Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. நான் குறிப்பிட்டது தற்போதய பயங்கரவாத தாக்குதலுக்கான நோக்கமாக ஆர்டிக்கல் 370 நீக்கம் ஒரு காரணியாக இருக்கும் என.
  2. தகவலுக்கு நன்றி, அப்படியே இந்த ஆர்டிக்கல் 370 பற்றியும் அறியத்தாருங்கள் அது பற்றி ஒரு தெளிவான புரிதல் இல்லை.
  3. எனக்கும் இந்த வரலாறுகள் பற்றி தெளிவாக தெரியாது. தற்போதய பிரச்சினைகளின் அடிப்படை காஸ்மீர். பிரித்தானியர்கள் சுதந்திரம் வழங்கும் போது இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் கிழக்கு மேற்கு பாகிஸ்தான் எனவும் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதி இந்தியா என இரண்டாக பிரித்து வழங்கியிருந்தார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். மன்னராட்சி நிலவிய காஸ்மீர் அதனை இந்த இரு நாட்டுடனும் பித்தானியா இணைக்கவில்லை, அதன் முடிவை அந்த காஸ்மீரிய மக்களிடமே விட்டுவிட்டது. தற்போது காஸ்மீர் 3 நாடுகள் ஆக்கிரமித்துள்ளன இந்தியா, பாகிஸ்தான், சீனா. கடந்த ஏழு தசாப்தங்களாக காஸ்மீருக்கு இருந்த உரிமைகளை 2019 இல் மோடி அரசு நீக்கி விட்டதாக அது தொடர்பில் வழக்கு ஒன்றினை காஸ்மீர் மக்கள் மேற்கொண்டு தோல்வியுற்றுள்ளதாக நினைவுள்ளது (சரியாக தெரியவில்லை) அது காஸ்மீருக்கான அர்சியல் சட்டமைப்பு மற்றும் காணி அதிகாரம் (மற்ற பகுதியில் உள்ள இந்தியர்கள் காஸ்மீரில் சொத்துக்கள் வாங்க முடியாது) இதனை ஆர்டிகல் 370 எனும் சிறப்பு அதிகாரம் மூலம் பேணப்பட்ட சட்டத்தினை மோடி அரசு நீக்கி யார் வேண்டுமென்றாலும் (இந்தியர்கள்) காஸ்மீரில் சொத்துக்கள் வாங்கலாம் என்பதுடன் மற்ற மானிலங்களுக்குரிய அதிகார உரிமையே காஸ்மீருக்கும் (தனியான அரசியலமைப்பு சட்டம்) எனும் நிலை உருவாக்கப்பட்டது. இது இலங்கையில் தமிழர் பூர்வீக நிலங்களில் நிகழ்த்தப்படும் குடியேற்றம் போன்ற ஒன்றாக இருந்தமையால் காஸ்மீரிய போராளிகள் வெளி மானிலத்தவர்கள் காஸ்மீரில் சொத்துக்கள் வாங்க விரும்பாத நிலையினை ஏற்படுத்துவதற்காக பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு காஸ்மீரிற்கு வெளியில் இருந்து வந்து அவர்களது நிலங்களை அபகரிப்பதனை தடுக்க எடுத்த முயற்சிதான் இந்த பயங்கரவாத தாக்குதல்கள். அடிப்படையில் மோடி அரசுதான் தற்போதய பயங்கரவாத தாக்குதலுக்கு ஆணி வேராக இருக்கலாம் என கருதுகிறேன். இந்தியா இலகுவாக இந்த சச்சரவினை முடிக்காது, முன்னால் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளி என கருதப்பட்ட சிவராசன் தங்கியிருந்த இடத்தினை அறிந்தவுடன் அவர்கள் மீது உடனே தாக்குதல் நடத்தாமல் ராஜீவ் காந்தியின் பிறந்த தினம் வரை காத்திருந்து அதனை செய்தார்களாம், சிவராசனை உயிருடன் பிடிப்பது அவர்களது நோக்கமல்ல எனவும் அதனை குறிப்பிட்டவர் கூறியிருந்தார். முன்னால் இந்திய பிரதமரின் மறைந்த தினம் மே 21.
