Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ரணில் ஓர் ஒத்திகையா? நிலாந்தன். 2015ல் ஆட்சி மாற்றம் நிகழ்த்த காலகட்டத்தில் ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் ஸ்கண்டிநேவிய நாடு ஒன்றில் இருந்து பிரான்ஸுக்கு வந்திருந்தார்.அங்கே முன்பு இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட ஸ்கண்டிநேவிய ராஜதந்திரி ஒருவரைக் கண்டு கதைத்திருக்கிறார்.”ஆட்சி மாற்றம் நடந்து விட்டது இப்பொழுது நாமல் ராஜபக்சவை தூக்கி விட்டார்கள் பொறுத்திருந்து பாருங்கள் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தூக்குப்படப் போகிறார்கள்” என்ற பொருள்பட அந்த ராஜதந்திரி இவருக்குச் சொன்னாராம். ஆனால் அந்த ராஜதந்திரி எதிர்பார்த்ததுபோல அல்லது மேற்கு நாடுகள் எதிர்பார்த்ததுபோல ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய எல்லாரையுமே தூக்கவில்லை. நாமலைக்கூட கனகாலம் சிறையில் வைத்திருக்கவில்லை. ராஜபக்சக்களை ரணில் பாதுகாத்தது இதுதான் முதல் தடவை அல்ல. அதுபோல ராஜபக்சக்களும் ரணிலைப் பாதுகாத்த சந்தர்ப்பங்கள் உண்டு. சிங்கள உயர் குழாமானது ஆட்சியைப் பிடிப்பதற்காக அரசியலில் பகைவர்போல நடந்து கொள்ளும். ஆனால் ஆபத்து என்று வரும் பொழுது ஒரு உயர் குழாத்தினர் இன்னொரு உயர் குழாத்தினரைப் பாதுகாத்து, ஒரே வர்க்கமாக ஒன்று திரண்டு விடுவார்கள்.நல்லாட்சி அரசாங்கத்தின் போது இதுதான் நடந்தது. ஆனால் இப்பொழுது ரணில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிங்கள உயர் குழாத்தைப் பிரதிபலிக்காத அனுரகுமார ஜனாதிபதியாக இருக்கும் ஒரு காலத்தில் இலங்கைத் தீவில் நவீன வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி முதன்முதலாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறார். “தம்புத்தேகமவில் இருத்து வந்த நாட்டுக்காட்டான் கொழும்பு செவின் ரோயல் மனிதனை சிறைக்கு அனுப்பித் தவறிழைத்ததாகவும் அதற்கான தக்க பதிலை வெகு சீக்கிரத்தில் பெறுவார் என்றும்’ கூறுகின்றார்கள்” என்று இஷார.எம்.ஜெயசேன எழுதியுள்ளார். ரணில் கைது செய்யப்பட்டது பெரும்பாலான எதிர்க்கட்சி பிரமுகர்கள் அவரைச் சென்று பார்த்தார்கள். அவருடைய கட்சியில் இருந்து உடைத்துக் கொண்டு வெளியேறிய சஜித்தும் போய்ப் பார்த்தார். தமிழ் சிங்கள அரசியல்வாதிகளும் அவரோடு நின்றார்கள். சிங்கள உயர் குழாம் தங்களில் ஒருவருக்கு ஆபத்து என்றதும் ஒன்று சேரக் காண்கிறோம். “ரணிலுக்கு ஆதரவு வழங்க நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்திருந்த நாமல், மைத்த்ரீ ரிஷாட், ஜீவன், ட்விட்டரில் ஆதரவு வழங்கிய சஜித், பாராளுமன்றத்தில் “little courtesy” கேட்ட ஹக்கீம், வெள்ளிக்கிழமை கைது செய்ததை “ill-advised” என்ற சுமந்திரன் உட்பட அனைவரும் காட்ட முயன்றது இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒன்று என்பதைத்தான்.”என்று இஷார.எம்.ஜெயசேன மேலும் கூறுகிறார். அனுர,ரணிலைக் கைது செய்ததன்மூலம் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறாரா அல்லது எதிர்க்கட்சிகளை உஷாரடைய வைத்திருக்கிறாரா ? தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இதுவரையிலும் 63 பேர்களை ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்திருக்கிறது.அந்த 63 பேர்களுக்குள்ளும் அரசியல்வாதிகள்.