Everything posted by தமிழ் சிறி
-
நடிகை சரோஜா தேவி காலமானார்!
கன்னடத்து பைங்கிளி நடிகை சரோஜா தேவி காலமானார்... சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87. தமிழ் சினிமாவின் 69, 70 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகை சரோஜா தேவி. இன்றும் அவரது நடிப்பு பேசப்பட்டுதான் வருகின்றது. அந்த காலத்திலேயே எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற உச்சகட்ட நடிகர்களுடன் நடித்தவர் இவர். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்த சரோஜா தேவி, மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் என்றாலும் 1959 ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான கல்யாண பரிசு படத்தில் நடித்ததன் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். எம்ஜிஆர் உடன் அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் சரோஜாதேவி. எம்ஜிஆர் உடன் கிட்டத்தட்ட 26 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். அதைப்போல சிவாஜி கணேசன் உடன் 22 படங்களில் நடித்திருக்கிறார். பார்த்திபன்கனவு, அன்பேவா, ஆசைமுகம், ஆலையமணி , கல்யாணபரிசு, எங்கள் வீட்டுப்பிள்ளை என அடுத்தடுத்து சரோஜா தேவி நடித்த படங்கள் அனைத்தும் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தியில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் சரோஜா தேவி. அதிகளவு சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவர் சரோஜா தேவி. சரோஜா தேவிக்கு 1967ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியலாளர் ஸ்ரீ ஹர்ஷாவுடன் திருமணம் நடந்தது. ஆனால் ஸ்ரீஹர்ஷா 1986ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகும் பல படங்களில் நடித்து அசத்தி வந்தார் சரோஜா தேவி. ஆதவன் படத்தில் அவரது கதாபாத்திரம் பலரையும் வெகுவாக கவர்ந்தது. எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கனகச்சிதமாக பொருந்த கூடியவர் சரோஜா தேவி. மேலும் தனது திறமை மிக்க நடிப்பால் கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பவர். இந்த நிலையில் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://kalkionline.com/entertainment/cinema/actress-saroja-devi-passed-away-fans-shocked
-
கருத்து படங்கள்
- இலங்கை மீது அமெரிக்கா விதிக்கும் வரியில் தள்ளுபடி!
- பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம் நாளைமுதல் ஆரம்பம்!
பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம் நாளைமுதல் ஆரம்பம்! தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரத்தை நாளை (14) முதல் ஜூலை 18 வரை நடத்த இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. “பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த பிரமிட் திட்டங்கள் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, நாளை முதல் ஒரு வார காலத்திற்கு இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் நிதி நுகர்வோரின் நல்வாழ்வை மேம்படுத்தும் மத்திய வங்கியின் செயற்பாடுகளுக்கு அமைய, தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் மற்றும் அவை தனிநபர்களுக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க அபாயங்கள் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தேசிய நிகழ்ச்சியின் இலக்காகும். https://athavannews.com/2025/1438963- 2025 ஜூன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 600 மில்லியன் டொலரை கடந்துள்ளது!
உண்டியல் மூலம் அனுப்புகின்ற பணம் இந்தக் கணக்கில் வராது. 😂 வங்கி மூலம் அனுப்பினால்... வரும். 🙂- நடிகை சரோஜா தேவி காலமானார்!
நடிகை சரோஜா தேவி காலமானார்! நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக தனது 87 ஆவது வயதில் காலமானார். https://athavannews.com/2025/1439016- தன் உயிரை மாய்த்த மொடல் அழகி: மரணத்திற்கான காரணம் வெளியானது!
