Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. நன்றி, மேலே இந்தியர்களின் நடத்தைகள் பற்றிய விமர்சனங்களை பார்தத போது நான் நினைத்ததை நீங்கள் இன்னும் விலாவாரியாக எழுதி உள்ளீர்கள். மேற்கு நாடுகளில் பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறை எஆலத்தின் பின்னர் சற்றே முன்னேற்றகரமாக இருந்தாலும் அது இன்னும் முழுமை அடையவில்லை என்பது தான் உண்மை.
  2. நான் யாரையும் கொச்சைப்படுத்தவில்லை. உண்மையையே எழுதினேன். நான் என்ன எழுத வேண்டுமென எனக்கு கட்டளையிட உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. அரசியலில் எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களும் அல்ல. பொது மக்களை பாதித்த அரசியலை செய்யும் எவரது தவறுகளும் பொது வெளியில் விமர்சிக்கப்படலாம். சுட்டிக்காட்டப்படலாம் . எவரும் இதற்கு விதி விலக்கு இல்லை. இதுவே உலக வழமை.
  3. கருத்து களம் என்றால் அரசியல் கருத்தை தான் எழுத முடியும். நீங்கள் வேண்டுமானால் பஜனை பாடுங்கள். என்னை பஜனை பாட சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. உலகில் எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அரசியல் கருத்துக்களுக்கு நேர்மையான பதில் கருத்து எழுத முடியாத நேர்மையற்றவர்கள் தான் மரணித்த மாவீரர் பின்னால் ஒழிந்து கொள்வர். எனக்கு அந்த தேவை இல்லை.
  4. வைத்த கருத்துக்கு தன் பதில் கருத்து வைக்கப்பட்டது. முதல் வைத்த கருத்தையும் அதற்கு பதிலாக நான் வைத்த கருத்தையும் வாசித்து விளங்கும் தமிழறிவு முதல் தேவை உங்களுக்கு. அதன் பின்னர் கருத்தியல் ரீதியாக பதில் தரலாம். அதென்னப்பா உங்க தோஸ்துகள் திருப்பி திருப்பி ஒரே விடயத்தை கூறும் போது silence mode போயிற்று, அந்த கருத்துக்கு நான் பதில் கருத்து வைத்தவுடன் ஓடி வந்து பொங்கிறீங்க! நான் சொன்ன உண்மை சுட்டுப்போட்டுதோ? 😂 நக்கி பிழைக்கும் கூட்டம் என்று நீங்கள் கையெழுத்திட அதன் க்கீழ் பையன் வந்து உங்களை நீண்ட நாள் காணவில்லை கண்டது மகிழ்சசி என்று எழுத……… 😂
  5. உலக வரலாற்றை வைத்து. பல மொழிகள் உருவானது ஒரு நாளில் அல்ல. ஒன்று பலவாகியது தான் வரலாறு
  6. தங்கள் தலையில் தாங்களே தொடர்ந்து மண் அள்ளி போட்டுவிட்டு அடுத்தவன் வந்து உதவில்லை என்று புலம்பல். எல்லா தீர்மானங்களையும் தாங்களே எடுப்பினமாம். சொதப்பின உடனே அடுத்தவன் எல்லாம் தனது வேலை எல்லாத்தையும் விட்டுட்டு வந்து ஹெல்ப் பண்ணணுமாம். அதுக்குள்ள 25 நாடு வந்து அழிசிட்டுன்று வேற புலம்பல். ஒருவர் எடுத்த தீர்மானத்தின் விளைவை அவர் அல்லது அவரின் தலைமுறை தான் அனுபவிக்க வேண்டும். அதிலிருந்து மீள வேண்டும். சும்மா அடுத்தவன் மீது பழி போட்டு தப்பிப்பது வீரம் இல்லை. பக்கா கோழைத்தனம். சரி இப்பவாவது தெரிஞ்சிட்டுது இல்ல. இனியாவது தலையில் தாமே மண் அள்ளி போடாமல் தலைக்குள்ள இருகிற களி மண்டை cleanup பண்டீட்டு கொஞ்சமாவது அறிவை ஊட்டவேண்டும். அதுவே உய்யுறத்துக்கு வழி.
  7. @goshan_che மீண்டும் தொடங்கும் மிடுக்கு. 👍மீள்வருகை நல்வரவாகுக. 🙏
  8. இந்த பிரிவு என்பது இயல்பானது. இன்னும் 500 ஆண்டுகளின் பின்னர் இன்னும் பல மொழிகள் உருவாகலாம். இதை எவராலும் தவிர்கக முடியாது. தமிழ் போராளி இயக்கங்கள் 80 களில் போராட்டத்தை ஆரம்பித்தபோது அவர்களுக்கு தீவிர பின் தள ஆதரவை கொடுத்தவர்கள. திராவிட இயக்கத்தினரே. சீமான் அடிக்கடி புகழும் தமிழ் தேசியவாதியான மபொசி போராளிகளை ஏறெடுத்தும் பார்ககவில்லை. இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து திரும்பியபோது மபொசி வலிந்து சென்னைத்துறைமுகம் சென்று அவர்களை வாஞ்சையுடன் வரவேற்றார்.
