Everything posted by island
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
தமிழ் தேசியவாதம் இப்போது தமிழ் இனவெறி அடிப்படை வாதமாக மாறிக்கொண்டு வருவதை எழுஞாயிறு அவர்களுன் கருத்து காட்டுகிறது. சிங்கள் தாயாருக்கு பிறப்பதோ, சிங்கள் காதலி இருப்பதோ குற்றமாக கருதும் அளவுக்கு இனவெறி. நாட்டுக்காக போராடும்போதே இந்த இனவாதம் என்றால் நாடும் அதிகாரமும் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்கிறேன்.
-
தமிழகத்தில் அயலக தமிழர் விழா : செந்தில், மனோ, செல்வம், சாணக்கியன் பங்கேற்பு
பேசும் போது விசிலடிக்க ஆட்கள் இருக்கமாட்டார்கள் என்பதனால் இருக்கலாம்.
-
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி.
ஏனப்பா எல்லோரும் ரென்சன் ஆகுறீங்க? மரியானா அகழி (Mariana Trench) வரை எமது அரசியல் பலத்தை கொண்டு சென்று விட்டு இமாலய தீர்வு ( Himalaya) ( இமாலய பிரகடனம் அல்ல) ஒன்று கிடைக்கும் என்று மனப்பால் குடிப்பது ஓவராக தெரியவில்லையா? தற்போதைய நிலையில் தமிழ் அரசியலை நடத்துவதாக கூறும் தாயக, புலம்பெயர் அரசியலாளர்களின் வெற்றுக்கூச்சல்கள், அவர்களது மாயை அரசியல் ஆகியவை ஜதார்ததமான அரசியல் தீர்வை அடைவதற்கும், தமிழ் மக்களின் இருப்பை காப்பாற்றுவதற்கும் முடியாத அளவிற்கும் ஏன் அதற்கு கிட்ட கூட வரமுடியாத அளவுக்குமான ஒரு பாரிய இடைவெளியுடன் உள்ளது என்ற விடயம் சாதாரண பொது அறிவு உள்ள அனைத்து மக்களுக்கும் தெரிந்த உண்மை. அதனால் தானே என்னவோ தாயகத்தில் வாழும் புதிய தலைமுறையினர் இந்த மாயை அரசியல் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அத்துடன் ஏற்கனவே தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்று மாய்மாலம் காட்டி தமக்கு முன்னைய தலைமுறையை நாசப்படுத்தியது போல தம்மையும் ஆக்கிவிடுவார்களோ என்ற முன்னைச்சரிக்கையாகவும் இருக்கலாம். கிடைத்த வாழ்வை இயன்றளவு மகிழ்வாக கழிக்க அவர்கள் விரும்புவது நியாயமே! அவர்களது கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றறைப் பலப்படுத்துவது அவர்களது முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். புலம் பெயர் புதிய தலைமுறையை பொறுத்தவரை ஶ்ரீலங்கா என்றால் தென்பகுதி அழகான கடற்கரை ரிசோட்டுகளும், மத்திய மலைநாட்டின் மிக ரம்மியமான எல்லே போன்ற மனத்தை கவரும் பிரதேசங்களே முன்நிற்கிறது என்பதை அத்த பிரதேசங்களுக்கு செல்வோர் அறிந்து கொள்ள முடியும். அதுவும் நியாமானது தான். உதாவாக்கரை அரசியல் சித்தாத்தங்களுக்குள் சிக்கிக் கொள்ளாது அவர்களாவது மகிழ்வாக வாழட்டும். இனவாதம், அரசியல் பலமின்மை, ஜதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு பயணிக்க மறுக்கும் கும்பல் மனப்பான்மை, தர்ககரீதியில் விடயங்களை அணுகாமல் உணர்சி வசப்பட்டு அதனபால் விடயங்களை அணுகும் மனப்பான்மை ஆகிய காரணங்களால், ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்வது தற்போது வாழும் தலைமுறையில் சாத்தியமில்லை என்பதால், யாராவது அரசியல் தீர்வை நோக்கி சில கிலோமீற்றர் கள் கூட நகர்ந்து விடுவார்களோ என று எவரும் கவலை கொள்ள தேவையில்லை. நடக்கவே நடக்காது. ஆகவே நிம்மதியாக தமது மிகுதி வாழ்வை வாழ்ந்து விட்டுப் போய்ச் சேருவதே எதிர் காலத்தலைமுறைக்கு இந்த தலைமுறை செய்யக்கூடிய சேவை.
