Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. நான் அறிந்தவரை எதிரிகளின் கல்லறைகள் கொண்ட இடத்தினை ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைத்து இறந்தவர்களுக்குரிய குறைந்த பட்ச மரியாதை செய்வதனை கூட விரும்பாத இனமாக எந்த இனமும் இருந்ததாக அறியவில்லை, ஆனால் இந்த சிங்கள இராணுவத்தினர் தமது மூதாதையர் மிருகத்திலிருந்து வந்தவர்கள் எனும் அவர்கள் மகாவம்ச கதையினை உண்மையாக முயல்கிறார்களோ என கருதுகிறேன்.
  2. இது இலங்கை அரசு தொடர்பான மோசமான விம்பத்தினையே பிரதிபலிக்கும், சட்டம் அனைவருக்கும் பொதுவானது ஆனால் சட்டத்தினை வலுவிலக்க செய்யும் இவ்வாறான நடவடிக்கைகளே பல மனித் உரிமை மீறல்கள் மற்றும் மக்களின் அடிப்படை உரிமை மீறல்களாக தொடர்கின்றது. தற்போதுள்ள அரசு கூட இந்த பயங்கரவாத தடை சட்டத்தினை நீங்க விரும்பாததன் மூலம் நாட்டில் இன முரண்பாட்டினை தொடர விரும்புகிறதோ எனும் சந்தேகத்தினை சிறுபான்மை மக்களிடம் ஏற்படுத்திவிடலாம். ஒரு நாட்டில் அவசரகால நிலை தொடர்ந்து நிலவுகிறது எனும் நிலை காணப்பட்டால் அது பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல, இந்த அடிப்படை புரியாமல் இவர்கள் என்ன ஆட்சி செய்து கிழிக்கப்போகிறார்களோ தெரியவில்லை.
  3. ஜெசி லிவர்மோர் பங்கு சந்தை வீழ்ச்சி ஏற்படலாம் என கணித்திருந்தார் ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதால் அதுவரை தனது ஓய்வை கழிக்க புளோரிடா சென்றார், ஒரு நாள் காலை பத்திரிகையினை பார்த்த போது TT எனும் பங்கு 155 இல் விற்பனையாகி கொண்டிருந்தது அவர் கடைசியாக பார்த்த போது அது 140 இல் இருந்திருந்தது. பொதுவான சந்தை நிலவரம் சரியில்லாத நிலையில் இந்த ஒரு பங்கு மாத்திரம் உயர்வடைவதற்கான காரணம் அவருக்கு விளங்கவிலை, ஆனால் அவர் நினைத்தார் அது மூலதன திரட்டலுக்காக அந்த நிறுவனத்தினர் பங்கின் விலையினவேணுமென்றே உயர்த்துகின்றனர் என உனர்ந்தார். அதனால் அந்த பங்கினை விலை 153 இலிருந்து விற்க ஆரம்பித்தார் விலை வீழ்ச்சியடைய அவரது நிலையினை அதிகரிக்க தொடங்கினார் விலை 133 எட்டிய போது 30000 பங்குகலை விற்றிருந்தார். அதே காலத்தில் மற்ற வர்த்தகர்களும் அந்த பங்கினை விற்றார்கள், ஆனால் விலை 133 இனை எட்டிய போது சாமானிய மக்களுக்கு அது ஒரு இலாபமான விலையில் வாங்குவத்ற்கு ஏற்ற பங்காக தெரிந்தமையால் அந்த பங்கினை வாங்கினார்கல் அதனால் சந்தையில் காணப்பட்ட Floating shares அனைத்தும் வற்றியது, இந்த சந்தர்பத்தினை பாவித்து அந்த நிறுவனத்தினர் ஒரு short squeeze நடவடிக்கையில் இறங்கினர் விலை மீண்டும் 150 தொட்டது விலை 150 தொட்டதும் அந்த பங்குடன் நேரடியாக மோதாமல் அந்த பங்கின் பெருமளவான உரிமையினை கொண்ட ECC இன் பங்குகள் 10000 லிவர்மோர் விற்றார். அந்த பங்கு TT பங்கு போலல்லாது சந்தையில் பெரிதாக கவனத்தினை ஈர்க்காத பங்கு 10000 ப்ங்குகள் விற்றதும் அந்த நிறுவன பங்கின் விலை பெருமளவில் சரியத்தொடங்கியது, இதனை பார்த்த மற்ற வர்த்தகர்கள் TT பலவீனத்தினை உணர்ந்தே ECC உயரதிகாரிகள் தமது பங்கினை விற்கிறார்கள் என கருதி TT பங்குகளை விற்க தொடங்கினார்கள், இந்த தடவை TT ஆல் எதுவும் செய்ய முடியவில்லை விலை 90 இற்கு கீழே சரியத்தொடங்கியது. இந்த சம்பவத்தில் சாமானியரகளின் பங்கு வாங்கல் நடவடிக்கையினை விகோப் Automatic rally என வகைபடுத்துகிறார். நடை முறையில் Automatic rally (AR) கீழே உள்ள வரைபடத்தில் (இந்த வாரம் AUDJPY) சிகப்பு கோட்டினால் காட்டப்பட்டுள்ளது, பின்னர் விலை ஒரு சிறிய ranging நகர்கிறது இதனை Re distribution என விகோப் வரையறுக்கிறார்.
