Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- செம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் – நிலாந்தன்.
செம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் – நிலாந்தன். ஐநாவின் அறுபதாவது கூட்டத்தொடர் இம்மாதம் எட்டாம் தேதி அதாவது நாளை ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வதற்கு இடமில்லை.ஏனென்றால் ஈழத் தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் ஐநா அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ்வதற்குரிய ஒரு களம் அல்ல.போராடும் மக்கள் மத்தியில்தான் அதிசயங்களும் அற்புதங்களும் நிகழும். எனினும், எல்லாவிதமான வரையறைகளோடும், தமிழ் மக்களுக்கு என்று கடந்த 16 ஆண்டுகளாக திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஒரே அனைத்துலக அரங்கு மனித உரிமைகள் பேரவைதான். அந்த மனித உரிமைகள் பேரவைக்குள் காலை ஊன்றிக் கொண்டுதான் தமிழ் மக்கள் அடுத்த கட்டத்திற்கு பாயலாம். ஐநாவுக்கு கூட்டுக் கடிதம் எழுதும் ஒரு சந்திப்பின்போது சிவாஜிலிங்கம் அதை ஓர் உவமையோடு சுட்டிக்காட்டியிருந்தார். மனித உரிமைகள் பேரவையை முற்றாக நிராகரிக்க முடியாது. ஏனென்றால் நாங்கள் பாயப் போகிறோம் என்று சொன்னால் எங்கேயாவது ஒரு காலை ஊன்ற வேண்டும்.ஒரு காலை ஊன்றினால்தான் பாயலாம்.இப்போதைக்கு மனித உரிமைகள் பேரவைதான் எங்களுக்குத் தளம். எனவே அதில் ஊன்றியிருக்கும் காலையும் எடுத்து விட்டால் நாங்கள் விழுந்து விடுவோம் என்று சிவாஜி சொன்னார். மனித உரிமைகள் பேரவையில் கடந்த நான்கு ஆண்டுகளாக சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. அது தொடர்பாக தமிழ் மக்களுக்கு விமர்சனங்கள் உண்டு.எனினும் அந்த அலுவலகத்தின் அடுத்த கட்டம் தொடர்பாக இந்தமுறை கூட்டத் தொடரில் தீர்மானிக்கப்படும்.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்து சென்றிருக்கும் ஒரு பின்னணியில்,அவர் இங்கு அவதானித்தவற்றின் தொகுப்பாகவும் ஐநாவின் நடவடிக்கைகள் அமையும். அனுர அரசுத் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டு ஓராண்டு முடியும் ஒரு மாதத்தில் ஐநாவின் 60ஆவது கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த அரசாங்கம் தனக்கு தமிழ் மக்களின் ஆணையும் இருப்பதாகக் கூறிக் கொள்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனக்குக் கிடைத்த ஏழு ஆசனங்களையும் அது தமிழ் மக்கள் தனக்கு வழங்கிய ஆணை என்று ஐநாவிலும் உலக அளவிலும் புதுடில்லியிலும் கூறி வருகிறது. ஐநாவும் புதிய அரசாங்கத்தின் கழுத்தை நெரிப்பதற்குப் பதிலாக அதற்க ஒரு சந்தர்ப்பத்தை வழங்கலாம் என்று சிந்திப்பதாகத் தெரிகிறது. இலங்கை வருகையின் பின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வாறு கருதத்தக்கவையாக உள்ளன. இவ்வாறு ஐநா இலங்கைக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கலாம் என்று சிந்திக்கும் ஒரு காலகட்டத்தில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது கடந்த ஓராண்டு காலப்பகுதிக்குள் பொறுப்புக் கூறல் தொடர்பில் என்னென்ன செய்திருக்கிறது ? முதலாவதாக, அவர்கள் செம்மணிப் புதை குழியும் உட்பட எல்லாப் புதைகுழிகளின் விசாரணைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். இந்த விடயத்தில் அரசாங்கம் உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பாக செம்மணியைப் பார்க்கின்றது. இரண்டாவதாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இந்த மாதம் நீக்கப்போவதாக ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது.எனினும் இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரையிலும் அதுதொடர்பாக உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் எவையும் வெளி வந்திருக்கவில்லை. மூன்றாவதாக,ஊழலுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.