Everything posted by vasee
-
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
75 வருடங்களாக ஒரு மக்கள் குழுமத்தினை அகதிகளாக்கினவர்கள், தற்போது அதே நிலையில்..........
-
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
இந்தியா ஒரு முழு நேர்மையான விசாரணையினை நடாத்தி அதனை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளது (பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகளிற்கு செய்யும் குறைந்த பட்ச நலன்), இல்லாவிட்டால் இந்த ஊகங்கள் மழை நின்றாலும் நிற்காத தூரலாக தொடரும் நிலைதான்(பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை உளவியலாக தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாக்கும் விடயமாக இருக்கும்).
-
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
கடைசியாக அனைத்து ஊகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள், ஆறுதலான விடயம்.
-
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
என்னை அநியாயத்திற்கு புகழுகிறீர்கள்.🤣
-
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
80 களின் பிற்பகுதியில் ஒரு பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளரின் பெயரும் அப்துல் காதிர், அவர் பந்து வீச வரும் போது பந்தை போட்டு பிடித்து வீச வருவார் அதனை போலவே பின்னாளில் முரள்யும் பந்தை வீசுவதற்கு முன் பந்தை போட்டு பிடித்து வீசுவார் சில மாற்றங்களுடன் (இந்த அப்துல் காதர் டெண்டுல்கருடன் வம்பிழுந்து வாங்கிக்கட்டி கொண்டவர் என கூறப்படுகிறது).
-
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
விடயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதனை பற்றியதல்ல சொந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் வழங்கலில் ஆதிக்கம் இல்லாமல் வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் ஆளுமை செலுத்துகின்றன. அமெரிக்க பண்புகளுக்காக அமெரிக்க கடன்முறிகளை மற்ற நாடுகள் வாங்குகின்றன என்பது போன்ற ஒரு கருத்தினை நீங்கள் கூறியிருந்தீர்கள், அதற்கு அமெரிக்க பணமுறி தங்கத்தினை விட திரவத்தன்மை அதிகம் அத்துடன் தங்கத்தினை விட மேலதிகமாக வட்டி எனும் வகையிலான வருமானம் வருவதால் ம்ற்றும் இருப்பு, நாணய வலுக்குறைப்பு போன்ற காரணங்களுக்காக வாங்குவதாக கூறியிருந்தேன். அத்துடன் 2032 இல் அமெரிக்கா தனது உலகின் முதனிலையினை இழந்து விடும் என்பதற்காக 2022 இல் இருந்த கடன் அடிப்படையில் அதற்கு செலுத்தப்படும் வட்டி மற்றும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தினடிப்படையில் ஒரு மாதிரி கணிப்பீட்டினையும் பதிந்திருந்தேன் அதற்கு கூறிய காரணம் அப்போது கடன் மொத்த தேசிய வருமானத்தினை விட அதிகமாக இருந்தததன் அடிப்படையில் 2032 இல் கடன் தொகை 250% உயர்வடைந்துவிடும் எனவும் இங்கிலாந்து 2 உலக போரின் முடிவின் பின்னர் கடன் மொத்த தேசிய வருமானத்தில் 250% இருந்த போது அது தனது காலனித்துவத்தினை கைவிட்டதனை குறிப்பிட்டிருந்தேன். அப்போது 120% இருந்ததாக கருதுகிறேன் இரண்டு ஆண்டுகளின் பின்னர் 124% உள்ளது, அமெரிக்கா சரியான பாதையிலேயே செல்கிறது, ஆனால் அமெரிக்கா உலகின் முதனிலையினை அதற்கு முன்னராகவே வேறு காரணங்களால் இழக்கலாம் அல்லது 2032 இலும் தொடர்ந்து முதனிலையினை செலுத்தலாம். கணிப்பில் ஆண்டிற்கு 5% கடனதிகரிப்பு ஏற்படலாம் என கணித்ததாக நினைவுள்ளது, தற்போது ஆண்டிற்கு 2% கடனதிகரிப்பு ஏற்படுகிறது (கடந்த 2 ஆண்டில்), 2032 இனை விட சில ஆண்டுகள் அதிகரிக்கலாம் ஆனால் அது நிகழும் என்பதாகவே நான் உணருகிறேன்.
-
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
2023 இல் ருமேனியா 5 பில்லியன் பெறுமதியான காய்கறிகளை ஐரோபிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது,நெடுஞ்சாலைகளின் நோக்க்கம் அடிப்படையில் வர்த்தகநலனடிபடையானது, மற்றும் நிறுவனங்களின் முதலீடு இவை போன்றகாரணிகளில் ஆர்வம் காட்டும் நிலை பன்னாட்டு நிறுவனங்களின் தேவைகள் கணக்கிலெடுக்கப்படும் அதே நேரம் சிறிய விவசாயிகள் அவர்கள் தொழிலில் இருந்து விரட்டி அடிக்கப்படுகிறார்கள். ருமேனியாவின் தாராளமய பொருளாதார கொள்கை காலத்தினை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன், இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இனைந்த பின்னரான காலகட்டத்தில் உள்நாட்டு மக்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் எனவே குறிப்பிட்டுள்ளேன், அடிப்படையில் நாட்டின் வளஙகல் பிறநாட்டு பெரும் நிறுவனங்களின் கைகளில் உள்ளது என்பதை குறிப்பிட்டு தற்போதய உலகில் எதற்காக போர் நிகழ்கிறது என்பதனை சூசகமாக குறிப்பிடவே அந்த உதாரணம். இரண்டாம் உலக யுத்ததின் பின்னரான இந்த சிக்கல் நிலைக்கு மேற்குதான் காரணம் (மேற்கின் ஆட்சியினை தமது தேவைக்கு ப்யன்படுத்தும் பெரும் நிதிநிறுவனங்கள்) இடம், காரணிகள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் அடிப்படை பிரச்சினை அதிகாரங்களில் உள்ளவர்களின் தவறான முடிவு.
