Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. கொஞ்சகாலத்திற்கு முன்னர் எடுத்ததிற்கெல்லாம் புறக்கணித்த எம்மவர்கள் நிலையில் இந்தியா🤣, யார் இவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்கள். அனத்திலும் பிஜேபியின் அரசியல்.
  2. இந்த ஆடுகளம் பொதுவாக 190 வெற்றி இலக்காக உள்ளது, கடந்த சில நாள்களாக 40 பாகை வெய்யில் என கூறுகிறார்கள், ஆடுகளம் காய்ந்து சுழல்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளமாக மாறலாம். எமது புள்ளிகளுக்கு ஆப்பு வைப்பதற்காகவே கெட்டும் கமின்ஸ்சும் நாடு திரும்பாமல் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள் (ஒரு முடிவோட்தான் இருக்கிறார்கள்), லக்னோவின் நிலைமை சரியாக இல்லை என கருதுகிறேன். இந்த போட்டியில் லக்னோ தோற்றால் அவர்களின் அரையிறுதிவாய்ப்பு முடிவிற்கு வந்தது உறுதியாகிவிடும்.
  3. இந்த மாதிரி ஜெய்கிந்த் அரோகரா குறூப் அப்பர் மிடில் கிளாசில் உள்ளவர்கள் தான், போரில் இருந்து மிக தூரமாக இருந்து கொண்டு தமது தேசபற்று என நினைத்து செய்யும் குறழி வித்தைகள் இது, போரினால் எந்த பாதிப்பும் இவர்களை எட்ட போவதில்லை, தமது பிற்போக்கு சித்தாந்தங்களுக்கு வடிகால் அமைக்கும் வலது சாரி அரசுகளின் விளம்பர உத்தியான தேசப்பற்று அதன் வழி போர் என தமது நோக்கங்களுக்கும் விருப்பங்களுக்கு உதவி செய்யும் வலது சாரி அரசிற்கான தேவைகளை நாடாளாவிய ரீதியில் உருவாக்கும் கோமாளிகள்.
  4. போரினை விரும்புபவர்கள் அரசியல்வாதிகள்தான், கடந்த போர்களில் இந்திய பொருளாதாரன் பெரிதாக பாதிக்கப்படவில்லை ஆனால் இந்த போரில் இந்தியாவின் போர் வெறி எண்ணம் முதலீட்டாளர்களை அச்சுறுத்தலாம், சில கிழக்காசிய நாடுகளில் அரசியல் உறுதிதன்மை நிலவும் போது இந்தியாவில் ஆர்வம் காட்டுவதற்கான காரணமாக அதன் சந்தை வாய்ப்பாக இருக்கலாம் ஆனால் முதலுக்கே நஸ்டம் ஏற்பட்டால் இந்த நிலை மாறலாம். பெரும்பான்மையான இந்தியர்கள் ஏதோ கிரிக்கெட் போட்டி போல இந்தியா போரிட்டு பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும் என விரும்புகின்ற நிலை காணப்படுவதால், அரசியல்வாதிகளும் போரினை விரும்பலாம் ஆனால் அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. வங்குரோத்தான ஒரு நாட்டுடன் வரிந்து கட்டிக்கொண்டு போரில் குதித்த இந்தியாவின் நிலை பரிதாபம், இதற்கு இன்னொரு காரணம் முட்டாள் இந்திய ஊடகங்கள்.
  5. ராஜஸ்தான் அணி எப்போதும் அப்படித்தான்.
  6. கிருபன் இன்றைய போட்டியில் நாம் தெரிவு செய்த அணி விபரம் தெரிவிக்காமையால் எந்த அணியிற்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் குழப்பம் நிலவுகிறது.🤣
  7. நல்ல முயற்சி!, அனைவரும் அவுஸினையே தெரிவு செய்யும் போது தென்னாபிரிக்காவினை தேர்வு செய்த்தமை நல்ல முயற்சிதான்.
