Everything posted by தமிழ் சிறி
-
14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
இங்கு 14 வயது சிறுமியில் கை வைத்தால்.... அங்கிள், ஆயுள் முழுக்க... களி தின்ன வேண்டி வரும். அதுதான்... அங்கிள் ஊருக்கு வந்தவுடன், தனது குரங்கு சேட்டையை ஆரம்பிக்கின்றார்.
-
கருத்து படங்கள்
- ஜேர்மனில் இருந்து யாழ் சென்றவர் இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கினார்!
புலம் பெயர் தேசத்தில் இருந்து செல்பவர்கள்.... ஒரு பக்கம் வெறியில் சண்டித்தனம் செய்வது, அல்லது சிறுமிகளுடன் பாலியல் சேட்டை விட்டு விலாசம் காட்டுவது. இதுகள்... இப்படியான சேட்டைகளை தாம் இருக்கும் நாட்டில் விட்டால், சட்டம் பயங்கரமாக தண்டித்து ஆளை ஒரு வழி பண்ணிவிடும் என்று தெரிந்து... தாம் வசிக்கும் நாட்டில் அமுசடக்கமாக இருந்து விட்டு, ஊருக்குப் போனவுடன் தமது சுயரூபத்தை வெளிப்படுத்தும் கபோதிகளை... ஊரில் வைத்தே சமாதி கட்டி விடுவதுதான் சிறந்த மருந்து.- 14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
ஹொலிடே சீசன் தொடங்கி விட்டது. புலம் பெயர் அங்கிள்மார் அரிப்பு எடுத்து ஊரில் உள்ளவர்களை கெடுக்க ஆரம்பிக்கப் போகிறார்கள். இதனை ஆரம்பத்திலேயே... கடுமையான தண்டனையை (ஊர் மக்கள்) கொடுத்து... இப்படியான செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் இது தொற்று வியாதி மாதிரி... மற்ற அங்கிள்மாரும் தொடங்கி விடுவார்கள்.- விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது!
வைத்திய நிபுணர் மகேஷி விஜேரத்னவுக்கான பிணை! நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததன் மூலம் ஊழல் செய்ததான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் சிறப்பு வைத்தியர் மகேஷி விஜேரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டது. சந்தேக நபருக்கு ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலைக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டதுடன், வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும் தலைமை நீதவான் உத்தரவிட்டார். வைத்தியர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு ரூ.50,000 பெறுதியான மருத்துவ உபகரணங்களை ரூ.175,000க்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நோயாளிகளுக்கு ரூ.300 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டிய இலஞ்ச ஒழிப்பு ஆணையம், வைத்தியர் அதிகாரப்பூர்வ வைத்தியசாலை நடைமுறைகள் மூலம் அறுவை சிகிச்சை பொருட்களை வாங்காமல் பொது சேவை கொள்முதல் விதிகளை மீறியதாகக் கூறியது. அதற்கு பதிலாக அந்தப் பொருட்கள் அவரது தனியார் நிறுவனம் மூலம் சுமார் 300 நோயாளிகளுக்கு விற்பனை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. பல நாட்களாக மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர் அறுவை சிகிச்சை செய்திருப்பதும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் மருத்துவ மோசடிக்கு உதவிய அவரது இரண்டு சகாக்களும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439225- திருகோணமலை சேர்ந்த இளைஞருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பாணை!
