Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. நியூசிலாந்தில் தமிழர் ஒருவர் பார ஊர்தியினை விரைவாக செலுத்தி கட்டுப்பாடின்றி எதிர் திசையில் வாகனம் வரும் வீதிக்கு சென்று அந்த நாட்டினை சேர்ந்த ஒரு இளம் குடும்பம் பயணித்த காரில் மோதியதால் சிறிய குழந்தைகள் உட்பட அந்த குடும்பம் உயிரிழந்தது, அந்த நிகழ்வினை அந்த நாட்டு தொலைக்காட்சிகள் உருவ அடையாளங்களை மறைத்து வெளியிட்டிருந்தது அவ்வாறு செய்திருக்காவிட்டால் ஒரு கொந்தழிப்பு நிலை உருவாகி அதனால் பல அப்பாவிகள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டிருக்கும். இது ஒரு அடையாளப்பிரச்சினை, மக்கள் இலகுவாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், அவர்கள் தம்மை சமூக அமைப்பில் எவ்வாறு பொருத்திக்கொள்கிறார்கள் என்பது தருணத்திற்கேற்ப மாறுகிறது. இன்று தமிழர்கள் என நிற்பவர்கள் பின்னர் மத அடிப்படையில் வேறுபடுவர், சாதி அடிப்படையில் வேறுபடுவர் ஊர் அடிப்படையிலும் வேறுபடுவர், அப்போது முன்பு ஒரே தரப்பில் இருந்தவர்கள் எதிர் எதிர் அணியில் இருப்பர் ஆனால் ஒரே வகையான வெறுப்பு உணர்ச்சியே காணப்படும் இந்த நல்லவர், கெட்டவர்கள் அளவுகோல் நிருவலால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை என்பதனை சம்பந்தப்பட்ட சமுகங்கள் புரிந்து கொள்ளவேண்டும்,
  2. உக்கிரேனும் இஸ்ரேலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி நீண்ட தூரம் வந்துவிட்டது.
  3. சமூகங்களிடையேயான இடைவெளியினை தூண்டுவதனை தவிர்ப்பதற்காக போராட்ட அமைப்புகளே சில சமூகங்களின் பல மோசமான நடவடிக்கைகளை வெளிவராது தடுத்தனர், இவ்வாறான பிரச்சினைகளை கிளறுவது நல்லதல்ல என கருதுகிறேன். இலங்கையில் அனைத்து சமூகங்களும் கடந்த கால தமது தவறுகளை திருத்திக்கொண்டால் அமைதி ஏற்படலாம், இவ்வாறு ஒருவரை ஒருவர் குறை சொல்வதால் பிரச்சினை அதிகரிக்கும் குறையாது.
  4. https://www.investopedia.com/terms/p/phillipscurve.asp#:~:text=The Phillips curve states that,by stagflation in the 1970s. வட்டி விகித அதிகரிப்பு ஏற்படும் போது அதனோடு இணைந்து வேலையின்மை ஏற்படும், வட்டி விகித அதிகரிப்பு பொருளாதார விருத்தியின் போது சிலநேரங்களில் பக்க விளைவாக பணவீக்கம் ஏற்படுவதனை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்படுவதாகும், இங்கு பிரச்சினையாக கூறப்படுவது கடுமையான வட்டி விகித போக்கு என கூறப்படுகிறது, உடனடியாக வட்டி விகித குறைப்பினை ஏற்படுத்தாவிட்டால் பொருளாதார சரிவு தவிர்க்க முடியாது. உண்மையில் வேலையின்மை பொருளாதார சரிவின் குறிகாட்டி அல்ல ஆனால் பொதுவான பொருளாதார சரிவின் பாதிப்பில் வேலையின்மை ஒரு பகுதியாக இருக்கும் அவுஸ்ரேலியாவின் வேலையின்மை விகிதம் 4.1% செப்ரெம்பரில் எட்டும் என கடந்த ஆண்டில் கணிக்கப்பட்டது(வட்டி விகித அதிகரிப்பினால்) ஆனால் எதிர்பார்த்தை விட முன்னராகவே வேலையின்மை 4.1% எட்டிவிட்டது என்பது நிலமையின் தீவிரத்தினை காட்டுகிறது, செப்ரெம்பரில் வட்டி விகித குறைப்பு என கடந்த ஆண்டில் கூறினார்கள் இப்போது மேலும் நீடிக்கலாம எனும் தொணியில் கருத்து கூறுகிறார்கள், ஆனால் நிலமை வேறு மாதிரியாக இருப்பதாக உனருகிறேன்.
