி வருகின்றது. இந்தச் சேவைகளின் இயக்குனர் கலாநிதி மோகனதாஸ் சுவாமி. 🌺 மலையகத்திற்கான கரம் நீட்டல் 2014 அக்டோபர் 29 மீரியப்பொத்த மண்சரிவு மலையக உறவுகளை சோகத்தில் ஆழ்த்தியபோது, முதலில் உதவிக்கரத்தை நீட்டியவர் மோகன் சுவாமி. அதன்பின் பதுளை, கெக்கிராவ, முல்லைத்தீவு என எங்கு துயரம் ஏற்பட்டாலும் அங்கு அவர் ஆச்சிரமத்தோடு விரைந்து சென்று உணவு, மருந்து, கல்வி, வாழ்வாதார உதவி வழங்கும் பணியில் முன்னிலை வகித்து வருகிறார். விருதுகள் மற்றும் கௌரவங்கள் அவரது தொண்டுகளை உலகம் பாராட்டியதன் சின்னமாக, அமுதவாரிதி விருது, அறப்பணி அரசு விருது, சமூகச் சுடர் விருது, 2017 இல் இந்தியப் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம், 2018 இல் யாழ்ப்பாண மாநகரசபையின் “யாழ் விருது” என பல கௌரவங்கள் அவரை அணிந்துள்ளன. ஆனால் மக்களின் நம்பிக்கையே மிகப்பெரிய விருது என்று கருதுபவர் தான் மோகன் சுவாமி. வாழ்த்துப் பிரார்த்தனை “சமயம் என்பது சமூக நலனாகவே வெளிப்பட வேண்டும்” என்பதை தன் வாழ்க்கையால் நிரூபித்துக் காட்டும் வள்ளல் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் இன்னும் பல்லாண்டுகள் ஆரோக்கியமும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வுடன், அடியார்க்கு அமுதளிக்கும் அறப்பணியில் பல்லாண்டு சிறக்க சந்நிதியான் அருள்புரியப் பிரார்த்திப்போம். (நன்றி பாபுஜி) நம்ம யாழ்ப்பாணம்
  13. அனுர எதைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்? – நிலாந்தன். ரணில் ஒரு “வலிய சீவன்” என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஒர் அமீபாவைப் போல எல்லா நெருக்கடிகளுக்குள்ளும் தன்னை சுதாகரித்துக் கொண்டு,சுழித்துக் கொண்டு,வளைந்து நெளிந்து விட்டுக்கொடுத்து,தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வல்லமை அவருக்கு உண்டு என்ற பொருளில் அவ்வாறு கூறியிருந்தேன்.ஆனால் அண்மையில் நீதிமன்றத்தில் அவருடைய வழக்கறிஞர்கள் அவரைப் பிணை எடுப்பதற்காக சுட்டிக்காட்டிய நோய்களின் அடிப்படையில் சிந்தித்தால், அவர் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.அவருடைய சட்டத்தரணிகள் தெரிவித்திருக்கும் அத்தனை நோய்களும் அவரைப் பாதிக்குமாக இருந்தால் அவர் ஓர் ஆரோக்கியமான ஆளாக இருக்க முடியாது. இதை அமைச்சர் லால் கந்த சுட்டிக்காட்டியிருக்கிறார். தடுப்புக்காவல் நாட்களில் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களின்படி,கைது செய்யப்பட்டதன் மூலம் ரணிலுக்கு இருந்த நோய்கள் வெளித்தெரிய வந்தன என்றும் அதன் மூலம் அவர் அந்த நோய்களிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றும் எடுத்துக் கொண்டால்,அந்த மருத்துவர் கூறுவதுபோல கைது செய்யப்பட்டதால் அவருக்கு நன்மை கிடைத்திருக்கிறதா? வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் போது அவர் கையில் வைத்திருந்த புத்தகம் போரிஸ் ஜெல்சின் எழுதியது. Unleashed-கட்டவிழ்த்து விடப்படுதல் என்பது அதன் பெயர். அனுர எதைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்? அந்த மருத்துவர் கூறுவதுபோல நோய்கள் நீங்கப்பெற்று ரணில் புத்திளமையோடு மீண்டும் அரசியலுக்கு வருவாரா ? அல்லது லால் கந்த கூறுவதுபோல ரணில் ஒரு நோயாளியாக அரசியலில் இருந்து ஒதுங்குவாரா? அவர் ஒரு வலிய சீவன்.இப்பொழுது சீண்டப்பட்டிருக்கிறார். காயப்பட்ட பாம்பு. எனவே பழிவாங்கும் உணர்ச்சி அதிகமாக இருக்கும். அதனால் எதிர்காலத்தில் இயலாத வயதிலும் அவர் அரசியலில் ஈடுபடக் கூடிய வாய்ப்புகள் இருக்கலாம். அல்லது அவமானத்தோடும் தோல்வியோடும் அவப்பெயரோடும் அவர் அரசியலில் இருந்து ஒதுங்க நேரிடலாம்.