Everything posted by vasee
-
இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி
யாரப்பா அந்த தலை?
-
ஊடகத்திற்கு செய்திகளை வழங்கி வந்த 11 வயது சிறுமி Lama Nasser இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார்
இந்த காணொளி இணையத்தில் காணப்பட்டது, தற்போதுதான் பார்த்தேஎன் (முதல் 5 நிமிடம்), உக்கிரேன் போரின் பரிணாமம் (அடிப்படை) பற்றியது என கருதுகிறேன், முழுவதுமாக பின்னர் பார்க்கவுள்ளேன். இவரரது மனைவி கிழக்கு உக்கிரேனியர் என கூறுகிறார்.
-
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி!
இலங்கை ஒரு சர்வாதிகார நாடு என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு, மக்களின் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் அரச படைகளிற்கு எதிராக இலங்கை நீதித்துறையால் எதுவும் செய்ய முடியாதுள்ளது. முப்படைகளின் தலமை பொறுப்பு ஜனாதிபதியிடமே உள்ளது அதனால் இந்த அடிப்படை மனித உரிமை மீறலுக்கு ஜனாதிபதியே பொறுப்பாவார்.
-
கச்சத்தீவை மீட்டெடுப்பது இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாகாது; பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கிறது
வாழ்வாதார பிரச்சினையினை எதிர்கொள்ளும் மக்கள் பட்டினியாக இருக்க உல்லாச பிரயாணம் செல்பவர்களின் பிரச்சினை ஒரு பிரச்சினையே இல்லை, ஒரு கட்டத்தின் பின் இந்த பெரிய மீன்பிடி படகுகளுக்கு எதிராக சிறிய மீன்பிடி படகின் மூலம் மீன் பிடியில் ஈடுபடும் தனியார் இலங்கை மீனவர்கள் வறுமையின் அடிமட்டத்திற்கு செல்ல உள்ளார்கள், இதனை காலம் தாழ்த்துவதே தவறு, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடவில்லை இயற்கை வளங்களை அழிக்கும் இந்த உபகரனங்களை பிடித்து அழித்து விடுவதுடன், மிக அதிக தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதன் மூலம் இயற்கையினை பாதுகாப்பதுடன் எல்லை தாண்டிய பிரச்சினையினை தீர்க்கலாம். தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயுறும் வேறல்லவா? இன்று உலகம் முழுக்க இதே போலத்தான் அந்தந்த மக்களின் வளங்கள் சுறையாடப்பட்டு அவர்கள் வறுமைக்கோட்டிற்கு கிழே செல்கிறார்கள்.
-
ஊடகத்திற்கு செய்திகளை வழங்கி வந்த 11 வயது சிறுமி Lama Nasser இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார்
இஸ்ரேல் மட்டுமல்ல இந்த பிராந்தியத்தில் இருக்கும் இஸ்லாமிய நாடுகள், தமது நாட்டில் உள்ள இஸ்லாம் மதமற்ற மக்கள் மேல் ஒரு இன அழிப்பை காலம் காலமாக நடத்துகின்றன கூறப்படுகிறது, தற்போது சிரியாவில் அரச ஆதரவுப்படைகள் ட்ருஸ் இன மக்கள் மேல் ஒரு இன சுத்திகரிப்பினை மேற்கொள்கிறார்கள், இந்த ட்ருஸ் மக்களுக்கு இஸ்ரேல் ஆதரவாக உள்ளதாக கூறப்பட்ட போதும் எதுவும் செய்யாத நிலையில் மக்கள் மிக மோசமாக கொல்லப்படுகிறார்கள். லெபனானில் கிறிஸ்தவ பெரும்பான்மை நிலவிய காலத்தில் இதே போல் ஒரு இனசுத்திகரிப்பு மூலம் இஸ்லாமிய பெரும்பான்மையினை கொண்ட நாடாக லெபனான் மாறியுள்ளதாக கூறுகிறார்கள். உக்கிரேன் கூட கிழக்கு உக்கிரேனியர்களின் மீது மிக மோசமான அடக்குமுறையில் ஈடுபட்டவர்கள்தான். இந்த விடயத்தில் ஒருவருக்கு ஒருவர் சழைத்தவர்கள் இல்லை, இந்த மூளை இல்லாத மிருகங்கள் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள்.
