Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி: 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம். செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ்- செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 11வது நாளாக நேற்றைய தினம் நடைபெற்றது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் இதுவரை 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 44 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1438254- குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!
குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்! ரஷ்யாவின் சில பகுதிகளில், பாடசாலை மாணவியர்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித்தொகை வழங்கி அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது. பொருளாதாரம், கலாசார மாற்றம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் குழந்தைபேறு குறைந்துவருகிறது. உலக மக்கள் தொகையில் முதலில் இருந்த சீனா மட்டுமின்றி ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் பிறப்பு விகிதம் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. ரஷ்யா — உக்ரைன் போரும், மக்கள் தொகை விகிதத்தை குறைத்துள்ளது. போரால், படித்த ரஷ்யர்களில் லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையிலேயே பல்வேறு வரி விலக்குகள், உதவித்தொகை போன்றவற்றை வழங்கி, மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1438224- அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு - 24 பேர் பலி
டெக்சாஸில் தொடர் கனமழை; 78 பேர் உயிரிழப்பு! கடந்த வெள்ளிக்கிழமை (04) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மத்திய அமெரிக்காவின், டெக்சாஸில் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த அனர்த்தத்தில் 41 பேர் காணாமல் போயுள்ளனர். இவற்றில் 28 சிறுவர்கள் உட்பட 68 இறப்புகள், கெர் கவுண்டியில் நிகழ்ந்தன. அங்கு ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ பெண்கள் முகாம் வெள்ளத்தில் மூழ்கியது. இறப்பு எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அடுத்த 24-48 மணி நேரத்தில் இப்பகுதியில் மேலும் புயல்கள் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர், அண்மைய டெக்சாஸ் வரலாற்றில் மிகப்பெரிய தேடல் மற்றும் மீட்பு முயற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. https://athavannews.com/2025/1438246- கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது
பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது! பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து வந்த குற்றபுலனாய்வு பிரிவினரால் இன்று (06) திருக்கோவிலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார். இந்த வழக்கு தொடர்பில் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து அவர் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1438227- டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரிப்பு!
டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரிப்பு! அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கோடை முகாமில் இருந்த 27 மாணவிகள் காணாமல் போயுள்ளதுடன் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்ததுடன் இதில் பலர் சிக்கி கொண்டுள்ளதுடன் இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதேவேளை, இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் 15 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. மேலும், 27 பேர் காணாமல் போயுள்ளதுடன் அவர்கள் அனைவரையும் மீட்கும் வரை எங்கள் பணி ஓயாது என டெக்சாஸ் மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மை துறையின் தலைவர் நிம் கிட் கூறியுள்ளார். இந்நிலையில், இதுவரை 850 பேர் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438221- இரா.சம்மந்தனின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு
சனங்கள் மறந்து இருந்த சம்பந்தனுக்கு… சாணி அடி வாக்கிக் கொடுக்க என்று, குகதாசன் எம்.பி. கிளம்பியிருக்கிறார். 😂 நரகலோகத்தில் இருந்து சம்பந்தனின் மைண்ட் வாய்ஸ்: சிவனே எண்டு இருக்கிற என்னை, ஏண்டா இதுக்குள்ளை கோத்து விடுறியள். 🤣- ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!
- நாசாவின் Voyager 1 விண்கலம், 48 ஆண்டுகள் பயணித்து ஒரு ஒளிநாளை மட்டுமே அடைந்துள்ளது.