  4. பொதுவாக சந்தையில் ஏற்படும் விலை மாற்றம் முதலீட்டாளர்களின் கவனத்தினை ஈர்க்கின்றது, இந்த விலை மாற்றங்கள் மேலோட்டமாக பார்க்கும் போது அது ஒரு எதேச்சையாக (Randomly) நிகழ்வது போல இருக்கும், ஆனால் அடிப்படையில் விலை மாற்றங்களின் பின்ணணி பற்றிய பார்வை சமானிய மனிதர்களில் இருந்து தொழில் முறையான முதலீட்டாளர்களின் பார்வையிலிருந்து வேறுபடுகிறது. சந்தையில் இரண்டு நிலைகள் காணப்படுகிறது 1. Trending market (விலை ஒரு இலக்கு நோக்கியதாக உயர்ந்தோ(up trend) அல்லது இறங்கி (Down trend) செல்லலாம்) 2. Ranging Market ( விலை எந்த வித இலக்கின்றி பக்க வாட்டாக நகருதல் (choppy) அதன் விலை வித்தியாசம் மிக குறுகியதாக இருக்கும்) இந்த இரண்டாவது நிலையான பக்கவாட்டான விலை (Ranging) இரண்டு சந்தர்ப்பங்களில் நிகழும் 1. Accumulation 2. Distribution ஒரு பங்கினை சாமானியர்களின் கண்களுக்கு புலப்படாத வகையில் அதன் விலையினை அதிகரிக்காமல் ( பொருள்களின் தேவை அதிகரிக்கும் போது அதன் விலை இயல்பாக அதிகரிக்கும்) அதனை வாங்கி குவிப்பார்கள் பின்னர் அதே பொருளை விலை ஏற்றி அதிக விலையில் ஆனால் அதிக விற்பனையின் போது ஏற்படும் விலை வீழ்ச்சி ஏற்படாமல் விற்பார்கள். இந்த வாங்கும் விற்கும் நடவடிக்கையே Accumulation & Distribution, இந்த நிகழ்வின் போது விலை பக்கவாட்டாக நகரும். விலை குறைவான பங்குகளை வாங்கியவர்கள் அதனை அதிக விலைக்கு விற்பதற்காக செய்யும் நடவடிக்கை Mark up என அழைக்கிறார்கள் அதே போல அதிக விலைக்கு விற்ற பங்குகளை திரும்ப வாங்குவதற்காக அந்த பங்குகளை சந்தையில் விற்று விலைச்சரிவினை ஏற்படுத்தும் நடவடிக்கையினை Mark down என அழைக்கிறார்கள். இந்த விலை ஏற்ற விலை வீழ்ச்சி நடவடிக்கையின் போது விலை இலக்கு நோக்கி நகரும் (Trending market). விக்கோப்பின் இரண்டாவது விதியான cause & effect இல் காரணமாக (Cause) Accumulation & Distribution உம் காரியமாக (Effect) Mark up Mark down உம் காணப்படும்.
  5. தப்பா நினைக்காதீர்கள், திரியினை சுவாரசியமாக்க குறிப்பிட்டேன் (இந்த பதிவு இட்டதிற்கு காரனம் கள உறுப்பினர்களை ஆர்வமாக பங்கு பற்றுவார்கள் என்பதற்காக).
  6. ஒரு மணிநேர XRP வரைபடம், அடுத்த சில மணித்தியாலங்கள் விலை அதிகரிக்குமா இல்லை விலை குறைவடையுமா? தற்போது முதல் தடவையாக தனது பலவீனத்தினை வெளிப்படுத்துகிறது, அவ்வாறாயின் 2.00 resistance விலை ஆகுமா?