இதுவரை 70 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணிலும் உட்பட முன்னாள் அமைச்சர்கள்,பிரபல அரசியல்வாதிகள்,படைத்துறைப் பிரதானிகள்,காவல்துறைப் பிரதானிகள்,உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளோடு தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படுகின்ற பாதாள உலகத் தலைவர்கள் போன்ற பலரும்அடங்குவர். இக்கைது நடவடிக்கைகளின் மூலம் நாடு ஊழலுக்கு எதிராகத் துணிச்சலாக முன்னேறி வருகிறது என்ற ஒரு தோற்றத்தை அரசாங்கம் கட்டி எழுப்பி வருகிறது.இதுவும் ஐநாவில் அரசாங்கம் காட்டக்கூடிய ஒரு வீட்டு வேலையாக இருக்கும். நாலாவதாக,அரசாங்கம் அதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களையும் தொடங்கியிருக்கிறது.இவ்வாறு தொடங்கப்பட்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களில் சர்வதேச விளையாட்டு மைதானம், வட்டுவாகல் பாலத்தைப் புதிதாகக் கட்டுவது, தெங்கு முக்கோணத் திட்டம், வவுனியா,மத்திய பொருளாதாரம் மையத்தைத் திறந்து வைத்தமை, யாழ்ப்பாணத்தில் ஒரு கடவுச்சீட்டு அலுவலகத்தைத் திறந்தமை, மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம்கட்ட அபிவிருத்தியைத் தொடக்கி வைத்தமை,யாழ் பொதுசன நூலகத்தை டிஜிட்டல் தளத்தில் நுகர்வதற்குரிய ஏற்பாடுகளைத் தொடக்கி வைத்தமை ….போன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் அடங்கும். இந்த அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அரசாங்கம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகப் பாரபட்சமின்றி உழைக்கிறது என்ற ஒரு தோற்றத்தை வெளியே காட்ட முடியும். அனுர ஜனாதிபதியாகத் தெரிவு தெரிவு செய்யப்பட்ட ஓராண்டுக்குள் அவர் தமிழ் மக்களுக்குச் செய்தவற்றின் பட்டியல் ஒன்றை அரசாங்கம் ஐநாவில் காட்ட முடியும். மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்கலாம் என்று சிந்திக்கின்ற ஒரு ராஜதந்திரச் சூழலில் அரசாங்கம் மேற்கண்டவாறு ஐநாவை நோக்கி ஒரு தொகுதி வீட்டு வேலைகளைச் செய்து வருகிறது. இதுவரையிலுமான கைது நடவடிக்கைகளில் போர்க் குற்றங்கள் அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களோடு தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அநேகமாக இல்லை. ஒரு கடற்படை பிரதானி கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் தென்னிலங்கையில் இடம்பெற்ற ஒரு கடத்தல் சம்பவத்தோடு தொடர்புடையது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மீதான குற்றச்சாட்டுகளில் நேரடியாகப் போர் குற்றங்கள் சம்பந்தப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. தவிர,ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடவடிக்கையின்போது அவரை 40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்து இருந்திருக்க வேண்டும் என்ற பொருள்பட அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சொன்னார். அதன் பொருள் என்னவென்றால், 40 ஆண்டுகளுக்கு முன்பு போர்க்காலத்தில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் எதிராக அவர் அங்கம் வகித்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்திருக்க வேண்டும் என்பதாகும். ஆனால் ரணில் அண்மையில் கைது செய்யப்பட்டது அவ்வாறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அல்ல. பொதுச் சொத்தைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான். எனவே தொகுத்துப் பார்த்தால் இதுவரை கைது செய்யப்பட்ட 70க்கும் அதிகமானவர்களில் யாருமே போர்க் களத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே இப்பொழுது நடக்கும் கைது நடவடிக்கைகள் நாட்டின் ஒட்டுமொத்த ஊழல் கட்டமைப்புக்கு எதிரானவைகளாகத்தான் காணப்படுகின்றன. ஐநாவில் ஏற்கனவே இயங்கி வருகின்ற சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் கட்டமைப்பினால் இனங்காடப்பட்ட படைப்பிரதானிகளுக்கு எதிரானவைகள்கூட அல்ல.அவ்வாறு அடையாளம் காணப்பட்ட சில படைப் பிரதானிகளுக்கு எதிராக ஏற்கனவே கனடா,அமெரிக்கா,பிரித்தானியா போன்றன பயணத் தடைகளை விதித்து, நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. ஆனால் அரசாங்கமோ அவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கி வருகிறது. எனவே நாட்டில் தற்பொழுது இடம்பெறும் பெரும்பாலான கைது நடவடிக்கைகள் தமிழ் நோக்கு நிலையில் ஐநாவின் பொறுப்புக்கூறும் செய்முறைகளின் பிரதான பகுதிக்குள் வரவில்லை.