வோயஜர் 1 விண்கலம் – ஓர் அற்புதமான விண்வெளிப் பயணம். (Voyager 1 Spacecraft – A Journey Beyond the Stars) நாசாவின் Voyager 1 விண்கலம், 48 ஆண்டுகள் பயணித்து ஒரு ஒளிநாளை மட்டுமே அடைந்துள்ளது. ஒரு ஒளியாண்டு எவ்வளவு பெரியது என்று கற்பனை செய்து பாருங்கள். 🔭 வரலாற்றுப் பின்னணி: வோயஜர் 1 (Voyager 1) என்பது நாசாவின் மிக முக்கியமான விண்வெளிக் கவனிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இது 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் முதற்கண் நோக்கம் – கிரகங்களை (Jupiter, Saturn) நேரடியாக ஆய்வு செய்வது. ஆனால் இந்த செயற்கைக்கோள் தனது வேலை முடிந்த பிறகு கூட நம்முடைய சூரியக் குடும்பத்தை விட்டு வெளியே பயணித்து, இப்போது மனிதனால் உருவாக்கப்பட்ட மிக அதிக தூரம் சென்ற சாதனமாக மாறியுள்ளது. 🌌 வோயஜர் 1 இப்போது எங்கே? இது சூரிய மண்டல எல்லையை (heliopause) கடந்த முதல் மனித உருவாக்கம். 2025-இல், வோயஜர் 1 விண்கலம் புவியிலிருந்து சுமார் 162 ஏயு (AU) தூரத்தில் உள்ளது. (1 AU = 1 Astronomical Unit = புவி முதல் சூரியன் வரை உள்ள தூரம் = சுமார் 15 கோடி கி.மீ.) எனவே: 162 AU \times 150 மில்லியன் கி.மீ = சுமார் 24.3 பில்லியன் கி.மீ. 🚀 எவ்வளவு ஆண்டுகள் பயணித்தது? 1977 முதல் 2025 வரை = 48 ஆண்டுகள்! இந்த 48 ஆண்டுகளில், வோயஜர் 1 இடைவிடாது சூரிய மண்டலத்திலிருந்து வெளியே சென்றுகொண்டே இருக்கிறது. ✨ ஒளி ஆண்டுகளில் வோயஜர் 1 எவ்வளவு தூரம் சென்றுள்ளது? ஒளி ஆண்டு = ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் தூரம் = சுமார் 9.46 டிரில்லியன் கி.மீ. வோயஜர் 1-இன் தூரம் = சுமார் 24.3 பில்லியன் கி.மீ. \frac{24.3 \text{ பில்லியன் கி.மீ.}}{9.46 \text{ டிரில்லியன் கி.மீ.}} = \approx 0.0026 \text{ ஒளி ஆண்டு} > 👉 அதாவது வோயஜர் 1 விண்கலம் சுமார் 0.0026 ஒளி ஆண்டுகள் தூரம் சென்றிருக்கிறது. 🛰️ வோயஜர் 1 – முக்கிய தகவல்கள்: விவரம் மதிப்பு ஏவப்பட்ட ஆண்டு 1977 பயணித்த ஆண்டுகள் 48 ஆண்டுகள் சூரிய மண்டல எல்லை கடந்த ஆண்டு 2012 புவியிலிருந்து தூரம் சுமார் 24.3 பில்லியன் கி.மீ. ஒளி ஆண்டுகளில் சுமார் 0.0026 light years தற்போதைய வேகம் சுமார் 61,000 கி.மீ/மணிநேரம் 🌍 அது எதைக் நோக்கி பயணிக்கிறது? வோயஜர் 1, சூரிய மண்டலத்தை விட்டு வெளியே சென்று "interstellar space" எனப்படும் நட்சத்திரங்களுக்கு இடையிலான வெளிக்கோளத்தில் பயணிக்கிறது. அது ஒரு சிறிய நட்சத்திரமாகிய AC +79 3888 (எண்) என்ற திசையில் பயணிக்கிறது. ஆனால் அந்த நட்சத்திரத்தை அடைய 40,000 ஆண்டுகள் ஆகும். 📻 இன்னும் தொடர்பு உள்ளதா? ஆம்! வோயஜர் 1 இப்போது மிகவும் மெல்லிய சிக்னல்களை NASA-வின் Deep Space Network மூலம் அனுப்பி வருகிறது. ஆனால் 2025க்கு பிறகு அதன் சக்தி முழுமையாக முடிவடையும், அதன்பின் தொடர்பு முடங்கும். 📦 வல்லரசுகளுக்கான "கோல்டன் ரெகார்ட்": வோயஜர் 1-இல் ஒரு தங்க பதிவுத் தட்டு (Golden Record) உள்ளது – இதில் பூமியைப் பற்றி ஒலிக்கோப்புகள், மொழிகள், இசை, மனிதன் மற்றும் இயற்கையின் படங்கள் உள்ளன. இது வெளிநாடிகளுக்கு ஒரு அறிவிப்பாகும் – “நாம் இங்கே இருக்கிறோம்!” என்று. 🔚 முடிவுரை: வோயஜர் 1 என்பது ஒரு சாதாரண விண்கலமாக அல்ல, அது மனித அறிவு மற்றும் ஆர்வத்தின் ஒரு சிலை. 48 ஆண்டுகளாக பயணித்து இன்னும் தொடர்கிறது – புவியின் சிறிய உலகத்திலிருந்து பிரபஞ்சத்தின் நெடுந்தூரங்களை நோக்கி. இது நமக்கெல்லாம் நினைவூட்டுவது: > "அறிவும் கனவுகளும் இணைந்தால், நட்சத்திரங்களை தொட முடியும்!" குறிப்பு : தற்போதைய வேகம்: 17 கி.மீ/விநாடி (அதாவது ஒரு விநாடிக்கு 17 கிலோமீட்டர் பயணம்!) 48 ஆண்டுகள் பயணித்துக் கொண்டிருக்கிறது எனில் நம்முடைய சூரிய மண்டலமே எவ்வளவு பிரம்மாண்டம்.. இப்படி இருக்க பிரபஞ்சத்தை யாரால் கணிக்க முடியவில்லை.. ஆனால் அதற்குள் தான் நாம் இருக்கிறோம் அது நமக்குள் இருக்கிறது.. நாம் அதை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்பது மிகவும் சுவாரசியம். R Ahilesh- அமெரிக்காவின் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் எலான் மஸ்கின் புதிய கட்சி!
