Everything posted by island
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இந்த பழமொழி தீவிர தேசிக்காய்களுக்கு தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். அடுத்த தலைமுறையையும் அழிக்க நினைக்கும் மகா அயோக்கியர்கள் இவர்கள். (வந்து சிவப்பு புள்ளியை இட்டு இதை ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்துமாறு அன்புடன் உங்களை அழைக்கிறேன்.)
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சரியாக சொன்னீர்கள். எமது ஈழத்தமிழர் ஆயுத இயக்கங்கள் பற்றி தமிழ் நாட்டு மக்கள் அறிந்ததே, பிரபா- உமா துப்பாக்கி மோதல் என்ற, ஒற்றுமையீனம் மூலமாகவே. இது நடந்தது 19.05.1982. அன்று இவர்கள் இருவரையும் இலங்கை அரசிடம் கையளிக்காமல் பாதுகாக்கவும் ஒற்றுமைப்படுத்வுமே தமிழ் நாட்டு அரசியல்த் தலைவர்கள் கட்சி பேதமின்றி செயற்பட்டனர். அது முடியாமல் போன பின்பு கூட ஈழத்தமிழருக்கு உதவ கட்சி பேதமின்றி எல்லோரும் பங்களித்தனர் ஆனால், சிங்கள பேரினவாதம் என்ற பாரிய பொது எதிரியுடன் மோத தம்மை மேலும் பலப் படுத்தவேண்டிய நிலையில் கூட சுயநல அதிகார வேட்கையில் தம்முள் மோதி பலவீனப்பட்டு தம் தலையில் தாமே மண்ணை போட்ட பிறகு கூட திருந்தாமல் இன்றும் தாயகத்திலும் சரி புலம் பெயர் நாடுகளிலும் சரி தம்முள் முட்டி மோதிக்கொண்டே தமக்கு உதவிய குற்றத்துக்காக தமிழ் நாட்டிலும் அவர்களிடையே இவ்வாறான பிரிவினைகளை வளர்க்க தூபம் போடுகிறார்கள். ஒரு நாட்டை ஜனநாயக முறைப்படி நிர்வகிக்க எந்த தகுதியும் இல்லாத இனம் இது.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இந்திய மொழிகள் தொடர்பான அறிவியல் ரீதியான ஆராய்சசியை முதன் முதலாக செய்தவர் கார்டுவேல் மட்டுமே. அதற்கு முன்பு வரை வட மொழியான சமஸ்கிரகத்தில் இருந்து தமிழ் உருவாகியது எனவும் சிவபெருமானின் உடுக்கில் இருந்து ஒரு பக்கத்தில் சமஸ்கிரதமும் மறுபக்கதில் தமிழும் பிறந்ததாக அடிமுட்டாள் கருத்துக்களே நம்பப்பட்டு வந்தது. கார்டுவேல் செய்த மொழியியல் ஆய்வை இதுவரை எவரும் அறிவியல் அடிப்படையில் தவறென்று நிரூபிக்கவில்லை. அப்படி நிரூபித்ததாக எந்த உத்தியோகபூர்வ தகவலும் இல்லை. வெறும தமது அரசியல் பிழைப்புக்காக சிலர் கூறுபனவற்றை ஏற்கமுடியாது. அப்படி அறிவியல் ரீதியில் நீரூபித்ததாக நீங்கள் கூறினால் அதை நிரூபித்த அந்த ஆய்வாளர் யார்? 1. அவர்பெயர் என்ன? 2. அந்த ஆய்வுக்காக அவர் பாவித்த critaria என்ன? (தயவு செய்து பாரிசாலன், மன்னர் மன்னன் போன்ற யூருப் டுபாக்கூர்கள் முட்டாள்களின் பெயரை கூறிவிடாதீர்கள்.)
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
எனது கேள்வி இன்றும் “அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்” சமஸ்தலங்கா திராவிட சங்கமய என்று உத்தியோகபூர்வமாக வைத்திருப்பதன் காரணம் என்ன? தமிழர் தேச காங்கிரஸ் என்று மாற்றியிருக்கலாம் தானே!