  4. தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டெரிய வைக்கிறார்கள். இந்தியா தனது அயல்நாடுகளில் எந்த ஒரு நாட்டுடனாவது நல்ல உறவை பேணுகிறதா? அயல்நாடுகளில் உள்நாட்டு கலவரம், பயங்கரவாத தாக்குதல், அரசியல் தலையீடு என சண்டித்தனம் செய்யும் ஒரு நாட்டின் மீது பொதுவாக மக்களுக்கு இயல்பாக வரும் வெறுப்பை இல்லை என கூறுவது பொய்யாகும். ஆனால் உங்களுக்கு ஏற்படும் மனவலி புரிகிறது உயிர் இழப்பினை யாரும் விரும்பமாட்டார்கள்தான் அதே குற்ற உணர்ச்சி எமக்கும் உள்ளது ஆனால் அதில் ஒரு எள்ளவு குற்றவுணர்ச்சி இந்திய வல்லாதிக்கத்திற்கு இருந்திருந்தால் இந்தியாவின் அயல்நாடுகளின் பல இலட்சக்கணக்கான் உயிர்கள் இழக்கப்பட்டிருக்காது. இது பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பான உணர்வு.
  5. போட்டியினை நிறுத்தி விடுவார்கள், இந்த போரெல்லாம் ஒரு அரசியல் ஸ்டன்ட், மக்களின் கவனத்தைனை போரில் குவிய வைப்பதற்காக ஐ பி எல் இனை நிறுத்திவிடுவார்கள்.
  6. வார இறுதிக்கும் கிளிக்கும் ஏதோ எட்டாத பொருத்தம் போல இருக்கிறது, நேற்று டெல்லியினை தெரிவு செய்துவிட்டேன் ஆனால் பலமான பஞ்சாப் அணியுடன் தாங்காது என நினைத்துக்கொண்டிருந்த போது எப்போதும் தமிழன் நாணய சுழற்சியில் வெல்லும் அணி வெல்லும் என தெரிவித்தார், பொதுவாக அவர் அதனை கூறும்போது அதற்கெதிராக நிகழ்வதனை அவதானித்துள்ளேன் பஞ்சாப் நாணய சுழற்சியில் வென்ற போது எனக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது டெல்லி வென்றுவிடும் என ஆனால் 10 ஓவர்களில் 122 அடித்த போது எனக்கு எப்போது தமிழன் கிளிச்சாத்திரத்தில் இருந்த நம்பிக்கை போய்விட்டது ஆனால் போட்டியினை நிறுத்தி எனது 2 புள்ளிகளை காப்பாற்றிவிட்டார்கள்🤣.
  7. உங்களது கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன், சில வேளை நாங்கள் அதிகமான நலன் விரும்பிகளாக இருப்பதால் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் விட்டு விடுகிறோமோ என தோன்றுகிறது. எமது நாட்டில் உள்ள இயலாத மக்களை மட்டுமல்ல வந்தேறிய நாடுகளிலேயே உள்ள இயலாத மக்களையும் எமது செய்கைகளால் பாதிப்புள்ளாக்குகிறோம். கோவிட் சீனாவில் இருந்து பரவிக்க்கொண்டிருந்த காலகட்டத்தில் மலிவாக கிடைத்த ஐரோப்பிய உல்லாச பிரயாணத்தினை தொடர்வதா அப்படி பிரயாணம் செய்தால் எமக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என இணையத்தில் ஆலோசனை கேட்பதில் காட்டும் அக்கறையினை, அப்படி ஒரு பிரயாணத்தின் மூலம் நாம் காவி வரும் நோய் நாம் வாழும் நாட்டில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், வயோதிகர்களை தடுப்பூசி அற்ற காலத்தில் கொல்லும் என தெரிந்தும் அதனை பற்றி கவலைப்படாமல் மலிவான டிக்கெட்டிற்காக மற்றவர்களை கொல்லும் மனிதர்களாக எமது நலன் உயரத்தில் நிற்கிறோம். நாம் மட்டுமல்ல உலகே இப்படித்தான் இயங்குகிறது, அதனால் எங்களில் மட்டும் தப்பில்லை.
