Jump to content

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1782
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by vasee

  1. சரியோ தவறோ சில வேளைகளில் அதனை குறிப்பிடும்போது (எல்லோரும் அல்ல) சிலர் அதனை தனிப்பட்ட ரீதியில் எடுத்துகொள்வதனால் தவறு உங்களதல்ல எனது என்று சொல்லி பழகிவிட்டது என கருதுகிறேன் அத்துடன் சரி தவறு என்பது மற்றவர்கள் பார்க்கும் விதத்திலும் உள்ளது. மற்றது நினைவில் இருப்பதனடிப்படையில் கருத்து தெரிவிப்பதால் அப்படி. நான் வெளிநாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் எனக்கு ஆங்கிலம் தெரியாது, எனது வீட்டில் என்னுடன் இன்னும் இருவர் இருந்தனர் எனக்கும் இன்னொரு அண்ணாவுக்கும் மற்ற நபர்தான் ஆங்கிலம் மொழிபெர்ப்பாளராக இருப்பார். சிறிது காலத்தின் பின் எனது ஆங்கிலம் ஓரளவு தேறிவிட்டது, குடிவரவு விண்ணப்பங்களை நானே நிரப்புவேன், எனது முன்னைய மொழிபெயர்ப்பு நண்பர் எமது இடத்திலிருந்து தொலைவில் உள்ள ஒருவரிடம் கொண்டு சென்று படிவங்கலை நிரப்புவார்(அவர் 50 வயதுக்கு மேற்பட்டவர்). அவ்வாறு செல்லும்போது நானும் நண்பருடன் செல்வது வழமை, ஆனால் விண்ணப்ப படிவம் நிரப்பும் இடத்தில் நிற்பதில்லை, அந்த வீட்டில் வேறு நண்பர்கள் இருந்ததனால் அவர்களுடன் உரையாட சென்றுவிடுவேன். ஒரு தடவை எனது அந்த முன்னாள் மொழிபெயர்ப்பு நண்பர் சொன்னார் அந்த 50 வயதிற்கு மேற்பட்ட அண்ணா சொன்னாராம் நான் ஒரு மாதிரியான ஆள் என்று, மேற்கொண்டு நண்பர் சொல்வதற்கு ஏதோ இருப்பது போல தோன்றியது அவரது தொனி ஆனால் நான் அது தொடர்பாக ஆர்வம் காட்டவில்லை. பின்னர் ஒரு நாள் எனது மொழிபெயர்ப்பு நண்பர் சொன்னார், அந்த 50 வயதிற்கு மேற்பட்ட அண்ணா தனது கணனியின ஸார்ட் செய்த போது அவரது கணனி திரை முழுவது ஆபாச படங்களால் நிரம்பி வழிந்ததாகவும் அதற்கு அந்த 50 வயது அண்ணா சங்கடத்துடன் சொன்னாராம், இந்த இன்டர்நெட் காரஙளுக்கு வேற வேலை இல்லை. எனது மொழிபெயர்ப்பு நண்பர் சிரித்து கொண்டு சொன்னார், எனக்கு அதில் இருப்பதாக தெரியவில்லை, சிலருக்கு தவறாக தெரிவது மற்றவர்களுக்கு தவறாக தெரிவதில்லை.
