Everything posted by தமிழ் சிறி
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நன்றி நுணாவிலான். நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை. வேலைக்குப் போவதால்… மனம், உடலில் பெரிய மாற்றம் தெரிகின்றது. 👍🏽 நன்றி ராஜவன்னியன். 🙂 வேலைக்குப் போறதே… பாதி நேரம் பராக்குப் பார்க்கவும், விடுப்பு கதைக்கவும்தானே… 🤣
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நிறை கூடிய பின்… ஆசையாக தேடித் தேடி வாங்கிய கால் சட்டைகள் எதுவுமே அளவில்லை. நிறை குறையும் என்ற நம்பிக்கையில், அதனை பத்திரப் படுத்தி வைத்துள்ளேன். இப்போ வேலைக்குப் போடுவதற்காக… புதிய கால் சட்டைகள், ஜக்கெற் போன்றவை வாங்க வேண்டி வந்தது. 🙂
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
வேலைக்கு போக முதல்… விபத்தை ஏற்படுத்தியவனுடன் சாதாரணமாக கதைக்கலாம் என்ற மன உணர்வுடன்தான் சென்றேன். ஆனால்… அவன் என்னை கண்டு ஒளித்த போது, அவனை கூப்பிட்டு கதைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. இன்றுடன் மூன்று நாட்களாகி விட்டது. தவறு செய்தவன் தானே… என்னிடம் வந்து கதைக்க வேண்டும். நானாக போய் கதைப்பது… சரியல்ல என்பது எனது அபிப்பிராயம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என அறிய ஆவல். 🙂 நன்றி நிழலி. முதலே சொன்ன பின்பும்.. கடுப்பேத்துறார், மை லாட். 😂
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நன்றி குமாரசாமி அண்ணை. முக்கியமாக உடல் நிறை அதிகரிக்காமல் இருக்கவும், தினமும் நேரத்தை ஒழுங்கு முறையில் கடைப் பிடிப்பதற்காகவுமே… எவ்வளவு கெதியில் வேலையை ஆரம்பிக்க முடியுமோ, அவ்வளவு கெதியில் வேலைக்குப் போக விரும்பினேன். 🙂
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நன்றி பெருமாள். 🙂 கருத்து பகிர்விற்கு நன்றி நிலாமதி அக்கா. இவ்வளவு காலமும் சும்மா இருந்திட்டு, இப்போ காலையில் தெரப்பியை முடித்துக் கொண்டு வேலைக்கும் போக.. நீண்ட நேரம் எடுப்பது மாதிரி ஒரு உணர்வு. 🙂
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நன்றி ஏராளன். 🙂 ஆம் சுவியர், ரிஸ்க் எடுக்கிறது… ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்ற கதைகளை இனி மூட்டை கட்டி வைக்க வேண்டியதுதான். 🙂 பட்ட சிரமங்கள் போதும். நன்றி கோசான். இது யாழ்ப்பாணத்தில் பாவிக்கும் விடுப்பு இல்லை. சுகயீன விடுப்பு. 🤣
-
சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
சினை மாடு என்றால், இதுதான். 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவரை அனேகருக்கும் தெரிந்திருக்கும். இவர் மகிந்தவின் வலது கை. இப்போ... ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளுராட்சி தேர்தலில் நிற்கிறார்.- கருத்து படங்கள்
- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
- கருத்து படங்கள்
அரசியலில்.. காதலர் தின கருத்தோவியங்கள்.- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
2021´ம் ஆண்டு கார்த்திககை 29´ம் திகதியன்று வேலையிடத்தில் நடந்த விபத்தின் பின்... நோயாளர் காவு வண்டியில்.. வேலையிடத்தை விட்டு சென்ற நான், 15 மாத தொடர் சிகிச்சை, தெரப்பியின் பின்... இன்று முதன் முதலாக மீண்டும் வேலையிடத்துக்கு சென்றேன். 