  9. திராவிடம் மரபினம். தமிழ் தேசிய இனம். மரபினத்தில் இருந்து பிரிந்து தேசிய இனங்களாக மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியவை உள்ளன. இவர்கள் பேசும் வெறுப்பு அரசியலானது, மனிதன் ஆபிரிக்க கண்டத்தில் இருந்து உருவாகி உலகம் முழுவதும் பரவியது என்ற உலகமே ஏற்றுக்கொண்ட அறிவியல் உண்மையைக் கூட ஏற்றுக்கொள்ளாமல் மூடத்தனங்களை பரப்புபவர்கள். விஜய் தனது அரசியலில் வெற்றி பெற வாழ்ததுக்கள். அவரது கொள்கைகள் சரியானவை. அவற்றை எப்படி நடைமுறைப்படுத்துகிறார் என்பதில் தான் அவரது வெற்றி தங்கியுள்ளது.
  10. தமிழ் மக்கள் முதலில் நிராகரிக்க வேண்டியது இந்த குதிரை கஜேந்தின், சுகாஸ் போன்ற பக்கா இனவாதிகளை தான். சிங்கள இனவாதிகளுக்கு சற்றும் சளைக்காமல் மக்களிடையே இனவாதத்தை விதைப்பவர்கள் இவர்கள் இருவரும். கஜேந்திர குமாரை தவறாக வழிநடத்துபவர்கள் இவர்கள் தான். இவர்கள் இல்லை என்றால் கஜேந்திரகுமார் ஜதார்ததத்தை உணர்ந்து அதற்கேற்ப முற்போக்கு அரசியல் செய்வார். கல்வியாளர் அவர்.
  11. ஆமாம் அதற்கு தான் நீலனை போட்டு தள்ளிவிட்டு விடுதலைக் கூட்டணியை அதற்கு எதிராக வாக்களித்து அந்த அரசியல் சட்டத்தை நிறைவேற விடாமல் செய்து விட்டு இன்று ஏன் அந்த தீர்வை நடைமுறைப்பட்டுத்தவில்லை என்று தினாவெட்டாக கேட்பார்கள்.
  12. இணைப்புக்கு நன்றி பகிடி. சந்திரிகா காலத்தில் உருவாகிய தீர்வு திட்டத்துடன் கூடிய அரசியலமைப்பு மாற்றம் பாலாளுமன்றத்துக்கு வந்த போது 2/3 பெரும்பான்மைக்கு 7 வாக்குகளே தேவையான நிலையில் அந்த ஏழு வாக்குகள் இருந்தும் உயிர்ப்பயத்தில் தமிழர் விடுதலை கூட்டணி அதற்கு ஆதரவு கொடுக்காமல் விட்டது மாபெரும் தவறு. அந்த தீர்வை உருவாக்கிய நீலன் திருச்செல்வத்தையும் படுகொலை செய்து இன்று ஒன்று மில்லாமல் நிற்கிறது மோட்டு தமிழினம். வந்து மைனஸ் புள்ளியை இட்டு செல்ல விசுகுவை அன்பாக அழைக்கிறேன். வருக வருக.
  13. இதில் கதிர்காமர் இலங்கை அரசின் அமைச்சர். அவரின் செயற்பாடு இலங்கை அரசுக்கு சார்பாக தான் இருக்கும். அது இயல்பானதே. மற்றவர்களில் எவரும் துரோகிகள் இல்லை. இதில் சிலர் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களைப் படுகொலை செய்த பயங்கரவாதத்தால் தமிழர் போராட்டம் பின்னடைவையே சந்தித்தது.
  14. என்னப்பா எல்லா திரியிலும் பார்ததாலும் சுமந்திரன், சுமந்திரன் என்று சுமந்தரனை பற்றியே பேச்சு. போதாக்குறைக்கு யுத்தகுற்றங்களை விசாரிக்க வந்த அமெரிக்காவே சுமந்திரனைக் கண்டு பயந்து பின்வாங்கி யுத்த குற்றங்களை விசாரிக்க முடியாமல் தவிக்கும் அளவுக்கு சுமந்திரன் மேற்குலக நாடுகளை விட பலம் நிறைந்தவரா? சுமந்திரனை விட கஜே நல்ல திடகாத்திரமாக தானே இருக்கிறார் சுமந்திரனிடமிருத்து கஜே அமெரிக்காவை காப்பாற்றலாமே!
