Jump to content

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1760
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by vasee

  1. பொதுவாக மூலப்பொருள்கள் ஆசிய நாடுகளில் குறைந்த விலைக்கு வாங்கி அதிலிருந்து உற்பத்தி செய்யும் முடிவுப்பொர்ள்கள் மேற்கிலிருந்து அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. தற்போது ஒபெக் மற்றும் ஒபெக் பிளஸ் நாடுகள் ஓரணியில் வந்து விட்டதனை அவதானித்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதன் மூலம் விலைகளுக்கு ஒரு விலை நிர்ணயத்தினை ஆசிய நாடுகளால் போட முடியும். அப்படி அவை மூலப்பொருள்களின் விலையினை அதிகரிக்கும் போது உற்பத்தி பொருளின் விலை அதிகரிக்கும், அவற்றினை சந்தை படுத்த நீண்ட தூர பயணங்கள் மூலம் மேலும் செலவு அதிகமாகும், அதனை விட சந்தைக்கு மிக அருகாமையில் தமது உற்பத்தியினை முதலீட்டாளர்கள் அணுகுவார்கள், அத்துடன் விலை குறவான வழ்ங்களை உள்நாட்டில் பெறலாம் குறைந்த ஊதியத்தில் வேலையாள்களை பெறலாம். மெதுவாக நிகழலாம் ஆனால் மாற்றம் தொடங்கிவிட்டதாகவே கருதுகிறேன், எனது கருத்து தவறாக இருக்கலாம்.
  2. உங்களது கூற்று இந்த விட்யத்தில் சரி என்றே என்னளவில் கருதுகிறேன், உலகம் பல துருவங்கள் கொண்ட பொருளாதார அமைப்பிற்கு மாறும்ப்போது, மேற்கு நேரிடியாக பாதிப்பிற்குள்ளாகும். 1. வியாபார மையமாக உள்ள மேற்கு என்ற நிலை மாறி ஆசியா அந்த இடத்தினை பிடிக்கும். தற்போதுள்ள வழங்கல் பாதையில் மாற்றம் ஏற்படும்(Supply chain) இதனால் ஒப்பீட்டளவில் மேற்கில் பொருள்களின் விலை அதிகரிக்கும். உதாரணமாக நியூசிலாந்து உலகின் ஒரு கோடியில் உள்ளது அதன் சனத்தொகை 5 மில்லியன் மட்டுமே அங்கு பொருள்களின் விலை அதிகமாக காணப்படுவது இதனாலேயே. 2. மேற்கின் பொருளாதார பலமே சுரண்டல் பொருளாதாரம், அடிப்படையில் மேற்கின் உற்பத்தி பொருள்கள் அதிகரித்த விலையில் 3ஆம் உலக நாடுகளுக்கு சந்தைப்படுத்தப்படும்(அதிகரித்த சனத்தொகை), ஆனால் 3ஆம் உலக நாடுகளின் பொருள்கள் ஒப்பீட்டளவில் பல மடங்கு குறைவாக இருக்கும். இந்த மாற்றம் இந்த 3ஆம் உலக நாடுகளின் பொருள்களின் விலையில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம், அதனால் மேற்கில் வதியும் ஆசியர்களின் வாழ்க்கை செலவு ஒப்பீட்டளவில் மற்றைய மேற்கத்தவர்கலை விட அதிகரிக்கும். 3.மேற்கு நாடுகளுக்கிடையே அமைதியின்மை ஏற்பட்டு அவர்களுக்கிடையே போர் மூழும் ஆபாயம் ஏற்படலாம். ஆனாலும் இந்த பல்துருவ பொருளாதாரம் பல நன்மைகளையும் கொண்டுள்ளது தற்போதுள்ள உற்தியற்ற பொருளாதார நிலை இல்லாமல் போகும். உலகில் பட்டினி சாவு குறைவடையும், போசாக்கின்மை, தாய் மற்றும் சேய் மரணவிகிதம் குறையும். ஒப்பீட்டளவில் உலக கல்வியறிவு அதிகரிக்கும், அதனால் நீண்ட கால அடிப்படையில் போர் குறைவடையலாம். இந்த பல்துருவ உலக பொருளாதார மாற்றம் ஒட்டு மொத்த உலகிற்கு நன்மை தரும் விடயம், ஒரு தரப்பு பாதிப்படையலாம் ஆனால் உலக நன்மையுடன் பார்க்கும்போது அது பரவாயில்லை என கருதுகிறேன். இப்படிதான் நடக்கும் என்றில்லை, எனது கருத்து தவறாக இருக்கலாம்.
