Everything posted by தமிழ் சிறி
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்! குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் முன்நிலைப்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444292
-
நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது!- ஆனந்த விஜேபால சபையில் தெரிவிப்பு!
இதை நம்பாதவன்... இரத்தம் கக்கி சாவான். 😂 🤣
-
பாதுகாப்புப்படையினரின் அத்துமீறல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை
பாதுகாப்புப்படையினரின் அத்துமீறல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது தொடர்ச்சியான அத்துமீறல்கள் பாதுகாப்புப்படையினரால் மேற்கொள்ளப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக வடக்கில் இனங்காணப்பட்டுள்ள, மனிதப்புதைகுழிகள் தொடர்பாக, நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை இலங்கைக்கு வழங்கவேண்டுமென சர்வதேச நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் தேர்தல்காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை மீறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னரான, கடந்த ஒரு வருடகாலத்தில் முறையற்ற விதத்தில் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் நீதிக்கான சாத்தியப்பாடுகள் இன்னமும் பின்னடைவான நிலையிலேயே உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் குறிப்பிட்டுள்ளது, கடந்த சில தசாப்தகாலங்களில் இலங்கையில் சுமார் 20 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் செறிந்துவாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழும் இந்த அச்சுறுத்தல்கள், குறையவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. https://athavannews.com/2025/1444285
-
நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது!- ஆனந்த விஜேபால சபையில் தெரிவிப்பு!
நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது!- ஆனந்த விஜேபால சபையில் தெரிவிப்பு! நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் என அனைவருக்கும் சட்டம் சமமானது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”” குற்றம் செய்திருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம். சட்டத்தை அமல்படுத்துவது அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றல்ல. குற்றம் நிகழும்போது, பாதிக்கப்பட்டவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். அதுதான் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நோக்கம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1444246
-
பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்
பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும் – அமைச்சர் விஜித ஹேரத். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இரத்து செய்யப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார். இது குறித்து மேலும் உரையாற்றிய அவர், அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட குறுகிய காலத்திற்குள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை நாங்கள் நியமித்தோம். இந்தக் குழு பலமுறை கூடி, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களைச் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தொடர்புடைய திருத்தங்கள் தொடர்பான பணிகள் நிறைவடையும். அதைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பது குறித்த வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பயங்கரவாத தடைச் சட்டம் அடுத்த மாதம் இரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். https://athavannews.com/2025/1444219
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, இலங்கை வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளது. அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு அவர் ஜனாதிபதியாக பணியாற்றியபோது மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுடன் தொடர்புடையது. குற்றப் புலனாய்வுப் பிரிவில் இந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கிய பின்னரே 76 வயதான முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி மக்கள் எழுச்சியைத் தூண்டிய வேளையில் அவரது முன்னோடி கோத்தபய ராஜபக்ஷ தப்பி ஓடி, பதவி விலகி தொடர்ந்து 2022 முதல் 2024 வரை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பணியாற்றினார். வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை மீண்டும் பொருளாதார மீட்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவியதற்காக அவர் பரவலாகப் பாராட்டப்பட்டார். 1990 ஆம் ஆண்டு முதல் ஆறு தனித்தனி சந்தர்ப்பங்களில் அவர் பிரதமராகப் பணியாற்றினார். ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 23 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான செலவு 600 மில்லியன் ரூபாவுக்கும் ($2 மில்லியன்; £1.4 மில்லியன்) அதிகம் என மதிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட கைது, 2023 ஆம் ஆண்டு கியூபாவில் நடந்த G77 உச்சிமாநாட்டிலிருந்து ரணில் விக்ரமசிங்க திரும்பி வரும் வழியில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தனி நிகழ்வுடன் தொடர்புடையது என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில், அவரும் அவரது மனைவியும் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிஐடியின் தகவலின்படி, லண்டன் பயணத்தினால் அரசாங்கத்திற்கு சுமார் ரூ. 16.9 மில்லியன் செலவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரை புலனாய்வாளர்கள் விசாரித்திருந்தனர். எவ்வாறெனினும், ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, இலங்கை வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளது. https://athavannews.com/2025/1444228
-
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்பு!
