Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. மைதான ஈரலிப்பினால் பந்து வீச்சாளர்களுக்கு சிரமமாக இருக்கும் பந்து ஸ்கிட்டாகி மட்டைக்கு இலகுவாக வரும் என நினைத்தேன், ஆடுகளம் பெரிதாக மெதுவாக இராது என்பதால் முதல் துடுப்பாட்டம் பாதகம் இராது என எண்ணியிருக்கலாம் பந்து வீச்சாளர்களுக்குத்தான் பந்தினை பிடிப்பதற்கு கடினமாக இருந்திருக்கும் ஆனால் சுழல் பந்து வீச்சு ஒரு ஓவர் மட்டுமே போடப்பட்டதால் அதுவும் ஓரளவு நிவர்த்தியாகிவிட்டது ஆனால் தோற்றிருந்தால் பாண்டியாவினை வைச்சு செய்திருப்பார்கள். குஜராத்தின் தோல்விக்கு பட்லரின் இழப்பும் மென்டிஸின் களத்தடுப்பும் காரணமாகிவிட்டது, மென்டிஸினை சுந்தருக்கு பின்னால் இறக்கியிருக்கலாம். பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு செல்லும் என கருதுகிறேன்.
  2. எனது நண்பர் (அவரரது ஊர் தெரியாது) ஒருவர் வெளிநாடு வந்த போது அதே இளம் வயதொத்த ஒருவர் "கொப்பர் என்ன கமமோ" என கேட்டார், அவரை (கேட்டவரை) பின்னர் கமம் என அழைப்பதுண்டு🤣.
  3. இன்றும் ஆரம்ப ஓவர்களில் சாய் சுதர்சனுக்கு அதே செட்டப் செய்தார்கள் அதே களத்தடுப்பாளர் (பாண்டியா) ஆனால் அன்று நடந்தது போல நிகழவில்லை.
  4. எனக்கும் அதே எண்ணம் இருந்தது🤣, அத்துடன் சென்னை அணிக்கு அடுத்த தெரிவாக தமிழ்நாட்டு வீரர்கள் அதிகம் விளையாடும் அணியான குஜராத் உள்ளது. கவனிக்கவில்லை தவறாக பதிந்திருந்தேன் ஆனால் நீங்கள் கவனித்துள்ளீர்கள், ஆனால் மும்பாய் முதல் துடுப்பாட்டம் தெரிவு செய்துள்ளது ஆச்சரியம்தான், அல்லது நீங்கள் கலாய்பதனை போல பாண்டியா யாழை பார்க்கிறாரோ?🤣
  5. வீராட் கோலியின் தற்போதய பிடித்த பாடல்.
  6. இன்றைய போட்டியில் மும்பை அணி பெயரளவில் பலமான அணியாக இருந்தாலும் குஜராத் அணி வெல்லும் என கருதுகிறேன் . மும்பை அணி வெல்லும் என கருதுபவர்கள் மும்பை எனவும் குஜராத் அணி வெல்லும் என கருதுபவர்கள் குஜராத் எனவும் குறிப்பிடவும், பெரும்ப்பான்மையானோர் இந்த் போட்டியில் இரு அணியினை தெரிவு செய்யாதமையால் இந்த முயற்சி. அந்த 5 நபர்கள் விதிவிலக்கு ஆனாலும் மும்பை வெல்லும் என குறிப்பிட்டு மும்பையினை வாக்குகாளால் ஆவது வெல்ல வைக்கலாம். உறுதியாக மும்பாய்க்கு 5 வாக்குகள்தான் கிடைக்கும்.🤣 எனது வாக்கு குஜராத்திற்கே! GT 1 VS MI 0 தற்போது குஜராத் முண்ணனியில் உள்ளது.😂
  7. இன்றைய மும்பை, குஜராத் போட்டியில் மும்பை அணிக்காக ரிக்கில்ட்டனின் இடத்திற்கு ஜொனி பரிஸ்டோ களமிறங்குவார், ஜாக்கின் இடத்திற்கு அசல்ங்கா அல்லது ஜாக்கோப் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குஜராத்திற்காக குசால் மென்டிஸ் களமிறங்குவார் என கூறப்படுகிறது. இந்த ஆடுகளம் ஒரு பக்கம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக புற்களுடன் காணப்படுவதாமாகவும் மறுபக்கம் புற்கள் அற்று சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக காணப்படுகிறது என