  3. சிங்கள இராணுவத்தினர் 1983 பின்னரான காலகட்டங்களில், சாதாரண நூலகங்கள் பலவற்றினை எரித்தது கூட ஒரு திட்ட மிட்ட செயற்பாட்டினடிப்படையில் என புரிகிறது. அப்படியானால் தமிழாரது கல்வியினை பார்த்து சிங்களம் அச்சம் கொள்கிற நிலை உள்ளது என்பதினை காணமுடிகிறது, (பொதுவாக கல்வி தொடர்பாக இதுவரை எனக்கு பெரியளவில் நன்மதிப்பு இருந்திருக்கவில்லை) இந்த தொடரினை தற்போது எப்போது அடுத்த பதிவு வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து படிக்கும் ஒரு சுவாரசியாமான பதிவாகவும் அதே வேளை வரலாற்றினை சமரசமின்றி கூறும் பதிவாகவும் உள்ளது. நன்றி ரஞ்சித், உங்களது முயற்சிக்கு.
  4. சிலரது தேவையற்ற ஈகோகளுக்காக பல உயிர்கள் காவு கொள்ளப்படுவதுடன் படம் முடிவடைகிறது, சேவிங் பிரைவேட் ரையன் படம் போர் நடமுறையினை ஓரளவுக்கு நெருக்கமாக காட்சி படுத்த முயன்றிருந்தாலும் படத்தில் வழமையான கொலிவூட் கலவையினை கலக்கி படத்தினை கெடுத்துவிட்டிருப்பார்கள், ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லாவிட்டாலும் ஆக கூடுதலாக நம்பகத்தன்மை அற்ற விகிதத்தில் மனிதாபிமானம் கலந்து விட்டாலும் படம் நல்ல படம்.
  5. நானும் இதைத்தான் யோசித்தேன், இந்தாள் ஏன் இப்பிடி கோர்த்துவிடுகிறது என.
  6. தற்போது உலக எதிர்நோக்கி காத்திருக்கின்ற பொருளாதார சரிவிலிருந்து இலகுவில் மீள முடியாது. Bond yield inverted curve பொருளாதார சரிவு வர உள்ளதினை உறுதிப்படுத்துகிறது, உலக பொருளாதார சரிவு தவிர்க்க முடியாத ஒன்றாகி வருவதனால் மக்களை திசை திருப்பும் விடயங்களில் அமெரிக்க அரசு இறங்கியுள்ளதாக கருதுகிறேன் (இரஸ்சிய, சீனா). எனது கருத்து தவறாக இருக்கலாம். கடந்த காலத்தில் பொருளாதார சரிவு நிகழும் போது நாடுகள், பொருளாதாரத்தினை தூண்டுவதற்காக பொது செலவினை அதிகரிப்பது வளமையாக இருந்துள்ளது அமெரிக்காவில் 2008 இல் பொருளாதார சரிவின் போதும் 1998 மலேசிய பொருளாதார சரிவின் போதும் அவ்வாறே நிகழ்ந்தது. தற்போது ஏற்கனவே அதிகரித்துள்ள பணவீக்கம் உள்ள நிலையில் இது சாத்தியப்படாது என தோன்றுகிறது, அத்துடன் 2020 இலிருந்த பணத்தினலவினை விட பல மடங்கு(அமெரிக்க) பணம் பாவனையிலுள்ளது(M2 money supply) quantitative tightening பயன்படுத்தப்படும் அரச பணமுறி பயனற்று போகும் நிலையில் உள்ளது. இந்த பொருளாதார சரிவு பல துருவங்கள் கொண்ட பொருளாதார உலகினை உருவாக்குமா? வங்கியில் வைத்திருக்கும் பணத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகுமா? வங்கிக்கு ஏதாவது மாற்றீடு உள்ளதா? யாழ்கள கருத்தாளர்களே உங்கள் கருத்துகளை பகிருங்கள்.