உயர் அதிகாரிகள்,படைத்துறையைச் சேர்ந்தவர்கள் போன்ற அனைவரும் அடங்குவர். இவ்வாறான கைது நடவடிக்கைகளின் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அரசியல்வாதிகளும் மேட்டுக்குடியினரும் படைப்பிரதானிகளும் ஒன்று திரளப் போகிறார்கள். அதாவது சிறீலங்காவை இதுவரை காலமும் ஆண்டு வந்த மேட்டுக்குடியினர் -பவர் எலீற்ஸ்- இனி ஒன்றுதிரளுவார்கள். இதனால் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான சவால்கள் மேலும் அதிகரிக்கும். அதேசமயம் தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் இந்தக் கைது நடவடிக்கை ஐநாவிலும் உலகப்பொது மன்றங்களிலும் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்? ரணில் கைது செய்யப்பட்டிருக்கும் நேரம் எது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.அடுத்த ஜெனிவா கூட்டத்தினருக்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் ரணில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ஒரு கடற்படைப் பிரதானியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவை யாவும் இலங்கைத் தீவின் நீதி பாரபட்சமற்றது, நம்பகத்தன்மை மிக்கது என்ற ஒரு தோற்றத்தைக் கட்டி எழுப்புவதற்கு அரசாங்கத்திற்கு உதவக்கூடும். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் உள்நாட்டு நீதியை வெளிநாட்டு உதவிகளின் மூலம் பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கும் ஓர் அனைத்துலக பின்னணியில், இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதி பரிபாலனக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை உயர்த்துவதற்கு இந்தக் கைது அனுராவுக்கு உதவும். கைது செய்யப்பட்டிருப்பவர் யார் என்று பார்த்தால், பெரும்பாலான மேற்கு நாடுகளின் செல்ல பிள்ளை. சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் மத்தியில் ஒரு லிபரலாகப் பார்க்கப்படுகிறவர். தமிழ் மக்கள் அவரை நரி என்று கூறலாம். அல்லது லிபரல் முகமூடி அணிந்த இனவாதி என்றும் கூறலாம்.ஆனால் மேற்கு நாடுகள் அவரை லிபரல் என்றுதான் கருதுகின்றன.மேற்கு நாடுகளுக்கு அதிகம் விருப்பமான ஒரு தலைவர் அவர்.நவீன ஸ்ரீலங்காவில் இதுவரை ஸ்ரீலங்காவை ஆண்ட சிங்களபௌத்த கட்சிகளைச் சேர்ந்த அநேகமானவர்கள் சிங்கள பௌத்த பாரம்பரிய உடைகளுடன்தான் காணப்படுவார்கள்.ஆனால் ரணில் விக்ரமசிங்க என்றைக்குமே அவ்வாறு வேட்டியும் நஷனலுமாக காணப்பட்டதில்லை. அவர் எப்பொழுதுமே மேற்கத்திய உடுப்புகளோடுதான் காணப்படுவார் . அந்த அளவுக்கு அவர் மேற்கத்தியப் பண்பாட்டின் வாரிசு. அது மட்டுமல்ல, ஐநா மனித உரிமைகள் பேரவையில் முதன் முதலாக 2015 ஆம் ஆண்டு,செப்டம்பர் மாதம்,இலங்கை அரசாங்கம் ஐநாவின் தீர்மானம் ஒன்றுக்கு இணை அனுசரணை வழங்கியது.அது ரணில் ஆட்சியில் இருந்தபடியால்தான் நடந்தது.எனவே ஐநாவைப் பொறுத்தவரையிலும்கூட ரணில் விருப்பத்துக்குரிய ஒரு தலைவர்.இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதிக்கான ஐநாவின் தீர்மானத்தை நிறைவேற்றிய பெற்றோரில் ரணிலும் ஒருவர். ஆனால் அவர், தான் பெற்ற பிள்ளைக்கு உண்மையாக இருக்கவில்லை.அதனால் தான் 2018 ஆம் ஆண்டு சுமந்திரன் கூறுவதுபோல அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனையாக முடிவடைந்தது.ஆனாலும் ஐநா போன்ற அனைத்துலக நிறுவனங்களைப் பொறுத்தவரை ரணில் கெட்டிக்காரர்;சந்திரசாலி;எல்லாப் பேரரசுகளிலும் சம தூரத்தில் வைக்கக் கூடியவர்.என்றாலும் செல்லப் பிள்ளை. இப்படி மேற்கத்திய நாடுகளின் விருப்பத்துக்குரிய ஒரு தலைவராகக் காணப்படும் ஒருவரை ஒருவரை அனுர தூக்கியிருக்கிறார். இதன்மூலம் மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் அவர் எதைச் சொல்ல முற்படுகிறார்? இந்த இடத்தில் ராஜபக்சக்களைத் தூக்கி இருந்தால் என்ன நடந்திருக்கும்? உள்நாட்டில் அவர்களுடைய ஆதரவாளர்கள் கொதித்து எழுந்திருப்பார்கள். ஆனால் அணிலுக்காக அவருடைய ஆதரவாளர்கள் அந்த அளவுக்குக் கொதித்து எழவில்லை.மகிந்த குடும்பத்தவர்களைத் தூக்கினால் உள்நாட்டில் குழப்பம் ஏற்படலாம்.