Everything posted by vasee
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தகவலுக்கு நன்றி, இனையத்தில் இருந்து தவறாக புரிந்து கொண்டிருப்பேன் என கருதுகிறேன், யாழ் கள போட்டியில் இணைந்த பின்னரே ஐபிஎல் இல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனது அபிப்பிராயம் துருவ் ஜுரல்தான் ராஜஸ்தானின் தோல்விக்கு காரணம் என கருதுகிறேன் (யாருடைய தலையாவது உருட்டத்தானே வேணும்🤣), 8.75 ஓட்ட விகிதம் உள்ள நிலையில் களத்திற்கு வந்தவர் தடுப்பாட்டத்தில் இறங்கினார். ஓவருக்கு குறைந்தது 6 ஓட்டங்களை இலகுவாக எடுக்கும் நிலையில் கூட அதனை எட்டவில்லை, ஜுரல் தோனியினை போல விளையாடுபவர் என இணையத்தில் அவர் மேல் இரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் (தேவையில்லாமல் அதிக ரன் ரேட்டிற்கு உயர்த்திவிட்டு பின்னர் 6 கள் அடித்து கதாநாயகனாக ஆட்டத்தினை முடிப்பது). அதனால் அவருடன் கூட்டணியில் இருந்த நிதிஸ் ரானாவிற்கு அழுத்தம் ஏற்பட்டு தனது தவறான ஆட்ட தெரிவின் மூலம் தேவையற்று ஆட்டமிழக்கும் நிலை உருவானது. விக்கெட் விழுந்ததனால் மேலும் அழுத்தம் அதிகரித்து விக்கெட்டினை காக்கும் முயற்சியில் மேலும் ஓட்ட விகிதம் அதிகரித்தது. நல்ல தொடக்கத்தினால் ஏற்பட்ட சாதாரணமாக விரட்ட வேண்டிய இலக்கை கடினமாக்கியவர் ஜுரல். இதே போலவே முந்தய போட்டிகளிலும் செய்தார், சாம்சன் அணிக்குள் மீண்டும் வந்தால் ஜுரலை நீக்கி விடலாம் என கருதுகிறேன். நிச்சயமாக ட்ராவிட் ஜுரலுடன் கதைப்பார் என கருதுகிறேன். SRH தரமான அணி, சென்னை அணி பல அணி வீரர்கள் போர்மிற்கு வர உதவுகின்ற அணி இன்று கைதராபாத்திற்கும் அந்த உதவியினை செய்வார்கள் என கைதராபாத் ஏன் எதிர்பார்க்கக்கூடாது?🤣
-
பிள்ளையான் - பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி
சுரண்டல் எனும் வார்த்தையினை பாவித்ததால் இடது சாரி சித்தாந்தம் என எனது கருத்தை வரையறை செய்கிறீர்கள் என கருதுகிறேன், எனக்கு அந்த அரசியல் எதுவும் தெரியாது, எமது செயல்களினால் ஏற்படும் பாதிப்பு பற்றி கூறினேன் அவ்வளவுதான் (சுரண்டல் எனும் வார்த்தை பாவித்ததன் காரணம் வேறொருவருக்கு சொந்தமானதை அவரது அனுமதியின் எடுப்பதற்கு உள்ள வார்த்தையினை பொதுவாக யாரும் விரும்புவதில்லை). இது உபதேசம் அல்ல, சில விடயங்கள் நடக்கும் போது எமக்கு ஏன் தான் இப்படி நடக்கிறது என நினைப்போம் காரணம் தீதும் நன்றும் பிறர் தர வராது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்களது வெற்றிக்கூட்டணிக்குள் புகுந்த கறுப்பு ஆடு நான் என நினைத்தேன்.🤣 இல்லை மெதுவாக விளையாடினார் என (அப்படி ஒன்றும் இல்லை ஆனால் தோல்விக்கு யாருடைய தலையாவது உருட்டத்தானே வேணும்).🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைக்கு ராஜஸ்தான் வென்றிருந்தால் அவருக்குத்தான் இங்கு சாத்துப்படி நடந்திருக்கும்.😂 விராட் கோலிக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கும் அமோகம்தான்.🤣 கைதராபாத் அணி ஒரு தார் ரோடு ஏற்பாடு செய்கிறதாம், அதில மும்பாயினை போட்டு உருட்டுவதற்கு (கட்டாந்தரை ஆடுகளம்), எல்லோரும் எதிர்பார்க்கும் 300 எடுக்க வேணும் எனும் முனைப்பில் இருக்கிறார்களாம், ஆனால் மும்பாய் கைதராபாத்தினை அதே ரோட்டில போட்டு உருட்டி உருட்டி அடிக்க போகிறதோ தெரியவில்லை. நானும் மும்பாய்தான், செம்பாட்டானை போட்டு உருட்டி எடுப்போம்.🤣 அவர் இப்போது என்னை போல சான்விச் மசாஜினை அனுபவித்து கொண்டுள்ளார், மேலேயும் இல்லை கீழேயுமில்லை.🤣
