Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. நான் நினைக்கிறேன் அவசர பதட்டத்தில் முருகன் இவரைச் சூரன் எனத் தவறுதலாக நினைத்து ஆள்மாறாட்டத்தில் தாக்கிவிட்டார் போலும்.
  2. சொந்த அடையாளங்களை மறுப்பது மட்டுமல்ல இனதூய்மைவாதம், இனவெறி என்ற நச்சு விதையை தமிழ்நாட்டில் தனது மலிவான அரசியலுக்காக விதைக்க முற்படும் கேவலமான மனிதர். ஏற்கனவே இனவாதத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரின் பிணங்களை பயன்படுத்தி இனவாதத்தை தூண்டிவருவது எவ்வளவு கேவலமான செயல். சுயநலத்திற்காக எந்த கீழ்நிலைக்கும் இறங்க கூடியவர் என்பதை புரிந்து கொண்ட தமிழ் நாட்டு மக்கள் இவரைத் தோற்கடித்தே வருகின்றனர். ந
  3. தப்பு தப்பு! யக்கோப்பு செபஸ்ரியான் சைமன் என்று பாட்டன் பெயரையும் சேர்தது சொல்லுமல்ல. பூர்வீகம் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டை ஆள துடிப்பது தவறில்லை. ஏனென்றால் இன்று உத்தியோகபூர்வமாக அவர் தமிழ்நாட்டு குடிமகன். என் பாட்டன் என்று இராவணன், ராஜராஜசோழன் தொடக்கம் வ உ சி வரை இரவல் பாட்டன் பெயரை பட்டியல் போடுபவர் தனது சொந்த பாட்டன் யக்கோப்பு பெயரை கேட்டால் பம்முவார் நெளிவார் கூச்சப்படுவார். 😂
  4. தென்னிந்திய மொழிகள் எல்லாம் தமிழில் இருந்து காலவொட்டதில் பிரிந்தன என்றால் எல்லோரும் ஒரே மரபு இன மக்கள் தானே. இதிலென்ன தமிழ் பெரிய மேளம், தெலுங்கு சின்ன மேளம் என பிரிப்பு என்பது புரியவில்லை. எமக்கு தொடர்பில்லாத பக்கத்து நாட்டில் சாதிப்பிரிவினைகளை ஊக்குவிக்கும் கதையாடல்களை மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ள நாம் எமது நாட்டில் இன ஒடுக்குமுறை என்று ஒலமிடுவது முரண்பாடாக தெரியவில்லையா?
  5. மீண்டும்… பொதுமக்களின் அரசியலை பாதிக்கும் தலைமைகளின் அரசியலை விமர்சிப்பதுக்கு அந்த நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு. அதை மறுக்க எவருக்கும் அதிகாரம்இல்லை. இது உலக வழமை. அரசியல் விமர்சனத்தை கண்டு பயந்து அதை ஒடுக்குபவர்கள் கோழைகள். அரசியல் விமர்சனத்துக்கு பதில் கூற தகுதியற்ற அதற்கான அறிவற்ற தற்குறிகளே இப்படியான, “காலைக்கழுவுதல், நக்குதல்” போன்ற வசவுகளை பயன்படுத்துவார்கள். எனவே தான் உங்களுக்கும் இந்த வசனங்களை அடிக்கடி பாவிக்கும் உரிமை யாழ்களத்தில் வழங்கப்பட்டிருக்கிறது போலும். ஆதலால், பரவாயில்லை, புரிந்து கொள்ளக்கூடிய விடயம் தான்.
  6. இந்த சசிகலாதானே போன முறை தேர்தலில் தோற்றதும் மூக்கு சிந்தி அழுது ஒப்பாரி வைக்க, இவாவோட சேர்ந்து புலம்பெயர் எல்லாம் சேர்ந்து ஒப்பாரி வைச்சு ட்ராமா போட்டவையள். 😂
  7. ஏராளன், பராளுமன்ற உறுப்பினர்கள் விலகுவது புதியவர்கள் வருவது வரவேற்கத்தக்கதே. ஆனால் அதுவல்ல இங்கு பிரச்சசனை. இந்த தமிழ் நெற் ஜெயா கூறுவதை போன்ற பிரிந்து போகக்கூடிய இணைப்பாட்சியை ( Confederation) அரசியலமைப்பை உருவாக்கக் கூடிய வலு இப்போது தமிழர் தரப்பில் உள்ளதா? பாரிய அரசியல் பலமும் சக்திவாய்ந்த உலக நாடுகளின் அபரிமிதமான ஆதரவும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அதல பாதாளத்தில் இருக்கும் தமிழர் அரசியல் பலத்தையும் ஏறெடுத்து கூட பார்ககாத உலநாடுகளின் தற்போதைய நிலையில் இது சாத்தியமா? சாத்தியமான சந்தர்ப்பங்களைப் பாவித்து இன்றைய நிலையை விட மேம்பட்ட அதிகார பரவலாக்கத்துடன் கூடிய அரசியலமைப்பை உருவாக்க முற்படுவதே புத்திசாலித்தனமான செயல் என்பது எனது கருத்து.