  7. உண்மைதான், பெரியளவில் எதிர்பார்க்கும் ஒரு படம் எமது இரசினையினை பூர்த்தி செய்யாவிட்டதால் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக இருக்கலாம், வெளிநாடு வந்த காலத்தில் வேலை செய்யும் இடத்தில் நல்ல படத்தினை கேட்டேன் அதில் பலர் கூறிய ஒரே படத்தினை வாடகைக்கு எடுத்து பார்த்தேன், படம் நல்ல படம்தான், முதல் தரம் எதுக்கு இவ்வளவு பில்டப் கொடுத்தார்கள் என கருதினேன் ஆனால் காலப்போக்கில் பல தடவை அந்த ப்டத்தின் காட்சிகளை யூடுப்பில் பல தடவை பார்த்தாலும் சலிக்காத படமாக இன்றுவரை உள்ள ஒரே படமாக உள்ள படம். இந்த படத்திலும் சில மோசமான காட்சிகள் உள்ளன.
  8. சிறப்பு முகாம்கள் மட்டுமல்ல சாதாரண அகதி முகாம்களில் கூட சில நாள்களில் கெடுபிடி இருக்கும் (முன்னரிந்திய சுதந்திர தினம் போன்ற நாள்களில் நள்ளிரவில் புகுந்து திடீர் விசாரணைகள் செய்வார்கள் என கேள்விப்பட்டுள்ளேன் தற்போது எப்படி என தெரியாது).
  9. ஜேர்மனியின் டொச் வங்கி அடுத்ததாக மூழ்கப்போவதாக கூறுகிறார்கள் இந்த வங்கியினது CDS உம் வங்கி முறிவடையப்போகிறது என கூறுகிறது.
  10. அவ்வாறு தான் கேள்விப்பட்டுள்ளேன். தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு உதவுவதால் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எந்தவித இலாபமும் இல்லை, ஏனென்றால் பெரும்பாலும் அவர்களால் அந்த கட்சிக்கு வாக்கு போட முடியாது அந்த நிலையில் எதற்கு கட்சிகள் இலங்கை தமிழர்களுக்கு உதவவேண்டும். ஆனாலும் திமுக எப்போதும் அங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவும் கட்சியாகவே இருந்துள்ளது.
  11. இதற்கு கருத்து எழுதாவிட்டால் உங்களது கருத்திற்கு மதிப்பளிக்காதது போல தோன்றலாம் ஆனால் உங்களது பதிலிலேயே உங்களது கேள்விக்கான விடை உள்ளது. எனது கருத்து வெறும் கருத்து மட்டுமே, அதுதான் சரி என்பதல்ல.
  12. 1991 இன் பின் திமுக அரசு மட்டுமே இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு உதவி செய்த ஒரு கட்சியாகும், குறிப்பாக மறைந்த முதல்வர் கருணாநிதி. குழந்தைகளுக்கு மேற்படிப்பு வசதி, அகதி முகாம்களில் குறைவான கெடுபிடி என திமுக வின் ஆட்சிகாலத்தில் மட்டும் அங்குள்ள ஏழை இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆட்சி எப்போதும் உறுதுணையாக இருந்தது. வசதி படைத்த இலங்கை தமிழர்களின் நிலைவேறு, அங்கு கூலி வேலை செய்து வாழும் இலங்கை தமிழர்கள் முகாமில் இருந்தபடியே வெளியில் சென்று தமது வேலைகளை மற்ற அரசுகளின் காலங்களில் செய்யமுடியாது. பலருக்கு இந்த நிலை தெரியாத நிலை உள்ளது, அங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆட்சியே பொற்காலமாக இருக்கும்.
  13. உலகிலேயே அதிக வளம் கொண்ட நாடுகள் எனறால் ஆபிரிக்க நாடுகள்தான், ஆனால் மிகவும் வறிய நாடுகள் என்றால் அந்த ஆபிரிக்க நாடுகள்தான் முன்னிற்கின்றன. பெரும்பாலும் செல்வந்த நாடுகளாக உள்ள மேற்கு அடிப்படையில் காலனித்துவ நாடுகளாக உள்ளன, தற்காலத்தில் நேரடியாக ஆக்கிரப்பு என்றில்லாமால் ஏதோ ஒரு வகையில் சுரண்டல்களில் ஈடுபடுகிறார்கள். அதற்கு பலம் வேண்டும், அதற்காக பாதுகாப்பு செலவீனத்தினை அதிகரித்து செல்கிறார்கள், மறுவளமாக அந்த நாடுகளின் சுரண்டல்களுக்கு ஆளாகும் நாட்டில் உணவில்லாமல் மக்கள் உயிரிழக்கிறார்கள். உணவுச்சங்கிலியில் பலமானது பலமற்றத்தினை கொன்று சாப்பிட்டுவிடும். நீங்கள் கூறிய கருத்து 100% சரியானதாகவே என்னளவில் உணருகிறேன்.