-
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
முன்னாள் ருமேனிய பிரதமர் தெரிவித்த கருத்து ஒன்றில், ஐரோப்பிய ஒன்றியத்தில் ருமேனியா இணைந்ததால் ஏற்பட்ட வருமானம் பற்றி குறிப்பிட்டிருந்தார். 18 ஆண்டுகால ருமேனிய ஐரோப்பிய ஒன்றிய இணைவில் 33 பில்லியன் யுரோவினை ஐரோப்பிய ஒன்றியத்திற்காக செலவிட்டுள்ளது, ஆனால் 101 பில்லியன் பெறுமதியான முதலீடுகளை பெற்றுள்ளது அதில் 3 குறிப்பிட்ட துறைகளில் கணிசமான அளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு இருந்துள்ளது. 1.நெடுஞ்சாலை 2.நீர் முகாமைத்துவம் 3.100000 நிறுவனங்களுக்கான முதலீடுகள் 68 பில்லியன் வருமானமாக கிடைத்துள்ளதாக கூறுகிறார். இது எவ்வகையான பொருளாதார மாற்றத்தினை ருமேனியாவிற்கு ஏற்படுத்தியது? சோவியத் ஒன்றிய உடைவின் பின்னர் அந்த பொருளாதார கொள்கையிலிருந்து விடுபட்டு இரஸ்சியா, ருமேனியா, போலந்து போன்ற நாடுகள் தாராளவாத பொருளாதார நிலைக்கு மாறியது (இரஸ்சியா முக்கிய வளங்களை தொடர்ந்து அரச கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்த்தது). 1991, 1992 மிக பெரிய பொருளாதார வீழ்ச்சியினை இந்த நாடுகள் சந்தித்தன அதற்கு காரணம் மிக வேகமாக மத்திய திட்டமிடல் பொருளாதார முறைமையில் இருந்து தடாலடியாக சந்தை பொருளாதாரத்திற்கு மாறியமை, இந்த இரண்டு வருட காலத்தில் 20% பொருளாதார சுருக்கத்தினை ருமேனியா சந்தித்தது. அதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இனையும் வரை கிட்டத்தட்ட 45% பொருளாதார வளர்ச்சி கண்டது (13 ஆண்டில்) ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தபின் 2007 - 2022 வரை 48% பொருளாதார வளர்ச்சியினை (15 ஆண்டுகளில் பெற்றுள்ளது). அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியினை பொறுத்தவரை பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என கூறலாம். ஆனால் அடிப்படையில் ருமேனிய மக்களின் பொருளாதார நிலை என்னவாகியிருந்தது இந்த இரு வேறுபட்ட காலத்தில்? குறிப்பாக ருமேனிய விவசாயிகள் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகள் விவசாயம் பண்ணை தொழில் இருந்து விரட்டி அடித்து அந்த இடத்திற்கு வெளிநாட்டு பெருநிறுவனங்கள் வந்தன. ஒரு நாட்டின் தேசிய சொத்துக்களின் மீதான ஆதிக்கம் பிறநாட்டு நிறுவனங்களுக்கே இருந்த்து, நிறுவனங்கள் ஒரு அமைப்பாக செயற்பட்டு எவ்வாறு ஒரு ஏகபோக சந்தையினை உருவாக்குகிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் அவுஸ்ரேலியாவில் அதிகளவில் சூரிய மின் சக்தி பெருமளவில் பாவிக்கப்படுகிறது. இந்த போக்கு ஒரு புதிய பரிணாமத்திற்கு செல்ல தொடங்கியுள்ளது மக்கள் சூரிய மின் சக்தியுடன் மின் சேமிப்பு கலனையும் பாவிப்பதால் மின்சாரம் வழங்கும் நிறுவனங்களின் வியாபாரத்தில் ஏற்படப்போகும் சரிவினை தவிர்ப்பதற்காக ஒரு புதிய நடை முறையினை அறிமுகப்படுத்தவுள்ளார்கள் அதனை சூரிய வரி என கூறுகிறார்கள், சூரிய மின், மின் சேம்ப்பு கலத்தில் சேமிக்கப்பட்ட எஞ்சியவை மின் கம்பிகளினூடாக மின்சார வழங்குனருக்கு செல்லும் அதற்கு கட்டணம் வசூலிக்க உள்ளார்கள். இரஸ்சியா தனது வளங்களை தொடர்ந்து தன்னகத்தே அரச உடமையாக வைத்திருப்பதுதான் தற்போது நிலவும் பிரச்சினைக்கு அச்சாணி. ஒரு காலத்தில் உலகமயமாக்கப்பட்ட சந்தை பொருளாதாரத்தினை முதன்மை படுத்தின நாடுகள் சுயசார்பு பொருளாதாரம், வழங்கல் பாதை பாதுகாபு மற்றும் உள்நாட்டு வர்த்தக நலன் போன்றவைகளை முதன்மை படுத்துவதற்கான காரணம். இன்றைய யதார்த்தம் பலதுருவ (Block countries) உலக ஒழுங்கே.