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
@புலவர் உங்கள் தலைவர் கஜேந்திரகுமார் தமிழ் தேசம் கேட்டுக்கொண்டு தனது கட்சி பெயரை “அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்” - “சமமஸ்தலங்கா திராவிட சங்கமய” என்ற பெயரை இப்போதும் உத்தியோக பூர்வமாக வைத்தருக்கிறார்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உண்மையான தமிழர்கள் என்றால் என்ன? தனியாக தொழிற்சாலையில் எந்த கலப்படமும் இல்லாது உருவாக்கப்பட்ட மனிதர்களா? உலகின் மற்றைய மனிதர்களை போல ஹோமோ சேப்பியன்ஸ் இன மக்கள் இல்லையா?
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
தமிழர்கள் திராவிட மரபணுவில் இருந்து வந்தவர்களே. அந்த வகையில் தமிழ் தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்றே. 2009 வரை இந்த வரலாற்று புரிதல் ஈழத்தமிழர்களுக்கும் இருந்தது . யாழ்பாணம் நவீன சந்தை கட்டடம் கட்டப்பட்ட போது அது எமது திராவிட கட்டட கலையின் அடிப்படையில் கட்டப்பட்டது என்று அன்றைய பத்திரிகைகளில் சிலாகிக்கப்பட்டது. தமிழர்கள் திராவிடர்களே என்ற புரிதல் விடுதலைப்புலிகளுக்கும் இருந்தது. திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் என்ற நூலில், இலங்கை தீவில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் திராவிட குடியிருப்புக்கள் என்று எழுதி அடைப்புக்குறிக்குள் தமிழ் என்று அன்ரன் பாலசிங்கம் எழுதியுள்ளார். ஒருவேளை அன்ரன் பாலசிங்கமும் ஒரு வந்தேறி யோ?
- IMG_7908.jpeg
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
குழப்பம் வேண்டாம். சாப்பாட்டில் ஒரு கறியில் காரம் இல்லை, மற்ற கறியில் உப்பு குறைவாக உள்ளது, புளி குறைவாக உள்ளது, வடை , பாயசம், மிளகாய்ப் பொரியல் இல்லை என்று ஒவ்வொரு பந்தியிலும் இருந்து எழுந்து வெளியே வருபவன் இறுதியில் சோறும் இல்லாது இருப்பான். அந்த நிலையிலேயே மக்கள். அது தான் மக்களை இவ்வாறான சிந்தனைகளை நோக்கித் தள்ளியது.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
உண்மை.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. அவர்கள் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி ஆளாளுக்கு பங்கு பிரித்துக் சுக போக வாழ்ககையை அனுபவித்துக் கொண்டு இன்றும் பொழுது போக்காக உசுப்பேற்றிக் கொண்டிருப்பவர்கள்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
கடந்த 75 வருடங்களாக தமிழர் தரப்பில் எவரும் தமது சாதனைப் பெறுபேறுகளை மக்களுக்கு கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. மக்களுக்கு ஏற்கனவே இருந்த நிம்மதியான வாழ்ககையைக்கூட கெடுத்தது தான் அவர்கள் மக்களுக்கு கொடுத்த பெறு பேறு. அந்த பல தசாப்த பட்டறிவு தான் மக்களை மாற்றி சிந்திக்க வைத்துள்ளது. அதனால் நீங்கள் சொன்னது போல் மக்கள் மீது குறை சொல்ல முடியாது. மக்களை இந்த நிலைக்கு கொண்டுவந்த 75 வருட ஒட்டுமொத்தமான எல்லா தமிழ் தரப்புக்களே இதற்கு காரணமான குற்றவாளிகள். அந்த கசப்பான வாழ்வை மறந்து மக்களை புதிய வாழ்வை தோக்கி பயணிக்க நினைப்பதில் தவறு இல்லை.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
ஒரு மாநிலத்தின் பெயரில் ஒரு கொண்டப்படும் “தமிழ் நாடு நாள்” எப்போது என்பதிலேயே ஒரு பொதுவான புரிந்துணர்வுக்கு வரமுடியாத அளவுக்கு அரசியல் காழ்புணர்வுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்றால் இதை என்னவென்று சொல்வது. அன்று பேரறிஞர் அண்ணா உத்தியோகபூர்வமாக தமிழ் நாடு என்ற பெயரை சூட்டியிருக்காமல் விட்டிருந்தால் எந்தக் கலத்திலும் அந்த பெயரை வைக்க முடியாமல் போயிருக்கும். ஏனென்றால் தமிழ் நாடு என்ற பெயரைப் பார்தது எரிச்சலடைந்த சங்கிகள் அதனை மாற்றி தமிழகம் என்று வைக்க அல்லது முடிந்தால் தக்ஷனபிரதேசம் என்றை வைக்கவேண்டும் என று சங்கிகள் துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
இல்லை ஜனாதிபதி சட்டத்தரணி. மாம்பழ சின்னதில் தேர்தலில் நிற்பவர்.