-
'அடக்குமுறையில் இருந்து காத்தது கல்விதான்' - தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் பேட்டி
நான் கிறிஸ்தவ மத குருக்களிற்கு போட்டியாக அர்த்தநாரீஸ்வரர் கருத்தை கூறியதாக நீங்கள் சொல்லவில்லை எனவே கருதுகிறேன், அவ்வாறு நிங்கள் கருதினால் உங்கள் கருத்தில் கூறப்பட்ட படித்தவர்கள் முற்போக்கானவர்கள் எனும் கருத்து, அத்துடன் கத்தோலிக்க மத குருக்கள் மத சார்பான கற்கை நெறி மட்டுமல்லாமல் துறைசார் கல்வியும் கற்றவர்கள், இந்த துறைசார் கல்வி அறிவே முற்போக்கு சிந்தனைக்கு காரணம் என நீங்கள் கருதுகிறீர்கள் என நான் கருதுகிறேன், யாழ்ப்பாணத்தில் பெரும்பாலானவர்கள் துறைசார் கல்வி கற்றவர்கள் உள்ளார்கள் ஆனால் யாழ்ப்பாணத்தில்தான் மிக மோசமான பிற்போக்குவாதம் உள்ளது, படித்தவர்கள்தான் பெரும்பாலும் வரதட்சணை வாங்குபவர்களாக உள்ளார்கள் (நீங்கள் அப்படி செய்திருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்😌). அவருக்கு கிடைத்த வேலை அவரது திறமைக்கு கிடைத்த வேலை, இவரரது கடந்த கால வாழ்க்கை மிகவும் அடக்குமுறைக்குள்ளான வாழ்கையாக இருந்துள்ளது, ஆனால் தற்போது அந்த நிலை இல்லை என்பது அவரரது கருத்தில் இருந்து தெளிவாக உணரமுடிகிறது, அதற்கு காரணம் கல்வி என அவர் கருதுகிறார் அவரரது உண்மையான அடையாளம் அவரரது திறமை (கல்வி).
-
புனித நீரூற்றை பாதுகாக்க அதானி குழுமத்திற்கு எதிராகப் போராடும் ஆஸ்திரேலிய பழங்குடிகள்
எதிர்கால சந்ததியினர் மேலும் ஏழ்மையாகும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது, தற்போதே மக்களால் சொந்தமாக வீடு வாங்க முடியாது எனும் நிலை அவுஸ்ரேலியாவில் உருவாகிவிட்டது, பெரு நிறுவனங்கள் மக்களின் வளங்களை மட்டும் சுரண்டுவதுடன் நிற்பதில்லை, அவர்களுடன் வீடுகளை வாங்குவதிலும் போட்டியிட ஆரம்பித்து விட்டன. விவசாயம் என அனைத்து துறைகளிலும் மக்களை விரட்டுகின்ற நிலை காணப்படுகிறது. இந்த நிறுவனங்களின் பண செல்வாக்கினால் அரசியல்வாதிகள் இந்த நிறுவனங்களுக்கு சாதகமான முறையில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன, மக்களால் எதுவும் செய்யமுடியாத நிலையில்தான் உலகு செல்கிறது, மக்களுக்கு சார்பாக வளங்களை தேசிய மயப்படுத்த முயலும் அரசியல் தலைவர்கள் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்படுகிறார்கள். இந்த ஆர்டீசியல் கிணறு பற்றி சிறிய வயதில் படித்த நினைவு உண்டு, அவுஸ்ரேலியா வந்த ஆரம்பத்தில் அனைவரிடம் கேட்பதுண்டு இந்த ஆர்டீசியல் கிணறு எங்கே உள்ளது என இதுவரை பார்த்ததில்லை. கிட்டதட்ட எமது சுண்ணாம்புகல் நிலத்தடி நீர் போன்ற ஒரு அமைப்பு.