தன் உயிரை மாய்த்த மொடல் அழகி: மரணத்திற்கான காரணம் வெளியானது! கருப்பழகி பிரிவில் பட்டம் வென்ற புதுவை மாடல் அழகி சான்ரேச்சல் காதல் திருமணம் செய்த ஓராண்டில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான அவர் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்ற அழகி போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் மற்றும் விருதுகளை குவித்து தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அதுமட்டுமல்லாது புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு ‘மொடலிங்’ (பேஷன் ஷோ) பயிற்சி வகுப்புக்களையும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டனர். இதேவேளை சான்ரேச்சல் தனது திருமணத்திற்காகவும், பேஷன் ஷோ நடத்துவதற்காகவும் பலரிடம் லட்ச்சக்கணக்கில் கடன் பெற்றிருந்ததாகவும் இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன் வீட்டில் இருந்த சான்ரேச்சல் தனது தந்தைக்கு அழைப்பினை ஏற்படுத்தி தான் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை மற்றும் ரத்த அழுத்த (பி.பி.) மாத்திரைகளை தின்று விட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை மகளது வீட்டுக்கு விரைந்து சென்று அங்கு மயங்கிக் கிடந்த மகள் சான்ரேச்சலை மீட்டு புதுச்சேரி அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சான்ரேச்சல் பரிதாபமாக உயிரிழந்தார். இதேவேளை சான்ரேச்சல் இறப்பதற்கு முன்னர் தனது கணவர், தந்தை மற்றும் மாமியார் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியிருந்தார். அக் கடிதங்களில் ‘தான் தனது குடும்பத்திற்கு தெரியாமல் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளதாகவும், அக் கடனை தன்னால் திரும்ப செலுத்த முடியவில்லை எனவும், தனது உறவினர்கள் உதவுவார்கள் என்று எண்ணியதாகவும், ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை எனவும், தற்கொலைக்கு தன்னை அனைவரும் மன்னித்து விடவேண்டும் எனவும் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளார். சான்ரேச்சல் கடன் தொல்லையால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் எனவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் கூறுகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1439001- இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!
இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்! இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவசர இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து கவலை தெரிவித்தார். ஜூலை 13 ஆம் திகதி அதிகாலையில், ஏழு மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டினார். மேலும், தற்போது, 232 தமிழக மீன்பிடி படகுகளும் 50 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் உணர்ச்சி ரீதியான கஷ்டங்களை மேலும் அதிகரிக்கிறது என்றும் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1438998- உக்ரேனுக்கு சக்திவாய்ந்த ஏவுகணைகளை வழங்குவதாக ட்ரம்ப் அறிவிப்பு!
உக்ரேனுக்கு சக்திவாய்ந்த ஏவுகணைகளை வழங்குவதாக ட்ரம்ப் அறிவிப்பு! ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராட உக்ரேனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அனுப்பும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தார். வொஷிங்டன் டிசிக்கு வெளியே உள்ள கூட்டுத் தளமான ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், உக்ரேனுக்கு எத்தனை அமைப்புகள் அனுப்பப்படும் என்பதைக் குறிப்பிடவில்லை. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மொஸ்கோவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு முன்பு அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக ட்ரம்ப் உறுதியளித்திருந்தார். ஆனால்,போரை முடிவுக்குக் கொண்டுவர அல்லது போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள புட்டினை சமாதானப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள் இதுவரை தோல்வியடைந்துள்ளன. இதனிடையே, உக்ரேன் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ட்ரம்ப் திங்களன்று (14) நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவைச் சந்திக்க உள்ளார். கடந்த வாரம், அமெரிக்கத் தலைவர் NBC செய்திக்கு அளித்த செவ்வியின் போது, ரஷ்யா குறித்து “ஒரு முக்கிய அறிக்கையை” திங்களன்று வெளியிடுவதாகக் குறிப்பிட்டார். ஆனால் அது தொடர்பான மேலதிக விவரங்களை வழங்கவில்லை. பேட்ரியாட் உலகின் மிகவும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும். மேலும் விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டது. https://athavannews.com/2025/1439010- அமெரிக்காவுடன், மீண்டும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் ஈரான் தயார்!