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- காணொளிகளின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதி – நிலாந்தன்!
காணொளிகளின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதி – நிலாந்தன்! அணையா விளக்கு போராட்டத்தில் தன்னை நித்திரை கொள்ளவிடாமல் தடுத்த இரண்டு சம்பவங்களைப் பற்றி அதில் அதிகமாக ஈடுபட்ட ஒருவர் சொன்னார். முதலாவது சம்பவம், ஒரு முதியவர்-மிக முதியவர்- காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மகனின் தகப்பன். அவர் அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வந்து போனபின் அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டாராம், “தம்பி இனி எங்களுக்குத் தீர்வு கிடைக்குமா? காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் திரும்பக் கிடைப்பார்களா?” என்று. அவர் நம்புகிறார், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வந்ததால் ஏதோ தீர்வு கிடைக்கும் என்று. அந்த நம்பிக்கை, அதுவும் அந்த முதிய வயதில் அவருக்கு இருந்த நம்பிக்கை, தன்னைத் துன்புறுத்தியதாக அந்த ஏற்பாட்டாளர் சொன்னார். இரண்டாவது சம்பவம், ஒரு முதிய தாய், ஒரு பையனின் படத்தையும் வைத்துக்கொண்டு அங்கே இருந்திருக்கிறார். அவரோடு கதைத்த பொழுது அவர் சொன்னாராம்,”நான் இது போன்ற போராட்டங்களில் இதுவரை பெரும்பாலும் பங்குபற்றியது இல்லை. இது மக்களால் மக்களுக்கு என்று கூறப்பட்டதால் நான் வந்தேன்.இது அரசியல்வாதிகளால் ஒழுங்கு செய்யப்படாத, ஆனால் மக்களால் ஒழுங்கு செய்யப்படுகின்ற ஒரு போராட்டம் என்றபடியால் வந்தேன்.” என்று.மேலும், “இது போன்ற போராட்டங்கள் எதிர்காலத்தில் நடந்தால் நான் அதற்கு வர இருக்கிறேன். யாரோடு கதைக்க வேண்டும்?” என்றும் கேட்டிருக்கிறார். அப்பொழுது அந்த செயற்பாட்டாளர் சொன்னாராம், “நீங்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காகப் போராடும் சங்கங்களோடு தொடர்பில் இல்லையா?” என்று. அவர் கூறினாராம்,” இல்லை” என்று. அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் சங்கங்களோடு தொடர்பில் இல்லாமலேயே ஒரு தொகுதி முதிய பெற்றோர் உண்டு. கட்சி சாரா மக்கள் போராட்டம் என்று வரும்பொழுது அவர்கள் அரங்கினுள் இறங்குகிறார்கள். இது அணையா விளக்குப் போராட்டத்துக்கு இருந்த மக்கள் பரிமாணத்தை காட்டுகிறது. ஆனால் துயரம் என்னவென்றால், இந்த இரண்டு முதியவர்களையும் அங்கே யாரும் நேர்காணவில்லை. அவர்களைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் அங்கே வந்திருந்திருக்கலாம். செம்மணியில் புதைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தெரியாது. யாரையெல்லாம் புதைத்தார்கள் என்றும் தெரியாது. ஆனால் தங்கள் பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோர் நூற்றுக்கணக்கில் கிராமங்கள் தோறும் உண்டு. அவர்களிடம் போனால் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு கதை வைத்திருப்பார்கள்.அதற்குள் சில சமயம் கிளைக் கதைகளும் இருக்கும். இதில் எத்தனை கதைகள் இதுவரை ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன? அண்மையில் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்ற மண்டபத்தில் அவ்வாறு காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பான ஒர் ஆவணம் வெளியிடப்பட்டது. “ஏழுநா” நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தை இயக்கியவர் ஈழத்து சேகுவாரா என்று அழைக்கப்படுகின்ற ராஜ்குமார். முதலில் ராஜ்குமாரை பற்றிக் கூற வேண்டும். ஏனென்றால் அவருடைய கதையும் ஒரு துயரக் கதை. சூழ்ச்சிக் கோட்பாடுகளால் சூழப்பட்ட ஒரு கதை. ராஜ்குமார் புனர் வாழ்வு பெற்ற பின் விடுவிக்கப்பட்டவர்.