  7. எந்த ஒரு நாடும் தனது நலனிலே அக்கறை காட்டும், அவர்களுக்கு நன்மை இல்லாவிட்டால் எதுவும் செய்யமாட்ட்டார்கள், பொதுவாக அமெரிக்கர்களுக்கு எந்தவிதமான அரசியல் நேர்மை இருப்பது கிடையாது என்பதனை வைத்தே இதனை கூறுகிறார் என கருதுகிறேன், உக்கிரேன் அதிபர் செலன்ஸ்கி தனது வெற்றி திட்டத்தில் தனது வழங்களை பகிர்ந்து கொள்வதற்கு தயாராக இருப்பதாக கூறியதன் காரணம் கூட அமெரிக்கர்கலின் சுயரூபத்தினை அறிந்தமையாலேயே, அமெரிகாவினை நம்பி போரினை தொடருகின்ற உக்கிர்ரேனிற்கான செலவுகளை அமெரிக்கா தொடராமல் விடுவதற்கு (தேவையில்லாமல் எதற்காக செலவு செய்ய வேண்டும் என நினைப்பவர்கள்) இரஸ்சியா ஒரு அமெரிக்க நலனினை பேணும் ஒரு திட்டத்தினை கொண்டு வந்தால் உக்கிரேனை அமேரிக்கா கைவிட்டு விடும். அமெரிக்கா இந்த போரினை தன்னிச்சையாக நிறுத்த முடியாது அதே நேரம் இரஸ்சியாவினை தோற்கடிக்கவும் முடியாது அதனால் சாட்சிக்காரனின் காலில் விழுவதனை விட செத்த கிளி இரஸ்சியாவின் காலில் விழ அமெரிக்கா முடிவெடுக்கக்கூடும்😁. ஆனால் இதுவரை இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் எனும் மாயையினை சல்லி சல்லியாக உடைத்த இரஸ்சியாவுடன் சமரசம் செய்ய முடியாமல் அவர்களது ஈகோ இடிக்கிறது அதற்கு ஒரு ஒத்தடம் கொடுத்தால் நிலமை சரியாகிவிடும் என்பதனையே புட்டின் பூடகமாக கூறுகிறார்😁. இதெல்லாம் அரசியலில் சகயம், ஆனால் இப்படி ஒரு நிலமை வரும் என தெரியாமல் உக்கிரேன் இருந்ததா என்பதனை நம்ப முடியவில்லை.
  8. ஒரு மணிநேர XRP வரைபடம், அடுத்த சில மணித்தியாலங்கள் விலை அதிகரிக்குமா இல்லை விலை குறைவடையுமா?
  9. ஒரு மணிநேர XRP வரைபடம், அடுத்த சில மணித்தியாலங்கள் விலை அதிகரிக்குமா இல்லை விலை குறைவடையுமா?
  10. நான் சும்மா விளையாட்டாக கூறினேன், எனக்கு தெரியவில்லை, நம்புங்கள் அது கற்பனா சக்திதான்😁.
  11. நான் எனது படத்தினை அவதாரில் போட்டுள்ளேன் ஆனால் பெயர் வேறு, ஆனால் உங்கள் பெயர் 'ர' இல் ஆரம்பித்து 'ன்' இல் முடிவடையலாம் நடுப்பகுதியில் வேறு ஒரு பெயரை இணைத்திருப்பீர்கள் என கருதுகிறேன் (எனக்கு இப்படி எல்லாம் கற்பனா சக்தி உள்ளது)😁
  12. உக்கிரேனிய இராணுவத்தரப்பின் கருத்தினடிப்படையில் தற்போதுள்ள பெருமளவானவர்கள் 45 வயர்கிற்கு மேற்பட்டவர்களாக உள்ளார்கள் (எவ்வளவு கொடுமையாக இருக்கிறது) என்றும் அதனால் போர் முனையில் பல நெருக்கடி நிலவுகிறது என கூறுகிறார்கள். நிலமை ஒன்றும் நன்றாக இல்லை அங்குள்ளவர்களுக்கு, ஆனால் மேற்கு ஊடகங்களில் அவர்கல் வெல்வது போல ஒரு பிரமை ஏற்படுத்தப்படுகிறது அதன் மூலம் ஆயுத வியாபாரத்தினை நடத்தவும் அதனால் வரும் இலாபங்களை அரசியல்வாதிகள் நன்மை அடைவார்கள் சாமானிய மக்கள் அந்த அழிவுகளுக்கு வரி கட்டுவார்கள் அங்குள்ள மக்கள் தமது வாழ்க்கையினை தேவையற்ற போரிற்காக இழப்பார்கள். முதலில் மக்கள் என்றிருந்தாலே நிலம் ஒன்று இருக்க வேண்டும் இவர்கல் அங்குள்ள மக்களை அழித்து அந்த நிலங்கலையும் வழங்களையும் கொள்லை அடிக்க நினைக்கிறார்கள், ஆனால் இது புரியாத சாமானிய மனிதர்கள் இந்த போருக்கு ஆதரவு வழங்குகிறார்கள் ஊடக பரப்புரைகளை பார்த்து. அதற்கு கூறப்படும் கருத்து இரஸ்சியா பலவீனமானது என 3 வருடமாக கூறி மக்களிடம் தொஅட்ர்ந்து போருக்கு ஆதரவினை திரட்டுகிறார்கள் நடைமுறையில் இந்த பணம் உயிர்கள் எல்லாம் சில சுய நலமிகளுக்கு இலாபமாக செல்வது மட்டுமே,