-
'அடக்குமுறையில் இருந்து காத்தது கல்விதான்' - தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் பேட்டி
மதங்கள் பெயர்கள்ர்தான் வித்தியாசம் ஆனால் அதன் உள்ளார்த்தங்கள் ஒன்றுதான். பாலின சுதந்திரம் என்பது ஒரு சமூக பிரச்சினை, பல அடிப்படை சமூக பிரச்சினைகளுக்கு மதங்கள்தான் காரணமாக இருக்கின்றன, அதே வேளை மதங்கள் நல்ல விடயங்களை கூறினாலும் தமது நம்பிக்கைகளுக்கும் விருப்பிற்கும் எதிராக இருந்தால் மதத்தினை வழிகாட்டியாக பயன்படுத்துவதில்லை. இதற்கு அடிப்படை காரணமே சாதாரண மனிதர்கள் தம்மை தாமே கற்பனையான விம்பங்களில் பார்ப்பதுதான். சிந்திக்க தெரிந்த மனிதனுக்கு மதங்களும் தேவையில்லை, முட்டாள் சமூக கோட்பாடுகளூம் தேவையில்லை.
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இங்கிலாந்து கூட கட்டாந்தரை பிட்சில் இந்தியாவினை விளையாட வைக்கிறது? அவுஸ்ரேலியா இந்தியாவிற்கு வேக பந்து வீச்சாளருக்கு சாதகமான ஆடுகளமே வழமையாக கொடுப்பதுண்டு, ஆனால் சில வேளை அவர்கள் விரித்த வலையில் அவர்களே சிக்கி இந்தியாவிடம் அடி வாங்குவதுண்டு.
-
'அடக்குமுறையில் இருந்து காத்தது கல்விதான்' - தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் பேட்டி
மதங்கள் மக்களை நலவழிப்படுத்த உருவாக்கப்பட்டவை ஆனால் அவை காலத்திற்கேற்ப தம்மை புதிப்பதில்லை, அதற்கு காரணம் கடும் கோட்பாட்டாளர்களே! சில இயற்கை விடயங்களை ஏற்றுகொள்ளும் மனநிலை அல்லது புரிதல் இல்லாதவர்கள் அது ஒரு சமூக பிரழ்வாக மாறிவிடும் எனும் நோக்கத்தில் சில விடயங்களை இந்த மதங்கள் எதிர்க்கின்றன, ஆரம்பத்தில் கத்தோலிக்க சபை கூட அவ்வாறுதான். சில மதங்கள் குறிப்பாக இந்து மதத்தில் அர்தநாரீஸ்வரர் என இவ்வாறான இயற்கையினை கடவுளாக பார்க்கிறார்கள். இங்கு மக்கள் தமது விருப்பங்களையும், நம்பிக்கைகளையும் மற்றவர்கள் மேல் திணிப்பதுதான் தவறாக மாறிவிடுகிறது. எமது புரிதல் தவறானது என்பதனை புரிந்து கொள்ள மதங்கள் தேவை இல்லை, அதற்கான தைரியம் இருந்தாலே போதுமானது.
-
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
புதிய மாணவர்களுக்கு உதவி நிச்சயமாக தேவைப்படும் என கருதுகிறேன், அவ்வாறு உதவினாலே புதிய மாணவர்களும் பழைய மாணவர்களும் இயல்பாக பழகலாம், பகிடி வதை என்பது குரூர புத்தி கொண்ட சிலரது வக்கிரங்களுக்கு வடிகாலாக இருப்பதலாலேயே சிலர் இதனை விரும்பி செய்கிறார்கள் என கருதுகிறேன், உடைந்து போன ஒரு சமூகத்தில் இருக்கும் பொதுவான அம்சம் (வர்க்க, மத, சாதி வேறுபாடுகள்) இது என கருதுகிறேன்.