கூறப்படுகிறது ஆனால் துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமாக ஸ்குயார் எல்லைக்கோடுகள் 62 மற்றும் 65 மிட்டர்கள் மட்டும் கொண்டவையாக காணப்படுவதால் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக காணப்படும். பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை எடுப்பதன் மூலம் ஓட்டங்கலை மட்டுப்படுத்துவதற்கு ஏற்ப ஆடுகளம் காணப்பட்டாலும் பக்க எல்லைகள் குறுகலாக இருப்பது பாதகமாக இருக்கலாம். பந்து வீச்சாளர்கள் பந்தினை விக்கெட்டு டு விக்கெட் என போட முயல்வதுடன் துடுப்பாட்டக்காரர்களை நேர் கோட்டாக விளையாடாமல் குறுக்காக விளையாட வைக்கவும் உள்ளே இருந்து வெளியே அடிக்க கால் உள்ளடங்கலாக உடலின் கீழ் பகுதிகளை குறிவைத்து பந்து வீசுவார்கள், குறிப்பாக சரியான அளவிற்கு சற்று குறைவாக (Back of length) பந்து வீச முயற்சிப்பார்கள். ஆனால் அளவு குறைந்த பந்துகளின் (short ball) தாக்கம் குறைவாக இருக்கும். மைதான ஈரலிப்பு காணப்படும் என்பதால் நாணய சுழற்சி முக்கியம் பெறும், நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என கருதுகிறேன். இந்த மைதான மற்றும் ஆடுகள நிலவரங்களின் அடிப்படையில் 180 - 190 வெற்றிக்குரிய ஓட்டங்களாக இருக்கும் என கருதுகிறேன். இறுதிப்போட்டியில் தீபக் சாகர் மற்றும் திலக் வர்மா தசைப்பிடிப்பு காரணமாக ஆடுகளத்திலிருந்து வெளியேறி இருந்தார்கள் என கருதுகிறேன், இவர்களில் யாராவது ஒருவர் இன்று காயம் காரணமாக விளையாட முடியாமல் போனால் இன்னுமொரு புதிய வீரர் களமிறங்குவார்கள், இவ்வாறு புதிய வீரார்க்கள் வாழ்வா சாவா போட்டிகளில் பெருமளவில் களமிறங்கும் அணி பலவீனமாக காணப்படும்,
  8. இது உள் நாட்டு உற்பத்தியினை கணிப்பதாகும், பொதுத்துறையின் கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கணிப்பீட்டிற்கும் எந்த தொடர்புமில்லை, உதாரணமாக உங்கள் வீட்டுக்கடன் 1 மில்லியன் என வைத்துக்கொள்வோம் உங்கள் ஆண்டு வருமானம் ஒரு இலட்சம் என கொண்டால் உங்கள் ஆண்டிறுதி வருமான வரி கட்டும் போது நீங்கள் எனது வருமானாம் 1,000,000 - 100,000 = - 900,000 அதனால் வருமான வரி கட்டமுடியாது என கூற முடியாதல்லவா? அமெரிக்க பொருளாதாரம் ஒரு உறுதியற்ற பொருளாதாரம் என நீங்கள் கூறுவதற்காக இந்த கடனையும் உள்ளடக்குகின்றீர்கள் அமெரிக்க உள்நாட்டு வருமானம் சரியாகநினைவில்லை 27 டிரில்லியன் ஆனால் அமெரிக்க கடன் 36 டிரில்லியன் என நினைக்கிறேன் அதனால் அமெரிக்க வருமானம் மறை இலக்கத்தில் உள்ளது என கூறுக்ன்றீர்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்கும்போது இந்த கடன் ஒரு பொருட்டாக இருக்காது, இதனை மையமாக வைத்தே ட்ரம்ப் தனது நகர்வுகளை செய்கிறார் (நான் ட்ரப் ஆதரவாளன் அல்ல),
  9. நீங்கள் இந்த அணிகளை இறுதிப்போட்டியில் தெரிவு செய்துள்ளீர்கள் போல் உள்ளது சரியான தெரிவுதான், சில வேளை பெங்களூர் தென்னாபிரிக்கா போல் இறுதிப்போட்டியில் சொதப்பினால்?