  8. காணொளியை முழுமையாகப் பார்த்தேன். இவர் எம்மைப்போல் ஒரு சாமான்யன் அல்ல. நீண்ட காலம் இவ்வாறான அரசியல் ஆய்வுகளை செய்பவர். புலம் பெயர் அரசியல் அமைப்புகளுடன் நீண்டகாலமாக தொடர்சசியான தொடர்புகளை பேணுபவர். ஆகவே இவர் கூறியவற்றை நடைமுறைப்படுத்துவதானால் இவரும், இவரது புலம் பெயர் அமைப்புக்களும் கூட்டாக தாயகம் சென்று, இதை மக்களுக்கு புரியவைத்து மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்று இவர் இப்போது கூறியவற்றை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான குறைந்த பட்ச முயற்சிகளையாவது எடுத்திருக்க வேண்டும். புலம் பெயர் தமிழ் அரசியல் அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பவராதலால் இதற்குத்தேவையான நிதிவளத்தையும் கொண்டவராகவே இருப்பார். ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கு இந்த ஞானோதயம் வந்திருந்தாலும் தாயகம் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்து மக்களைச்சந்தித்து இக் காணொளியில் கூறிய விடயங்களை மக்களுக்கு கூறி இவர் குறை கூறும் அரசியல்வாதிகளை தோற்கடித்து பாராளுமன்றம் சென்று இதை நடைமுறைப்படுத்த முயற்சிதிருக்கலாம். அதை விடுத்து எங்கோ ஒரு மூலையில் இருந்து கற்பனை குதிரையில் ஏறி போகமுடியாத ஊருக்கு வழி சொல்லி பொழுது போக்குவதில் அர்ததம் இல்லை. தாயக அரசியல்வாதிகள் மோசமானவர்கள் தான். ஆனால், அவர்களை குறை சொல்ல இந்த கற்பனாவாதிக்கு எந்த அருகதையும் இல்லை. சுமந்திரனாவது இப்போதைய அரசியலமைப்பை விட மேம்பட்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்க பல முயற்சிகளை செய்துள்ளார். இவர் எதையும் செய்யாது வெறும் இவ்வாறான அலசல்கள் மட்டும் தான். இப்போதைய ground reality என்ன என்பதைப்பற்றி எந்த அக்கறையுமற்று மாய உலகில் வாழ்பவர்களுக்கு வெறும் வாயை மெல்லும் இவர் சொல்வது இனிக்கலாம்.
  9. எல்லாரையும் சேர்த்து தானே சொன்னேனுங்க. இனி புலம்பி என்ன பிரயோசனம். ரூ லேற் சார்.
  10. நீங்கள் அப்படி கற்பனையில் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளாமல், எல்லாவற்றையும் நிராகரித்து பலமிழந்தால் எந்த பேரினவாதமும் இப்படி தான் நடந்து கொள்ளும். அதற்கான விளைவை அனுபவிக்க தான் வேண்டும். மற்றயவர்கள் மீது பழி போட்டு எம்மை நாமே ஏமாற்றி சுய திருப்தி அடைவதில் எந்த பயனும் எமக்கு ஏற்படப்போவதில்லை. எவரும் எம்மை திரும்பி கூட பார்க்கப்போவதில்லை. மேலும் இதற்கான விரிவான பதிலை பல திரிகளில் கூறிவிட்டேன். இனி கேட்டது எப்படியும் கிடைக்கப்போவதில்லை. ஆகவே கிடைத்ததை வைத்து எமது இருப்பை காப்பாற்ற வேண்டும் எம்மை பலப்படுத்த வேண்டும். இல்லையெனில் தமிழர் மேலும் பலமிழந்து பெரும் பாலான இளையோர் வெளியேறி எண்ணிக்கை குறைந்து இலங்கையின் மூன்றாவது சிறுபான்மை இனம் என்ற நிலையை அடையவேண்டியது தான்.