-
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
காரில் இதற்கான பாதுகாப்பு பொறிமுறை உள்ளது, ஆரம்பத்தில் வெள்ளத்தில் மிதக்கும் கார் பின்னர் கார் மூழ்க ஆரம்பிக்கும் உள்ளிருந்து காரின் கதவினை திறக்க முடியாது யன்னல் ஊடாக வெளியேறலாம், ஆனால் காரின் முன் பாகம் தண்ணீரில் முதலில் மூழ்கும், எஞ்ஞின் எடை காரணமாக, அதனால் காரின் பின் பகுதி தண்ணீருக்கு மேல் இருக்கும் போது காரின் பின் பகுதிக்கு சென்று காரின் பின் கதவினை அவசரகாலத்தில் திறப்பதற்கான ஆழியின் துணையால் திறந்து வெளியேறலாம்.
-
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
கார்கள் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்துவிடும் அதுதான் பிரச்சினையாகிவிடும், ஒரு தடவை இப்படி மழை பெய்து வெள்ளம் வந்த போது எனக்கு முன்னால் பக்கத்து வீதியில் சென்ற ஒரு SUV தண்ணீரில் (ஒரு அடி உயரமளவில்) மாட்டுப்பட அந்த வாகன ஓட்டுனர் பதட்டத்தில் என கருதுகிறேன் கார் கதவினை திறந்து விட்டார், தண்ணீர் காருக்குள் சென்றதனை பார்த்தேன், அவர் சிறிது மெதுவாக போனதால் அப்படி மாட்டி கொண்ட்டார் என ஊகித்து எனது காரின் வேகத்தினை அதிகப்படுத்தி கடக்க முயன்றேன் (எனது கார் சிறிய 4 இருக்கை கொண்ட கார்) கார் மிதக்க தொடங்கியது துரிதமாக காரினை வீதியினை பிரிக்கும் உயரமான பகுதியில் ஏற்றியதால் சேதம் இல்லாமல் தப்பித்தேன்.
-
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
நியாயம் வெள்லம் வர முன்னரே தயாராக இருந்தமையால் எல்லோரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருந்த்தாக ஜஸ்ரின் கூறியுள்ளார்! நான் நினைக்கிறேன் நீங்கள் பார்த்த நபர் வீட்டில் இருந்தபோதே புத்தகத்திற்குள் இருந்த பூச்சி கடித்து கீழே உள்ள காணொளியில் உள்ளதனை போல கீழே விழுந்திருப்பாரோ?🤣 https://www.youtube.com/watch?v=_UueYngVdXI
-
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
https://i2.res.24o.it/pdf2010/Editrice/ILSOLE24ORE/ILSOLE24ORE/Online/_Oggetti_Embedded/Documenti/2025/07/12/Preliminary%20Report%20VT.pdf ஏயார் இந்தியா விபத்து ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை.
-
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
தவறுதலாக சக்தியினை நிறுத்த முடியாதவாறு வடிவமைத்துள்ளார்கள் என கூறுகிறார்கள் ஆழி (சுவிட்ச்) பக்கவாட்டில் இரண்டு தடுப்புக்கள் தற்செயலாக ஆழியின் மீது கை படுவதனை தவிர்ப்பதற்கு வைத்துள்ளார், மற்றது ஆழியின் இயங்கு நிலையில் இருந்து இயக்கமற்ற நிலைக்கு மாற்றுவதற்கு முதலில் ஆழியினை மேல் நோக்கி இழுத்து பின்னர் இயக்கமற்ற நிலைக்கு மாற்றவேண்டும் அதனால் தற்செயலாக கை படுவதன் மூலம் இயங்காநிலைக்கு மாறாது என கூறுகிறார்கள். ஆனால் இவற்றின் செயற்பாட்டுத்தன்மை (பாதுகாப்பு பொறிமுறை) சரியான நிலையில் இயங்கு நிலையில் இருந்ததா என முழு அறிக்கையில் தெரியவரும், விமான பயணத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் விமானம் இயங்கு நிலையில் உள்ளதாக கூறுகிறார்கள் அந்த அறிக்கை முழுமையான பரிசோதனை அறிக்கையாக இருந்திருக்குமா என்பது முழுமையான விசாரணையின் பின்னர் வெளிவரும். விமானிகள் ஆரோக்கியமான நிலையில் உள்ளார்கள் என கூறியுள்ளார்கள், இந்த நிலையில் முழுமையான அறிக்கை வெளிவரும் வரை மக்கள் பொறுபுணர்வுடன் செயற்படவேண்டும்.
