Everything posted by island
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
வட கிழக்கில் வெல்பவர் யாராக இருந்தாலும் ஆளும. அரசுடன் நல்லுறவை வளர்த்து அதன் மூலம் வட கிழக்கு தமிழ் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு தான் மக்கள் அவர்களை தெரிவு செய்கிறார்கள். அரசுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை எடுக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஆனால் அநுரவுடன் ஒத்துளைத்து மக்களுக்கு நன்மை யார் செய்தாலும் அது வரவேற்கப்பட வேண்டியதே. மக்களும் அவ்வாறானவர்களை தான் தெரிவு செய்ய வேண்டும்.
-
சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்
சீற் கிடைக்கவில்லை என்று வெளியேறியவர்கள் தொகை சீற்றை விட அதிகம் போல இருக்கு. 😂
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
இதை தானே நானும. கூறினேன். அதையே எனக்கு திருப்பி சொல்வீர்களா? நீங்கள் எப்படி உங்கள் செல்லங்கள் செய்த கொலைகளை மறைக்க விரும்புகின்றீர்களோ அதே போல் அவர்களும் தமது செல்லங்கள் செய்த கொலைகளை மறைக்கவே விரும்புவார். இதில் ஒரு பொறுப்பான ஜனாதிபதியாக, அநுர சற்றே மேம்பட்ட சில முன்னேறகரமான நடவடிக்கைகளை எடுத்தாலே போதுமானது என்ற நிலையிலேயே நாம். அதை அவர் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
அரலந்தலாவை போன்ற பல படுகொலைகளை நாம் கடந்து செல்ல விரும்புவதைப் போல அநுராவும் இலங்கை இராணுவம் செயத படுகொலைகளை கடந்து செல்ல விரும்புவார் என்பதையே கூறினேன். புரிகிறதா?
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
நீங்களே 1987 ல் நடந்த ஒரு குற்ற சம்பவத்தை கூறி அதை செய்த கருணாவை தூக்கில் போடவில்லையே என்று ஆவேசப்பட்டீர்கள். உங்களுக்கு ஆதரவாக அதை ஏன் முன்பே செய்யவில்லை என்று தானே கேட்டேன்.அதற்கும் ஏன் ஆத்திரப்படுகின்றீர்கள்?
-
சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்? - நிலாந்தன்
இவரது பொது வேட்பாளர் படு தோல்வியடைந்ததை கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நிலாந்தன் குழம்பி போயுள்ளார். “கடந்த 15 வருடங்களாக” என்ற வார்ததையை நிலாந்தன் அடிக்கடி உச்சரிக்கிறார். தமிழர் போராட்டம் எப்போது தொடங்கியது என்பதை மறந்துவிட்டாரா? 2009 க் கு முன்பு தமிழீழ தேசிய தொலைக் காட்சியில்(NTT) பிரபல அரசியல் ஆய்வாளராக இவர் இருந்த போது அன்றைய தலைமைக்கு எந்த ஆக்கபூர்வமான ஆலோசனைகளையோ மக்கள் பேரழிவை தடுக்க வேண்டிய இடித்துரைப்போ செய்யாமல் வெறும் ஜால்ரா போடும் ஆய்வுகளை மட்டும் செய்ததேன்? அவ்வாறு அன்று நேர்மையான விமர்சனங்களை செய்திருந்தால் தனது வாழ்வுக்கு பங்கம் வந்துவிடும் என்ற பயத்தில் பாரிய மக்களை அழிவை விட தனது இருப்பே முக்கியம் என்று இவர் நினைத்திருக்கிறார். இவ்வாறு சுயநல நோக்கில் மக்கள் அழிவுகளை வேடிக்கை பார்தத இவர் இப்போது தனது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் வராது என்ற துணிவில் மற்றவர்களை சகட்டு மேனிக்கு குற்றம் சாட்டுகிறாராம்.
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
அப்பபடியா? அரந்தலவவில் 37 பேர் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது 1987 ம் ஆண்டில். இப்போது அதைச் செய்த அநுர கருணாவை இதற்காக தூக்கில் போடவேண்டும் என்று கூறும் நீங்கள் 2004 ம் ஆண்டுவரை அவர் புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏன் கேட்கவில்லை? அது நடந்த பிறகு தானே அவர் கேர்ணலாக பதவி உயர்த்தப்பட்டார். கருணா அம்மான் என்ற செல்லப் பெயரும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். பல தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கு பற்றி இருந்தார்.