-
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
ஒரு காலத்தில் உலகமயமான திறந்த பொருளாதார கொள்கையினை முன்னிறுத்திய அமெரிக்கா தற்போது தனது சுய சார்பு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலைக்கு சென்றுள்ள காரணம் என்ன என ஜெய்சங்கர் கேள்வியினை கேட்டுள்ளார். திறந்த பொருளாதார கொள்கை அடிப்படையில் மிக சிறப்பான கொள்கை, அதன் மூலம் உலக பொருளாதாரம் வேகமாக வளரும், அதற்காகவே பொருளாதார நிபுணர்களால் பிரட் அன்ட் வூட் தீர்மானத்தின் மூலம் அதனை முன்னிலை படுத்தினார்கள், அப்போது உலக வர்த்தகத்தில் காற்பங்கு கொண்ட அமெரிக்காவினை முதன்மைபடுத்தி அந்த திட்டம் உருவாக்கம் பெற்றிருந்த்தது, ஆனால் அமெரிக்கா அந்த நிலையினை ஒவ்வொரு கட்டத்திலும் தந்து தேவைக்காக மாற்றங்கள் செய்து அதனை முழுக்க ஒரு சுரண்டல் பொருளாதார கொள்கையாக மாற்றி தற்போது அதனையே தூக்கியெறியும் நிலைக்கு வந்துள்ளது. உக்கிரேன் இரஸ்சிய போர் ஆரம்பமான காலகட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அஸ்தமனகாலம் என கூறப்பட்டபோது அதனை ஒரு ஆரோக்கியமான சந்தேகத்துடன் அதற்கெதிரான வாதப்பிரதிவாதங்களான (நம்ப முடியாத நிலையில்) விடயங்கள் தற்போது இலகுவாக கடந்து செல்லும் நிலைக்கு மாற்றங்கள் உணரும்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புதிய ஒழுங்கு இதுவரைகாலமும் காணப்பட்ட அடிப்படையான விடயங்கள் இனி அவற்றிற்கான தேவைகள் இல்லாமல் போய் விட்டுள்ளது, இனி வரவுள்ள கூட்டு நாடுகளின் (Block countries)ஆதிக்கமுடைய புதிய ஒழுங்கு நோக்கி தமிழினம் தன்னை தயார்படுத்தி கொள்ளவேண்டும். எமது சமுதாயம் ஒரு மெதுவாக தன்னை தயார்படுத்தும் சமூகமாக உள்ளது (Late adopters), பொதுவாக உயர் கல்விநிலை உள்ள சமூகத்தின் பொதுவான இயல்பு இது, சவால்களை எதிர்கொள்ளும் சமூகத்தின் பிரதிநிதிகள் பெருமளவில் போரினால் அழிவடைந்ததால் எமது சமூகம் ஒரு சிக்கலான சமூக பிரச்சினைக்குள் உள்ளதாக உணருகிறேன் (Late adopters ஒரு சமூகத்தில் 34% இருக்க வேண்டிய நிலை, எமது சமூகத்தில் 60% இற்கும் அதிகமாக இருக்கலாம் என கருதுகிறேன்).
-
செம்மணியும் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையும் : பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுக்கிறார் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் அரச வழக்குரைஞர் பிரசாந்தி மகிந்தரட்ண
- நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
ஒரு ஊரில் பெரிய ரவுடி ஒருவர் இருந்தால் அவருக்கு கீழ் சில ரவுடிகள் இருப்பார்கள், அந்த ரவுடிகளினை தெரிந்தவர்கள் அவர்களை தெரிந்தவர்க்ளெல்லாம் சும்மா இருப்பவர்களிடம் நான் யார் தெரியுமா? எங்கள் அண்ணன் யார் தெரியுமா என பயமுறுத்தி வம்பிழுப்பார்கள். இவர்களும் பெரிய ரவுடியுடன் எதற்கு வம்பு என இந்த ஏப்பை சாப்பைகளை சகித்து கொண்டிருப்பார்கள், ஆனாலும் அவர்கள் விடமாட்டார்கள் அவர்களை தொடர்ந்தும் வம்பிழுப்பார்கள் ஒரு கட்டத்தில் அது முற்றி சாது மிரண்டால் காடு கொள்ளாது நிலை ஆகிவிடும். மத்திய கிழக்கு நிலையும் கிழக்காசிய நிலையும் வேறு வேறல்ல, இரண்டிடத்திலும் பலவீனமானவர்களை அல்லக்கைகள் வம்பிழுக்கின்றன (பலவீனமானவர்கள் இருக்கும் வரைதான் ரவுடிக்கு வேலை நடக்கும்). மரங்கொத்தி பறவைக்கு தனது ஆற்றலில் மிகையான நம்பிக்கை இருக்கும், பார்க்கும் மரமெல்லாவற்றினையும் கொத்தும் ஆனால் வாழைமரத்தில் அலகு இறுகி மாட்டுப்பட்டுவிடும். நேட்டோ இரஸ்சியாவினை தொடர்ச்சியாக அழுத்தி ஒரு போரினை ஆரம்பிக்க விரும்பியது, ஏற்கனவே பொருளாதார தடையில் இருக்கும் இரஸ்சியாவினை ஒரு போரின் மூலம் இலகுவாக உடைக்கலாம் என நம்பியது. இரஸ்சியாவின் பலத்தினை தொடர் அழுத்தம் மூலம் அழிக்கலாம் என எதிர்பார்த்தது அதற்கு இரஸ்சியாவின் பாதுகாப்பு, பொருளாதாரத்தின் மீதான மீள்தகவு நெகிழ்தன்மையினை (Elastic resistance) தொடர் அழுத்தம் மூலம் உடைக்கலாம் (Break point) என நம்பியது. அது