-
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
இது ஆரம்ப கட்ட அறிக்கை என கருதுகிறேன், இந்த அறிக்கையின் பிரகாரம் தவறுதலாக இயந்திரத்திற்கான சக்தியினை நிறுத்தியிருக்க முடியாது எனவே கூறப்பட்டுள்ளது, ஆரம்பத்தில் யூரியூப்பர்கள் மிக மோசமான காணொளியினடிப்படையில் கூறிய பிளாப் டேக் ஓப் நிலையில் இருக்கவில்லை என்ற ஊகத்திற்கு இந்த அறிக்கையில் தெளிவாக 5 பாகை பிளாப் கான்டில் டேக் ஓப் நிலையில் உள்ளதனை படம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்கள், அத்துடன் வலது பக்க இறக்கையின் படத்தினையும் இணைத்துள்ளார்கள், இதனாலேயே ஆரம்பத்திலேயே மோசமான தரத்தில் உள்ள காணொளியினடிப்படையில் வெறும் ஊகங்களை வெளியிடுவது ஒரு தவறான செயலாகும் என அந்த திரியிலே குறிப்பிட்டிருந்தேன். முழுமையான அறிக்கை வெளியாக கால தாமதம் ஏற்படலாம், ஊடகங்கள் அதுவரை பொறுமை காக்க வேண்டும்.
-
தைவான் மீதான சாத்தியமான போரில் நட்பு நாடுகளின் பங்கு குறித்து அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது
தைவான் மீதான சாத்தியமான போரில் நட்பு நாடுகளின் பங்கு குறித்து அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும் என்று FT தெரிவித்துள்ளது. தைவானைப் பாதுகாக்க அமெரிக்காவே வெற்று காசோலை உத்தரவாதத்தை வழங்காததால், இந்த கோரிக்கை டோக்கியோ மற்றும் கான்பெர்ரா இரண்டையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தைவான் ஜலசந்தியில் எழுந்துள்ள அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தீவு அதன் பாதுகாப்பை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது. இங்கே, அக்டோபரில் தைவான் ஜனாதிபதி லாய் சிங்-டே தளத்திற்கு விஜயம் செய்தபோது, ஹ்சியுங் ஃபெங் III மொபைல் ஏவுகணை ஏவுகணைக்கு முன்னால் ஒரு சிப்பாய் காணப்படுகிறார். ( புகைப்பட உரிமை : REUTERS/TYRONE SIU ) ஜெருசலேம் போஸ்ட் ஸ்டாஃப் எழுதியது ஜூலை 12, 2025 14:50 தைவான் விவகாரத்தில் அமெரிக்காவும் சீனாவும் போருக்குச் சென்றால் , ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா என்ன பங்கு வகிக்கும் என்பதை தெளிவுபடுத்துமாறு பென்டகன் வலியுறுத்துவதாக பைனான்சியல் டைம்ஸ் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இரு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளுடனான சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் போது, அமெரிக்காவின் கொள்கைக்கான பாதுகாப்புத் துணைச் செயலாளர் எல்பிரிட்ஜ் கோல்பி, இந்த விஷயத்தை வலியுறுத்தி வருவதாக, விவாதங்களை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி அறிக்கை கூறியது. தைவானைப் பாதுகாக்க அமெரிக்காவே வெற்று காசோலை உத்தரவாதத்தை வழங்காததால், அறிக்கையிடப்பட்ட கோரிக்கை டோக்கியோ மற்றும் கான்பெரா இரண்டையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்று செய்தித்தாள் தெரிவித்துள்ளது . JPost வீடியோக்கள் சீனாவுடனான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல்-ஈரான் போரிலிருந்து தைவான் பல பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளது. இங்கு, புதன்கிழமை