  10. குற்று இல்லை, கொமா 12,614. தவறாக பதியப்பட்டுவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் கணிக்கப்படுவதில்லை.
  11. அதுதான் எனக்கும் விளங்கவில்லை, எனது பதிலுக்கு நேர்மாறாக எழுந்துங்கள் என கூறியிருந்தேன் பல தடவை எதிர் எதிர் அணியில் இருந்தும் கடைசியாக இப்படி பக்கத்தில் பக்கதில் வந்துள்ளோம்? அடுத்த ஐ பி எல் இல் ஓரளவு புரிந்துணர்வு இருக்கும் என கருதுகிறேன், போட்டியில் கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கலந்து கொண்டேன் எங்கு வந்தாலும் சந்தோசம், ஆனால் எதிர்பார்த்தது கடைசியாக வரக்கூடும் என ஆனால் இன்னமும் போட்டி முடியவில்லை, அதனால் எதுவும் நிகழலாம், பையன் வேறு கூறினார் போட்டியின் முடிவில் பாருங்கள் எங்குள்ளேன் என அது போல இப்போது இருக்கும் நிலை தடாலடியாக சரியுமோ தெரியவில்லை?
  12. https://tradingeconomics.com/china/gdp இந்த தளத்தில் 2024 இற்கான GDP 18.2 என குறிப்பிடப்பட்டுள்ளது.
  13. இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் டூக் பந்து பாவிக்கின்றது இது குக்கபாரா பிங்க் பந்தினை விட அதிக விசம் கொண்டது, இந்தியணியிற்கு பந்தும் ஆடுகளமும் உயிர்ப்புடன் இருந்தால் தலைவலியாக இருக்கும் இந்த மாதிரியான சூழ்நிலையில் ராகுல் போன்ற ஆட்டக்காரர்கள் சிறப்பான தேர்வு சாய் சுதர்சனும் நல்ல தெரிவாக இருக்கும் என கருதுகிறேன், நமது கில் கூட இந்த சூழலுக்கு மிகவும் சிரமப்படுவார் (பிச்சை வேண்டாம் நாயை பிடி). ஏற்கனவே பாகிஸ்தானுடனான போரில் ஏற்பட்ட தோல்விக்கு பாவம் எனது இந்திய நண்பர்கள் கடும் ஆற்றாமையில் இல்லாத பொல்லாதது எல்லாம் சொல்லி பைத்தியகாரர் போல் அலைகிறார்கள், இந்த தோல்வியினை (விளையாட்டில் கூட தோற்க விரும்பாத) எப்படி எதிர்கொள்ளப்போகிறார்களோ? கடவுள்தான் ஏதாவது அதிசயம் நிகழ்த்தி இந்தியணி வெல்ல வைத்து என்னை காப்பாற்ற வேண்டும்.☹️
  14. சீனாவின் கடந்த ஆண்டிற்குரிய மொத்த தேசிய உற்பத்தி 18.2 (2024)டிரில்லியன் கொண்டுள்ளது. 17.79 டிரில்லியன் 2023 ஆண்டிற்கான மொத்த தேசிய உற்பத்தி உள்ளது எனகருதுகிறேன், சீனாவின் இந்த ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி விகிதம் 5% ஆக வரலாம் என கருதப்படுகிறது. அவ்வாறாயின் மொத்த தேசிய உற்பத்தி 19.11 டிரில்லியனாக வர வாய்ப்புள்ளது. 2023 சீனாவின் தனிநபர் வருமானம் 12.614 அமெரிக்க டொலராகவும் இந்தியாவின் தனிநபர் வருமானம் (GDP Capita) 2480 அமெரிக்க டொலராக உள்ளது.
