Everything posted by vasee
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு நாடி அறுந்து இரத்தம் வேகமாக வெளியேறும் போது அதிர்ச்சியடைந்து சிலர் மயக்கமாவதும் உண்டு அது தவிர அந்த காயம் பற்றிய மிகைப்படுத்தலான எண்ணம் ஏற்படுதல் என மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் சரியான வலி நிவாரணி இல்லாத மருத்துவ வசதியற்ற நாட்டில் சிறு குழந்தைகள் இந்தப்போரிற்கு இரையாக போகிறார்கள் அவர்கள் பலர் அவயங்களை கூட இழக்க நேரிடும். இந்த அழிவினால் எப்போதும் சாதாரண மக்கள்தான் பாதிப்படைகிறார்கள், கடைசியாக அந்த மக்களையே மனித கேடயமாகெளம் பாவிப்பார்கள். இந்த போர் சிலருக்கு இலாபமக இருக்கலாம், இந்த போரினால் எமக்கென்ன இலாபம், எதற்காக இந்த கொண்டாட்டம்? பொதுவாக போரின் வலிகளை உணராதாவர்களும் அல்லது பார்க்காதவர்களும் கொண்ட்டாடலாம், ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இனமாக இருந்து இவ்வாறான மனித குல அழிவினை கொண்டாட முடியுமா? எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு நாடி அறுந்து இரத்தம் வேகமாக வெளியேறும் போது அதிர்ச்சியடைந்து சிலர் மயக்கமாவதும் உண்டு அது தவிர அந்த காயம் பற்றிய மிகைப்படுத்தலான எண்ணம் ஏற்படுதல் என மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் சரியான வலி நிவாரணி இல்லாத மருத்துவ வசதியற்ற நாட்டில் சிறு குழந்தைகள் இந்தப்போரிற்கு இரையாக போகிறார்கள் அவர்கள் பலர் அவயங்களை கூட இழக்க நேரிடும். இந்த அழிவினால் எப்போதும் சாதாரண மக்கள்தான் பாதிப்படைகிறார்கள், கடைசியாக அந்த மக்களையே மனித கேடயமாகெளம் பாவிப்பார்கள். இந்த போர் சிலருக்கு இலாபமக இருக்கலாம், இந்த போரினால் எமக்கென்ன இலாபம், எதற்காக இந்த கொண்டாட்டம்? பொதுவாக போரின் வலிகளை உணராதாவர்களும் அல்லது பார்க்காதவர்களும் கொண்ட்டாடலாம், ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இனமாக இருந்து இவ்வாறான மனித குல அழிவினை கொண்டாட முடியுமா? அணுவாயுதம் ஏவுகணை என்பதெல்லாம் ஒரு சாட்டாக கருதுகிறேன், ஈரானின் வளம்தான் குறியாக உள்ளதாக கருதுகிறேன்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உலகம் ஒரு முரண்பாடானது, தற்போது உள்ள நிலையில் இரஸ்சியா போல ஒரு நீண்ட சாதாரண போரினை ஈரானுடன் நடத்துவதற்கு அமெரிக்காவிடமோ அல்லது இஸ்ரேலிடமோ பொருளாதார வளமும் அதற்கான போரிடும் ஆற்றலும் இல்லை ஆனால் ஒரு பேரழிவினை உண்டாக்கி (முறையற்ற போரின் மூலம்) போரினை முடிக்கும் திறன் மட்டுமே உண்டு என கருதுகிறேன். ஈரான் சமாதானமாக போவதே சிறப்பு, தேவையற்ற உயிரிழப்புக்களை தவிர்க்கலாம், சா மன்னரின் வாரிசு மூலமாக ஒரு ஆட்சி மாற்றத்தினை (பொருண்மிய நலன் அடிப்படையில்) அமெரிக்கா விரும்புவதாக கூறுகிறார்கள், ஆனால் அதற்கு முன்னராக பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுவிடும். செலன்ஸ்கி போல் வளங்களை கொடுத்தால் பிரச்சினை இருக்காது என கருதுகிறேன்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அங்கு இரஸ்சியாவினை எதிர்க்க ஆயுதம் கொடுத்தவர்கள், தற்போது மறுவளமாக இஸ்ரேலுக்கு ஆயுதம் கொடுப்பதுடன் போரிலும் குதிக்க போகிறார்கள் என கூறுகிறார்கள்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் பின் கதவு வழியாக பேச்சுவார்த்தையினை தொடர்ந்து நடத்துவதாக கூறுகிறார்கள், ஈரானிடம் வான் மேலாதிக்கம் இல்லை, அதனால் ஈரானின் வான் பரப்பிற்குள் தங்கு தடையின்றி இஸ்ரேல் விமானங்கள் நுழைகின்றன, இப்படியான நிலையில் ஈரானால் போரில் வெல்ல முடியாது அதனை மீறி வீம்பிற்கு போரில் தொடர்ந்து ஈடுபட்டால் தேவையற்ற மனித அழிவுகளே ஏற்படும், ஈரான் அணு ஆயுத முயற்சியினை கைவிட்டு சமாதானமாகவே செல்லும் என கருதுகிறேன். ஆனால் இஸ்ரேலால் தொடர்ச்சியாக 3 வாரத்திற்கு மேலாக வான் தாக்குதலில் ஈடுபட முடியாது தற்போது 30% சுழ்ற்சியினை விமானங்களிடையே செய்கிறது அதனை இவ்வாறு தொடரமுடியாது அல்லது அமெரிக்க இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்க வேண்டும் என கருதுகிறேன்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அமெரிக்கா போரில் இற்ங்கும் கூறுகிறார்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஜப்பானியர்கள் செய்த பாவமும் கொஞ்ச நஞ்சமல்ல. உலகில் போர்களை நடத்துவதற்கு கூறும் காரனிகளில் அணுகுண்டும் ஒன்று, இரஸ்சியா உக்கிரேன் நேட்டோவில் சேர்ந்தால் தனக்கு பாதுகாப்பில்லை என போரினை நடத்துகிறது அல்லவா? குருவை மிஞ்சிய சிஸ்சியனாகிவிட்டீர்கள், உங்கள் எழுத்துக்களை பார்ப்பதில் சந்தோசம்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1954 மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியினை கலைத்து சா மன்னராட்சியினை ஏற்படுத்திய அமெரிக்க மற்றும் பிரித்தானிய உளவுத்துறைகள் அதற்கான காரணமாக கூறப்பட்ட காரணம் எண்ணெய் வளத்தினை தேசியமயப்படுத்தல் என கூறப்படுகிறது, பின்னர் அந்த மன்னராட்சியினை கோமேனி கலைத்தார் அப்போது அந்த கோமேனிக்கு ஆதரவாக இருந்தவர் தற்போதுள்ள அலி கோமேனி, இவருடைய ஆட்சிக்கு இந்த ஆண்டு முடிவு வரலாம், அதனால் இதுவரை காலமும் அல்லலுறும் மக்களுக்கு ஒரு விடிவு ஏற்படலாம் (நடக்காமலும் போகலாம்), ஆனால் ஈராக் போல 1 மில்லியன் உயிரிழப்பு ஏற்படுமா எனத்தெரியவில்லை ஆனால் பல இலட்சம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என கருதுகிறேன். ஆனால்இதற்கு எண்ணெய் வளம் முக்கியமாக காரனமாக இருக்கலாம், 1975 இல் அமெரிக்க மற்றும் பிரித்தானிய உளவுத்துறைகளால் அவுஸ்ரேலிய பிரதமர் ஒருவரும் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டார், அதற்கு வளங்களை தேசிய மயப்படுத்தல் மற்றும் அவுஸ்ரேலிய ஒரு குடியுரிமை கொண்ட சுதந்திர நாடாக அதன் விருப்பின் படி செயற்பட வேண்டும் என விரும்பியிருந்தார் என வேறு சில காரணங்கள் உள்ளடங்கலாக.