  13. Supply zones நீல கிடையான கோடுகளால் காட்டப்பட்டுள்ளது இதற்கு closing price (line chart) பயன்படுத்தப்பட்டுள்ளது. விலை இந்தக்கோடுகளை கடக்கும் போது அது பின்னர் Demand zone அக மாறிவிடும்
  14. அமெரிக்காவின் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்புவதை ஐரோப்பா எடைபோடுகிறது நவம்பர் 25, 2024, இரவு 10:14 1142 பகிர்: பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் (புகைப்படம்: LUDOVIC MARIN/Pool மூலம் REUTERS) அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, கெய்விற்கு அமெரிக்க ஆதரவு நிறுத்தப்படும் சாத்தியம் பற்றிய கவலைகளுக்கு மத்தியில், மேற்கத்திய துருப்புக்கள் அல்லது தனியார் இராணுவ நிறுவனங்களிலிருந்து (PMC) கூலிப்படைகளை உக்ரைனுக்கு அனுப்புவது பற்றிய விவாதங்கள் ஐரோப்பாவில் தீவிரமடைந்துள்ளன என்று பிரெஞ்சு செய்தித்தாள் Le Monde நவ. 25. பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அண்மையில் பிரான்ஸ் சென்றிருந்தபோது இந்தச் சூழல் விவாதிக்கப்பட்டது . லண்டனும் பாரிசும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பில் கவனம் செலுத்தி ஐரோப்பாவில் நட்பு நாடுகளின் முக்கிய குழுவை உருவாக்குவது குறித்து இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக ஒரு பிரிட்டிஷ் இராணுவ ஆதாரம் Le Monde இடம் தெரிவித்தது. முன்னதாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், உக்ரைன் போர்முனைகளை ரஷ்யா மீறினால், உக்ரைன் அத்தகைய உதவியை கோரினால், மேற்கத்திய துருப்புக்களை உக்ரைனுக்கு அனுப்புவது பரிசீலிக்கப்படும் என்று கூறினார். "ரஷ்யா வெற்றி பெறுவதைத் தடுப்பது மற்றும் நிலையான அமைதியை மீட்டெடுப்பதே எங்கள் குறிக்கோள். இது உக்ரைன் தனது பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை முழுமையாக மீட்டெடுக்க அனுமதிக்கும் ஒரு சமாதானமாகும், இது அனைத்து உக்ரைனியர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கும், ”என்று அவர் கூறினார். மேலும் படிக்க: உக்ரைனில் சாத்தியமான டிரம்ப்-புடின் ஒப்பந்தத்தை எதிர்கொள்ள போலந்து புதிய கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கிறது உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரின் சிறப்புத் தூதராக முன்னாள் உளவுத்துறைத் தலைவர் ரிச்சர்ட் கிரெனலை டிரம்ப் நியமிக்கலாம் மார்ச் மாதம் லு பிகாரோவின் கூற்றுப்படி, உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்ப ஐந்து காட்சிகளை மக்ரோன் பரிசீலித்து வந்தார் , இருப்பினும், அவர்களில் சிலர் "நேரடியான போரின் செயல்" என்று விளக்கப்படலாம். உக்ரைனின் கதையை உலகிற்கு சொல்ல உதவுவீர்களா? இருபது ஆண்டுகளுக்கு முன்பு, பெரும்பாலான மக்கள் உக்ரைனைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இன்று, நாடு அனைவரின் உதடுகளிலும், அனைவரின் தலைப்புச் செய்திகளிலும் உள்ளது. போர் எங்களை முதல் பக்கத்தில் தள்ளியது. ஆனால் இசை மற்றும் கலாச்சாரம் முதல் தொழில்நுட்பம் வரை - நாம் பெருமைப்படும் பல விஷயங்கள் உள்ளன. நெகிழ்ச்சி, மகிழ்ச்சி மற்றும் உயிர்வாழ்வதற்கான உக்ரேனியக் கதையை உலகிற்குச் சொல்ல உங்கள் உதவி எங்களுக்குத் தேவை. எங்கள் முயற்சியை ஆதரிக்க நீங்கள் விரும்பினால், மாதத்திற்கு 5$ முதல் Patreon இல் எங்களுக்கு ஆதரவளிக்கவும் . நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உக்கிரேனின் புதிய குரல் தளத்தில் இருந்து கூகிள் மொழி பெயர்பினூடாக.