-
பிள்ளையான் - பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி
எது விலை போகிறதோ அதனை பயன்படுத்துகிறார்கள், இலங்கையில் மதம், பிரதேசவாதம் போல (தமிழ் தேசியம் கூட அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது) இந்தியாவில் சாதியம் பயன்படுத்தப்படுகிறது, இவை எல்லாவற்றிற்கு பொதுவான ஒற்றுமை சாதி, மதம், பிரதேசவாதம் என்பவை என்ன என்று உய்த்தறிந்து உணரமுடியாவிட்டாலும் அவற்றின் பேரால் மக்களை தம்பக்கம் இழுக்க முடிகிறது அதன் மூலம் அதிகாரத்தினை பெறமுடிகிறது, பின்னர் அதன் பெயரால் அவர்களையே அழிக்க முடிகிறது. சாதாரணமாக சிந்திக்க முடிந்த மனிதனால் இந்த மூட நம்பிக்கைகளில் வெளிவரமுடியாமல் இருக்கின்றமையால் அதனை அவர்கள் பயன்படுத்தி அனுகூலமடைகிறார்கள். இதனை புரிய வைக்க முயன்றால் அப்படி முயற்சிப்பவர்கள் மேல் கோபங்கொள்கிறார்கள், அடுத்த இரண்டு சந்ததிகளின் பின்னர் இவை காணாமல் போய்விடும், ஆனால் என்ன எமது சமூகம் அப்போது உலக ஓட்டத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக இருப்பார்கள். மக்களின் புலம் பெயர்வு புதிய சிந்தனைகளுக்கான அடித்தளமாக இருந்தாலும் புலம் பெயர்ந்தவர்களில் மிகவும் பின் தங்கியவர்கள் இந்த மாற்றத்தினை விரும்பாமல் அதற்கு எதிர்ப்பு கொடி தூக்குவதன் நோக்கம், மாற்றம் வந்தால் கால மாற்றத்திற்கேற்ப தம்மை உயர்த்த முடியாத இவர்கள், தாம் இந்த மாற்றங்களினால் காணாமல் போய்விடுவோம் என அஞ்சுகிறார்கள். அது தேவையற்ற பயம், ஊரார் பிள்ளையினை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்பார்கள், பொது நலனில் கூட நாங்கள் விரும்பும் சுயநலம் உள்ளது. மனிதனை சிந்திக்க தெரிந்த மிருகம் என கூறுகிறார்கள், எமது சமூகம் சிந்திக்க விரும்பாத சமூகம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கொல்கத்தா அணியின் கடுமையான எதிர் போட்டியினை எதிர்பார்த்த இரசிகர்களுக்கு ஏமாற்றம்தான், அந்த போட்டி முடிந்து போன போட்டி, கொல்கொத்தா அணிக்கும் அது ஒரு முடிந்து போன போட்டியென்றே கருதுகிறேன். காணொளி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
4 கோடிக்கு தோனியின் பங்களிப்பு ஒரு அணியாக சிறப்பாகவே உள்ளது, சிறந்த விக்கெட் கீப்பர், சிரந்த அணித்தலைமை, இறுதி ஓவர்களில் அதிக ரன் ரேட்டில் துடுப்பாடுபவர் ( சென்னை அணியில் உள்ள வீரர்களில் அதிக ரன் ரேட் கொண்ட வீரராக இருப்பார் என கருதுகிறேன்). அந்த அணிகளிடம் அதற்கான ஆற்றல் இருந்தது (சிறந்த வீரர்கள்), அணியில் ஆற்றல் இல்லை 8 போட்டியில் 2 போட்டி மட்டும் வென்றவர்கள் 6 போட்டியில் 6 இனையும் வெல்வார்கள் என்பது சாத்தியமற்ற விடயம். லக்னோ அணியிடம் சிறந்த துடுப்பாட்டம் மட்டுமே உள்ளது டெல்லி அணி ஒரு சமனிலையான அணி, ஆனால் போட்டி லக்னோவில் நடைபெறுகிறது, உள்ளூர் போட்டிகளில் தோற்கும் அணியில் லக்னோவும் ஒரு அணிதான், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் கேமங் பதானி தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்.🤣