அமெரிக்காவுடன், மீண்டும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் ஈரான் தயார்! அமெரிக்காவுடன், மீண்டும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயார் என, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி தெரிவித்தார். அணுசக்தி பயன்பாடு தொடர்பில், அமெரிக்காவுடன், ஈரான் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததுடன் யுரேனியம் செறிவூட்டலை 4 சதவீதத்திற்குள் குறைக்க அமெரிக்கா வலியுறுத்தியது. காரணம், யுரேனியத்தை 90 சதவீதத்திற்கு மேல் செறிவூட்டினால், அதை அணு ஆயுதமாக மாற்ற முடியும். இதற்கிடையே, அமெரிக்காவின் திட்டத்தை ஈரான் நிராகரித்தது. அதைத் தொடர்ந்தே, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலை ஈரான் எதிர்கொண்டது. இந்நிலையில், “எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என உறுதியளித்தால், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு நடத்தத் தயார்” என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1438972- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட்டம்! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மே, அவரது காதலி மற்றும் கமாண்டோ ஆகியோர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கெஹல்பத்தர பத்மே, உள்ளிட்ட மூவரும் கடந் 9ஆம் திகதி மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சித்த போது, மலேசியா பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பின்னர், இலங்கை பொலிஸாரும் இந்த செய்தியை உறுதிப்படுத்திய நிலையில், பின்னர் அவர்களை அழைத்து வர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவை அந்த நாட்டிற்கும், மற்றொரு அதிகாரிகள் குழுவை தாய்லாந்திற்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் அவர்களை அழைத்து வரச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நாளை(14) நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1438969- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இளையராஜா குடும்பத்தில் நான் மருமகளாக செல்ல வேண்டியவள்.... -வனிதா விஜயகுமார்.-- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்ஸிக்கோவிற்கு 30 % வரி! ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு!
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்ஸிக்கோவிற்கு 30 % வரி! ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு! மெக்ஸிக்கோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பரஸ்பர வரிவிதிப்பு என்ற பெயரில் பல்வேறு நாடுகளுக்கு வரி விதித்து வருகிறார். இந்த நிலையில் எதிர்வரும் ஒகஸ்ட் 1ம் திகதி முதல் மெக்ஸிக்கோ, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் நேற்று (12) அறிவித்துள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு(Ursula von der Leyen) எழுதிய கடிதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தொடர்ச்சியான வர்த்தக பற்றாக்குறைகள் விரக்தியை ஏற்படுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438958- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பேரம் பேசும் கண்களுக்கு தெரிவதில்லை, அதற்குப் பின்னால் உள்ள வலி.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கலாம் வாங்க
- நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் - தமிழ், தெலுங்கு திரையுலகில் சாதித்தது என்ன?
ஆழ்ந்த அனுதாபங்கள்.- நெடுந்தீவுக் கடலில் விபத்து - 15 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு
தீவு பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்! அமைச்சர் சந்திரசேகர்! யாழ்ப்பாணத்தில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அத்துடன், கடல்போக்குவரத்து சேவை வழங்கும் படகுகளின் தரம் மற்றும் முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியன தொடர்பில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுமாறு பொலிஸ் மற்றும் கடற்படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுலாப்பயணிகளை ஏற்றும் சிறிய ரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் பயணிகள் 12 பேர் 02 பணியாளர்கள் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை சேதமடைந்த படகில் இருந்த பயணிகளை விரைந்து மீட்ட பணியாளர்களுக்கும் கடற்படையினருக்கு தனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும், கடல் பயணத்தின்போது பின்பற்ற வேண்டிய முன்பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதுடன் அவை முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438948- வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிப்பு!
வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிப்பு! நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. நயினாதீவு மாவட்ட வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று (12) காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தில் , ஒரு மருந்தகம், ஒரு தடுப்பூசி அறை, ஒரு பல் சிகிச்சை பிரிவு, ஒரு தாதியர்களுக்கான அறை, E.C. ஆகியவை உள்ளடங்குகின்றன. மேலும், ஒரு தீவிர சிகிச்சை பிரிவு, ஒரு அறுவை சிகிச்சை பிரிவு, ஒரு முதன்மை பராமரிப்பு பிரிவு மற்றும் சுகாதார வசதிகளையும் கொண்டுள்ளது. சுகாதார அமைச்சராக தீபகற்பத்திற்கு இது தான் முதல் வருகை என்றும், நாடு முழுவதும் இதுபோன்ற பிராந்திய சுகாதார மையங்களை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தயாரிப்பதற்கான விரிவான திட்டம் கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மேலும், சுகாதார சேவை மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள சுகாதார சேவை வைத்தியர்களை மையமாகக் கொண்டது என்றும், மக்கள் மருத்துவ சேவைகளைப் பெற வெகுதூரம் செல்லப் பழகிவிட்டனர் என்றும், இந்த அணுகுமுறை யாழ்ப்பாண வைத்தியசாலையின் நோயாளிகளின் வருகைக்கு வழிவகுத்தது என்றும் கூறினார். இதுபோன்ற ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து சிறந்த தரமான சேவையை வழங்க முடியும் என்றும், இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க கடற்படை உழைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இதேவேளை, சிகிச்சை பெற வரும் மக்கள் வரிசையில் காத்திருக்காமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மக்களுக்குத் தேவையான சேவை என்றும் அமைச்சர் கூறினார். வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள் உள்ளன என்றும், எதிர்காலத்தில் புதிய செவிலியர்களை வழங்குவதன் மூலம் இந்த குறையை இல்லாது செய்ய நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இதேவேளை, புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடமானது ஜெர்மன் செஞ்சிலுவைச் சங்க வாரன்டோர்ஃப் கிளை (German Red Cross Warendorf Branch) மற்றும் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து போன்ற நாடுகளின் நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டதுடன் அதே நேரத்தில் இந்த கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு இலங்கை கடற்படை மற்றும் இராணுவம், யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் வடக்கு மாகாணம் தமது ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438940- கருத்து படங்கள்
- இலங்கை மீது அமெரிக்கா விதிக்கும் வரியில் தள்ளுபடி!
- வவுனியாவில் அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!
அகராதி: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (People's Liberation Organization of Tamil Eelam PLOT, புளொட்) என்பது முன்னாள் ஈழப் போராளி இயக்கங்களில் ஒன்றாகும். இது பின்னர் இலங்கை அரசுக்கு ஆதரவான துணை-இராணுவக் குழுவாக இயங்கியது. இவ்வியக்கம் தற்போது சனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியாக இயங்குகிறது.- செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.
செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன். அழகிய இலங்கைத் தீவு இந்து சமுத்திரத்தின் முத்து மட்டுமல்ல, காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகமுடய ஒரு தீவுந்தான்.இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் பெருமைக்குரிய சேமிப்பிடம் மட்டுமல்ல, உலகில் மனிதப் புதைகுழிகள் அதிகமுடைய ஒரு தீவுந்தான். சிங்கள மத்தியில் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான கலாநிதி ஜயலத் மற்றும் சுனிலா அபய சேகர போன்றவர்களின் வார்த்தைகளில் சொன்னால் அழகிய இலங்கைத் தீவு காணாமல் போனவர்களை மறக்க முற்படும் ஒரு தீவுந்தான். ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டத்தில் இருந்து தொடங்கி கடந்த 5 நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லிம்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் கொன்று புதைக்கப்பட்ட ஒரு தீவு.யாருக்குமே சரியான கணக்குத் தெரியாது.புத்த பகவானைத் தவிர. இதுவரை 23 புதை குழிகள் கிண்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆகப் பிந்தியதுதான் செம்மணி. செம்மணிக்கு ஓர் இனப் பரிமாணம் உண்டு. அதனால்தான் அது இப்பொழுது பேசு பொருளாக மாறியிருக்கிறது. மேலும் ஐ நா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வரும்பொழுது செம்மணி கிண்டப்பட்டமை என்பது மற்றொரு முக்கியத்துவம். அதனால் அதற்கு உலகப் பிரசித்தம் கிடைத்திருக்கிறது. மூன்றாவது, முக்கியமானது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. எனவே தமக்குரிய அரசியல் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் என்ற அடிப்படையில் செம்மணியை ஒரு விவகாரமாக மாற்ற வேண்டிய தேவை தமிழ்த் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலில் உண்டு. இதனால் செம்மணி விவகாரம் முதலாவதாக தமிழ் மக்களை தேசிய உணர்வோடு ஒருங்கிணைத்து வருகிறது.இரண்டாவதாக இனப்பிரச்சினை மீதான சர்வதேசக் கவனத்தை ஈர்த்து வருகிறது.அனைத்துலக ஊடகங்கள் அது தொடர்பாக செய்திகளை வெளியிடத் தொடக்கி விட்டன.புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் அதைப் பேசு பொருளாக்கியிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் செம்மணி அகழ்வுக்கு ஒரு கோடியே இருபது லட்ஷம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் தொடர்ந்தும் தேவையான நிதி வழங்கப்படுமா? அதோடு அணையா விளக்கு போராட்டமும் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகள் கேட்பதுபோல இந்த விடயத்தில் அனைத்துலக சமூகத்தின் மேற்பார்வையை;அனைத்துலக சமூகத்தின் நிபுணத்துவ உதவியை அரசாங்கம் பெற்றுக் கொள்ளுமா? குறிப்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையின் பின்னரான அரசியற் சூழலில் தேசிய மக்கள் சக்தி செம்மணி தொடர்பில் எப்படி நடந்து கொள்ளும்? முதலாவதாக அது,தேசிய மக்கள் சக்தியானது உண்மையை வெளியே கொண்டு வருவதில் எந்த அளவுக்கு உண்மையாக உழைக்கும் என்பதில் தங்கியிருக்கிறது. இரண்டாவதாக அது,அவ்வாறு வெளிக்கொண்டு வரப்படும் உண்மையானது தென்னிலங்கையில் இனவாதத்தை புதிய கட்டத்துக்கு உயிர்ப்பிக்குமா இல்லையா என்ற விடயத்திலும் தங்கியிருக்கிறது . முதலாவது விடயத்தை நான் ஏற்கனவே இப்பகுதியில் எழுதியிருக்கிறேன். தனது இரண்டு ஆயுதப் போராட்டங்களின் போதும் காணாமல் ஆக்கப்பட்ட தனது சொந்தத் தோழர்களுக்காக ஜேவிபி நீதி கேட்கவில்லை. ஆயிரக்கணக்கான இளையோர் அவ்வாறு கொல்லப்பட்டார்கள்; காணாமல் ஆக்கப்பட்டார்கள்.ஜேவிபி அவர்களுக்காக நீதி கேட்கவில்லை. ஏனென்றால் அவ்வாறு நீதி கேட்டால் எந்தப் படைத் தரப்பை அவர்கள் இறுதிக் கட்டப் போரில் யுத்த வெற்றி நாயகர்களாகக் கட்டியெழுப்பினார்களோ அதே படைத்தரப்பை அவர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டி வரும். அவ்வாறு செய்வதற்கு ஜேவிபி தயாரில்லை. நாட்டின் யுத்த வெற்றி நாயகர்களை யுத்தக் குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஜேவிபி தயாராக இருக்காது.அதனால்தான் கடந்த தசாப்தங்களில் கிண்டப்பட்ட மனிதப் புதைக்குழிகளின் விடயத்தில் ஜேவிபி உண்மையை வெளியே கொண்டு வரத் தேவையான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. உதாரணமாக கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு மாத்தளையில் ஒரு பெரிய மனிதப் புதை குழி கண்டுபிடிக்கப்பட்டது.