  15. இந்த ஆடுகளம் பொதுவாக வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம், உண்மையில் இந்தியா சிறப்பாக விளையாடி இருந்தது அதே நேரம் அவுஸ் மோசமாக விளையாடியுள்ளது. இந்தியா அனைத்து போட்டிகளில் வென்றால் உலக டெஸ் தொடர் இறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
  16. அரசியல் பிரிவு போரிற்கு ஆட் திரட்டலில் ஈடுபடுவர், வீதியால் செல்பவர்கலை பிடித்து வைத்து பேசி ஒரு வழி பண்ணி விடுவார்கள், அதே போல் உக்கிரேனில் TRC என்பவர்கள் வீதியால் போற வாறவர்களையெல்லாம் பிடித்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள், தற்போது அந்த TRC சேர்ந்த 36000 பேரையும் (அவர்கள் ஆட் திரட்டலில் திறமையாக செயற்படவில்லை) இராணுவத்தில் சேர்ப்பதுடன், இராணுவத்தில் இருப்பவர்களே நேரடியாக ஆட் திரட்டலில் ஈடுபட உக்கிரேன் இராணுவத்தளபதி திட்டமிட்டுள்ளாராம். இது வரை காலமும் மற்றவர்களை பிடித்து போருக்கு அனுப்பி கொண்டிருந்தவர்களையே அந்த பாவம் பிடித்து அவர்களையும் போருக்கு அனுப்ப போகிறது. இரு தரப்பு போரில் ஈடுபட்டு அழிகிறது அதில் எரிகிற வீட்டில் கிடைப்பது இலாபம் என நினைத்து போரை ஊக்குவித்த 3 ஆம் தரப்புகள் ஒரு காலத்தில் இந்த போரினால் பாதிப்படையும் நிலை வரவுள்ளது, இதனைதான் கர்ம வினை என்பார்கள். பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உக்கிரேன் போரிற்கு ஆட் திரட்ட உள்ளதாக கூறுகிறார்கள் உண்மையா?
  17. நேரடியாக விடயத்தினை கூறாமல் விகோப் தத்துவார்த்தத்தினை முன்னிலைப்படுத்தியமைக்கு மன்னிக்கவும் கோசான், யாழ்களத்தில் உங்களைபோல மிக சிறந்த சிந்தனையாளர்கள் உள்ளார்கள், இந்த திரியில் அந்த சிந்தனைகளை வெளிப்படுத்தினால் அதனால் நன்மை அடைவேன் எனும் சுயநலமே உங்களுக்கு மறைமுகமாக இந்த முறைமையினை பரிச்சயமாக்க அவ்வாறு கருத்திட்டிருந்தேன். உறுதியாக தெரியும் உங்களை போன்ற சிந்தனையாளர்களின் பங்களிப்பு இந்த திரியில் இருந்தால் மிக பெரிய அனுகூலம் யாழ்கள வாசகர்களாகிய எமக்கு கிடைக்கும். XRP hourly charts மேலே உள்ள இரண்டு படங்களும் இன் தற்போதய நிலவரம் அடுத்து குறைந்தது ஒரு மணி நேரத்தில் விலையில் என்ன மாற்றம் நிகழும்? ஆரம்ப காலத்தில் பங்கின் விலையும் அதன் அளவும் இவ்வாறு குறிப்பிடப்படும், இதனை Tape reading என்பார்கள். இதில் இரண்டு விடயங்கள் மட்டுமே உள்ளது 1. விலை 2. எண்ணிக்கை (அளவு) 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் சீனியிற்கு பெருமளவு டிமான்ட் இருந்த காலப்பகுதியில் கேவ் மையர் என்பார் சீனி வர்த்தகத்தில் முக்கிய புள்ளியாக இருந்தார். அந்த சம காலப்பகுதியில் டீகன் வைட் என்ற பங்கு வர்த்தகர் பிரபலமாக இருந்தார் ஒரு நாள் டீகன் வைடின் காரியாலயத்திற்கு அவரது நண்பர் ஒருவர் வந்து உபயோகமான தகவல் கொடுத்தால் அதற்கு பரிசளிப்பீர்கள் என கூறியிருந்தீர்களல்லவா என கூறி கேவ் மையர் சீனி பங்குகளை வாங்கி குவிக்கிறார் என கூறினார் (அந்த காலத்தில் ஏகப்பட்ட Tariff இருந்தாக கூறப்படுகிறது) அதற்கு டீகன் வைட் அதனை உடனடியாக நம்பாமல் அவரிடம் பல கேள்விகளை கேட்டு விட்டு தனது உதவியாளாரை கூப்பிட்டு 10000 சீனி பங்குகளை சந்தையில் விற்க கூறினார், வந்த அவரது நண்பர் எதிர்பார்த்தது சீனி பங்குகளை டீகன் வைட் வாங்குவார் என ஆனால் இவர் விற்பதனை பார்த்து அவர் குழம்பி விட்டார், விற்பனை உறுதிப்படுத்தல் வந்த பின் Ticker tape இனை பார்த்துக்கொண்டிருந்த டீகன் வைட் தனது உதவியாளரிடம் கூறினார் மீண்டும் 10000 சீனி பங்குகளை விற்குமாறு. டீகன் வைட் நண்பர் பொறுமை இழந்து எனது தகவலை உபயோகப்படுத்தாவிட்டால் பரவாயில்லை நான் வேறு எங்காவது கொண்டு