அவரைப் போலவே தந்திரமும் சூழ்ச்சிகளும் நிறைந்த அவருடைய மாமன் ஜெயவர்த்தன இறந்த பொழுது அவருக்காக நாடு பெரிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். நவீன சிங்கள பௌத்த அரசியலில் ரணில் ஒரு வித்தியாசமான தலைவர். அவர் என்றைக்குமே சிங்கள பௌத்த ஆடைகளோடு காணப்பட்டதில்லை. மேற்கத்திய ஆடைகளோடுதான் காணப்பட்டார்.அவர் என்றைக்குமே சிங்கள பௌத்த தீவிரவாதத்திற்கு தலைமை தாங்க முற்பட்டதில்லை. லிபரல் முகமூடி அணிந்த ஒரு இனவாதியாகவே என்றென்றும் இருந்தார்.அவருடைய லிபரல் முகமூடி தற்செயலானது அல்ல. அவருடைய மேற்கத்தியப் பாரம்பரியத்தினடியாகக் கிடைத்தது. அவர் மேற்கத்திய நாடுகளுக்கு அதிகம் இசைவான ஒரு தலைவர்.எனவே அவர் அந்த முகமூடியை அணிந்தால்தான் தனது வாக்காளர்களுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணலாம். இலங்கைத் தீவில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் என்று பார்த்தால் முக்கியமான மூன்று முயற்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில்தான் முன்னெடுக்கப்பட்டன.முதலாவது இந்திய-இலங்கை உடன்படிக்கை. இரண்டாவது ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை.மூன்றாவது நிலைமாறு கால நீதியின் கீழான முன்னெடுப்புகள். இந்த மூன்றில் இரண்டு முயற்சிகளில் ரணில்தான் சிங்கள பௌத்த அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தியவர். எனவே தொகுத்துப் பார்த்தால் இலங்கைத் தீவில் சமாதான முயற்சிகளில் அதிகமாக ஈடுபட்ட ஒரு சிங்களத் தலைவராக அவரைக் கருத முடியுமா? ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம் ரணிலை ஒரு நரி என்று அழைத்திருந்தார். தனது மாமனைப் போலவே ரணிலும் ஒரு தந்திரசாலிதான். ஆனால் அவருடைய மாமன் அளவுக்கு அரசியலில் அவர் அதிர்ஷ்டசாலி அல்ல.அவருடைய கெட்டித்தனங்களையும் தந்திரங்களையும் சிங்கள மக்கள் அங்கீகரிக்கவில்லை.சிங்கள மக்கள் அவரைப் போன்ற மேற்கத்திய பாரம்பரியத்தின் பிரதிநிதியாக தோன்றுகின்ற ஆனால் முகமூடி அணிந்த ஓர் இனவாதியை விடவும் வெளிப்படையாக தெரியும் இனவாதிகளைத்தான் அங்கீகரித்தார்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். இதனால் ரணில் விக்கிரமசிங்க சிங்கள பௌத்த அரசியலில் அதிர்ஷ்டம் அதிர்ஷ்டமில்லாத ஒரு தலைவர்தான்.விளக்க மறியலில் வைக்கப்பட்ட ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற காரணத்தாலும் அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் தான். அவர் மட்டுமல்ல அவரை அங்கீகரிக்க மறுத்த சிங்கள மக்களும் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள்தான்.ஏனென்றால் அவரைப் போன்ற ஒரு தந்திரசாலிதான் சிங்கள மக்களைப் பேரரசுகளின் இழு விசைகளுக்குள் இருந்து காப்பாற்றக் கூடியவர்.ஏனென்றால் எல்லாப் பேரரசுகளையும் சமதூரத்தில் வைத்திருக்கக்கூடிய ஒரு தலைவராக ரணில் மட்டுமே காணப்படுகிறார்.இந்தத் தகுதி காரணமாகவே அவர் தமிழ் மக்களை அனைத்துலக அரங்கில் தோற்கடிக்கும் வாய்ப்புகளை அதிகமாக கொண்டிருந்தவர்.மேற்கு மைய சமாதான முயற்சிகளில் ரணில் எப்பொழுதும் மேற்குடன் நிற்பார். மேற்கும் ஐநாவும் ரணிலுடன் நிற்கும். இதன் இறுதி விளைவாக தமிழ் மக்கள் அனேகமாக சமாதானம் என்ற பெயரில் ஒரு “தருமர் பொறிக்குள்” அகப்பட நேரிடும். அப்படியொரு தருமர் பொறிக்குள் இருந்து தப்புவதற்காகத் தான் விடுதலைப்புலிகள் இயக்கம் 2005 இல் நடந்த தேர்தலில் தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிப்பதைத் தடுத்தது.அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்றும் அழைத்தார். அவர் ஒரு நரியாக இருப்பது தமிழ் நோக்கு நிலையில் ஆபத்தானது. பாதகமானது.ஆனால் சிங்கள நோக்கு நிலையில்,அது சிங்கள பௌத்த அரசியலுக்கு அதிகம் வாய்ப்பானது. பாதுகாப்பானது. இலங்கை ஒரு குட்டித் தீவு. இந்தியப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்துக்குள் அமைந்திருக்கும் ஒரு குட்டித் தீவு.அதேசமயம் பேரரசுகளின் வணிக வழிகளில் அமைந்திருப்பது என்பதனாலும் மற்றொரு பிராந்திய பேரரசு ஆகிய சீனாவின் உலகளாவிய விரிவாக்க வியூகத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு விட்டதனாலும் உலகில் உள்ள எல்லாப் பேரரசுகளினதும் இழுவிசைகளுக்குள் இலங்கை சிக்கியிருக்கிறது. ஒரு குட்டித் தீவு என்ற அடிப்படையில் பேரரசுகளோடு புஜ பலத்தால் மோத முடியாத ஒரு நாடு.ஆனால் புத்தியால் மோதலாம்.புத்தியால் தந்திரத்தால் சமாளிக்கலாம்.சிங்கள மக்கள் தங்களைச் சிங்கத்தின் வாரிசுகளாக கருதலாம். ஆனால் நடைமுறையில் அவர்கள் சிங்கங்கள் அல்ல. ராஜதந்திரக் காட்டில் மிகச் சிறிய பிராணிகள் அவர்கள்.உருவத்தில் சிறுத்த நரி தந்திரம் தான் செய்யலாம். எதிரியையும் எதிரியையும் மோத விட்டுத் தன்னைத் தற்காத்துக் கொள்ளலாம். அதைத்தான் ரணிலின் மாமனார் ஜெயவர்த்தனா ஈழப் போரில் செய்தார். மாமனைப் போலவே மருமகனும் ஒரு தந்திரசாலி. புஜ பலத்தை விடவும் புத்தி பலத்தை நம்பிய ஒரு தலைவர். பேரரசுகளின் ஆபத்தான இழு விசைகளுக்குள் சிக்கியிருக்கும் ஒரு சிறிய தீவின் தலைவர்கள் அப்படித்தான் இருக்கலாம். அவர்கள் நெஞ்சை நிமித்திக்கொண்டு முன் சென்றால் பேரரசுகள் ஒன்றில் அடித்து முறித்து விடும். அல்லது விழுங்கிவிடும். இது ரணிலுக்குத் தெரியும். எல்லாச் சிங்களத் தலைவர்களுக்கும் தெரியும்.ஆனால் இந்த ஆபத்தை கையாள்வதில் அவர்களிடம் வெவ்வேறு விதமான அணுகுமுறைகள் இருந்தன. இந்த விடயத்தில் ரணில் ஒரு தந்திரசாலியாக இருந்தார். தந்திரங்களின் மூலம் அதாவது புத்தி பலத்தால்தான் பேரரசுகளை வெட்டியோடலாம் என்பது அவருடைய அணுகுமுறை. அவர் அவ்வாறு எல்லா பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்து அணுகக்கூடிய கெட்டித்தனமும் தந்திரமும் மிக்கவர் என்பதனால்தான், அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரே சந்தர்ப்பத்தில்,நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட டளஸ் அழகப்பெருமாவை ஆதரிக்குமாறு இந்தியா தமிழ்க் கட்சிகளிடம் கூறியதா? மேற்கு நாடுகளுக்கும் இது தெரியும். அவரைக் கண்டபடி கையாள முடியாது. ஆனால் மேற்கு நாடுகளுக்கு ரணிலின் விடயத்தில் உள்ள ஆறுதலான விடயம் என்னவென்றால் அவர் என்றைக்குமே நாட்டை மேற்குக்கு எதிரான திசையில் செலுத்த மாட்டார் என்பதுதான். ஏனென்றால் அவர் அவர்களுடைய குட்டையில் ஊறிய ஒரு மட்டை. எனவே ரணில் தந்திரசாலியாக இருந்தது சிங்கள மக்ககமானது ளுக்கு சாதபாதுகாப்பானது. இலங்கை போன்ற ஒரு சிறிய நாடு பேரரசுகளின் மத்தியில் தப்பிப் பிழைப்பது என்றால் அதன் தலைவர் நரியாகத்தான் இருக்க முடியும்.சிங்கமாக அல்ல. ஆனால் சிங்களக் கூட்டு உளவியலானது சிங்கங்களைத்தான் தேடியது. அதனால் ரணில் சிங்கள பௌத்த அரசியலில் அதிஷ்டம் குறைந்த ஒருவராகவே காணப்படுகிறார். தேர்தல்மூலம் ஒரு ஜனாதிபதியாக வரும் கனவு அவரை பொறுத்தவரை இதுவரை பலிக்கவே இல்லை.