-
பிள்ளையான் - பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி
பெனாத்தல் என கருதினாலும் முழுமையாக எனது கருத்தினை வாசித்தும் பின் பெனாத்தல்தானே என வெறுமனே கடந்து போகாமல் அந்த பெனாத்தல் கருத்திற்கு நேரம் எடுத்து பதிலிட்டமைக்கும் நன்றி. அதிகார உணவுச்சங்கிலியில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் செய்யும் குறுங்கால சுயநல நடவடிக்கைகளும் அதே உணவுச்சங்கிலியில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் தொலைதூர நோக்கின்றி சுயநலனினால் தவறானவர்களை (50000 வாக்குகளால் வெற்றி அடைய செய்தவர்கள்) தெரிவு செய்தமையால் ஒரு சமூகத்திற்கு ஏற்படும் நீண்டகால பாதிப்பு பற்றி கட்டுரை மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளது, அதற்கு பதிலூட்டம் செய்த எனது கருத்தில் சமூகத்தில் அதிகார உயர்மட்டமும் அடிமட்டமும் மட்டும் சுயநலனிற்காக தவறிழைக்கவில்லை அனைத்து மட்டங்களிலும் தவறுள்ளது என்பதே இந்த கருத்தாடல்களின் இரத்தின சுருக்கம் ஆகும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கொல்கத்தா அணியின் கதை முடிந்துவிட்டது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்த பெரும் படையில் நானும் ஒரு துளி.🤣 Pitch and conditions: The Eden Gardens mystery It is going to be hot and humid in Kolkata, where teams winning the toss have elected to chase in all three games this season with mixed results. Royal Challengers Bengaluru (RCB) restricted KKR to 174 and won, but the other two games featured successful defences of 200 totals. இந்த ஆடுகளம் கொல்கத்தாவின் ஆடுகளம், சுழல் பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளம், குறைந்தது 200 ஓட்டங்களாவது எடுத்தாக வேண்டும் என கூறப்படுகிறது, இந்த ஆடுகளம் கொல்கத்தாவிற்கு சாதகம் அதிகம் என கூறப்பட்டாலும் ஏற்கனேவே வெளியே போவதற்கு துண்டு போட்டு வைத்திருக்கும் அணியுடன் இன்று கொல்கத்தாவும் இணைந்து கொள்ளும் என கருதுகிறேன். இந்த போட்டியில் கொல்கத்தாவே வெல்லும் என கிரிக்கட் வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள், ஆனால் கொல்கத்தா அணியின் துடுப்பாட்டம் அதன் பலவீனமாக தொடர்கிறது, மறு வளமாக குஜராத் அணி ஒரு சமநிலையான அணியாக காணப்படுகிறது, குஜராத் அணியே வெல்லுமென கருதுகிறேன், இன்றைய போட்டியில் கொல்கத்தா தோற்றால் அதன் அரையிறுதி வாய்ப்பு ஓரளவிற்கு முடிவிற்குள் வந்துவிடும் என கருதுகிறேன். இந்த போட்டி கொல்கத்தாவிற்கான வழியனுப்பும் போட்டி என்பதால் போட்டி முடிவில் பாட்டை ஒலிக்கவிடலாம் (சென்னை அணி போலில்லாமல் ஒரு சின்ன நம்பிக்கை கொல்கத்தாவில் இருக்கிறது இன்றைய போட்டியினை வெல்வார்கள் என).