  5. அவுஸ்ரேலியாவின் கடந்த 12 மாத குறைந்த வேலையின்மை விகிதம் 3.5% தற்போது 4.1%, இந்த கருதுகோளின்படி அவுஸ்ரேலியாவும் பொருளாதார சரிவிற்குள் வந்துவிட்டது, ஆனால் வரிவிகித குறைப்பில் ஆர்வமில்லாமல் மத்திய வங்கியுள்ளது, அதற்குக்காரணமான பணவீக்கம் இன்னும் கட்டுப்பாட்டிற்கு வரவில்லை என கூறப்படுகின்றது, ஆனால் அதனைவிட பாதகமான பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகங்கொடுக்கவுள்ளது, உலகில் நிகழும் பூகோள அரசியல்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. https://www.cnbc.com/2024/08/05/recession-what-is-the-sahm-rule-and-why-is-everyone-talking-about-it.html
  6. https://www.investopedia.com/what-is-the-sahm-rule-8637564 இந்த கருதுகோளின் அடிப்படையில் அமெரிக்கா பொருளாதார சரிவிற்குள் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
  7. பிட் கொயின் 58000 மற்றும் 60000 களில் எவ்வாறு சந்தை அந்த விலைகளை அணுகுகின்றது என்பதற்கேற்ப விற்க திட்டமிட்டுள்ளேன் அடிப்படையில் பிட் கொயினது இறங்குமுகம் ஆரம்பமாகிவிட்டது போல தோன்றுகிறது ஆனால் அதனை 58000 மற்றும் 60000 விலைகல் உறுதிப்படுத்தவேண்டும். மறுவளமாக அமெரிக்க SP500 பிட் கொயினை விட பலவீனமாக காணப்படுகின்றது அது 5400 புள்ளிகளில் கடந்து உயர்ந்தால் தற்போதய நிகழ்வு ஒரு தற்காலிக சந்தை பின்னடைவாக கருதப்படும்(Market correction) ஆனால் அமெரிக்க பங்கு சந்தை( SP500) 5400 புள்ளிகளுக்கு உயருமா என தெரியவில்லை தற்போது மிகவும் பலவீனமாகக்காணப்படுகிறது,
  8. அடிப்படை எவ்வளவு முக்கியமோ அதே அளவு அனுப்வமும் முக்கியம் என்பதனை நீங்களே பல வித்தைகளை நீங்களாகவே கற்றதாக கூறியுள்ளீர்கள் இந்த கதையின் போக்கில் கூறியுள்ளீர்கள். இவ்வாறு பயிற்றுனர்கள் பயிற்றிவிப்பதனை Explicit learning என கூறுகிறார்கள், ஆனால் சொந்த அனுபவத்தில் பயில்பவர்கள் சூழ்நிலைக்கேற்ப தம்மை தகவமைப்பவர்களாக உருவாகுவார்கள்.
  9. இஸ்ரேல் ஈரான் போரில் அமெரிக்கா நேரிடையாக ஈடுபடாது (அப்படியே போர் ஏற்பட்டாலும்) ஆயுத உதவிகள் செய்யலாம் அத்துடன் இவ்வாறு போரில் குதிப்போம் என வாய் வழி உளவியல் யுத்தத்தில் அமெரிக்கா ஈடுபடலாம்.
  10. இது ஒரு போலியான பொறுப்பற்ற குற்றச்சாட்டு இருக்க வாய்புகள் அதிகம், வங்க கடலில் அமெரிக்க புதிய கடற்தளம் அமைப்பதற்கு இலங்கை அல்லது மாலைதீவுதான் பூகோள ரீதியாக பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.
  11. முன்னர் மியன்மாரிலிருந்து ரொகின்யோ இஸ்லாமிய மக்களுக்கெதிரான நடவடிக்கையின்போது என்னுடன் வேலை செய்த இஸ்லாமிய நண்பர் ஒருவர் மியன்மாரை சேர்ந்தவரிடம் கடுமை காட்டினார், தற்போது இந்துக்களுக்கெதிராக அதே வகையான செயலை இஸ்லாமியர்கள் செய்கிறார்கள்.
