Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. நாம் இங்கு பேசியது உங்கள் கற்பனைகள், சீமான் கும்பலின் பொய்ப்பிரச்சாரங்கள் பற்றியதல்ல. மனோன்மணியம் சுந்தரனார் தமிழர் திருநாடு என்று எழுதியதாக நீங்கள் உண்மைக்கு புறம்பாக இங்கு கூறிய கூற்று தொடர்பானது மட்டுமே. மற்றப்படி இது தொடர்பான உண்மை வரலாறு தெளிவாக தமிழ் நாடு அரச குறிப்புகளில் உத்தியோகபூர்வமாக உள்ளது. சமஸ்கிரதத்தில் இருந்து தமிழ் தோன்றியதாக பொய்யான வரலாற்றை தமிழருக்குள் வட இந்தியாவில் இருந்து திணித்ததை தனது துல்லியமான ஆய்வுகள் மூலம் முறியடித்து இந்திய வடபிரதேசங்களின் இந்தோ ஆரிய குடும்ப மொழிக்கும் தென்னிந்திய திராவிட மொழிக்குடும்பத்திற்கும் இடையிலான வேறுபாட்டை ஆதாரங்களுடன் நிறுவி திராவிட மொழிக்குடும்ப மொழிகளின் தனித்துவம் குறித்தும் அவை பிறந்தது தமிழ் மொழியில் இருந்து தான் என்பது பற்றியும் தமிழ் சமஸ்கிரத்தில் இருந்து பிறந்த மொழி அல்ல என்பதையும் நிறுவிய கார்டுவேல் மீதான கோபத்தில் ஆர் எஸ் எஸ் சங்கிகளும் அவர்களின் கைக்கூலிகளும் மேற்கொள்ளும் பொய்பிரச்சாரங்களை நாமறிவோம்.
  2. இப்பாடல் குறித்த உண்மை வரலாற்றை ஏற்கனவே வாசித்தது உண்மைகளை அறிந்ததாலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய அசல் பாடலிலேயே “திராவிடர் நல் திருநாடும்” என்றே குறிப்பிடப்பட்டுள்ள உண்மை தெரிந்ததாலும் நீக்கப்பட்ட வரிகள் உத்தியோகபூர்வமாக காரணம் கூறப்பட்டு தமிழ் நாடு அரசிலால் நீக்கப்பட்டது என்ற உண்மை தெரிந்ததாலும் புலவர் இங்கு பகிர்ந்த யாரோ உண்மை தெரியாத ஒருவரின் உளரல் எழுத்தை வாசித்தபோது எனக்கு “புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே” என்ற ஆயிரம் பொய் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஞாபகத்துக்கு வந்தது. 😂 தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பவராவார். இவர் 1891-இல் எழுதி வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம்நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம்எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி இப்பாடலாகும்.[1] வரலாறு பாடல் வரிகள் “ நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே இப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமேயாகும். அவர் எழுதிய மெய்ப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. “ நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! கவிதைக்கு பொய்யழகு என்பார். அதனால் புலவர்க்கும் பொய்யழகோ?
  3. கொல்லப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
  4. இதில் என்ன முரண்பாட்டை கண்டீர்கள் மீரா. தமிழ் மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் அறிக்கைகளை வெளியிடும் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்மக்களை மிக அதிகம் பாதிக்கும் ஒரு சட்டதிற்கெதிராக ஒரு போராட்டதை கூட்டுணைந்து செய்ய வந்த அழைப்பை தமது சுயநலத்திற்காக புறக்கணித்துள்ளனர். குறைந்த பட்சம் அதிகார பீடங்களுக்கு எதிரான ஒரு முன்னெடுப்பை செய்வதற்கான தொடர்சியான தொடர்பாடல்களை வளர்பதற்கான, தமது அரசியல் தலைமைத்துவ அறிவை வளர்பதற்கான வேலைத்திட்டங்களில் கூட பங்கேற்க மனமின்றி சுலநலமாக சிந்தித்துள்ளார்கள். ஆகவே இவர்களை போன்ற சுய நலவாதிகளின் அறிக்கைகளை விமர்சனமின்றி மக்கள் அப்படியே ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது சரி தானே!
  5. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஜனநாயகரீதியிலான போராட்டங்களை இணைந்து முன்னெடுக்க ஆதரவு கோரி அரகலய அமைப்பின் சார்பில் வசந்த முதலிகே நேரில் வந்து கேட்ட போது உங்களுடன் இணைந்து எதுவும் செய்ய மாட்டோம் தனி தவில் தான் அடிப்போம் என்று அவரை அவமதித்து அனுப்பிய அளவுக்கு அரசியல் அறிவுள்ளவர்கள் இவர்கள். இத்தனைக்கும் இச்சட்டதால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே.