  8. தரம்சாலாவில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய பாகிஸ்தான் பதற்றநிலையால் விமான போக்குவரத்துகளில் சில கட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும் அது இந்த போட்டியினை பாதிக்கலாம் என கேள்விபட்டேன் உண்மையா?
  9. இந்தியர்கள் பெரும்பாலும் இங்கு வலதுசாரி கட்சியிலேயே போட்டியிடுவார்கள், வாக்களிப்பவர்களும் பெரும்பாலும் அதே கட்சிக்கே வாக்களிப்பார்கள், இங்கு இடது சாரி கட்சிகள் சிறுபான்மையின குடியேற்றவாசிகளுக்கு கரிசனை காட்டுவதால் அந்த நிலைப்பாடு எடுக்கிறார்கள் அதனாலேயே இடதுசாரி நிலைப்பாடெடுக்கிறோம். , வலது சாரி கட்சி புதிய குடியுரிமை வழங்குதலில் கடும்போக்கு காட்டுவது இந்த மக்களின் குடியேற்றத்தினை கட்டுப்படுத்துவது என நேரடி எதிர்நிலைப்பாடு கொண்ட கட்சி, மானில ஆட்சியில் இந்த குடியேற்ற வாசிகள் உள்ள பிரதேசத்திற்கான அபிவிருத்தியினை கடந்த காலத்தில் கட்டுப்படுத்தியிருந்த்து. இலங்கையிலும் இந்தியாவிலும் பத்தாம் பசலித்தனத்தினை கடைப்பிடித்தலில் உள்ள விடயம் எழியவர்களை சுரண்டலாம், ஆனால் இங்கு நாங்கள்தான் எழியவர்கள் என்பதால் இடது சாரிகளை ஆதரிக்கின்றோம், எப்படிப்பார்த்தாலும் வலதோ இடதோ நாங்கள் நன்றாக இருக்கவேண்டும் எனும் நலனே காரணம், இதனை எப்படி தப்பாக பார்க்கமுடியும்?
  10. நான் தனியால் இல்லை🤣, சென்னையும், குயராத்தும்தான் எனது முக்கிய தெரிவுகள், சென்னை முதல் தெரிவு, இரண்டாவது தெரிவு குஜராத் (தமிழ்நாட்டு வீரர்கள் விளையாடுவதால்)😂. மும்பாய் இருந்தால் சென்னைக்கு கோப்பை கிடைக்காது என்பதால் மும்பாய் அணியினை தகுதிப்போட்டியிலேயே வீட்டுக்கு அனுப்பிவிட்டேன் (எனது தெரிவில்)🤣. மும்பாய் அணியின் பயிற்சியாளர் மகேல திட்டமிடலில் சிறப்பானவர் என கூறுகிறார்கள், ஒவ்வொரு போட்டியிற்கும் முன்பாக ஆட்டத்திட்டம் வகுத்தே செயற்படுவார்கள் என ராயுடு ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். யதார்த்தம் வேறாக இருந்தால் நமக்கென்ன என பலமான மும்பாயினை தகுதிச்சுற்றிலேயே வெளியே அனுப்பிவிட்டேன்.😂 நேற்றய போட்டியினை முழுமையாக பார்க்காவிட்டாலும் (போட்டி கூட துண்டு துண்டாகவே நடந்தது) வேலை இடைவேலையில் போட்டியினை பார்த்தேன், அதில் சாய் சுதர்சனை எப்படி திட்டமிட்டு தூக்கினார்கள் என அவதானித்திருப்பீர்கள். அந்த shorter mid on சாயினை உள்ளே வரும் பந்து என நினைக்கவைத்து அவரை அவுட்டாக்கினார்கள் அதுவும் முதலாவது பந்து வெளியே போகும் போது அவரது பின்னங்கால் நகராமல் வெறும் முன் காலில் பந்தை நோக்கி ஒரு சிறிய முன்னகர்வு செய்த போது கூட அவர் அதனை உணர்வில்லை (நான் நினைக்கிறேன் தனக்கு உள்ளே வரும் பந்திற்கான செட்டப்பாக ஏமாற்றும் விதமாக வீசுகிறார்கள் என நினைத்திருப்பார் உண்மையில் நானும் அவ்வாறுதான் அப்போது நினைத்தேன்) அடுத்த பந்தில் அதே தவறான முடிவினால் அவுட்டாகினார். நீங்கள் என்னைப்பற்றி கவலைப்படுகிறீர்கள், பையன் போட்டியின் ஆரம்ப காலத்தில் கிழே இருக்கும் போது கூறினார் போட்டியின் இறுதிப்பகுதியில் பாருங்கள் என அவர்தான் சத்தமில்லாமல் மேலே வருகிறார், நான் அங்கும் இங்குமாக அலைகிறேன், அவர் என்னை கடந்து அடுத்து உங்களிடம்தான் வருவார் ஆனால் தனிய வரமாட்டார்.🤣 தகவலுக்கு நன்றி. சத்தமில்லாமல் உங்களிடம்தான் வருகிறது அந்த அணி.