மியோலியில் நடைபெறும் வருடாந்திர ஹான் குவாங் இராணுவப் பயிற்சியின் முதல் நாளில், தைவானிய ரிசர்வ் படையினர் போருக்கு முந்தைய பயிற்சியில் பங்கேற்கின்றனர். (நன்றி: I-Hwa Cheng/AFP via Getty Images) தைவானுக்கு எதிராக இராணுவ அழுத்தம் அதிகரிக்கிறது. ராய்ட்டர்ஸால் இந்த அறிக்கையை சரிபார்க்க முடியவில்லை. கருத்துக்கான கோரிக்கைக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை உடனடியாக பதிலளிக்கவில்லை. முறையான இராஜதந்திர உறவுகள் இல்லாவிட்டாலும், அமெரிக்கா தைவானின் மிக முக்கியமான ஆயுத சப்ளையர் ஆகும். பெய்ஜிங் தீவின் மீது தனது இறையாண்மையை வலியுறுத்த முற்படுவதால், பல சுற்று போர் பயிற்சிகள் உட்பட , சீனாவிடமிருந்து தைவான் அதிகரித்த இராணுவ அழுத்தத்தை எதிர்கொண்டது. சீனாவின் இறையாண்மையை வலியுறுத்துவதை தைவான் நிராகரிக்கிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், கோல்பி, உத்தி மற்றும் படை மேம்பாட்டுக்கான துணை உதவி பாதுகாப்பு செயலாளராக இருந்தார். அமெரிக்க இராணுவம் சீனாவுடனான போட்டிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிலிருந்து அதன் கவனத்தை மாற்ற வேண்டும் என்றும் வாதிடுவதில் கோல்பி பெயர் பெற்றவர். The Jerusalem Post | JPost.comPentagon presses Australia, Japan over role in potential...The Financial Times reported that the request caught both Tokyo and Canberra off guard, as the US itself does not offer a blank check guarantee to defend Taiwan.
-
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
75 வருடங்களாக ஒரு மக்கள் குழுமத்தினை அகதிகளாக்கினவர்கள், தற்போது அதே நிலையில்..........
-
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
இந்தியா ஒரு முழு நேர்மையான விசாரணையினை நடாத்தி அதனை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளது (பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகளிற்கு செய்யும் குறைந்த பட்ச நலன்), இல்லாவிட்டால் இந்த ஊகங்கள் மழை நின்றாலும் நிற்காத தூரலாக தொடரும் நிலைதான்(பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை உளவியலாக தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாக்கும் விடயமாக இருக்கும்).
-
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
கடைசியாக அனைத்து ஊகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள், ஆறுதலான விடயம்.
-
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
என்னை அநியாயத்திற்கு புகழுகிறீர்கள்.🤣
-
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
80 களின் பிற்பகுதியில் ஒரு பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளரின் பெயரும் அப்துல் காதிர், அவர் பந்து வீச வரும் போது பந்தை போட்டு பிடித்து வீச வருவார் அதனை போலவே பின்னாளில் முரள்யும் பந்தை வீசுவதற்கு முன் பந்தை போட்டு பிடித்து வீசுவார் சில மாற்றங்களுடன் (இந்த அப்துல் காதர் டெண்டுல்கருடன் வம்பிழுந்து வாங்கிக்கட்டி கொண்டவர் என கூறப்படுகிறது).