-
பதவி மோகத்தால் தமிழ்தேசியத்தை பலிகடாக்கும் சுமந்திரன் - சாணக்கியன்! வேலன் சுவாமி
இந்த கிறுக்கு சாமியின் பேட்டி ஒன்று கேட்டேன். தலைவர் இறக்கும் போது தமிழீழத்தை கைவிடுவதாக கூறவில்லையாம். எனவே தமிழீழத்தை கைவிட்டு இன்று சமஸ்டி கேட்க எவருக்கும் உரிமை இல்லையாம். இப்படிபட்ட கிறுக்கு பிடித்த பைத்தியங்கள் எல்லாம் மக்களுக்கு அடவைஸ் பண்ணுதுங்க.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
தவராசா மாவீரர் துயிலும் இல்லம் துப்பவக்கும் இடத்தில் நின்று தானும் துப்பரவாக்குவது போல ஒரு காணொளி, போட்டோ எடுத்து அதை தனது முகநூலில் வெளியிட்டு தனது பிரச்சாரத்துக்கு உபயோகிக்கிறார். இதுவெல்லாம் மாவீரரை கொச்சைப்படுத்தும் வகைக்குள் வராது. 😂
-
அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது
நீங்கள் சொன்னாலும் சொன்னீங்க. அநுர ரீ கடைல அவரோட அலுவலகத்தை மாத்திட்டார். 😂
- IMG_7899.jpeg
-
அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது
போக்குவரத்து வசதிகளை இலங்கை முழுவதும் மேம்படுத்தினால் இவ்வாறான நடவடிக்கைகள் சரியாக இருக்கும். ஆனால், நூறுக்கணக்கான கிலோமீற்றர்கள் பயணம் செய்து தினமும் அலுவலகங்களுக்கு வந்து அமைச்சர்கள் பணியாற்ற முடியுமா? அமைச்சர்களின் கடமைகளை சரியாக நிறைவேற்ற முடியுமா? தேவையற்ற செலவுகளும் துஷ்பிரயோகங்களும் தடுக்கப்பட வேண்டியது அவசியம் தான், அதற்காக இது கொஞ்சம் ஒவர். ஜனாதிபதி தம்புத்தேகமவில் இருந்து தினமும் அலுவலகம் வரமுடியுமா?
-
ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை இழைத்துவிடக்கூடாது - கஜேந்திரகுமார்
இது பற்றியெல்லம் இந்த புலம்பெயர் தேசிக்காய்கள் பேசமாட்டார்கள். அவர்களை பொறுத்தவரை அடுத்த தமிழ்தலைமுறையையும் அழிக்க எடுக்கும் தங்கள் முயற்சிக்கு ஒத்தாசை புரிபவர்கள் யாராயினும் அவர்கள் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் ஆதரிப்பார்கள்.
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
தமிழர்கள் மீது தீரா பகை கொண்ட பிரேமதாச, தீரா பகை கொண்ட சந்திரிகா, தீரா பகை கொண்ட ரணில் இப்படியே சொல்லி சொல்லிக் கொண்டு வந்து இப்ப தீரா பகை கொண்ட ஜேவிபி என்று வந்து நிற்கிறது. ஏற்கனவே தம்மால் இவ்வாறு எடுக்கப்பட்ட முன்முடிவுகளை தமிழர் மீது திணித்த அரசியலே தமிழ் தலைமைகள் இன்றுவரை செய்து வந்துள்ளன. அதை விடுத்து அந்த பகைமையை தீர்கக தாம் எடுத்த அரசியல், ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன என்றால் அது பூஜ்ஜியமே! ஐங்கரனேசன் என்ற அதி புத்திசாலியிடம் நான் கேட்பது தீரா பகை என்றால் அவ்வாறான தீரா பகை கொண்டவர்கள் ஆட்சியில் இருக்கும் நாட்டில் இருக்காமல் நாட்டை காலி செய்து விட்டு போய்விடுங்கள் என்ற செய்தியை இளைஞர்களிடம் கடத்துகிறரா?