அதை ஒரு வீட்டு வேலையாக அரசாங்கம் ஐநாவில் காட்ட முடியாது.ஆனால் உள்நாட்டு நீதியின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு அவை அரசாங்கத்திற்கு உதவும். எனவே கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வரும் திருப்பகரமான மாற்றங்களில் ஐநாவில் காட்டக்கூடிய மாற்றங்கள் ஒப்பீட்டளவில் குறைவுதான்.தமிழ் நோக்கு நிலையில் இருந்து உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கும். “அரசாங்கம் போர் வீரர்களை வேட்டையாடுகிறது” என்ற பொருள்பட நாமல் அண்மையில் எச்சரித்திருந்தார்.இந்த எச்சரிக்கையானது அரசாங்கம் அதன் கைது நடவடிக்கைகளில் எதுவரை போகலாம் என்பதை உணர்த்தும் நோக்கிலானது. எது எவ்வாறு இருப்பினும்,ஜெனிவா கூட்டத்தொடரில் இம்முறை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பலவீனமாக இல்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் தமிழ்த் தரப்பு? இதுவரை நான்குக்கும் குறையாத கடிதங்கள் ஐநாவுக்கு போயிருக்கின்றன. ஒரு கடிதம், தமிழ் தேசிய பேரவையும் சிவில் சமூகங்களும் இணைத்து அனுப்பியது. இரண்டாவது கடிதம், தமிழரசுக் கட்சி அனுப்பியது. மூன்றாவது கடிதம் தமிழ்த் தேசியப் பேரவையின் கடிதத்தில் போதாமைகள் உண்டு என்று கூறி புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவரும் தாயகத்தில் உள்ள அவருடைய சிவில் சமூக நண்பர்களும் இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளர் உட்பட சில அரசியல்வாதிகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டு அனுப்பிய ஒரு கடிதம். நாலாவது கடிதம் பிரித்தானியத் தமிழர் பேரவை அனுப்பியது. இப்படியாக நான்குக்கும் குறையாத கடிதங்கள் ஐநாவை நோக்கிப் போயிருக்கின்றன.அரசில்லாத சிறிய தேசிய இனமாகிய தமிழ் மக்கள் தங்களுக்குள் ஐக்கியப்படாமல் கட்சிக்கொரு கடிதம் சிவில் சமூகத்துக்கு ஒரு கடிதம் என்று “ஈகோ”க்களாகப் பிரிந்து போய் நிற்கிறார்கள். செம்மணி எதிர்பாராத புதிய வாய்ப்புகளைத் தமிழ் மக்களுக்குத் திறந்து விட்டுள்ளது.அதேசமயம் அரசாங்கத்திற்கு அது எதிர்பாராத ஒரு சோதனைக் களம்.ஆனால் அந்தச் சோதனைக் களத்தை அரசாங்கம் ஒருமுகமாக எதிர்கொள்கிறது அந்த விடயத்தில் அரசாங்கம் உள்நாட்டு நீதியின் நம்பகத் தன்மையைப் பலப்படுத்துகிறது என்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் செம்மணி திறந்து வைத்திருக்கும் புதிய வாய்ப்புகளைத் தமிழ்த் தரப்பு எவ்வாறு கையாளப் போகின்றது? அதுவும் ஜெனிவா கூட்டத் தொடர் நாளை தொடங்கும் பொழுது? செம்மணிக்கு நீதி கேட்டும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் அனைத்துலக விசாரணையைக் கேட்டும் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றன. அது வரவேற்கத்தக்கது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த விடயத்தை முன்னெடுத்து வருகிறது. அதில் கட்சி பேதமின்றி தமிழரசுக் கட்சியும் உட்பட அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.அது வரவேற்கத்தக்க விடயம். ஐநா கூட்டத் தொடருக்கு சில கிழமைகளுக்கு முன்னராவது அப்படி ஒரு ஞானம் உதித்ததைப் பாராட்ட வேண்டும்.ஐநா கூட்டத் தொடர்களில் தேசிய மக்கள் சக்திக்கு அனுகூலமான நிலைமைகள் அதிகமிருக்கும் ஒரு ராஜதந்திரச் சூழலில் தமிழ்த் தரப்பு அவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவதுதான் பலமானது பொருத்தமானது. Athavan Newsசெம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் - நிலாந்தன்.ஐநாவின் அறுபதாவது கூட்டத்தொடர் இம்மாதம் எட்டாம் தேதி அதாவது நாளை ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வதற்கு இடமில்லை.ஏனென்றால் ஈழத் தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்த- இலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் ஓமானில் கைது!
இலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் ஓமானில் கைது! இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான ‘மிதிகம சூட்டி’ என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள உலகக் குழுவின் தலைவர் எனவும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர், தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. முதலில் டுபாய்க்கு தப்பிச்சென்று அதன் பின்னர் ஓமானில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த மதுஷங்கவை ஓமான் பொலிஸார் கைது செய்துள்ளனர். https://athavannews.com/2025/1446294- ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கையின் பதில்!
ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கையின் பதில்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட 57 இன் கீழ் 1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை தொடர்பாக மனித உரிமை பேரவையின் ஆணையளரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது. குறிப்பாக மனித உரிமைகள் பேரவையின் 57 இன் கீழ் 1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த தீர்மானத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை இலங்கை தொடர்ந்து எதிர்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 57 இன் கீழ் 1 தீர்மானம், வெளிப்புறத் திட்டங்கள், குறிப்பாக உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அலுவலகத்துடனும், அதன் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணி வருவதாகவும் ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. எனவே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும், சமநிலையுடனும், நிலைமையைப் பிரதிபலிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து, ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் விவரித்துள்ளது. https://athavannews.com/2025/1446291- முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!
பிள்ளையான் வெளியே வந்தால்.. அவனை இயக்கிய அரசியல்வாதிகளே, தமது பொட்டுக்கேடு வெளியே வந்துவிடும் என்று, பாதாள உலக கோஷ்டியை வைத்து சுட்டுக் கொன்று விடுவார்கள் என்பதால்.... மறியலில் பல்லை கடித்துக் கொண்டு, களி சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றார் பிள்ளையான்.- முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!
கைது செய்யப்படுகின்ற சிங்கள அரசியல் வியாதிகள் எல்லோரும் நோய் வாய்ப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். நம்ம பிள்ளையான்தான் கெத்து. ஒரு நோயும் இல்லாத ஆரோக்கியமான மனுசன், சிறையிலேயே... கம்மென்று குந்திக் கொண்டு இருக்கின்றார்.- இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!
கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவி இரத்து! போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவியை இரத்து செய்துள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கையொப்பமிட்ட கடிதத்தில், இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சம்பத் மனம்பேரி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பத் மனம்பெரிக்கு சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50,000 கிலோ மூலப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சம்பத் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தங்கள் கட்சி ஒருபோதும் மென்மையான கொள்கையைப் பின்பற்றுவதில்லை என்றும் அதன்படி, அவரது கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக இரத்து செய்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1446284- காசா நகரிலுள்ள பாலஸ்தீனிய மக்களை வெளியேற்ற நடவடிக்கை!