  2. அண்மையில் இந்த திரியில் சில விடயங்களை கூறப்பட்டுள்ளது. இந்த திரி மட்டுமல்ல வேறு பிற திரிகளிலும் இது பற்றி முன்னர் கூறப்பட்டுள்ளது, அதனால் சுருக்கமாக கூறுகிறென் 2 ஆம் உலக யுத்தத்திற்கு முன்னர் பெரும்பாலான நாடுகள் மூடிய பொருளாதார கொள்கையுடன் தன்னிறைவு பொருளாதாரமுள்ள நாடுகளாக விளங்கின 2 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் திறந்த பொருளாதார கொள்கை உலகில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரடென்வூட் தீர்மானம் உருவாக்கப்பட்ட போது அமெரிக்காவிடம் அதிக தங்க இருப்பும் உலக வர்த்தக வகிபாகத்தில் பெரும்பங்கு காணப்பட்டமையால் அமெரிக்க நாணயம் உலக வர்த்தக நாணயமானது. இலங்கை தனது கடனை செலுத்த முடியாது என தெரிவித்த போது அதன் கடன் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) 105% விகிதத்திற்கு அதிகமாக இருந்தது, அமெரிக்காவின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியில்(GDP) 123% தற்போது உள்ளது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக செலவழிப்பது. துறைசார் கல்வியறிவில்லை , ஆனால் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபடுவதால் பொருளாதாரம் பற்றி தெரிந்து கொண்டுள்ளேன் அவ்வளவுதான், ஆனால் நான் அந்த தரவுகளை நான் எனது வர்த்தக நடவடிக்கைகளில் பயன்படுத்துவதில்லை(Fundamental analysis). நான் பயன்படுத்துவது Technical analysis. அத்துடன் புள்ளி விபரங்களை மறந்து விடுவதுண்டு, எந்த புத்தகத்தில் வாசித்தது என்பதும் மறந்துவிடும், இந்த ஆதாரங்கள் உண்மையானவையா என்பதும் தெரியாது, அத்துடன் எனது கருத்து வெறும் கருத்து, சரியாகத்தான் இருக்கும் என்பதில்லை. மன்னிக்கவும் சுருக்கமாக பதில் கூறியமைக்கு முடிந்தவரை சுருக்கமாக கூற முனைவதால் சில சமயம் சரியான புரிதலை கொடுக்காது ஆனால் மேலும் குழப்பமாகிவிடும், அவ்வாறு குழப்பியிருந்தால் குறிப்பிடவும், நன்றி.
  3. கடந்த ஆண்டு யாழில் அமெரிக்க உலக ஏகாதிபத்திய உலக ஒழுங்கு 20 - 25 வருடங்களில் முடிவுக்கு வரும் என விவாதிக்கப்பட்ட போது, அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் சீனா, இந்தியா போன்ற நாடுகளை இந்த பக்கமா அந்த பக்கமா என அச்சுறுத்தி கொண்டிருந்தன. இரஸ்சியாவினுடன் வர்த்தக தொடர்புடைய நாடுகளுக்கும் வர்த்தக தடை பாயக்கூடும் என இரஸ்சிய தொடர்புடைய நாடுகள் அச்சமுற்றிருந்த காலம். தற்போது ஐரோப்பாவிற்குள்ளேயே எல்லாவற்றுக்கும் அமெரிக்காவினை பிந்தொடரக்கூடாது எனும் கருத்துகள் எழ தொடங்கிவிட்டது. இரஸ்சியாவின் மேல் அடுத்த கட்ட பொருளாதார தடை பற்றி விவாதித்து கொண்டிருக்கும் போது, இந்தியா இரஸ்சியாவுடன் தனது தங்கு தடையற்ற வர்த்தகம் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. உலகு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியே இந்த புதிய நிலைப்பாட்டினை நோக்கி அணிசாரா நாடுகளை தள்ளியுள்ளது. வளங்கள் நிறைந்த ஆபிரிக்க நாடுகளில் ஏற்படுள்ள உள்நாட்டு கலவரங்களுக்கு காரணமான வறுமைக்கு காரணம் தற்போதய நடைமுரையுள்ள சுரண்டல் நிறைந்த உலக மயமாக்கல் கொள்கையே எனும் நிலைக்கு கொண்டுவந்து விட்டார்கள் ஒரு நல்ல கொள்கையினை. 