ஆனால் ரணிலைத் தூக்கினால் ஒப்பீட்டளவில் குறைந்த குழப்பமே ஏற்படும் என்று நன்கு கணித்து ரணில் தூக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு மேற்கத்திய ராஜதந்திரிகள் மத்தியிலும் ஐநா போன்ற உலகப் பொது நிறுவனங்கள் மத்தியிலும் மதிக்கப்படுகின்ற ஒரு தலைவரைத் தூக்கி அதன் மூலம் இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கு அனுர அரசாங்கம் முயற்சிக்கின்றதா? இதில் ஒரு வர்க்கப் பரிமாணம் உண்டு. அதேசமயம் இருவருமே “அரகலய”வின் விளைவுகள்தான். அரகலயவின் முதல் கனிகளைப் புசித்தவர் ரணில். அரகலயவின் விளைவாக ராஜபக்சக்கள் ஓடி ஒழிய வேண்டி வந்தபொழுது அவர்கள் ரணிலை ஒரு கவசமாக முன்னே நிறுத்தினார்கள்.ரணிலும் தனது வர்க்கத்தைப் பாதுகாத்து,அரகலயவை நசக்கினார்.அதேசமயம் அதன் விளைவாக ஜனாதிபதியாக வந்தார். அதன்பின் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.ஆனால் அரகலயவின் கனிகளை தேர்தல் மொழியில் நன்கு மொழி பெயர்த்த ஜேவிபி அரகலயவின் அடுத்த கட்டக் கனிகளை தனக்காக்கிக் கொண்டது. இப்பொழுது அரகலயவை நசுக்கிய ஒருவரை,தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை “எல் போர்ட் அரசாங்கம்” என்று இகழ்ந்த ஒருவரைத் தூக்கியதன் மூலம் ஜேவிபி தன்னுடைய கணக்கு ஒன்றைத் தீர்த்திருக்கிறது. சிங்கள மக்களைப் பொறுத்தவரை இது மாற்றம்தான். சந்தேகமே இல்லை. அனுர இந்த விடயத்தில் ரிஸ்க் எடுக்கிறார் என்பது உண்மை. இதன் விளைவாக ஒன்று திரளப் போகும் சிங்கள பவர் எலீட்ஸ்-சக்தி மிக்க உயர் குழாம் அனுர வைச் சூழ்ந்து நின்று தாக்கும். அதைத் தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.சிலவேளை தொடர்ச்சியாக இதுபோன்ற கைது நடவடிக்கைகளின்மூலம் அனுர தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவும் கூடும். அல்லது கவிழவும் கூடும். https://athavannews.com/2025/1444387
  2. ரணில் ஓர் ஒத்திகையா? நிலாந்தன். 2015ல் ஆட்சி மாற்றம் நிகழ்த்த காலகட்டத்தில் ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் ஸ்கண்டிநேவிய நாடு ஒன்றில் இருந்து பிரான்ஸுக்கு வந்திருந்தார்.அங்கே முன்பு இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட ஸ்கண்டிநேவிய ராஜதந்திரி ஒருவரைக் கண்டு கதைத்திருக்கிறார்.”ஆட்சி மாற்றம் நடந்து விட்டது இப்பொழுது நாமல் ராஜபக்சவை தூக்கி விட்டார்கள் பொறுத்திருந்து பாருங்கள் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தூக்குப்படப் போகிறார்கள்” என்ற பொருள்பட அந்த ராஜதந்திரி இவருக்குச் சொன்னாராம். ஆனால் அந்த ராஜதந்திரி எதிர்பார்த்ததுபோல அல்லது மேற்கு நாடுகள் எதிர்பார்த்ததுபோல ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய எல்லாரையுமே தூக்கவில்லை. நாமலைக்கூட கனகாலம் சிறையில் வைத்திருக்கவில்லை. ராஜபக்சக்களை ரணில் பாதுகாத்தது இதுதான் முதல் தடவை அல்ல. அதுபோல ராஜபக்சக்களும் ரணிலைப் பாதுகாத்த சந்தர்ப்பங்கள் உண்டு. சிங்கள உயர் குழாமானது ஆட்சியைப் பிடிப்பதற்காக அரசியலில் பகைவர்போல நடந்து கொள்ளும். ஆனால் ஆபத்து என்று வரும் பொழுது ஒரு உயர் குழாத்தினர் இன்னொரு உயர் குழாத்தினரைப் பாதுகாத்து, ஒரே வர்க்கமாக ஒன்று திரண்டு விடுவார்கள்.நல்லாட்சி அரசாங்கத்தின் போது இதுதான் நடந்தது. ஆனால் இப்பொழுது ரணில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிங்கள உயர் குழாத்தைப் பிரதிபலிக்காத அனுரகுமார ஜனாதிபதியாக இருக்கும் ஒரு காலத்தில் இலங்கைத் தீவில் நவீன வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி முதன்முதலாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறார். “தம்புத்தேகமவில் இருத்து வந்த நாட்டுக்காட்டான் கொழும்பு செவின் ரோயல் மனிதனை சிறைக்கு அனுப்பித் தவறிழைத்ததாகவும் அதற்கான தக்க பதிலை வெகு சீக்கிரத்தில் பெறுவார் என்றும்’ கூறுகின்றார்கள்” என்று இஷார.