Everything posted by தமிழ் சிறி
-
அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.
தாய்லாந்து – கம்போடியா போர்நிறுத்தம் நிச்சயமற்ற நிலையில்! எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக திங்களன்று (28) இரு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தை கம்போடியா “வேண்டுமென்றே” மீறியதாக தாய்லாந்து குற்றம் சாட்டியுள்ளது. இந்த மோதல்களில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இரு நாடுகளுக்கு இடையிலும் பகிரப்பட்ட எல்லையில் ஐந்து நாட்கள் குண்டுவீச்சு மற்றும் ராக்கெட் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்திற்கு இது ஒரு நிலையற்ற தொடக்கமாக அமைந்துள்ளது. தாய்லாந்து இராணுவம் நள்ளிரவுக்குப் பிறகு துப்பாக்கிச் சூட்டை நிறுத்தியதாகக் கூறுகிறது. ஆனால் இன்று காலை வரை “பல இடங்களில்” கம்போடியத் தரப்பிலிருந்து துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வந்தாக அது கூறுகிறது. அதேநேரம், நள்ளிரவில் போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே “எந்த ஆயுத மோதல்களும் இல்லை” என்று கம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சு AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்த உள்ளூர் தளபதிகளுக்கு இடையிலான சந்திப்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் ஒரு கம்போடிய சிப்பாய் மோதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே நூற்றாண்டு பழமையான சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பாக பதற்றங்கள் கடந்த வாரம் அதிகரித்தன. கடந்த வாரம் ஐந்து தாய் வீரர்கள் கண்ணிவெடி வெடிப்பில் காயமடைந்ததைத் தொடர்ந்து, அவை முழு அளவிலான மோதலாக மாறியது. தாய்லாந்து தனது எல்லையின் சில பகுதிகளை மூடி, கம்போடிய தூதரை வெளியேற்றி, புனோம் பென்னிலிருந்து தனது தூதரை திரும்ப அழைத்தது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், கம்போடியா தாய்லாந்தின் மீது பல ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அடுத்த நாட்களில் இரு தரப்பினரிலும் அதிகமான பொதுமக்கள் இறந்தனர், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். போர் நிறுத்தத்திற்கான காலக்கெடுவான திங்கட்கிழமை (28) நள்ளிரவு வரை இரு படைகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் தொடர்ந்தன. தாய்லாந்து கம்போடிய நிலைகள் மீது மேலும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1441023
-
காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
ரிக்ரொக் காதலனுக்காக… சொந்த வீட்டில் களவு எடுத்த இந்தப் முட்டாள் பெட்டையை பெத்த தாய் தகப்பன் தான் பாவம்.
-
நியூயோர்க் நகரில் துப்பாக்கி சூட்டுக்கு ஐவர் பலி.
கன நாள் ஒரு சம்பவமும் நடக்கவில்லையே, இவர்கள் திருந்தி விட்டார்கள் என நினைத்தேன். ஹ்ஹூம்…. திருந்த சந்தர்ப்பமே இல்லை.
-
எனது மரணச்சடங்கு.🖤
நான் யாழ்ப்பாணத்தில், நிற்கும் போது இறந்தால்.... காணொளியில் உள்ள மாதிரி.... பறை மேளம் அடித்து, பிரேத ஊர்வலம் வைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்துளேன். 🙂 😜
-
எனது மரணச்சடங்கு.🖤
பிறக்கும் போதும் அழுகின்றாய். படம்: கவலை இல்லாத மனிதன் பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு இயற்றியவர்: கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் இரவின் கண்ணீர் பனித்துளி என்பார் முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார் இரவின் கண்ணீர் பனித்துளி என்பார் முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார் இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும் பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் அன்னையின் கையில் ஆடுவதின்பம் கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் அன்னையின் கையில் ஆடுவதின்பம் கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம் தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம் பெரும்பேரின்பம் பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
-
ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
சரியாகச் சொன்னீர்கள். 👍
-
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த கைது.
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த கைது. முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துஹேர பகுதியில் நபரொருவரை கடத்தி, கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரனைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சந்தேகநபரான நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டதுடன் கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாம் அவரது கண்காணிப்பில் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட நபர் பல நாட்களுக்கு பின்னர் சட்டவிரோத தடுப்பு முகாமிலிருந்து அனுப்பிய கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || முன்னாள் க...முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த கைதுமுன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துஹேர பகுதியில் நபரொருவரை கடத்தி, கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரனைகள...
-
அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.