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக, 30 துப்பாக்கிகள் மீட்பு! யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசல குழி வெட்டுவதற்காக முற்பட்ட வேளை சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவதை அடுத்து பொலிசார் ஊடாக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனை அடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ ஏ ஆனந்தராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின்போது 30 ரி 56 ரக துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தும் ஐயாயிரம் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த ஆயுத மீட்பு தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1444233
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா! வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் ஆலய தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. அத்தோடு நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடைகின்றன. நாளைய தினம் சனிக்கிழமை மாலை முருகப் பெருமானின் திருக்கல்யாணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444272
-
கச்சதீவினை மீட்டு தருமாறும் பிரதமர் மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கோரிக்கை!
கச்சதீவினை மீட்டு தருமாறும் பிரதமர் மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கோரிக்கை! இலங்கைக்கு தாரைவார்க்கப்படடுள்ள கச்சதீவினை மீட்டு தருமாறும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கோரிக்கை முன்வைத்துள்ளார். தமிழ் நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று இடம்பெற்றிருந்தது. குறித்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டிருந்தனர். நேற்றைய மாநாட்டில் விஜய் பலதரப்பட்ட அரசியல் கருத்துக்கள் தெரிவித்து இருந்த நிலையில், இலங்கை தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்திருந்தார். குறிப்பாக இந்திய கடற்றொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுவதாகவும் எனவே இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டு தருமாறும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விடயம் தற்போது இலங்கையில் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444182
-
தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றினால் நகரங்கள் என்ன ஆகும்?
தெருநாய்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய தீர்ப்பை மாற்றியமைத்த இந்திய உயர் நீதிமன்றம்! தெருநாய்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆகஸ்ட் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இந்திய உயர் நீதிமன்றம் இன்று (22) மாற்றியமைத்தது. அதன்படி, தடுப்பூசி மற்றும் கருத்தடைக்குப் பின்னர் தெருநாய்களை அதே இடங்களுக்கு மீண்டும் விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அனைத்து மாநிலங்கள் மற்றும் நகராட்சி பிரதேசங்களுக்கும் பொருந்தும் வகையில், இந்தியா முழுவதும் இந்த விடயத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளதாகவும் கூறியது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவு ரேபிஸ் (விசர்) நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்குப் பொருந்தாது என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதேநேரம், நாய்களுக்கு பொதுவில் உணவளிக்க அனுமதிக்கப்படாது என்றும், தெருநாய்களுக்கு உணவளிக்க பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரத்யேக இடத்தை உருவாக்க நகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டது. டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம் முழுவதும் உள்ள வீதிகள் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்றுமாறு கடந்த ஆகஸ்ட் 11 அன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்தது. ஆகஸ்ட் 11 அன்று உயர் நீதிமன்றம், தெருநாய்களை கருத்தடை செய்த பின்னர் அவற்றின் வாழ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவரக்கூடாது என்று குறிப்பாக உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவுக்கு எதிரான சீற்றத்திற்கு மத்தியில், ஆகஸ்ட் 14 அன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவை ஒத்திவைத்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444193
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!
திறமையான படப்பிடிப்பாளர் Ingaran Sivashanthan .👍 படப்பிடிப்பு: Ingaran Sivashanthan
-
கருத்து படங்கள்
- மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை!
மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை! யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாறறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,” எமது அமைச்சின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாவட்டத்துக்கென ஒரு துறைமுகமொன்று இருக்கவில்லை. எனவே, மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அதற்குரிய வேலைத்திட்டம் ஆரம்பமாகும். அத்துடன், 165 மில்லியன் ரூபா செலவில் யாழ். கொழும்புத் துறையிலுள்ள துறைமுகத்தையும் நவீன துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நல்லதொரு துறைமுகம் இல்லாத குறைப்பாடு காணப்படுகின்றது. வாழைச்சேனை துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். ஏனெனில் ஒலுவில் துறைமுகம் இன்று செயல் இழந்து காணப்படுகின்றது. விஞ்ஞானப்பூர்வமான ஆய்வின்றி கட்ட வேண்டும் என்பதற்காகவே குறித்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழைச்சேனை துறைமுகத்தை நோக்கியே மீனவர்கள் படையெடுத்து வருகின்றனர். எனவே, வாழைச்சேனை துறைமுகத்தை மேலும் விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கை அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும். இதற்காக 1, 700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார், பேசாலையில் இறங்குத்துறையை அமைப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேசாலையில் வாழும் மக்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் குறைப்பாடுகளை தீர்த்து, பேசாலையிலும் துறைமுகமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். யாழ். குருநகர் பகுதியில் இறங்குத்துறைமுகமொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது. இப்பணி முடிந்த பின்னர் நிதி ஒதுக்கப்படும்” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1444114- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!