நிகழவேண்டுமாயின் இரஸ்சியாவின் பொருளாதாரம் உடைய வேண்டும் ஆனால் அது நிகழவில்லை. இரஸ்சியா 2014 பின்னர் தனது பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் மூலம் ஒரு உறுதியான பொருளாதாரமாக மாறியிருந்தது. முக்கியமாக தற்போதய உலகில் காணப்படும் பலவீனமான நிழல் வங்கி முறையினை மாற்றியமைத்தது (Shadow banking system), இன்று பெரிய முக்கிய பொருளாதார சக்தியாக திகழும் அமெரிக்கா, சீனா உள்ளடங்கலாக நாடுகளில் உள்ள இந்த பலவீனமான அமைப்பை மாற்றி அமைத்தது, இதன் மூலம் பொருளாதார பேரிடர் ஏற்படாமல் தவிர்க்கலாம் (2008 அமெரிக்க பொருளாதார பேரிடர் போன்றதோர்). அத்துடன் இந்த நிழல் வங்கி முறைமையில் மிக மிக குறைந்தளவிலான வெளித்தொடர்பினை பேணுதல் மற்றும் முழுக்க முழுக்க நாடு சார்ந்த வங்கி அமைப்பு, இறுக்கமான நாணய கொளகை, தனியான வர்த்தக பரிமாற்று சேவை என பல விடயங்களை மாற்றி அமைத்தார்கள். தற்போது எப்படி ஒரு எலாஸ்ரிக் பாண்டினை அதன் முழு சக்திக்கு அப்பால் இழுத்தால் அறுந்து விடுமோ அதே போல அந்த அழுத்தத்தினை பாதியில் விட்டால் அது தெறித்து இன்னொரு வகையான சேதத்தினை ஏற்படுத்துமோ அந்த நிலையில் உலகை தள்ளி விட்டுள்ளார்கள் (இதில் பலியாக போவது அல்லக்கைகள், ரவுடி ஏற்கனவே கழண்டுவிட்டார்), எதிராளி பற்றிய சரியான புரிதல் இல்லாமல் குடைச்சல் கொடுத்ததன் விளைவாக நிலமை தலைகீழாகி அதே பிரச்சினை திரும்பியுள்ளது. இரஸ்சியாவினை அழிக்கவேண்டுமாயின் (போரில் தோற்கடிக்க) அவர்களின் பொருளாதாரத்தினை முதலில் அழிக்க வேண்டும், ஆனால் இந்த பொருளாதார தடைகளால் அதனை நிறைவேற்ற முடியாது. எதிர்காலத்தில் பல போர் அழிவுகள், பொருளாதார பேரழிவுகள் ஏற்படலாம் அதனை தவிர்க்க சமாதானமே சரியான வழி.- நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
இலங்கையில் தமக்கு நிகழ்ந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு நிற்கும் ஈழத்தமிழர்களே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்!- 'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?
இதில் முதல் குற்றவாளி வரதட்சணைதான் (A # 1), எமது சமூகத்திலும் வரதட்சணை வாங்குபவர்கள் உள்ளார்கள், ஆதிலும் பெரும்பாலானாவர்கள் படித்தவர்கள்தான் இந்த வரதட்சணை வாங்குபவர்களாக உள்ளார்கள். சிலர் வரதட்சணை கொடுப்பதினை பெருமையாக நினைப்பவர்களும் உள்ளார்கள். எமது சமூகத்தில் வரதட்சணையினை ஒரு பிற்போக்குத்தனமாக பார்க்கும் நிலை கூட இல்லை.- வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
கிரேக்க அறிஞ்சர் பிளேட்டோ போலி கவிஞ்சர்களை நாடுகடத்த வேண்டும் என கூறினார், அதற்கு அவர் கூறிய காரணம் மக்களை தவறாக நடத்த முயற்சிப்பதே என கூறுகிறார். Perception என்பது ஒரு வர்ண கண்ணாடி போன்றது அவரவர் புரிதலி விடயங்கள் ஒன்று போல தோன்றும், மிக குறைவான தரவுகளுடன் விடய்ங்களை சுயவிருப்பின் அடிப்படையில் அணுகும் போது இவ்வாறான தவறான முடிவுகளுக்கு வரவேண்டிய நிலை உள்ளது, சமூகத்தில் மதிக்கப்படும் உயர்நிலையில் உள்ள ஒரு கல்வி சமூகத்திற்கு அதிக அக்கறையும் பொறுப்புணர்வும் இருக்கவேண்டும். கண்ணுக்கு புலப்படாத போரினை ஒரு மதிப்பாய்வு செய்தவரின் கருத்டினுடாக அதில் கூறப்பட்ட விடயத்தினை சுருக்கமாக..... ஒரு கொடுமையினை சட்டமாக்குவதற்கு ஐநா எவ்வாறு உடந்தையாக இருந்தது? அதுவும் ஐ நா பாதுகாப்பு சபையினூடாக ஒரு பாரபட்சமான பொருளாதார தடை ஈராக்கிற்கெதிராக நிறைவேற்றப்பட்டது? ஐ நாவால் அமைக்கப்பட்ட பிரத்தியேக கண்காணிப்புக்குழு ஈராக்கின் இரக்குமதியினை கண்காணித்தது, அவை மனிதாபிமான உணவு மருந்து உள்ளடங்கலாக. இந்த பிரத்தியேக கண்காணிப்புக்குழுவிற்குள் ஊடுருவிய அமெரிக்க அதிகார மையம் 1.மனிதாபிமான உதவிகளை கட்டுப்படுத்தியது. 2.அதிக பட்ச பொருளாதார அழுத்ததினை பிரயோகித்தது 3.