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானின் பக்கத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் ஈரானின் இஸ்ரேல் நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை தமது நாட்டுக்கு மேலாக செல்வதாக கூறி தாக்கியழிக்கிறார்களாம் ஆனால் அவர்களின் நாட்டிற்கு மேலாக செல்லும் இஸ்ரேல் தாக்குதல் விமானங்களை எதுவும் செய்வதில்லை, சிரியாவின் ஒரு பரந்த வெளியின் மேலாக சில மீற்றர் உயரத்தில் மிக தாழ்வாக இஸ்ரேல் போர் விமானம் பறந்து செல்கிற காணொளி ஒன்று இணையத்தில் பார்த்தேன். பக்கத்தில் உள்ள இஸ்லமிய நாடுகளே ஈரானுக்கு உதவவில்லை, ரஸ்சியாவினால் தற்போதய சூழ்நிலையில் ஆயுத உதவி செய்ய முடியுமா என தெரியவில்லை, சீனா ராடார் சாதனங்களை வழங்கியதாக செய்தி வந்திருந்தது, இந்த இரு நாடுகளும் ஈரானுடன் ஏதோ ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளன என கருதுகிறேன். தகவல் தொடர்பு உதவிகளை ஈரானால் பெறமுடிகிறது என கருதுகிறேன், இரண்டு காணொளிகளில் விமான எதிர்ப்பு ஏவுகனை பகுதியினை அண்டிய பகுதியில் ஏவுகணைத்தாக்குதல் நடந்ததை அக்காணொளியில் காண முடிகிறது. இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளையே சீனாவும் இரஸ்சியாவும் செய்யக்கூடும் என கருதுகிறேன். அத்துடன் இந்த போர் நீண்டகால அடிப்படையில் நிகழாது என கருதுகிறேன், இஸ்ரேல் தனது தாக்குதல் விமானங்களில் ஏறத்தாழ 50 விமானங்களை பயன்படுத்துகிறது, அதனடிப்படையில் மொத்தமாக உள்ள 280 விமானத்தில் 168 விமானங்களை பயன்படுத்துகிறது (40% ரிசர்வ் மற்றும் திருத்த மாற்றீடாக 112 விமானங்கள்) அதில் 50 விமானங்கள் எனும்போது 30% சுழற்சியினை பயன்படுத்துகிறது, இது இஸ்ரேல் ஈரான் தொடர்பான திட்டமிடல் மதிப்பீட்டினை காட்டுகிறது, அதாவது ஈரானின் பதில் தாக்குதல் அல்லது ஈரானை பலவீனம் பற்றிய முழுமையான புரிதல். இஸ்ரேல் தனது விமானப்படையில் 20 விமானங்களை இழந்தால் இஸ்ரேலின் தாக்குதல் அணியில் தாக்குதலை தொடரமுடியாமல் அழுத்தம் ஏற்படும், ஆனால் அவர்கள் ஈரானின் படை பலம் அல்லது அதற்கான மாற்றீட்டினை சரியாக கொண்டுள்ளதால் ஈரானால் எதுவும் செய்ய முடியவில்லை, ஆனால் தாக்குதலை 2 - 3 கிழமைக்கு மேல் தொடர முடியாது என கருதுகிறேன், இந்த போர் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட போராகவே இருக்கும் என கருதுகிறேன் அல்லது அமெரிக்கா களமிறங்கினால் நிலமை மாறலாம்.
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
யார் இப்ப பூனைக்கு மணியைக்கட்டுவது (போட்டியினை நடத்துவது)?