  8. இந்த போட்டியிலாவது முதலாவது என்று மட்டும் தெரிவு செய்வதுடன் நிற்காமல் பாஸ் மார்க்ஸ் கொடுக்கும் முறையினை அறிமுக படுத்தினால் போட்டியாளர்கள் (40 புள்ளிக்கு மேல் அல்லது வேறு தெரிவு) ஆர்வமாக கலந்து கொள்வார்கள்.🤣
  9. யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) கமரன் கிரீன் போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) கெய்சோ ரபாடா போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) அவுஸ்திரேலியா நீங்கள் எப்போதும் எதிர்த்திசையில் பயணிப்பவர் (against the herd), அதனால் அதிர்ஸ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
  10. ஜெராட் கிம்பெரின் காணொளி, அவுஸ்ரேலிய விளையாட்டு எழுத்தாளர், கிரிக் இன்போ போன்ற தளங்களிலும் எழுதுகின்றார், ஒரு துறைசார் நிபுணர். சில புத்தகங்களும் எழுதியுள்ளார். என்னை அடிக்கவேண்டுமென்றால் இரண்டு அடி போட்டுவிடுங்கள் தாங்கிக்கொள்கிறேன், தயவு செய்து இந்த கூட்டணியில் என்னை சேர்க்காதீர்கள். பஞ்சாப்பிற்கு அதிக வாய்ப்புள்ளது நாலாவது அணியாக செல்வதற்கு டெல்லி நிலமை சரியில்லை, டெல்லியின் தலைமை பயிற்சியாளர் கேமங் பதானி தமிழ் நாட்டவர்.
  11. எதற்காக புவியீர்ப்பு விசைக்கெதிராக முயற்சிக்கிறீர்கள், இலகுவாக கீழே போகலாம்தானே?😂 அல்லது இந்த திரிச்ங்கு சொர்க்கத்தினை அனுபவிக்கலாம். டெல்லியே அரையிறுதிக்கு போகுமா என தெரியவில்லை நீங்கள் கொல்கொத்தாவினை பற்றி யோசிக்கிறீர்கள்.🤣
  12. உங்களுக்காக ஒரு சுவாரசியமான விடயத்தினை (விவாதத்திற்காக) கொண்டு வந்துள்ளேன். ஆரம்பிக்கலாமா?🤣
  13. இரன்டு இராணுவ போக்குவரத்து விமானம் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டது, மிக குறுகிய கால இடைவேளையில் பலாலி முகாமிற்கு அருகாமையில். எனக்கும் பலவிடயங்களில் பல தவறான புரிதல்கள் இன்றும் உண்டு, இது ஒரு பெரிய விடயமல்ல, சில நேரஙகளில் தவறான விடயம் என தெரிந்தாலும் அதனை திருத்த முடியாமல் இருக்கின்ற நிலைக்குத்தான் வருத்தப்படவேண்டும், தவறாக புரிந்து கொண்டவற்றிற்காக வருத்தப்பட தேவையில்லை. அதற்காக தன்னம்பிக்கையினை கைவிடக்கூடாது (எனது பார்வையில் ஒரு சிறப்பான மனிதராக உள்ள வெகு சிலரில் நீங்களும் ஒருவர்).
  14. https://en.wikipedia.org/wiki/28_April_1995_Sri_Lanka_Air_Force_Avro_748_shootdown#:~:text=Sri%20Lanka%20Air%20Force%20Avro%20748%20CR835%20was%20shot%20down,crew%20and%20passengers%20were%20killed.
  15. சவூதி சீனாவிடம் இருந்து J35 வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தது பின்னர் அதனை கை விட்டுவிட்டது எனகருதுகிறேன், ஆனால் நேட்டோ ஆயுதங்களில் சவுதி ஆர்வம் கொண்டுள்ளது என கருதுகிறேன் (அண்மையில் அமெரிக்காவிடம் இருந்து 142 ப் இல்லியன் பெறுமதியான ஆயுதங்கள் கொள்வனவு செய்ய முடிவெடுத்துள்ளது. J35 அமெரிக்க F35 நிகரானது என கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் விமான எதிர்ப்பு ஏவுகணையினை பாவித்ததாகவே கேள்விப்பட்டேன், கைத்துப்பாக்கியால் விமானத்தினை சுட்டு வீழ்த்தவில்லை என கருதுகிறேன்.
  16. மழை குறுக்கிட்ட போட்டியின் இடைவெலியினை நிரப்ப பழைய போட்டிகளை போடுவது போல இந்த திரி ஓடுகிறது, இன்னொரு நாள் உள்ளது போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்க.
  17. இந்த நிறுவனத்தினையே நானும் குறிப்பிட்டிருந்தேன் வெவ்வேறு சந்தைகளில் வெவ்வேறு பங்கு விலை காணப்படுகிறது என கருதுகிறேன். இந்த இரக விமானம் அதியுயர் திறன் வாய்ந்த விமானம் அல்ல என கருதுகிறேன், முதன் முதலாக இலங்கை விமானப்படை ஜெட் விமானமாக சீனாவின் J7 விமானத்தினை கொள்வனவு செய்திருந்தது, கிபிரை விட மிக வேகமாக பயணிக்கும் இந்த விமானம் குண்டு வீசும் போது அதன் வேகத்தினை குறைத்து வீசும், அப்போது இந்த விமானம் (J7), Mig 21 விமானத்திற்கு இணையானது என கூறினார்கள், ஆனால் இலங்கை விமானப்படை இந்த இரக விமானத்தினை பின்னர் பாவிக்கவில்லை அதற்கு பதிலாக கிfபிரையே இலங்கை விமானப்படை பாவித்தது. பாகிஸ்தான் தனிய இந்த J10 விமானத்தினை கொள்வனவு செய்யவில்லை அதனுடன் இணைந்து ராடரினையும் கொள்வனவு செய்துள்ளது. ரபேலின் ஆரம்ப ராடர் லொக் எச்சரிக்கை மற்றும் ஏவுகணை எச்சரிக்கை ரபேலிற்கு கிடைக்காமல் போனதிற்கு காரணமாக இந்த இரக விமானங்களை தரையில் இருந்த சீன ராடர்கள் இனங்கண்டு அதன் இலக்கினை (டார்கெட் கோடினேசனை) J10 வழங்கியவுடன் அதன் செயல்பாடு முடிவடைந்து விட்டது அதன் பின்னர் விமானம் இலக்கிற்கு ஏவுகனையினை செலுத்தியவுடன் அதன் செயற்பாடு முடிவடைய அதன் பின்னர் அந்த ஏவுகணை சாப் ஏவாக்ஸ் விமானம் வழிநடாத்தியமையால் ரபேலினால் இறுதிவரை அதன் பாதுகாப்பு பொறிமுறை (Spectrum Dome) அதனை அடையாளம் காணமுடியாமல் போய்விட்டதாக கூறுகிறார்கள். இது ஒரு ஒருங்கிணைந்த தொடர்பாடல் தாக்குதல் முறை (integrated network).
  18. இரண்டு அடிப்படைவாத சக்திகளிடையேயான அதிகார போட்டியில் இரு தரப்பும் பயங்கரவாத தாக்குதல்களை மற்ற நாடுகளில் ஊக்குவிக்கின்றன, இந்து அடிப்படைவாதம் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டே இந்த முட்டாள்தனங்கள். கடந்த காலத்தில் இந்தியாவிற்கு அனுசரணையாக இருந்த நிலை தற்போதய போரில் முற்றிலும் 180 பாகை எதிர்நிலை எடுத்த நிலை (யாழிலேயே காணக்கூடியதாக உள்ளது) என்பது அதிகரித்துவரும் இந்து அடிப்படைவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே காட்டுகிறது.
  19. akhand bharat என்பதே ஆர் எஸ் எஸ் இன் கொள்கை அதன் முதற்கட்டம் காஸ்மீருக்கான சிறப்புரிமை நீக்கம், இது பற்றிய ஒரு தெளிவான கருத்தினை கோசான் கூறியுள்ளார். https://en.wikipedia.org/wiki/Akhand_Bharat யாழில் வாணிபம் பகுதியில் இதெற்கென கோசான் ஒரு திரி தொடங்கியிருந்தார்.
  20. https://finance.yahoo.com/quote/AM.PA/ https://finance.yahoo.com/quote/300696.SZ/ சீன நிறுவனத்தின் பங்குகளின் விலை 20% உயர்ந்துள்ளது ஆனால் ரபேலின் பங்கு விலையில் பெரிதாக மாற்றம் நிகழவில்லை என கருதுகிறேன் அல்லது நான் தவறாக Dassault Aviation (Rafael) பங்கு சுட்டியினை கருதிவிட்டேனா?
  21. இது புளட்டினை வைத்து மாலைதீவை பிடித்தமாதிரியாகவும் இருக்கலாம் அல்லவா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.