Everything posted by தமிழ் சிறி
-
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் மாரடைப்பு காரணமாக இன்று கொழும்பில் காலமானார். வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வைத்தியர் சுதர்சனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://athavannews.com/2025/1443164
-
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம்: கொழும்பு பேஸ்லைன் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு!
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம்: கொழும்பு பேஸ்லைன் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு! பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பேஸ்லைன் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக பொரளை பொது மயானத்திலிருந்து பொரளை சந்தி நோக்கி செல்லும் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1443192
-
இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவுகளால் இலங்கையின் கடற்கரைகள் பாதிப்பு!
இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவுகளால் இலங்கையின் கடற்கரைகள் பாதிப்பு! தென்மேற்கு பருவகாற்று காரணமாக, இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவில் இலங்கையின் கடற்கரைகளில் சேருவதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக கல்பிட்டி, நீர்கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் நெடுந்தீவு கடல் பகுதிகளில் இந்த கழிவுகள் பெரும்பாலும் கரைத்தட்டுவதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் குறித்த விடயம் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் சுற்றுச்சூழல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1443177
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்! முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார். உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (15) தனது 57ஆவது வயதில் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://athavannews.com/2025/1443145
-
கருத்து படங்கள்
- கஞ்சா பயிர்ச்செய்கையை அனுமதிப்பது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துமா?
- 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ள மாம்பழம்!
10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ள மாம்பழம்! யாழ்ப்பாணம் நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. மேற்படி ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா கடந்த எட்டாம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இதன் ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று (14) இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு முருகனுக்கும் விநாயகப் பெருமானிற்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் உலக சுற்றி முதலில் வலம் வருபவருக்கே மாம்பழம் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து முருகப் பெருமான் மயில் ஏறி உலகைச் சுற்ற செல்ல விநாயகப் பெருமான் சிவனையும் உமாதேவியாருமான வலம் வந்து மாம்பழத்தை பெற்றுக்கொண்டார். இச் சரித்திரத்தை பிரதிபலிக்கும் நாடகம் இடம் பெற்றதைத் தொடர்ந்து மாம்பழம் ஏலம் கூறப்பட்டது. இதில் பத்தாயிரம் ரூபாய்க்கு மாம்பழம் முதலில் ஏலம் கூறப்பட்டு சில நொடிகளில் ஆறு இலட்சம் ரூபாய் வரையில் சென்று பின்னர் படிப்படியாக உயர்ந்து சில நிமிடங்களில் 10 இலட்சம் ரூபா விற்கு இறுதியாக ஏலம் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443116- யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுப்பு!
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுப்பு! இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக் கொடியை துணைத் தூதர் சாய் முரளி ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் வாசித்தார். இதேவேளை, இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் , அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1443104- இலங்கையின் மனித உரிமை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நிலைப்பாடு!
இலங்கையின் மனித உரிமை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நிலைப்பாடு! அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான உலக மனித உரிமை அறிக்கையில், இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்றும், அவற்றால் வருந்தத்தக்க சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த அறிக்கையில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை அடையாளம் காண்பதிலும், அவர்களைப் பொறுப்பேற்க வைப்பதிலும் இலங்கை அரசாங்கம் மிகக் குறைவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாது இலங்கையில் நடைபெறும் தனிநபர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், விளக்கமறியலில் இருக்கும் வேளை இடம்பெறும் மரணங்கள் , ஊடகவியலாளர்களை துன்புறுத்துதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் குறித்தும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கவலை தெரிவித்துள்ளது. கடந்த 2022 போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் பெரும் வெற்றியுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக மிகக் குறைவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டில் 103 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் பொலிஸ் காவலில் 7 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது. எனினும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் 2024 ஆம் ஆண்டில் பதிவாகவில்லை என்றும், போரில் பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் சிறு முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443027- பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை : 14 முக்கிய அம்சங்கள்!
