Everything posted by தமிழ் சிறி
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை!- ஜனாதிபதி. எத்தகைய எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எமது கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தேசிய பிக்குகள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” அனைவரும் சட்டத்தின் சமமே என்ற கலசாரம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் உருவாக்கப்படும். செல்வம் அதிகாரம் பதவி இவை எதுவும் அதற்கு விதிவிலக்கல்ல. சட்டத்தின் முன்பு அனைவரும் சமமே. எமது நாட்டில் என்றோ ஒருநாள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலும். ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும் அல்லது பொதுமக்களின் சொத்தினை வீணடித்திருந்தாலும் அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னிறுத்தப்படுவார்கள். அதற்கான அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். அதுபழிவாங்கல் அல்ல. தண்டிக்கப்படுவதுமல்ல. நீதித்துறை தொடர்பிலான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இன்று நாட்டில் பொதுவெளியில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை தொடர்பாக நம்பக்கையற்ற நிலை காணப்படுகிறது. அனைவரும் ஒரே சட்டம் என்ற அடிப்படையில் நாம் நடவடிக்கை எடுப்போம். எமது இந்த தீர்மானத்தில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். அரசியல்வாதிகள் தங்களின் அதிகாரபலத்தின் ஊடாக மக்களின் சொத்துக்களை வீணடிப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என்பதை நாம் நிரூபித்துள்ளோம்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1444736
-
மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன்
யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் ஒன்றும், வல்வெட்டித்துறையில் ஒன்றுமாக இரண்டு நீச்சல் தடாகங்கள் சென்ற அரசாங்கத்தில் திறந்து வைக்கப் பட்டது. இப்போ அவை… பாசி பிடித்து, நுளம்பு உற்பத்தி செய்யும் மையங்களாக மாறி விட்டதாக சொல்கிறார்கள். 😂 அதே போல் இந்த கிரிக்கெட் மைதானம் பகலில் ஆடு, மாடு மேயவும்… இரவில் கஞ்சா, கசிப்பு, விபச்சாரம் செய்யும் இடமாக மாறினாலும் மாறலாம். 🤣 பிற் குறிப்பு: மண்டைதீவு யாழ்ப்பாணத்தில் இருந்து அவ்வளவு தூரம் இல்லை. இளமைக் காலத்தில் சைக்கிளில் போய் ஈச்சம்பழம் வெட்டிக் கொண்டு வருவோம். அங்கு ஒரு உப வானொலி நிலையமும் இருந்தது. இப்போ என்ன நிலைமையில் இருக்கின்றது என தெரியவில்லை.
-
சிரிக்கலாம் வாங்க
- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 50 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
ஒருவன் இன்னொருவன் பணத்தை எடுத்ததும் அவனை “பிக்பாக்கட் திருடன்” என கூறி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் அரசியல்வாதி ஒருவன் மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடியுள்ளான். அவனை “மிஸ்டர் கிளீன்”( திருவாளர் பரிசுத்தம்) என்று கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்கின்றனர். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்கின்றனர். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கின்றனர். ஆனால் மக்கள் பணத்தை சுருட்டிய ரணில் சட்டத்திற்கும் மேலானவர் என்கின்றனர். அவரை திருடன் என்று கூறக்கூடாதாம். அவருக்கு கை விலங்கு போடக்கூடாதாம். அவரை சிறை மருத்துவனையில் தங்க வைக்க வேண்டும். அதுவும் வசதி இல்லை என்றால் அதைவிட வசதியாக பொது மருத்துவமனையில் வைக்க வேண்டுமாம். எல்லாவற்றையும்விட அவருக்கு சிறை உணவு வழங்கக்கூடாதாம். அவருக்கு வீட்டு உணவு வழங்க அனுமதிக்க வேண்டுமாம். என்னடா நியாயம் இது? அரசியல்வாதிகள் சிறிய தவறுக்காக தண்டிக்கப்படக்கூடாது என்கிறார் மகிந்த ராஜபக்சா. அதாவது மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடுவது சிறிய குற்றமாம். அதற்காக தண்டிக்கப்படக்கூடாதாம். மகிந்தா பரவாயில்லை. எங்களுடைய “தமிழ் கிளீன்” சுமந்திரன் அவர்கள் ரணிலை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் நிறுத்தியது தவறாம். மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடிய ரணிலை சிறையில் அடைத்தது தவறு. அவருக்கு உடன் பிணை வழங்கியிருக்க வேண்டும் என்று வேற கூறியிருக்கிறார். அரசியல்வாதிகளை வெள்ளிக்கிழமை கைது செய்யக்கூடாது என்றோ அல்லது கைது