2 ஆம் உலக போர் முடிவு இனி ஒரு போரில்லாத (வளங்களுக்காக நாடுகளை அபகரிக்கும் நிலை) சூழலை உருவாக்க பொருளியலாளர்கள் முயற்சியுடன் பிரட்டன்வூட் தீர்மானம் ஏற்படுத்தப்பட்டது, ஆனால் அதனை சிலர் தவறாக பயன்படுத்தி உலகில் பஞ்சத்தினை உருவாக்கிவிட்டார்கள். இதில் பெருமளவில் பாதிக்கப்படது வளங்கல் நிறைந்த ஆபிரிக்க நாடுகளே. பின்னர் இந்த நாடுகளில் தொண்டு நிறுவனங்கள் உதவி எனும் நாடகங்களையும் அதற்கு காரணமானவர்களே அரங்கேற்றுவது மிகவும் கொடுமை. டொலரினை பொறுத்தவரை பொருளாதாரத்திற்கு முக்கியமான எரிபொருள் மீதான டொலரின் பங்களிப்பு முற்றாக முடிவடையும் போது அமெரிக்க பொருளாதாரமும் இலங்கை பொருளாதாரம் போல மாறிவிடும். தற்போது கிட்டதட்ட அமெரிக்க பாதுகாப்பு செலவுக்கு ஈடான தொகை அளவில் கடனுக்கு வட்டி கட்டுகிறது அமெரிக்கா. பல நாடுகள் அமெரிக்க நாணயத்தினை தமது வெளிநாட்டு செலாவணியாக பயன்படுத்தாவிட்டால் தற்போதுள்ள அமெரிக்காவின் கிரெடிட் ரேற்றிங்கில் மாற்றம் ஏற்படும், அடுத்த நாடுகளில் பொருளாதார நலனில் ஒரு சிறு பகுதியினை அனுபவித்த நிலை இல்லாமல் போகும், உலக வர்த்தக முதனிலை இழக்கப்படும், பொருளாதார வர்த்தக மையம் மாறும்நிலை ஏற்படும், தற்போது புழக்கத்திலுள்ள டொலர் பொருளாதாரத்திற்கு சுமையாக மாறி பொருளாதாரத்தினை அழித்துவிடலாம். எனது கருத்து தவறாக இருக்கலாம், ஆனால் அன்னிய செலவாணி எனும் நிலையிலிருந்து அமெரிக்கா சிறிது தளர்வடைந்தாலும் அதன் தற்போதய உலக ஒற்றை தலமை கொண்ட இந்த உலக ஒழுங்கு முடிவுக்கு வரும், அப்படி பார்த்தால் 20 - 25 வருடம் வரை எல்லாம் அமெரிக்கா தாக்குபிடிக்காது என உறுதியா நான் நம்புகிறேன்(இது எனது சொந்த கருத்து). அதன் பின் உருவாகும் புதிய உலக ஒழுங்கு நல்லதாக மட்டுமே இருக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமில்லை, ஆனால் வரலாற்றில் இருந்து பாடம் கற்று சுரண்டல் அற்ற, பட்டினி அற்ற, போர் அற்ற அமைதியான மாற்றம் வரவேண்டும்.
  4. பக்கத்திலுள்ள நியூசிலாந்திற்கு எந்த பிரச்சினையுமில்லை. உண்மையாக எனக்கும் புரிவதில்லை. அவுஸ்ரேலியர்கள் வலதுசாரி கொள்கையில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என கருதுகிறேன், அதனால் அவர்களாக ஏதாவது பிரச்சினையினை சீனாவுடன் உருவாக்கி கொண்டேயிருப்பார்கள் போலிருக்கிறது. கோவிட் காலத்தில் அமெரிக்கா உட்பட உலகம் வாயை மூடிக்கொன்டிருக்க சீனாவின் கோவிட் தொடர்பு பற்றி அறிய விசாரணை நடத்த வேண்டும் என கூற அவர்கல் அவுஸ்ரேலியரின் ஆப்கானிஸ்தான் படுகொலைகளை ஓவியர் ஒருவர் படமாக வரைய என எப்போதும் பிரச்சினைதான்.