-
இமாலய பிரகடனத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு,ஆறு திருமுருகன்.
ஐயா ஆர் எஸ் எஸ், அவருக்கு கொடுத்த அசைன்மென்ட்ஐ வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்ற விழைகிறார். யுத்த காலத்தில் சைவக்கோவில் அறங்காவலர்கள் எல்லாரும் டக்லஸின் இந்த கலாச்சார அமைச்சு மூலம் கோவிலுக்கு உதவி தொகை பெற அவரிடம் முண்டியடித்துக்கொண்டிருந்த வேளையில் போது கிறிஸ்தவ பாதிரியார்கள் அரச அடக்குமுறைகளை வெளிநாடுகளில் பர்ரபுரை செய்தும் மனித உரிமை நிறுவனங்களுக்கு அரச அடக்குமுறைகள் குறித்து ஆதாரங்களை திரட்டி அறிக்கையளித்ததையும் மக்களுடன் நின்று பல உதவிகள் செய்ததையும் மக்களை மெல்ல மெல்ல மறக்கச்செய்ய மெல்ல மெல்ல நோகமல் மெல்ல மெல்ல விஷ ஊசியை ஏற்றுகிறார்.
-
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி.
ஆத்திரம் கொண்ட வெளிநாட்டு தமிழ் சமூகத்தினர் சுவிற்சர்லாந்து அரசாங்கத்துடனான ராஜதந்திர உறவுகளை துண்டிக்க முடிவு செய்துள்ளனர். சுவிற்சர்லாந்து மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் வெளிநாடுவாழ் தமிழர்கள் தமக்குள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் அடைந்த தமிழர்கள் தமது ஒரு நாள் சமூக உதவி பணத்தை பெறாமல் சுவிஸ் அரசுக்கு தமது அடையாள எதிர்ப்பை காட்டும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 😀😂
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
கருத்துக்கு நன்றி ஜஸ்ரின். தன்னை ஒரு பெண் விரும்பாததை ஏற்க முடியாத குரூர மனம் கொண்ட காதலனால் அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுவே இலங்கை இந்தியாவில் நடந்திருந்தால் கொலையாளி தப்பி சென்றிருப்பார். இங்கு ஐரோப்பாவில் கொலையாளி தப்பி வாழ்வதற்கான சாத்தியப்பாடு குறைவு என்பதால் அந்த கொலைகாரக் காதலன் தற்கொலை செய்துள்ளார். தப்பி செல்ல வசதி இருந்திருந்தால் அதையே செய்திருப்பார். 1980 களின் இறுதி 1990 களில் தொடக்கம் காலப்பகுதியில் தமிழர்களிடையே ஐரோப்பாவில் பண/ சீட்டு பிரச்சனையில் கொலைகளை புரிந்த சிலர் தப்பி கனடா போன்ற நாடுகளுக்கு சென்ற சம்பவங்களும் நடைபெற்றிருக்கிறது. தன்னை விரும்பாததால் அசிட் வீசுவது அல்லது அந்த பெண்ணை கொலை செய்வது தமிழ் நாட்டில் கூட ஏராளமாக நடந்துள்ளன. இந்நிலையில், ஏதோ தமிழ் சமூகத்தில் இதற்கு முன்போ அல்லது அவர்களது தாயகத்திலோ கொலைகள் நடக்காது போலவும் மேற்கு நாடுகளின் கலாச்சாரம் தான் தமிழ் சமூகத்தை கொலை வன்முறைக்கு தூண்டுவது போல உலக மகா உருட்டைச் செய்ய சிலர் முனைகிறார்கள். அதற்குள் தேவையற்ற கலாச்சார சமூக இழுப்புக்கள், பூசி மெழுகல்கள். ஒரு பாலின விடயங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர பும் இல்லாத நிலையிலும் அதையும் இழுத்து கலாச்சார பிதற்றல்கள் வேறு.