காசா நகரிலுள்ள பாலஸ்தீனிய மக்களை வெளியேற்ற நடவடிக்கை! காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். குறிப்பாக காசா நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்ற நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை தெற்கு பகுதி நோக்கி செல்லுமாறு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காசா நகரை முழுமையாக கைப்பற்றுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இஸரேல் இராணுவம் வேகமாக முன்னேறி வருகின்றது. இஸ்ரேலிய இராணுவத்தினர் கடந்த பல வாரங்களாக காசாவின் வடக்கு நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றன. காசா நகரம் ஒரு ஹமாஸ் கோட்டை என்றும், அதைக் கைப்பற்றுவது மிகவும் அவசியம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. யுத்ததிற்கு முன்னதாக காசா நகரில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வசித்துவந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது எஞ்சியுள்ள மக்களை காசாவில் உள்ள கான் யூனிஸின் நியமிக்கப்பட்ட கடலோரப் பகுதிக்கு செல்லுமாறும் அவ்வாறு அங்கு தப்பி செல்லும் மக்களுக்கு உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் தங்குமிட வசதிகளை பெற முடியும் என்று இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதியளித்தார். காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நேற்று முன்தினம் மாத்திரம் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது ஏழு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு நகர்ப்புற மையத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்த வண்ணம் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா நகரத்தில் அதிகளவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு உயரமான கோபுரத்தை இராணுவம் அழித்ததால், காசாவில் “நரகத்தின் வாயில்கள்” திறக்கப்படுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2025/1446288- இரசித்த.... புகைப்படங்கள்.
நாய்க்குட்டிக்கு செல்லம் கூடிப் போச்சு. 🤣- யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
யாழ்.கள உறவு... அஜீவன் இன்று, (06.09.2025) காலமானார். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்பதுடன், அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏 தகவல்: @தனிக்காட்டு ராஜா- தேங்காய்க்கு... ஏன் Coconut என்று பெயர் வந்தது தெரியுமா?
தேங்காய்க்கு Coconutனு ஆங்கிலத்தில் பேருன்னு எல்லாருக்கும் தெரியும். அது ஏன்னு தெரியுமா? o 0 o Coco என்றால் ஸ்பானிஷ், போர்த்துகீசிய மொழிகளில் தலை, மண்டை என்று பொருள். தேங்காயைப் பார்த்தால் மூன்று புள்ளிகளுடன் ஒரு முகத்தைப்போலத் தோன்றியதால், போர்த்துக்கீசிய நாட்டுப்புற இலக்கியங்களில் வரும் பேயையும் குறிக்கும் கோகோ என்ற சொல்லால் கோகோ நட் எனப் பெயர் வைத்தார்கள். அதுதான் coconut ஆனது. உலகில் இரண்டு வகை தேங்காய்கள் உள்ளன. ஒன்று இந்தியப் பெருங்கடலை ஒட்டிய நிலப்பகுதியில் உருவான தேங்காய். மற்றொன்று பசிபிக் கடலை ஒட்டிய நிலப்பகுதியைச் சேர்ந்த தேங்காய். எந்தெந்த நாடுகளில் தென்னை மரங்கள் உள்ளன என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். (தெரியாவிட்டால் கூகுளில் பார்க்கவும்.) இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்துதான் உலகின இதர பகுதிகளுக்கு தேங்காய் பரவியது என்று ஒரு கருத்து நிலவியது. கடல் நீரோட்டத்தின் மூலமும், பயணிகள் மூலமும் பல நாடுகளுக்கும் பரவியது உண்மைதான். ஆனால் இந்திய-பசிபிக் கடலோரத் தேங்காய்களின் டிஎன்ஏவைப் பரிசோதித்தபோது, இரண்டும் வேறு வேறு எனத் தெரிய வந்துள்ளதாம். (இரண்டுக்கும் மத்தியில் உள்ள மடகாஸ்கரில் இரண்டின் கலவையும் உண்டாம்!) ஆக, ஒரே சமயத்தில் உலகில் பல பகுதிகளிலும் உருவாகி வளர்ந்தது தென்னை. தென்னையின் பயன் யாருக்கும் தெரியாதது அல்ல. தென்னையிளங் கீற்றினிலே தாலாட்டும் தென்றலது என்று டிஎம்எஸ் பாடியது முதல், கேஸ்ட் அவே திரைப்படத்தில் தனிமையில் வாடும் நாயகனின் தாகம் தீர்ப்பது வரை தென்னையின் பயன் பரந்துபட்டது. 🙂 Shahjahan R- கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியும். - சீமான் கடும் எச்சரிக்கை. - Abdul Munaf- நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!