🙂 வைத்தியரின் அறிவுரைப்படி... முதல் இரண்டு கிழமைகள் தினமும் 3 மணித்தியாலமும், மூன்றாம், நான்காம் கிழமைகள் தினமும் 5 மணித்தியாலமும், ஐந்தாம், ஆறாம் கிழமைகள் 7 மணித்தியாலமும் வேலை செய்து பார்த்து சரி வந்தால், தொடர்ந்து எட்டு மணித்தியாலப் படி வேலை செய்யலாம் என்று சொன்னார். இன்று முதல் நாள் என்னை வேலை இடத்தில் கண்டது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. வேலை இடத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இருவர் ஓய்வெடுத்து போய் விட்டார்கள். இருவருக்கு... ஒரு கால் கழட்டி நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். அதில் ஒருவருக்கு சீனி வருத்தத்ததால் கால் கழட்டியதாம், மற்றவர்.... பல வருடமாக அதிக சிகரெட் புகைத்ததால், கால் கழட்ட வேண்டி வந்ததாம். எல்லோரையும் இன்று கண்ட போதும், எனக்கு விபத்தை ஏற்படுத்தியவர் எனக்கு கிட்ட வர இல்லை, தூரத்தில் அவரின் முகம் தெரிந்தது. நான் பார்த்தவுடன், ஒளித்து விட்டார். குற்ற உணர்ச்சி... எப்படி முகத்தில் முழிப்பது என நினைத்தாரோ தெரியவில்லை. 😎 எல்லோரும் எனக்கு... உடம்பு கூடியிருப்பதாக சொன்னார்கள். ஆஸ்பத்திரி சாப்பாடு செய்த வேலை என்று பகிடிக்கு சொன்னேன். 🙂 உண்மைதான்... முன்பு இருந்ததை விட பத்து கிலோ கூடியுள்ளேன். வேலை செய்த உடம்பு திடீரென சும்மா இருக்கும் போது, கூடுவது வழமை தானே. இனி வரும் காலங்களில்... குறையும் என நினைக்கின்றேன். 😋 விபத்தின் பின் நடந்த சிகிச்சைகளையும், தெரப்பிகளையும் நினைவில் வருபவற்றை அவ்வப்போது தொடர்ந்து பதியலாம் என நினைக்கின்றேன். உங்களுக்கு வாசிக்க விருப்பமா? 😃 பிற் குறிப்பு: கால் விரலுக்கு, Qtex பூசுறனீங்களா என்று கேட்டு, கடுப்பேத்த வேண்டாம். 😂 🤣- பைத்தியம் - U mad bro - குறுங்கதை
ஈழப்பிரியன்... நானும் அதைத்தான் நினைத்தேன். 😂 கதையில்ல் வரும் பாத்திரங்கள், கோசான் குடும்பத்தை சுற்றியே உள்ளது. 😁 கோசானின் மாமனாரும், இங்கிலாந்தில் வசிக்கிறார் என்று இந்தக் கதையின் மூலம் அறிந்து கொண்டோம். 🤣- பைத்தியம் - U mad bro - குறுங்கதை
கதையின் ஆரம்பமும், நகர்வும்... வாசிக்கும் ஆவலை தூண்டி உள்ளது. 👍 இங்கிலாந்திலும், இலங்கையிலும் நடக்கும் கதை என ஊகிக்கின்றேன். 😂 இடையில் வரும் மெல்லிய நகைச்சுவையும் அருமை. 🤣 தொடருங்கள் கோசான். 🙂- தையல்கடை.
திரில் ஆன கதை போல இருக்கு.... 😎 மொத்தமாக வந்த சீட்டுக்காசை, ஏழரைச் சனியன்... கொண்டு போகப் போகுது போலை கிடக்கு. தொடருங்கள் சுவியர், வாசிக்க ஆவலாக உள்ளேன்.- படம் கூறும் கதைகள்
எந்த இடத்தில்... எதை ஓட்டுவது என்று சிந்திக்கும் அறிவு அற்றவர்கள். தலைவனின் இல்லம் என்று எழுதியிருந்ததற்கு கூட மதிப்பு கொடுக்காமல், அந்த விளம்பரத்தை கொண்டு போய் ஒட்டியுள்ளார்கள். பட பகிர்விற்கு நன்றி, பிரபா சிதம்பரநாதன்.- கருத்து படங்கள்
👆 தந்தி அறுந்த யாழ். அருமையான ஒரு கருத்தோவியம். 👆- ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
பிரபா சிதம்பரநாதன் அவர்களே.. வாசித்து கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி. 🙂 நன்றி விசுகர். எழுத வேண்டிய முக்கியமானவற்றை எழுதி விட்டேன் என நினைக்கின்றேன். வரவுக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி நியாயத்தை கதைப்போம் அவர்களே. 🙂- கருத்து படங்கள்
- அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
உண்மையில் அவர்கள் குழந்தைகளின் மனநிலை உடையவர்கள். அவர்களை நம் நாட்டில் நடத்தும் விதங்களைப் பார்க்க வேதனையாக இருக்கும். நாளை எவரும் இந்த நிலைக்கு வரலாம் என்பதை யோசித்து பார்ப்பதில்லை. அவர்களுக்காக… யாழ்.களத்தில் ஒரு ஆக்கம் படைத்தமைக்கு நன்றி விசுகர். 👍🏽- சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.