79-வது சுதந்திர தினவிழா: செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி. இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா இன்று டெல்லி செங்கோட்டையில் காலை 07.30 மணியளவில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ‘‘புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த விழாவுக்கு காலையில் பிரதமர் வருகை தந்த போது நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேட், செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் அவரை வரவேற்றார்கள். தொடர்ந்து பிரதமருக்கு டெல்லி பகுதியின் இராணுவ தளபதி அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் பிரதமரை காவலர் மரியாதை பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக் கொண்டார். இந்த மரியாதையை 3 படைகள் மற்றும் டெல்லி பொலிஸ் ஆகிய 4 பிரிவுகளில் இருந்து தலா 24 பேர் என மொத்தம் 96 பேர் பிரதமருக்கு அளித்தனர். ஒட்டுமொத்த அணிவகுப்புக்கு இந்திய விமானப்படை தலைமை தாங்கியது. அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து பிரதமர் மோடி செங்கோட்டையின் கொத்தளம் பகுதிக்கு சென்றார். அங்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் முன்னிலையில் முப்படைகளின் தளபதிகள் பிரதமரை மீண்டும் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். கொடியேற்றத்தை தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்களில் அங்கு மலர் தூவப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றில் தேசியக் கொடியும், மற்றொன்றில் ஆபரேஷன் சிந்தூரை சித்தரிக்கும் கொடியும் பொருத்தப்பட்டிருந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443102- காசா போர்; பணயக் கைதிகளை ஒரே நேரத்தில் விடுவிப்பது தொடர்பாக கவனம் செலுத்தும் இஸ்ரேல்!
காசா போர்; பணயக் கைதிகளை ஒரே நேரத்தில் விடுவிப்பது தொடர்பாக கவனம் செலுத்தும் இஸ்ரேல்! காசாவின் போர் நிறுத்த பேச்சுவார்தையின்போது, எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, கவனம் செலுத்தவுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு தெரிவித்துள்ளார். இதேவேளை இது தொடர்பான எகிப்திய அதிகாரிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளுக்காக, தமது குழு கெய்ரோவுக்கு சென்றுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னர், இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலை விரிவு படுத்தியதுடன், காசா பகுதியைக் கைப்பற்றுவதற்கான சர்ச்சைக்குரிய திட்டத்தையும் இஸ்ரேல் அறிவித்தது. இருப்பினும், காசாவை கைப்பற்றும் புதிய நடவடிக்கை ஒக்டோபர் மாதம் வரையில் தொடர்வதற்கு இஸ்ரேல் இராணுவம் தயாராக இல்லை என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இராணுவத் தயாரிப்புகளுக்கு நேரம் ஒதுக்குவது மற்றும் துணை படையினரை இணைத்துக் கொள்வது போன்ற செயற்திட்டங்களை இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளமையே இதற்கான காரணமாகும் என்று, இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. நேற்றையதினத்தில் மட்டும், சுமார் 123 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாசின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் நேற்று காசாவில் மூன்று குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் காசாவில் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. இதில் 106 குழந்தைகள் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443020- அறிமுகம்
வணக்கம் என்பி, உங்களை அன்புடன் யாழ்.களம் வரவேற்கின்றது. இங்கு… நிறைய ஜேர்மனி ஆட்கள் இருக்கிறார்கள். பயப்பிடாமல் வாங்கோ. 😂- கடந்த காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம்-ஐநா மனித உரிமை ஆணையாளர்
கடந்த காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம்-ஐநா மனித உரிமை ஆணையாளர். இலங்கை அரசாங்கம் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதை பல வருடங்களாக ஏற்க மறுத்து வந்துள்ளது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கெர் டேர்;க் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவித்தல் புதிய நிலக் கையகப்படுத்துதல்களை நிறுத்துதல் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களையும் விடுவித்தல் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு முயற்சிகளை ஆதரித்தல் மற்றும் காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்தல் அதன் நம்பகத்தன்மையை கட்டியெழுப்ப சர்வதேச நிபுணத்துவம் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றைப் பெறுவதன் மூலம் நிலைமாறுகால