தன்னை நம்பி வந்த பயணிகளை தனது உயிரை கொடுத்து காப்பாற்றிய ஓட்டுனர் கீர்த்தி பண்டார. இன்றும் அவரது பெயர் நிலைத்துள்ளது. பேருந்தின் பிரேக் செயல்படவில்லை. 25 உயிர்களைக் காப்பாற்றும் பொறுப்பு ஓட்டுநரின் கைகளில் இருந்தது. மேலும் சில மீட்டர் முன்னால்சென்றால், ஆயிரம் அடிக்கும் மேலான செங்குத்தான பள்ளத்தாக்கில் பேருந்து புரண்டுவிடும். "பிரேக் செயல்படவில்லை. அமைதியாக, அனைவரும் பின்னால் செல்லுங்கள் என்றார்." ஓட்டுநரின் குரல் கேட்டவுடன், பேருந்தில் இருந்த அனைவரும் பின்னால் சாய்ந்தனர். கீர்த்தி பண்டாராவுக்கு செய்ய ஒரே ஒரு விஷயம் தான் இருந்தது. பள்ளத்தை அடையும் முன், தனது ஓட்டுநர் பக்கத்தை மலை பக்கம் சென்று மோத வேண்டடும் அதனையே அவர் செய்தார். வேகமாக வந்த பேருந்து மலையில் மோதி ஒரே மூச்சில் நின்றது. மக்கள் பேருந்தில் இருந்து இறங்கி தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொண்டனர். ஆனால் ஓட்டுநர் கீர்த்தி பண்டாராவின் மூச்சு நின்றது .😥 அவரின் இந்த செயலினால் ஒரு வீரனாக இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டார். இவ்வாறான சாரதிகள் என்றும் போற்றப்படுவர் . மக்களை காப்பாற்றும் திறன் மட்டும் போதாது, அனுபவம் வேண்டும்.. கீர்த்தி போன்ற மனிதர்கள் இன்னும் பிறக்கட்டும்..!!! நம்ம யாழ்ப்பாணம்- இன்று செல்வச்சந்நிதி முருகனின், தேர்த் திருவிழா (06.09.2025)
யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகனின், தேர்த் திருவிழா இன்று 06.09.2025- கிருஷாந்தி நினைவேந்தல்
மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவர்களுக்கு நினைவு அஞ்சலிகள்.- இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!
🔴 பல்லாயிரம் கிலோ ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் இரசாயனப் பொருட்கள் மீட்பு, SLPP முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உட்பட பலருக்கு தொடர்பு! மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால் நேற்று (5) மித்தெனிய, தலாவவிலுள்ள காணி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சுமார் 50,000 கிலோகிராம் 'ஐஸ்' (மெத்தம்பேட்டமைன்) தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரசாயனப் பொருட்கள், இரண்டு பாகிஸ்தானிய பிரஜைகளின் உதவியுடன் நுவரெலியாவில் 'ஐஸ்' தயாரிப்பதற்காக ஒரு வீட்டை முன்னர் வாடகைக்கு எடுத்திருந்த கேஹெல்பத்தார பத்மேயினால் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. “பெக்கோ சமன்” என அறியப்படும் சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கரக்கொலபெலஸ்ஸவில் முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பிரதேச சபை உறுப்பினரான சம்பத் மனம்பேரி மற்றும் பியால் மனம்பேரி ஆகிய இரு சகோதரர்கள் இந்த இரசாயனப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணைக் குழுவினர், பொலிஸ் விசாரணைகள் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து, சந்தேகநபர்கள் இந்த இரசாயனக் குப்பைகளை வாகனம் ஒன்றில் கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது அதன் பின்னர் சகோதரர்கள் இருவரும் தப்பியோடியுள்ளனர். மீட்கப்பட்ட இரசாயனப் பொருட்களின் மூலம் சுமார் 200 கிலோகிராம் ஐஸ் தயாரிக்க முடியும் என்றும், அதன் மதிப்பு சுமார் 2 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. Vaanam.lk- 12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!