அது கண்டுபிடிக்கப்பட்ட காலம் 2012. மாத்தளை பொது ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக நிலத்தை அகழ்ந்த பொழுது அங்கே எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன. அதைத்தொடர்ந்து அப்பிரதேசம் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் கிண்டப்பட்டது.அதன்போது மொத்தம் 158 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.அக்காலகட்டத்தில் அதற்கு எதிராக அனுரகுமார குரல் எழுப்பியதாக ஒரு ஞாபகம்.அது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகவும் வெளிவந்தது.ஆனால் அது ஒரு விவகாரமாகத் தொடர்ந்து பேசப்படவில்லை. கிண்டப்பட்ட புதை குழிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளியே கொண்டு வரப்படவில்லை. அவற்றை வெளியே கொண்டு வருவதற்காகப் போராட வேண்டிய ஜேவிபி உரிய தீவிரத்தோடு போராடவில்லை. அக்காலகட்டத்தில் மதிப்புக்குரிய மனித உரிமை ஆர்வலர் ஆகிய சுனிலா அபயசேகர, மாத்தளை புதை குழி தொடர்பாக “சண்டே டைம்ஸ்” பத்திரிகைக்கு ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அதில் அவர் கூறுகிறார்,”இதுவே லத்தீன் அமெரிக்க நாடாக இருந்தால் தம் உறவினர்களின் எச்சங்களைத் தேடி ஆயிரக்கணக்கில் மக்கள் குவிவார்கள். ஆனால் இலங்கையிலோ நிலைமை அவ்வாறு இல்லை.” என்ற பொருள்படக் கூறிக் கவலைப்பட்டிருந்தார்.அதற்குக் காரணம் என்ன? அந்தப் புதை குழிகளுக்குள் புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டு வருவதற்காகப் போராட வேண்டிய அமைப்பு அப்பொழுது போராடவில்லை என்பதுதான். இவ்வாறு கொன்று புதைக்கப்பட்ட தன் தோழர்களுக்காக;கொன்று எரிக்கப்பட்ட;கொன்று கடலில் வீசப்பட்ட தன் தோழர்களுக்காக, நீதி கேட்காத ஓரமைப்பு தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் என்று எப்படி எதிர்பார்ப்பது? இந்த விடயத்தில் ஜேவிபியை அடித்தளமாகக் கொண்டிருக்கும் என்பிபி இனவாதத்தின் பக்கம்தான் நிற்கும். இது முதலாவது. இரண்டாவது,செம்மணி விவகாரம் தென்னிலங்கையில் இனவாதிகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குமா இல்லையா என்பது. ஏற்கனவே நாம் பார்த்தபடி இனவாதத்தின் பக்கம் நிற்கும் என்பிபி தனது படை வீரர்களை காட்டி கொடுக்காது. அவர்களை விசாரணைக் கூண்டில் நிறுத்தாது.எனினும் ஒரு அரசாங்கம் என்ற அடிப்படையில் ஐநாவுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் பொறுப்புக்கூற வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காக,என்பிபி ஒரு தோற்றத்துக்காவது விசாரணைகளை முன்னெடுப்பது போல காட்டிக் கொள்ளும். ஆனால் அதற்கும் அடிப்படை வரையறைகள் இருக்கும். ஏற்கனவே கடந்த ஐநா கூட்டத் தொடரில் வெளியுறவு அமைச்சராகிய விஜித ஹேரத் அனைத்துலகப் பொறிமுறையை நிராகரித்திருக்கிறார். இந்நிலையில் அனைத்துலக உதவியை கேட்பது; ஐநாவின் மேற்பார்வை போன்ற விடயங்களுக்கெல்லாம் என்பிபி ஒத்துக்கொள்ளாது. மாறாக உள்நாட்டு நீதிபரிபாலனக் கட்டமைப்புக்கூடாக விவகாரங்களைக் கையாள முற்படக் கூடும். ஆனால் அங்கேயும் வரையறைகள் இருக்கும்.தமிழ் மக்களுக்கு நீதியாக நடந்து கொள்வதாகக் காட்டிக் கொள்ளப்போய், அதன் விளைவாக, தெற்கில் இனவாதிகளுக்கு புதிய எரிபொருளை வழங்க என்பிபி விரும்பாது. செம்மணி தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையோடு நடக்கும்போது வெளிவரக்கூடிய உண்மைகள் படைத்தரப்புக்குப் பாதகமாக மாறுமாக இருந்தால், தென்னிலங்கையில் இனவாதிகள் புதிய பலத்துடன் மேல் எழுவார்கள்.தமது யுத்த வெற்றி நாயகர்களை என்பிபி காட்டிக் கொடுக்கப் பாக்குறது என்று கூச்சலிடுவார்கள்.இது எதிர்காலத்தில் தனது தேர்தல் வெற்றிகளைப் பாதிக்கும் என்று என்பிபி பயப்படுமாக இருந்தால் செம்மணி தொடர்பான விசாரணைகள் ஒரு கட்டத்துக்கு மேல் நகராது. ஏற்கனவே யுத்த வெற்றி நாளைக் கொண்டாடும் பொழுது அதில் யுத்த வெற்றி நாயகர்களை விழிக்கும் பொழுது அனுர பயன்படுத்திய வார்த்தைகள் தொடர்பில் தென்னிலங்கையில் இனவாதிகள் மத்தியில் விமர்சனங்கள் உண்டு. இத்தகையதோர் பின்னணியில், படைத் தரப்பை விசாரணை செய்வதற்கு என்.