Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியாவில் பண்பாட்டு ஊர்த்திப் பவனி முன்னெடுப்பு! மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியா பிரதேச செயலக பண்பாட்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஊர்திப் பவனி சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும், பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடத்திய பண்பாட்டு ஊர்திப் பவனி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் பிரதேச செயலக முன்றில் நேற்று (18) ஆரம்பமாகியது. வவுனியா பிரதேச செயலக முன்றில் இருந்து ஆரம்பமாகிய ஊர்திப் பவனி தமிழர் பாரம்பரியம், கலாசாரம், வரலாறு, தொல்லியல், கலைகள் என்பவற்றை பறைசாற்றி கிராம மக்களின் பங்களிப்புடன் வவுனியா, கண்டி வீதியை அடைந்து பசார் வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, புகையிரத நிலைய வீதி, குருமன்காடு, மன்னார் வீதி ஊடாக சென்று பிரதேச செயலகம் முன்பாக நிறைவடைந்தது. இதேவேளை, குறித்த நிகழ்வில் தமிழர் வாழ்வியலின் பாரம்பரியத்துடன் தொடர்புடைய விவசாய முறைகள், நீர்பாசன முறைகள், உணவு தயாரித்தல், கைவினை உற்பத்திகள், வழிபாட்டு முறைகள், சடங்கு முறைகள், கிராமிய கலை மரபுகள், கிராமிய உணவு பழக்கவழக்கம் உள்ளிட் பல்வேறு அம்சங்களை தாங்கிய 47 க்கும் மேற்பட்ட ஊர்திகள் இதன் போது பவனி வந்திருந்தன. இந்நிகழ்வில் வடமகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வவுனியா அரச அதிபர் பீ.ஏ.சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன், வவுனியா தெற்கு வலய பிரதி கல்விப் பணப்பாளர் அமல்ராஜ், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், மதகுருமார், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமயம் சார் அமைப்புக்கள், கிராமிய மக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டதுடன், வீதிகளில் மக்களும் கூடியிருந்து அதனை பார்த்து உற்சாகப்படுத்தினர். https://athavannews.com/2025/1439760
  2. புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் எதிர்ப்பு! திய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் இன்றும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. 2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் உட்பட பல தரப்பினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளதை அடுத்து கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக நேற்று (17) நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விளக்கமளித்தது. குறித்த விளக்கத்தின்படி, 10 மற்றும் 11 ஆம் தரங்களில் ஐந்து பாடங்கள் கட்டாய பாடங்களாக பட்டியலிடப்பட்டுள்ளதுடன் தேர்வுப் பாடங்களில் வரலாறு மற்றும் அழகியல் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் இன்றும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. https://athavannews.com/2025/1439692
  3. யாழ் – வடமராச்சியில் வெடிக்காத நிலையில் இருந்த வெடிகுண்டு ஒன்று மீட்பு! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயில் அருகாமையில் நேற்றைய தினம் (18) பிற்பகல் 5 மணியளவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது . குறித்த பகுதியில் வீட்டுவேலைக்காக வேலையாட்கள் அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் வெடிக்காத நிலையில் ஒரு வகை வெடி குண்டினை கண்டுபிடித்துள்ளனர். இதை அடுத்து மருதங்கேணி பொலிசார்க்கு வெடிகுண்டு குறித்து தகவலளிக்கப்பட்டது. இதன் பின் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசார் குறித்த வெடிகுண்டை மீட்டு சென்றுள்ளனர். மேலும் குறித்த வெடிகுண்டு தொடர்பில் மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1439756
  4. ஆணாக இருந்து பெண்ணாக மாறிய படியால் தான்…. வீதியில் கூச்சம் இல்லாமல், அம்மணமாக திரிந்திருக்கிறா (ர்). 😂
  5. பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் இன்று யாழ்ப்பாணம் வந்தார். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களுக்கான பேரூந்தினை கொள்வனவு செய்வதற்கான நிதி திரட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து இன்று யாழ் பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தார். பாடகர் ஸ்ரீநிவாஸ் இந்த நிகழ்ச்சிக்கான எந்த ஒரு பணத்தையும் பெற்றுக்கொள்ளாது இலவசமாக பங்கேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ளது. Babu Babugi