எம்.ஜெயசேன எழுதியுள்ளார். ரணில் கைது செய்யப்பட்டது பெரும்பாலான எதிர்க்கட்சி பிரமுகர்கள் அவரைச் சென்று பார்த்தார்கள். அவருடைய கட்சியில் இருந்து உடைத்துக் கொண்டு வெளியேறிய சஜித்தும் போய்ப் பார்த்தார். தமிழ் சிங்கள அரசியல்வாதிகளும் அவரோடு நின்றார்கள். சிங்கள உயர் குழாம் தங்களில் ஒருவருக்கு ஆபத்து என்றதும் ஒன்று சேரக் காண்கிறோம். “ரணிலுக்கு ஆதரவு வழங்க நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்திருந்த நாமல், மைத்த்ரீ ரிஷாட், ஜீவன், ட்விட்டரில் ஆதரவு வழங்கிய சஜித், பாராளுமன்றத்தில் “little courtesy” கேட்ட ஹக்கீம், வெள்ளிக்கிழமை கைது செய்ததை “ill-advised” என்ற சுமந்திரன் உட்பட அனைவரும் காட்ட முயன்றது இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒன்று என்பதைத்தான்.”என்று இஷார.எம்.ஜெயசேன மேலும் கூறுகிறார். அனுர,ரணிலைக் கைது செய்ததன்மூலம் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறாரா அல்லது எதிர்க்கட்சிகளை உஷாரடைய வைத்திருக்கிறாரா ? தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இதுவரையிலும் 63 பேர்களை ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்திருக்கிறது.அந்த 63 பேர்களுக்குள்ளும் அரசியல்வாதிகள்.உயர் அதிகாரிகள்,படைத்துறையைச் சேர்ந்தவர்கள் போன்ற அனைவரும் அடங்குவர். இவ்வாறான கைது நடவடிக்கைகளின் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அரசியல்வாதிகளும் மேட்டுக்குடியினரும் படைப்பிரதானிகளும் ஒன்று திரளப் போகிறார்கள். அதாவது சிறீலங்காவை இதுவரை காலமும் ஆண்டு வந்த மேட்டுக்குடியினர் -பவர் எலீற்ஸ்- இனி ஒன்றுதிரளுவார்கள். இதனால் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான சவால்கள் மேலும் அதிகரிக்கும். அதேசமயம் தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் இந்தக் கைது நடவடிக்கை ஐநாவிலும் உலகப்பொது மன்றங்களிலும் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்? ரணில் கைது செய்யப்பட்டிருக்கும் நேரம் எது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.அடுத்த ஜெனிவா கூட்டத்தினருக்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் ரணில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ஒரு கடற்படைப் பிரதானியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவை யாவும் இலங்கைத் தீவின் நீதி பாரபட்சமற்றது, நம்பகத்தன்மை மிக்கது என்ற ஒரு தோற்றத்தைக் கட்டி எழுப்புவதற்கு அரசாங்கத்திற்கு உதவக்கூடும். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் உள்நாட்டு நீதியை வெளிநாட்டு உதவிகளின் மூலம் பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கும் ஓர் அனைத்துலக பின்னணியில், இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதி பரிபாலனக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை உயர்த்துவதற்கு இந்தக் கைது அனுராவுக்கு உதவும். கைது செய்யப்பட்டிருப்பவர் யார் என்று பார்த்தால், பெரும்பாலான மேற்கு நாடுகளின் செல்ல பிள்ளை. சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் மத்தியில் ஒரு லிபரலாகப் பார்க்கப்படுகிறவர். தமிழ் மக்கள் அவரை நரி என்று கூறலாம். அல்லது லிபரல் முகமூடி அணிந்த இனவாதி என்றும் கூறலாம்.ஆனால் மேற்கு நாடுகள் அவரை லிபரல் என்றுதான் கருதுகின்றன.மேற்கு நாடுகளுக்கு அதிகம் விருப்பமான ஒரு தலைவர் அவர்.நவீன ஸ்ரீலங்காவில் இதுவரை ஸ்ரீலங்காவை ஆண்ட சிங்களபௌத்த கட்சிகளைச் சேர்ந்த அநேகமானவர்கள் சிங்கள பௌத்த பாரம்பரிய உடைகளுடன்தான் காணப்படுவார்கள்.