  12. அமெரிக்கா இந்த போரினை தடுத்து நிறுத்துவதிலேதான் ஆர்வம் காட்டும், அமெரிக்க பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் உள்ளது, இந்த போர் நிகழ்ந்தால் அது அமெரிக்க பொருளாதாரத்தினை மட்டுமல்ல உலக பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு அதனால் அமெரிக்கா என்ன விலை கொடுத்தாவது இந்த போர் நிகழ்வதை தடுக்கும்.
  13. அனைத்து வர்த்தகங்களையும் மூடிவிட்டேன், நிக்கி 225 சுட்டெண் நேற்றைய அளவினை விட அதிக விலையில் தற்போது உள்ளது இது ஒரு Market correction போலவே உள்ளது. பிட் கொயின் 58000 Resistance level (தற்போது 55000), இதனை கடந்து விலை ஏறினால இந்த சந்தை நிகழ்வு ஒரு தற்காலிக சந்தை பின்னடைவே (Market correction) பிட் கொயினை விற்பதில் (short trade) ஆர்வம் காட்டவில்லை அது ஒரு ஆபத்தான முடிவாக இருக்கலாம் என்பதாலேயே பலவீனமான அமெரிக்க பங்கு சந்தையினை விற்பதில் ஆர்வம் காட்டுகிறேன்.
  14. VTX index ஏற்ப சந்தை சல சலப்பிற்கு ஏற்ற வகையிலேயே மற்ற முதலீடுகள் போலவே பிட் கொயினும் செயல்படும், இதன் மூலம் இது ஒரு ஆபத்தான முதலீடாகவே உள்ளது, தங்கம் போலவோ அல்லது நாணயங்கள் போலவோ செயற்படாது என்பது ஒரு புறம் இருக்க USDJPY கூட இரண்டு வாரத்தில் 14% சரிவினை சந்தித்துள்ளது( பிட் கொயினது ஒருவார இழப்பில் பாதியளவு) இது அமெரிக்க டாலரின் பெறுமதி வீழ்ச்சியால் ஏற்பட்டதல்ல, ஜப்பான் தனது பணப்பெறுமதி தொடர் இழப்பு சந்தித்து வரும் நிலையில் அதனை ஈடுகட்டும் முயற்சியினது விளைவு. இரண்டு தசாப்தங்களாக ஜப்பான் எதிர்மறையான வட்டிவிகிதம் மூலம் தனது பொருளாதாரத்தினை வளர்க்க முற்பட்டத்து, உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் ஆபத்து மிகக்குறைந்த carry trade இரண்டு தசாப்தங்களாக செய்து வந்தனர். இறுதியாக பங்குனி மாதம் ஜப்பான் முதலாவது வட்டிவிகித அதிகரிப்பினை மேற்கொண்டலும் யென் தொடர்ச்சியாக அடிவாங்கியநிலையில் ஜப்பான் 150 யென் அமெரிக்க டொலருக்கு எதிரானநிலையில் ஜப்பானிய அரசு தலையிடலை மேற்கொள்ளும் என சந்தையில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டபோது 160 வரை சென்றது, இரண்டு தசாப்தங்களாக மேற்கொண்டனர் தற்போது பலர் தமது இந்த வர்த்தகத்தினை மூடுவதால் சந்தியில் பெரிய சல சலப்பு ஏற்படுகிறது அத்துடன் பூகோள அரசியலும் இணைந்து கொண்டுள்ளது. அதன் படி 155 இனை யென் நெருங்கிய போது மே மாதத்தில் முதலாவது தலையீட்டினை மேற்கொண்டது அதற்காக செலவழித்த பணம் வீணாகப்போனது, ஏனெனில் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைய ஜூலையில் மீண்டும் வட்டிவிகித அதிகரிப்பு மூலம் ஜப்பான் இதனை எட்டி உள்ளது தற்போது கிட்டதட்ட 141 இல் உள்ளது எதிர்பார்க்கப்படும் இலக்கு 130 இனை இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலோ எட்டுவதே ஜப்பானின் நோக்கம். ஆனால் இந்த நிகழ்வு அமெரிக்க பொருளாதாரத்தின் சவப்பெட்டியின் முதல் ஆணியாக உள்ளது, அமெரிக்க பொருளாதாரத்துடன் உலகப்பொருளாதாரமும் பெரும் நெருக்கடியினை சந்திக்கலாம், சந்தையில் தற்போதய நிகழ்வினை Market correction ஆக நோக்குகிறார்கள், ஆனால் இதனை