  6. வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை! வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை விமான நிலையத்தில் வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு, இலகுவான முறையில் விமான நிலையத்திலேயே குறித்த தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த புதிய சேவை ஒகஸ்ட் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் , இதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு கருமபீடம் ஒன்று அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. தற்போது, இந்த அனுமதி பத்திரத்திற்காக வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய நிலை காரணமாக ஏற்படும் சிரமம் குறித்து எதிர்மறையான கருத்துகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1439685
  7. கட்டண அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் இலங்கை மெய்நிகர் பேச்சுவார்த்தை! இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்க முன்மொழியப்பட்டுள்ள வர்த்தக வரிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான விவாதங்களை மேற்கொள்ள நிதி அமைச்சு தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று (18) இலங்கை பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க வர்த்தகத் துறை அதிகாரிகளுக்கும் இடையே ஒரு மெய்நிகர் சந்திப்பு நடைபெற உள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தலைமையில், தொடர்புடைய அரசு அதிகாரிகள் இந்த கலந்துரையாடலை நடத்துவார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதே இந்த சந்திப்பின் முதன்மையான நோக்கமாகும். ஆரம்பத்தில் இலங்கை மீது 44% வரியை விதித்த அமெரிக்கா, அண்மையில் அதை 30% வரிகளாக திருத்தியது. இந்த வரிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 01 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தப்பட்ட கட்டணங்களை மேலும் குறைக்க இலங்கை அதிகாரிகள் தற்போது அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439684
  8. இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்! இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாடு முழுவதும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 107 டிப்போக்களில் 25,000க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இது தொடர்பான ஒரு பத்திரிகை விளம்பரம் இன்று (18)வெளியிடப்பட்டது. அதன்படி, சாரதி பணிக்கு 450 காலியிடங்கள் (ஆண்களுக்கு 425 மற்றும் பெண்களுக்கு 25) மற்றும் நடத்துனர் பணிக்கு 300 வெற்றிடங்கள் (ஆண்களுக்கு 275 மற்றும் பெண்களுக்கு 25) உள்ளன. விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி 2025 ஜூலை 31 ஆகும். விண்ணப்பிக்கும் பதவி மற்றும் தொடர்புடைய மாகாணம் உறையின் மேல் இடது மூலையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல் பாடசாலை விடுப்புச் சான்றிதழ் மற்றும் பிற கல்விச் சான்றிதழ்களை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்றும் SLTB அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1439672
  9. அந்தரங்க வீடியோ விவகாரம்! பிக்குகளை மிரட்டிய பெண் கைது! தாய்லாந்தில் 11 பௌத்த பிக்குகளுடன் முறையற்ற உறவுகொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். குறித்த பிக்குகள் பெளத்த ஆலயங்களுக்கு மக்கள் நன்கொடையாக வழங்கிய கிட்டத்தட்ட 12 மில்லியன் டொலர் பணத்தைப் அப் பெண்ணிடம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, குறித்த பெண் பௌத்த பிக்குகளின் இரகசியப் புகைப்படங்களை எடுத்து அதனை காட்டி மிரட்டி அவர்களிடம் பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. தாய்லாந்து மாமன்னர் மகா வஜிரலோங்கோர்ன் தமது 73வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும்படி 80க்கும் அதிகமான பௌத்த பிக்குகளுக்கு விடுத்த அழைப்பை இச் சம்பவத்தையடுத்து இரத்துச் செய்துள்ளார். “தாய்லாந்து மக்களிடையே அவர்களின் தகாத செயல் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார். துறவறம் பூண்ட பௌத்த பிக்குகளின் அத்தகைய செயல் பெளத்த சமயம் மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதித்துள்ளன. இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய 11 பௌத்த பிக்குகளின் அங்கீகாரமும் நீக்கப்பட்டதுடன் குறித்த பிக்குகளை மிரட்டி பணம் பெற்ற பெண், அவர்கள் நாள் ஒன்றுக்கு 90,000 டொலர் மதிப்பிலான பொருட்களை வாங்கித் தருவதால், அதனை தாராளமாகச் செலவு செய்யும் மனநிலை தமக்கு ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439709