  15. @வீரப் பையன்26, @செம்பாட்டான் இந்த திரியில் ஈ ஓடுகின்றது. @ஈழப்பிரியன்
  16. முகாம்கள் என பார்க்கும் போது பெரும்பாலும் பெரிய முகாமான மண்டப முகாமின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது, ஆனால் பல முகாம்கள் எந்தவித அடிப்படை வசதிகள் அற்றநிலையில் இருக்கின்றது, அதே போலவே பாத்திரிகையில் வரும் முகாம் மக்களின் அவலங்கள் என படித்த மானவர்களின் பிரச்சினையினை முகாம் மக்களின் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது, அந்த ஒரு பகுதியினர் யாழ் அடிமட்ட மக்களின் பிரச்சினையினையே எடுத்து சொல்லப்படுகிறது. ஆனால் நான் கூறிய மலையக பின்னணி கொண்ட மக்களின் முகாம் வாழ்க்கை மிக மோசம். அவர்களின் வாழ்க்கை முகாம்களில் மிக மோசமாக இருந்தாலும் அவர்கள் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் அவர்களின் நிலை ஒப்ப்பீட்டளவில் நன்றாக இருந்தாலும் அவர்களை சமூக அமைப்பில் மனிதர்களாக பார்க்கும் நிலைக்கு வெளியே வைத்திருந்தோம், அதனால் எந்த வித அடையாளமற்ற ஆனால் கடினமான சூழ்நிலை கொண்ட முகாம் வாழ்க்கை அவர்களுக்கு ஒரு மாற்றமாக இருக்கின்றது. ஐலன்ட் கூறிய கருத்து எனக்கும் பிடிந்திருந்தது அதன் பின்னணியிலேயே. அவர்களை முகாமிற்கு வெளியே எடுத்து மீண்டும் அதே சேற்றுக்குள் தள்ளுவதனை விட அதே நிலையில் அவர்கள் தம்மை தாமே மேம்படுத்தலாம். நான் கூறிய கல்வி என்பது இந்த சமூகத்தின் மாற்றம் தொடர்பான சுய புரிதலுக்கான ஒன்று, அது பிகொம், எம்கொம் அல்லது வேறு துறைசார் கல்வியினை குறிப்பிட்டல்ல. இந்த புரிதல் யாழ் அடிப்படைவாத பின்னணி கொண்ட எனக்கு முகாம் வாழ்க்கை அனுபவ பாடமாக இருந்தது. அவர்களின் பிரச்சினையினை விளக்கமாக குறிப்பிடாமல் மேலோட்டமாக கூறியுள்ளேன்.
  17. ஆடுகளத்தின் தன்மை அப்படி (Soft red soil - sticky wicket), புதிய பந்து மட்டைக்கு இலகுவாக வரும் (Timing and predict bounce) அத்துடன் மின்னொளியில் பந்து மட்டைக்கு வருவதும் ஒப்பீட்டளவில் இலகுவாக இருக்கும். மழை வந்து மைதானம் ஈரமானால் பந்தும் அந்த ஈரப்பதத்தில் வழுக்கி வரும். அதனாலேயே பவர்பிளேயில் ஓட்டங்களை குவித்தால் பின்னர் இலகுவாக இருக்கும் என அடித்தாட முற்பட்டனர். Timing - பந்து வருவதற்கு முன்னரே அடிப்பது போன்றது அல்லது மெதுவான பந்தை வேகமான பந்தினை அடிப்பது போல அடிப்பது.
