Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. காதலர் தினத்தை முன்னிட்டு... யாழ்ப்பாணத்தில் முருங்கைக்காய் விலை சடுதியாக அதிகரிப்பு. 😂 இன்னும் ரெண்டு மாசத்துக்கு அப்பறம் பப்பாளி பழம் சடுதியாக விலை உயர்வு ன்னு வரும் பாருங்க. 🤣 Farwin Tharik
  2. கொண்டையை, மறைக்க 🍷 மறந்துட்டாங்க. 🤣
  3. 📞 சேர்த்து வைத்ததால், பல அடியும் வாங்கியவர். ☎️
  4. சரியாக சொன்னீர்கள். ஒவ்வொருவருக்கும் தமது வசதிக்கு ஏற்ற ஏதோ ஒன்று மகிழ்ச்சியை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. அது திடீரென்று இல்லாமல் போனால்… சோகம்தான். 🙂 நீங்கள், “நோக்கியாவை புடுங்கி விட்டால்” என்று அடாத்தாக சொன்னதுதான் இன்னும் சோகத்தை வரவழைத்தது. 😂 🤣
  5. அவர் தமிழர், சிங்களவர் என்று பிரித்து பார்க்கவில்லை. யாழ்ப்பாணத்தில் விடுதியிலும், சிங்களப் பகுதிகளில்… கிராமத்து வீடுகளிலும் தங்கியுள்ளார். இலங்கையில் இறங்கிய முதல் நாள் மட்டும் கொழும்பில் நின்றதாகவும், அங்கு ஒரு ஹொட்டேலில் இரண்டு பேர் படுக்கும் அறைக்கு 150 € கொடுத்ததாகவும், அது அதிகமாக தெரிந்ததால் உள்ளூர் நகரங்களில் தங்க முடிவு எடுத்ததாகவும் கூறினார். உள்ளூரில்…. 20 € விலிருந்து 35 € விற்கு அந்த குடும்பத்தினருடன் தங்கக் கூடிய திருப்திகரமன அறைகள் கிடைத்ததாக சொன்னார். கொழும்பில் நின்ற காலங்களில்… பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்த மாதிரியும், வங்கிக்கு சென்றால் ஆட்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்களாம். (வெளிநாட்டு பணத்தை வாங்கி விற்பவர்காளாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.) அத்துடன் இலங்கை தெருக்கள் முழுவதும் பிளாஸ்ரிக் கழிவுகளும், குப்பைகளும் அதிகமாக இருந்தனவாம். திருகோணமலை கடலில் சுழியோடிய போது, கடலுக்கு அடியிலும்.. பிளாஸ்ரிக் போத்தல்களை கண்டதாக கூறினார். தனக்கு அங்குள்ள சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை.. கிடைப்பதை வைத்து, மிக மகிழ்ச்சியாக வாழ்வதாக கூறினார். உதாரணத்துக்கு…. ஒரு வீட்டில் ஒரு சிறுவர் சைக்கிள் இருந்தால்… அந்தத் தெருவில் உள்ள பிள்ளைகள் எல்லோரும் அதனை மாறி, மாறி ஒடி குதூகலமாக இருந்தார்களாம். பெரியவர்களிடம் நவீன தொலை பேசிகள் இல்லாமல் “Nokkia“ கைத்தொலைபேசிகளை வைத்துக் கொண்டே திருப்தியான வாழ்க்கை வாழ்வதாக குறிப்பிட்டார். ஜேர்மனியில் என்றால்… வருடா வருடம் புதிதாக வரும் தொலை பேசிக்கும், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை, பாவிக்கும் வாகனத்தை மாற்றவும்… பணத்தை செலவழித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றார்.