ஆனால் ரணில் விக்ரமசிங்க என்றைக்குமே அவ்வாறு வேட்டியும் நஷனலுமாக காணப்பட்டதில்லை. அவர் எப்பொழுதுமே மேற்கத்திய உடுப்புகளோடுதான் காணப்படுவார் . அந்த அளவுக்கு அவர் மேற்கத்தியப் பண்பாட்டின் வாரிசு. அது மட்டுமல்ல, ஐநா மனித உரிமைகள் பேரவையில் முதன் முதலாக 2015 ஆம் ஆண்டு,செப்டம்பர் மாதம்,இலங்கை அரசாங்கம் ஐநாவின் தீர்மானம் ஒன்றுக்கு இணை அனுசரணை வழங்கியது.அது ரணில் ஆட்சியில் இருந்தபடியால்தான் நடந்தது.எனவே ஐநாவைப் பொறுத்தவரையிலும்கூட ரணில் விருப்பத்துக்குரிய ஒரு தலைவர்.இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதிக்கான ஐநாவின் தீர்மானத்தை நிறைவேற்றிய பெற்றோரில் ரணிலும் ஒருவர். ஆனால் அவர், தான் பெற்ற பிள்ளைக்கு உண்மையாக இருக்கவில்லை.அதனால் தான் 2018 ஆம் ஆண்டு சுமந்திரன் கூறுவதுபோல அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனையாக முடிவடைந்தது.ஆனாலும் ஐநா போன்ற அனைத்துலக நிறுவனங்களைப் பொறுத்தவரை ரணில் கெட்டிக்காரர்;சந்திரசாலி;எல்லாப் பேரரசுகளிலும் சம தூரத்தில் வைக்கக் கூடியவர்.என்றாலும் செல்லப் பிள்ளை. இப்படி மேற்கத்திய நாடுகளின் விருப்பத்துக்குரிய ஒரு தலைவராகக் காணப்படும் ஒருவரை ஒருவரை அனுர தூக்கியிருக்கிறார். இதன்மூலம் மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் அவர் எதைச் சொல்ல முற்படுகிறார்? இந்த இடத்தில் ராஜபக்சக்களைத் தூக்கி இருந்தால் என்ன நடந்திருக்கும்? உள்நாட்டில் அவர்களுடைய ஆதரவாளர்கள் கொதித்து எழுந்திருப்பார்கள். ஆனால் அணிலுக்காக அவருடைய ஆதரவாளர்கள் அந்த அளவுக்குக் கொதித்து எழவில்லை.மகிந்த குடும்பத்தவர்களைத் தூக்கினால் உள்நாட்டில் குழப்பம் ஏற்படலாம்.ஆனால் ரணிலைத் தூக்கினால் ஒப்பீட்டளவில் குறைந்த குழப்பமே ஏற்படும் என்று நன்கு கணித்து ரணில் தூக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு மேற்கத்திய ராஜதந்திரிகள் மத்தியிலும் ஐநா போன்ற உலகப் பொது நிறுவனங்கள் மத்தியிலும் மதிக்கப்படுகின்ற ஒரு தலைவரைத் தூக்கி அதன் மூலம் இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கு அனுர அரசாங்கம் முயற்சிக்கின்றதா? இதில் ஒரு வர்க்கப் பரிமாணம் உண்டு. அதேசமயம் இருவருமே “அரகலய”வின் விளைவுகள்தான். அரகலயவின் முதல் கனிகளைப் புசித்தவர் ரணில். அரகலயவின் விளைவாக ராஜபக்சக்கள் ஓடி ஒழிய வேண்டி வந்தபொழுது அவர்கள் ரணிலை ஒரு கவசமாக முன்னே நிறுத்தினார்கள்.ரணிலும் தனது வர்க்கத்தைப் பாதுகாத்து,அரகலயவை நசக்கினார்.அதேசமயம் அதன் விளைவாக ஜனாதிபதியாக வந்தார். அதன்பின் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.ஆனால் அரகலயவின் கனிகளை தேர்தல் மொழியில் நன்கு மொழி பெயர்த்த ஜேவிபி அரகலயவின் அடுத்த கட்டக் கனிகளை தனக்காக்கிக் கொண்டது. இப்பொழுது அரகலயவை நசுக்கிய ஒருவரை,தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை “எல் போர்ட் அரசாங்கம்” என்று இகழ்ந்த ஒருவரைத் தூக்கியதன் மூலம் ஜேவிபி தன்னுடைய கணக்கு ஒன்றைத் தீர்த்திருக்கிறது. சிங்கள மக்களைப் பொறுத்தவரை இது மாற்றம்தான். சந்தேகமே இல்லை. அனுர இந்த விடயத்தில் ரிஸ்க் எடுக்கிறார் என்பது உண்மை. இதன் விளைவாக ஒன்று திரளப் போகும் சிங்கள பவர் எலீட்ஸ்-சக்தி மிக்க உயர் குழாம் அனுர வைச் சூழ்ந்து நின்று தாக்கும். அதைத் தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.சிலவேளை தொடர்ச்சியாக இதுபோன்ற கைது நடவடிக்கைகளின்மூலம் அனுர தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவும் கூடும். அல்லது கவிழவும் கூடும். https://athavannews.com/2025/1444387