இவை அனைத்தும் மக்களுக்கெதிரானது எனும் புரிதலுடனேயே அதனை நிகத்தியிருந்தது. அமெரிக்கா ஐநாவின் 661 பொருளாதார தடை குழுவில் தந்து அதிகாரத்தின் மூலம் குளிர்சாதனம், சுத்தமான நீர், சவர்க்காரம், கோழி முட்டை (உயிரியல் ஆயுதம் செய்துவிடுவார்களாம், இந்த தடைகள் அத்துடன் இதற்கு மேலான பொருள்தடைகள் எமது பிராந்தியத்தில் முன்னர் நிகழ்த்தப்பட்டிருந்த்து) போன்ற பொருள்கள் தடை செய்தது. இந்த பொருளாதார தடை ஈராக்கின் பொருளாதாரத்தினை முற்றாக அழித்தது மட்டுமன்றி ஒரு நாட்டின் இறையாண்மையினையே மீறியது. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல சுத்தமான நீரை வழங்குவதற்கான கருவிகளை திருத்துவத்ற்கான உதிரிப்பாகங்களுக்கான தடை முலம் 5 இலட்சம் குழந்தைகள் இறப்பிற்கு அமெரிக்கா வெளியுறவுத்துறையின் பரவல் தடுப்பு பணியகம் ஈரான் ஆக்கிரப்பு போரிற்கு முன்னரே காரணமாக இருந்தது. இவை அனைத்தும் சதாமினை ஆட்சியில் இருந்து நீக்குவதற்கான முயற்சியாக இருந்த போதும் அதன் மூலம் சதாமினை இந்த பொருளாதார தடையின் மூலம் எதுவும் செய்யவில்லை. அவ்வாறிருக்கையில் எதற்காக பொருளாதார தடை? என தொடருகிறார்.- வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
பொருளாதார தடைகள் அரசுகளுக்கெதிராக என கூறப்பட்டாலும் அதன் இலக்கு அங்கு வாழும் மக்கள்தான், அரசுகள் பாதிப்படையமாட்டாது (எமது பிராந்தியத்திலும் கடந்த காலத்தில் இவ்வாறான சூழ்நிலைகளை அனுபவித்து வந்தவர்கள் என்பதால் இது ஒன்றும் எமக்கு புதிய விடயமல்ல), அவ்வாறிருக்கையில் ஏன் இவ்வாறான பொருளாதார தடைகள் மக்கள் மீது போடுகிறார்கள்? அதனை எவ்வாறு உலக சமூகத்தின் கண்முன்னே நடத்துகிறார்கள்? The Sanctions Paradox Invisible war இந்த புத்தகங்கள் இது தொடர்பான மேலதிக தரவுகளை தரும், ஆர்வமிருந்தால் வாங்கி படிக்கலாம்.- செம்மணிக்கு வந்த ஐநா - நிலாந்தன்
ஆரம்ப பாடசாலை தமிழில் ஒரு 300 சொற்கள் கொண்ட கட்டுரையினை 15 சொற்களுக்கு சுருக்கமாக எழுதும்படி கோரப்படும் அதற்கு ஆசிரியர்கள் கூறும் ஒரு முறை பென்சிலால் ஒரே சொல் திரும்ப திரும்ப இடம்பெறும் சொற்களை கீறி (அடித்துவிட) விட்டு அதே போல இன்னு பல விடயங்கள் கூறுவார்கள் (எனக்கு நினைவில்லை நான் அவ்வாறு செய்வதில்லை). 15 சொற்களுக்கு சுருக்கமாக எழுதப்படும். கேள்வியில் எதிர்பார்க்கப்படுவது கட்டுரையின் சாராம்சம் மட்டுமே! அந்த 7 நாள்கள் படத்தின் கதை என்னவென்றால் ஒரே வரியில் ஒருவரின் காதலி இன்னொருவரின் மனைவியாகலாம், ஒருவரின் மனைவி இன்னொருவரின் காதலி ஆகமுடியாது. சாத்தான் கூற விளைவது கட்டுரை அனைவரும் ஒன்றாக நிற்கவேண்டும் என கூற மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் எதிரெதிராக நிற்கிறார்களே எனும் விசனம்.- அமெரிக்க மூத்திரம் - தேவ அபிரா
நல்ல கவிதை நிழழி! இணையத்தில் தேடியபோது கிடைத மேலதிக தகவல். அம்ருதா இணைய இதழ் - Amrutha E-Ma...யுத்தத்தின் காயங்களும் அவற்றின் வடுக்களும் - தேவ அபிராஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம், புலம் பெயர்வு இரண்டு மையங்களிலும் இருந்து எழுந்த கருக்களில் இருந்துதான் இக்கதைகள் பிறந்திருக்கின்றன.- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நல்ல கருத்து! நம்பிக்கைகளுக்கு வலு உள்ளது, சிலர் தமது நம்பிக்கைக்காக மற்றவர்களின் உயிர்களையே எடுக்கிறார்கள், பொதுவாக சாவிற்கு அடுத்தபடியாக மக்கள் வெறுக்கும் விடயம், தமது நிலைப்பாடு தவறு என உணரும் நிலை, இதற்கு காரணமாக கூறப்படுவது எமது கல்வி முறை, தவறாக இருப்பதில் தவறில்லை எனும் உனர்வினை சாதாரண மனிதர்களிடம் ஏற்படுத்துவது கடினம். Bigger loser win என்பது தற்கால நவீன வியாபாரத்தின் மாதிரி, அதனாலேயே அவர்கள் நஸ்டத்தினை உடனடியாக வெட்டி விடுகிறார்கள், தனது முடிவு தவறென தெரிந்தவுடன் அதிலிருந்து எந்தவித மனக்கிலேசமும் இல்லாமல் வெளியே வருபவர்களால்தான் சரியான முடிவினை இறுதியில் எடுக்க முடியும், தான் எடுத்த தவறான முடிவினை நியாயப்படுத்த அதனை பிடித்து தொங்கி கொண்டிருப்பது ஒரு சூதாடியின் மனநிலை, பெரும்பாலும் படித்தவர்களிடம் (மரபு சார்) இந்த வியாதி உள்ளது.- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இந்த பழமைவாத துருப்பிடித்த சிந்தனைக்கு மாற்றீடான சிந்தனைகளை உக்குவிக்கும் நிலைக்கு சமூகம் வளர வேண்டும் ஆனால் மத அடிப்படைவாதிகள் அதனை கேள்விக்கெ இடமளிப்பதில்லை, கேள்வி கேட்டால் அதற்Kஉ ஏதாவது காராம் என கூறி கொல்லுகின்ற நிலை காணப்படுகிறது, மத அடிப்படைவாத ஆட்சியினை இதனாலேயே பலர் வெறுக்கின்றனர், இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பி ஜே பி க்கு பெரியளவில் எதிர்ப்பு உள்ளது, தமிழ் சமூகம் மாற்றம் வேண்டி நிற்கும் சமூகம், மாற்றம் தான் ஒரு நிரந்தரமான வலிமையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும், மாற்றங்களை அங்கீகரிக்காமல் அனைத்தையும் மதத்தின் பெயரால் பழமைவாத சிந்தனையுடன் இருந்தால் மதம் வேணுமென்றால் நிலைத்திருக்கும் ஆனால் அதனை பின்பற்றத்தான் மக்கள் இருக்கமாட்டார்கள்.- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
https://www.politico.eu/article/iran-foreign-minister-abbas-araghchi-russia-vladimir-putin-us-strikes-nuclear-sites/ அமெரிக்க தாக்குதலை அடுத்து ஈரான் வெளியுறவு அமைச்சர் இரஸ்சியாவிற்கு பயணம் செய்திருந்தார்.- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இந்த போர் ஒரு தேவையற்ற போர் இதனால் ஏற்பட்ட அரசியல் இராணுவ ஆதாயங்கள் பற்றிய கருத்துக்கள் இப்போதே தெரிவிக்க முடியாவிட்டாலும், இது ஒரு தேவையில்லாத ஆணி என சம்பந்தப்பட்ட தரப்புக்களே உணர்ந்துள்ளதாக தெரிகிறது, அனைவருக்கும் இந்த போரில் இருந்து வெளியேற வேண்டிய தேவை , ஆனால் இது இஸ்ரேலிற்கு ஒரு தோல்வி என கருத இடம் உண்டு, அமெரிக்கா இதில் வேண்டா வெறுப்பாகவே ஈடுபட்டுள்ளதாக என கருதுகிறேன், இஸ்ரேலால் தொடர்ந்து இந்த வான் தாக்குதலை தொடர முடியாது, ஆனால் இந்த தாக்குதலிலால் பெரியளவில் ஈரானில் அணுக்கசிவு ஏற்பட்டு மக்கள் பெருமளவில் பாதிக்காமல் அனைத்து தரப்பும் தங்களுக்கே வெற்றி என கூறிகொண்டு இதற்கு ஒரு முடிவு கட்டியுள்ளார்கள், அதுவே போதும்.- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானின் அணுசக்தி தளங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை என்ன செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன? செய்தி உலகம் ஆசிரியர் மெக் கெல்லி, ஜாய்ஸ் சோஹ்யுன் லீ, நிலோ டாப்ரிஸி, இவான் ஹில், டிலான் மோரியார்டி - வாஷிங்டன் போஸ்ட் , வெளியீட்டு தேதி திங்கள், 23 ஜூன் 2025, காலை 11:01 மணி வாஷிங்டன் போஸ்ட் காட்சி பகுப்பாய்வு மற்றும் பல நிபுணர்களின் கூற்றுப்படி, இன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் ஈரானின் முக்கிய ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் குறைந்தது ஆறு வெளிப்படையான வெடிகுண்டு நுழைவு புள்ளிகளைக் காட்டுகின்றன. நேற்று அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களில் ஒன்றின் மீதும் மற்ற இரண்டு நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்திய பின்னர் ஏற்பட்ட சேதத்தின் முதல் பார்வையே இந்தப் படங்கள். இந்தத் தாக்குதல்கள் ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களை "முற்றிலும் முற்றிலுமாக அழித்துவிட்டன" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். இந்தப் படங்களின் கலவையானது ஜூன் 16, 2025 அன்று ஈரானின் இஸ்ஃபஹான் அணு செறிவூட்டல் நிலையத்தையும் (மேலே), அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு மத்திய ஈரானில் உள்ள ஈரானின் இஸ்ஃபஹான் அணு செறிவூட்டல் நிலையத்தையும் காட்டுகிறது. புகைப்படம் / AFP பென்டகன் தலைவர்கள் ஒரு செய்தி மாநாட்டில் மிகவும் அளவிடப்பட்ட விளக்கத்தைப் பயன்படுத்தினர், அனைத்து தளங்களும் "மிகவும் கடுமையான சேதத்தை" சந்தித்ததாகவும், ஃபோர்டோவில் "திறன்களை அழிப்பதை" அடைந்துவிட்டதாக அவர்கள் நம்புவதாகவும் கூறினர். இஸ்ஃபஹானில் உள்ள அணுசக்தி தளம் "அழிக்கப்பட்டுவிட்டது" என்றும், ஃபோர்டோ மற்றும் நடான்ஸில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "கடுமையாக சேதமடைந்துள்ளன" என்றும் ஆரம்ப மதிப்பீட்டில் காட்டப்பட்டுள்ளதாக மூத்த இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார். வெடிப்பின் ஆழம் மற்றும் சுற்றியுள்ள புவியியல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து நிலத்தடி தாக்கங்கள் சார்ந்து இருப்பதால், மிக விரைவாக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்குமாறு குண்டு வெடிப்பு ஆய்வாளர்கள் எச்சரித்தனர். அமெரிக்கத் தாக்குதல்களுக்கு முன்னர் ஈரானில் உள்ள ஃபோர்டோ நிலத்தடி அணுசக்தி நிலையத்தை மேக்சர் டெக்னாலஜிஸ் எடுத்த செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. புகைப்படம் / மேக்சர் டெக்னாலஜிஸ் அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானில் உள்ள ஃபோர்டோ நிலத்தடி அணுசக்தி நிலையத்தை மேக்சர் டெக்னாலஜிஸ் எடுத்த செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. புகைப்படம் / மேக்சர் டெக்னாலஜிஸ் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.45 மணி முதல் 2.30 மணி வரை, உலகம் முழுவதும் தீ மற்றும் கடுமையான வானிலையைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள், ஃபோர்டோ தளத்திற்கு அருகில் குறிப்பிடத்தக்க வெப்பம் தொடர்பான நிகழ்வுகளைக் கண்டறிந்ததாகத் தெரிகிறது. அந்த இடத்தில் வான் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட்டதாக நிபுணர்கள் கூறிய இடத்தில் வெப்பக் கையொப்பங்கள் பிடிக்கப்பட்டன. கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் டான் கெய்ன், பதுங்கு குழிகளை உடைக்கும் பாரிய ஆயுத ஊடுருவல் விமானங்களை சுமந்து செல்லும் B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் ஃபோர்டோ மற்றும் நடான்ஸை நெருங்கியபோது, அமெரிக்கப் படைகள் ஈரானிய தரையிலிருந்து வான் அச்சுறுத்தல்களுக்கு எதிராக "அடக்குமுறை ஆயுதங்களை" நிலைநிறுத்தியதாகக் கூறினார். அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானில் உள்ள ஃபோர்டோ நிலத்தடி வளாகத்தில் உள்ள முகட்டில் உள்ள பள்ளங்கள் மற்றும் சாம்பலைக் காட்டும் மாக்சர் டெக்னாலஜிஸின் செயற்கைக்கோள் புகைப்படம் . புகைப்படம் / மாக்சர் டெக்னாலஜிஸ் இறுதியில், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அமெரிக்க விமானங்கள் ஈரானிய வான்வெளிக்குள் நுழைந்து வெளியேறும் போது அவற்றை நோக்கிச் சுடவில்லை என்று பென்டகன் அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.10 மணியளவில், முன்னணி B-2 குண்டுவீச்சு விமானம் முதல் இரண்டு GBU-57 MOPகளை ஃபோர்டோ வசதியில் வீழ்த்தியதாக கெய்ன் கூறினார். 13,610 கிமீ துல்லிய வழிகாட்டும் குண்டுகள் நிலத்தடி இலக்குகளை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், ஏழு B-2 கள் ஃபோர்டோ மற்றும் நடான்ஸில் 14 குண்டுகளை வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஃபோர்டோ வசதிக்கு மேலே உள்ள முகட்டில் மூன்று நுழைவுப் புள்ளிகளைக் கொண்ட இரண்டு கொத்துக்களை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன என்று, அதன் பின்விளைவுகளின் படங்களை மதிப்பாய்வு செய்த நிபுணர்கள் தெரிவித்தனர். அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானில் உள்ள நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை மேக்சர் டெக்னாலஜிஸ் எடுத்த செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. புகைப்படம் / மேக்சர் டெக்னாலஜிஸ் மையவிலக்குகள் அமைந்துள்ள வசதியின் முக்கிய பகுதியான 250 மீட்டர் நீளமுள்ள அடுக்கு மண்டபத்தை இந்த தாக்குதல்கள் குறிவைத்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது மலையில் கட்டப்பட்டு பின்னர் மூடப்பட்டது. தாக்கப்படும் ஒரே இடத்தைச் சுற்றி பல வெடிமருந்துகளை குவிப்பது பதுங்கு குழிகள் மற்றும் நன்கு கடினப்படுத்தப்பட்ட கட்டமைப்புகளை