  5. மிக முக்கியமான கட்டுரையினை இணைத்த கிருபனுக்கு நன்றி, உலகு பன்முக பொருளாதார அச்சு நோக்கி நகர்ந்து செல்கிற சூழ்நிலையில், மீண்டும் பல சிறந்த சிந்தனைகளை மனித குலம் திரும்பி பார்க்க தொடங்கியுள்ளது. உலக மயமாதல் என்ற கொள்கை உலக துரித பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததனை மறுக்க முடியாது, அதே சமயம் அது உருவாக்கிய சுரண்டல் பல போர்களையும், பட்டினை சாவுகளையும், வர்க்க வேறுபாடுகலையும், மக்களின் சிந்தனை ஆற்றலையும் மழுங்கடித்திருந்ததனை மறுக்க முடியாது. மக்களிடையே வளங்களும் பொருளாதார பலஙளும் ஏற்றத்தாழ்வின்றி பங்கிடப்படும் போது தேவையற்ற போர்கள், வறுமை, பட்டினி சாவுகள், வர்க்க பேதங்கள் மறைந்து போகும், உலகில் அமைதியும் நிம்மதியும் வரும். உலக மயமாக்கல் (திறந்த பொருளாதார) நன்மைகளும் வேண்டும் அதே நேரம்சுரண்டல் அற்ற சமத்துவ சமுதாயமும் உருவாகினால் மனித குல வரலாற்றில் முக்கியமான காலகட்டமாக இந்த காலப்பகுதி மாறும்.
  6. சோமாலியாவில் நடந்தது என கருதுகிறேன், அது தொடர்பாக ஒரு திரைப்படமும் வந்திருந்ததாக நினைவு(எனது கருத்து தவறாக இருக்கலாம்).
  7. இந்த திரைப்படமும் 1980 காலப்பகுதியில் நிகழ்வதாக கூறும் கதையாக உள்ளது, புதிய நடிகர்கள் நடித்துள்ளனர் என கருதுகிறேன்(எனது கருத்து தவறாக இருக்கலாம்) ஆனால் தரமான திரைப்படம்.
  8. அரசியல்வாதிகளை விடவா குரங்குகள் விவசாயிகளுக்கு பெரும்நாசத்தை விளைவிக்கின்றன? உர இறக்குமதியினை தடை செய்த அரசியல்வாதிகளையும் குரங்குகளுடன் சேர்த்து சீனாவிற்கு அனுப்பிவிட வேண்டியதுதான்.
  9. கட்டுரையாளர் இலங்கை அரசுகள் தமிழ் மக்களுக்கு தாமாக முன்வந்து எந்த தீர்வும் வழங்கப்போவதில்லை எனும் முடிவுக்கு வந்துள்ளமை புரிகிறது. ஆனால் இந்தியாவின் துணையில்லாமல் தமிழர்களுக்கு தீர்வு ஏற்படாது என்பதனை நிறுவ முனைந்துள்ளமையுடன் இந்தியா தமிழருக்கு ஏதேனும் ஒரு தீர்வை வழங்க விரும்புகிறது என்பதாகவும் கூறியுள்ளார். இந்த விடயத்தில்தான் கட்டுரையாளர் வலிந்து தனது கருத்தினை திணிக்க முயல்கிறார். 1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது பனிப்போர் காலத்தில், மன்னாரில் VOA மூலம் இந்திய தொடர்பாடல்களை அமெரிக்க ஒட்டு கேட்பதற்காக முனைவதாக இந்திய தரப்பில் கூறப்பட்டது, அத்துடன் இலங்கையில் அமெரிக்க தளம் நிறுவப்படலாம் என இந்தியாவிற்கு அச்சம் இருந்தது. தற்போதய நிலவரத்தில் இந்தியாவிற்கு அந்த வகையில் மன்னாரிலோ அல்லது திரிகோணமலையிலோ இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இல்லை(சீனாக்காரன் அம்பாந்தோட்டையிலே இருந்தபடியே அனைத்தையும் கண்காணிக்க முடியும்) சீனா இலங்கையில் சட்டபூர்வமாக குறிப்பிட்ட இடங்களில் கால்பதித்துவிட்டது, இந்த நிலையில் இந்தியா தமிழர்களுக்கு கட்டாயம் தீர்வினை பெற்று தரும் என கட்டுரை ஆசிரியர் கூறுவது எந்த அளவிற்கு சரியாக வரும் எனத்தெரியவில்லை. வரலாறு ஏன் திரும்ப திரும்ப நிகழ்கிறது, வரலாறு தொடர்பான சரியான புரிதல் இல்லாமையும் ஒரு காரணம்.