கம்போடியா - தாய்லாந்து போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் கோலாலம்பூரில் ஆரம்பமாகின! கம்போடிய பிரதமர் ஹுன் மானெட்டும் தாய்லாந்து பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய்யும் மலேசியாவில் நேருக்கு நேர் சந்தித்துப் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர், தற்போதைய ஆசியான் தலைவரான மலேசியப் பிரதமர் இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிப்பதுடன்; சீனா, மற்றும் அமெரிக்கா சமாதான பேச்சுக்கான நேரடி ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது. Vaanam.lk
-
நாமலுக்கு எதிராக பிடியாணை உத்தரவு!
நாமலுக்கு எதிராக பிடியாணை உத்தரவு! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் இன்று (28) பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்குக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1440923
-
கருத்து படங்கள்
- புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் !
புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் ! இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஓய்வுபெற்றதையடுத்து வெற்றிடமான குறித்த பதவிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேனவின் பெயர் அரசியலமைப்பு சபையினால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது. இலங்கையின் 49ஆவது பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன வரலாற்றில் இணைகிறார். https://athavannews.com/2025/1440826- ஜனாதிபதி இன்று மாலைதீவுக்கு பயணம்!
ஜனாதிபதி இன்று மாலைதீவுக்கு பயணம்! மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) காலை உத்தியோகபூர்வ பயணமாக மாலைத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். எதிர்வரும் 30 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். அத்துடன், இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதனை முன்னிட்டு, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளார். இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கிடையில் முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு இவ்வருடத்துடன், 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் இத்தருணத்தில், ஜனாதிபதி திசாநாயக்கவின் மாலைத்தீவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் குறிப்பிடத்தக்கதொரு நிகழ்வாக அமையும். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி வணிக மன்றமொன்றில் உரையாற்றவும், வெளிநாட்டில் வாழும் இலங்கைச் சமூகத்தினரைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி திசாநாயக்கவின் இப்பயணத்தில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலர் இணைந்து கொள்ளவுள்ளார்கள். https://athavannews.com/2025/1440835- அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு!
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு! அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பை ஞாயிற்றுக்கிழமை (27) எட்டியுள்ளன. இது, உலகின் மிகப்பெரிய பொருளாதார பங்காளிகளில் இருவருக்கு இடையே பல மாதங்களாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து. மேலும், உலகளாவிய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட இரு நட்பு நாடுகளுக்கும் இடையே ஒரு பெரிய வர்த்தகப் போரை தவிர்த்தது. ஸ்கொட்லாந்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இடையேயான சமரச பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அனைத்து ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கும் 15% அமெரிக்க வரியை விதிக்க கூட்டாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இது ஆகஸ்ட் 1 முதல் செயல்படுத்துவதாக ட்ரம்ப் அச்சுறுத்திய 30% இறக்குமதி வரி விகிதத்தில் பாதியாகும். 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், சில பொருட்களுக்கு பூஜ்ஜிய சதவீத வரிகளுடன் அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு அதன் சந்தைகளைத் திறக்கும் என்றும் அவர் கூறினார். வான் டெர் லேயனும் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டியதுடன், இது இரு பங்காளிகளுக்கு இடையிலும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று கூறினார். ஏனெனில் அவை உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. உலகப் பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும், அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், வொஷிங்டனின் முக்கிய வர்த்தக பங்காளிகளுக்கு எதிராக ட்ரம்ப் வரிகளை விதித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து, அவர் இங்கிலாந்து, ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகியவற்றுடன் வரி ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் ஸ்கொட்லாந்தன் தெற்கு அயர்ஷயரில் உள்ள டர்ன்பெர்ரி கோல்ஃப் மைதானத்தில் ட்ரம்ப் மற்றும் வான் டெர் லேயன் இடையேயான தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (27) ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் பின்னர் பேசிய ட்ரம்ப், அமெரிக்க இராணுவ உபகரணங்கள் உட்பட, வொஷிங்டனில் ஐரோப்பிய ஒன்றியம் தனது முதலீட்டை $600 பில்லியன் (£446 பில்லியன்) அதிகரிக்கும் என்றும், எரிசக்திக்காக $750 பில்லியன் செலவிடும் என்று கூறினார். அதேநேரம், அமெரிக்க திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, எண்ணெய் மற்றும் அணு எரிபொருட்களில் அடுத்த மூன்று ஆண்டுகளில் செய்யப்படும் அந்த முதலீடு, ரஷ்ய மின்சார ஆதாரங்களை ஐரோப்பியர்கள் நம்பியிருப்பதைக் குறைக்க உதவும் என்று வான் டெர் லேயன் கூறினார். https://athavannews.com/2025/1440840- சிரிக்கலாம் வாங்க
- முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 6 தொலைபேசிகள் கண்டுபிடிப்பு!
முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 6 தொலைபேசிகள் கண்டுபிடிப்பு! வெலிக்கடை சிறைச்சாலையின் அறை பகுதிகளில் இருந்து ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளும் மேலும் சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்ட அறை பகுதிகளிலேயே சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளான பல முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1440814- சிரிக்கலாம் வாங்க
- பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை கல்வித் திட்டம் – பிரதமர்
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்: புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல் 2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும் பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள் மாணவர்களின் கல்விப் சுமையை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வழிவகுத்து, சர்வதேச தரங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் திறன்களை மதிப்பீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும். 🔹 புதிய பாடத்திட்டம்: மொத்தம் 7 பாடங்கள் புதிய முறையில், மாணவர்கள் 10 பாடங்கள் கற்க வேண்டிய பழைய முறையைவிட, இப்போது 7 பாடங்கள் மட்டும் கற்க வேண்டியுள்ளது. இது மாணவர்களின் பாடங்களிற்கான பளுவை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வாய்ப்பு வழங்குவதாகும். ✅ கட்டாய Subjects – 5: இவை அனைத்து மாணவர்களும் கற்கவேண்டியபாடங்கள்: 1. தாய்மொழி – தமிழ், සිංහල அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட தாய்மொழி (Credits: 3) 2. English – Communication skills, Reading, Writing, Speaking (Credits: 3) 3. Mathematics – Concepts, Problem solving, Logical thinking (Credits: 3) 4. Science – Physics, Chemistry, Biology உள்ளடக்கிய General Science (Credits: 3) 5. Religion – Buddhism, Hinduism, Islam, Christianity (Credits: 2) 🔸 மொத்த கட்டாய Subjects இற்கான Credits: 14 ✅ தேர்ந்தெடுக்கக்கூடிய Subjects – 2: மாணவர்கள் தங்கள் ஆர்வமும் எதிர்கால இலக்குகளையும் பொருத்து, பின்வரும் களங்களில் இருந்து 2 Subjects தேர்வு செய்யலாம். ஒவ்வொன்றுக்கும் Credits: 2. Second National Language Information and Communication Technology History Civic Education Health and Physical Education Technology : Tourism and Hospitality Management Technology Design and Engineering Technology Livestock Product Technology Artistic Product Technology Entrepreneurship and E-commerce Technology Geography Aesthetics Education: Oriental Music Western Music Carnatic Music Oriental Dance Bharatha Dance Western Dance Drama and Theatre Art Entrepreneurship and Financial Literacy ➡️ இந்த 7 Subjects அமைப்பில், மாணவர்கள் பல வகையான பாடங்களில் சிதறி இல்லாமல், தங்களுக்குப் பயனுள்ள துறைகளில் ஆழமாக கவனம் செலுத்த முடியும். 🔹 GPA (Grade Point Average) முறைமை: பழைய A, B, C, S, F எனப்படும் Letter Grade முறைக்கு பதிலாக, GPA முறை அமலுக்கு வருகிறது. GPA என்பது மாணவர்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்த மதிப்பெண் நிலையை இலக்க முறையில் (Numerical Form) காட்டும் முறை. இது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட முறைமை ஆகும், மேலும் மாணவர்களின் முழுமையான கல்வி செயல்திறனை துல்லியமாக பிரதிபலிக்க உதவும். ✅ GPA மதிப்பீட்டின் தர விகிதங்கள் உதாரணமாக): % Marks Range Grade Point 90% - 100% 4.0 