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் தவறுகள் இருக்கலாம். அனைத்தையும் ஆதரிக்க முடியாது. அவர்கள் தம்மை திருத்திக் கொள்ள வேண்டும். ஆனால், வட இந்திய ஆர். எஸ்.எஸ் , இந்துத்துவா ********** உமாகரனுக்கு இதை சொல்லலும் அருகதை கிடையாது. மதவாத நச்சுக்கருத்துகளை ஈழத்தமிழரினையே விதைப்பதை முதலில் இவர் நிறுத்த வேண்டும். பின்னர் தமிழரசுக்கடசியை விமர்சிக்கலாம். தமிழரசு கட்சியை ஆர் எஸ் எஸ் அடிமை ஆக்க முடியவில்லை என்ற கோபமே இவருக்கு. மற்றபடி தமிழ் உணர்வு எல்லாம் இவரது நடிப்பே.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
இருக்கலாம். மிக குறைந்த வாக்குக்கள் அளிக்கப்பட்டிருக்கையில் 9 ஆசனங்கள் இருக்கையில் 200 வாக்கு ஒரு ஆசனத்துக்கு போதுமானதாக இருந்திருக்கும்.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
தமிழ் சிறி. 1994 ம் ஆண்டு தேர்தலையே நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். அத்தேர்தல் நடை பெற்ற போது யாழ் மாவட்டம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. தமது கட்டுப் பாட்டு பிரதேசங்களில் தேர்தல் நடத்த புலிகள் அனுமதிக்கவில்லை. தீவகம் மட்டும் அரச கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்ததால், அங்கு ஈபிடிபி 10744 வாக்குகளை எடுத்தது இந்த வாக்குகள் யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளாக எடுத்து ஈபிடிபி யாழ் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. தேர்தல் பகிஷகரிப்பின் எதிர்மறை விளைவை தமிழர்கள் தெரிந்து கொண்டார்கள்.
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
தமிழரசுக் கட்சிக்குள் தெற்கு அரசியலைப் புகுத்த முயற்சி என்று இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள கொழும்பு மாவட்டத்தின் கிளை தலைவராக நீண்ட காலம் பணியாற்றிய தவராசா தெலிவித்துள்ளார்.
-
மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி
1983 கலவரத்தை நடத்தியவர்கள் அன்றைய ஜே. ஆர் அரசே என்றே தமிழர்கள் அனைவருமே குற்றம் சாட்டினர். இன்று ஜேவிபி பதவிக்கு வந்திருப்பதால் புதிதாய் உருட்ட தொடங்கியுள்ளார்கள்.
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
பெயர்கள் இப்போதே பதிவு செய்து வைத்திருந்தால் எதிர்காலத்தில் அதை விற்று நல்ல வருமானம் பெறலாம். 😂 “மனமுடைந்த தமிழ் தேசிய முன்னணி” இதுவும் நல்ல பெயர் தான்.
-
மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி
இந்த முகநூல் பதிவு தாயகத்தில் இருந்து வந்ததல்ல. பிரான்ஸில் வதியும் அதி தீவிர தேசிய இனவாதி ஒருவரின் முகநூல் பதிவு இது. இதே நபர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு அநுர வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் கூறியதை தெரிவித்து அநுர வெற்றி பெறுவதே நல்லது. அவர் கடுமையான ஒடுக்குமுறைகளை தமிழர் மீது செய்வார். அதுவே எமக்கு நல்லது அநுர வென ற பின்னர் தமிழீழம் புதிய பாய்சலை தொடங்கும் என்று எழுதியவர். தனது முகநூலில் இப்படியான விஷக்கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருபவர். அவரின் பதிவை தாயகத்தில் மாயையில் போதையில் வாழும் யாராவது மீள்பதிவு செய்திருக்கலாம்.
-
இலங்கையின் பொருளாதாரம் குறித்த அருமையான நேர்காணல்.
இலங்கையின் பொருளாதாரத்தின் கடந்த கால தவறுகள், அதை நிவர்ததி செய்வதற்காக பொருளியல் நிர்வாக ரீதியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வட கிழக்கு பொருளியல் மேம்பாடு குறித்த பார்வைகள், ஆலோசனைகள் தொடர்பாக எஸ். துமிலன் அவர்களுடனான நேர்காணல். ஆர்வம் உடையவர்கள் முழுமையாக கேளுங்கள்.