  10. பொதுவாக மேலைநாடுகளில் வலதுசாரி ஆட்சிக்கு முண்டு கொடுக்கும் ஊடகங்கள் போலவே இலங்கையிலும் இருந்துள்ளது ஊடகங்கள்.
  11. பொதுவாக இந்தியர்கள் தொடர்பில் எமது புரிதல் மிக மோசமானதாகவே இருக்கிறது. ஆனால் அவர்களிடம் உள்ள தனித்துவமான பண்புகளினால் பொருளாதார அடிப்படையில் குறுகிய கால எல்லைக்குள் ஆபார வளர்ச்சியினை அடைகிறார்கள். அமெரிக்காவில் இன அடிப்படையில் இந்தியர்கள் வருமானத்தில் முதல் நிலையில் உள்ளார்கள் இவர்களது வருமானம் வெள்ளையின இன அமெரிக்கர்களின் சராசரி வருமானத்தினை விட சராசரியாக கிட்டதட்ட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. எனது பல வட இந்திய நண்பர்கள்(குறிப்பாக குயராத்தியர்கள்) ஆரம்பத்தில் பல குடும்பம் ஒரே வீட்டில் இருப்பவர்களாக இருப்பார்கள்(சேமிப்பு), பின்னர் நண்பர்களினுடன் கூட்டு வியாபாரத்தில் ஈடுபடுவார்கள்(மூலதன திரட்சி), அந்த கூட்டு வியாபாரத்தினை வளர்ப்பதற்காக ஆரம்பத்தில் தமது முதல் வேலையிலே தொடர்வார்கள் அதன் மூலம் அவர்களது சொந்த வியாபரம் வளர்வதற்கான கால அவகாசத்தினை வழங்குவார்கள்(Breathing time), பின்னர் அதனை விரிவு படுத்துவர்(Scale up). இதனால் அவர்கள் அடுத்த தலைமுறையினை தாம் புதிதாக வந்த நாட்டில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்றனர். இதே எமது சமூகத்தில் எப்படி மற்றவரை ஏமாற்றி பணத்தினை சுருட்டலாம் என எண்ணுவார்கள் அதனால் எமது சமூகம் இரண்டாம் தலைமுறையிலும் பிந்தங்கி காணப்படுகிறோம்.
  12. உண்மையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது இந்த முயற்சிக்காக ஏற்படும் நேரவிரயம், சிலநேரங்களில் சங்கடமாக உணர்வதுண்டு மற்றவர்களின் நேரத்தினை நாங்கள் உப்யோகிக்கிறோம் ஆனால் பதிலுபகாரமாக எதுவும் செய்யாமலே என்பதால், அதே வேளை எங்கே பாதியில் நிறுத்திவிடுவீர்களே என்ற ஒரு பயமும் உள்ளது, பாதியில் நிறுத்தினாலும் அதனை புரிந்து கொள்வோம்.