  6. முதலில் அந்த முட்டாள் பயலுகள் நாடு மாதிரி கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரமர ஆகிய விடயங்களில் முன்னேறட்டும். பிறகு பார்க்கலாம். 😂
  7. கடவுச்சீட்டில் ஆங்கிலம் முதலாவதாக இருப்பதே சரியானது. மற்றய இரண்டு மொழிகளும் நடைமுறையில் 90 வீதமான நாடுகளில் எவராலும் வாசிக்கப்படப்போவதில்லை.
  8. இனவாதத்தில் இருந்து சிவாஜிலிங்கமும் ஜேவிபியும் மீளவேண்டும். அதுவே மீட்சி.
  9. அறிவுள்ள மனிதர்கள் மட்டும் புரிந்து கொள்ளும் ஆரோக்கியமான உரையாடல் என்பதை குறிப்பிடத் தவறியதால் வந்த வினை.
  10. ஈழத்தமிழர் அரசியல் பற்றிய கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரு ஆரோக்கியமான உரையாடல். உரையாடலில் சமுகம் இணையத்தள நெறியாளருடன் பங்கேற்பவர்கள் லண்டனில் இருக்கும் திரை இயக்குனரும் யூகே கிங்ரன் கல்லூரியின் முன்னாள் கணக்கீட்டுத்துறைத் தலைவரும் விரிவுரையாளருமான புதியவன் இராசையா, யாழ் பல்கலைக்கழக ஆங்கில மொழி விரிவுரையாளர் திருவரங்கன்.
  11. இந்த படம் 1983 காலப்பகுதியில் வெளிவந்திருந்தது. பின்னர் ஜேவிபி இலங்கையில் தடைசெய்யப்பட்டிருந்த காலத்திலோ 1987 ல் அவர்கள் பிரேமதாச காலத்தில் அரசுக்கெதிராக தீவிரமாக போராடிய காலத்திலோ தமிழர் தரப்புக்கும் ஶ்ரீலங்கா அதிகாரபீடத்துக்கும் நல்ல உறவு நிலவிய பிரேமதாச காலம் போன்றவற்றில் இதை நிரூபித்திருத்திருக்கும்வாய்பபு இருந்தது. (இந்த படம் உண்மையானால்) அப்போதெல்லாம் வாய்மூடி மைனமாக இருந்துவிட்டு அதை விடுத்து இப்போது இதை பிரபலப்படுத்துவது வெறும் உசுப்பேற்றல் வெறுப்பு அரசியலை தூண்டும் செயலேயன்றி வேறில்லை.
  12. நீங்கள் இதை கூறுகின்றீர்கள். வரலாறு என்று கூறி இப்படியான கதாசிரியர்களின் எத்தனையோ கற்பனைகள் இங்கு பரப்பப்பட்டுள்ளன. சிறந்த கதாசிரியருக்கான விருதை யாழ் இணையம் கொடுக்க விரும்பினால் கஷரப்பட வேண்டிய தேவையே இல்லை. வரலாற்றை தமது புனைவுடன் சுவார்சியமாக தனது வாசகர்களை கவரும் விதத்தில் எழுதும் திறமை பாராட்டுக்குரியது. தமிழ் புனைகதை எழுத்தாளர் கல்கி விருது கொடுக்கலாம்.
  13. இதுவரை நடந்த உண்மையையே கூறினேன். பலகலைக்கழக மாணவர்கள்படித்த, முழுமை பெற்ற தலைமுறை அல்ல இப்போதும் படித்துக்கொண்டிருக்கும், இன்னும் நிறைய படிக்க வேண்டிய தலைமுறை. ஒரு நிறுவனத்தில் உயர் பதவிக்கு வரவே இவர்கள் பெறும் பட்டத்துடன் பயிற்சி, அனுபவம் தேவைப்படும் நிலையில் உள்ள இவர்களின் அறிவுரையை முழுமையாக சுய சித்தனை இன்றி அப்படியே ஏற்றுகொள்ளவேண்டிய தேவை மக்களுக்கு இல்லை.
  14. தாயகத்தில் வாழும் மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்யும் விருப்புள்ள அதற்காக முயற்சி செய்யக்கூடிய அறிவும் ஆற்றலும் உள்ளவர்களை தெரிவு செய்யவேண்டும் என்றே இப்போதும் கூறுகிறேன். அதற்கு காரணம் அபிவிருத்திகளை மேற்கொள்ளுவதானால் தாம் அதற்காக நேர்மையுடன் உழைக்க வேண்டும், மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். உரிமை அரசியல் என்றால் நாலு உணர்சசிவசப்பும் அறிக்கைகள், நன்கு தயாரிக்கப்பட்ட உசுப்பேற்றும் பேச்சுகள், ஆவேசமான பேட்டிகள் போதும். பிகுதி வாழ்வை மகிழ்சசியாக கழிக்கலாம்.