இந்திய வம்சாவளியினரான வறிய தாய்க்கு பிறந்த இரண்டு பிள்ளைகளில் ஒருவர். மூத்த சகோதரர் ஏற்கனவே இயக்கத்தில் இருந்துபோர்க் களத்தில் இறந்தவர்.. தாயும் சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் காரணமாக, போதிய சிகிச்சை இன்றி, அதற்கு வேண்டிய வளமின்றி இறந்து போனார். புனர் வாழ்வு பெற்ற பின் ராஜ்குமார் வவுனியா மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோடு வேலை செய்தவர். தவிர வெவ்வேறு ஊடகங்களிலும் வேலை செய்தவர்.எனக்கு ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் 2015க்கு முன்னர் என்று நினைக்கிறேன். வவுனியாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தில்,குமார் பொன்னம்பலம் நினைவுப் பேருரை ஆற்றுவதற்காகப் போயிருந்தேன். நிகழ்வு முடிந்த பின் ராஜ்குமார் என்னை சந்தித்தார்.2009க்குப் பின் அவர் என்னை முதன்முதலாக கண்டது அப்பொழுதுதான்.என்னிடம் எனது தொலைபேசி இலக்கம்,மின்னஞ்சல் போன்றவற்றை கேட்டார். அவருக்கு நான் அவற்றை வழங்கிக் கொண்டிருந்த பொழுது,சிறிது தொலைவில் நின்ற ஒரு சிவில் சமூகச் செயற்பாட்டாளர் என்னை பார்த்து அவருக்கு அதை கொடுக்காதே என்று சைகை காட்டினார். அதேபோல ஒரு கட்சிப் பிரமுகரும் அவர் கேட்பதைக்கொடுக்க வேண்டாம் என்று எனக்குச் சைகை காட்டினார். ஆனால் நான் கொடுத்தேன். அவர் போனபின் அந்த இருவரிடமும் கேட்டேன், ஏன் கொடுக்கக் கூடாது ?என்று. அவர்கள் சொன்னார்கள், “அவர் இப்பொழுது பச்சையின் ஆள். புனர் வாழ்வின் பின் அவர்களுடைய ஆளாக வேலை செய்கிறார்” என்று. நான் சொன்னேன் “இருக்கலாம்.புனர் வாழ்வு பெற்றவர்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கு புலனாய்வுப்பிரிவு அவர்களோடு தொடர்புகளைப் பேணும்.அதைவிட முக்கியமாக அவர்களுக்கு வேறு ஒரு இலக்கும் உண்டு. என்னவென்றால் புனர் வாழ்வு பெற்றவர்கள் புலனாய்வுத் துறையோடு தொடர்புடையவர்கள் என்று சமூகத்தை நம்ப வைத்தால் சமூகம் அவர்களை நெருங்கி வராது. அவர்களை சந்தேகிக்கும். அவர்களைக் கண்டு பயப்படும்; வெறுக்கும், அவர்களோடு ஒட்டாது. அவர்களை தூர விலக்கி வைத்திருக்கும். இவ்வாறு ஒரு காலம் தமக்காக போராடப் போய் கல்வியை, இளமைச் சுகங்களை ,கை கால்களை, கண்களை இழந்தவர்களை,எந்த சமூகத்துக்காக அவர்கள் போராடப் போனார்களோ அந்த சமூகமே சந்தேகிப்பது அல்லது அந்த சமூகமே அவமதிப்பது என்பது அரசாங்கத்துக்கு வெற்றி.எனவே தன் சொந்த மக்களாலேயே அவர்கள் அவமதிக்கப்பட வேண்டும், நிராகரிக்கப்பட வேண்டும் என்று அவர்களை தோற்கடித்தவர்கள் எதிர்பார்ப்பார்கள்.அந்த எதிர்பார்ப்பை நீங்கள் நிறைவேற்றப் போகிறீர்களா? நாங்கள் அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. விழிப்பாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களை அரவணைக்க வேண்டும். என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்று சொன்னேன். இறக்கும்வரை ராஜ்குமார் சந்தேகிக்கப்பட்டார். அவர் முதலில் வேலை செய்த ஒர் ஊடகத்தின் ஆசிரியர் என்னிடம் கேட்டார்,”அவர் யார்? ஒரு புதிராகவே தெரிகிறார்.அவரைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. நம்பவும் முடியாமல் இருக்கிறது”. என்று. ஆம்.ஈழம் சேகுவாரா கடைசி வரை சந்தேகிக்கப்படும் ஒருவராகவே இறந்தார். ஆனால் அவர் தயாரித்து இன்று தமிழர் தாயகம் எங்கும் திரையிடப்படுகின்ற அந்தக் காணொளி சந்தேகங்களுக்கு அப்பால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கேட்பது. அதுபோல பல காணொளிகள் வரவேண்டும். இக்கட்டுரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டதுபோல அந்த இரண்டு முதியவர்களைப்போல ஆயிரம் முதியவர்கள் எல்லாக் கிராமங்களிலும் இருப்பார்கள். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுடைய கதைகளை வெளியே கொண்டுவர வேண்டும். அது ஒருவிதத்தில் கலையாகவும் இருக்கும்;அரசியலாகவும் இருக்கும்; இன்னொரு விதத்தில் யுத்த சேதங்களைக் கணக்கெடுப்பதாகவும் இருக்கும். இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளோடு பல ஆண்டுகளுக்கு முன் நான் கதைத்திருக்கிறேன். “இதுபோன்ற விவரங்களை அதாவது யுத்தத்தின் சேதங்களைக் கணக்கெடுக்கும் அல்லது புள்ளி விபரங்களைத் திரட்டும் நடவடிக்கைகளை ஒரு அரசியல் செயற்பாடாக, ஒரு போராட்ட வடிவமாக முன்னெடுக்கலாம். கிராமங்கள் தோறும் நடமாடும் அலுவலகங்களை நிறுவி அல்லது கட்சிக் கிளைகளைப் பரப்பி, அங்கெல்லாம் கிராம மட்டத்தில் தகவல்களைத் திரட்டலாம். இது ஒருபுறம் தகவல் திரட்டுவதாகவும் அமையும். இன்னொருபுறம் கட்சியைப் பலப்படுத்துவதாகவும் அமையும்” என்று தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் கூறியிருக்கிறேன். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் சொன்னார்,அதற்கு ஓர் அரசியல் சூழல் வேண்டும் என்று.உண்மை. அதற்குரிய அரசியல் சூழல் இல்லை என்றால் அவ்வாறு திரட்டுபவர்களுக்குப் பாதுகாப்புப் பிரச்சினைகள் வரலாம்.எனவே அதில் உள்ள ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கு அந்தக் கட்சி அல்லது அமைப்பு தயாராக இருக்க வேண்டும். இதை நான் கேட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.அப்போது இருந்ததை விடவும் இப்பொழுது அரசியல் சூழல் தேறியிருக்கிறது. இனிமேல் மக்கள் துணிந்து முன்வந்து சாட்சிக் கூறக்கூடும். சான்றுகளைத் தரக்கூடும். தவிர ஐநாவிலும் அவ்வாறான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஓர் அலுவலகம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.எனவே சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பது என்பது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஓர் அனைத்துலக நடைமுறையாக உள்ளது.எனவே இந்த விடயத்தில் இனி கட்சிகளும் செயற்பாட்டு அமைப்புகளும் துணிந்து இறங்கலாமா? நிதிக்கான போராட்டத்தின் முதல் படி அதுதான். நீதியைப் பெறுவதற்குத் தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பது.அதை ஒரு செயற்பாட்டு ஒழுக்கமாகக் கட்சிகள் செய்யலாம். அதன்மூலம் கட்சிகளுக்கும் மக்களுக்கும் இடையில் உயிர்த் தொடர்பு உண்டாகும். அதைவிட முக்கியமாக கட்சிகள் மக்களின் துயரங்களுக்கு மேலும் நெருக்கமாக வரும்.இது கட்சிகளுக்கும் பலம். மக்களுக்கும் பலம். அதிலும் குறிப்பாக இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல அமைப்புகளுக்குள் வராத, இப்பொழுதும் நம்பிக்கைகளோடு காத்திருக்கிற, முதிய பெற்றோருக்கு அது ஆறுதலாக அமையும்.அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்காலத்தைக் குறித்த அவநம்பிக்கையோடு இறந்து போய்விட்டார்கள். இருப்பவர்களும் அவ்வாறு அவநம்பிக்கையோடு இறக்காமல் இருப்பதற்கு கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் குறிப்பாக காணொளி ஊடகங்களும் அவர்களை நோக்கிச் செல்ல வேண்டும். செம்மணியில் அணையா விளக்கு போராட்டக் களத்தில், சேகரித்திருக்க வேண்டிய காணொளிகள் அவைதான்.தேசத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை உணர்ந்த எல்லா ஊடகக்காரர்களும் யு டியூப்பர்களும் கிராமங்களை நோக்கி வரவேண்டும். இந்த முதிய பெற்றோரை நேர்காண வேண்டும்.