அதன் விளைவாக சொந்தக் கட்சிக்குள்ளும் உடைவு. இவ்வாறு ஒரு பலவீனமான இலக்காக அவர் இருந்தபடியால்தான் என்பிபி அவரைத் தூக்கியது. ஆனால் இப்பொழுது அவரை நோக்கி ஒரு திரட்சி ஏற்பட்டு இருக்கிறது. அவரைக் கைது செய்ததன்மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்று திரளக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன. ஆனால் மக்கள் எழுச்சிகளின் பின்னணியில் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி தலைமை தாங்கவல்ல தலைவர்கள் எதிர்க்கட்சிகள் மத்தியில் இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் என்பிபி வெற்றி பெற்றது.லால் கந்த அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.அந்த வெற்றிடத்தில்தான் ஜனாதிபதியாகும் வாய்ப்பு ரணிலுக்குக் கிடைத்தது.அந்த வெற்றிடம் இப்பொழுதும் உண்டு. ரணிலை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் சிங்கள மேட்டுக்குடி என்பன ஒரு பலமான திரட்சியை உருவாக்கினால் அது எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சவாலாக மாறலாம். ஆனால் அந்த திரட்சிக்கு தலைமை தாங்க, ரணிலால் முடியுமா? அனுர கட்டவிழ்த்து விட்டிருப்பது எதனை? https://athavannews.com/2025/1445341
  14. சஷேந்திர ராஜபக்ஷவுக்கு 4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்! நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள் முன்னாள் அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷவிற்கு 4000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷவின் மகனான சஷேந்திர ராஜபக்ஷ, அரசியலில் முன்னதாக ஊவா மாகாண சபையின் தலைவராகவும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றினார். அவரிடம், BMW கார், V8 வகை கார், நிஷான் வகை பெட்ரோல் கார் மற்றும் யாரிஸ் வகை கார் போன்ற நான்கு ஆடம்பர மோட்டார் வாகனங்கள் உள்ளன. இவை மனோஜ் ஏகநாயக்க என்ற எழுத்தாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சஷேந்திர ராஜபக்ஷவிற்கு நுகேகொடை, நாவல வீதியில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீடு மற்றும் நிலமும், பாலவத்த வீதியில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடும், கொழும்பு 7, ரோஸ்மீட் பிரதேசத்தில் 4 அடுக்கு கொண்ட 55 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடும், தெஹிவளையில் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் நாரஹென்பிட்டவில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலமும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவைதவிர நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான, பத்தரமுல்லையில் 70 பெர்ச் அளவுள்ள ஒரு நிலத்தை, சஷேந்திர ராஜபக்ஷ, தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தவறான ஆவணங்களை உருவாக்கி, தனது பெயரில் பெற்றுள்ளார். அதன் மதிப்பு 70 கோடி ரூபாய் ஆகும். அத்துடன் சீதுவ பிரதேசத்தில் ஒரு வீடு மற்றும் நிலம் 300 கோடி மதிப்பில் சமீபத்தில் விற்கப்பட்டதாகவும், கதிர்காமம் பிரதேசத்தில் ஒரு ஹோட்டல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சஷீந்திர ராஜபக்ஷவிடம், அவுஸ்திரேலியாவில் சொகுசு வீடுகள் இரண்டு உள்ளன. அவற்றை அங்கு அவரது மகன் கண்காணிக்கிறார் எனக் கூறப்படுகின்றது. இவை தவிர, சஷேந்திர ராஜபக்ஷவிடம் இன்னும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக ஊகிக்கப்பட்டு வருகிறது. சில சொத்துக்கள் அவர் பெயரிலும், சில நெருக்கமான நபர்களின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முழுமையான விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445387