செய்தாலும் அவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்க்கக்கூடாது என்றோ அவர் எந்த சட்டப் புத்தகத்தில் படித்தார்? தனது நோயாளி மனைவிக்கு உணவு வழங்கவேண்டியிருப்பதால் ரணிலுக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றில் கெஞ்சினார். ஆனால் இதே ரணில் லண்டனில் தனது மனைவிக்கு சமைக்க ஒரு நாளைக்கு ஆயிரம் பவுண்ட் ( 4 லட்சம் ரூபா) சம்பளத்தில் ஒரு சமையல்காரரை நியமித்தாராம். அப்படிப்பட்ட யோக்கியரைக் காப்பாற்றத்தான் மகிந்த ராஜபக்சா முதல் சுமந்திரன் வரை பலரும் ஓடி வருகின்றனர். ரணில் கைது பல திருடர்களையும் அவர்களது கூட்டாளிகளையும் மக்களுக்கு நன்கு இனங்காட்டியுள்ளது. தோழர் பாலன்- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
லண்டனில் இரண்டு நாள் தங்கிய மனைவிக்கு சமையல் செய்ய ஒழுங்கு செய்த சமையல்காரரின் ஒரு நாள் சம்பளம் நாலு லட்சம் ரூபா. அப்படி என்ன சாப்பாட்டை அந்த சமையல்காரர் சமைத்துக் கொடுத்தார் என்று கேட்டால், றோயல் கல்லூரிக்கு ஒரு பழைய வீடும் நிறைய நூல்களும் ரணில் வழங்கியுள்ளார் என்கிறார்கள். சுமந்திரன் பதில் தருவாரா? தோழர் பாலன்- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
வேலிக்கு ஓணான் சாட்சி... 2016ம் ஆண்டு 4 வருடங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பிரிவின் தலைவராக "எரிக் சொல்ஹம் "நியமிக்கப்பட்ட நிலையில் 2018 அந்த பதவியில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்படுகிறார்... காரணம் 22 மாதங்களில் 529 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கோண்டு 488,500 டாலர்கள் செலவு செய்த நிலையில் அதில் 76 நாட்கள் தனிப்பட்ட பயணங்களாக மேற்கொண்டமை கணக்காய்வில் பிடிபட்டது 😄 உண்மை உரைகல்- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
ரணிலுக்கு வைத்தியம் பார்க்கும்... வைத்தியர், ரணிலின் கூட்டாளி. இப்போதைக்கு அவர் ரணிலை... வைத்தியசாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அனுப்ப விட மாட்டார் போலுள்ளது. தேசிய மருத்துவமனையில் "நீரிழப்பு" கண்டறியப்பட்டு அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரணில் விக்கிரமசிங்க, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூட முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது மிகவும் சந்தேகத்திற்குரியது. இந்த மருத்துவ நோயறிதலைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன, குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் முன்னர் பல ஊழல்களுடன் தொடர்புடையவருமான "டாக்டர் ருக்ஷன் பெல்லனாவின் "கீழ் பணிபுரியும் மருத்துவர்களால் இது வெளியிடப்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டு. விக்கிரமசிங்கவின் உண்மையான நிலை குறித்து ஒரு பாரபட்சமற்ற மருத்துவ விசாரணை நடத்தப்படுவது அவசியம். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுயாதீன மருத்துவர்கள் குழு, கூறப்பட்ட நோயறிதல் உண்மையானதா அல்லது பெல்லனாவும் அவரது கூட்டாளிகளும் நீதித்துறையை தவறாக வழிநடத்தவும் உரிய சட்ட செயல்முறையைத் தடுக்கவும் முயற்சிக்கிறார்களா என்பதை ஆராய வேண்டும். உண்மை உரைகல்- கருத்து படங்கள்
- ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க
- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
- ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க
ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க. ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும், அவர்களுக்குப் பிரத்தியேகமான சட்டம் இல்லை, அதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும், அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் வழங்கியுள்ள ஆணையில், இது முக்கியமான விடயமாகும் எனவே அதனை விரைவில் நிறைவேற்றுவோம்” என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1444628- வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு - விசாரணை திகதி அறிவிப்பு
இந்த வழக்கு கடந்த 10 வருடமாக நடந்தும் இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப் படாதது, சட்டத்தின் சாபக்கேடு. பாடசாலை சென்ற மாணவியை சீரழித்து கொன்றவர்களுக்கு எப்போதோ தண்டனை கொடுத்து… அந்த மாணவியின் பெற்றோரை வழக்கு, கோடு, கச்சேரி என்று அலைய விடாமல் விட்டிருக்க வேண்டும்.- யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்பு!