  15. நீங்கள் topic ஐ மாற்ற முனைகின்றீர்கள் சொல்ல வந்தது, சிங்க கொடி இருக்குமிடத்துக்கு செல்ல மாட்டேன் என்று பீலா விடும் ஒருவர் சிங்க கொடி பறக்கும் பாராளுமன்றம் செல்ல பேராவல் கொண்டிருப்பது உங்களுக்கு முரண்பாடாக தெரியவில்லையா? இது சம்பந்தர் சிங்ககொடி பிடித்ததை விட மோசமானதல்லவா? சம்பந்தர் கொடிபிடித்தது நீங்கள் கூறியது போல் 2009 அல்ல 2016 ல். மக்கள் அழிவுக்கு காரணம் சம்பந்தர் கொடி பிடித்தல்ல. 2009 முன்பு சிங்க கொடி பிடிக்காத போதே பேரழிவு வந்துவிட்டது. 40000 சவப்பெட்டிகளை சடலங்களுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து அனுப்புவோம் என்று பாராளுமன்றத்தில் உரையாற்றி யுத்த இறுதிக் காலத்தில் மக்களை பேரழிவுக்குள் தள்ளியதில் கஜே கட்சி உறுப்பினர் குதிரை கஜேக்கும் பங்குண்டு என்று அண்மையில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் பசீர் காக்காவே கஜே மீது பகீரங்கமாக தொலைக்காட்சி உரையாடலில் குற்றம் சாட்டியதை தாங்கள் அறியவில்லையா?
  16. அப்ப ஆட்டாதேங்கோ. அங்க போகாதேங்கோ. சிங்க கொடி பறக்கும் பாராளுமன்றம் போக பேராசை படுபவர் இதை கூறியது தான் நகைச்சுவை. 😂 சிங்க கொடி பறக்கும் நாடாளுமன்றம் செல்ல நாக்கை தொங்க விட்டு அலைபவர் இதை கூறலாமா?
  17. என்ன உருட்டப்பா! சிங்க கொடி இருக்கிற இடத்துக்கு போகமாட்டாராம். சிங்க கொடி பறக்கும் ஶ்ரீலங்கா நாடாளுமன்றம் செல்ல பேராசையாம். இப்படி ஒரு பம்மாத்து கும்பலும் இந்த தேர்தலில் வேட்பாளராம். 😂 ரொம்ப தான் சுட்டுப்போட்டுதோ. 😂 என்ன செய்வது கள்ளர்களை தூக்கி சுமக்கும் உங்கள் மனநிலை எனக்குல்லையே?
  18. கஜே - குதிரை கஜே கும்பல் தாங்கள் தினமும் தமிழர் மத்தியில் பிதற்றும் இரு தேசம் கோரிக்கைக்காக போராடி கைது செய்யப்படவில்லை. ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மீது தாங்கள் விசுவாசமாக இருப்பதாக சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான தமது தேர்தல் போட்டியில் தேர்தல் விதிமுறை மீறல் என்றே கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் இலங்கை அரசில் கஜேக்கு இருக்கும் உள்மட்ட செல்வாக்கை பயன்படுத்தி முடிந்து விடும். எனவே உசுப்பேத்து புலம் பெயர் கோஷடிகளே கவலை வேண்டாம் உங்கள் தலைவர் அடுத்த பாராளுமன்றம் கூடும் போதும் இலங்கை ஒற்றையாட்சிக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியம் செய்யத்தான் போகிறார். அவரசு இரு தேசத்தில் ஒரு தேசமான ஶ்ரீலங்கா தேசத்தில் தான் செய்துள்ள பாரிய முதலீடுகளை கண்காணிக்கவும் மேலதிக முதலீடுகளை மேற்கொள்ள தொடர்பாடல்களை வளர்ககவும் அனுகூலங்களை பெற்றுக் கொள்ளவும் அவர் பாராளுமன்றம் செல்வது அவசியம் தானே!