-
ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
இவற்றை சொல்லி இதை செயற்படுத்துவது கடினம். மிகச் சுலபமானது தேர்தல் வரும்போது மேடை போட்டு சோறா? சுதந்திரமா? என்று உசுப்பேற்றினால் அந்த உசுப்பேற்றலில் வாக்குகளை அள்ளி போடுவார்கள் என ற நம்பிக்கை.
-
தமிழரசு கட்சியினா் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி
எப்ப சீனி வாங்கியிருக்கு என று பார்ததால் தெரியும் தானே எப்ப கந்தையர் கையில் கிடைச்சதென்று. 😂
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
இலங்கையில் எந்த ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் இந்த முடிவை தான் எடுப்பார். இதே நிலைப்பாட்டில் தான் அவரால் இருக்க முடியும். தலைவர் பிரபாகரன் அநுர குமாரவின் இடத்தில் இருந்திருந்தாலும் இதே நிலைப்பாட்டிலேயே இருப்பார். தனது போராளிகளை அனைத்துலக நீதிமன்றம் விசாரிப்பதற்கு ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டார். ராஜீவ் கொலை தொடர்பாக இன்ரபோல் உங்களை தேடுகிறதே, அது தொடர்பாக உங்கள் நிலை என்ன என்று ஒரு நிருபர் கேட்ட போது, “நடக்கிற காரியங்களை கதைப்போம்” என்று கொடுப்புக்குள் சிரித்தவறே கூறிக் கடந்து சென்றவர் அவர். தர்ம நியாயங்களுக்கு அப்பால், இது தான் உலக நியதி. உலக நாடுகளும் இலங்கையை கட்டுக்குள் வைத்திருக்க தமக்கான துரும்பு சீட்டாக மட்டுமே இதை பயன்படுத்துமேயொழிய எந்த விசாரணையையும் நடத்த போவதில்லை. ஆகவே தலைவர் பிரபாகரன் கூறியபடி, நடக்கிற காரியங்களை கதைத்து தமிழரின் இருப்பை வட கிழக்கில் பாதுகாப்பதே உடனடித்தேவை.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தமிழீழம் எக்காலத்திலும் சாத்தியமாக இருக்க வில்லை. அதை சாத்தியப்படுத்துவதற்கான உலக அரசியலை எமது அரசியல்வாதிகளும் செய்யவில்லை, ஆயுதப்போராளிகளும் செய்யவில்லை. வெற்று கோஷங்களுடனும் மக்களின் பேரழிவுடனும் அது முடிந்து போனது. அப்படி ஒரு மாயையை அன்றைய அரசியல்வாதிகள் ஏற்படுத்தி இளைஞர்களை நம்ப வைத்ததாலேயே தமிழ் மக்ககளுக்கு பேரழிவுகள் ஏற்பட்டது. சாத்தியமான தீர்வுகளை நோக்கி நகரக்கூடிய பல சந்தர்ங்கள் தவறி போனதற்கு அதுவும் ஒரு காரணம். ஓரளவுக்கு சாத்தியமாக இருந்த சமஸ்டியும் ஆயுத போராட்ட அழிவுடன் சாத்தியமற்று போனது. இப்போதைய நிலையில் பிராந்தியங்களுக்கு அதிகாரபகிர்வு என்ற கோட்பாட்டை இலங்கையில் உள்ள சகல இனமக்களும் இணைந்து வலியுறுத்த கூடிய அரசியலை செய்வதே தற்போதைய சாத்தியமான வழி. பிராந்தியங்களுக்கான அதிகார பகிர்வானது வளர்சசியடைந்த நாடுகளின் வளர்சிக்கு எப்படி காரணமாக இருந்தது, என்பது போன்ற அறிவூட்டல் விழிப்புணர்வு இலங்கை முழுவதும் ஏற்படுத்தப்பட வேண்டும். அரகலய மக்கள் போராட்ட குழு அப்படியான வேலைகளையே செய்து வருகிறது. நாடாளாவிய ரீதியில் அதற்கான விழிப்புணர்வும் ஆதரவும் அதிகரிக்கும் போது அனுர அரசாலோ அல்லது இதற்கு பின்னர் வரப்போகும் அரசாங்கங்களாலோ அதை புறந்தள்ள முடியாது. வரும் அரசாங்கங்களை எல்லாம் பகைத்து குறுகிய கண்ணோட்டத்துடனான குண்டு சட்டி அரசியலை மேற்கொண்டால் விளைவுகளை அனுபவிப்பவர்கள் எதிர்கால தமிழ் மக்களே. தமிழ் மக்களின் அரசியல் பலம் கடந்த 75 ஆண்டுகால தவறான அரசியலின் விளைவுகளால் எப்படி கழுதை தேய்ந்து கட்டெறும்பானதோ அது இன்னும் தொடரவே வழிவகுக்கும். தவறான அரசியலை செய்வது, பின்னர் அதன் விளைவுகளை வைத்து புலம்பி அரசியல் செய்வது, அதன் பின்னர் அதே தவறுகளை மீண்டும் செய்வது, இதுவே ஈழத்தமிழர் அரசியல் வரலாறு.