நான் பொருளாதார சரிவாகவே எதிர்பார்க்கிறேன், அமெரிக்க S&P 500 இரண்டு short நிலைகளை சந்தை மூடும் நேரத்தில் முடியிருந்தேன் பின்னர், சந்தைக்கு பிந்திய நேரத்தில் 2 short நிலைகளை எடுத்துள்ளேன் அதனை சந்தை ஆரம்பிக்கும் முன்னர் விற்கவுள்ளேன் காரணம் அமெரிக்க அரசு பெரும் பொருளாதார சரிவினை எதிகொள்ளுகின்ற நிலையில் ஒரு அவசரகால வரி விகித குறைப்பு ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது (அதனாலேயே அந்த இரண்டுநிலைகளையும் மூடியிருந்தேன்). ஆனால் செப்ரெம்பரில் முதலாவது வரி விகித குறைப்பு என முன்னர் கூறப்பட்டது, அவ்வாறு அவசரகால வரிவிகித குறைப்பு ஏற்படாவிட்டால் சந்தை சரிவு தொடரும் (இதற்கு முன்னர் 3 அவசரகால வரிக்குறைப்பு அமெரிக்க பொருளாதாரத்தில் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தியிருந்ததனால் அவசரகால வரி விகிதகுறைப்பு சாத்தியம் மிக குறைவு) அதற்கு பூகோள அரசியல் ஒரு தூண்டல் காரணியாக உள்ளது, அதனாலேயே மத்திய கிழக்கில் தற்போதுள்ள பதற்ற நிலையினை உலக பொருளாதாரம் விரும்பவில்லை, அமெரிக்காவும் விரும்பாது என நம்புகிறேன்.
  15. நம்பிக்கைகளும் Believes, வாழ்க்கை நெறியும் Values ஒன்றாக இணையும் புள்ளியாக பலருக்கு மதங்கள் உள்ளது, அதில் சில தவறானவர்கள் தமது தவறுகளை மதத்தின் மூலம் நியாயப்படுத்தும்போது அது கேள்விக்கு இடமின்றி அங்கீகரிக்கப்படுகின்றது, இதில் பாதிக்கப்படும் தரப்பு கூட அதனை கேள்வியின்றி அங்கீகரிப்பதுதான் வேதனைக்குரிய விடயம். இங்கு மதங்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகின்றன சில தவறான மனிதர்களால், இதனால் அனைத்து மதங்களும் பாதிப்புள்ளாகின்றன. அதனை பதிவு செய்யுங்கள், நாங்கள் பேச விரும்பாத எமது கோரமான பக்கங்களை மறக்க முயற்சிக்கிறோம் ஆனால் அவற்றினை பேசாவிட்டால் அது தொடர்கதையாகவே செல்லும், இதனை பேசுவதற்கு முடியாமல் இருப்பதற்கு காரனம் நாங்கள் மதிக்கும் மதங்களே காரணம் இதில் நாமும் மற்ற மதங்களை போலவேதான் எமக்கு மற்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
  16. கிழக்கு மாகாணத்தில் 13 வயது தமிழ் குழந்தை ஒன்றினை இஸ்லாமியர்கள் கூட்டாக வல்லுறவு செய்வதற்கும் பின்னர் அந்த குழந்தையினை கல்லெறிந்து கொல்வதற்கு உடந்தையாக இருந்த இஸ்லாமியர்கள் பலர் அந்த குழந்தையின் பெற்றோரின் வயதொத்தவர்கள், இந்த நிகழ்வுகள் தொடர் இஸ்லாமியர்களின் வன்முறைகளின் தொடரின் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த ஒன்று. தமது வக்கிர புத்தியினை எவ்வாறு மதத்தினுள் புகுத்தி கல்லெறிந்து கொல்லும் மதசடங்காக மாற்றியதுபோல எமது யாழ் சமூகத்திலும் இந்து மதத்தின் பேரால் சாதிக்கொடுமை மூலம் பலரை வனுமுறைக்குட்படுத்தப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் உறுதுணையாக இருந்த கருத்தியலை விதைத்த நாவலரை இப்போதும் கொண்டாடும் சமூகமாக இருந்து கொண்டு மற்ற சமூகங்கள் மேல் சகட்டுமேனிக்கு குற்றம் சாட்டுகின்றோம். இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கும் அதிக வித்தியாசமில்லை, ஆனால் நாங்கள் புனிதர்கள் போல பேசுவது வேடிக்கையானது.