  11. வயதினை பார்ப்பதனை விட்டு திறமையினை பார்த்தால் பிரச்சினை இருக்காது என கருதுகிறேன், பொதுவாக வயது குறைவான ஒருவருக்கு வழங்கப்படும் ஆர்ப்பாட்டமான ஆதரவு அவரது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பே காரணமாக இருக்கின்றது. பிரித்திவ் சா வந்த போது அவரது உள்ளூர் போட்டியில் விளையாடிய பெறுபேறுகள் தெண்டுல்கரின் பெறுபேறு போல இருந்தமையால் அவர் பெரிதும் கொண்ட்டாடப்பட்டார், அப்போதய இந்தியணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கினால் நன்றாக இருக்கும் என விரும்பினோம் (நான் அவாரது விளையாட்டினை பார்த்திருக்கவில்லை). பின்னர் ஒருவாறு தேசிய அணியில் இடம் பெற்றார் அதனை தொடர்ந்து ஐ பி எல் இலும் இடம்பெற்றார், இப்போது அவர் பற்றி யாரும் பேசுவதில்லை. அதே போல் வயதானவர் தொடர்ந்து விளையாடினால் அவருக்கெதிரான கருத்துக்களும் வருகின்றன, இளையோருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் எனும் விருப்பே அதற்கு காரணமாக இருக்கின்றது. இங்கு வயது ஒரு பேசு பொருளாகின்ற நிலை காணப்படுகிறது. இவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் போல சிந்திக்கிறார், நேற்றைய போட்டியில் சாகரின் பந்து வீச்சில் ஜெஸ்வால் எதிர் கொண்ட போது அடுத்த பக்கம் இருந்தார். நீங்கள் இதனை அவதானித்திருப்பீர்கள் என கருதுகிறேன், ஜெஸ்வாலுக்கு களத்தடுப்பு எல்லைக்கோட்டில் உள்ள இரண்டு வீரர்கள் wide deep third man, deep backward square leg. இவர் ஆடவந்த போது களத்தடுப்பில் சிறிய மாற்றம் செய்தார்கள் wide deep third man இனை fine deep third man ஆக மாற்றினார்கள். அதனை பார்த்து பந்து 4 ஆவது 5 ஆவது விக்கெட்டுக்கு அளவு குறைந்த பந்தாக வரும் என கணித்து தனது நிலையினை பந்து வீசுவதற்கு முன்னதாகவே எடுத்திருந்தார் (பின் கால் 3ஆவது விக்கெட்டிலும் முன் கால் திறந்த நிலையில் முதலாவது விக்கெட்டுக்கு வெளியே என), ஆனால் அது மும்பாய் அணி திட்டமிட்டே அவ்வாறு செய்திருந்தது அவருக்கு தேவையான அளவு குறைந்த பந்து வரும் என எதிர்பார்க்க வைத்து புல் லெந்தில் பந்து வீசி தூக்கி அடிக்க முடியாதவாறு செய்து ஆட்டமிழக்க செய்தார்கள். அனுபவமான வீரர்களே non strike இல் நிற்கும் போது வாய்பார்த்துக்கொண்டிருப்பார்கள் (ஒரு போட்டியில் மனிஸ் பாண்டே non striker இல் வாய்பாத்துக்கொண்டிருந்து தோனியிடம் பரிதாபகரமாக திட்டு வாங்கியிருந்தார்.) ஆனால் இவர் மிக அவதானமாக விடயங்களை அவதானிக்கிறார். இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் எனவே தோன்றுகிறது . கைதராபாத் தனது கட்டாந்தரையில் இன்று டைட்டன்ஸை உருட்டி எடுப்பார்கள் என்றே கருதுகிறேன். ஆனால் டைட்டன்ஸ் இடம் நல்ல பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள், இன்றைய போட்டியில் கில் அதிக ஓட்டங்களை எடுத்தால் அதிக ஓட்டம் எடுப்பவராக கில்லை தெரிவு செய்த எனக்கு புள்ளி கிடைக்கும் அத்தோடு குஜராத்திற்கு வெற்றியும் கிடைக்கும் (கட்டாந்தரையில் கில்லும் மிக நன்றாக விளையாடுவார்)😂
  12. பைவவ் சூரியவம்சிக்கு 14 வயதினை விட வயது அதிகம் என ஒரு குண்டை எனது இந்திய நண்பர் போட்டார், அதற்கு அவர் கூறும் காரணம் பதினைந்து வயதிற்குட்பட்ட போட்டிகளில் வாய்ப்பு எடுப்பதற்காக பிறப்பு அத்தாட்சி பத்திரப்பதின்போது ஆண்டை மாற்றி உள்ளார்கள் என்றும் இது இந்தியாவில் பொதுவான விடயம் எனவும் கூறினார், 2017 உள்ள படத்தில் அவர் குழந்தையாக உள்ளாரே என கேட்ட பொது அதற்கான சரியான பதிலை அவர் வழங்கவில்லை, இந்த உரையாடல் நிகழ்ந்த போது அவருடன் நின்ற இன்னொரு இந்திய நண்பர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். பானையில இருக்கிறதுதானே அகப்பையில் வரும், நாங்கள் தெரிவு செய்த ஒரே காரணத்திற்காக அவர்களை வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.😂
  13. ஈழப்பிரியன், எப்போதும் தமிழனாகியோரும் சில் தளங்கல்கள் கொடுத்துள்ளார்கள், அவற்றை முயற்சித்துப்பார்க்கலாம்தான் ஆனால் அதற்கு முன்னர் இன்றய போட்டியினை hotstar முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்துள்ளேன், வேலை இடைவேளையில் வேலையில் வழங்கப்பட்ட கணனி பாவிப்பதுண்டு (எனது கணனி 30 நிமிடத்தில் பற்றரி முடின்ட்குவிடும்) அதில் சில வேளைகளில் யாழ் கூட வராது, நான் நினைக்கிறேன் பாதுகாப்பு சான்றிதழ் காலாதி ஆகியிருந்தால் அப்படி ஏற்படுகிறதன, இந்த தளங்கள் பாதுகாப்பற்ற தளமாக இருந்தால் அனுமதிக்காது.
  14. இன்றைக்கு சென்னை தனது சகாக்கள் போல விளையாடும் (கொல்கத்தா, ராஜஸ்தான்)😂
  15. இது நல்ல தெரிவுதான், ஆனால் கடைசியாக நடந்த போட்டியில் பராக் மட்டுமே ஆட வேண்டிய தேவை ஏற்பட்டது. கவலைப்படாதீர்கள் அணையப்போகின்ற விளக்குகள் பிரகாசமாக எரியுமாம் (கொல்கத்தா, ராஜஸ்தான் இன்றைக்கு சென்னை), ஆனால் அவற்றால் ஒரு பிரஜோசனமும் இல்லை.😂
  16. ராஜஸ்தான் அணியில் பல இடது கை ஆட்டக்காரர்கள் விளையாடுவதால் வோசிங்கடன் சுந்தரும் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, சுழல் பந்துவீச்சாளர்களுக்கெதிராக மிக குறைந்த ஓட்டவிகிதங்களை கொண்ட வீரராக ஜுரல் உள்ளார் என கூறப்படுகிறது.