-
யாழில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் மருத்துவர் சிறிபவானந்தராஜா
நல்ல விடயம். இதன் மூலம் தமிழசுக்கட்சியையும் கஜே கஜே கும்பலையும் சங்கு கோஷடியையும் மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும். பதிலாக ஆற்றல் மிக்க சுயேட்சை வேட்பாளர்களையும் ஆதரிக்க வேண்டும்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தமிழ் நெற் நடுநிலையானது என்பதை நிரூபிக்க ரஞ்சித் நான் சொன்ன படியான கட்டுரைகளை இணைத்திருக்கலாம். அந்த இலகுவான வழி இருக்க அதை விடுத்து வீணாக கஷரப்பட்டு நீண்ட கதை வசனம் எழுதி முழக்கி……… பின்னர் அதை நீக்கி ரொம்ப தான் அறுத்தாலும் கூட தமிழ் நெற் ஒரு தலைப் பட்டமற்றது என்பதை நிரூபிக்க முடியவில்லை. 😂😂 அறிவுடை சமூகம் அறிவியல் ரீதியான நிருபணத்தையே ஏற்றுக்கொள்ளும். கதைகளையும் புராணங்களையும் வைத்து அனுதாபங்களை தேடிக்கொள்வது பலவீனமான அணுகுமுறை . புலிகளுக்கு பெறுமதியான தொலைதொடர்பு சாதனங்களை வழங்கியதை அன்றைய ஜேவிபி எதித்தது என்று புலம்பும் இவர்கள் நோர்வேயை கண்டாலும் எரிக் சோல்ஹைமை கண்டாலும் எரிந்து விழுவார்கள் என்பது வேடிக்கை. இதே ஆக்கோஷத்துடன் நோர்வேயும் திட்டுவார்கள். சமாதானத்துக்கு அனுசரணை வழங்க வந்த நோர்வே இரு தரப்பையும் சமாளித்து சமாதானத்துக்கான சூழ்நிலையை உருவாக்க பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற் கொண்ட வேளையில் யுத்த சூழ் நிலைக்கான வேலைகளை அதாவது அன்றைய ஜேவிபி விரும்பிய வேலைகளை இனவாதிகளுடன் இணைத்து கன கச்சிதமாக செய்து முடித்ததில் இவ்வாறான தமிழ் தேசியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இப்படி அன்றைய ஜேவிபி இனவாதிகள் என்ன விரும்பினார்களோ அதை தமே செய்து முடித்துவிட்டு இன்று அன்றைய ஜேவிபியின் செயல்களை வைத்து புலம்பி இனவாதித்தை தூண்டி தமிழ் மக்களை மீண்டும் தமது பழைய அழிவுப் பதையை நோக்கி திருப்புவதே இவர்களின் நோக்கம். தமது தவறுகளை மூடி மறைக்க அடுத்தவர்கள் மீது முழு பழியையும் சுமத்தி திட்டித் தீர்ப்பதும் காலா காலமாக பகைமை உணர்வை உருவாக்குவது தான் இவர்களது அரசியல் தந்திரமாம். அரசியல் தந்திரமல்ல அது இவர்களின் வியாபார தந்திரம். தமது வியாபாரத்துக்காக தமிழ் மக்களின் இருப்பு வடகிழக்கில் அழிந்தாலும் பரவாயில்லை என்பது இவர்களின் அணுகுமுறை.