அழிப்பதற்கான பொதுவான இலக்கு முறையாகும் என்று பென்டகனின் சிவில் பாதுகாப்பு மையத்தின் முன்னாள் சிவில் தீங்கு மதிப்பீடுகளின் தலைவரான வெஸ் பிரையன்ட் கூறினார். அமெரிக்க தாக்குதலுக்கு முந்தைய நாட்களில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் ஃபோர்டோவில் "வழக்கத்திற்கு மாறான லாரி மற்றும் வாகன செயல்பாட்டை" காட்டியதாக செயற்கைக்கோள் நிறுவனமான மேக்சர் டெக்னாலஜிஸின் மூத்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை NZT அன்று, நிலத்தடி இராணுவ வளாகத்திற்குச் செல்லும் அணுகல் சாலையில் 16 சரக்கு லாரிகள் இருந்தன. பகுப்பாய்வின்படி, மறுநாள் எடுக்கப்பட்ட படங்கள், பெரும்பாலான லாரிகள் அந்த வசதியிலிருந்து வடமேற்கே ஒரு கிலோமீட்டருக்கும் சற்று அதிகமாக நகர்ந்திருப்பதைக் காட்டுகின்றன. மற்ற லாரிகள் மற்றும் புல்டோசர்கள் தளத்தின் நுழைவாயிலுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டன, அதில் ஒரு லாரி அதற்கு நேர் அருகில் இருந்தது. தாக்குதல்களுக்கு முன்னர் வார இறுதியில் எடுக்கப்பட்ட படத்தை மதிப்பாய்வு செய்த அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான ஸ்பென்சர் ஃபராகஸ்ஸோ, பிற காரணங்களுக்கிடையில், ஆபத்தான பொருட்கள் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரானியர்கள் சுரங்கப்பாதைகளை மீண்டும் நிரப்பியிருக்கலாம் என்று கூறினார். "அவர்கள் அநேகமாக விஷயங்களை மூடிவிட்டு, தங்களால் முடிந்ததை அகற்றிவிட்டு, பின்னர் அதை மூடிவிட்டார்கள்," என்று மிடில்பரி நிறுவனத்தின் ஜேம்ஸ் மார்ட்டின் அணு ஆயுத பரவல் தடை ஆய்வு மையத்தின் கிழக்கு ஆசிய அணு ஆயுத பரவல் தடை திட்டத்தின் இயக்குனர் ஜெஃப்ரி லூயிஸ் ஒரு செய்தியில் கூறினார், இது வாஷிங்டனையும் ஜெருசலேமையும் "ஈரானுடன் மோல்" விளையாட விட்டுவிடுகிறது. இப்போது, லாரிகள் காணப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள சுரங்கப்பாதை நுழைவாயில்கள் குண்டுவெடிப்பின் அதிர்ச்சி அலை அல்லது முந்தைய ஈரானிய நடவடிக்கைகளிலிருந்து அழுக்குகளால் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது. வசதியின் குப்பைகளால் ஆன சாம்பல்-நீல சாம்பல் பூச்சு மணலின் குறுக்கே உள்ளது. - இந்த அறிக்கைக்கு ஜொனாதன் பரன், அலெக்ஸ் ஹார்டன் மற்றும் சவுத் மெக்கென்னெட் ஆகியோர் பங்களித்தனர். https://www.newstalkzb.co.nz/news/world/what-satellite-images-show-of-damage-to-iran-s-nuclear-sites-after-us-strikes/- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
போரினை தொடரும் நிலை சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் அதற்கான வசதிகள் இல்லை என கருதுகிறேன், ஈரானிடமும் இல்லை, இரண்டு வார போரில் இஸ்ரேல், ஈரான் இரு தரப்பிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது பெரிதாக உயிரிழப்புக்கள் இல்லை, அணு நிலைகளில் கூட பெரிதாக எந்த அணுக்கசிவுகளும் ஏற்படவில்லை, இத்துடன் போரினை முடித்து கொண்டால் இருதரப்பும் தமது கவுரவத்தினை இழக்க வேண்டிய நிலை இல்லாததால் போரினை முடித்து கொள்வார்கள். https://www.politico.com/news/2025/06/21/iran-says-strikes-did-not-cause-nuclear-contamination-00416469 Bulletin of the Atomic ScientistsThe radiation risks of Iran’s nuclear program, with or wi...Israel’s attacks create significant risks at Iran's nuclear sites. What could go wrong?https://www.samaa.tv/index.php/2087335313-iaea-reports-no-rise-in-radiation-after-us-strikes-on-iran-nuclear-sites- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உலக அரங்கில் கூட ராஜதந்திர போர் தீவிரமாகிறது🤣.- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நல்ல விடயம் போர் முடிவுக்கு வருகிறது, ஆனால் யாழில் கொஞ்சம் காலம் ஆகும் போர் நிறுத்தத்திற்கு🤣. - நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.