📌👉சனங்களை திரட்டுவதில் யாழ்ப்பாணத்தில் நல்லூரான்தான் அரசன். ❤️🙏🙏🙏🌹🙏🙏🙏❤️- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!
- கைதான தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றுக்கு
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் 27ம் திகதி வரை விளக்கமறியலில். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையின் அவரை ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (20) மிரிஹானவில் உள்ள அவரது பிரத்தயேக இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதால் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன் பினை மனுவை சமர்ப்பித்திருந்த நிலையில், அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1444094- பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுவது ஏன்?
அமித்ஷாவினால் தாக்கல் செய்யப்பட்ட பதவி பறிப்புச் சட்ட மூலம்- சீமான் ஆதரவு! இந்தியாவில் குற்றவழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் பதவியை பறிக்க வழிவகை செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவினால் குறித்த சட்ட மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த புதிய சட்ட மூலத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்” மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவதே சிறந்த முடிவு. அப்போதுதான் நாடு சிறப்பாக செயற்பட முடியும் . நாட்டிற்கு இதுபோன்ற பல்வேறு மாறுதல்கள் மற்றும் சீர்திருத்தங்கள் அவசியமாகும்“ எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் மாநாடு நடைபெறும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். https://athavannews.com/2025/1444089- ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்!
கல்முனையில்.... பூட்டிய கடைகளுடன் இணையத்தில் வந்த படத்தை நான் பார்த்து, சிலவேளை சாணக்கியன் சொன்ன படியால்... வியாபாரிகள் ஹர்த்தாலை முழுமையாக கடைப் பிடிக்கின்றார்கள் என நினைத்தேன். நீங்கள் கூறியதை பார்த்த பின்புதான் தெரிந்தது காலி ஏழு மணிக்கு எடுத்த சுத்துமாத்து படங்கள் அவை என்று. சுமந்திரன் எப்பவும் சுத்துமாத்து செய்து கொண்டே இருந்தால்... மக்களும் பொறுமையின் எல்லை தாண்டி, செமையாக வாங்கிக் கட்டுவார் என்பது நிச்சயம்.- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!
நல்லூரானின் தேருக்கு அகவை 61 நல்லூர்க் கந்தசுவாமியார் இன்று ஏறிவந்த தேரின் வரலாறு! நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குப் புதிய தேர் ஒன்று செய்து முடிக்கவேண்டுமென்ற ஆவல் காலஞ்சென்ற அறங் காவலர் அவர்கள் மனதிற் குடிகொண்டது. புதிய தேர் உருவத்திலும் அமைப்பிலும் பழையதேரை ஒத்ததாயிருக்க வேண்டும் என்பது அறங்காவலரின் ஆசையாகும். இத்தகைய சித்திரத் தேரை அமைத்தற்குப் பல்லாற்றானும் திறமை வாய்ந்த சிற்பாச்சாரி திருவிடை மருதூர், இரா.கோவிந்தராஜா ஆச்சாரியரே என உணர்ந்த அறங்காவலர் அவர்கள் அதனை உருவாக்கும் பொறுப்பினை அவர்களிடமே ஒப்படைத்தார்கள். தேர்த் திருப்பணியும் நன்னாளில் ஆரம்ப மாயிற்று. திரு.இரா.கோவிந்தராஜா ஆச்சாரியவர்கள் தமக்கு உதவி புரிய நான்கு உதவியாளரை இந்தியாவிலிருந்தே கூட்டிக் கொண்டு வந்தார்கள். இவர்களுக்கு உள்ளூர்த் தொழிலாளர்களும் உதவி புரிந்தனர். ஒரு வருடத்துக்குள் புதிய தேர் உருவாயிற்று. புதிய சித்திரத் தேரினை ஒரு வருடத்துக்குள் உருவாக்கி வெள்ளோட்டத்தையும் நிறைவேற்றுவதில் கண்ணுங் கருத்து மாக இருந்தார் அறங்காவலர் குகஸ்ரீ ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள். இவருக்குப் பின்னணியில் நின்று தேரின் உறுப்புக்கள் உருவாக்கப்படும்போதும் வர்ணங்கள் பூசப்படும் போதும் ஆலோசனை கூறி நேரடியாகக் கண்காணித்து வந்தவர் அறங்காவலரின் அருமைச் சகோதரர் குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள். புதிய தேர் உருவாகுவதற்குத் தேவையான மரங்களை வவுனியாக் காட்டிலிருந்து தெரிந்தெடுத்து நல்லூருக்குக் கொண்டு வருவதில் வவுனியா முன்னால் உருவாகுவதற்குத் எம்.