  3. குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரிக்க புதிய பொலிஸ் பிரிவு அறிமுகம்! குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரணை செய்வதற்காக இலங்கை பொலிஸ் புதிய விசாரணைப் பிரிவொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (23) நடைபெற்ற விசேட பொலிஸ் ஊடக சந்திப்பில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, குற்றச் செயல்கள் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துச் சட்டத்தின்படி இந்த விசாரணை பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு (PCID) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த புதிய விசாரணைப் பிரிவு, பொலிஸ்மா அதிபரின் தலைமையில் பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1444403
  4. அரசியல் வாதிகள் செய்யும் சிறிய குற்றங்களுக்காக அவர்களை சிறையில் அடைப்பது தவறு - மகிந்த சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட மகிந்த ராஜபக்ஷ சிறிய குற்றங்களுக்காக அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பது குறித்து வருத்தப்படுவதாகவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு நல்ல புரிதல் இருப்பதாகவும், இதுபோன்ற செயல்கள் பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை என்றும் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் இன்னும் தன்னை நேசிக்கிறார்கள் என்றும் கூறினார். "நாங்கள் மக்களை நேசிக்கிறோம். அதனால், மக்கள் நம்மை நேசிக்கிறார்கள்... என கூறினார். நம்ம யாழ்ப்பாணம்
  5. கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ரணில்! சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்திரைக்கப்பட்டுள்ளது. அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் வழங்கிய பரிந்துரைக்கு அமைய அவர் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1444376
  6. ரணிலை சந்தித்த சஜித் ஊடகங்களுக்கு கருது தெரிவித்தார்! சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்திருந்த நிலையில் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் முன்கூட்டியே கணித்திருக்கின்றமை நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒருவர் கணிப்புகளை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளார். இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை, ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், சட்டத்தை அமுல்படுத்தும் முறை சரியானது என்று நாட்டு மக்கள் நம்ப வேண்டும். சட்டத்தை அமுல்படுத்துவதும், அது குறித்து மக்கள் கொண்டுள்ள புரிதலும் மிகவும் முக்கியம். சமூக ஊடகங்களில் ஒருவர் கணிப்புகளை வெளியிடுவதால் குறித்த செயல்பாட்டில் ஒரு தீவிரமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நாட்டின் சட்டத்தை அமுல்படுத்துவது வெளிப்படையானதாகவும், அரசியல் சாராததாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும், அது அதே முறையில் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், மூன்றாம் தரப்பினர் வெளியே வந்து இதுதான் நடக்கிறது என்று கூறுவது உண்மையில் சட்டவிரோதமானது. அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். நான் அவரைச் சந்தித்தேன். அவர் நலமாக இருக்கிறார். மேலும், அவரது உடல்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். மருந்துகள் வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444350
  7. ரணிலை சந்திக்க வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ! சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவு சற்று முன்னர் சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்றையதினம் (22) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் சிறைச்சாலைக்கு சென்று அவரை சந்தித்து வருகின்றனர். https://athavannews.com/2025/1444344