சமூக செயற்பாட்டாளர் சிந்துஜன் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைப்பு! 2023 ஆம் ஆண்டு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தந்தபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நிமித்தம் திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். விசாரணை நிமித்தம் பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு நேற்றைய தினம் குறித்த நபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சேர்ந்த அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான கனேசலிங்கம் சிந்துஜன் இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தந்தபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் குறித்த நபருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே பாதிக்கப்பட்ட குறித்த நபர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். விசாரணை நிமித்தம் பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு நேற்றைய தினம் குறித்த நபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439218- பொலிஸாருக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
பொலிஸாருக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு! ஒரு பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கான தங்கும் காலம் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட பொலிஸ் அதிகாரிகளின் குழந்தைகளுக்காக கல்வி உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்’ எனக் கூறிய அவர், கொழும்பு மற்றும் கண்டி போன்ற நகர்ப்புறங்களில் உத்தியோகபூர்வ இல்லங்களில் பல ஆண்டுகளாக ஒரே அதிகாரிகள் வசிப்பதால், புதிய அதிகாரிகள் வீடுகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகின்றது எனவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ‘குழந்தைகளை பிரபலமான பாடசாலைகளில் சேர்க்கும் நோக்கில் சில அதிகாரிகள் 30–37 ஆண்டுகள் ஒரே இல்லத்தில் வசிக்கிறார்கள் எனவும் இதனால் பிறர் பாதிக்கப்படுகிறார்கள்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய நிலையை தவிர்க்க, ஐந்து ஆண்டுகளுக்குப் பிந்தும் ஒரே இல்லத்தில் தொடர்ச்சியாக தங்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும், இது தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ‘எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது போல, பிறருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், கல்வி அம்சத்தில் சமத்துவம் உறுதிப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் கொள்கைகளை, குறிப்பாக முப்படைகளுக்காக செயல்படுத்தப்படும் கொள்கைகளை காவல்துறை நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமையை திறம்பட மேற்கொள்ளும் சூழலை உருவாக்குவதற்கும், அவர்களின் முக்கிய தேவைகளை தீர்க்கும் நோக்கத்துடன் மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பதில் மா அதிபர் தெரிவித்தார். இந் நிகழ்வில் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர்கள் அனுருத்த பண்டாரநாயக்க, ஜானகி செனவிரத்ன, தயாள் இளங்ககோன் மற்றும் பொலிஸ் சேவா வனிதா பிரிவின் தலைவர் வழக்கறிஞர் நீதா சமரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439209- தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!
தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்! பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (15) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தபால் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் மேலதிக நேர வேலையிலிருந்து விலக நேரிடும் என்று ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். 2016 முதல் தபால் சேவையில் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். குறிப்பாக மேலதிக நேரப் பணிகள் தேவைப்படும் தபால் சேவைகள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் என்று தொழிற்சங்கம் எச்சரித்ததுடன், நீண்டகாலமாக நிலவும் ஆட்சேர்ப்பு பிரச்சினைகளை மேலும் தாமதமின்றி தீர்க்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியது. https://athavannews.com/2025/1439213- விசா விதிமுறைகளை மீறிய 10 வெளிநாட்டவர்கள் கைது!
விசா விதிமுறைகளை மீறிய 10 வெளிநாட்டவர்கள் கைது! சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து தொழில் ஈடுபட்டதற்காக மொத்தம் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு – 03 பகுதியில் அமைந்துள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியல்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (14) மாலை நடத்திய சிறப்பு சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் சுற்றுலா விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்திருந்தனர். அவர்களில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நேரத்தில் தங்கள் விசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. 25 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்களில் ஆறு தாய்லாந்து நாட்டினர், மூன்று வியட்நாமிய நாட்டினர் மற்றும் ஒரு சீன நாட்டவர் அடங்குவர். கைது செய்யப்பட்ட குழுவினர் தற்போது மிரிஹான தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களை உடனடியாக அந்தந்த நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. https://athavannews.com/2025/1439186- ஒடிசாவில் காதல் திருமணம் செய்த ஜோடியை ஏரில் பூட்டி உழ வைத்த கொடூரம்
ஒன்றுக்குள் ஒன்றாக திருமணம் செய்தாலும் தண்டிக்கின்றார்கள், சாதி மாறி திருமணம் செய்தாலும் தண்டிக்கின்றார்கள். இந்தியாவில் காதலர்கள் நிலைமை பரிதாபம்.- பேராசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததால் கல்லூரியில் உயிரை மாய்த்த மாணவி
பேராசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததால் கல்லூரியில் உயிரை மாய்த்த மாணவி. ஒடிசாவில் பேராசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததால் பாதிக்கப்பட்ட மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பக்கீர் மோகன் கல்லூரியில் பி.எட். படித்து வந்த 20 வயதான மாணவி ஒருவரை பேராசிரியர் சமீரா குமார் சாகு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 30ம் திகதி கல்லூரி முதல்வர் திலீப் கோஷிடம் புகாரளித்திருந்தார். அத்துடன் கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் புகார் அளித்து 11 நாட்களுக்கு பிறகு கடந்த சனிக்கிழமை கல்லூரி வளாகத்திலேயே மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் 90 % தீக்காயமடைந்த மாணவி புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கல்லூரி முதல்வர் திலீப் கோஷ், பேராசிரியர் சமீரா குமார் சாகு ஆகியோர் இடைநிறுத்தம் செய்யப்பட்டனர். சாகுவை பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில், கல்லூரி முதல்வர் திலீப் கோஷ் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் குறித்த மாணவி கல்லூரி வளாகத்திலேயே தீக்குளித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்லூரி அறையில் இருந்து உடலில் தீப்பற்ற வைத்தபடி மாணவி கல்லூரி வளாக பகுதியில் ஓடி வருகிறார். அவரை ஒருவர் தடுத்து காப்பாற்ற முயன்றார். அவரதுஉடையில் தீப்பிடித்ததும் பின்வாங்கினார். அதே சமயம் வளாகத்தில் நின்று இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சிக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439197- விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்!
விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்! விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்புவதற்காக டிராகன் விண்கலத்துக்குள் சுபான்ஷு சுக்லா உடன் ஏனைய 3 விண்வெளி வீரர்களும் நுழைந்தனர். இன்று மாலை 4.35 மணிக்கு விண்கலம் பூமியை நோக்கிய தனது 24 மணி நேர பயணத்தை தொடங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, அக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் கடந்த ஜூன் 25ம் திகதி விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். இவர்கள் அங்கு பல்வேறு முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இந்திய விண்வெளி வீரர் சுக்லா, தனது விண்வெளி பயணத்தின் இறுதிக் கட்டத்தில், ஒரு விவசாயியாக மாறினார். இந்நிலையில் இன்று ( ஜூலை 14) பூமிக்கு திரும்புகின்றனர். இன்று மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு மாலை 4.35 மணிக்கு பூமியை நோக்கிய விண்கலத்தின் பயணம் தொடங்கியுள்ளது. டிராகன் விண்கலம், 24 மணி நேர பயணத்திற்கு பின்னர், நாளை மதியம் 3 மணிக்கு பூமி வந்தடையும். வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில், விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க கடற்படையும் தயார் நிலையில் உள்ளது. இந்திய விண்வெளி வீரர் சுக்லாவை வரவேற்க அவரது பெற்றோர் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். https://athavannews.com/2025/1439126- உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு ட்ரம்ப் 50 நாள் காலக்கெடு!
உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு ட்ரம்ப் 50 நாள் காலக்கெடு! உக்ரேன் போரை 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர எந்த உடன்பாடும் எட்டப்படாவிட்டால் ரஷ்யா மீது அமெரிக்கா “மிகக் கடுமையான” வரிகளை விதிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (14) தெரிவித்தார். நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தொடர்பில் தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கூறினார். “ரஷ்யாவின் நடவடிக்கை தொடர்பில் நான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன். 50 நாட்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், நாங்கள் 100% வரிகளை விதிப்போம்” என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாக சர்வதேச ஊடச் சேவையான ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளை “இரண்டாம் நிலை வரிகள்” என்றும் ட்ரம்ப் விவரித்தார். அதாவது உலகப் பொருளாதாரத்தில் மொஸ்கோவை தனிமைப்படுத்தும் முயற்சியில் ரஷ்யாவுடன் தொடர்புகளை பேணும் வர்த்தக பங்காளிகளையும் குறிவைப்பது ஆகும். 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து வொஷிங்டனுக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான நேரடி வர்த்தகம் சரிந்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான இந்த இரண்டாம் நிலை வரிகள் செயல்படுத்தப்பட்டால், அது மேற்கத்திய தடைகள் கொள்கையில் ஒரு பெரிய மாற்றமாக இருக்கும். மூன்று ஆண்டுகளுக்கும் மேலான போர் முழுவதும், மேற்கத்திய நாடுகள் மொஸ்கோவுடனான தங்கள் சொந்த நிதி உறவுகளில் பெரும்பாலானவற்றைத் துண்டித்துவிட்டன. ஆனால் ரஷ்யா தனது எண்ணெயை வேறு இடங்களில் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இது சீனா மற்றும் இந்தியா போன்ற வாங்குபவர்களுக்கு எண்ணெய் அனுப்புவதன் மூலம் மொஸ்கோ நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை தொடர்ந்து சம்பாதிக்க அனுமதித்துள்ளது. அமெரிக்காவும் நேட்டோவும் என்ன செய்யும்? நேட்டோ உறுப்பினர்கள் அமெரிக்காவிலிருந்து பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை வாங்குவார்கள் என்று ட்ரம்ப் அறிவித்தார். பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் உட்பட இந்த ஆயுதங்கள் பின்னர் உக்ரேனுக்கு அனுப்பப்படும். இந்த நடவடிக்கை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு, அமெரிக்கா போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தீவிரமாக