-
பிள்ளையான் - பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி
பலவீனமான ஒவ்வொரு உயிரினமும் தன்னை பாதுகாத்துக்கொள்ள இயற்கையாக பாதுகாப்பு பொறிமுறைகளை உருவாக்கி அதனை அதன் கூர்ப்பில் வலுப்படுத்திக்கொண்டே வரும். வானில் பறக்கும் பறவைக்கூட்டம் ஒரே பாதையில் சீராக பறந்து கொண்டிருக்கும் போது முன்னால் செல்லும் பறவை மின்னல் வேகத்தில் எதிர்புறம் திரும்பினால் அதே போல அனைத்து பறவைகளும் மின்னல் வேகத்தில் திரும்பிக்கொள்ளுகின்றன, அதே போலவே மீன் கூட்டமும் அவ்வாறே செய்கின்றன இது அனைத்து ஜீவராசிகளும் தம்மை பலமாக பேண பயன்படுத்தும் பாதுகாப்பு பொறிமுறை. தனியாக நின்றால் இரையாகிவிடுவோம் என்பதற்காக இந்த பாதுகாப்பு பொறிமுறையினை அவை உயிரியல் ரீதியாக தலைமுறையாக கடத்தி வருகின்றன, ஆதி மனிதன் காட்டு வாழ்கையிலும் இவ்வாறே இருந்துள்ளது, ஆனால் நவீன உலகில் அதற்கான தேவை இல்லாமல் போய்விட்டாலும் மனிதர்களுக்குள்ளே இருக்கும் சுய பாதுகாப்பு பொறிமுறை இவ்வாறு மதம், சாதி, பிரதேசம் என கூட்டிணைய வைக்கின்றது. பிள்ளையான், கருணா போன்ற சுயநலமிகள் மக்களின் அறியாமையினை பயன்படுத்தி அவர்களை பிர்த்து அதன் மூலம் தமது இலாபத்தினை அடைகிறார்கள். மக்கள் சாதி, மதம், இடம் என பல ப்ரிவுகளாக பிரிந்து மேலும் பலவீனமாகிறார்கள், ஆரம்பத்தில் இந்த வேலையினை கருணா, பிள்ளையான் என தொடங்கினார்கள் புலிகளின் இல்லாமல் போன பின்னர் தமிழ் அரசியல் கட்சிகளும் அந்த கோதாவில் குதித்தார்கள், தற்போது தமிழர்கள் சில்லு சில்லாக உடைந்து பலவீனமாக உள்ளார்கள். சில சமயம் நான் நினைப்பது உண்டு ...இந்த பிள்ளையான் போன்றவர்கள் கூறும் கருத்தும் யாழ்களத்தில் எழுதுபவர்களின் கருத்தும் ஒரே மாதிரி இருக்கே ...இவர்கள் எல்லாம் ஒரே பாசறைக்கு சென்றவர்களோ... அவுஸ்ரேலியாவில் இருந்த ஒருவர் அவரது ஊரின் பெயரால் உருவாக்கப்பட்ட தொண்டு அமைப்பினூடாக அவரது ஊருக்கு செய்யப்பட்ட தொண்டு நடவடிக்கைகளை பயன்படுத்தி (அவர் ஊரில் அதன் மூலமான தொடர்பினூடாக) தனது பிள்ளையின் அரங்கேற்றத்திற்கான வாய்ப்பாக (செலவு குறைந்த அரங்கேற்றம் + உல்லாச பயணம்) அவர்களது ஊரில் உள்ள கோயில் நிகழ்வொன்றினை பயன்படுத்தினார், அவரிடம் கேட்டேன் அப்போ அங்கே வழமையாக பாடும் குழந்தைகளின் நிலை என்ன என அதற்கு அவர் கூறினார் அவர்கள் ஒவ்வொரு வருடமும் பாடுகிறார்கள்தானே இந்த வருடம் பாடாவிடால் ஒன்றும் குறைந்து போய் விடாது என அதில் நியாம் இருப்பதாக அவருக்கு இருக்கலாம். இப்படி பல மக்களை நாம் நாளாந்தம் சந்திக்கிறோம், இவர்கள் தமது சுயநலத்திற்காக பாவப்பட்ட தமது மக்களையே அறியாமல் சுரண்டுவதால் அதே போல தமது சுயநலனுக்காக செய்த தவறான செயல்களை செய்கின்ற கருணா, பிள்ளையா தமது தவறுகளுக்காக உருவாக்கின சித்தாந்தம்தான் இந்த பிரதேசவாதம், சுய நலன் இருப்பதில் தப்பில்லை ஆனால் அதனால் மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்களா