  10. அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா. ரஷ்யா -இந்தியா – சீனா இடையிலான முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முன்னெடுப்பை ரஷ்யா எடுத்துள்ளது. அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர், உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால்,அமெரிக்காவை சமாளிக்க, ரஷ்யாவுடன் சீனா நெருக்கம் காட்டி வருகிறது. மேலும் பழைய கசப்புணர்வுகளை மறந்து இந்தியாவுடனும் நட்பு பாராட்டுவதற்கான தருணத்தை சீனா எதிர்பார்த்துள்ளது. அதற்கேற்ப கடந்த 2002ல் நிறுவப்பட்ட ஆர்.ஐ.சி., எனப்படும் ரஷ்யா- இந்தியா- சீனா முத்தரப்பு மன்றத்திற்கு புத்துயிர் அளிக்க, ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது. இந்த முத்தரப்பு மன்றம் தான் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகளின் ‘பிரிக்ஸ்’ அமைப்புக்கு அடித்தளம் அமைத்தது. கடைசியாக, கடந்த 2017 டிசம்பரில் இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் 15வது முத்தரப்பு சந்திப்பு நடந்தது. மூன்று நாடுகளும் சர்வதேச அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான பங்களிப்புகளை அடையாளம் காணவும் ஆர்.ஐ.சி.இ வழிவகுத்தது. ஆனால் 2019ல் வந்த கொரோனா, லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் மோதல் மற்றும் பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவு ஆகிய பிரச்னைகளால், இந்திய – சீன உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்இ சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடன் பேச்சு நடத்தினார். இதையடுத்து, முடங்கியிருந்த மூன்று நாடுகளின் ஆர்.ஐ.சி., முத்தரப்பு உறவுக்கு புத்துயிர் அளிப்பதற்கான பேச்சுகள் மீண்டும் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை எதிர்ப்பதற்கு இந்தியா, ரஷ்யாவின் உதவி தேவை என்பதால், முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முயற்சிக்கு சீனாவும் தற்போது முழு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439632
  11. 5.3 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விலை போன `விண்வீழ்கல்‘ செவ்வாய்க் கோளைச் சேர்ந்த 24.5 கிலோகிராம் எடையுடைய அரிய விண்வீழ்கலொன்று 5.3 மில்லியன் அமெரிக்க டொலருக்கு Sotheby’s நிறுவனம் நடத்திய ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஏலம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்துள்ளது எனவும், அதில் நிகழ்நிலை மூலமாக பலர் பங்கேற்றிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘NWA 16788’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த விண்வீழ்கல்லானது 2023ஆம் ஆண்டு சஹாரா பாலைவனத்தில் உள்ள நைஜர் நாட்டின் அகாடெஸ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் குறித்த விண்வீழ் செவ்வாய்க் கோளிலிருந்து பிரிந்த மிகப்பெரிய துண்டு என்றும் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து Sotheby’s நிறுவனத்தின் துணைத்தலைவர் கெசேண்ட்ரா ஹெட்டன் கருத்துத் தெரிவிக்கையில் ” இந்த அரிய விண்வீழ்கல் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது எனவும், அது பெருங்கடலுக்குப் பதிலாக பாலைவனத்தில் விழுந்தது மிகப் பெரிய அதிசயம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439682
  12. பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதில் மாற்றம்! பிரித்தானியாவில் 2029 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்களிக்கும் வயதை 18லிருந்து 16 ஆகக் குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சி ஜூலை 2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, வாக்களிக்கும் வயது குறைக்கப்படும் என உறுதியளித்தது. இந்நிலையில், வாக்களிப்பதற்கான வயது வரம்பை 16 ஆக குறைத்து நாடு முழுதும் அமுல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் 16 வயது பூர்த்தியடைபவர்களின் பெயர் தானாகவே வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsபிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதில் மாற்றம்!பிரித்தானியாவில் 2029 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்களிக்கும் வயதை 18லிருந்து 16 ஆகக் குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் பிரத...