  15. பலகலைக்கழக மாணவர்களைப் பொறுத்தவரை தமது துடிப்புள்ள இளம் வயதில் இவ்வாறான உணர்ரச்சியூட்டும் தேசிய அறிக்கைகளை வெளியிடுவதும் பின்னர் படிப்பு முடிந்து அரச சேவையில் தத்தமது துறைசார் வேலையில. சேர்ந்து வாழ்ககையில் செற்றிலாகிய பின்னர் தமது வாழ்விற்கோ, வேலைக்கோ, குடும்பத்திற்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நோகாமல் மென் தேசியம் பேசுவதும் தேவைப்பட்டால் தென்னிலங்கையில் அல்லது வெளிநாடுகளில் செற்றிலாகி விடுவதுமே வரலாறு. ஆகவே, இவர்களின் இவ்விதமான அறிக்கைகளை முழுமையாக கணக்கெடுக்காமல், தாமாக யோசித்து தமது தேவைகளை கவனிக்க கூடியவர்களை தெரிவு செய்வதே சரியானதாக இருக்கும். ஏனெனில் இன்று இவ்வாறு உணர்சசி அறிக்கை விடும் இவர்கள் படிப்பு முடிந்த பின்னர் தமது தேவைகளை மட்டும் தேடி தென்னிலங்கைக்கோ வெளிநாடுகளுக்கோ சென்று செற்றிலாகி தமது குடும்ப தேவைகளை கவனிப்பவர்களாக மாறிவிடுவர்.
  16. மக்களின் அன்றாட பிரச்சனைகள் என்ன என்பதை பாராளுமன்ற உளுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த தொகுதி மக்களிடம் பேசி அறிந்து கொள்ள வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடனோ, அமைச்சருடனோ, அமைச்சு அதிகாரிகளினதோ கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் தீர்க்க தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவை தீர்க்கப்பட்டதா என்பதை, அடிக்கடி அம்மக்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். தொடர்சசியான உழைப்பின் மூலம் அவற்றை தீர்க்க முயற்சி செய்யலாம். அதை விட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தியும் இதனை செய்யலாம். மக்களின் நூறு வீத தேவைகளையும் நிச்சயமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் தனது பதவிக்காலத்தில் செய்ய முடியாதெனிலும் பெரும்பாலான விடயங்களில் முன்னேற்றத்தை அடையலாம்.
  17. மக்கள் தங்களின் அன்றாடம் எதிர் நோக்கும் அடிப்படை பிரச்சனைகளை தீர்ததுவைக்க கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும். அது எந்த கட்சி என்றலும பரவாயில்லை. அதுவே இன்றைய தேவை.
  18. அத்துடன் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளாத எமது கடந்த கால தவறுகளாலும் தான் என்பதை கூறினால் இங்கு பலருக்கு பிடிப்பதில்லை. இருப்பினும் அந்த கசப்பான வரலாற்றை ஏற்றுக்கொண்டு பயணிப்பதே எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும். War at biiter end என்று வந்த இறுதி அறிக்கையின் உட்பொருளை புலம் பெயர் செயற்பாட்டாளர்களில் சிலராவது புரிந்து கொண்டிருந்தால், அல்லது பாலகுமார், யோகி, கலைக்கோன் மாஸ்ரர் போன்ற உன்னதமான போராளிகள் இறுதியில் உயிர் தப்பி தாயகத்திலோ வெளி நாட்டிலோ செயற்படு நிலையில் இருந்திருந்தால் இன்றைய நிலை முன்னேற்றகரமாக இருந்திருக்கும் என்பது எனது கணிப்பு. ஏனெனில் ஒரு அரசியல் போராட்டத்தில் நடைமுறை மாற்றங்களை எப்படி உள்வாங்கி, பழைய தவறுகளை திருத்தி எவ்வாறு பயணிக்கவேண்டும் என்ற தெளிவு இவர்களுக்கு உள்ளது.