என பார்க்காமல் விட்டு விடுகிறோம். இந்த தவறிற்கு நானும் விதிவிலக்கில்லை, ஆனால் பெரும்பாலோனோர் இதனை புரியாமல் செய்கின்றனர், இதனை யாரும் குற்றமாக கூறுவதில்லை ஒரு மாற்றத்திற்காக கூறுவதால் அதனை நாம் தான் புரிந்து அது தொடர்பில் கோபம் கொள்ளாமல் சிந்தித்து முன் செல்லவேண்டும். ஒரு வகையில் இந்த கருணா பிள்ளையான் போன்றோரின் பிரதேச வாதம் எடுபட காரணமாக இருப்பதற்கான காரணியாக நாமும் இருக்கின்றோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை அணி, கொல்கொத்தா அணி என இரண்டு அணிகள் அரை இறுதிக்கு தெரிவாகும் அணிகளில் தெரிவு செய்திருந்தேன் சென்னை அணி நேற்றோடு போயாச்சு இன்று கொல்கத்தா. காணொளி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைய மும்பாய் சென்னை போட்டியின் பின்னர் சென்னை விசிறிகளின் சார்பாக🤣. காணொளி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் சொல்வது சரி சென்னை அணியின் மத்திய பகுதி பலவீனமான பகுதி, ஓட்ட விகிதம் 100 இற்கும் குறைவானதென கேள்விப்பட்டேன் (ஓட்ட சராசரி நினைவில்லை) இதுவரை சென்னை அணியின் ஒட்டு மொத்த ஓட்ட சராசரி 116 என்பதாக நினைவில் உள்ளது, ஆனாலும் திருப்பாதி அணியின் மேல்பகுதியில் ஒரு பலவீனமான நபராக தொடர்ந்தும் இருப்பதால் இந்த போட்டியில் தொடருவாரா என்பது சந்தேகம் அதே போல் சங்கரும் அடுத்த போட்டியில் தொடுருவார என கருதவில்லை. குத்து மதிப்பாக 2/3 நபர்கள் சென்னை அணியினை தேர்வு செய்திருப்பார்கள்.🤣 மிகுதி 1/3 குஜராத் அணி (தமிழ்நாட்டு வீரர்கள் அதிகம் விளையாடும் அணி) 🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை அணி பவர் பிளேயின் முக்கியமான 6 வது ஓவரை அஸ்வின், ஓவர்டன் என ஏற்கன்வே பலதடவை அடிவாங்கும் பந்துவீச்சாளர்களிடம் மீண்டும் மீண்டும் கொடுப்பது (குறிப்பிட்ட ஓவரில் குறைந்தது 20 ஓட்டங்களை கொடுப்பார்கள்). திரிப்பாதி போர்மில் இல்லை என்றாலும் விடாப்பிடியாக ஆட வைப்பது, மத்திய பகுதியில் போர்மில் இல்லாத வீரர்களை தொடர்ந்து பேணும்போது, சென்னை அணியில் வான்ஸ் பேடி போல சிறந்த இளையோர் அணியில் இருக்கும் போது அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தொடர்வது, இவர் பஞ்சாப் பிரியான்ஸ் ஆர்யாவினை விட உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர் என கூறுகிறார்கள் அவரை விட இவர் அடித்தாட கூடியவர் என கூறப்படுகிறது. இதனை பார்த்தாலும் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என புரிவதில்லைதான். ஆனால் அந்த லக்னோ போட்டியில் பந்த் போர்மில் இல்லாமல் இருந்தவர் ஓரளவாக சென்னை அணியுடன் விளையாடியமையால் அரை சதத்தினை எட்டியிருந்தார் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் தனது போர்மிற்கு வந்து விடுவார். பந்த் மிக சிறப்பாக அணியினை வழிநடத்தி வந்திருந்தார் அந்த