Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சினை மாடு என்றால், இதுதான். 🤣
  2. இவரை அனேகருக்கும் தெரிந்திருக்கும். இவர் மகிந்தவின் வலது கை. இப்போ... ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளுராட்சி தேர்தலில் நிற்கிறார்.
  3. அரசியலில்.. காதலர் தின கருத்தோவியங்கள்.
  4. 2021´ம் ஆண்டு கார்த்திககை 29´ம் திகதியன்று வேலையிடத்தில் நடந்த விபத்தின் பின்... நோயாளர் காவு வண்டியில்.. வேலையிடத்தை விட்டு சென்ற நான், 15 மாத தொடர் சிகிச்சை, தெரப்பியின் பின்... இன்று முதன் முதலாக மீண்டும் வேலையிடத்துக்கு சென்றேன். 🙂 வைத்தியரின் அறிவுரைப்படி... முதல் இரண்டு கிழமைகள் தினமும் 3 மணித்தியாலமும், மூன்றாம், நான்காம் கிழமைகள் தினமும் 5 மணித்தியாலமும், ஐந்தாம், ஆறாம் கிழமைகள் 7 மணித்தியாலமும் வேலை செய்து பார்த்து சரி வந்தால், தொடர்ந்து எட்டு மணித்தியாலப் படி வேலை செய்யலாம் என்று சொன்னார். இன்று முதல் நாள் என்னை வேலை இடத்தில் கண்டது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. வேலை இடத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இருவர் ஓய்வெடுத்து போய் விட்டார்கள். இருவருக்கு... ஒரு கால் கழட்டி நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். அதில் ஒருவருக்கு சீனி வருத்தத்ததால் கால் கழட்டியதாம், மற்றவர்.... பல வருடமாக அதிக சிகரெட் புகைத்ததால், கால் கழட்ட வேண்டி வந்ததாம். எல்லோரையும் இன்று கண்ட போதும், எனக்கு விபத்தை ஏற்படுத்தியவர் எனக்கு கிட்ட வர இல்லை, தூரத்தில் அவரின் முகம் தெரிந்தது. நான் பார்த்தவுடன், ஒளித்து விட்டார். குற்ற உணர்ச்சி... எப்படி முகத்தில் முழிப்பது என நினைத்தாரோ தெரியவில்லை. 😎 எல்லோரும் எனக்கு... உடம்பு கூடியிருப்பதாக சொன்னார்கள். ஆஸ்பத்திரி சாப்பாடு செய்த வேலை என்று பகிடிக்கு சொன்னேன். 🙂 உண்மைதான்... முன்பு இருந்ததை விட பத்து கிலோ கூடியுள்ளேன். வேலை செய்த உடம்பு திடீரென சும்மா இருக்கும் போது, கூடுவது வழமை தானே. இனி வரும் காலங்களில்... குறையும் என நினைக்கின்றேன். 😋 விபத்தின் பின் நடந்த சிகிச்சைகளையும், தெரப்பிகளையும் நினைவில் வருபவற்றை அவ்வப்போது தொடர்ந்து பதியலாம் என நினைக்கின்றேன். உங்களுக்கு வாசிக்க விருப்பமா? 😃 பிற் குறிப்பு: கால் விரலுக்கு, Qtex பூசுறனீங்களா என்று கேட்டு, கடுப்பேத்த வேண்டாம். 😂 🤣
  5. ஈழப்பிரியன்... நானும் அதைத்தான் நினைத்தேன். 😂 கதையில்ல் வரும் பாத்திரங்கள், கோசான் குடும்பத்தை சுற்றியே உள்ளது. 😁 கோசானின் மாமனாரும், இங்கிலாந்தில் வசிக்கிறார் என்று இந்தக் கதையின் மூலம் அறிந்து கொண்டோம். 🤣
  6. கதையின் ஆரம்பமும், நகர்வும்... வாசிக்கும் ஆவலை தூண்டி உள்ளது. 👍 இங்கிலாந்திலும், இலங்கையிலும் நடக்கும் கதை என ஊகிக்கின்றேன். 😂 இடையில் வரும் மெல்லிய நகைச்சுவையும் அருமை. 🤣 தொடருங்கள் கோசான். 🙂
  7. திரில் ஆன கதை போல இருக்கு.... 😎 மொத்தமாக வந்த சீட்டுக்காசை, ஏழரைச் சனியன்... கொண்டு போகப் போகுது போலை கிடக்கு. தொடருங்கள் சுவியர், வாசிக்க ஆவலாக உள்ளேன்.
  8. எந்த இடத்தில்... எதை ஓட்டுவது என்று சிந்திக்கும் அறிவு அற்றவர்கள். தலைவனின் இல்லம் என்று எழுதியிருந்ததற்கு கூட மதிப்பு கொடுக்காமல், அந்த விளம்பரத்தை கொண்டு போய் ஒட்டியுள்ளார்கள். பட பகிர்விற்கு நன்றி, பிரபா சிதம்பரநாதன்.