  18. தோனியிடம் ஒரு உள்ளுணர்வு உண்டு என ராயுடு ஒரு பேட்டியில் கூறியுள்ளார், மும்பாய் அணி போட்டிக்கு முன்னராக போட்டி பற்றிய திட்டமிட்டு போட்டிக்கு வருவார்கள். நேற்று மும்பாய் டெல்லி போட்டியில் ராகுலுக்கு Deep backward point, Deep square leg களத்தடுப்பும் (இது பொதுவான களத்தடுப்பு முறை) ஆனால் டூப்பிளசிஸ் வந்தவுடன் டீப் பொயின்றில் இருந்த களத்தடுப்பை எடுத்து விட்டு லோங் ஓன் இல் களத்தடுப்பை எல்லைக்கோட்டிற்கு சிறுது முன்னாக வைத்து மெதுவான பந்தினை கால்காப்பிற்கு வீசி அவுட்டாக்கினார்கள். டூப்பிளசியின் open stand இல் பின் காலில் சென்று விளையாடுவதனை வைத்து அப்படி ஒரு களத்தடுப்பு வைத்தார்கள், இதுவழமைக்கு மாறான ஒன்று. தோனி ஆடுகளத்திலேயே சூழ்நிலைக்கேற்ப திட்டமிடுபவராம்.
  19. பையன், யாரோ ஜக்கம்மாவாம், அவரையும் அடுத்த யாழ்கள கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளசொல்லுங்கள், பார்ப்போம் கிளிஜோசியமா அல்லது ஜக்கம்மாவா வெல்கிறார்கள் என.
  20. பந்து நின்று ஆடுகளத்தில் (நேற்றைய போட்டி ஆடுகளம்) பந்து புதிதாக இருக்கும் போது விளையாடுவது இலகுவாக இருக்கும் ஆனாலும் சீம் மற்றும் சுவிங் காணப்படும். பந்து பழையதாக பந்தில் உராய்வ் ஏற்பட்டு பந்தின் மேற்புறம் வழு வழுப்பாக இல்லாமல் ஒரு மாதிரியான தும்பு மாதிரி (உதாரணத்திற்காக கூறப்படுவது தும்பல்ல) ஏற்பட்டு ஆடுகளத்தில் மேலும் மெதுவாக வரும், ஒரு பசையில் ஒட்டி வருவது போல (sticky pitch). மழை அல்லது மைதான ஈரப்பதன் (பனிப்பொழிவு) பந்தினை மீண்டும் வழு வழுப்பாக்கிவிடும், பந்து நின்று வராது, இலகுவாக மட்டைக்கு வரும், அதனால் நேற்றைய போட்டியில் இடையிடையே பெய்த மழை துடுப்பாட்டக்காரர்களுக்கு உதவியது.
  21. பையன் ஆரம்பத்திலேயே சொன்னார் போட்டியின் முடிவில் பாருங்கள் என, கிட்டதட்ட அதுதான் நடக்கும் போலுள்ளது.🤣 லக்னோ அணியின் சுழல் பன்ட்கு வீச்சாளர் போட்டித்தடை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது, இண்ரைய போட்டியில் விளையாட முடியாது. டிக்வேஸ் ராட்டி.