  17. Pitch and conditions Four of the seven games in Jaipur have been won by the chasing side since last year, with the average first innings score being 184. Day temperatures have crossed 40 degrees celsius; while the evenings will be a tad cooler, there's no escaping the oppressive heat that will take a toll on the players' fitness. 180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி ஈட்டலாம் என்பது கிரிக் இன்போவின் ஆடுகள அறிக்கை கூறுகிறது. ராஜஸ்தான் அணியின் மத்திய துடுப்பாட்ட பகுதி கடந்த போட்டிகளை மிக சாதகமான நிலையில் இருந்து அதனை தோல்விக்கு எடுத்து சென்றுள்ளது. ராஜஸ்தான் அணியின் பராக், ஜுரல், கெட்மெயர் இந்த மூவரும் அந்த அணியின் துடுப்பாட்ட மத்திய பிரிவில் மிக சிரமத்துக்குள்ளாகின்றனர் என கிரிக் இன்போ தளம் கூறுகிறது. இந்த மூவரையும் ராஜஸ்தான் துடுப்பாட்ட வரிசையில் எங்கே கொண்டு போய் மறைத்து வைக்கலாம் அல்லது வேறு ஏதாவது மாற்றுவழிகள் செய்யலாமா என யாழ்கள போட்டியாளர்களிடம் நகைசுவை ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுகிறது. இது வெறும் கல கலப்பிற்கான விடயம் அதனால் யாருடைய கருத்து மிக சிறப்பாக உள்ளதென பார்க்கலாம்.
  18. எனது $1 KAYO சந்தா முடிந்துவிட்டது, இன்றைய போட்டியில் ஜுரலின் விளையாட்டை பார்க்க ஆவலாக உள்ளது, நிங்கள் எதில் ஐ பி எல் பார்க்கிறீர்கள்?
  19. நானும் குஜராத்தான், ஜுரல் 3 ஆவதாக வந்தால் அப்படி ஒரு வேலை செய்துவிடுவார் எனும் நம்பிக்கைதான்,🤣
  20. ராஜஸ்தான் அணி இன்றைய குஜராத் அணியுடனான போட்டியில் துருவ் ஜுரலை ஏன் 3 ஆவதாக களமிறக்கக்கூடாது? அவசரப்பட்டு சாம்சனை காயத்திலிருந்து முழுமையாக குணமடையாமல் போட்டிக்குள் கொண்டுவரவேண்டிய தேவை இல்லை, சென்னை அணி போல ராஜஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிந்து விட்டது. ஜுரலினினை ஒரு போட்டியில் உக்கார வைப்பதற்கு பதிலாக 3 ஆவது இடத்தில் களமிறக்கினால் அவர் தனக்கு தேவையான நேரத்தினை எடுத்துக்கொள்ள 3 ஆவது இடம் நல்ல பொருத்தமான இடம். சாம்சனும் அடிக்கடி காயத்தினால் உள்ளே வெளியே என இருக்கிறார், ஜுரலுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை ஏன் குடுக்கக்கூடாது, இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இருக்கும்(சாம்சனுக்கு மாற்றீடு), அத்துடன் எமக்கும் 2 புள்ளிகள் கிடைக்கும்.😂