  6. ஆம் சுவியர்.. எல்லாம் சிங்கள, ஆங்கில பத்திரிகைகளில் வருபவை தான். வீரகேசரியில்... செல்வன் என்பவரின் கருத்தோவியமும் வரும். ஆனால் அவர் பிக்குகளை வரைந்ததை இது வரை காணவில்லை. 😂
  7. தண்டவாளம்… பழசாக இருக்கின்ற படியால், 60’ம் கலியாண சோடிகளாக இருக்கும். 😂
  8. நிழலி, நான் பகிடிக்கு சொன்ன முத்த விசயத்தை… நீங்கள் உடனே நம்பியதை பார்க்க சரியான அப்பாவியாக இருப்பீர்கள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. 🤣
  9. தாய்லாந்தில் கண்டு பிடிக்கப் பட்ட 100 மீற்றர் உயரமானதும்.. 800,000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரத்தின் தொல்பொருள் மிகுதி. Fossil trees that have come close to today's tallest redwood heights have been found in northern Thailand. The longest of the petrified log measures 72.2 meters (237 feet), suggesting the original tree towered more than 100 meters (330 feet) in a humid tropical forest about 800,000 years ago. Ancient Sighting Mystery
  10. வீடு இடிந்தாலும் சைக்கிள் இருக்க எதுக்கு கவலை? வட கிழக்கு மக்களின் ஒரே தெரிவு சைக்கிளாக இருக்கட்டும் தேசியம் சுயநிர்ணயம் என்று பயணிக்கும் தடுமாறாத ஒரே தலைமை …… Prashanthan Navaratnam 😁 😂 🤣
  11. இன்று, 13´ம் திருத்த சட்டத்தைப் பற்றிய கருத்தோவியங்கள்.
  12. சயனைட் செலுத்தப் பட்டதால் ஏற்பட்ட மரணம் என கண்டு பிடிக்க 2 மாதங்கள் எடுத்துள்ளதா?
  13. அந்த ஜேர்மன் காதலர்கள்.... ஒருமுறை வேறொரு வீட்டில்.. இரவு தங்கியிருந்த போது, திடீரென்று மின்சாரம் நின்று விட்டதாம். 😮 வீட்டில் உள்ள ஒருவரும் பதட்டப் படாமல், ஒவ்வொரு இடத்திலும் ஆயத்தப் படுத்தி வைத்திருந்த எண்ணை 🪔 விளக்குகளை ஏற்றிவிட்டு... தமக்கு தலையில் மாட்டக் கூடிய, மின்கல விளக்கும் தந்து விட்டு, மின்சார பிறப்பாக்கியை (ஜெனரேட்டர்) இயங்க வைக்க, எண்ணை விட ஆயத்தமான போது.. தாங்கள் தடுத்து, இந்த எண்ணையை... நீங்கள் வேறு ஏதாவது தேவைக்கு பயன் படுத்துங்கள் என்று கூறியதை கேட்டு, அவர்கள் மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டார். 😎 அந்த இருட்டுக்குள் தாங்கள் வெளியே வந்து, அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்து வானத்தை பார்த்து ரசித்ததும் இனிய அனுபவம் என்றார். 😂 அடுத்த நாளும்... மின்சாரம் இல்லாததால், அவர்கள் விறகு அடுப்பில் சமைத்ததை.. ஆரம்பம் முதல் இறுதி வரை அதிசயத்துடன் பார்த்து ரசித்ததாக குறிப்பிட்டு, அவர்கள் சமைத்துத் தந்த வாழைப்பூ கறியின் சுவை... இன்றும் மறக்க முடியாதுள்ளதாம். வாழைப்பூ என்று, ஒன்று... உள்ளதென்றும், அதில் கறியும் வைக்கலாம் என்று, அறிந்து கொண்டநாள் அதுவாம். 😋 அந்த வேளை எடுத்த படங்களையும் எனக்கு காட்டினார். 😂 ஜேர்மனியில் இருக்கும் வரை... விறகு அடுப்பில் சமைப்பதைப் பற்றி கேள்விப் பட்டிருந்தாலும், நேரில் பார்த்த போது.... எதிர் பார்த்ததை விட புது அனுபவமாக இருந்ததாம். 🙂