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
நடந்த கொலை நீங்கள் சொன்ன எந்த காரணிகளுக்குள்ளும் வராது.
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தோல்வியடைந்தது என்பதை விட தொடர்சசியாக பின்னோக்கி கொண்டு செல்லும் அழிவு அரசியலே இப்போதும் தொடர்வதோடு அதை ஊக்கிவிப்பதும் நடக்கிறது. அதையே தவறு என்று கூறுனேன். அடக்குமுறைகளை எதிர்ப்பதற்கான மக்களின் ஆணை எப்போதும் ஜதார்ததபூர்வமான தேர்வுகளை நோக்கியதாக இருந்ததை பல தேர்தல்களில் அவதானிக்க முடியும்.(அதற்கான புள்ளிவிபரங்கள் இணையத்தில் உள்ளது.) அரசியலாளர்கள் தான் அதற்கு தவறான அர்ததத்தை கற்பித்து தவறாக வழிநடத்தினார்கள். நடந்து முடிந்த தவறான அரசியல் போகட்டும். அது இனி வேண்டாம் என்பதே எனது கருத்து.
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
வரலாற்று படிப்பினை என்பது மக்களுடையது. அந்த மக்களின் வரலாற்று படிப்பினையுனூடான மனவோட்டம் எப்படி இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளாது, அரசியல்வாதிகள் தமது அரசியலுக்காக வகுத்த கொள்கைகளை மக்கள் மீது திணித்துவிட்டு, மக்களை குறை சொல்வது எவ்வளது தவறானது என்பதை, மக்கள் வெளிப்படுத்திய தேர்தல் தரவுகள் மூலம் ஆதாரத்துடன் தெரிவித்திருந்தேன். அது தான் உண்மையான வரலாறு. அது எப்படிப் பேச்சரசியல் ஆகும்? 2009 ல் இருந்து தமிழினம் நகராது நிற்கிறது என்ற உங்கள் கூற்றே தவறானது. 1948 ல் இருந்து இன்று வரையான ஒட்டு மொத்த காலப்பகுதியிலும் அது பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதே உண்மை. அவ்வாறு பின்னோக்கி நகர்ததியவர்கள் எவரும் அதற்கு பொறுப்பு கூறவில்லை. தமது இருப்பை காப்பாறினாலே போதும் என்ற அவலநிலைக்கு மக்களை கொண்டுவந்ததே ஒட்டுமொத்தமான கடந்த கால அரசியலின் விளைவாக உள்ள நிலையில், அதை சுட்டிக்காட்டி இனியாவது மக்களின் விருப்பை அறிந்து அரசியல் செய்யுங்கள் என்று கூறுவது எப்படி பேச்சு அரசியலாகும்?
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
நான் பேசியது ஜதார்தத அரசியல். நீங்கள் பேசுவது உங்கள் ஆசை. அவ்வாறு ஆசை கொள்ளும் முழு உரிமையும் உங்களுக்கு உள்ளது.
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பல தகவல்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது. 1977 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை கூட வட கிழக்கில் கிட்டதட்ட அரைவாசி மக்கள் மாத்திரமே ஆதரித்துள்ளனர். அந்த புள்ளிவிபரங்களை சம்பந்தபட்ட தலைவர்கள் ஆராய்ந்து ஜதார்த்தத்தை உணர்ந்து நேர்மையாக அணுகாமல் தமது அரசியல் நலன்களுக்கு ஏற்ற முறையிலேயே கொள்கைகளை வகுத்தனர்.