  13. எனது மைத்துனர் ஒருவர் இங்கு வைத்தியராக வேலை செய்கிறார் அவர் இரண்டு தொழில்கள், பல வீடுகள் என முதலிட்டுள்ளார், அவர் தனது நிதி ஆலோசகரை ஒன்றுக்கும் உதாவாதவர் என கூறுவார், காசினை வாங்கிவிட்டு பெரிதாக எந்த ஆலோசனையும் வழங்குவதில்லை என கூறுவார். அதன் உண்மைதன்மை தெரியாது, உங்களது முதலீடு சிறப்பாக இருக்கும் பட்சத்தில் நிதி ஆலோசகர் தேவைப்படமாட்டார் என்றே கருதுகிறேன். நான் அறிந்தவரை நிதி ஆலோசகர்கள் சொந்த முதலீட்டு அனுபவம் குறைவானவர்களாக உள்ளனர், சரியான நிதி ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பது கடினம் என்றே கருதுகிறேன்.
  14. சிறு வயதில் இந்த பத்திரிகையினை எனது தந்தையார் வாசிப்பதை பார்த்திருக்கிறேன், சரியாக நினைவில்லை யாழ்ப்பாணத்தில் வெளியான ஆங்கில பத்திரிகை என நினைக்கிறேன். விக்டர் ஐவன் என்பவர் ஆசிரியராக இருந்தவர் என்பதாக ஒரு நினைவுள்ளது (ஆங்கிலம் தெரியாது எனது தந்தையாரின் மூலம் அறிந்திருப்பேன்) என நினைக்கிறேன் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவராக இருக்கலாம் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). இந்ததொடரினை ஆரம்பத்தில் ஒரு பக்க சார்பான வரலாற்று ஆவணமாக இருக்கும் என்ற எண்ணத்தில் கடந்து போய்விட்டேன், தற்செயலாக வாசிக்க ஆரம்பித்த பின்னர்தான உணருக்றேன் இது ஒரு சிறப்பான ஒரு முக்கியமான தொடர் என்பதினை. பல தெரியாத வரலாற்றினை எந்தவித சமரசமின்றி பதிந்துள்ளார் ஆசிரியர். பொதுவாக வென்றவர்களின் வரலாற்றினை கூறும் வரலாற்றில் இந்த வரலாறு மட்டும் தனித்து நிற்பதாக உணருகிறேன். அதற்காக மற்ற வரலாற்று ஆவணங்கள் குறைந்தவை அல்ல, அவையும் சிறந்த ஆவணங்களே.
  15. நீங்கள் அவுஸ்ரேலியாவில் வசிக்கிறீர்கள் என கருதுகிறேன். நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீட்டினை குறிப்பிடுகிறீர்கள் என கருதுகிறேன். அவுஸ்ரேலியாவில் வீட்டின் விலை ஒவ்வோரு பத்தாண்டிற்கும் இரட்டிப்பாவதாக கூறுகிறார்கள், அதாவது வருடாந்தர 7% விகித அதிகரிப்பு(10% அல்ல கூட்டு வட்டி அடிப்படையில்). அவுஸ்ரேலிய பணவீக்கம் சராசரியாக 4.75% வீட்டின் தேய்மானம் 2.5%, ஆனாலும் அவுஸ்ரேலியாவில் முதலீட்டு அடிப்படையில் வீடு வாங்கும் போது வீட்டினில் ஏற்படும் நட்டத்தினை உங்களது வருமான வரியில் தள்ளுபடி செய்யமுடியும். இங்கு leverage வருமான அதிகரிப்பினை ஏற்படுத்துகிறது( வங்கியினால் வழங்கப்பட்ட கடன்) உதாரணமாக $700,000 வீட்டினை $140,000 முதலீட்டுடன் வாங்கினால் வங்கியின் $560,000 பெறுமதி 10 வருடத்தில் இரட்டிப்பாகிறது. வீட்டினை விற்கும் போது(12 மாதத்திற்கு பின்னர்) மொத்த பெறுமதியில் 50% மட்டும் வரி செலுத்த வேண்டும். https://moneysmart.gov.au/ இந்த இணைய தளத்தில் உங்களுக்கு தேவையான கணிப்புகளை செய்து கொள்ளலாம் இதன் மூலம் முதலீடு தொடர்பான சந்தேகங்களை சொந்தமாக தீர்த்து கொள்ளலாம். அதனால் ரியல் எஸ்டேட்டில் தனிய முதலிடுவது இலாபமா இல்லையா என்பதனை அறிந்து கொள்ளலாம் என கருதுகிறேன்(இந்த இணையத்தளத்தினை முன்னர் பார்த்த போது அறிய முடிந்தது, தற்போது புதிய மாற்றங்களுடன் உள்ளது இதனை பயன்படுத்தவில்லை). வீட்டு முதலீடு தொடர்பான excel கணிப்பு உள்ளது அதன் காணொளியினை இங்கு பதிகிறேன் ஆர்வமிருந்தால், அதனை பதிவேற்ற முயற்சிக்கிறேன்.