  11. சரி அப்படி சொல்லி நீங்கள. மனதை தேற்றிக் கொள்வதை பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை. சேகுவரா கியூபாவில் மரபுவழி யுத்தம் செய்யும் போது பிடிபட வில்லை. சிறிய கெரில்லா குழுவாக பயணம் செய்யும் போது பொலிவியாவில் கைது செய்யப்பட்டார். மரபு வழி யுத்தத்தில் எதிரியின் நிலைகளை உளவறிவது இரு பகுதிக்கும் பொதுவானது. அதை திறமையுடன் எதிர்கொண்டு போராடுவது தான் போர் முறை. தென்னிலங்கை தாக்குதல்கள் எல்லாம் எதிரியின் நிலைகளை உளவறிய எதிர் முகாமில் இருந்தும் ஆட்கள் பாவிக்கப்பட்டனர். அதற்காக அந்த தாக்குதலில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் ஶ்ரீலங்கா அரசு கூற முடியாது காட்டிக் கொடுப்பால் நாம் தோற்றோம் என்று. அது இரு பகுதிக்கும் பொருந்தும்.
  12. சரி, உங்களுக்கு தெரியாட்டி விடுங்கோ. இப்ப விசுகு பழக்க தோஷத்தில் தன்னிலை மறந்து உளறியதைப் பார்ததாவது அதைத் தெரிஞ்சு கொள்ளுங்கோ ப்ரோ.
  13. வெளி நாடுகளில் மக்கள் மிரட்டப்பட்டது அந்த காலம் என்று தெரிவித்தேன்.
  14. விசுகுவின் மிரட்டலுக்கு பதில் வழங்கப்பட்டது. இதற்கும் மாவீரர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. மாவீரர்களை தேவையில்லாமல் இழுத்து அவர்கள் பின்னால் ஒளிந்து கொள்வது அவர்களை கொச்சைப்படுத்துவது ஆகாதா?
  15. அது அந்த காலம் ஐயா. பாவம் மறந்து போச்சா. 😂😂 ஐயோ பாவம் நடப்பு ஆண்டு கூட மறந்து போச்சு. இப்படியான உங்கள் காலித்தனத்தை உங்களுக்குள் மட்டும் வைத்திருக்க வேண்டிய பரிதாப நிலை உங்களுக்கு.
  16. இந்திய மொழிகள் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வுகளை செய்த கார்டுவேலின் ஆய்வுகள் பொய் என புதிய ஆய்வாளரால் நிரூபிக்கப்பட்டதாக புலவர் கூறியபோது மேற்கண்ட கேள்வியை கேட்டிருந்தேன். இக் கேள்விக்கு இன்னமும் பதிலளிக்கப்படவில்லை.
  17. கருத்துகளுக்கு தனிமனித தாக்குதல் மூலம் பதில் வழங்குபர்களில் நீங்கள் முக்கியமான ஒருவர். மீண்டும் கூறுகிறேன் அரசியல் என்பது எல்லோருக்கும் பொதுவானது. மக்களை பாதிக்கும், பாதித்த பாரிய அரசியல் முடிவுகளை எடுத்த அனைவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே. எவரும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இதுவே உலக வழமை. ஆகவே அப்படிப்பட்ட விமர்சனங்களையும் உண்மைகளையும் அவ்வப்போது நான் தெரிவிப்பேன். அதற்கு நீங்கள் தனிமனித தாக்குதல் மூலம் பதில் வழங்குவது குறித்து பிரச்சனை இல்லை. ஏனென்றால், உங்களுக்கு தெரிந்ததை தானே உங்களால் செய்ய முடியும் என்பதை ஒரு சக கருத்தாளரக புரிந்து கொள்கிறேன்.
  18. வீரப்பையன், தனி மனித தாக்குதலை ஒன்றிற்கு பல முறை பல திரிகளில் உங்கள் நண்பர்கள் செய்யும் போது வரவேற்ற நீங்கள் அவர்களுக்கு இந்த அறிவுரையை கூறிவிட்டு இங்கே வாருங்கள்.