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
விசுகு, நான் கூறியது அவரின் தோல்வி பற்றியதல்ல. மக்களின் மனவோட்டம் அரசியல் தலைவர்களால் புரிந்து கொள்ளப்படாமை பற்றியதே. அரசியல்க்கட்சிகள் அல்லது அரசியல் இயக்கங்கள் உருவாக்கும் கொள்கைகளை மக்கள் ஒட்டு மொத்தமாக ஏற்று கொள்ளவேண்டிய கடப்பாடு மக்களுக்கு இல்லை. மக்கள் மனவோட்டத்தை அனுசரித்தே அரசியல்கட்சிகள்/ இயக்கங்கள் தீர்மானங்களை எடுக்கவேண்டும். மக்களின் மன நிலை நிச்சயமாக ஒட்டு மொத்தமான கும்பல் மனநிலையில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருக்கவும் மாட்டாது. ஆகவே அது மக்களின் பலவீனம் அல்ல. அரசியலை முன்னெடுத்த தலைமைகளின் பலவீனம் மட்டுமே.
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
தமிழர்களுக்குள் நடந்த கொலையில் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழ் பெண். கொலையாளி தமிழர். கொலையாளி மீது கோபம் வரவில்லை. ஆனால், நோர்வே இமிக்கிறேசனை திட்டுகின்றீர்கள். பாகிஸ்தானியரை, சோமாலியரை கிழக்கு. ஐரோப்பியரை, உக்கிரேனரை கேய், லெஸ்பியனை எல்லாம் இதற்குள் இழுத்து அவர்கள் தான் இதற்கு காரணம் போல்…….. என்ன டிசைனப்பா நீங்கள்.
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் தவிப்பதற்கான முழு உரிமையும் திரு கஜேந்திரகுமாருக்கு உள்ளது. மக்களை பகிஷகரிக்குமாறு கோரிக்கை விடும் உரிமையும் அவருக்கு உள்ளது. அதே வேளை இவ்வாறானவர்களின் கோரிக்கைகளை புறக்கணித்து வழமைபோல் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும் மக்களுக்கு உள்ளது. எனது கணிப்பில் இரண்டாவது தான் நடைபெறும்.
-
கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..!
இளையராஜா மிகச் சிறந்த இசையமைப்பாளர். அவரின் இசை எம்மை மெய்மறக்க வைக்கும். அவரின் இசைக்கு நாம் எம்மை அறியமல் அடிமையாவோம். திறமைசலியான அவருக்கு கர்வம் இருந்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால், சபை நாகரீகம் தெரியாத எதிரில் இருப்பவருக்கு அடிப்படை மரியாதையை கொடுக்க முடியாத அளவுக்கான அவரது கீழ்தரமான வார்ததை பிரயோகங்கள் அவரின் மனிதன் என்ற வகையிலான மதிப்பை குறைக்கவே செய்யும். மிக சிறந்த இசையமைப்பாளர். மிக கீழ்தரமான மனிதர்.
-
ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?