80% - 89% 3.7 70% - 79% 3.3 60% - 69% 3.0 50% - 59% 2.7 40% - 49% 2.0 (Pass) Below 40% 0.0 (Fail) 👉 இந்த Grade Point values Education Ministry வழியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வரை இவை மாதிரிப் பட்டியல் மட்டுமே. ✅ GPA கணக்கீட்டு முறை: மாணவர் ஒருவர் 7 Subjects கற்கின்றார் என எடுத்துக்கொள்வோம். அவர் பெற்றுள்ள Grade Points பின்வருமாறு: Mathematics: 3.7 English: 3.3 Mother Tongue: 4.0 Religion: 3.7 Science: 3.0 Optional Subject 1: 3.5 Optional Subject 2: 3.2 📌 Total Grade Points = 3.7 + 3.3 + 4.0 + 3.7 + 3.0 + 3.5 + 3.2 = 24.4 📌 Final GPA = 24.4 / 7 = 3.48 இதன்படி, மாணவரின் Final GPA = 3.48 ஆகும். 🔹 GPA முறைமையின் நன்மைகள்: ✅ துல்லியமான மதிப்பீடு: GPA system மாணவர்களின் ஒட்டுமொத்த திறனை துல்லியமாக பிரதிபலிக்கிறது ✅ குறைந்த மன அழுத்தம்: ஒரு Subject இல் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், மொத்த GPA அதிகமாக இருக்கலாம் ✅ International Recognition: உலக பல்கலைக்கழகங்களில் GPA முறை ஏற்கப்படுகிறது ✅ A/L Stream தெரிவில் உதவுகின்றது: திறன்கள் மற்றும் ஆர்வங்களை GPA மூலம் தெளிவாக அறிய முடியும் ✅ Relative Assessment: மாணவர்களிடையே ஒப்பீட்டு மதிப்பீடு செய்வது சாத்தியம் 🔹 சவால்கள் மற்றும் முக்கிய கவனத்துக்குரிய அம்சங்கள்: 📌 Awareness: GPA முறைமை பற்றி மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் சரியான விளக்கங்களைப் பெற வேண்டும் 📌 Minimum GPA for Pass: ஒருவரை Pass ஆகக் கருத தேவையான GPA மற்றும் ஒவ்வொரு Subject இல் Pass குறியீடு தெளிவாக இருக்க வேண்டும் 📌 Transparency: GPA கணக்கீட்டு முறை மற்றும் Grade Point Conversion பற்றிய நெறிமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் இந்த புதிய மாற்றங்கள் இலங்கையின் கல்வி முறைமைக்குள் விசேஷமான மாற்றத்தை உருவாக்கும். அதன் வெற்றி, சரியான திட்டமிடல், செயல் திட்டம், மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மீது தழுவியுள்ளது. 📌 மாணவர்களுக்கு அதிகப் பயனுள்ள, குறைந்த அழுத்தமுள்ள மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான கல்வி அனுபவம் ஒன்றை இம்மூலம் வழங்க முடியும் என்பதே நம்பிக்கை. இணையத்தில் இருந்து....- கருத்து படங்கள்
- 42 ஆண்டுகளாகக் கற்றுக்கொள்ளாத ஒரு தீவு – நிலாந்தன்.
- 1983 கறுப்பு ஜூலை; பாதுகாப்பான எதிர்காலத்துக்காக கடந்த காலத்தை நினைவுகூருதல்
- சர்வதேச நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம்
- 42 ஆண்டுகளாகக் கற்றுக்கொள்ளாத ஒரு தீவு – நிலாந்தன்.
42 ஆண்டுகளாகக் கற்றுக்கொள்ளாத ஒரு தீவு – நிலாந்தன். முதலாவதாக 83 ஜூலை ஒர் இனக்கலவரம் அல்ல. இனக்கலவரம் என்றால் பரஸ்பரம் மோதிக்கொள்ள வேண்டும். அது இன அழிப்பு.நிராயுத பாணிகளாக இருந்த கொழும்பில் வசித்த தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட ஒரு தாக்குதல். அது திட்டமிடப்பட்டது என்பது முதலாவது. பின்னணியில் அரசு தரப்பைச் சேர்ந்த பிரமுகர்கள் இருந்தார்கள் என்பது இரண்டாவது. எனவே அது தன்னெழுச்சியாக தோன்றவில்லை. அதற்குப்பின் திட்டமிட்டு ஒரு தரப்பு உழைத்தது. தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற ஒர் உள்நோக்கம் அங்கே இருந்தது. அதோடு தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி காரணமாக தூண்டப்பட்ட பொறாமையை தீர்த்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் தேவைப்பட்டது. இவ்வாறு எல்லாக் காரணிகளும் இணைந்த பொழுது நன்கு திட்டமிட்டு, தேவையான தகவல்கள் திரட்டப்பட்டு, தேவையான ஆட்கள் திரட்டப்பட்டு,அரசாங்கத்தைச் சேர்ந்த சில பிரமுகர்களால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு தாக்குதல் நடவடிக்கை அது.