நீதிக்கான சூழலை உருவாக்கவேண்டும் என என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கான இலங்கை குறித்த அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச ஈடுபாடு இன்றியமையாததாக உள்ளது மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் நீண்டகால நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதிக்கு உறுதுணையாக இருக்க முடியும். சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடுப்பதற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் முதன்மை பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது என்றாலும் இதை சர்வதேச வழிமுறைகளால் பூர்த்தி செய்து ஆதரிக்க முடியும். என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார் மாற்றத்திற்கான அடித்தளங்களை நடைமுறைப்படுத்தவும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும்கடந்தகால மோதல்களிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவும் நிலையான சமாதானம் மற்றும் தேசிய ஐக்கியத்திற்கான அடித்தளத்தை இடவும் கிடைத்துள்ள வரலாற்று சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு இன்று ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்குதல்சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல்பாரபட்சம் மற்றும் பிரிவினைவாத அரசியலை முடிவிற்கு கொண்டுவருதல் போன்ற நீண்டகால பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பது புதிய திசையில் பயணிப்பதற்கு தலைமைத்துவம் உறுதிவழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார். அரசநிறுவனங்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த அர்ப்பணிப்புகளை உறுதியான நடவடிக்கைகளுடன் ஒரு ஒத்திசைவான காலக்கெடு திட்டமாக மாற்றவேண்டும் என ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டு போரின்போது இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு நீதிவழங்குவதும் இதில் உள்ளடங்கியிருக்கவேண்டும் என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டு போரின் போது மீறல்கள் துஸ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களிற்கு அரசபடையினரும் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற அரசசாரா தரப்பினரும் காரணம் என்பதை தெளிவாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுதலுடன் இதனை ஆரம்பிக்கவேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான எனது விஜயத்தின் போது பாதிக்கப்பட்டவர்களின் வேதனையை துன்பத்தை நான் தெளிவாக பார்த்தேன் என தெரிவித்துள்ள அவர் உண்மை மற்றும் நீதிக்கான அவர்களின் வேண்டுகோள்களிற்கு தீர்வை காணவேண்டும் என தெரிவித்துள்ளார். தேசிய ஐக்கியம் பற்றிய அரசாங்கத்தின் நோக்கினை சாத்தியமாக்குவதற்கு இந்த நடவடிக்கைகள் அவசியமானவை என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அனைத்திற்கும் அப்பால் கடந்தகால மீறல்கள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதை உறுதி செய்வதற்கு இது மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் பாரிய மனித உரிமைமீறல்கள் சர்வதேச சட்;ட மீறல்களிற்கு தீர்வை காணபதற்கு அர்ப்பணிப்புள்ள நீதித்துறைபொறிமுறையை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்குகிழக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள நிலங்களை விடுவிக்கவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும். நீண்டகால பயங்கரவாத தடைச்சட்ட கைதிகளை விடுதலை செய்யவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைக்கு வெளியேயும் உள்ளேயும் அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளிற்கு சர்வதேச சமூகம் தனது பங்களிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சர்வதேச சட்டங்களின் கீழான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து வழக்குதொடுப்பதற்கான பொறுப்பு முக்கிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்குரியது என்றாலும் இதனை சர்வதேச வழிமுறைகளால் ஆதரிக்க முடியும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் வலுப்படுத்தப்பட்ட திறனை பயன்படுத்தி பொறுப்புக்கூறல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கும் நல்லிணக்க முயற்சிகளிற்கு பங்களிப்பதற்கும் ஐநா உறுப்பு நாடுகளை மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1442979- ‘கூலி’ விமர்சனம்
"கூலி" படம் ஆயிரம் கோடி வசூல் செய்ய வேண்டும் என்று நேர்த்திக்கடன் வைத்து, மண்சோறு சாப்பிட்ட... ரசிக குஞ்சுகள்.- கருத்து படங்கள்
- ஊருக்கு... "கொலிடே" போறேன்.