அந்த கதைகளுக்கு அதிகம் வியூவர்ஸ் கிடைக்காமல் போகலாம். அந்த கதைகளை சர்ச்சைக்குரிய காணொளி உள்ளடக்கங்களாக மாற்றுவது கடினமாக இருக்கலாம். ஆனால் இந்த இடத்தில் காணொளி ஊடகங்களும் யூடியூபர்களும் ஒன்றைத் தீர்மானிக்க வேண்டும். தேசத்தைக் கட்டி எழுப்புவதா? அல்லது சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை வலிந்து தேடுவதா? வியூவர்ஸைக் கூட்டுவதற்காக சூடான செய்தியைக் கொடுப்பதா? அல்லது தேசத்துக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதா? கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞரான ஹெர்பர்ட் மார்க்யூஸ் கூறுவார் “புள்ளி விவரங்கள் குருதி சிந்துவதில்லை” என்று. ஆம். கைது செய்யப்பட்ட பின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? சரணடைந்த பின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? யார் பிடித்தது என்று தெரியாமலே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? போன்ற எல்லா விபரங்களையும் புள்ளி விபரங்களாகவன்றி ரத்தமும் சதையுமாக,கதைகளாக வெளியே கொண்டுவர வேண்டும். அந்தக் கதைகள்தான் இரத்தம் சிந்தும்.அந்தக் கதைகள்தான் தேசத்தைத் திரட்டும்.அந்தக் கதைகள்தான் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும்.நீதிக்காகப் போராடும் தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது அவ்வாறான கதைகளை வெளியே கொண்டு வரும் ஊடகங்கள்தான்.சர்ச்சைகளை உருப் பெருக்கி பார்வையாளர்களின் தொகையைக் கூட்டும் ஊடகங்கள் அல்ல. பிரபலமானவரோடு மோதி அல்லது பிரபலமானவரின் வாயைக் கிண்டி சர்ச்சையை உருவாக்கும் ஊடகங்கள் அல்ல.தேசத்தைக் கட்டியெழுப்பும் ஊடகங்கள்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க உழைக்கும் ஊடகங்கள். https://athavannews.com/2025/1438208- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அத்துடன்.... மிருக வைத்தியசாலைக்கு வந்து, நோய் குணமாகாமல் இறந்த மிருகங்களையும், அடக்கம் செய்யுற செலவும் மிச்சம். கையோடை ஆட்களுக்கு கிறில் பண்ணி விற்று காசாக்கிப் போடலாம். 🤣- அமெரிக்காவின் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் எலான் மஸ்கின் புதிய கட்சி!
அமெரிக்காவின் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் எலான் மஸ்கின் புதிய கட்சி! உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். ஜனநாயக மற்றும் குடியரசு எனும் இருகட்சி முறைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் ‘America Party’ எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்ததாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். தேசிய அளவில் பரவலான வேட்பாளர்களை நிறுத்துவதற்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய இடங்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கட்சி, 2 அல்லது 3 செனட் இடங்கள் மற்றும் 8 முதல் 10 ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை மாவட்டங்களில் மாத்திரமே கவனம் செலுத்தும் என அவர் கூறியுள்ளார். கட்சியின் நிர்வாகம், வேட்பாளர்கள், நிதி விபரங்கள் உள்ளிட்டவை இன்னும் வெளியிடப்படவில்லை எனவும், 2026 ஆம் ஆண்டு தேர்தல்களை இலக்குவைத்து இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடனான கருத்து வேறுபாட்டையடுத்து அவர் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438211- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கால்நடை மருத்துவமனைக்கு முன்னால்... ஒரு கிறில் (Grill) கடை. 😂- கருத்து படங்கள்
- சிறையில் இருக்கும் உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் ! குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள்!