  8. ஜே. ஆர். ஜெயவர்தனவின் மருமகனும், கை சுத்தமானவர் என்று போலி பிம்பத்துடன் வலம் வந்த ரணிலை கையில் விலங்கிட்டு கைது செய்ததன் மூலம்... முன்னாள் அதி உத்தம ஜனாதிபதியை சிறைக் கட்டிலில் படுக்க வைத்ததை அனுரா அரசு தனது சாதனையாக கருதலாம். இந்தச் சம்பவம் இலங்கை வரலாற்றில் என்றும் நினைவில் கொள்ளக் கூடிய சம்பவமாகவே இருக்கும். ரணிலின் வாழ்க்கையில் பல வெற்றிகள், பதவிகள் போன்றவவை அவர் எதிர்பார்க்காத அளவிற்கு ஆச்சரியமூட்டும் வகையிலேயே அமைந்து இருந்தது. அதே போல் இந்தக் கைதும்.. அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அனுரா... இந்தக் கைதின் மூலம் நடைபெற இருக்கும் மாகாண சபைத் தேர்தல் வெற்றிக்கு (வாக்கு) மூலதனம் இட்டுள்ளார் என்றே நான் நினைக்கின்றேன்.
  9. ஆம்.... மகிந்த, கோத்தா எல்லாம் பேட்டை ரவுடிகள். அவர்களில் கை வைப்பது.... சொந்த செலவில் சூனியம் வைப்பதற்கு சமன் என்று அனுரா தரப்பு ஏற்கெனவே கணக்குப் போட்டு வைத்திருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆக மிஞ்சினால் ... மைத்திரியையும் ஈஸ்ட்டர் தாக்குதல் சம்பந்தமாக உள்ளே தூக்கி வைத்து.... அந்தப் பயத்தில் மகிந்த, கோத்தாவை நுனிக் கதிரையில் உட்கார வைக்கலாம்.
  10. சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள ரணிலை சந்திக்க சஜித் வருகை! சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்துள்ளார். இதேவேளை, இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் மெகசின் சிறைச்சாலைக்கு வந்திருந்தனமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நேற்று (22) இரவு முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் சிறைச்சாலையை அடைந்த போதிலும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது. அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsசிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள ரணிலை சந்திக்க சஜித் வருகை!சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்துள்ளார். இதேவேளை, இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜ
  11. விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (22) மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது இவ்வாறு கைது செய்யப்பட்டார். அதன்படி, ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் பிற்பகல் 03.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்த நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்றிருந்தார். இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியிருந்தார். இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு நபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, விசாரணை தொடங்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சமீபத்தில் அந்தத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, விக்ரமசிங்கவை நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று (22) இரவு முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் சிறைச்சாலையை அடைந்த போதிலும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444334
  12. அசின்…. இந்திய குடியுரிமை என்ற படியால், அவரை கைது செய்வதில் சிக்கல் வரலாம். 😂 🤣