  9. 👆 தந்தி அறுந்த யாழ். அருமையான ஒரு கருத்தோவியம். 👆
  10. பிரபா சிதம்பரநாதன் அவர்களே.. வாசித்து கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி. 🙂 நன்றி விசுகர். எழுத வேண்டிய முக்கியமானவற்றை எழுதி விட்டேன் என நினைக்கின்றேன். வரவுக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி நியாயத்தை கதைப்போம் அவர்களே. 🙂
  11. உண்மையில் அவர்கள் குழந்தைகளின் மனநிலை உடையவர்கள். அவர்களை நம் நாட்டில் நடத்தும் விதங்களைப் பார்க்க வேதனையாக இருக்கும். நாளை எவரும் இந்த நிலைக்கு வரலாம் என்பதை யோசித்து பார்ப்பதில்லை. அவர்களுக்காக… யாழ்.களத்தில் ஒரு ஆக்கம் படைத்தமைக்கு நன்றி விசுகர். 👍🏽
  12. காதலர் தினத்தை முன்னிட்டு... யாழ்ப்பாணத்தில் முருங்கைக்காய் விலை சடுதியாக அதிகரிப்பு. 😂 இன்னும் ரெண்டு மாசத்துக்கு அப்பறம் பப்பாளி பழம் சடுதியாக விலை உயர்வு ன்னு வரும் பாருங்க. 🤣 Farwin Tharik
  13. கொண்டையை, மறைக்க 🍷 மறந்துட்டாங்க. 🤣
  14. 📞 சேர்த்து வைத்ததால், பல அடியும் வாங்கியவர். ☎️
  15. சரியாக சொன்னீர்கள். ஒவ்வொருவருக்கும் தமது வசதிக்கு ஏற்ற ஏதோ ஒன்று மகிழ்ச்சியை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. அது திடீரென்று இல்லாமல் போனால்… சோகம்தான். 🙂 நீங்கள், “நோக்கியாவை புடுங்கி விட்டால்” என்று அடாத்தாக சொன்னதுதான் இன்னும் சோகத்தை வரவழைத்தது. 😂 🤣
  16. அவர் தமிழர், சிங்களவர் என்று பிரித்து பார்க்கவில்லை. யாழ்ப்பாணத்தில் விடுதியிலும், சிங்களப் பகுதிகளில்… கிராமத்து வீடுகளிலும் தங்கியுள்ளார். இலங்கையில் இறங்கிய முதல் நாள் மட்டும் கொழும்பில் நின்றதாகவும், அங்கு ஒரு ஹொட்டேலில் இரண்டு பேர் படுக்கும் அறைக்கு 150 € கொடுத்ததாகவும், அது அதிகமாக தெரிந்ததால் உள்ளூர் நகரங்களில் தங்க முடிவு எடுத்ததாகவும் கூறினார். உள்ளூரில்…. 20 € விலிருந்து 35 € விற்கு அந்த குடும்பத்தினருடன் தங்கக் கூடிய திருப்திகரமன அறைகள் கிடைத்ததாக சொன்னார். கொழும்பில் நின்ற காலங்களில்… பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்த மாதிரியும், வங்கிக்கு சென்றால் ஆட்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்களாம். (வெளிநாட்டு பணத்தை வாங்கி விற்பவர்காளாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.) அத்துடன் இலங்கை தெருக்கள் முழுவதும் பிளாஸ்ரிக் கழிவுகளும், குப்பைகளும் அதிகமாக இருந்தனவாம். திருகோணமலை கடலில் சுழியோடிய போது, கடலுக்கு அடியிலும்.. பிளாஸ்ரிக் போத்தல்களை கண்டதாக கூறினார். தனக்கு அங்குள்ள சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை.. கிடைப்பதை வைத்து, மிக மகிழ்ச்சியாக வாழ்வதாக கூறினார். உதாரணத்துக்கு…. ஒரு வீட்டில் ஒரு சிறுவர் சைக்கிள் இருந்தால்… அந்தத் தெருவில் உள்ள பிள்ளைகள் எல்லோரும் அதனை மாறி, மாறி ஒடி குதூகலமாக இருந்தார்களாம். பெரியவர்களிடம் நவீன தொலை பேசிகள் இல்லாமல் “Nokkia“ கைத்தொலைபேசிகளை வைத்துக் கொண்டே திருப்தியான வாழ்க்கை வாழ்வதாக குறிப்பிட்டார். ஜேர்மனியில் என்றால்… வருடா வருடம் புதிதாக வரும் தொலை பேசிக்கும், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை, பாவிக்கும் வாகனத்தை மாற்றவும்… பணத்தை செலவழித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றார்.
  17. ஆம் சுவியர்.. எல்லாம் சிங்கள, ஆங்கில பத்திரிகைகளில் வருபவை தான். வீரகேசரியில்... செல்வன் என்பவரின் கருத்தோவியமும் வரும். ஆனால் அவர் பிக்குகளை வரைந்ததை இது வரை காணவில்லை. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.