செல்கிறேன் என கூறினார். அதற்கு டீகன் வைட் எதுவும் கூறாமல் Ticker tape இனை பார்த்த வண்ணம் இருந்தவர் தனது உதவியாளரை அழைத்து 30000 சீனி பங்குகளை வாங்குமாறு கூறினார், பின்னர் தனது நண்பரை பார்த்து கூறினார். நண்பரே நான் உங்களை நம்புகிறேன் ஆனால் நான் ஒரு பங்கு வர்த்தகராக இந்த தகவலுக்கு ஒரு ஆதாரம் வேண்டும் அதனாலேயே முதலில் 10000 பங்குகளை விற்க கூறினேன், சந்தையில் விலை குறையாமல் அந்த பங்குகளை உடனே எடுக்கப்பட்டு விட்டது, அந்த தகவலை மேலும் உறுதிப்படுத்த இரண்டாவது 10000 பங்குகளை விற்க கூறினேன் அந்த பங்குகளும் விலை மாற்றம் இல்லாமல் எடுக்கப்பட்டுவிட்டது, அதன் மூலம் நண்பரே நீங்கள் கூறிய தகவல் ஆதார பூர்வமானது என உணர்ந்து கொண்டதால் 30000 பங்குகளை சந்தை விலையில் வாங்கினேன் என்றார். சந்தையில் பொருளகள் அதிகமாக இருந்தால் விலை குறைவடையும் மறுவளமாக பொருள்கள் குறைவாக இருந்தால் விலை அதிகரிக்கும் ஆனால் இந்த பொது விதியில் மாற்றம் நிகழும் போது அங்கே சிறந்த பெரிய நிறுவனங்களின் செயற்பாடு மறைந்திருக்கும். அவர்களுக்கு அரச மட்ட தொடர்புகள் மற்றும் மிக முக்கிய தொடர்புகளினூடாக சாமானியர்கள் அறியாத விபரங்கள் தெரியும் ஆனாலும் அவர்கள் சும்மா போய் பங்குகளை வாங்க மாட்டார்கள் மற்றவர்களாகவே அவர்களுக்கு விற்குமாறு திட்டங்களை உருவாக்குவார்கள். அதாவது அதிகமாக வாங்கும் போது ஏற்படும் விலை ஏற்றத்தினை ஏற்படுத்தாமல் முடிந்தளவு குறைந்தளவு விலையில் வாங்குவார்கள். விலையும் அந்த விலையில் விற்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையிடையேயான தொடர்பியலினடைப்படையே விகோப்பின் முறைமை. XRP விலை அதிகரிக்கிறது, இந்த நிலை தொடருமா? அப்படி தொடருமாயின் அதற்கான ஆதாரம், மற்றும் இது ஒரு தற்காலிகமானதாயின் அதற்கான ஆதாரங்கள் என்ன என்பதே விகோப்பின் முறைமையூடாக கூறியுள்ளேன்,
  18. +கிரிப்டோ தொடர்பான எனது Fundamental அறிவு பூச்சியமாகும் இது வெறும் technical analysis. இதனை விகோப்பின் (Wyckoff) தொழில்னுட்ப ரீதியான ஆய்வடிப்படையில் பார்க்கப்பட்டுள்ளது. இது ஒரு வார வரைபடம் Wycoff 3 laws 1. Demand & Supply 2. Cause & Effect 3. Effort & Result இந்த 3 அடிப்படை விதிகளினடிப்படையில் விலை மாற்றத்தினை தீர்மானிப்பது வாங்குபவர்களும் விற்பவர்களும் ஆகும், அது முதலாவது விதி (Demand & Supply) சில குறிப்பிட்ட விலைகளில் விற்பனையாளர்கள் பெருமளவில் விற்க முற்படும் போது அதனை Supply zone ஆக வரையறுக்கப்படும் (0.57, 0.80, 1.02, 1.60, 2.73 Supply zones), அதே போல் Demand zone. இது வரைகாலமும் இருந்த 0.57 இனை விலை முறியடித்து உயர்ந்துள்ளது அதனால் இது வரை காலமும் நிலவியிருந்த நிலையில் இருந்து ஒரு சாதகமான மாற்றமாக இது உள்ளது. இரண்டாவது விதியாக உள்ள Cause & Effect காரனமாக (Cause) பங்குகள் பரிமாற்றம் செய்யப்பட்ட அளவும் அதன் விளைவால் (Effect) விலையில் ஏற்பட்ட மாற்றமும். அதிகளவான பங்குகள் பரிமாற்றம் செய்யப்படும் போது அதற்கேற்ற வகையில் விலையில் மாற்றம் ஏற்படும், பொதுவாக அதிக பங்குகள் வாங்கப்படும் போது விலை அதிகரிக்கும் அதற்கு எதிர்மாறாக அதிகளவான பங்குகள் விற்கப்படும் போது விலை குறைவடையும். நியூட்டனின் 3 ஆவது விதி கூறும் எந்த விளைவிற்கும் அதற்கு சமனும் எதிருமான விளைவு இருக்க வேண்டும் அதனை Effort & Result என இதில் பார்க்கப்படுகிறது. 