  17. உங்கள் கருத்திற்கு நன்றி, நிங்கள் கூறுகின்ற காரணங்களுடன் பல காரணங்கள் உள்ளது(அனைத்து நிறுவன கொடுக்கல் வாங்கலுக்கான இரசீதுகள் -invoices டொலரில் பெரும்பாலும் நிகழ்த்தப்படுகின்றது, SWIFT, Eurodollar, Petrodollarஎன கூறிக்கொண்டே செல்லலாம்) ஆனால் இங்கு உலக இருப்பு நாணய கருத்தினை கூறவரவில்லை ஆனால் அந்த கருத்து எழுப்பப்படும் போது அதுவும் அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்த கூடியதாக இருக்கும் என்பதனாலேயே அது பற்றி கேட்டேன். Eurodollar பாதிப்பினால் ஒரு ஜப்பானிய வங்கி ஒன்றிற்கு2025 இல் கிட்டதட்ட 10 பில்லியன் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இது தவிர பல அமெரிக்க வங்கிகள் கிடதட்ட 540 பில்லியன் காகித இழப்புகளை அமெரிக்க பணமுறிகளினால் ஏற்பட்டுள்ளது, இது 2008 பொருளாதார சரிவிற்கு பின்னால் ஏற்பட்ட பதில் நடவடிக்கையால் ஏற்படுகிறது(Basel3 Accord) உலக பொருளாதார சரிவின் முன்னரான காகித இழப்பு கிட்டதட்ட 75 பில்லியன் இருந்ததாக கூறப்படுகிறது அதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை ஆனால் அதன் பின்னர் பொருளாதார சரிவினால் 700 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது, சந்தை பொருளாதாரத்தினால் சந்தை சரிவு 10 மடங்காக மாறியது) 540X10=5trillion? தற்போது உள்ள அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்பட உள்ள பாதிப்பு 1929 இல் வந்த பொருளாதார பாதிப்பிற்கு ஒப்பானதாக கூறுகிறார்கள், GFC தனிய வீட்டு சந்தையில் ஏற்பட்டதாக்கம், தற்போது குறைவடைந்து செல்லும் m2 பண வழங்கள், சொத்து குமிழிகள், வங்கி திரவத்தன்மை, அரச கடன் சுமை(இது 1929 இருக்கவில்லை) இவை அனைத்தும் சேர்ந்து ஒரு பொருளாதார சரிவினை ஏற்படுத்த உள்ளது, இதன் போது பெரிய நிறுவனங்கள் தப்பிவிடும் பாதிக்கப்படுவது சாதாரண மக்களே. மிக சுருக்கமாக கூறியுள்ளேன் முன்பு விபரமாக எழுதுவதுண்டு, அதன் முலம் மற்றவர்கள் நான் கூறவருவதனை புரிந்து அதனை எதிர்த்து ஆக்கபூர்வமான எதிர்கருத்தின் மூலம் எனது கருத்தினை குறை கூறுவதன் மூலம் புதிய விடயங்களை புரிந்து கொள்ளலாம் எனும் ஒரு ஆசைதான். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை எல்லாம் இல்லை அதற்கு காரணம் டோல்ஸ்ரொய் கூறும் காரணமாக இருக்கலாம், Leo Tolstoy - “The most difficult subjects can be explained to the most slow-witted man if he has not formed any idea of them already; but the simplest thing cannot be made clear to the most intelligent man if he is firmly persuaded that he knows already, without a shadow of doubt, what is laid before him.”
  18. ஆனால் சமூக நலன் என்று பார்க்கும் போது இவ்வாறான மூட நம்பிக்கைகளை களைவதுதான் சிறப்பு, பெருந்தொற்று காலத்தில் சில நல்லடக்கங்கள் மத கோட்பாட்டிற்கெதிரானது என ஒரு தரப்பு மக்களை உசுப்பி விடுவது போல செயற்படுவது சரியாக இருக்காது, அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க இறுக்கமான சட்ட ஒழுங்கு நடவடிக்கையினை அரசு மேற்கொள்ளவேண்டும்.