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இறப்பது பொதுமக்கள்தான். நிச்சயமாக 3 ஆம் உலக போர் நிகழாது என கருதுகிறேன், தோற்கும் அணியினை (ஈரானை) எவரும் ஆதரிக்கமாட்டார்கள் ஆனால் ஈரானில் ஏற்பட போகும் மனித பேரழிவினை உலகம் வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்கும், இந்த அழிவிற்கு ஈரானிற்கு அருகில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளும் உடந்தையாக இருக்கும்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானின் ஏவுகனைத்தாக்குதல் எருமளவில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது ஈரானின் மேல் இஸ்ரேல் தங்குதடையின்றி நிகழ்த்தும் விமானத்தாக்குதலில் ஈரானின் ஏவுகணை செலுத்திகள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது அதே சிலர் ஈரான் நீண்ட கால நோக்கில் எதிர்வரும் காலத்திற்காக தனது ஏவுகணைகளை சேமித்து வைப்பதற்காக ஏவுகணைதாக்குதலை மட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது, ஆனால் முதலாவது காரணம் என கருதுகிறேன். இன்னொரு விடயமும் சுட்டிக்காட்டுகிறார்கள் இஸ்ரேலினால் தொடர்ச்சியாக விமானத்தாக்குதலை தொடரமுடியாது என அதற்கு காரணமாக மனித வலு கூறப்படுகிறது, பொதுவாக ஜெட் விமானிகளுக்கு போதுமான ஓய்வழிக்காவிட்டால் அது பேரழிவினை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது அத்துடன் பராமரிப்பு அணியும் தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கலாம் என கூறுகிறார்கள், குறிப்பாக நிமிற்ஸ் போர்க்கப்பல் எதிர் வரும் ஆண்டிலிருந்து பணி நீக்கம் பெறவுள்ள விமானந்தாங்கி கப்பலை போர் பகுதிக்கு அனுப்பியிருப்பதன் மூலம் ஒர் எதிர்த்தாக்குதலை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட முடிவாக இருக்கலாம். அனைத்து அழிவு போர்களும் சமாதானத்தின் பெயரால் நடத்தப்படுகிறது.
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
போட்டியில் கலந்து கொள்ள தயார், துணிச்சலிருந்தால் யாராவது இந்த போட்டியினை நடத்தலாம் (செம்பாட்டான்).🤣 போட்டியில் கலந்து கொண்டால் அனைவரும் ஆர்வமாக பார்ப்பார்கள், அதனால் போட்டியினை ஆரம்பித்து வைத்தால் நன்றாக இருக்கும்.
-
வளர்கலை: வயலின்(Violin) – பிடில்(Fiddle)
கலை என்ற தமிழ் சொல் சமஸ்கிரதத்தில் உள்ள கலா எனும் சொல்லில் இருந்து தோன்றியதாக கூறுவார்கள், கலா என்பதற்கு வளர்ச்சி எனும் பொருள்படலாவதாலேயே கலை எனும் சொல் வந்ததாக கேள்விப்பட்டேன், பாரதியார் வளர்கலை என இரண்டையும் வேறுபடுத்தியுள்ளார்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மன்னிக்கவும் முன்னர் கூறியது போல குட்டிப்பையன் 64 கிலோ. குண்டு மனிதன் 6.2 கிலோ எடை என கூறப்படுகிறது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
தவறான கருத்தினை பதிந்து விட்டேன் கீரோசீமாவில் வீசப்பட்ட அணுகுண்டு 15 கிலோ 350000 மக்களை சனத்தொகை கொண்ட நகரில் இக்குண்டு வீசப்பட்ட போது 200000 இற்கும் அதிகமான உயிரழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். நாகசாகாவில் வீசப்பட்ட அணுகுண்டு புளுட்டோனியம் வகையினை சேர்ந்த குண்டு பையந்தான் 64 கிலோ எடை கொண்டது 240000 சனத்தொகை கொண்ட இந்த நகரத்தில் 140000 இற்கும் அதிகமான உயிரழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இராணுவ மற்றும் அரச உயர்பீடங்கள் இருந்த போதும் இந்த இரு நகரங்களும் தேர்வு செய்யப்பட்டமைக்கான