2022 மார்ச் மாதம் தொடங்கி 2023 மே மற்றும் யூலை வரையான மாதத்தில் பெருமளவில் பங்குகள் இரகசியமாக வாங்கப்பட்டுள்ளன (விலையில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை ஆனால் விற்பனை அளவுகள் அதிகமாக உள்லது அதனை சிவப்பு வட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது) 2023 யூலை மாதமளவில் விலை அதிகரிப்பு ஏற்படும் அளவிற்கு பங்குகளின் அளவு இல்லை (அம்புக்குறியால் சுட்டி காட்டப்பட்டுள்ளது) இதனை Effort & Result இல் பார்த்தால் அது ஒரு உண்மையான உயர்வல்ல ஏனெனில் அதற்கு முந்தய காலப்பகுதியில் பெரியளவான பங்குகள் பரிமாற்றம் செய்யப்பட்ட போதும் விலை மாற்றம் ஒப்பீட்டளவில் இதனை விட மிக குறைவாகவே இருந்துள்ளது. அந்த 2023 யூலை மாத பங்கு அளவுடன் ஒப்பிடும் போது தற்போதய பங்கு அளவு குறைவாகவும் விலை அபரிதமாகவும் உள்ளது, கடந்த இரண்டு வாரத்தில் முதல் வாரத்தில் விலையில் (candlestick) மேலே வெறும் கோடாக உள்ள பகுதி supply zone ஆக இருந்தது கடந்த வாரம் அதனை கடந்து விலை ஏறியமையானது இது ஒரு உண்மையான விலை அதிகரிப்பாக தோன்றினாலும் பங்குகளின் அளவு மேலும் குறைந்துள்ளது அத்துடன் அது 1.60 Supply zone இல் நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் 1. Smart money Mark up இதுவரை காலமும் பங்குகலை வாங்கியிருந்த பெரிய நிறுவனங்கள் அதனை விற்பதற்கு சந்தையினை உருவாக்குதல் (இது நல்ல செய்தி அல்ல). 2. அல்லது உண்மையாக சந்தையில் விற்பதற்கு எவரும் தயாராக இல்லாமல் இருப்பதாகும் ( இது உண்மையாக இருந்தால் ஒரு மிக நல்ல செய்தியாகும்) இதனை எவ்வாறு அடையாளம் காண்பது? தற்போது 1.60 இல் விலை விற்பனை ஏற்படுவதால் விலை மீண்டும் ஒரு தடவை 1.60 செல்ல முய்ற்சிக்கும் அப்போது விலை 1.60 இனை கடந்தால் அடுத்த இலக்கு 2.73. மறு வளமாக விலை 1.20 கீழிறங்கி அங்கு மேலும் விலை கீழிறங்க முடியாவிட்டால் மேலெழுந்து 1.60 எதிர் கொள்ளும், அதன் போது விலை மீண்டும் அந்த விலையில் விற்பனையாளர்கள் வந்தால் விலை 1.20 கீழிறங்கும், அங்கு விலை தக்கவைக்கப்படாவிட்டால் 1.02 வரலாம். ஆகவும் நிலமை மோசமானால் 0.80 போகலாம், தற்போது பெருமளவில் 0.57 விலை செல்லாது என கருதுகிறேன் (உறுதியாக கூறமுடியாது) இந்த வாரம் ஒரு முக்கிய வாரமாகும், விலை 1.60 கடக்கிறதா என பார்ப்போம், ஏனெனில் விற்பதற்கு ஒருவரும் இல்லை என்றால் இந்த வாரம் விலை 1.60 கடந்தாக வேண்டும் இல்லாவிட்டால் இது ஒரு பலவீனமான நிலையாகும் ஆனாலும் விலை 1.20 மேல் இருக்கும் வரை சாதகமானதுதான். பங்குகளின் விலை மாற்றத்தில் Fundamental analysis முக்கியம், Fundamental analysis பொறுத்தவரை உங்களுக்கு அது தொடர்பான நல்ல தெளிவு உள்ளதனால் அதனடிப்படையில் இந்த ஆய்வினை வெறும் உசாத்துணையாக பாவிக்கலாம்.
  19. முன்னர் ஐரோப்பாவில் மன்னர்கள், பேரரசுகளுக்கு மேல் போப் இருப்பார் என கூறப்படுகிறது? இலங்கையின் பேரினவாதத்தின் அடிநாதமாக பெளத்த மதம் உள்ளது, எவ்வாறு தமிழர்கள் தமிழ் தேசியத்தினை தமது இருப்பிற்கான அடையாளமாக பயன்படுத்துகிறார்களோ அதே போல சிங்கள பேரினவாதத்தின் அடையாளமாக பெளத்தம் உள்ளது. தேசிய மக்கள் சக்தி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிக்குவின் காலில் விழுந்து ஆசி பெறுவதன் மூலம் வழமையாக இருந்து வந்த தமிழ் தேசிய கோட்பாட்டிலிருந்து வெளியே வந்து சிங்கள பேரினவாதத்தினை அங்கீகரிப்பதாகவும் இருக்கலாம் ( இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள்தான் தெரிவு செய்தார்கள், சிங்கள மக்கள் அல்ல, ஆனால் அவர்களுக்குத்தான் தெரியும் ஏன் காலில் விழுந்தார்கள் என்று). இலங்கையில் இரண்டு மதங்கள் பெரும்பாலும் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றன ஆனால் மற்றய இரு மதங்கள் அரசியலில் எந்த வித தாக்கத்தினையும் செலுத்தவில்லை, ஆனால் தமிழ் அரசியலில் இதுவரை இருந்த தேசிய கோட்பாட்டில் மாற்றம் ஏற்படுவதன் ஆரம்ப அறிகுறியாக இது இருக்கலாம்.