  16. பெரும்பாலும் இணையத்தில் பல காசு செலுத்தி பெறும் ஆலோசனைகள் அல்லது யூர்யூப்பில் உள்ள வர்த்தக ஆலோசகர்கள் இங்கு முதலில் இணைத்த பல வேறுபட்ட உண்மையான ஆலோசகர்களின் கருத்துகளையே பெரும்பாலும் மீள பழைய கள்ளு புதிய மொந்தையில் காசினை பெற்றுகொண்டு வழங்குகிறார்கள். உங்களது கேள்விகளுக்கு பெரும்பாலும் முன்னர் இணைத்த தரவுகளில் விடை இருக்கலாம், அப்படி இல்லாத பட்சத்தில் இங்கு உங்கள் கேள்வியினை பதியுங்கள், அது தொடர்பான தரவுகள் இலவசமாக இணையத்திலிருந்தால் குறிப்பிடுகிறேன். அல்லது கூகிள், சாட் ஜிபிடி போன்றவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  17. https://www.portfoliovisualizer.com/ இந்த தளத்தில் நேரடியாக உங்களதுமுதலீட்டு திட்டங்களை கடந்த கால தரவுகளின் அடிப்படையில் பரிசோதிக்கலாம்.
  18. Portfolio Metrics: Sharpe Ratio: -2.324727511499123 Expected Return: 0.00019445305297545915 Standard Deviation: 0.008519513297389742 US Large Cap Stocks (30%) US Small Cap Stocks (10%) International Developed Market Stocks (10%) Emerging Market Stocks (10%) Inflation-Protected Bonds (TIPS) (15%) Real Estate Investment Trusts (REITs) (15%) Commodities (5%) Cash or Cash Equivalents (5%) சில மாற்றங்களுடன் 10 வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை, முடிவினில் மாற்றம் பெரிதாக இல்லை பணமுறிகளில் முதலிடுவது இதனை விட சாதகமான விளைவினை ஏற்படுத்தலாம் என கூறுகிறது. எனது பைதன் புரோகிராமில் ஏதாவது தவறு இருக்குமா? எனும் சந்தேகம் (கணித்தல் தொடர்பில்) வலுக்கிறது, நேரம் கிடைக்கும் போது இதனை excel செய்ய முயற்சிக்கிறேன்.