காரணமாக கூறப்படுவதற்கான காரணம் குறித்த ஆண்டில் இரண்டு நாளில் டோக்கியோவில் நடத்தப்பட்ட எரிகுண்டுத்தாக்குதலில் டோக்கியோ பெரும் சேதத்திற்குள்ளாகி இருந்தது அத்துடன் 100000 மக்களும் கொல்லப்பட்டிருந்தனர், இந்த நிலையில் ஏற்கனவே பாதிப்பில்லாத நகரில் இரு வேறுபட்ட இரக குண்டுகளை சோதனை முயற்சியாக இந்த அணுகுண்டு தாக்குதல் 3 நாள்கள் இடைவெளியில் நிகழ்த்தப்பட்டது. இந்த சோதனை முயற்சியின் படி பார்த்தால் யுரேனிய அணுகுண்டு அதிக அழிவு ஏற்படுத்தும் என கருதுகிறேன்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உண்மை எனவே கூறப்படுகிறது, IAEA கருத்தின்படி ஈரானிடம் கிட்டத்தட்ட 400 கிலோ 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது இதனடிப்படையில் சில மாதங்களுக்குள்ளாகவே அணுவாயுதத்தினை தயாரிக்க முடியும் (ஈரானிடம் அதற்கான வசதிகள் மற்றும் தொழில்னுட்பம் இருந்தால்) என கருதுகிறேன். இது கீரோசீமாவில் வீசப்பட்ட குட்டிப்பையனை போன்ற 6 - 7 அணுகுண்டுகளை தயாரிக்கலாம் என கருதுகிறேன்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மேல் அணுஆயுத தாக்குதல் நடைபெறலாம் என பரவலாக கூறுகிறார்கள், ஆனால் அது ஈரானின் எண்ணெய் வளத்தினை பாதிக்கும் என்பதால் அணுவாயுத தாக்குதல் நடத்தப்படுமா என்பதில் சந்தேகமாகவே உள்ளது. அணு ஆயுதத்தினை எடுத்து சென்று தாக்ககூடிய வல்லமை கொண்ட ஒரு கலமாக இதனை கூறுகிறார்கள்.
-
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை
நியுசிலாந்து அரசிடமிருந்தே 2 மில்லியனை ஆட்டையபோட்டவர்கள்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மொசாட் ஈரானின் ராடார் செயற்பாட்டினை முற்றாக அழித்த பின்னர் இஸ்ரேல் தற்போது இஸ்ரேல் வான் மேலாதிக்கத்தினை கொண்டுள்ள நிலையில் சீனா ஈரானிற்கு ராடர் சாதனங்களை வழங்குவதாக தமிழ் பொக்கிசம் விக்கி ஒரு காணொளியில் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் இந்தியாவிற்கு கார்கில் போரில் ஆயுத அழித்ததாகவும் அந்த காணொளியில் குறிப்பிடுகிறார், இந்த போரில் இந்தியா இஸ்ரேலும் ஈரானும் சமாதானமாக பேச்சு மூலம் தீர்க்க வலியுறுத்துவதாக கூறுகிறார் ஆனால் இந்த போரில் இந்தியா இஸ்ரேல் ஆதரவு நிலை எடுப்பதற்கே வாய்ப்புண்டு அண்மைய இந்திய பாகிஸ்தான் போரில் சீன ஆயுத உதவி இந்தியாவிற்கெதிராக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இந்தியா தோற்கடிக்கப்பட்ட நிலையில் இந்தியா இஸ்ரேல் ஆதரவு நிலை எடுக்க அதிக வாய்ப்புண்டு. இந்த போர் ஏற்கன்வே பொருளாதார நெருக்கடியில் உள்ள உலக நாடுகளை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும். இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இந்த போர் ஒரு அவசியமான ஒன்றாக இருப்பதால் இந்த போர் மேலும் தீவிரமாகலாம்.
-
டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்!
எப்படி இருந்த அம்மையார்! முன்னர் கார்ட்டூன் வையும் மதன் என்பவர் ஒரு சித்திரத்தில் ராஜீவ் காந்தி முகத்தினை இந்திய வரைபடத்தில் போட்டு அதனில் உள்ள ஒவ்வொரு மானிலங்களை வெடிப்பு போல கோடுகளால் காட்டி ராஜீவ் தோற்றால் இந்தியா துண்டு துண்டாகிவிடும் என்பது போல போட்டிருந்தார். இப்போது காங்கிரஸை விட அதிக தேசியம் பேசும் தீவிர மதவாத வலதுசாரி கட்சியான பி ஜெ பி அந்த இடத்தினை எடுத்துவிட்டது. நலம்பெற்று மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றவேண்டும்.