  20. வார இறுதியில் நீண்ட நேர வேலை, பின்னர் பதிவிடுகிறேன்.
  21. இது ஒரு அழுத்தம் இல்லையா? இவர்கள் செய்வது சரி என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்)
  22. அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பழக்கவழக்க பொருள்கள் விலை மாற்றம் தேவையில் மாற்றம் ஏற்படுத்தாது (விலை நெகிழ்ச்சி விகிதாசாரம் 1 இற்கு குரைவாக இருக்கும் அதாவது விலை மாற்றம் கேள்வி மாற்றத்தில் மிக மிக குறைவான தாக்கத்தினை ஏற்படுத்தும்) அதனால் மேலதிகமான பொருள்களின் வருகையினால் பொருளின் விலை குறைவடையும் அது உற்பத்தி செலவினை விட குறைவடையும் போது உற்பத்தியாளருக்கு நட்டம் ஏற்படும் ஆனால் நட்டத்தினை குறைப்பதற்காக கிடைத்த விலையில் விற்கிறார்கள். ஆனால் மறுவளமாக விலை எவ்வளவுதான் அதிகரித்தாலும் அதனை வாங்கும் அளவு மாறாது அதனால் கொள்ளை இலாபம் ஏற்படும், அதனாலேயே பழக்க வழக்க பொருள்களான மதுபானம் புகைத்தலிற்கு அதிக வரி விதிக்கிறார்கள் (விலை அதிகரிப்பதனால் அதனை நுகர்வதனை நிறுத்த மாட்டார்கள் இதனை பாவப்பட்ட வரி என்பதாக கூறுவார்கள்).
  23. இந்தியா மூடிய பயிற்சி மைதானத்தில் இரகசியமாக பயிற்சி எடுக்கிறதாக இங்கு செய்திகளில் காட்டுகிறார்கள், அவுஸிற்கு ஒரு ஸ்பெசலாக இந்தியா செய்யப்போகிறதோ தெரியவில்லை.
  24. மற்றவர்கள் அழியவேண்டும் என நினைக்கும் மனப்பாண்மையே இலங்கையின் அழிவிற்கு காரணமாக இருந்துவந்துள்ளது, சிங்களவர்கள் தமிழர்களும் இஸ்லாமியர்கள் அழிய வேண்டும் என நினைக்கிறார்கள், தமிழர்களும் இஸ்லாமியர்களும் தமக்கிடையே மற்றவர்கள் அழிய வேண்டும் என நினைக்கிறார்கள். ஸஹ்ரான்? பிள்ளையான் என கூறுகிறார்கள்?
  25. தமிழர்கள் மீது பல அடக்குமுறைகள் ஏற்படுத்தப்பட்ட பின்னரே தமிழர்கள் தமக்கும் சரிநிகர் உரிமை வேண்டும் என கோரினார்கள் (பெரும்பான்மையின் அடக்குமுறைதான் ஆரம்ப புள்ளி), தமிழ் இளையோர் அதில் கொள்கை பிடிப்புடன் இருந்தமையால் அவர்களை அழித்து தமிழ் மக்களை மீண்டும் ஆரம்ப புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் அடிப்படையில் தமிழர்கள் போல் இல்லை, அவர்கள் தமக்கென தனித்துவமான கொள்கையினை கடைப்பிடிக்கிறார்கள், அதில் சாதாரண மக்களில் இருந்து அரசியல்வாதிகள் வரைஅவர்களை தமிழர்கள் மாதிரி கையாள முடியாது அத்துடன் அவர்கள் எக்காலத்திலும் தமது தனித்துவத்துவத்தினை இழக்கமாட்டார்கள். பெரும்பான்மை இனவாதத்திற்கு மக்கள் தத்தமது நம்பிக்கைகள், உரிமைகளை பேணுவதென்பது ஒரு ஒவ்வாமைக்குரிய விடயமாக உள்ளது, இவர்கள் தமிழர்களிடம் பெற்ற அனுபவம் மாதிரி இஸ்லாமியர்கள் இலகுவில் கையாள முடியாது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளும் போது அது மிக தாமதமாகியிருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.