கடந்த 75 வருடங்களாக எமது தமிழ் தரப்பு தலைமைகள் செய்தவை எல்லாம், போராட்டத்தை தொடர்சசியாக றிவேர்ஸ் கியரில் கொண்டு சென்றதே. 1948 ல் இருந்த நிலையை விட, இன்று அதல பாதாளத்தில் தமிழர் நிலை உள்ள நிலைக்கும் பாரிய உயிர் அழிவுகளுக்கும் தலைமை தாங்கிய எல்லா தலைமைகளும் பொறுப்பு கூற வேண்டும். தமது தலைமைகளின் தவறுகளுக்கு சொந்த மக்களுக்கு பொறுப்பு கூற முடியாதவர்கள் இலங்கை அரசை பொறுப்பு கூற வைக்கப்போவதாக கூறுவது வேடிக்கை. அதற்கான பொறுப்பு கூற தமிழர் அரசியலைக் நடத்துகிறோம் என்று கூறுவோருக்கு ஈகோ இடம் தரவில்லை என்றால் செய்த தவறுகளை தமக்குள்ளாவது உளப்பூர்வமாக உணர்ந்து ஏற்றுக்கொள்வதுடன் இனியாவது பொறுப்பை உணர்ந்து அறிவு பூர்வமாக செயற்பட வேண்டும். அனைத்து அமைப்புகளும் சிந்தித்து புரிந்துணர்வுடன் தற்போதைய நிலையில் சாத்தியமான ஒரு அரசியல் தீர்வு நடைமுறையை உருவாக்கி, அதைப் பெற இலங்கை அரசுடன் பேசுவதோடு நின்றுவிடாது, சிங்கள மக்கள் அமைப்புகளுடனும் புரிந்துணர்வுடன் உரையாடல்களை மேற்கொண்டு அதைச் சாத்தியமாக்க உழைக்க வேண்டும். அதன் மூலம் எமது தமிழ்மக்களின் பலத்தை உயர்த்த தேவையான அரசியலை செய்ய வேண்டும். அதுவே இன்றைய தமிழ் மக்களின் அபிலாசை. அதை விடுத்து இதுவரை செய்த உதவாக்கரை அரசியலை தொடர்வாரேயானால், தமிழர்களின் உண்மையான துரோகிகள் இந்த ஒட்டுமொத்தமான தலைமைகளே, என்பதை விளைவுகளை அனுபவிக்கப்போகும் எமது எதிர்கால சந்ததி கூறும்.
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
1982 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை பகிஷகரிக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி மக்களிடம் கோரிக்கை விட, அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திரு குமார் பொன்னம்பலம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து, அதை உறுதிப்படுத்த தனக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் உண்மையில் மக்கள் அந்த இரு கோரிக்கைகளையும் நிராகரித்ததே வரலாறு. வட கிழக்கில் தமிழர் பிரதேசங்களில் அம்பாறை மாவட்டத்தை தவிர்தது விட்டு பார்ததால் கூட முக்கிய இரண்டு தேசியக்கட்சிகளும் சேர்ந்து 325000 வாக்குகளை பெற, குமார் பொன்னம்பலம் வெறும் 155000 வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்த ஜதார்த்தத்தை, தமிழ்மக்களின் மனவோட்டத்தை எமது விடுதலைப்போராட்டத்தை நடத்திய எவரும் கவனத்தில் கொள்ளவில்லை. சுதந்திரத்திற்கு பின்னர் தேர்தல் பகிஷகரிப்பு என்றுமே தமிழர் பகுதிகளில் வெற்றி பெறவில்லை. புலிகளில் கட்டுப்பாட்டில் மக்கள் இருந்தபோது அல்லது ஆயுத முனையில் மட்டுமே அது சாத்தியமானது என்பதே உண்மை வரலாறு. அதை உலகம் கருத்தில் எடுக்காது. 1999 ல் சந்திரிக்கா மீது பாரிய குற்றச்சாட்டுகளை தமிழ் சமூகம் சார்பாக உலக அளவில் பரப்புரை செய்யப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கூட யாழ்பபாண மாவட்டதில் மட்டும் அவர் 52000 திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றார். ஜனதிபதி தேர்தலில் மூலம் அரசியல் தீர்வு திட்டத்தை எப்படியும் பெற முடியாது. ஆகவே இதனை உபயோகித்து சமயோசத்துடன் தமிழ் மக்களின் கல்வி சமூக பொருளாதார பலப்படுத்தலை செய்ய முடிந்தால் அதை தமிழ்கட்சிகள் செய்வது நல்லது. அவர்களிடம் அதற்கான வலு மட்டுமே தற்போது உள்ளது என்பது எனது அபிப்பிராயம்.
-
அடிப்படை நிலைப்பாடுகளில் ஈழத் தமிழர் தேசம் சமரசம்செய்ய முடியாது - விசுவநாதன் ருத்ரகுமாரன்.