  13. •யோக்கியன் வருகிறார். செம்பை எடுத்து வையுங்க உள்ளே😂 மிஸ்டர் கிளீன் அல்லது திருவாளர் பரிசுத்தம் என்று அழைக்கப்படும் ரணில் அவர்கள் இப்போது மாட்டியிருப்பது பட்டலந்தை முகாம் கொலைகளுக்காக அல்ல. மாறாக மக்கள் பணம் 150 லட்சம் ரூபாவை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியமைக்காகவே. இத்தனை நாளும் தன்னை ஒரு கறை படியாத தூய அரசியல்வாதியாக நடித்து வந்தவரின் ஒரு முகம் இன்று தோலுரிக்கப்பட்டுள்ளது. தெரிந்ததே இவ்வளவு என்றால் தெரியாமல் எவ்வளவு சுருட்டியிருப்பார் இந்த யோக்கியன்? இங்கு வேடிக்கை என்னவென்றால் இது ஒரு அரசியல் பழி வாங்கல் என்று நாமல் ராஜபக்சா கண்ணீர் வடிக்கிறார். ஏனெனில் அடுத்து தன்னையும் கைது செய்து இந்திய நடிகைக்கு கொடுத்த பணம் குறித்து விசாரணை செய்வார்களோ என்ற அச்சம் அவருக்கு.😂 அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் சுருட்டி வைத்திருக்கும் மக்கள் பணம் யாவும் பறிமுதல் செய்ய வேண்டும். தோழர் பாலன்
  14. காலம் - 13 நவம்பர் 1989 இடம் - பட்டலந்தை வதைமுகாம் விஜயவீரா- என்னை சட்டப்படி நீதிமன்றில் நிறுத்துங்கள். நான் என் கருத்தை அங்கு கூறுகின்றேன். ரணில் - சட்டமாவது மயிராவது. உனது தோழர்கள் 60ஆயிரம் பேரை எப்படி கொன்று புதைத்தோமோ அதேபோன்று உன்னையும் கொல்லப் போகின்றோம். விஜயவீரா- இதற்குரிய பதிலை என் தோழர்கள் ஒருநாள் தருவார்கள். காலம் - 22 ஆகஸ்டு 2025 இடம் - கொழும்பு நீதிமன்றம். அரசு பணத்தை தமது சொந்த தேவைக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருக்கிறார். மிஸ்டர் கிளீன் அவர்களின் உண்மை முகம் நாட்டு மக்களுக்கு இனங் காட்டப்பட்டுள்ளது. அவரது வழக்கறிஞர்கள் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி அவருக்கு நீரிழிவு நோய், மனைவிக்கு புற்றுநோய் எனவே பிணையில் விடுதலை செய்யுங்கள் என மன்றாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசியல்வாதிகளுக்கு பதவியில் இருக்கும்போது எந்த நோயும் இருப்பதில்லை. ஊழல் வழக்கில் கைது செய்தவுடன் எல்லா நோயும் வந்துவிடுகின்றன. செய்தி – பிணை மறுக்கப்பட்டு ரணில் சிறை செல்கிறார். விஜயவீராவின் தோழர்கள் உரிய பதிலை ரணிலுக்கு வழங்கியுள்ளனர். பாராட்டுகள். இது மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையட்டும். தோழர் பாலன்
  15. ஆடடிச்சு அழகாகக் கழுவியெடுத்து அரிஞ்சு வைப்போம் ஓரமாக ஆறாகப் பாய்ந்த ஆட்டின் இரத்தத்திலே அருமையாகச் சுண்டிவைப்போம் ஆட்டுத்தலை பிளந்து அற்புதமாகப் பிரட்டியெடுப்போம் ஆட்டுக்கறி சமைத்து அயல் அண்டையார் சூழ ஆகா! ஓகோவெனப் புகழ்ந்து அகம் நிறைய உண்ணுவோம் 😂 Sinnarajah Shanmuganathan ############################ ######################### ஆட்டுக்கறியும்... ஆட்டக்காரியும் குழைச்சு வெளுக்க குடுத்து வைக்கவேணும் 😂 Sinnarajah Shanmuganathan
  16. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 26 ஆம் திகதி வரை விளக்கமறியல்! இன்று மதியம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1444328
  17. ஆஹா.... இந்தப் படங்களைப் பார்க்க அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. 👍 மகிந்த, கோத்தா.... ஆகியோர், "உச்சா" போகும் நிலையில் உள்ளதாக சொல்கிறார்கள். 😂
  18. சுத்துமாத்து சுமந்திரன்.... தனது பின்கதவு ஆருயிர் நண்பர் ரணில் சிறை செல்வதை இட்டு, ஹர்த்தால் செய்யவில்லையா. 😂 அல்லது ஏற்கெனவே அறிவித்த ஹர்த்தாலில் வாங்கிய மரண அடியில் இருந்து இருந்து இன்னும் மீளவில்லையோ. 🤣
  19. இலங்கையின் வரலாற்றிலேயே... முதன் முதலாக தேசியப்பட்டியல் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி, பொருளாதார மீட்பராகி, கைதாகி, பிணையாகி.... எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த எம்பெருமானார். 😂 🤣 Anusha Nadarajah

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.