ஸ்ரீலங்காவின் பின் புலத்தில்... கஞ்சா இலை போட்ட உங்கள் குசும்பு நல்லாய் இருக்கு. 😂 போராட்டம் நடந்த விடுதலைப் புலிகள் காலத்தில் கூட... சிங்களப் பகுதிகளில் இவ்வளவு துப்பாக்கி சூடுகள் நடக்கவில்லை. தமிழீழ தேசியத் தலைவர் காலத்தில் சிங்களப் பகுதி பெரும்பாலான காலங்களில் அமைதிப் பூங்காவாகவே இருந்தது. சிறுபான்மை இனத்தின் உரிமைகளை அடக்கப் போய்... சிங்களம் தனக்குத்தானே ஆப்பை செருகிக் கொண்டது.- யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம். (இரண்டாம் கட்டம் 44 வது நாள்) ST Suman - Journalist- கருத்து படங்கள்
- 12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!
12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு! நாட்டில் கடந்த 12 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மஹாவத்தை, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்றிரவு ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேவேளை, பஞ்சிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்நிலையில் , நீர்கொழும்பு பகுதியில் ஒரு வீட்டின் மீது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேவேளை, பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை. https://athavannews.com/2025/1446263- நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!
எல்ல – வெல்லவாய பேருந்து விபத்து- வெளிவந்த உண்மைகள்! எல்ல – வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தானது, கடந்த 2023ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு நீக்கம் செய்யப்பட்ட பேருந்து என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்களைக் குறைப்பதற்கு வீதி மேம்பாட்டு ஆணைக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்வதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஒரு குழுவினர் இன்று அப்பகுதிக்கு சென்றுள்ளது. மேலும் வீதி பாதுகாப்பு குறித்த திட்டத்தில் இணைக்கப்பட்ட போக்குவரத்து மருத்துவ சபை மற்றும் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் குழுவும் இன்று எல்ல பகுதிக்குச் சென்று விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று முன்தினம் (04) இரவு நடந்த கோர பேருந்து விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை தற்போது சீராகி வருவதாகவும், அவர்களில் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446248- ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு!
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு! ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு செய்துள்ளாகவும் அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா செல்வதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் 80வது பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 9ஆம் திகதி நியுயோர்க்கில் ஆரம்பமாகிற நிலையில் கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் 23ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடக்க உள்ளது. முதல் பாரம்பரிய பேச்சாளரான பிரேசில் தலைவர் பேச்சை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் உறையாற்றவுள்ளார். இதேவேளை, இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியாவும் பங்கேற்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பால் அந்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. இந் நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றால் அங்கு அமெரிக்க ஜனதிபதியை சந்திக்க நேரிடும். எனவே, வரி விதிப்பு விவகாரத்தில் இன்னமும் தீர்வு காணப்படாத நிலையில் பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. https://athavannews.com/2025/1446258- பிரித்தானிய துணைப் பிரதமர் இராஜினாமா!
பிரித்தானிய துணைப் பிரதமர் இராஜினாமா! பிரித்தானிய துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர்(Angela Rayner) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது சொத்துக்களுக்கான வரிகளைக் குறைவாகச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் தனது பொருளாதார ஆலோசனையை வலுப்படுத்த பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரியும் ஆலோசகர்கள் குழு மறுவடிவமைக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு ஆலோசகரின் மறுசீரமைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரித்தானியாவின் சுயாதீன ஆலோசகர் ரெய்னர் சரியான வரி செலுத்தத் தவறியதன் மூலம் விதிமுறைகளை மீறியதாக தீர்ப்பளித்த பின்னர் , அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446250- “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா” கவிஞர் பூவை செங்குட்டுவன் மறைவு!
காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.- காட்டுப்பள்ளி கலவரம் : வடமாநிலத் தொழிலாளர்கள் 29 பேருக்கு சிறை- போலீஸ் அதிரடி!
கருணாநிதி பேரூந்து நிலையம் என்று வைத்துக் கொண்டு… பஸ்சுக்கு ரிக்கற் எடுக்கச் சொன்னால், வடக்கனுக்கு கோபம் வரும் தானே. கருணாநிதி ரயிலுக்கே ரிக்கற் எடுக்காமல் கக்கூசில் ஒளித்து பயணம் செய்யும் ஓசி பிரயாணி. அதே வழியை… வடக்கன்சும் பின்பற்றுவதில் தவறு இல்லையே. 😂 - செம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் – நிலாந்தன்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.