பல்லாண்டுகள் கழித்தும் அறிக்கைகள் வெளியிட அனைத்து தமிழ் தேசிய அமைப்புகளும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாயகம், தேசியம், தன்னாட்சிவடகிழக்கு இணைப்பு போன்ற சொற்களை உள்ளீடு செய்து ஒரு நிலையான கட்டளையை (Standing order) செய்து வைப்பது நல்லது. இவர்கள் இல்லாத காலத்திலும் இவ்வாறான அறிக்கைகள் வந் து கொண்டிருக்கும். 😂
-
தேயும் ஈழத் தமிழ்மொழி
பேச்சு தமிழும் தமிழ் எழுத்தின் வரி வடிவங்களும் தொடந்து மாறிக்கொண்டே வந்துள்ளன. இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியதவை. மாற்றங்கள் என்பது பிரபஞ்ச விதிகளில் ஒன்று. பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றங்களைப் போல் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியான பூமி பந்திலும் உயிரியல் மாற்றங்கள் நிகழ்ந்தது. அதுவே பரிணாமம். (Evaluation) அந்த பூமியின் மக்கட் கூட்டத்தில் ஒரு சிறிய பகுதியில் வாழும் மக்களால் பேசப்படும் தமிழ் மொழியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தே வந்துள்ளன. அம்மாற்றங்களே தமிழ் மொழியை உலகத்தோடு இணையாக பயணிக்க வைத்துள்ளது. அம்மாற்றங்கள் இல்லையெனில் தமிழ் மொழி என்றோ காணாமல் போயிருக்கும்.
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
நீங்கள் கூறியது உண்மை. யாழ்பாணத் தேர்தல் தொகுதியில் வாழ்ந்தவர்களுக்கு உண்மை தெரியும்.
-
யாழ் பல்கலைக்கழகம் சிங்களமயமாகும் அபாயம்! சட்டக்கல்வி தமிழிலும் வேண்டும்- விரிவுரையாளர் இளம்பிறையன்
இவர் ஒரு கல்வியாளர். மேலோட்டமாக பார்ககும் போது இவர் கூறுவது சரியானது போல் தெரியும். ஆனால், இவ்வாறான கோரிக்கைகளை வைக்கும் போது, சமயோசிதமான முறையில், மாணவர்களது சிரமம், பெற்றோர்களின் பொருளாதாரநிலை போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை வலியுறுத்துவதன் மூலமே இந்தக் கோரிக்கையை வென்றெடுக்க முடியும். அதை விடுத்து தேவையற்ற விதத்தில் தமிழ்மக்களின் தாயகபூமியின் பல்கலைக்கழகம், தமிழரின் உரிமை போராட்டம் போன்றவற்றிற்கு இந்த பலகலைக்கழகம் தமிழ் மக்களின் ஏக போக உரிமையாக இருத்தல் அவசியம் என்பது போன்ற விடயங்களை இந்த தளத்தில் பேசுவது எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும் என்ற புரிதல் இவருக்கு இல்லையா? வேண்டுமென்றே சிங்கள இனவாதத்தை தூண்டிவிட இதைச் செய்கிறாரா அல்லது தனது தலையில் தானே மண் அள்ளிப் போடும் தமிழ் தேசியத்தின் வழமையான டிசைனா? மேலும் தமிழரின் உரிமை போரை கொண்டு நடத்தும் என்ற கனவுடனேயே யாழ்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகிறார். இவருக்கு வரலாறு தெரியாதா? தமிழ் தேசியவாதிகளின் கடும் எதிர்ப்பின் மத்தியிலேயே, இவர்களால் துரோகி என்று முத்திர்ரை குத்தப்பட்டவர்களின் முயற்சி/ பிரசன்னத்துடனே 1974 ம் ஆண்டு அன்றய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா இந்த பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்தார்.