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
தரம் குறைந்த காணொளிகளின் அடிப்படையில் வைக்கப்படும் கருத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினரை பாதிக்கும், மக்களும் ஊடகங்களும் முழுமையான விசாரணை முடியுமட்டும் பொறுமை காக்கவேண்டும்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
3 ஆம் நாள் வெய்யில் உள்ளதால் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு உதவும், இந்த ஆடுகளம் முதல் இரு நாளும் மேக மூட்டமாகவும் மெதுவாகவும் இருந்ததால் வழமையான நேர்கோட்டில் விளையாடும் துடுப்பாட்டம் சிக்கலாக இருக்கும், ஆனால் மூன்றாம் நாள் மேக மூட்டம் இல்லாவிட்டால் காற்றில் பந்து சுவிங் ஆகாது அத்துடன் ஆடுகளம் காய்ந்து கடினமானால் பந்து மட்டைக்கு இலகுவாக வரும் அதனால் விளையாடுவதற்கு இலகுவாக இருக்கும் என பொதுவாக கூறப்படுகிறது. தென்னாபிரிக்கா வெல்லுமா? எனது அபிப்பிராயப்படி துடுப்பாட்டத்திற்கு ஒப்பீட்டளவில் இலகுவான நாளாக மூன்றாவது நாள் இருக்கின்ற போதும் தென்னாபிரிக்கா வெல்வதற்கான சாத்தியகூறு மிக மிக குறைவாகவே உள்ளதாக கருதுகிறேன். கேசல்வூட் பந்தின் கட்டினை சிறப்பாக பயன்படுத்தும் பந்து வீச்சாளர், இந்த மூன்றாம் நாள் இயல்பாகவே அவருடைய நாளாக இருக்கும், கடுமையான ஆடுகளத்தில் அவர் எதிர்பார்க்கும் பந்தின் செயற்பாட்டினை அவரினால் இலகுவாக செய்ய முடியும். லயன் பந்துவீச்சுக்கு மூன்றாம் நாள் சிறப்பாக இருக்கும். பந்தில் சுவிங் இற்கு ஏற்ற நிலை மூன்றாம் நாள் இல்லாவிட்டாலும் அவுஸ்ரேலிய பந்து வீச்சாளர்கள் லோர்ட்ஸ் மைதானத்திற்குரிய (வேறு எந்த மைதானமும் இப்படி இல்லை என கருதுகிறேன்) சரிவினை வைத்து கிரீசினை பயன்படுத்தி பந்து வீசும் போது ஏற்படும் கோணங்களுடன் பந்தின் கட்டை சிறப்பாக பயன்படுத்தி அதன் லைனை கட்டுப்படுத்தி மட்டையின் உள்ளேயும் வெளியேயும் பந்தினை கட்டுப்படுத்துவார்கள் குறிப்பாக கேசல்வூட். அவுஸ்ரேலியாவின் களத்தடுப்பு எப்போதும் தாக்குதல் முறையானது, எல்லைக்கோட்டிற்கு களத்தடுப்பாளர்களை வைத்து பாதுகாப்பாக விளையாடமாட்டார்கள், அதிக பட்சம் ஒரு வீரரை மட்டும் எல்லை கோட்டில் நிறுத்தி வைத்து துடுப்பாட்டக்காரர்களை அடித்தாட தூண்டுவார்கள், மூன்றாம் நாளாக இருந்தாலும் ஆடுகளத்தின் தன்மை இந்த அடித்தாடும் ஆட்டத்திற்கு ஏற்றதல்ல ஆனால் மிக நெருக்கமான களத்தடுப்பு துடுப்பாட்டக்காரர்களை தவறிழைக்க வைக்கும். இந்த அவுஸ்ரேலிய (அனுபவமிக்க) பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு 200 மேலான ஓட்டத்தினை எடுக்க தென்னாபிரிக்க அணியினால் முடியாது என நான் கருதுகிறேன். இந்த இனிங்ஸில் ஸ்ராக்கின ஆரம்ப ஓவர்களில் நிதானமாக விளையாடினால் (அவரது லேட் சுவிங்) பின்னர் பெரிதாக ரிவர்ஸ் சுவிங் இருக்கும் என