எனவே அதனை தன்னியியல்பான கலவரம் என்றெல்லாம் அழைக்க முடியாது. அது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு இன அழிப்புச் செயற்பாடு. ஆனால் அந்தப் பழிவாங்கல் அல்லது இன அழிப்பு நடவடிக்கை நாட்டை எங்கே கொண்டு வந்து விட்டது ? முதலாவதாக, நாடு வெளிச் சக்திகளுக்கு திறந்து விடப்பட்டது.முதலில் இந்தியா தலையிட்டது. இந்தியா ஒருபுறம் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகளின் ஊடாக இலங்கைக்கு விசேஷ தூதுவர்களை அனுப்பியது. இன்னொருபுறம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பான உளவியலின் பின்னணியில் அங்கு ஏற்கனவே காணப்பட்ட ஆயுதப் போராட்ட அமைப்புகளை இந்தியா ஊக்குவித்தது. தமிழகத்தை ஈழப் போராட்டத்தின்பின் தளமாக திறந்துவிட்டது. அதன் விளைவாக ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கு பயிற்சியும் ஏனைய வசதிகளும் அங்கு கிடைத்தன. அதனால் ஈழப் போராட்டம் திடீரென்று வீங்கியது. இங்கு வீக்கம் என்ற சொல் என்னுடையது அல்ல. அது ஏற்கனவே விமர்சகர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல். 70களில் தொடங்கி 83 வரையிலும் தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் படிப்படையாக மெல்ல மெல்ல வளர்ந்துவந்தது. ஆனால் 83 ஜூலைக்குப் பின் அந்த வளர்ச்சி இயல்பானதோ அல்லது படிப்படியானதோ அல்ல. அது அசாதாரணமான ஒரு வளர்ச்சி. அதனால்தான் அதனை வீக்கம் என்று அழைக்க வேண்டி இருக்கிறது. அந்த வீக்கத்தின் விளைவுதான் போராட்டத்தில் பின்னர் ஏற்பட்ட பல குழப்பங்களும் வீழ்ச்சிகளும் ஆகும். இவ்வாறு ஈழப் போராட்டத்தில் முதலாவது பிராந்தியத் தலையீடு ஏற்பட்டது 83 ஜூலையின் விளைவாகத்தான். அங்கிருந்து தொடங்கி கடந்த 42 ஆண்டுகளாக இலங்கைத் தீவு வெளியாருக்கு திறந்து விடப்பட்ட ஒரு தீவாகத்தான் காணப்படுகின்றது. முதலில் இனப்பிரச்சினை பிராந்தியமயப்பட்டது. அடுத்த கட்டமாக அது அனைத்துலக மயப்பட்டது. இப்பொழுது இனப்பிரச்சினை அனைத்துலக மயப்பட்ட ஒரு பிரச்சினை. இலங்கை அரசாங்கம் கடந்த 16 ஆண்டுகளாக ஐநாவில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஓர் அரசுடைய தரப்பாக அதனை அவர்கள் சமாளிக்க முடிகிறது.உள்நாட்டுப் பொறி முறையை வலியுறுத்துவதன் மூலமும் ஐநா தீர்மானங்களை நிராகரிப்பதன் மூலமும் இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினையை அனைத்துலக மய நீக்கம் செய்ய முற்படுகிறது.ஆனாலும் யதார்த்தத்தில் இனப்பிரச்சினை அனைத்துலக மயப்பட்டு விட்டது. இதை அதன் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் இலங்கை வெளிச் சக்திகளுக்கு திறந்து விடப்பட்டு விட்டது. முதலில் அப்போது இருந்த ஜனாதிபதி ஜெயவர்த்தன மேற்கத்திய கூலிப்படைகளை நாட்டுக்குள் இறக்கினார். மேற்கத்திய ஆயுத தளபாடங்களை நாட்டுக்கு இறக்கினார். மேற்கத்திய ராணுவ ஆலோசகர்களை நாட்டிற்குள் இறக்கினார். அதேசமயம் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவை நோக்கிச் சென்றார்கள். ஐரோப்பாவெங்கும் படர்ந்து சென்றார்கள். முதலாம் கட்டமாக ஈழப் போர் பிராந்திய மையப்பட்டதன் விளைவாக இந்திய அமைதி காக்கும் படை நாட்டுக்குள் இறங்கியது. இந்திய இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்டது. இரண்டாம் கட்டம், ஈழப்போர் அனைத்துலக மயப்பட்டது. நோர்வியின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின்போது ஸ்கன்டினேவிய நாடுகளைச் சேர்ந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழுவினர் நாட்டுக்குள் இறக்கப்பட்டார்கள்.