  14. புட்டின் என்பதற்கு பதில் பிட்டு என்று பதிந்திருந்தால் இந்த பக்கம் வந்திருக்க மாட்டேன்.
  15. இந்த திரைப்படம் ஒரு சிறந்த படம் என கூறுகிறார்கள், ஆனால் படம் எனக்கு பிடிக்கவில்லை. படம் முழுவதும் ஒரே மோசமான காட்சிகள் நிறைந்த மோசமான படம். சில வேளை எனக்கு இலக்கிய இரசினை இல்லாததால் படம் பிடிக்கவில்லை என கருதுகிறேன்.
  16. தற்போதுதான் இந்த காணொளியினை இனைப்பதற்கு முன்னர் பார்த்தேன், நியுசிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள், பந்தும் நன்றாக மேலெழுந்து வருகிறது, இலங்கை ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் உடலுக்கு நெருக்கமாகவே விளையாடுகிறார்கள், அத்துடன் எகிறும் பந்துகளை Soft hand இல் விளையாடுகிறார்கள், ஆனாலும் சில மோசமான விளையாட்டினையும் விளையாடுகிறார்கள். இந்த ஆடுகலம் நாலாவது நாள் ஆடுகளம், முதல் இனிங்க்ஸில் இலங்கை மோசமாக விளையாடியிருக்கலாம்.
  17. இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஸ்டாக் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார், அலவுகூடுதலான பந்துகளை துணிச்சலாக வீசுகிறார், இந்திய அணி இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டிற்கு வெளியில் வீசப்படும் பந்து உள்ளே வரும்போது மிகவும் சிரமப்படுகிறார்கள், இந்த காணொளியில் மிகவும் வெய்யில் உள்ள நிலையில் கூட பந்து இறுதி நேரத்தில் திரும்புகிறது தெரிகிறது.
  18. தன்னிச்சையாக தெரிவு செய்யப்படாமல் தகுதிப்போட்டிகளின் மூலம் தகுதி பெறவேண்டும் என்பதினைதான் விளங்க நினைப்பவன் கூறுகிறார் என கருதுகிறேன். உங்களுக்கு அது பற்றி தெரியுமா? இலங்கை தகுதி போட்டிகளில் வென்றால்தான் உலககோப்பையில் கலந்து கொள்ள முடியுமா?
  19. பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாமல் சாதாரணமாக பொதுமக்களை சந்திக்கிறார், இவரின் மீதான போர் குற்றவாளி குற்றச்சாட்டு அவசர அவசரமாக குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டதற்கு பல பின்புலம் உள்ளதாக கூறுகிறார்கள் (இலங்கை அரசின் போர் குற்றம் 14 வருடங்களுக்கு மேலாக இழுபட்டு கொண்டுள்ளது). அதில் ஒன்றாக இரஸ்ய புதிய பொருளாதார கூட்டணிகளின் சந்திப்பினை கூறுகிறார்கள். இரஸ்சியா உக்கிரேனின் மீது ஆக்கிரமிப்பு போரினை ஆரம்பித்த போது இரஸ்சியா மீது விதிக்கப்பட்ட தடைகளால் இரஸ்சிய அரச பணமுறி வாங்கியவர்கள் நட்டமடைவதற்கான வாய்ப்பு அதிகரித்தது. தற்போது உலகின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ஐரோப்பிய வங்கி ஒன்று முறிவடைவதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்துள்ள நிலை வரை போர் ஐரோப்பாவிற்கும் பரவிவிட்டது (பொருளாதார தடை இல்லாமலே). இந்த CDS (Credit default swaps)அமெரிக்காவில் 2008 பொருளாதார சரிவின் போது பெரிதும் பேசு பொருளாக இருந்தது.
  20. நல்ல ஒரு முக்கிய வரலாற்றினை ஆவணப்படுத்துகின்ற உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது, தொட்ருங்கள்...
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.