சுவியர், யாழ்ப்பாண பஸ் பிரயாணத்தின் போது நசி பட்டுப் போனாலும், அதுகும் பல ஆயிரம் மலரும் நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்து விடும். அதில் பயணம் செய்யும் போது... வேலைக்குச் செல்லும் நடுத்தர வயதினர், வைத்தியசாலைக்கு செல்லும் வெளிப்புற நோயாளர்கள், பலதரப் பட்ட பாடசாலை மாணவர்கள்... அவர்களின் முகத்தில் தெரியும் கனவுகள் என்று ஆயிரம் கதை சொல்லும் முகங்களை தரிசிக்க முடியும். ஊருக்குச் செல்பவர்கள் பஸ்ஸில் பிரயாணம் செய்வதை முக்கிய நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்க வேண்டும். 🙂- நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை
கொழும்பு - யாழ்ப்பாணம் பேரூந்துகளில் போகும் போது.. கூடுமானவரை தண்ணீரை குறைத்து அருந்தி பிரயாணம் செய்வது நல்லது. அதிக நீர் அருந்தினால்... அடிக்கடி ஒன்றுக்கு போக வேண்டி வரும். பேரூந்து சாரதி நிறுத்தும் சில மலசல கூடங்களுக்குப் போனால், இல்லாத வியாதிகளையும் வாங்கிக் கொண்டு வரவேண்டி வரலாம். காட்டுப் பக்கம் ஒதுங்கினால்... தவிச்ச முயல் அடிப்பதற்கு என்றே... பல கள்வர்கள் பதுங்கி இருப்பார்கள் போலுள்ளது. 😂- நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை
கட்டண கழிப்பிடத்தில்…. காசு கொடுத்து, சிறுநீர் கழிக்க மனமில்லாமல், காட்டுப் பக்கம் ஒதுங்கியவருக்கு.. ஐந்து பவுண் சங்கிலியை பறி கொடுக்க வேண்டி வந்து விட்டது. 😂 பிற்குறிப்பு: இலங்கையில் ஒரு பவுண் (270,000) இரண்டு லட்சத்து எழுபதினாயிரம் ரூபாய். 5 * 270,000 = 13,50000 பதின்மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் நட்டம். 🤔- ஊருக்கு... "கொலிடே" போறேன்.
என்னில் அவ்வளவு நம்பிக்கையை வைத்தமைக்கு நன்றி அல்வாயன். 🙏 நான் வாழும் நாட்டில் கூட… தேவையில்லாத ஆடம்பரங்களை செய்வதில்லை. இது @குமாரசாமி , @Paanch அண்ணை ஆகியோருக்கும் தெரியும்.- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
சுமந்திரனுக்கு வாக்குப் போட்டு, முதல் அமைச்சாராக்குகின்ற மக்கள் அங்கு இல்லை. ஏற்கெனவே சுத்துமாத்தின் அரசியலுக்கு… சென்ற பாராளுமன்றத் தேர்தலில் முடிவுரை எழுதியாகி விட்டது. இனி… சுமன் முக்குவதில் அர்த்தமில்லை. மூடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 😂 வேலியிலை போற ஓணானை பிடித்து, வேட்டிக்குள் விட தமிழ் மக்களுக்கு விசரே. 😂 🤣- கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்
பாஞ்ச் அண்ணை, சம்பந்தன்... தமிழருக்கு செய்த அநியாயம் ஒன்று, இரண்டு என்றால் நினைவில் வைத்திருக்கலாம். இது, வாழ்க்கை முழுக்க நயவஞ்சக வேலை செய்து விட்டு செத்துப் போனால் .. எதை என்று நினைவில் வைத்திருப்பது.- ஊருக்கு... "கொலிடே" போறேன்.