உலகின் வெவ்வேறு தலைநகரங்களில் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன. அடுத்த கட்டம் 2009க்கு பின். கடந்த 16 ஆண்டுகளாக இலங்கை அரசாங்கங்கள் ஐநாவுக்கு பொறுப்பு கூற வேண்டியிருக்கிறது. இப்பொழுது ஈழப் போர் இல்லை. ஆனால் அதன் விளைவாக உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையின் எச்சமாகிய 13ஆவது திருத்தம் யாப்பில் உண்டு. இது முதலாவது விளைவு. இரண்டாவது விளைவாக சீனா இச்சிறிய தீவுக்குள் இறங்கிவிட்டது.அம்பாந்தோட்டையிலும் இலங்கைத் தீவின் தலைநகரக் கடலில் சீனப்பட்டினத்தில் சீனா நிரந்தரமாகக் காலூன்றி விட்டது. புவிசார் அரசியலின் அடிப்படையில் இந்த பிராந்தியம் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் காணப்படுகிறது. ஆனால் இந்தப் பிராந்தியத்தில் இலங்கைத் தீவில் இருந்து 400 கடல் மைல் தொலைவில் உள்ள சீனா தீவுக்குள் இறங்கிவிட்டது.எனவே பிராந்தியத்துக்குள் தனது மேலாண்மையைப் பேணவேண்டிய நிர்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு பிராந்தியத்தில் உள்ள இரண்டு பேரரசுகளின் இழு விசைகளுக்குள் இப்பொழுது இலங்கை சிக்கியிருக்கிறது. அதாவது இலங்கை இப்பொழுது இறைமை உடைய ஒரு தீவு அல்ல. அது பிராந்திய மற்றும் பூகோள பேரரசுகளின் இழு விசைகளுக்குள் சிக்கியிருக்கும் ஒரு தீவு. கலைத்துவமாகச் சொன்னால் பேரரசுகளால் பங்கிடப்படும் ஓர் அப்பம். யுத்தத்தை வென்று அதன் அடுத்த கட்டமாக யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கிய ராஜபக்ச குடும்பத்தை அவர்களுக்கு வாக்களித்த சொந்த மக்களே ஆட்சியில் இருந்து அகற்றித் துரத்தினார்கள். சில ஆண்டுகளுக்கு முன் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பொழுது சிங்கள மக்கள் அதிகமாக புலம் பெயர்ந்தார்கள்.லட்சக்கணக்கான சிங்கள மக்கள் இதுவரை புலம்பெயர்ந்து விட்டார்கள்.யுத்தத்தின் விளைவே பொருளாதார நெருக்கடு.இப்பொழுது யுத்தத்தில் வென்றெடுத்த நாடு தமிழ் மக்களுக்கும் சொந்தமில்லை; சிங்கள மக்களுக்கும் சொந்தமில்லை; முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமில்லை. 2009 க்குப் பின் முஸ்லிம்களுடைய சொத்துக்களும் முதலீடுகளும் திட்டமிட்டுத் தாக்கப்பட்டன. 83 ஜூலை போல. அதன் விளைவாக முஸ்லிம் மக்கள் மத்தியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரு வணிகர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.அல்லது தங்களுடைய முதலீடுகளை வெளியே நகர்த்தி விட்டார்கள். தொடர்ந்து வந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணியில் முஸ்லிம்கள் இந்த நாடு தங்களுக்கு பாதுகாப்பானது என்ற உணர்வை இழந்து விட்டார்கள். எனவே தொகுத்துப் பார்த்தால், யுத்தத்தில் வென்ற நாடு ஏனைய எல்லாவற்றிலுமே தோற்றுவிட்டது. மிகக்குறிப்பாக அதன் இறைமையை இழந்து விட்டது. இப்பொழுது அது ஒரு பேரரசுகள் பங்கிடும் அப்பம். 83 ஜூலையிலிருந்து இந்திய தலையீட்டில் தொடங்கி இப்பொழுது அம்பாந்தோட்டையிலும் நாட்டின் தலைநகரத்திலும் சீனா நிரந்தரமாக தங்கி விட்டது. இன்னொரு புறம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பொறுப்புக் கூற வேண்டிய நிலை. இது முதலாவது. இரண்டாவது, ஜூலை 83 விளைவாக தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் விரிவடைந்தது.ஒரு கட்டத்தில் நாட்டில் இரண்டு அதிகாரம் மையங்கள் இருந்ததை ஏற்றுக்கொண்டு ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை செய்ய வேண்டி வந்தது. அதாவது 83 ஜூலையில் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும், தமிழ் மக்களை பழிவாங்க வேண்டும்,என்று சிந்தித்து திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பானது தமிழ் மக்களை மேலும் கொதித்து எழச் செய்ததே தவிர அவர்களைப் பணிய வைக்கவில்லை. விளைவாக லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படும் ஒரு யுத்த களம் திறக்கப்பட்டது. அனைத்துலக அரங்கில் இலங்கைத் தீவு அவமதிக்கப்பட்டது.