பி.திரு.செ. சுந்தரலிங்கம் அவர்கள் பேருதவி புரிந்தார்கள். அறங்காவலர் விடுத்த வேண்டுகோட் கிணங்கி முருக பக்தர்கள் மனமுவந்து தாராளமாகப் பண உதவி புரிந்தார்கள். ஆகவே அறங்காவலர், சிற்பாச்சாரியர், அன்பர் யாவரும் பக்தியுடன் இத்திருப்பணியில் ஈடுபட்டதன் பயனாகப் புதிய தேர் உருவாயிற்று. 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆந் திகதி புதிய தேரின் வெள்ளோட்டம் வெற்றியாக நிறைவேறியதைக் கண்டு அறங்காவலர் அவர்கள் அளப்பரும் மகிழ்ச்சியடைந்தார்கள். நல்லூர்க் கந்தனின் திருப்பணி அவன் அருளால் நிறைவேறியது கண்டு அவன் பொன்னார் திருவடிகளைத் திரிகரண சுத்தியுடன் தொழுதார்கள். தமது உள்ளத்தில் மேலிட்டு நின்ற ஆசை நிறைவேறியது கண்டு முருகனைத் தொழுது அதனை உருவாக்கிய சிற்பாச்சாரியருக்கும் உதவியாளருக்கும் சன்மானம் வழங்கி நிதி உதவிபுரிந்த அன்பர்களுக்கும் தம் நன்றியைச் செலுத்தினார்கள். இத்தேர் உருவாகுவதற்கு ஏறக்குறைய ஒன்றேகால் லட்சம் ரூபா பிடித்திருக்கும் எனக் கூறலாம். 1964ஆம் ஆண்டு ஆவணி மாதம் தேர்த்திருவிழாவிலன்று நல்லூர்க் கந்தன், இப்புதிய சித்திரத் தேரில் ஆரோகணித்துப் பவனிவந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தருளினார். ஆதாரம் - இலங்கையின் புராதன சைவாலயங்கள் நல்லூர் கந்தசுவாமி குல. சபாநாதன் குமரன் புத்தக இல்லம். Babu Babugi- கருத்து படங்கள்
- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா! வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான, இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர். ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும், சிதறு தேங்காய் உடைத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. இன்று தேர் திருவிழா இடம்பெற்றதுடன் நாளைய தினம் காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443995- பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு!
பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு! தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டு ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த மூன்று தமிழ் இளைஞர்களைக் கைது செய்ய, பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. ஜூலை 21 ஆம் திகதி கிரிபத்கொடையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு இளைஞர் ஒருவர் T-56 ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர்கள் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தமை அம்பலமானது. அத்துடன் குறித்த தாக்குதலை மேற்கொள்வதற்கு வவுனியாவில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டுகளையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். குறித்த கைக்குண்டுகளை கொழும்புக்கு கொண்டு அவர்கள் வரத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கைக்குண்டுகளை மறைத்து வைத்திருந்த மூவரின் தகவல்களையும் புலனாய்வு பிரிவு தற்போது வெளிப்படுத்தியுள்ளது. குறித்த மூவர் பற்றிய தகவல் தெரிந்தால் 0718591966 அல்லது 0718596150 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொண்டு புலனாய்வு பிரிவுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சந்தேக நபர்கள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு சந்தேக நபர்களின் விவரங்கள் ஜீவராசா சுஜீபன் (30 வயது) முகவரி – காந்தி நகர், நேரியக்குளம், வவுனியா, N.A. இலக்கம் – 950554215V இளங்கோ இசைவிதன் (வயது – 27) முகவரி – எண். 379, பிளாக் 03, மானிக் பண்ணை, செட்டிகுளம், N.H. இலக்கம் – 199836210402 மகேந்திரன் யோகராசா (வயது – 27) முகவரி – அராலி மேற்கு, வடுக்கோட்டை NIC இலக்கம் – 981633881V தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் OIC – பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு – 071-8591966 OIC புலனாய்வுப் பிரிவு 071-8596150 https://athavannews.com/2025/1444048- தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?
தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..? தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. மாநாட்டு மேடையின் உச்சியில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது‘ என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்.இ விஜய் படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. தொண்டர்களை நடந்து சென்று விஜய் பார்க்கும் வகையில்,சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ‘ரேம்ப் வாக்’ நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. அதன் இருபுறமும், 40-க்கும் மேற்பட்ட போக்கஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. விஜய் மேடையில் நடந்து வரும் போது, முதல் அடுக்கில் பவுன்சர்கள்,2-வது அடுக்கில் பொலிஸார் என இரண்டடுக்கு பாதுகாப்பு ஏற்பாடும் தயார் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ……. இந்நிலையில் இன்று காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளனர். வெளியூர்களிலிருந்து வருகை தந்த தொண்டர்கள், தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொதிகள் போன்றவற்றைத் தாங்களே கொண்டு வந்துள்ளனர். மாநாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. வாகன நிறுத்தும் இடங்கள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, சுகாதார வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொண்டர்கள் அமர்வதற்கு 60 பகுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பகுதிகளிலும் சுமார் 2,500 பேர் அமரும் வசதி உருவாக்கப்பட்டு உள்ளது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க ராட்சத குடிநீர் தொட்டிகள் மாநாடு பந்தலை சுற்றிலும் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று மாநாட்டுக்கு வரும் வழி நெடுகிலும் ஆங்காங்கே உணவுப் பொதிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மாநாட்டில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 3 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவெக சார்பில் 2 ஆயிரம் தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 300 பெண் பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களுக்கான மருத்துவ மாணவர்கள் தற்போது வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …. இந்நிலையில் இந்த மாபெரும் மாநாட்டில் தன் மீதான விமர்சனங்கள் உள்ளிட்டவற்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் பேச்சு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் எந்த ஒரு அரசியல் கட்சி மாநாடும் இதுவரை நடந்திராத வகையில் நாடே திரும்பி பார்க்கும் மாநாடாக இந்த மாநாடு இருக்கும் என்று தவெகவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443978- காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு!
காசா மீதான தாக்குதலில் முதல் கட்டங்களை ஆரம்பித்த இஸ்ரேல்! காசா நகரம் முழுவதையும் கைப்பற்றி ஆக்கிரமிக்க திட்டமிட்ட தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை இஸ்ரேலிய இராணுவம் தொடங்கியுள்ளதாகவும், அதன் புறநகர்ப் பகுதிகளில் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறுகிறது. தாக்குதலுக்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ஜெய்டவுன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் படைகள் ஏற்கனவே செயல்பட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். இதற்கு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாயன்று (20) ஒப்புதல் அளித்தார். குறித்த ஒப்புதல் இந்த வார இறுதியில் பாதுகாப்பு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் 60,000 ரிசர்வ் படையினர் இந்த நடவடிக்கைக்காக பணியில் உள்ள வீரர்களை விடுவிப்பதற்காக அழைக்கப்படுவார்கள். இதனிடையே, இஸ்ரேலின் ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படுவதால், காசா நகரில் உள்ள இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேறி தெற்கு காசாவில் உள்ள தங்குமிடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலின் பல நட்பு நாடுகள் அதன் திட்டத்தைக் கண்டித்துள்ளன. இதற்கிடையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) மேலும் இடம்பெயர்வு மற்றும் விரோதப் போக்கு தீவிரமடைதல் காசாவின் 2.1 மில்லியன் மக்களுக்கு “ஏற்கனவே பேரழிவு தரும் சூழ்நிலையை மோசமாக்கும்” என்று கூறியது. கடந்த மாதம் ஹமாஸுடனான போர் நிறுத்தம், பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் குறித்து மறைமுகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசாங்கம் முழு காசா பகுதியையும் கைப்பற்றும் நோக்கத்தை அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443970- முடியிலிருந்து தயாரிக்கப்படும் பற்பசை : உங்கள் பற்களை பாதுகாக்க உதவுமா?
ஏராளன்… ஏற்கெனவே, சருமத்திற்கு பூசுகின்ற கிறீம் வகைகள் சிலவற்றை தலைமுடியில் இருந்துதான் தயாரிக்கின்றார்களாம். திருப்பதி, பழனி போன்ற கோவில்களில்… பக்தர்கள் மொட்டை அடிக்கும் முடிகள் எல்லாம் தொன் கணக்கில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. சில சொக்லேட்டுக்களில் கூட முடி கலந்துதான் தயாரிப்பு வேலை நடக்கின்றதாம். - மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.