சிறையில் இருக்கும் உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் ! குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள்! சிறைகளுக்குள் கொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்(5) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அழைப்பு விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை, ஜனநாயக சோசலிச குடியரசு எனும் பெயரை தாங்கி நிற்கிறது. ஆனாலும் இந்த ஜனநாயக சோசலிசம் வெளிப்படுத்தும் விழுமியங்களுக்கு மாறாக ஒடுக்கும் அரசாகவே இவ்அரசு பரிணமித்துள்ளது. இந்த அரசினது இரும்புச் சிறைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளை உணர்வுபூர்வமாய் மனங்கொள்ள வேண்டியது தமிழ் மக்களாகிய நம் ஒவ்வொருவரதும் கடமையாகும். அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நாம் மறந்து விடலாகாது. நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெவ்வேறு காலப்பகுதிகளில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான எமது உறவுகளை நினைவேந்துவதுடன், 30 ஆண்டுகள் கடந்தும் விடுதலை இன்றி இன்றுவரை சிறைக்கூடங்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் சுதந்திர விடியலுக்காக கரம் கோர்த்து குரலுயர்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். ‘ஜூலைக் கலவரத்தின் சிறைப்படுகொலை நாளான ஜூலை 25ம் திகதியை முன்னிறுத்தி, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான உணர்வுபூர்வமான போராட்டத்தை முனைப்புடன் முன்னெடுக்க குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு சகல தமிழ் சமூகங்களிடமும் அழைப்பு விடுக்கின்றது. எதிர்வருகின்ற, 24 மற்றும் 25ஆம் திகதிகளில், யாழ்ப்பாணம் கிட்டு பூங்கா சுற்றயலில் இடம்பெறும் இந்த நினைவேந்தல் செயற்பாட்டில் சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினரும் தவறாது பங்கேற்று, ” ஒன்றிணைந்து குரல்களை உயர்த்தி உறவுகளின் விடுதலைக்கு அணி திரண்டு வலுச் சேர்ப்போம் என தெரிவித்தார். https://athavannews.com/2025/1438158- ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளத்தை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! ரவிகரன் வலியுறுத்து!
ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளத்தை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! ரவிகரன் வலியுறுத்து! முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள ஏகம்பைக்குளத்தையும், பிராமணகுளத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். குறித்த குளங்கள் இரண்டும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தநிலையில், தற்போது அப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவருகின்றனர் இந்நிலையில் குறித்த பகுதியை வனவளத்திணைக்களத்தினர் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையிலேயே குறித்த குளங்களை விடுவிப்புச்செய்து மக்களின் விவசாய பயன்பாட்டிற்கு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இது தொடர்பில் கருத்து தெரிவித்த , கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியுள்ளபோதும், இராணுவ முகாம் முற்றாக அங்கிருந்து அகற்றப்படவில்லை எனவும் இராணுவம் விடுக்கின்ற இந்தப்பகுதியை வனவளத் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுப் பகுதியாக எடுத்துக்கொண்டு பின்னர் அப்பகுதியிலிருந்து இராணுவ முகாம் முற்றாக அகற்றப்பட்ட பின்னர் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் ஊடாக குறித்த குளங்களுக்குரிய பகுதிகளை அளவீடுசெய்து எல்லைகளை வரையறுத்து வனவளத் திணைக்களத்திடமிருந்து குளங்களுக்குரிய பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார். இந்நிலையில் எவ்வாறாயினும் மக்கள் விவசாயத்திற்காக பயன்படுத்துகின்ற இக்குளங்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438189- யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணியில் இதுவரை 45 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்பு! செம்மணியில் நேற்றைய தினம் (05) மேலும் 3 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் பத்தாம் நாள் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது மேலும் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 45 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூட்டு தொகுதியில் இதுவரையில் நேற்றைய தினம் 05 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையில் 42 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை செய்மதி படங்களின் அடிப்படையில் மேலும் மனித புதைகுழி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிரிதொரு இடத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வு அகழ்வு பணியில் மனித என்பு சிதிலங்கள் என சந்தேகிக்கப்படும் சில சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மண்டையோடு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1438205- வெளிநாட்டினர் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்த நடவடிக்கை!