-
இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை
முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது ஈழத் தமிழரின் அரசியலில், தமிழரின் தாயக இருப்பியலில், தமிழ்த்தேசியம் என்னும் கருத்தியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இத்தகைய ஒரு தாக்கம் ஏற்படும் என தமிழ் அரசறிவியலாளர்கள் குறிப்பிட்டு அதனைக் கையாண்டு வெற்றி கொள்ளக் கூடிய உபாயங்களை தெரிவித்திருந்தும் கூட அரசியல்வாதிகள் எனப்படுவோர் அதனை சாட்டை செய்யாது , இதனை ஒரு கருத்தியலாக ஏற்க மறுத்ததன் விளைவுகள் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தமிழரில் அரசறிவியலாளர் என்று யாரேனும் உள்ளனரா? அப்படி தம்மை அழைத்துக்கொள்வோர் அரசியல்வாதிகளுக்கு கொடுத்த ஆலோசனைகள் எவை? புலம் பெயர் தேசிக்காய்கள் ஆளுக்கொரு பக்கம் பங்கு பிரிப்பு சண்டையில் ஈடுபட்ட போது இந்த அரசறிவியலாளர்கள் அவர்களுடன் நெருக்கமாக இருந்தும் அவர்களுக்கு என்ன ஆலோசனைகளை கூறினார்கள்? 2015 வரை ஊர்பக்கமே போக பயந்த விழ தொடைநடுங்கி புலம்பெயர் அரசியலாளர்கள் 2015 ன் பின்னர் அங்கு ஜாலியாக போய்வர கூடிய நிலைமையை ஏற்படுத்திய அரசியல் ஆலோசனைகளை கொடுத்ததது இந்த அரசறிவியலாளர்களா?
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
பிரபா, மபொசி இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான மபொசி எப்போதுமே விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்தையே கொண்டிருந்தார். அவரது பத்திரிகையான செங்கோல் இதழில் “ஈழத்தமிழரும் நானும்” என்ற தொடரில் புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று வர்ணித்து அவர் எழுதியுள்ளார். அந்த தொடர் பின்பு நூலாக வெளிவந்து இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. 1992 ல் வெளிவந்த செங்கோல் இதழில் மபோசி எழுதிய பத்திரிகை முன்பக்கத்தை இங்கு இணைத்துள்ளேன். தமிழ் தேசியவாதி என்று சீமானால் சிலாகிக்கப்படும் மபொசி இதை எழுதிய நேரத்தில் திமுக உட்பட திராவிட இயக்கங்களின் தொண்டர்கள் பொடா சட்டதின் கீழ் பாரிய நெருக்குவரங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல திராவிட இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள். பெரியார் திடல் புலனாய்வுப்பிரிவின் முழுமையான கண்காணிப்பில் இருந்தது. மபொசியின் கருத்தில் நான் தலையிடவில்லை. அவரின் கருத்தை தனது பத்திரிகையில் வெளியிடும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால், தமது சுயநல அரசியலுக்காக வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டு ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருந்த அமைப்புக்கள் எதிரிகளாகவும், உண்மையிலே ஈழத்தமிழருக்கு எதிரிகளாக இருந்தவர்கள் நல்லவர்கள் போலவும் காட்டப்படுகிறார்கள் என்பதை கீழ் இணைக்கப்பட்ட பத்திரிகையில் பார்தது அறிந்து கொள்ளுங்கள்.
- Sengol ma po si.jpeg
-
5 வயது பேரனின் கேள்வி
Vacation ல் அழகான கடற்கரைகள், நல்ல வெதுவெதுப்பான காலநிலையில் அங்குள்ள சம வயதுப் பிள்ளைகளுடன் விளையாடும் இனிமையான தருணம் போன்றவற்றை அனுபவித்த 5 வயது பிள்ளை விடுமுறை முடிந்து திரும்பி வந்ததும் இப்படியான கேள்வியை கேட்பது வழமை தான். விடுமுறை முடிந்துவிட்டது அடுத்த விடுமுறைக்கு செல்வோம் என்று சமாதானம் சொல்வதே சரியாக இருக்கும்.
-
தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது!; சிறீதரன் சூளுரை
இவர் கூறுவது என்ன வென்றால், வட்டுக்கோட்டை தீர்மானமான தமிழீழம் எப்படி நிறைவேறாதோ அது போல் என்னை கட்சியில் இருந்து நீக்குவதும் நிறைவேறாதாம்.