  15. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்! ”செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்” என புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு நேற்று லண்டன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது. ‘இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு, கண்ணீரால் நினைவுக்கூரப்படும் உயிர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதுடன், இலங்கையில் காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை வழங்க முடியும் என வலியுறுத்தினர். அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்களுக்கு சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதன் ஊடாகவே நீதியை பெற முடியும் எனவும், இந்த விடயத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரித்தானிய அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். செம்மணி மனித புதைகுழியில் பல 50 இற்கும் அதிகமான எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுவதன் ஊடாகவே செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445381
  16. அந்த மர்ம நபர் - புட்டின். 😛 😂 புட்டினுக்கு... கண்டனம் தெரிவிக்கின்ற குரூப் ஒன்றையும் காணவில்லை. 😂 இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையோ. 🤣 முன்னாள் சபாநாயகரையே சத்தம் இல்லாமல் போட்டுத் தள்ளியதை பார்த்த, செலென்ஸ்கிக்கு இப்ப குலைப்பன் காய்ச்சல் எடுத்திருக்கும். 😂 🤣
  17. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் அதிருப்தி! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் அண்மைய அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃபிரேஞ்ச்சுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான இலங்கையின் பதில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் முன்வைக்கப்படுவதற்காக வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்டமா அதிபரின் பதில், இலங்கை அரசின் முழுமையான அறிக்கையின் ஒரு பகுதியாக இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இம்மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட தனது அறிக்கையில், சட்டமா அதிபர் திணைக்களம் நீதிக்கு ஒரு தடையாக இருப்பதாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக அந்த திணைக்களத்தில் திருத்தங்கள் அவசியம் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445327
  18. ஜெனீவா பயணத்திற்கு முன்னர் ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ள விஜித ஹேரத்! செப்டம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகும் 60வது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் கலந்து கொள்ள ஜெனீவாவுக்குச் செல்வதற்கு முன்னர், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பை தளமாகக்கொண்ட ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார். இதன்போது, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த கண்ணோட்டத்தை வழங்குவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகத்தை அமைத்தல் ஆகியவை இதில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445311

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.