தேரவாத பௌத்தத்தின் ஒரே சேமிப்பிடம் என்று தன்னைப் பெருமையாகக் கூறிக் கொள்ளும் ஒரு தீவு இந்த நூற்றாண்டின் முதலாவது பெரிய இன அழிப்புக் களமாக மாறியது. காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகமுடைய ஒரு தீவாக மாறியது.இந்த நாட்டின் முக்கிய படைத் தளபதிகளும் யுத்தத்தில் வென்ற குடும்பமும் அமெரிக்க கண்டத்துக்கு போக முடியாது. பிரித்தானியாவுக்கும் போக முடியாது.அதாவது 83 ஜூலை எந்த நோக்கத்தில் அடிப்படையில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை. தமிழ் மக்களின் எதிர்ப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.இது இரண்டாவது விளைவு. மூன்றாவது விளைவு,போரின் விளைவாக தமிழ் மக்கள் புலம்பெயர்ந்தார்கள். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் புலம்பெயர்ந்து விட்டார்கள். இது தமிழ் மக்களின் மொத்த ஜனத்தொகைக்குள் மூன்றில் ஒன்றுக்கு கிட்ட வரும். விளைவாக ஈழத் தமிழ் சமூகம் கடந்த இரண்டு தசாப்தங்களிலும் படிப்படியாக உலகில் மிகப் பலமான, மிகத்துடிப்பான, வினைத்திறன் மிக்க ஒரு புலம்பெயர் சமூகமாக எழுச்சி பெற்றிருக்கிறது. 2009க்குப் பின் தோல்வியை ஒப்புக் கொள்ளாது தொடர்ந்து போராடும் ஒரு சமூகமாகவும் அது காணப்படுகிறது. நிதி ரீதியாக பலம் வாய்ந்த, சில நாடுகளின் முடிவெடுக்கும் ராஜதந்திரிகள் மத்தியில் செல்வாக்குமிக்க, ஒரு சமூகமாக புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் வளர்ந்து வருகின்றது. புலப்பெயர்ச்சியின் விளைவாக எழுச்சிபெற்ற தமிழ் முதலாளிகள் தமிழகத்தின் திரைத்துறை மையமாகிய கோடம்பாக்கத்தில் முதலீடு செய்யும் ஒரு வளர்ச்சியைப் பெற்று விட்டார்கள்.உலகம் முழுவதிலும் அவர்கள் வெற்றிகரமான முதலீட்டாளர்களாகத் தங்களைத் தொடர்ந்து ஸ்தாபித்து வருகிறார்கள்.அவர்களிற் சிலர் இலங்கைக்குள்ளும் திரும்பி வந்து விட்டார்கள். இங்கே அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் வங்குரோத்தாகி வரும் சொத்துக்களை விலைக்கு வாங்கி வருகிறார்கள். இலங்கை ரூபாய்களோடு காணப்பட்ட தமிழர்களை கொழும்பிலிருந்து அகற்றுவதற்கு 83 ஜூலை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அதே தமிழர்கள் இப்பொழுது டொலர்களோடும் பவுன்ஸ்சோடும் யூரோக்களோடும் நாட்டுக்குள் திரும்பி வருகிறார்கள். அவர்கள் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் முதலீடு செய்யக்கூடிய, நிதிப் பலமிக்க ஒரு சமூகமாக எழுச்சிபெற்று விட்டார்கள். அதாவது தமிழ் மக்களின் பொருளாதார எழுச்சியைக் கண்டு, புத்திசாலித்தனத்தைக் கண்டு,கெட்டித்தனத்தை கண்டு, பொறாமை கொண்டு தென்னிலங்கையில் அவர்களுடைய சொத்துக்களை அழித்தார்கள். ஆனால் 42 ஆண்டுகளின் பின் இப்பொழுது தமிழ் மக்கள் தென்னிலங்கையில் வங்குரோத்தான சிங்கள முதலாளிகளின் சொத்துக்களை வாங்கும் ஒரு வளர்ச்சிக்கு வந்து விட்டார்கள். இது 83 ஜூலை மாதம் இன அழிப்பை செய்தவர்கள் எதிர்பாராத ஒரு வளர்ச்சி. அவர்கள் தென்னிலங்கையில் இருந்து துரத்திய மக்கள் இப்பொழுது உலகம் முழுவதும் படர்ந்து,பலம் வாய்ந்த ஒரு சமூகமாக,நிதிப் பலம் மிக்க ஒரு சமூகமாக எழுச்சி பெற்று விட்டார்கள்.இது மூன்றாவது முக்கிய விளைவு. எனவே 83 ஜூலை விளைவுகளைத் தொகுத்துப் பார்த்தால் இலங்கைத் தீவு பெற்றவைகளை விட இழந்தவைகளே அதிகம். அது இழந்தவைகளுக்குள் அதன் இறைமையும் அடங்கும். https://athavannews.com/2025/1440767- செம்மணி மனித புதைகுழிகளை அடையாளம் காண நவீன கருவிகள்!