  13. இலங்கையர்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை! ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, மாநியங்கள் அல்லது உதவிகளை வழங்குவதாக கூறி, தனி நபர்களிடமிருந்து பண மோசடி செய்யும் நபர் தொடர்பில் இலங்கை மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள உத்தியோப்பூர்வ அறிவிப்பில், சம்பந்தப்பட்ட நபர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, குறிப்பாக இளம் தொழில்முனைவோருக்கு மானியங்கள் அல்லது நிதி வழங்குவதாகக் கூறுவது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த நபர் பொய்யான வாக்குறுதிகளின் பேரில் தனிநபர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு பின்னர் காணாமல் போவதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு மோசடி என்பதை நினைவில் கொள்ளவும்! அனைத்து ஐரோப்பிய ஒன்றிய மானியங்களும் ஒப்பந்தங்களும் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தேர்வு செயல்முறைகளைப் பின்பற்றி மாத்திரமே வழங்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத் தேர்வு மற்றும் விருது நடைமுறைகள் முகவர்கள் போன்ற மூன்றாம் தரப்பினரின் சேவைகளை நிதியுதவியை எளிதாக்க ஒருபோதும் அனுமதிக்காது. மேலும், சமர்ப்பிக்கப்பட்ட மானிய முன்மொழிவுகள் அல்லது கொள்முதல் டெண்டர்களைச் செயல்படுத்த தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து எந்தப் பணத்தையும் ஒருபோதும் கோராது. இதுபோன்ற மோசடிச் செயல்பாட்டை நீங்கள் சந்தித்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு அளிக்குமாறு வலியுறுத்துகிறோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. https://athavannews.com/2025/1439610
  14. தையிட்டி விகாரைக்கு அருகே மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம்? தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகே மேலுமொரு சட்ட விரோதக் கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்திலேயே குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் தவிசாளர் தலைமையில் சில உறுப்பினர்கள் தையிட்டி விகாரைக்கு சென்று விகாரை வளாகத்திற்குள் சென்று பார்வையிட்டதாகவும், அங்கு கட்டடம் ஒன்று அமைப்பதற்கான அத்திவார கிடங்கு ஒன்று காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விகாரை வளாகத்தினுள் புதிய கட்டடம் அமைப்பதற்கு விகாரதிபதியினால் சபையில் அனுமதி கோரப்படாத நிலையில், புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா எனும் சந்தேகம் அங்கு சென்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில், புதிய கட்டடங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா ? என்பது தொடர்பில் விகாரதிபதியிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்தார். https://athavannews.com/2025/1439624
  15. கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிய சிறுவன்! கொழும்பு, கஹதுடுவ பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவன் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சிறுவன், இரத்தினபுரியில் வைத்து வாகனத்திலிருந்து குதித்து தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி, கெடன்தொல, புதிய பெலன்வாடிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில், கடத்தப்பட்ட சிறுவன் ஒருவன் இருப்பதாக 119 பொலிஸ் அவசரப் பிரிவுக்கு ஒருவர் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரத்தினபுரி பொலிஸின் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பிலியந்தலையில் உள்ள தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் குறித்த சிறுவன், பிரத்தியேக வகுப்பில் கலந்து கொள்வதற்காக தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, கஹத்துடுவ மயானத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வேனில் வந்த குழுவினரால் சைக்கிளுடன் கடத்தப்பட்டதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந் நிலையில், சிறுவனை கடத்திய குழுவை அடையாளம் காண பொலிஸார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://athavannews.com/2025/1439607
  16. தாதியர்களின் ஒய்வு வயது விவகாரம் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! அரசாங்க சேவையில் உள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் முடிவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று (17) ரத்து செய்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீண்டும் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மற்றொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு சட்டத்திற்கு முரணானது என்றும், அது செல்லாதது என்றும் கூறி, சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த பின்னர், உயர் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439594
  17. ட்ரம்பின் உடல் நிலை குறித்த வெள்ளை மாளிகையின் அறிவிப்பு! அமெரிக்க ஜனாதிபதி ‍டெனால்ட் ட்ரம்புக்கு நாள்பட்ட சிரை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (17) தெரிவித்துள்ளது. ட்ரம்பின் கைகளில் ஏற்பட்ட காயம் குறித்த ஊகங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அண்மையில் அவரது கால்களில் வீக்கம் ஏற்பட்ட பின்னர் ட்ரம்ப், விரிவான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார். எனினும், பரிசோதனை எப்போது நடந்தது என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. இந்த மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 79 வயதான அமெரிக்க ஜனாதிபதி, தனது உடல் நல ஆரோக்கியம் தொடர்பில் அடிக்கடி புகழ்ந்து வருகிறார். அதில் ஒன்றாக அவர், தன்னை “இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் ஆரோக்கியமான ஜனாதிபதி” என்றும் விவரித்துள்ளார். நாள்பட்ட சிரை நோய் என்பது கால்களில் உள்ள நரம்புகளில் ஏற்படும் ஒரு நிலை, இதில் நரம்புகள் வீங்கி, முறுக்கியும், விரிவாக்கப்பட்டும் காணப்படும். இது சிரை அடைப்பான் பலவீனமாக இருப்பதன் காரணமாக இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதால் ஏற்படுகிறது. இதன் விளைவாக கால்களில் வலி, வீக்கம், மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இந் நிலைமை உலகளவில் 20 இல் ஒருவரை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1439616
  18. மாணவிக்கும், மாணவனுக்கும் உள்ள வித்தியாசம். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.