பிரியன் சார்…. இப்ப அங்கஜன் பற்றி விளக்கம் கொடுத்திட்டு, எப்படி வாற கொலிடேக்கு கொட்டடிக்கு போவார். 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
இந்தாள் ஏன் குறுக்கால ஓடுது என்று பார்த்தால்… செய்தி: நோர்வேயைச் சேர்ந்த எரிக் சொல்ஹைம் UNEP-க்கான நிர்வாக இயக்குநராக இருந்தபோது அரசுப் பணத்தை பயணச் செலவாக மிக அதிகமாக, அதுவும் அனுகூலமற்ற வகையில் செலவிட்டார் என்று உட்புற ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் காரணமாக அவர் 2018-ஆம் ஆண்டில் தனது பதவியை விலக்கிவிட்டார். Inuvaijur Mayuran- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
ரணிலுக்கு நன்றாகத் தெரியும் எதிர்க்கட்சிகள் எல்லாம் கூடிக்கதைப்பதும் கொந்தளிப்பதும் குதிப்பதும் ரணில்மீது கொண்ட அன்பால் அல்ல "ரணிலுக்கே இந்த நிலை என்றால் நமக்கெல்லாம் என்னவாகும் என்ற பயத்தால்" என்று... யாழ்ப்பாணம்.com- சிரிக்க மட்டும் வாங்க
- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
லண்டனில் இரண்டு நாள் தங்கிய மனைவிக்கு சமையல் செய்ய ஒழுங்கு செய்த சமையல்காரரின் ஒரு நாள் சம்பளம் நாலு லட்சம் ரூபா. அப்படி என்ன சாப்பாட்டை அந்த சமையல்காரர் சமைத்துக் கொடுத்தார் என்று கேட்டால், றோயல் கல்லூரிக்கு ஒரு பழைய வீடும் நிறைய நூல்களும் ரணில் வழங்கியுள்ளார் என்கிறார்கள். சிரிச்சிகிட்டே அடுத்த கேள்விய கேற்க பெட்ரோல் இல்லாத நேரம் அவர் கார்ல இருந்த பெட்ரோல உருவி முழு நாட்டுக்கும் குடுத்த வள்ளல் என்று சொல்கின்றனர் 😄. உண்மை உரைகல்- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
ரணில் விக்கிரமசிங்க கைது: நோர்வே முன்னாள் தூதுவர் அதிருப்தி. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு முன்னாள் இலங்கைக்கான நோர்வேயின் அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ரணில் விக்கிரமசிங்க உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், ரணிலை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும், வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் 2022ஆம் ஆண்டில் இலங்கை நாட்டை பொருளாதார மற்றும் அரசியல் குழப்பத்திலிருந்து காப்பாற்ற முன்வந்த ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை என்றும், ஐரோப்பாவில் அவை குற்றமாக கருதப்படமாட்டாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளைத் தாம் ஆதரிப்பதாகவும், ஆனால் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444455- மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றி 222 ஆண்டுகள் நிறைவு - விசேட பெயர்ப்பலகை திரைநீக்கம்
மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றி அழித்த... அந்தக் கோட்டையின் எஞ்சிய பகுதிகள் மேலும் சேதம் அடையாமல் இருக்க நிழற்குடை அமைத்தது பாராட்டுக்குரிய விடயம். நல்லூரில் உள்ள சங்கிலியன் தோப்பு நுழைவாயில்.... மழையிலும், வெய்யிலிலும் பாதிக்கப் பட்டுக் கொண்டு உள்ளதை கவனிக்க யாழ்ப்பாண மேட்டுக்குடி சமூகத்திற்கு அக்கறை இல்லை. கோவில்களுக்கும், தென்னிந்திய இசை கலைஞர்களுக்கும் தேவையில்லாத செலவு செய்வார்கள். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சங்கிலியன் தோப்பை பாதுக்காக்க வேண்டும் என்ற அக்கறை ஒருவருக்கும் இல்லை.- ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
உக்ரைனுக்கு இந்தக் கிழமை நல்ல சாத்து, சாத்தப்படும் என்று... அரசியல் ஆய்வாளர்கள் அடித்து சொல்கிறார்கள். 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.