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
உங்கள் ஜதார்ததமான. கருத்தை வரவேற்கிறேன். உலகின் எல்லா இனங்களின் கலாச்சாரத்தை விட அனைத்து இன மக்களுக்கும் பொதுவான மனித பண்பாடே உயர்வானது. கில்மிஷாவின் வெற்றியை தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட போது சமூக ஊடகங்களில் அரசியலுக்கு அப்பாற்பட்ட பல்லாயிரம் சாதாரண சிங்கள பொது மக்கள் இதயபூர்வமாக கில்மிஷாவை வாழ்த்தி பின்னூட்டங்களை இட்டதை அவதானிக்க கூடியமாக இருந்தது. அது எமக்கு பெருமையாகவும் இருந்தது. எமது இனம் ஏனைய இனங்களுக்கு எத்த வகையிலும் சளைத்தது அல்ல. உலகில் வாழும் எல்லா இனங்களுக்கும் இணையானவர்கள் நாம் என்பதை பல்வேறு துறைகளில் எமது வெற்றிகரமான செயற்பாடுகள் மூலம் உலகிற்கு காட்டுவதே எமக்கு பெருமை. அதை விடுத்து நாம் நாம் மூத்தகுடி, உலகத்திற்கே அறத்தை சொல்லி கொடுத்தவர்கள் நாம், உலகத்திற்கே தாய் மொழி எமது மொழிதான் என்று, நாமே மேடை போட்டு நாமே எமக்குள் மட்டும் காட்டு கூச்சல் இடுவது நிச்சயமாக எமக்கு பெருமையானது அல்ல. அதை எவரும் திரும்பி கூட பார்ககப்போவதில்லை.
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
கனடா நாட்டில் காவல் துறை உயர் பதவியில் இருக்கும் ரோஷான் துரையப்பாவுக்கு வாழ்த்துகள்.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
ஐயோ ஐயோ கோஷான் நான் அரசியல் நகர்வு என்று கூறியது தமிழ் மக்களின் அரசியல் தரப்புக்கள் சிங்கள மக்களின் பொது அமைப்புகள் பலவற்றுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு நல்லுறவை வளர்பபதன் மூலம் இரு பக்க மக்களுக்குள் இருக்கும் இடைவெளியை குறைத்து எதிர் காலத்தில் அரசியல் தீர்வு காண்பதற்கு இலகுவான நிலமையை ஏற்படுத்துவது பற்றியதே. அரசியல் Negotiation என்பது வெவ்வேறு அரசியல் கொள்கைகளுடன் பயணிக்கும் இரு தரப்புகள் படிப்படியாக தமக்குள் விட்டுக்கொடுப்புகளை செய்து ஒரு புள்ளியில் சந்திப்பது தானே. இங்கு நான் சுரேனைப்பற்றி கூறவில்லை. சுரேனை அடித்து விரட்டிவிட்டு தமிழ் தரப்புகள் சுரேனைப் போல் அதிகார தரப்புகளை மட்டும் சந்திக்காது அனைத்து அமைப்புகளையும் சந்திக்கலாம் தானே! இதனை நான் ஏற்கிறேன். ஆனால் இது நடைமுறை சாத்தியமா? சட்ட சிக்கல் இல்லையா? ஒரு நாட்டில் அரசியலில், பாராளுமன்ற பதவியில் அல்லது அமைச்சர் பதவியில் அல்லது அவர் சார்ந்த கட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் வேறு ஒரு நாட்டில் அரசியல் பிரச்சனையில் தலையிடலாமா? அந்த நாட்டின் அரசியல. அமைப்பின் தலைமை வகிக்கலாமா?
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
உண்மை கோஷான். 1931 ல் இருந்து ஒவ்வொரு தலைமுறையும் தமது அரசியல் stupidness ஐ மிகக் கவனமாக வடிகட்டி அடுத்த தலைமுறைக்கு கடத்தி அரசியல் அறிவூட்டுவதற்கு பதிலாக அரசியல் உசுப்பேற்றலை செய்து வெற்றிகரமாக இன்றைய நிலையை அடைந்தோம். இதை ஏற்றுகொள்ள எமக்குள் இருக்கும் ஈகோ இடம் தராது. ஆனால், இந்த தலைமுறையோடாவது இது ஒழிய வேண்டும் என்பதே எனது அவா.