  19. https://eelam.tv/watch/project-beacon-to-destroy-ltte-yogi-speech_vmWvdTiCQJxBqr1.html இரஸ்சியாவுடனான் இந்த போரில் தமிழ் மக்களின் போராட்டத்தினை ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட உத்தி போன்றே அனைத்து வழங்கல் பாதைகளை மூடி ஒரு யுத்தத்தினை தொடுத்தற்கு ஒப்பான நாசகார நடவடிக்கையினையே மேற்கொண்டது, ஆரம்பத்தில் இந்தியாவிற்கு, அமெரிக்கா வரலாற்றில் எந்த பக்கம் இருக்கிறோம் என்றெல்லாம் எச்சரித்தது, அதே போல சீனா போன்ற நாடுகளுக்கும் அமெரிக்கா மறைமுக மிரட்டல்கள் எல்லாம் விடுத்தும் அமெரிக்கா எதிர்பார்த்த மாதிரி தமிழ் மக்களின் போராட்டத்தினை முடக்க உலகம் ஒன்று பட்டது போல இரஸ்சிய விவகாரத்தில் உலகம் ஒன்று பட முடியாமல் போய்விட்டது. தற்போது அமெரிக்க கூட்டணிக்குள்ளேயே பிளவு ஏற்படும் நிலமை உருவாகிவிட்டது. அமெரிக்காவின் எகொபித்த உலக வல்லாதிக்க உலக ஒழுங்கே கேள்விக்குள்ளாகும் நிலைக்கு நிலமை வந்து விட்டது. இரஸ்சியா கூறுவது போல இந்த யுத்த முடிவில் புதிய உலக ஒழுங்கு ஏற்படுமா? அதன் மூலம் தமிழ் மக்களுக்கு விடியல் ஏற்படுமா?
  20. முதலீடு நீண்டகால அடிப்படை கொண்டது என்பதால் 10 வருடத்திற்கு ஆன பரிசோதனை முடிவுகள் உள்ளது. இதில் Sharp ratio risk free rate 2% விகிதத்தில் கணிக்கப்பட்டுள்ளது(10 வருட அவுஸ்ரேலியாஅரச பணமுறி 3.26%). Portfolio இலாபத்தினை ஈட்டினாலும் எதிர் மறை Sharp ratio பணமுறிகளில் முதலிடுவது இந்த முதலீட்டினை விட பாதுகாப்பானதும் இலாபமுமானது என கூறுகிறது. இதில் Dividend உள்ளடக்கப்படவில்லை.
  21. CADJPY வர்த்தகத்தினை மூடிவிட்டேன். Modern Portfolio Theory இல் குறிப்பிட்ட 7 Asset class 12 மாத தரவுகளின் பரிசோதனை முடிவுகள் உள்ளது(11.04.2022 - 11.04.2023). portfolio நட்டமடைகிறது. Standard deviation மட்டும் குறைந்தளவிலான நட்டம் ஏற்படுகிற அமைப்பில் காணப்படுகிறது(less volatility), அதனை தவிர இந்த முதலீடு பாதகமான முதலீடு.
  22. பேர்த் எனும் இடத்தில் அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான் கட்டளைப்பீடம் உள்ளதாக இங்குள்ளவர்கள் கூற்கிறார்கள் (அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளா அல்லது அணுகுண்டினை கொண்ட நீர்முழ்கிகளா என்பதில் தெளிவில்லை) ஆனால் இணையத்தில் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அணுகுண்டு நீர்மூழ்கியினை தம்து நாட்டில் வைத்திருப்பதும் ஆபத்து என்பதாகவும் இருக்கலாம். முன்பு வலது சாரி கட்சிதான் எதற்கெடுத்தாலும் அமெரிக்காவிற்காக குரல் கொடுப்பது, தற்போது இடது சாரி அரசு உள்நாட்டு பொருளாதாரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதால் அமெரிக்க நலனை விட உள்நாட்டு நலனில் அக்கறை காட்டுவதோடு சரி. அல்லது எப்போதும் போல ஏரோப்பிளேனில போற சனியனை ஏணி வைச்சு இறக்கிற பிளானாகவும் இருக்கும்.
  23. 2007 அமெரிக்க பொருளாதார சரிவிற்கு காரணமான வீட்டு கடன் செலுத்த முடியாமல் போகப்போவதை 2 வருடங்களுக்கு முன்னரே கணித்த மைக்கல் பரி வ்பிட் கொயின் 2021 மாசியில் விலை அப்போதைய அதி உச்ச விலையினை தொட்டிருந்த போது பிட் கொயினின் எதிர்காலத்தினை கணித்துள்ளார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.