  14. வாசித்த கருத்து தெரிவித்தமைக்கு... நன்றி புங்கையூரான். 🙏 ஏன்... இப்போ அதிகம் எழுதுவதில்லை. உங்கள் எழுத்துக்களை ஆவலுடன் வாசிப்பதில் நானும் ஒருவன். 🙂
  15. குமாரசாமி அண்ணை... தமிழ் சிறிக்கு கிடைக்க இருந்த... சாராயப் போத்திலோ, வறுத்த கசுக்கொட்டையோ... அநியமாக கைநழுவி போய் விட்டது. நான் காலையில் அறை திறப்பை பாரம் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டேன். 🙂 இங்கு வந்து இறங்கி, கால் சட்டை "பொக்கற்றை" தொட்டுப் பார்த்தால்.. அதற்குள்... தெரப்பி செய்யும் இடத்திலுள்ள அலுமாரி திறப்பு உள்ளது. 😮 திரும்பிப் போகவும் தூரம். அதை என்ன செய்வது என்று... தொலைபேசியில் கேட்க, தபாலில் அனுப்பச் சொன்னார்கள். பிறகென்ன... 4 € 85 சென்ற் கட்டி, பதிவுத் தபாலில் அனுப்பி விட்டேன். 🙂
  16. பாராட்டுகளுக்கு, நன்றி நிலாமதி அக்கா. 25 வயது பெடியனின்... பார்வை, ஓர் வளர்ந்த ஆளின் பார்வை போல் விசாலமாக உள்ளது ஆச்சரியம்தான். 🙂 எனக்கு ஈஸ்ட்மென் கலரில் பதிவு போடாட்டில், சாப்பிட்டது செமிக்காத மாதிரி ஒரு பீலிங் வந்திடும். 😂 ஆவலுடன் எதிர் பாருங்கள்... அடுத்த பதிவு, புத்தம் புதிய... ஈஸ்ட்மென் கலரில் வர இருக்கின்றது. 🤣
  17. இன்று பெடியன், சொன்னது… நாளை மாலை, தனது நண்பி தன்னை பார்க்க வருவதாகவும், வரும் போது… எனக்கு இலங்கையில் வாங்கிய சில பொருட்களை 🎁 அன்பளிப்பாக கொண்டு வருகிறாரம் என்றான். அதை கேட்டு… எனக்கு விசர் பிடிச்சிட்டுது. 🤔 (அடேய்… மொக்கு பெடியா…, என்று “மைண்ட் வாய்சில்” திட்டிக் கொண்டு) 😂 நான் நாளைக்கு காலை 8 மணிக்கு துண்டு வெட்டிக் கொண்டு போய் விடுவேன் என்றேன். அதை கேட்டு அவனுக்கும் கவலையாக போய் விட்டது.🥲 அந்தப் பிள்ளை… ஒரு நாள் முந்தி, அதாவது இன்று வந்திருந்தால்… அவவையும், செமையாக ஒரு பேட்டி எடுத்திருக்கலாம்…. ஹ்ம்ம் நழுவி விட்டது. 🙂 அவர்கள் நயினாதீவுக்கு போகும் போது… எடுத்த காணொளியில், வள்ளத்தின் கூரையில் அந்தப் பெண் குந்தி இருந்ததை பற்றி விலாவாரியாக கேட்டிருக்கலாம். 😂
  18. பாராட்டுக்களுக்கு… நன்றி நிழலி. 🙂 நீங்கள் கேட்ட… அந்த, 💋 முத்த விசயத்தை பெடியனிடம் கேட்க…. அவர்கள், தாங்கள் 👩‍❤️‍👨 கலியாணம் 💘கட்டினால் பிறகுதான் 👄 முத்தம் 🫦கொடுப்பது… என்ற கொள்கையை தீவிரமாக கடைப் பிடிப்பதால்.. இன்னும் ஒரு 😘 முத்தம் கூட கொடுக்கவில்லையாம் என்கிறான்.😜 😍 நீங்கள் இதை நம்பாவிட்டாலும், இதுதான் நிஜம். 🤣🤪

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.