  22. இந்தியாவில் முகாமிற்கு வெளியே இருப்பவர்கள் மிக செல்வந்த செழிப்புடன் வாழ்பவர்கள் இவர்கள் வெளிநாட்டு பணத்தில் வசதியாக வாழ்ந்தவர்கள் போர் முடிவுடன் பெரும்பான்மையானோர் வெளிநாடுகளிலும் ஒரு பகுதியினர் இலங்கைலும் இன்னொரு பகுதியினர் இன்றும் அங்கு வாழ்கிறார்கள். முகாமில் வாழ்பவர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கும், பல சமூக பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சமூகமாக இருக்கிறார்கள் இவர்கள் வன்னி மற்றும் மன்னார் பகுதிகளை சார்ந்த மலையக பின் புலம் கொண்ட மக்கள். குழந்தைகளின் கல்வி தொடர்பில் சரியான புரிதலில்லாதவர்களாகவும் மதுவினால் ஏற்படும் தாக்கம், குடும்ப வன்முறை என மிகவும் சிரமத்தினை எதிர்கொள்ளும் மக்கள். புலம்பெயர் தமிழ் மக்களின் உதவி இவர்களை எட்டுவதில்லை, உடல் உழைப்பு சார்ந்த கூலி வேலைகளை (நானும் அந்த வேலைகளுக்கு செல்வேன் வெளிநாட்டில் இருக்கும் எனது சகோதரன் அனுப்பிய காசைக்கூட பயன்படுத்தவில்லை அது முகாமிற்கு வெளியே இருந்த உறவினரிடம் இருந்தது) செய்பவர்களாக இருக்கிறார்கள், குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளே அனைத்து பிரச்சினைக்கு அடிப்படையாக இருப்பதால் அதனை பற்றி கதைத்தால் உடல் வலிக்காக (கூலி வேலை செய்வதால்) குடிப்பதாக சாட்டு கூறுவார்கள். இவர்களில் சிலர் எமது பகுதிகளில் துப்பரவு தொழிலாளர்களாக இலங்கையில் முன்னர் இருந்துள்ளார்கள் அதனால் அவர்கள் எமது சமூகத்தினரால் நடத்தப்பட்ட விடயங்கள் பற்றி கூறுவார்கள். குழந்தைகளுக்கான கல்வி உதவி, மற்றும் கூலித்தொழில் தொடர்ந்து நசுங்கி போகாமால் சுயமுயற்சிகளுக்கு உதவினாலும் ஒரு வட்டம் போல மீண்டும் வந்து ஆரம்ப புள்ளியிலேயே நிற்பார்கள், இந்தியாவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட மதம் இந்து மத பின்னணி கொண்ட இந்த மக்களின் சுய முயற்சிக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தந்து பெரும் உதவி செய்தார்கள் (அவர்களின் உள்ளூர் செல்வாக்கு மூலம்). கிடைக்கும் வருமானத்தினை அடுத்த சந்ததியின் எதிர்காலத்திற்காக முதலிடாவிட்டால் அந்த மக்களின் வாழ்க்கை மாறாது.
  23. கொஞ்சகாலத்திற்கு முன்னர் எடுத்ததிற்கெல்லாம் புறக்கணித்த எம்மவர்கள் நிலையில் இந்தியா🤣, யார் இவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்கள். அனத்திலும் பிஜேபியின் அரசியல்.
  24. இந்த ஆடுகளம் பொதுவாக 190 வெற்றி இலக்காக உள்ளது, கடந்த சில நாள்களாக 40 பாகை வெய்யில் என கூறுகிறார்கள், ஆடுகளம் காய்ந்து சுழல்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளமாக மாறலாம். எமது புள்ளிகளுக்கு ஆப்பு வைப்பதற்காகவே கெட்டும் கமின்ஸ்சும் நாடு திரும்பாமல் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள் (ஒரு முடிவோட்தான் இருக்கிறார்கள்), லக்னோவின் நிலைமை சரியாக இல்லை என கருதுகிறேன். இந்த போட்டியில் லக்னோ தோற்றால் அவர்களின் அரையிறுதிவாய்ப்பு முடிவிற்கு வந்தது உறுதியாகிவிடும்.
  25. இந்த மாதிரி ஜெய்கிந்த் அரோகரா குறூப் அப்பர் மிடில் கிளாசில் உள்ளவர்கள் தான், போரில் இருந்து மிக தூரமாக இருந்து கொண்டு தமது தேசபற்று என நினைத்து செய்யும் குறழி வித்தைகள் இது, போரினால் எந்த பாதிப்பும் இவர்களை எட்ட போவதில்லை, தமது பிற்போக்கு சித்தாந்தங்களுக்கு வடிகால் அமைக்கும் வலது சாரி அரசுகளின் விளம்பர உத்தியான தேசப்பற்று அதன் வழி போர் என தமது நோக்கங்களுக்கும் விருப்பங்களுக்கு உதவி செய்யும் வலது சாரி அரசிற்கான தேவைகளை நாடாளாவிய ரீதியில் உருவாக்கும் கோமாளிகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.