  19. துரோகத்தை வேரறுப்போம் என்று இன்று வீர முழக்கமிடுகிறார் திருமதி சசிகலா ரவிராஜ். ஆனால், துரோகிக்கும், தியாகிக்கும் ஈழத்தமிழ் தேசிய அரசியலில் நூலிழை வித்தியாசம் தான் உள்ளது என்பதற்கு இவரது கணவர் ரவிராஜ் அவர்களே உதாரணம். 1998 ல் யாழ் மேயராக இருந்த பொன் சிவபாலன் புலிகளின் கிளைமொர் குண்டு வெடிப்பில் பலியானார். அந்த நேரத்தில் பொன் சிவபாலனுடன் நெருக்கமாக பணியாற்றியவர் அப்போது உதவி மேயராக இருந்த, திரு. ரவிராஜ் அதிர்ஷ்டவசமாக வேறு பணிகள் இருந்ததால் அன்றைய கூட்டத்தில் பங்கு பற்றவில்லை. அன்று பங்கு பற்றியிருந்தால் அன்று மேயருடன் இவரும் கொல்லப்பட்டிருப்பார். அன்று கொல்லப்பட்டிருந்திருந்தால் தமிழ் தேசியவாதிகள் பார்வையில் ரவிராஜ் இன்றும் ஒரு துரோகி. அவரின் மனைவி துரோகியின் மனைவி. அன்று வேறு பணிகள் இல்லாமல் இருந்ததால் ரவிராஜின் அதிஷடம் மாமனிதரானார். குண்டு வெடிப்பின் பின்னர் புலிகளுக்கு பயந்து மேயர் பதவியை ஏற்க முதலில் மறுத்த ரவிராஜ் எனினும் கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க பின்னர் சிறிது காலம் மேயராக பணியாற்றினார். இவரது அதிஷரம் மாநகரசபையின் ஆயுட்காலம் சிறிது காலத்தில் முடிந்தது.
  20. ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பு பாராளுமன்றம் சென்று ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியப்பிரமாணம் செய்ய அனைத்து தீவிர தமிழர தேசியவாதிகளுக்கிடையில் கடும் போட்டி. தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இரு தேசம் கோஷ்டிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஒற்றையாட்சிக்கு விசுவாசம் தெரிவிக்க இவ்வளவு ஆவலாக இருக்கிறார்கள் என்று பார்ததால் புலம் பெயர் தேசிய வியாபாரம. செய்யும் கும்பலும் தமது விசுவாசிகளை ஒற்றையாட்சிக்கு விசுவாசம் தெரிவிக்க அனுப்ப கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். 😂😂
  21. வரலாறும் உண்மையும் கசக்கத் தான் செய்யும், சுடத்தான் செய்யும், என்று கூறியவருக்கே முழுமையான உண்மை வரலாறு சுட்டுவிட்டது. 😂
  22. வரலாறு என்பது இந்த பொண்ணு பாடமாக்கி ஒப்புவித்ததது போல், “ அம்மா அண்ணா அடிச்சுப்போட்டான், எனக்கு நுள்ளிப்போட்டான்” என்று தனது தவறை மறைத்து தாயிடம் முறையிடும் சிறுபிள்ளையின் முறைப்பாடு அல்ல. இந்த கதையாடல்களை உலகம் திரும்பிக்கூட பார்ககவில்லை. எமக்குள் உசுப்பேற்றி வீணாக அழிந்தது தான் மிச்சம். வரலாற்றில் கிடைக்கும் சந்தர்பங்கள் ஒவ்வொன்றையும் தொடர்சசியாக (இறுதியாக ஒஸ்லோ) கோட்டைவிட்ட எம்மவரின் முட்டாள்தனத்தையும் உள்ளடக்கியதே வரலாறு. டொனமூர் அரசியலமைப்பின் உருவாக்கத்தின் போது சிங்களத்தரப்பு சமஸ்டியை பிரேரித்த போது அதை நிராகரித்து, நியாயமற்ற 50 : 50 கோரிக்கையை வைத்து காலத்தை இழுத்தடித்து வெறும் உசுப்பேற்றலை மட்டும் செய்த செயலும் வரலாறு தான். 1932 தேர்தலை புறக்கணித்ததன் மூலம், முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும் போது தமிழர் பிரதிநிதிகளை அனுப்பாமல் விட்ட மூடத்தனமும் வரலாறுதான். அதன் பின்னரான வெறும் உசுப்பேற்றல் ஜதார்ததத்தை நிராகரித்து மாயையைகளை நம்பிதும் வரலாறு தான். மேலே உள்ள சிறுவர் பேச்சுப்போட்டியை காசிநாதர் போன்ற கூத்தாடிகள் சிலாகிக்கலாம். ஆனால் அறிவுடை மனிதர்கள் எப்போதும் உண்மை வரலாறுகளை படித்து அன்ன்படியே தமது வாழ்வை நெறிப்படுத்துவர். கூத்தாடிகள் தமது கூத்தாட்ட content க்காக எழுதிய கதையாடல்களை வரலாறாக நம்பியதால் தான் தமிழரின் தேசிய அரசியல் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் இன்றைய பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலை.
  23. எங்க நடந்த பேச்சுப்போட்டி இது. பொண்ணு குடுத்த பேச்சை பாடமாக்கி நல்லா பேசுது. எப்படியும் பேச்சுப்போட்டியில் இந்த பொண்ணு பரிசு பெற்றிருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.