  21. ட்ரம்ப் பல முயற்சிகளை ஒருங்கே செய்ய முயற்சிக்கின்றார், ட்ரம்ப் தொடர்பில் அவர் மீதான விமர்சனம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது அண்மையில் அமெரிக்க மத்திய வங்கி ஆளுனரின் பதவியினை பறிப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவ்வாறு மத்திய வங்கியின் ஆளுனரை பதவியிலிருந்து தூக்கியெறிய முடியாது, மத்திய வங்கி சட்டம் மூலம் அவர் மீட்கு வட்டி விகிதம் குறைக்கவில்லை என்பதற்காக பதவி விலக்கினால் நீதிமன்றத்தில் ட்ரம்ப் தோல்வியடைவார் என கூறப்படுகிறது ( For cause). அமெரிக்காவின் முதல் காலாண்டு மொத்த தேசிய வருமானம் -0.2% ஆக வந்துள்ளது இன்னுமொரு காலாண்டு மொத்த தேசிய வருமான மறை இலக்கத்தில் வந்தால் பொதுவாக அதனை பொருளாதார சரிவு என வரையறுக்கிறார்கள் (recession). இந்த புள்ளி விபரம் தெரிந்த ட்ரம்ப் தனது தாக்குதலை மத்திய வங்கி ஆளுனரின் மேல் தொடங்கியுள்ளார் என கருதுகிறேன், வட்டி விகித குறைப்பு பொருளாதாரத்தினை தூண்டும் ஆனால் தற்போது பணவீக்கம் முழுமையாக கட்டிற்குள் வரவில்லை அந்த நிலையில் வட்டி விகித குறைப்பு பொருளாதார சரிவினை தூண்டும். பொருளாதார சரிவு வெறுமனே மொத்த தேசிய வருமானத்தினை மட்டும் கவனத்தில் கொள்ளப்படும் விடயம் அல்ல, மாறாக வேலை வாய்ப்பு, உற்பத்தித்துறை, தனிநபர் தேறிய வருமானம் என்பவற்றில் தங்கியுள்ளது. மொத்த தேசிய வருமானத்திலேயே அமெரிக்கா தற்போது சரிவினை கண்டு வருகிறது ஆனால் மற்ற விடயங்களில் ட்ரம்பின் ஆட்சி ஏற்பின் பின்னர் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது ஆனால் இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய காரணி, ஒன்று சரிந்தால் மற்றதும் சரிவடையலாம். Real-time Sahm Rule Recession In...Real-time Sahm Rule Recession Indicator https://tradingeconomics.com/united-states/manufacturing-pmi ட்ரம்ப் தனது புகழை விட்டு செல்ல விரும்புகிறார், ஆனால் அவர் நினைப்பதற்கும் நடைமுறைக்கும் இடையே இடைவெளி உள்ளது போல இருக்கிறது. தற்போது உலகம் ஒரு உண்மையினை உணர்ந்துள்ளது, போரினால் யாரும் அனுகூலமடைய முடியாது, கர்மா வீடு தேடி வரும்.
  22. பாதகத்திலும் ஒரு சாதகம் அந்த 4 அணிக்கு.🤣 பத்திரன விளையாடமாட்டார் எனும் கருத்து நிலவுகிறது, அவருக்கு பதிலாக நாதன் எலிஸ் விளையாட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது (உறுதிப்படுத்தப்படாத செய்தி), நாதன் எலிஸ் விளையாடிய போட்டிகளில் சென்னை வென்றுள்ளது. கைதராபாத் அணிக்கு விளையாடும் ஈசன் மலிங்காவினை 1.2 கோடிக்கு வாங்கியுள்ளார்கள், பத்திரன 13 கோடி.
  23. ஒரு போட்டி ஓய்வு கொடுப்பார்கள், அது அவர்களை அடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட தூண்டும், வீரர்களுக்கும் அது தெரியும்.
  24. யாழ்கள் சட்ட மன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொள்வதற்கு இந்த திரியில் மூழ்கி எழுந்தால் போதும் போல இருக்கிறது. எனக்கு சட்ட மன்ற தேர்தலுக்கு மற்ற தேர்தலுக்குமே (பெயர் தெரியவில்லை நாடுளுமன்ற தேர்தல்?) வித்தியாசம் தெரியவில்லை. பையன் யாழ்கள போட்டிக்காக நேரடியாக இந்தியாவிற்கு சென்று களநிலவரங்களை அவதானித்து வருகிறாரோ? தேர்தல் எப்போது?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.