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
லாசப்பல் படையணியின் இறுதி எச்சரிக்கையா? அப்ப இனி மண்டையில தான். 😂
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
இவ்வளவு காலமும் பங்கருக்குள் இருந்தவரா? 😂
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
மேற்கண்ட தமிழ் கார்டியனின் கட்டுரையை இணைத்த ரஞ்சித், கந்தன் கருணை மேற்கொள்ளப்பட்ட படுகொலையை செய்த அருணாவுக்கு எதிராக அவரது பதவி குறைப்பை தவிர வேறு சட்ட நடவடிக்கைகள் தமிழர் தரப்பால் எடுக்கபாடாமையை கண்டித்து தமிழ் கார்டியன் எழுதிய கட்டுரையையும், 1990 ல் இலங்கை ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில் ஆயுதமின்றி சரணடைந்த 600 பொலிசாரை சுட்டு படுகொலை செய்த யுத்த குற்றத் தைப் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபடாமை குறித்த தமிழ் கார்டியனின் கண்டன பதிவை, அல்லது அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தி எழுதிய கட்டுரையையும் இணைப்பார் என எதிர் பார்ககிறேன். (இவை இரண்டும் சிறிய உதாரணங்கள் மட்டுமே) அவ்வாறு இணைக்கப்பட்டால் தமிழ் கார்டியன் சாதாரண செய்திகளுக்கு உள்நோக்கம் கற்பித்து எழுதி ஒரு தலைப்பட்ட அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடாத நடுநிலை ஏடு என்பதும் அதில் வரும் செய்திகள் ஒருதலை சார்பற்ற வரலாறு என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம். தாயகத்தில் தமிழ் தேசியம் காக்கவென தமது பிள்ளைகள் முதல் அனைத்தையும் கொடுத்த தமிழ் மக்கள் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளை பயன்படுத்தி தாயகத்தில் தமது இருப்பை காப்பாறுவதற்கான அரசியலை செய்ய முற்படுகையில் வெளி நாடுகளில் தமது வெற்று கோஷ அரசியலாளர்களால் அதை குழப்பி தாயக அரசியலை மீண்டும் கொதி நிலையில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அங்குள்ள பல்கலைகழக மாணவர்களை போராட தூண்டும் இவர்கள், தமது பிள்ளைகளை வெளி நாடுகளில் மிக சிறந்த பலகலைக்கழகங்களுக்கு அனுப்பி கல்வி கற்க வைக்கிறார்கள். இவர்களது அரசியல் மூலம் தாயகத்தில் மக்களின் பலம் குறைந்து வருவதையிட்டோ தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருபது குறித்தோ முன்பு 11 உறுப்பினரை கொண்ட யாழ் தேர்தல் மாவட்டம் மக்கள் தொகை இழப்பால் 6 ஆக குறைக்கப்பட்டு இருபது குறித்தோ இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. மக்கள் இல்லாமல் தேசியம் இல்லை என்பது இவர்களுக்கு தெரியாதா? அல்லது நாம் வாழும்வரை எமது தேசிய வியாபாரம் நடந்தால் போதும் அதன் பின்னர் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று இவர்கள் நினைக்கிறார்களா?
-
சமஸ்டியை ஏற்காத - சமாதான முயற்சிகளை எதிர்த்த ஜேவிபி - பிரித்தானிய தமிழர் பேரவை அறிக்கை
சமஸ்டி வேண்டாம் என்று தானே அன்று பேச்சுவார்ததை காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டு இறுதி போரில் தமிழீழத்தை எடுப்போம் என்று உசுப்பேற்றப்பட்டது. தாயகத்தில் இருந்து புலம் பெயர் நாடுகளுக்கு வந்த பரப்புரையாளர்கள் எல்லோருமே சமதானத்தை ஊக்குவிக்கும் பிரச்ரசாங்களை மேற் கொள்ளாமல் யுத்தத்தை ஊக்குவிக்கும் பரப்புரைகளை செய்தது வெளிப்படையாக நடைபெற்ற விடயம். நானே பல கூட்டங்கள் சந்திப்புக்கள் என று சென்றிருக்கிறேன். எவரும் சமாதானம் சரிவராது அடித்தால் தான் சிங்களவன் வழிக்கு வருவான் இனி அடி தான் என்றே கூறினர். அதை உள்வாங்கி கொண்டு புலம் பெயர் தமிழ் தேசிய வீரர்களும் எப்போது யுத்தம் ஆரம்பிக்கும் என்றே ஆவலுடன் எதிர் பார்ததனர். இப்போது ஜேவிபி சமாதானத்தை எதிர்ததது என்று நீலிக்கண்ணீர் வடிப்பதில் அர்த்தமே இல்லை.