செம்மணி மனித புதைகுழிகளை அடையாளம் காண நவீன கருவிகள்! செம்மணி மனிதப் புதைகுழியில், ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ரேடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. செம்மணிப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு மேலதிகமாக, செய்மதிப் படங்களை அடிப்படையாக வைத்து துறைசார் நிபுணர் சோமதேவா அடையாளப்படுத்திய இடத்திலும் என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன. இதையடுத்து, செம்மணியில் குறிக்கப்பட்ட பகுதிக்குள் மட்டும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்காமல், பரந்துபட்ட அகழ்வுகள் இடம்பெற வேண்டும் என்று உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்தே, வெளிநாட்டில் இருந்து ஜி.பி.ஆர். ஸ்கேன் இயந்திரம் கொண்டுவரப்பட்டு அங்கு விரிவான ஆய்வு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளை ஆய்வு செய்வதற்கு இலங்கையில் இதுவரை ஏ.எம்.ரி. ஸ்கேனரே பயன்படுத்தப்பட்டன. இந்த நிலையில், தரையை ஊடுருவும் ரேடர் (ஜி.பி.ஆர்.) என்று அழைக்கப்படும் ஸ்கானர் மூலம் இலங்கையின் மனிதப் புதைகுழியொன்று ஆய்வு செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பமாக செம்மணிப் புதைகுழியே பதிவாகியுள்ளது. தரையை ஊடுருவும் ரேடர் (ஜி.பி.ஆர்.) அமைப்பு, கொங்கிரீட்களையும் ஊடுருவி நிலத்துக்குக் கீழ் இருக்கும் விடயங்களை திரையில் வெளிப்படுத்தும் நவீனத்துவம் கொண்டது. கனடா போன்ற நாடுகளில் கட்டடங்களின் கீழ் இருந்த மனிதப் புதைகுழிகளை அவதானிப்பதற்கு இந்த ஸ்கானரே பயன்படுத்தப்பட்டது. இதேவேளை, ஆய்வுப் பணிகளுக்காக செம்மணிப் புதைகுழிக்கு அருகாக உள்ள பல பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்கான் ஆய்வில் பல பகுதிகளில் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டதும், இந்த ஆய்வு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440795- தீர்மானத்தை மீறி நல்லூர் ஆலயத்திற்கு மணல் விநியோகம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
மணல் மாஃபியாக்கள் தினமும் நூற்றுக்கணக்கான உழவு யந்திரங்களில் மண்கடத்தும் போது எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு, நல்லூர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்யும் போது உடலிற்கு வீதியில் உள்ள கற்கள் உறுத்தாமல் இருக்க மணல் எடுத்தால் எதிர்ப்பு தெரிவிப்பதை எந்த விதத்தில் சேர்ப்பது. நல்லூர் கோவில் என்ன... வருடம் முழுவதுமா மண் எடுக்கப் போகின்றது. திருவிழாவிற்கு மட்டும் தானே எடுக்கின்றார்கள். நல்லூர் கோவில் மண்ணுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்.... "ஆபிரஹாம் சுமந்திரனின், அல்லிலோயா" கோஷ்டியாக இருக்குமோ.- பிள்ளையானின் அலுவலகத்தில் கடும்சோதனை
பிள்ளையான் குழுவின் அலுவலகமாக செயற்பட்ட பாரிய வீட்டில் சோதனை முன்னெடுப்பு! அம்பாறை மாவட்டத்தில் யுத்தம் நிலவிய காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளராக செயற்பட்ட இனிய பாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே. புஷ்பகுமார் பயன்படுத்திய அலுவலகங்கள் மற்றும் முகாம்கள் நேற்று பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அணியிரால் சோதனை மேற்கொண்டிருந்தனர். இதனடிப்படையில் நேற்று இரு வேறு ஜீப் வண்டியில் குற்றப் புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிந்த சந்தேக நபர்கள் அவ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். குறித்த நபர்கள் இனங்காட்டியதற்கு அமைய கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகம் மற்றும் பிரதான முகாமாக செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தாளவெட்டுவான் சந்திக்கு அருகாமையில் உள்ள பாரிய வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களுடன் நீண்ட நேரமாக குறித்த வீட்டில் தரித்து நின்ற புலனாய்வு பிரிவினர் சோதனை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440773 - புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.