  19. காணமல் போனவர்களின் உறவினர்கள் சங்கம் என்ற அமைப்பு தமது உறவுகளை தேடுதல் என்ற விடயத்தில் தீவிரமாக ஈடுபடும் போதும் அதனை திறம்பட உலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் போது மட்டுமே அது சர்வதேச மட்டத்தில் தாக்கங்களை உண்டு பண்ணி இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொண்டுவர வாய்புள்ளது. அதை விடுத்து காணாமல் போன உறவுகளை தேடும் அமைப்புகள் தன்னாட்சி சுயநிர்ணயம், தமிழரின் இறையாண்மையை மீட்டல் போன்ற அவர்களுடைய அமைப்புக்கு பொருத்தமற்ற கோரிக்கைகளை வைத்து போராட்டங்களை நடத்தும் போது அவர்களின் கோரிக்கை உலக மட்டதில் அனுதாபத்துடன் பார்க்கப்படமாட்டாது. மாறாக அவர்கள் அரசியல் கட்சிகளின் கையாட்களாக செயர்படுகிறார்கள் என்ற பார்வையையே உலக மட்டத்தில் ஏற்படுத்தும். (இதில் உண்மையும் இருக்கிறது) ஆகவே காணாமல் போனோரின் உறவினர்கள் அமைப்பு தமது உறவுகளை தேடுதல் என்ற நியாயமான கோரிக்கையை அழுத்தமாக முன் வைத்து உறுதியுடன் தன்னிச்சையாக போராடவேண்டும். அதை விடுத்து அரசியல் கட்சிகளினதும் புலம்பெயர்ந்த அமைப்புகளினதும் தேவைகளுக்காக அவர்களது கைப்பாவையாக செயற்பட்டு இவ்வாறான பொருத்தமற்ற கோரிக்கைகளை வைத்தால் அவர்கள் நகைச்சுவையாளர்களாகவே பார்ககப்படுவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகள் கூட உலகின் கவனத்தை பெறாது.
  20. வவுனியாவில் இவர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் காரணமாக வழமையாக குடியரசுகட்சி பலமாக உள்ள ரெக்ராஸ், புளோறிடா, அலபாமா, மிஸிஸிப்பி ஆகிய மாநிலங்களில் ரம்ப்ஃ செல்வாக்கு பாரியளவில் சரிந்து கமலா ஹரிஸுக்கான ஆதரவு அலை வீசிவருவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
  21. ஒரு சில நாட்களில் விடுதலை செய்யப்பட்டு, “ சிறை மீண்ட செம்மலாக” வாக்கு கேட்டு வருவார். 😂
  22. இலங்கையில் வாழும் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் எந்த இனத்திராக இருருந்தாலும் இவை மகிழ்ச்சியான செய்தி அல்ல. ஏற்கனவே இவ்வாறான யுத்தத்தினதும் தாக்குதல்களதும் விளைவுகளை அனுபவிப்பர்கள் அவர்கள். புலம் பெயர் தேசிக்காய்களுக்கு இது மனமகிழ்வூட்டும் நகைச்சுவை செய்தியாக இருப்பதில் வியப்பு இல்லை.
  23. @பகிடி இன்றைய தொழில்நுட்பத்தில் ஓருவர் தனது பூர்வீகம் பற்றிய DNA test செய்யும் வசதி உள்ளது. அதன்படி எச்சில் பரிசோதனை மூலம் தனது பூர்விகத்தை அறிய எச்சில் மாதிரியை மட்டும் அனுப்பிய ஐரோப்பாவில் பிறந்த ஈழத் தமிழ் பிள்ளைக்கு Result ஆக ஆசிய கண்ட வரைபடத்தில் இலங்கையில் இருந்து கிட்டத்தட்ட மும்பாய் வரைக்குமான பிரதேசங்கள் நிறமிடப்பட்டு அதுவே உங்கள் பூர்வீகம் என்று அனுப்பப்பட்டது.
  24. அறிவியல்ரீதியாக நிலத்தொடர்ச்சியுடன் இவ்வாறான மொழிக்குடும்பங்கள் உலகம் முழுவதும் உள்ளது. ஐரோப்பிய மொழிகளில் லத்தீன் மொழிக்குடும்பமாக பிரெஞ்ச், இத்தாலி, ஸபானிஸ் , போத்துக்கல் ஆகிய மொழிகளும் ஜேர்மானிக் மொழிக்குடும்பத்தில் ஆங்கிலம், ஜேர்மன், சுவீடிஷ், நோர்வேஜியன் முதலிய மொழிகளும் ஸ்லாவிய மொழிகளாக ரஷ்யன், செக், ஸ்லவாக்கியன், குரோசியன், சேர்பியன், ஸ்லவேனியன் இன்னும் பல மொழிகள் உள்ளன. இந்தியாவில் இந்தோ ஆரியன் மொழிகளாக ஹிந்தி, குஜராத்தி, மராட்டி, உருது போன்ற மொழிகளையும் திராவிட மொழிகளாக தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துலு ஆகிய மொழிகளையும் கூறலாம். உலகின் எல்லாப் பல்கலை கழகத்தின் மொழியியல் துறையிலும் தமிழ் திராவிட மொழிக்குடும்பம் என்றே கற்பிக்கப்படுகிறது. ஏனெனில் அறிவியல் ரீதியில் அது திராவிட மொழிக்குடும்பம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.