வெளிநாட்டினர் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்த நடவடிக்கை! வெளிநாட்டினர் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்துவதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கருமபீடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த ஆகியோரின் தலைமையில் திறக்கப்பட்டது. தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் கைத்தொழில் அமைச்சு ஜனாதிபதியிடம் முன்வைத்த முன்மொழிவைத் தொடர்ந்து இத் திட்டம் நிறுவப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும் பெறுமதி சேர் வரியை திரும்ப வழங்குவதே இதன் நோக்கமாகும். அதன்படி, 50,000 ரூபாவுக்கும் அதிகமான VAT வரியை செலுத்தி, 90 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள், இந்த கரும பீடம் மூலம் செலுத்திய VAT வரியைப் பெற முடியும். சுற்றுலாப் பயணிகள் இலங்கைப் பொருட்களை வாங்குவதை ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையில் வரி அறவிடுவதை நெறிப்படுத்துவதற்காகவும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1438184- செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்! யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழர் மக்கள் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நேற்று (5) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு முதல் இப்போது உள்ள ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு வரை எந்தவித கண்டன குரல் எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருந்து வருவதாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து, இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் இந்திய அரசு வழக்கம் போல கள்ள மௌனம் காக்காமல் பன்னாட்டு விசாரணை நடத்த குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தமிழக மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி, தமிழர் மக்கள் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1438186- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
திரும்பவில்லை "அவர்கள் திரும்பி வருவார்கள்..." அந்த நம்பிக்கையில் தான் — தாய்கள் தூங்காமல் வாழ்ந்தனர், சகோதரிகள் கண்கள் சோர்ந்தது எதிர்பார்ப்பில், பிள்ளைகள் கதவுகள் ஓரம் கண்பார்த்து வளர்ந்தனர். ஒரு நாள் – ஒரு குரல் கேட்கும், ஒரு நிழல் திரும்பும், ஒரு நினைவாய் கதவு தட்டும்… என நம்பினோம். ஆனால் வந்தது அவர் இல்லை வந்தது ஒரு செய்தி. செம்மணியில் — அவர் பெயரற்ற எலும்பாக மண்ணடியில் கிடப்பதாக. அந்தக் குழியில் புதைந்தது — ஒரு உடலல்ல, ஒரு உறவின் கனவு, ஒரு இனத்தின் நம்பிக்கை. அவர்கள் காணாமல் போனவர்கள் அல்ல காணப்படாமல் மறைக்கப்பட்டவர்கள். மண் இன்னும் உதிரும் உண்மை சொல்கிறது — "அவர்கள் திரும்பவில்லை… ஏனெனில் நீதி அவர்களுடன் இந்த நிலத்துக்குள் புதைக்கப்பட்டது." 🕯️ நாம் அவர்களை திரும்ப பெற முடியாது… ஆனால், நீதியை மட்டுமாவது திரும்ப பெற முடியாதா? "அவர்கள் திரும்பி வருவார்கள்…" அந்த நம்பிக்கையோடுதான் ஒரு இனத்தின் ஆயிரக்கணக்கான தாய்மார்களும், சகோதரிகளும், பிள்ளைகளும் தினமும் வாழ்ந்தனர். ஒரு நாளாவது – அவர் மீண்டும் வருவார், ஒரு குரல் கேட்கும், ஒரு நினைவாய் கதவை தட்டுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் வந்தது அவர் அல்ல வந்தது ஒரு தகவல். செம்மணியில்—அவர் பெயர் தெரியாத எலும்பாகக் கிடப்பதாக. அந்தக் குழியில்தான் புதைந்தது, அவர் மட்டும் அல்ல... ஒரு உறவின் எதிர்பார்ப்பு, ஒரு இனத்தின் நம்பிக்கையும். அவர்கள் காணாமல் போனவர்கள் அல்ல காணப்படாமல் மறைக்கப்பட்டவர்கள். அந்த மண் இன்னும் சொல்கிறது – “அவர்கள் திரும்பவில்லை, ஏனெனில் அவர்களுடன் நீதி ஒரு நாட்டின் நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளது.” 🕯️ நாம் அவர்களை திரும்பப் பெற முடியாது. ஆனால் அவர்களுக்கான நீதியை மட்டுமாவது திரும்ப பெற முடியுமா? (முகநூலில் படித்த கவிதை.)Important Information
By using this site, you agree to our Terms of Use.
- யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.