-
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
விடயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதனை பற்றியதல்ல சொந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் வழங்கலில் ஆதிக்கம் இல்லாமல் வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் ஆளுமை செலுத்துகின்றன. அமெரிக்க பண்புகளுக்காக அமெரிக்க கடன்முறிகளை மற்ற நாடுகள் வாங்குகின்றன என்பது போன்ற ஒரு கருத்தினை நீங்கள் கூறியிருந்தீர்கள், அதற்கு அமெரிக்க பணமுறி தங்கத்தினை விட திரவத்தன்மை அதிகம் அத்துடன் தங்கத்தினை விட மேலதிகமாக வட்டி எனும் வகையிலான வருமானம் வருவதால் ம்ற்றும் இருப்பு, நாணய வலுக்குறைப்பு போன்ற காரணங்களுக்காக வாங்குவதாக கூறியிருந்தேன். அத்துடன் 2032 இல் அமெரிக்கா தனது உலகின் முதனிலையினை இழந்து விடும் என்பதற்காக 2022 இல் இருந்த கடன் அடிப்படையில் அதற்கு செலுத்தப்படும் வட்டி மற்றும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தினடிப்படையில் ஒரு மாதிரி கணிப்பீட்டினையும் பதிந்திருந்தேன் அதற்கு கூறிய காரணம் அப்போது கடன் மொத்த தேசிய வருமானத்தினை விட அதிகமாக இருந்தததன் அடிப்படையில் 2032 இல் கடன் தொகை 250% உயர்வடைந்துவிடும் எனவும் இங்கிலாந்து 2 உலக போரின் முடிவின் பின்னர் கடன் மொத்த தேசிய வருமானத்தில் 250% இருந்த போது அது தனது காலனித்துவத்தினை கைவிட்டதனை குறிப்பிட்டிருந்தேன். அப்போது 120% இருந்ததாக கருதுகிறேன் இரண்டு ஆண்டுகளின் பின்னர் 124% உள்ளது, அமெரிக்கா சரியான பாதையிலேயே செல்கிறது, ஆனால் அமெரிக்கா உலகின் முதனிலையினை அதற்கு முன்னராகவே வேறு காரணங்களால் இழக்கலாம் அல்லது 2032 இலும் தொடர்ந்து முதனிலையினை செலுத்தலாம். கணிப்பில் ஆண்டிற்கு 5% கடனதிகரிப்பு ஏற்படலாம் என கணித்ததாக நினைவுள்ளது, தற்போது ஆண்டிற்கு 2% கடனதிகரிப்பு ஏற்படுகிறது (கடந்த 2 ஆண்டில்), 2032 இனை விட சில ஆண்டுகள் அதிகரிக்கலாம் ஆனால் அது நிகழும் என்பதாகவே நான் உணருகிறேன்.
-
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
2023 இல் ருமேனியா 5 பில்லியன் பெறுமதியான காய்கறிகளை ஐரோபிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது,நெடுஞ்சாலைகளின் நோக்க்கம் அடிப்படையில் வர்த்தகநலனடிபடையானது, மற்றும் நிறுவனங்களின் முதலீடு இவை போன்றகாரணிகளில் ஆர்வம் காட்டும் நிலை பன்னாட்டு நிறுவனங்களின் தேவைகள் கணக்கிலெடுக்கப்படும் அதே நேரம் சிறிய விவசாயிகள் அவர்கள் தொழிலில் இருந்து விரட்டி அடிக்கப்படுகிறார்கள். ருமேனியாவின் தாராளமய பொருளாதார கொள்கை காலத்தினை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன், இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இனைந்த பின்னரான காலகட்டத்தில் உள்நாட்டு மக்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் எனவே குறிப்பிட்டுள்ளேன், அடிப்படையில் நாட்டின் வளஙகல் பிறநாட்டு பெரும் நிறுவனங்களின் கைகளில் உள்ளது என்பதை குறிப்பிட்டு தற்போதய உலகில் எதற்காக போர் நிகழ்கிறது என்பதனை சூசகமாக குறிப்பிடவே அந்த உதாரணம். இரண்டாம் உலக யுத்ததின் பின்னரான இந்த சிக்கல் நிலைக்கு மேற்குதான் காரணம் (மேற்கின் ஆட்சியினை தமது தேவைக்கு ப்யன்படுத்தும் பெரும் நிதிநிறுவனங்கள்) இடம், காரணிகள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் அடிப்படை பிரச்சினை அதிகாரங்களில் உள்ளவர்களின் தவறான முடிவு.