  19. நேரடியாக நேர்மையாக கருத்தியல் ரீதியில் எதிர்கருத்து வைக்க திராணியற்ற கோழைகள் இப்படித்தான் பின்புறமாக புரளியை கிளப்பி குளிர்காய்வது வாடிக்கை. அவ்வளவு ரோஷம் இருந்தால் நேரடியாக தாயகம் சென்று எதிர்ததுப் போராடுவது தானே. அதை விடுத்து, குடும்பத்துடன் ஜாலியாக வாழ்ந்து கொண்டு அடுத்தவன் பிள்ளையை தூண்டிவிட்டு தாம் அதை வைத்து வியாபாரம் செய்து பிழைத்த கோஷ்டி தானே. இப்போது வியாபாரம் கொஞ்சம் மந்தம் போல, அதனால உசுப்பேத்தி வியாபாரத்தை தொடர முயற்சி செய்யும் கோஷ்டி இப்படி தான் இருக்கும்.
  20. காட்டிக் கொடுத்து அழிக்க புலிகள் என்ன பத்து பதினைந்து பேராக கெரில்லா போரா நடத்திக்கொண்டிருந்தார்கள். வென்றால் எனது வீரம். தோற்றால் ஐயோ அவனால தான் தோற்றேன் என்று புலம்பல். இது என்னப்பா சின்னப்பிள்ளை சண்டையா? புலிகள் என்றுமே இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது தான் உண்மையில் புலிகளை கொச்சைப்படுத்தும் செயல்.
  21. இதுவரை எவருமே ஜனநாயக முறைப்படி ஒரு நிர்வாகத்தை செய்யவில்லை என்பதால் அப்படி தான் கூற முடியும். அரசியல்வாதிகள் மீது மட்டும் எல்லா பழி போட்டு தமது தவறுகளை மறைத்து தப்பிக்க நினைப்பவர்கள் மகா கோழைகள். எதிர் காலத்தில் புதிய தலைமுறையாவது பழைய கறள் கட்டிய அரசியலில் இருந்து தம்மை விடுவித்து உண்மையான அனைவருடைய புரிந்துணர்வான பண்பாடாக அறிவுபூர்வமான அரசியலை செய்யும் போது நிலைமை மாறுபடலாம்.
  22. அதாவது சீமான் ஒழுங்காக இருக்கும் போது ஆதரிக்காமல் சீமான் லூசனாக மாறியபின் ஆதரிக்கின்றீர்கள்.
  23. மாற்றி மாற்றிப் பேசும் பக்கா அயோக்கிய அரசியல்வாதிகள் உள்ள நாடு அது ஆகவே அவர்கள் கூறுவதை ஆதாரமாக எடுத்துவராமல் அறிவியல் ஆய்வுகளை நம்புங்கள் வீரப்பையன். நான் நக்கி பிழைப்பது இருக்கட்டும், நீங்கள் தமிழை ஒழுங்காக வாசிக்க முதலில் கற்றுக்கொள்ளுங்கள். திரும்ப சென்று எழுத்துக்கூட்டியாவது அல்லது கற்றவர்களது உதவியுடனாவது நான் எழுதி இருப்பதை வாசிக்க முயற்சி செய்யவும்.😂 “எப்போதும் தமிழன்”, என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது தமிழை ஒழுங்காக வாசித்து அதன் பொருள் அறியும் அறிவும் திறனும் வேண்டும்.
  24. நீங்கள் என்னை சிங்கள தேசிக்காய் என்று அழைத்தால் எனக்கு கோபம் வராது. ஏனென்றால் அது எனக்கானது அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆகவே தாராளமாக அப்படி நீங்கள் கூறி மகிழ்ந்து கொள்ளலாம். உங்களது அந்த மகிழ்சசிக்கு நான் தடையாக இருக்கப்போவதில்லை. ஆனால், உண்மையை கண்டவுடன், அந்த உண்மை தனது பாசாங்குத்தனத்தைச் (Hypocrisy) சுட்டிக்காட்டுவதாக மனதார உணர்ந்து எவனுகெல்லாம் எரிச்சல் வருகிறதோ, அவனெல்லாம் தமிழ் தேசிக்காய் ஆவான். தேசிய என்ற வார்ததையில் சிறப்பான நேர்மறை அம்சங்கள் பல இருப்பதால் அந்தச் சொல்லுக்கு மோசமான பிற்போக்கு தேசிக்காய்கள் தகுதியற்றவர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.