பி.பி. முன்வராது. என்.பி.பி.க்கு கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது புரட்சிகரமான பெரும்பான்மை அல்லவென்று நான் அடிக்கடி இப்பகுதியில் எழுதியிருக்கிறேன்.அது பெருமளவுக்கு சிங்கள பௌத்த வாக்குகள்தான். இந்த அடிப்படையில் சிந்தித்தால்,தேசிய மக்கள் சக்தியானது சிங்கள பௌத்த மனோ நிலையின் கைதிதான்.எனவே அவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் செம்மணி அகழ்வாராச்சியை அனுமதிக்க மாட்டார்கள். அண்மையில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வந்த பொழுது, சிங்களம் மற்றும் ஆங்கில ஊடகங்கள் அதுதொடர்பாக பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்ற ஒரு தொகுக்கப்பட்ட பார்வை உண்டு. ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையையொட்டி விமல் வீரவன்ச வழமை போல இனவாதத்தைக் கக்கினார். ஆனால் அவரைவிட வேறு யாரும் அது தொடர்பாக பெரிய அளவில் கதைத்ததாகத் தெரியவில்லை. அதனை எப்படிப் பார்ப்பது? தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது முன்னய அரசாங்கங்களின் ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது. ஒரு தொகுதி முன்னாள் அரசியல் பிரதானிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தக் கைது நடவடிக்கைகளின் மீது தென்னிலங்கையில் உள்ள ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனம் அதிகமாகக் குவிக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணம் என்று சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் தனது இலங்கை விஜயத்தின் முடிவில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது உத்தியோகபூர்வ ஊடகச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் உள்நாட்டு விசாரணையை ஊக்குவிப்பவைகளாகக் காணப்படுகின்றன. அதுபோலவே அவருடைய வருகையின் பின்னணியில் இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஐநாவின் மீதான நம்பிக்கையை மேலும் குறைத்திருக்கின்றன.ஐநா உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைத்தான் அதிகம் ஊக்குவிப்பதாகத் தெரிகிறது. இது என்பிபி அரசாங்கத்துக்குச் சாதகமானது, என்றாலும் அந்த விசாரணைகளின் முடிவில் வெளிப்படும் உண்மைகள் யுத்த வெற்றி நாயகர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துமாக இருந்தால்,அதை என்பிபி அனுமதிக்காது. அதாவது இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதி பரிபாலனக் கட்டமைப்பின் விரிவைப் பரிசோதிக்கும் ஆகப் பிந்திய விவகாரமாக செம்மணி காணப்படுகிறது. https://athavannews.com/2025/1438904- வவுனியாவில் அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!
வவுனியாவில் அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அ. அமிர்தலிங்கத்தின் 36 ஆவது நினைவுதினம் கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் நூலகத்தில் இன்று இடம்பெற்றது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் வவுனியா மாநகரசபையின் முதல்வருமான சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் அ.அமிர்தலிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில், கழகத்தின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் க.சந்திரகுலசிங்கம் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நா.ரட்ணலிங்கம், தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட மத்தியகுழு உறுப்பினர் நா.சேனாதிராஜா மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1438928 - இலங்கை மீது அமெரிக்கா விதிக்கும் வரியில் தள்ளுபடி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.