உள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ட்ரம்ப் கூறினார். நேட்டோவின் விரைவான நடவடிக்கை முக்கியமானது என்று கூறி மார்க் ரூட் இந்த திட்டத்தை ஆதரித்தார். ஜெர்மனி, பின்லாந்து, கனடா, நோர்வே, ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வாங்குவதில் பங்கேற்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். உக்ரேன் என்ன சொல்கிறது? உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கான ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கீத் கெல்லாக், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கியேவில் சந்தித்தார். உக்ரேனின் வான் பாதுகாப்பு, கூட்டு ஆயுத உற்பத்தி மற்றும் மேலும் அமெரிக்க ஆதரவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் “பயனுள்ள உரையாடலை” நடத்தியதாக ஜெலென்ஸ்கி கூறினார். அடுத்து என்ன நடக்கும்? பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகளை உக்ரேனுக்கு வழங்குவது குறித்து விவாதிக்க ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சில நாட்களுக்குள் நடக்கலாம் என்று ட்ரம்பும் ரூட்டும் தெரிவித்தனர். ஆகஸ்ட் 1 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் அவர் அறிவித்த 30% வரிகள் உட்பட ட்ரம்பின் பரந்த கட்டணத் திட்டங்களைப் பற்றி விவாதிக்க ஐரோப்பாவின் வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பதாகவும் AP செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று கூறினார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நாங்கள் எப்போதும் விரும்புகிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று அவர் பிரஸ்ஸல்ஸில் கூறினார். https://athavannews.com/2025/1439192- 2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
நியாயம், வீடுகளில் கிச்சின் டிப்பார்ட்மெண்ட் பெடியள் கைக்கு வந்தாலும் காரியமில்லை. ஆனால்... தினமும் தொன் கணக்கில் பிடிபடும் கஞ்சா, ஐஸ் போதை வஸ்துக்களை பார்க்க, அவ்வளவு பாவனையாளர்கள் ஊரில் உள்ளார்கள் போலுள்ளது. அதிலும் பெரும்பாலானவர்கள் பாடசாலை மாணவர்கள் என்று பரவலாக சொல்கிறார்கள். அண்மையில் யாழில் ஒரு பிரபல பாடசாலையில் கல்வி கற்கும்... வடபகுதியின் அதி உயர் பதவியில் இருக்கும் ஒருவரின் மகனும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகனும்... போதைப் பொருள் பாவித்ததால், கல்லூரி நிர்வாகத்தால் எச்சரிக்கை கொடுக்கப் பட்டதாக ஒரு செய்தி வாசித்தேன். இப்படியே... தாராளமயமான போதைப் பொருள் புழக்கத்தால், ஒரு சமுதாயமே சீர் குலைந்தால் அதனை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவது மிகவும் சிரமமான விடயம். திட்டமிட்டு இளைய சமுதாயத்தை சீர் குலைக்கின்றார்கள் போலுள்ளது.- நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
இது என்ன ஈழப்பிரியன், காட்டு வெள்ளம் மாதிரி... வெள்ளம் ஓடுகின்றது. நீங்கள் இப்போ நியூயோர்க்கிலா நிற்கிறீர்கள். பாதுகாப்பாக இருக்கவும்.- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- 2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 82 மாணவர்களுக்கு 9 A! Jaffna Vision- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு!
இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு! கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பில் மீனவர் நலன், கடல்வள பாதுகாப்பு, கடற்றொழில் துறை அபிவிருத்தி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. வடக்கு மீனவர்கள் கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பிறகு பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மீன்பிடித்தொழிலை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், தமிழ்நாட்டு மீனவர்களின் சட்டவிரோத ‘Bottom trawling’ மீன்பிடிப் படகுகளால் கடல்வளம் பெரிதும் பாதிக்கப்படுவதால், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ‘Bottom trawling’ மீன்பிடி முறை தமிழ்நாட்டிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட ஊக்குவித்து வருவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டு மீனவர்களும் மிகக் குறைந்த நாட் கூலிக்கு வேலை செய்யும் வறிய மக்கள் என்பதை வலியுறுத்திய அவர், கலாச்சார ரீதியாகவும் ஒரே மொழி பேசக்கூடியவர்கள் என்ற அடிப்படையிலும் இருதரப்பு மீனவர்களுடனான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதன் மூலம் புரிதலை ஏற்படுத்தவும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான அடித்தளத்தை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார். கடந்த காலங்களிலும் தமிழ்நாட்டு மீனவர்கள் குழு இலங்கை வந்து சென்றதாகவும், தான் தமிழ்நாடு சென்றபோது அவர்களைச் சந்தித்து சகோதரத்துவத்துடன் சுமூகமான கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் அமைச்சர் ராமலிங்கம் நினைவுகூர்ந்தார். உயர்ஸ்தானிகரின் கோரிக்கையை ஏற்று, வருங்காலத்திலும் இருநாட்டு மீனவ சமூகங்களுக்கிடையில் சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் அதிகரித்து புரிதலை வலுப்படுத்த இணக்கம் தெரிவித்தார். கடற்றொழில் துறை அபிவிருத்தி குறித்துப் பேசிய அமைச்சர் சந்திரசேகர், வடக்கு மற்றும் கிழக்கில் மீனவத் துறைமுகங்கள் இல்லை எனவும், பேசாலை, குருநகர் மற்றும் பருத்தித்துறை போன்ற இடங்களில் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான படகு வசதிகளும், களஞ்சிய வசதிகளும் வடக்கு மீனவர்களிடம் இல்லை என்பதையும், ஒன்றிரண்டு சிறிய படகுத்துறைகளை அமைக்க சர்வதேச உதவிகளையும் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார். மீனவத் துறை சார்ந்த அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு நல்குவது குறித்து சாதகமான பதிலை வழங்கிய இந்திய உயர்ஸ்தானிகர், விரைவாகப் இந்திய உதவியில் பருத்தித்துறை மீனவத் துறைமுகப் பணிகளை ஆரம்பிப்பது குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அரசாங்கத்துக்குச் சொந்தமான படகு உற்பத்தி நிறுவனமான சீனோர் நிறுவனத்தின் கட்டட நிர்மாணப் பணிகளுக்கும் இந்தியா உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மேலும், இந்தியா உதவியில் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தை ஒரு நம்பிக்கை நிதியத்தின் மூலம் முறையாக முகாமைத்துவம் செய்வது குறித்தும், அச்சுவேலி தொழிற்துறை வலய (Industrial Zone) நிர்மாணம் மற்றும் அதற்கு இந்திய முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புகள் கோரப்பட்டுள்ளது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை போன்று தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்தும் காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாராகிவிட்டதாகவும், விரைவாக சரக்கு சேவைகளை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்திய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்தார். தொடர்ச்சியான இந்தியாவின் உதவிகளுக்கும் ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவித்த அமைச்சர் ராமலிங்கம் வரும் காலத்தில் மீனவர் பிரச்சினைகளுக்கான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்வுகாண அரசு தயாராக இருப்பதாக வலியுறுத்தினார். இச்சந்திப்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே, முதல் செயலாளர் திரு. ராம் பாபு மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ. கே. கோலித்த கமல் ஜினதாச ஆகியோரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1439130- உன்னால் முடியும் தம்பி
சாத்தான்... மன்னிக்கவும். இப்ப பயணக் கட்டுரை எழுதிறதுக்கெல்லாம் பொறுமை இல்லை. கொண்டுவந்த பொட்டலங்களை சொந்தக்காரர், அயலில் உள்ள நண்பர்கள் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தாயிற்று. 😂 @குமாரசாமி அண்ணையின் விலாசம் தெரியாத படியால்... அவரின் பார்சல் அனுப்பவில்லை. அவரின் விலாசம் கிடைத்த அடுத்த நிமிடம்.... "எக்ஸ்பிரஸ்" வேகத்தில் பார்சல் அனுப்பி வைக்கப்படும். 🤣- வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கனேடியத் தூதுவர்!
வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கனேடியத் தூதுவர்! வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் இன்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஆளுநரிடம் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார் அத்துடன் இலங்கையிலிருந்து அடுத்த மாதத்துடன் தனது பணியை நிறைவு செய்து திரும்பவுள்ளதாக கனேடியத் தூதுவர் ஆளுநரிடம் தெரிவித்தார். இதுவரை அவர் வழங்கிய ஒத்துழைப்புக்கள் மற்றும் கனேடிய அரசாங்கம் கடந்த காலங்களில் மேற்கொண்ட உதவிகளுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் குறிப்பாக வன்னிப் பிராந்தியத்தில் காணி தொடர்பான பிணக்குகள் அதிகளவில் உள்ளமையை சுட்டிக்காட்டிய ஆளுநர், போர் காரணமாக ஆவணங்கள் அழிவடைந்தமை இதற்கு பிரதான காரணமாக உள்ளதாகத் தெரிவித்தார். வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் இங்குள்ள அதிகாரிகளுக்குத் தெரியாமல் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்தமையால் எழுந்துள்ள சவால்களை ஆளுநர் எடுத்துக்கூறினார். இதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்வு காண்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளையும் ஆளுநர், கனேடியத் தூதுவருக்கு விவரித்தார். இந்தத் திணைக்களங்களால் வடக்கு மாகாணம் மாத்திரமல்ல ஏனைய பிரதேசங்களிலும் பாதிப்புக்கள் உள்ளதாக தாம் அறிந்திருப்பதாக கனேடியத் தூதுவர் பதிலளித்தார். 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் இடைநடுவில் உள்ளமையால் மக்கள் இன்னமும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அந்த மக்கள் அதனை முழுமைப்படுத்துவதற்கு உதவிகள் தேவை எனக் கோரிக்கை விடுத்தார். அதேபோல பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உற்பத்தி முயற்சிகளில் ஈடுபடுகின்றன என்றும் அவர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதற்கான உதவிகளை தேவை எனவும் கனேடியத் தூதுவருக்கு சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பு சவாலாக உள்ளது என்றும் இதற்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் விவசாய மற்றும் கடல் உற்பத்திப் பொருட்களை பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை இங்கு அமைப்பதற்கு முதலிடுவதற்கு கனேடிய வாழ் மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஆளுநர் கோரிக்கை முன்வைத்தார். இச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439121- நாட்டில் பாரியளவான போதைப்பொருட்கள் மீட்பு
நாட்டில் பாரியளவான போதைப்பொருட்கள் மீட்பு. நாட்டில் பாரியளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் (Wutler) தெரிவித்துள்ளார். இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார் இதன்போது ”இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 922 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 1,386 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், 56 ரக துப்பாக்கிகள் 23 கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439080- கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையில் முட்டை வீச்சு!
கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையில் முட்டை வீச்சு! கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையின் போது, மர்ம நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொரோன்டோ நகரில் இந்தியர்களின் ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது பக்தி பாடல்களை பாடியபடியும், கடவுளின் பெயரைச் சொல்லி கோஷமிட்டபடியும் இந்தியர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது சிலர் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. அந்த வீடியோவில் வீதியின் ஓரத்தில் இருந்த கட்டடங்களில் இருந்து முட்டைகளை, யாத்திரை சென்ற இந்தியர்கள் மீது வீசுவது தெரிய வந்தது. இது இனவெறி தாக்குதல் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கூறும்போது, ‘முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தும் போது அதிர்ந்து போய் விட்டோம். எங்களின் ரத யாத்திரையை நிறுத்த வேண்டும் என்று நோக்கத்தில் இந்த செயலை செய்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் தோல்வியடைந்து விட்டது. வெறுப்பு ஒருபோதும் வெல்ல முடியாது,’ எனத் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1439101- தேனீக்களை உளவாளிகளாக பயன்படுத்த சீனா திட்டம்!
தேனீக்களை உளவாளிகளாக பயன்படுத்த சீனா திட்டம்! தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவற்றை தமது தேவைக்கு ஏற்ப பயணிக்க வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. தேனீக்கள் இயற்கை பேரிடர், தீவிரவாத தடுப்புக்கு உதவும் என்று கூறப்பட்டாலும், தேனீக்களை உளவாளிகளாகவும் பயன்படுத்த முடியும். உயிரினங்களைக் கருவிகள் வாயிலாகக் கட்டுப்படுத்தும், ‘சைபோர்க்’ (Cyborg technology) என்ற தொழில்நுட்பம் தொடர்பாகப் பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்த வகையில், தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, தம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் முயற்சியில், சீனாவைச் சேர்ந்த பீஜிங் தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, 74 மில்லி கிராம் எடையுள்ள சிறிய கருவி ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். அவற்றில் உள்ள சிறிய ஊசிகள், தேனீயின் மூளையைக் கட்டுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, எந்த இடத்திலிருந்தும், குறித்த தேனீக்களின் இயக்கத்தைக் கண்காணிக்க முடியும். இதுவரை நடந்துள்ள ஆய்வுகளில், விஞ்ஞானிகளின் உத்தரவுகளில், 90 சதவீதத்தைத் தேனீக்கள் நிறைவேற்றி உள்ளன. இதற்கமைய பேரிடர் காலங்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களின் போது, மனிதர்கள் உடனடியாக செல்ல முடியாத இடங்களுக்கு, இது போன்ற தேனீக்களை அனுப்பி, அங்குள்ள நிலவரத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என, விஞ்ஞானிகள் கூறுகின்றனர். https://athavannews.com/2025/1439086 - ஜேர்மனில் இருந்து யாழ் சென்றவர் இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கினார்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.