போட்டியில் குழப்பமாக முடிவுகள் எடுத்திருந்தார் என்பது உண்மைதான் ஆனால் அது மட்ச் பிக்சிங் என்பது கொஞ்சம் ஓவரான விடயம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பிளட்டாக பந்து வீசுவதன் மூலம் பந்தை தூக்கி அடிப்பது கடினமாக இருக்கும், ஆனால் புல் லெந்தில் பந்துவீசும் போது பிளட்டாக வீசினாலும் அடிப்பார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாரோ பேபி டிவிலியர்ஸ் வருகிறாராம்.🤣 பெரும்பாலான ஆடுகளங்கள் பெரிதாக எழுந்து வராது என்பதால் அவர் தேவையில்லாமல் முதுகை வளைக தேவையில்லை என கூறிவிடுங்கள் அவரிடம், பிறகு அவர் காயத்தினால் வெளியேறினால் ராஜஸ்தான் அணி மேலே உள்ள அணிகளுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கிவிடும்.🤣 நல்ல அவதானிப்பு.👍
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முக்கியமான ஆட்டத்தின் நடுப்பகுதியினை ஆதிக்கம் செலுத்தும் சுழல் பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களை கட்டுப்படுத்துவதுதான் முக்கியம் விக்கெட் எடுத்தால் அது மேலும் சிறப்பாக இருக்கும், சென்னை அணியின் தோல்விக்கு ஆட்டத்தின் நடுப்பகுதி துடுப்பாட்டக்காரர்கள் போடும் முட்டுக்கட்டை காரணமாக இருபப்து போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அது ஒரு நகைசுவைக்காக, நானும் சென்னையினைத்தான் தெரிவு செய்துள்ளேன் ஆனால் 3 அணிகள் தமது இடத்தை துண்டு போட்டுவிட்டார்கள் ஏற்கனவே, சென்னை, கைதராபாத், ராஜஸ்தான். இன்றைய போட்டியில் சுயாஸ் கால் தடத்தினால் ஏற்பட்ட ஆடுகளத்தின் கடினமான பகுதியினை குறிவைத்து பந்து வீசினார், ஏனெனில் பந்து அதிகமாக திரும்பும் என்பதால் ஆனால் அது புல் லெந்தில் இருப்பது துடுப்பாட்டக்காரருக்கு வசதியாக இருந்ததனால் அவரும் வஞ்சகமில்லாமல் 6, 4 என அடித்தார், வனிந்து சும்மாவே விக்கெட் எடுக்கிறேன் என அதே அளவில் தூக்கி போடுவார்.🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாய்ப்பில்லை, முதலாவது போட்டியில் குஜராத் வென்றாலும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணியில் உள்ள இலங்கை சுழல் பந்து வீச்சாளர்கள் தமது சீருடைக்குள் லக்னோ சீருடை அணிந்தே வருவார்கள்.🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ராஜஸ்தானும் பெங்களூர், சென்னை அணிபோல் தனது மைதானத்தில் தோற்கும் அணி. ராஜஸ்தான் அணிக்கு இரண்டு இலங்கை சுழல் பந்துவீச்சாளர்கள் இருந்து அந்த அணியினை தோற்கடிக்கிறார்கள்.🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
காணொளி இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியினை தேர்வு செய்து வென்றவர்களுக்காக. 🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மீண்டும் சந்திப்போம், இனிய பயணமாக அமையட்டும், வெய்யில் அதிகமாக தென்னிந்தியா இருக்கலாம். எனக்கும் இதே நிலைதான்.