இல்லை சாத்தான். நான் ஊருக்குப் போனால்... அங்குள்ள மக்களாகவே மாறி விடுவேன். சாரம், வேட்டி, பாட்டா செருப்பு, ஒரு மஞ்சள் பை... போன்றவை தான் எனது சீருடை. 😂- மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
பசுமை மின்சாரம் = காற்றாலை மின்சாரம் ******************************************************* காற்றாலை மின்சாரத்தை பசுமை மின்சாரம் அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனவும் அழைக்கின்றனர். ஒப்பீட்டு ரீதியில் சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதிப்பு குறைந்த ஒரு துறையாகும் இது. ஆனாலும் இதிலும் ஒரு சில பாதிப்புக்கள் உண்டு. இருப்பினும் அந்த பாதிப்பு ஏனைய துறைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்போடு ஒப்பிடும் போது இந்த காற்றாலையால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை ஒரு பாதிப்பாக கருத முடியாது என்கின்றனர் சூழலியலாளர்கள். காற்றாலையால் பறவைகள் வனவிலங்களின் வாழ்விடங்களில் மாற்றம். ஒலி மாசுப்படுதல், சூழல் அமைப்பு தோற்றத்தில் மாற்றம் போன்றவற்றை குறிப்பிடலாம் அத்தோடு வலசைப் பறவைகளின் வழிதடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த பாதிப்புக்கள் எல்லாம் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்தியாவில் கர்நாடகாவில் நடந்த ஆய்வில் காற்றாலையால் பறவைகளுக்கு ஏற்பட்டபாதிப்பு 0.1 வீதம் மட்டுமே என தெரியவந்துள்ளது. நீர் மின்சாரம், அனல் மின்நிலையங்கள், அணுமின்நிலையங்கள், சூரிய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற வழிகளில் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்படுகிறது. இதில் காற்றாலை மின்சாரமே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத துறையாகும். உலகில் அபிவிருத்தியில் உச்ச நிலைக்கு சென்ற சென்றுக்கொண்டிருக்கின்ற, அறிவியல்துறையில் வளர்ச்சி அடைந்த நாடுகள் எல்லாம் காற்றாலை மின்சார திட்டத்தையே அதிகம் ஊக்குவித்து வருகின்றன. இந்த திட்டத்தில் உலகில் சீனா முதல் இடத்திலும்,அமெரிக்க இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும், தொடர்ந்து ஜேர்மன், ஸ்பெயின், இங்கிலாந்து, கனடா, அவுஸ்ரேலியா,பிறேசில் என நாடுகள் காணப்படுகின்றன. கடலோர காற்றாலை மின் உற்பத்தியில் பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது. சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி இப்போது உள்ளது போல ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சியைத் தொடர்ந்து அடைந்து வந்தால் உலக வெப்ப மயமாதலை 1.5 பாகை செல்சியசாக குறைக்கலாம் எனவும் ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே எந்த விடயத்தையும் விஞ்ஞானபூர்வமாக, அறிவுபூர்வமாக ஆராயவேண்டும். அதனை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆதாரபூர்வமான தெளிவுப்படுத்த வேண்டும். ( விரிவான கட்டுரை ஒன்றில் சந்திப்போம்) Murukaiya Thamilselvan ##################### ######################## ###################### மன்னார் ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பறவை இடம்பெயர்வு பாதையாக (migratory bird flyway) இருப்பதால், இலங்கை வனவிலங்கு திணைக்களமும் BirdLife International மும் வெளியிட்ட ஆய்வுகளின்படி, திட்டம் நிறுவப்பட்ட பின்பு சில வலசைப் பறவைகளின் பாதைகள் மாறியுள்ளதாகவும், சிலவற்றின் இடம்பெயர்வு பழக்கங்கள் பாதிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை ஊக்குவிப்பதோடு, அவை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) மற்றும் வனவிலங்கு கண்காணிப்பு திட்டங்கள் போன்றவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும். மன்னார் திட்டத்திற்கான பரிந்துரைகளில் பறவைகள் அதிகம் பறக்கும் காலங்களில் (peak migration season) சில காற்றாலைகளை நிறுத்தி வைக்கும் நடைமுறை மற்றும் பறவைகளின் பறக்கும் உயரத்துக்கு ஏற்ப வடிவமைப்பு மாற்றங்கள் இடம்பெற வேண்டும் . மன்னார் போன்ற உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில், பசுமை சக்தி மற்றும் உயிரியல் பாதுகாப்பு இரண்டும் சமநிலையில் இருக்க வேண்டும். அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய, வெளிப்படையான திட்ட மேலாண்மை மட்டுமே மக்களின் நம்பிக்கையை உருவாக்கும். Kumanan Kana ·- மலரும் நினைவுகள் ..
- கஞ்சா பயிர்ச்செய்கையை அனுமதிப்பது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துமா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.