கருதவில்லை ஆனால் கமின்ஸ், லயன், குறிப்பாக கேசல்வூட் மிக ஆபத்தான பந்து வீச்சாளர்கள். தென்னாப்ரிக்கா முதல் 40 ஓவர்களை ஒன்று அல்லது இரண்டு விக்கெட் மட்டும் இழந்து தாக்குபிடித்தால் (பந்து மென்மையான பின் ஓட்டங்களை இலகுவாக பெறமுடியும்) வெல்வதற்கான வாய்ப்புண்டு, ஆனால் ஆரம்ப ஓவர்களில் அடித்தாட முற்பட்டு விக்கெட்டுக்களை இழந்தால் தோல்வி நிச்சயம்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
பொதுவாக 2ஆம் நாள் இலகுவாகவும் 3 ஆம் நாள் ஒப்பீட்டளவில் ஓரளவு இலகுவாகவும் அதன் பின்னர் நிலமை கடினமாகவும் மாறிவிடும், அதனால் 2 ஆம் நாளின் பெரும்பகுதியினை தென்னாபிரிக்கா முழுமையாக விளையாடினால் தென்னாபிரிக்கா வெல்ல வாய்ப்பு நிறைய உள்ளது, 2 ஆம் நாளும் மேக மூட்டமாக இருந்தால் தென்னாபிரிக்காவின் நிலை கடினமாகிவிடும், ஆனால் தற்போது கூட தென்னாபிரிக்கா நிலை கடினமாகவே உள்ளது, வெற்றி வாய்ப்பு மிக குறைவாக உள்ளது.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
மேக மூட்டமாக இருந்தமையாலா தென்னாபிரிக்கா பந்து வீச்சை தெரிவு செய்த்தது? வேலை கடுமையாக இருந்தமையால் இடையில் ஒரு சிறிது நேரம் மட்டுமே பார்க்கமுடிந்தது, இரண்டாம் நாள் தேனீர் இடைவேளை வரையாவது தென்னாபிரிக்க துடுப்பாடாவிட்டால் போட்டியில் இலகுவாக தோற்றுவிடும். இந்த ஆடுகளத்தில் உள்ள ஈரலிப்பு காயும் போது சமச்சீரற்று காயும் போது பந்து வெவ்வேறு உயரத்தில் எழுந்து வரும், பொதுவாக முதலாவது இனிங்ஸ் கடினமாக இருந்தாலும் முதல் துடுப்பாடவே விரும்புவர் ஏனெனில் 4 ஆவது இனிங்ஸ் மிகவும் கடினமாகிவிடும்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
அவுஸ்ரேலிய அணியில் 3ஆவதாக விளையாடிவரும் மானஸ் லபுசேங் மோசமான போர்மில் இருந்து வருவதால் அணியில் அவரின் நிலை தொடர்பில் நெருக்கடிகள் அவருக்குள்ள நிலையில் இந்த போட்டியில் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக (2ஆவதாக) களமிறங்க உள்ளார். யாரும் இவரை அதிக ஓட்டம் எடுப்பவர் எனும் விசப்பரீட்சையில் இதுவரை இறங்கவில்லை என தெரிகிறது, இந்த போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்து பலரிற்க்கும் முட்டைகளை வழங்க வாழ்த்துக்கள். வழமையாக இங்கிலாந்து ஆடுகளம் அவுஸ்ரேலிய ஆடுகளம் போல இருக்காது பந்து அதிகமாக சுவிங் ஆகும் ஆடுகளம் அத்துடன் டூக் பந்தும் அதிகம் சீம் மற்றும் சுவிங் அதிகம் உள்ள இந்த ஆடுகளத்தில் தாமதித்து விளையாடவேண்டும் என கூறுவார்கள், இந்த ஆடுகளத்தில் தென்னாபிரிக்காவினை விட அவுஸ்ரேலியாவிற்கு அதிக அனுபவம் உண்டு, கடந்த காலத்தில் இங்கு அவுஸ்ரேலியா பல வெற்றிகளை குவித்துள்ளது. போட்டியில் கலந்து கொள்ளாதவர்கள் உடனடியாக கலந்து கொள்ளவும், போட்டி முடிவு நேரம் நெருங்கி கொண்டுள்ளது.