  19. ஜப்பானிடம் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவமே உள்ளது (ஜப்பானிற்கு இராணுவ அச்சுறுத்தல் ஏற்படும் போது அதனை காக்கும் கடமை அமெரிக்க அரசிற்குரியதாக உள்ளது), ஜப்பானிய ஜென் நாணயம் 6% ரிசர்வ் நாணயமாக பயன்படுத்தப்படுகிறதல்லவா? மிகவும் பொருளாதார உறுதித்தன்மை கொண்ட நாடாக சிங்கப்பூர் இருந்தும் ஏன் அதன் நாணயம் கையிருப்பு நாணயமாக அமெரிக்க நாணயத்தினை புறந்தள்ள முடியவில்லை? பொது நாணய அங்கீகாரம் அமெரிக்க நாணயத்திற்கு மட்டும் இல்லை, வேறு சில நாணயத்திற்கும் உள்ளது ஆனால் அவையினால் ஏன் அமெரிக்க நாணயம் போல் வர முடியவில்லை.
  20. உள்ளூரில் இணையவெளியின் பாவனையைக் கூட வெளிப்படையாக கையாளும் இயல்பில்லாத சீனாவின், ரஷ்யாவின் நாணயங்களை முட்டாள்கள் தான் நம்பிக் கையிருப்பு நாணயமாக ஏற்றுக் கொள்வர். தென்னாபிரிக்கா இன்னும் சமூக ஏற்றத்தாழ்வுகளில் இருந்து வெளிவராமல் தவிக்கிறது. இதையெல்லாம் புறக்கணித்து விட்டு"கடன்முறி, கடன்முறி" என்று நீங்கள் பல்லவி பாடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கருத்திற்கு நன்றி, நீங்கள் கூறும் இந்த அமெரிக்க பண்புகள் வேறு எந்த நாட்டிலும் இல்லையா? ஏன் அவ்வாறிருக்க அமெரிக்க நாணயத்தினை reserve currency ஆக பயன்படுத்துகிறார்கள் என்று எப்போதாவது சிந்த்தித்ததுண்டா?
  21. வங்கதேசத்திற்கெதிராக நுவான் துசாராவின் 5 விக்கெட்டுகள் டில்சான் மதுசங்கவின் பந்துவீச்சு.
  22. இந்திய அணி இலங்கை அணியினை பயிற்சி ஆட்டத்தில் துவைத்து எடுத்ததாக கூறுகிரார்கள், நல்ல வேளை இலங்கை அணி பந்து வீச்சாளர் நுவான் திசாரா காயமடைந்து வெளியேறியமை, வங்க தேச அணிக்கெதிராக 5 வெக்கெட்டுக்களை எடுத்த ஒரு போட்டியினூடாக பிரகாசித்தாலும் அவர் பத்திரன மலிங்க போல பந்தை வீசுபவர் ஆனால் அவருக்கு மற்றீடான தில்சான் மதுசங்க இடது கை பந்துவிச்சாளர் திறமையானவர் அவருக்கு பதிலாகவே உள்ளே வந்துள்ளார் ஆனால் அவர் திறமையின் பிரகாரம் நுவான் துசாராவிற்கு பதிலாக வந்திருக்க வேண்டியவர் அவரது ஆரம்ப பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு பொதுவாக வீசும் உள்ளே வரும் பந்து போல பந்தின் மேலாக விரல்களால் வீசும் நுணுக்கமான ஓப் கட்டர் வீரர்களை குழப்பும் திறன் வாய்ந்தது, ஆடுகளமும் வேகப்பந்து வீச்சிற்கு சாதகம், இலங்கை எதிர்பாரா வெற்றியினை பதிவு செய்யும் என கருதுகிறேன்.
  23. உங்கள் கருத்திற்கு நன்றி, அமெரிக்காவிலே அதிக வருமானமீட்டும் மிக குறுகியதொகை பிரிவினரால் சமச்சீரற்ற பொருளாதார நிலையினால் அதிகளவில் உள்நாட்டு பொருளாதாரத்தில் சிக்கல்கள் நிகழ்கிறது ஆனால் அதனை மாற்றும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் கிடையாது எனவே நினக்கிறேன் அதனை தவிர்த்து அமெரிக்க வல்லாதிக்கத்தினை நிலைநிறுத்தும் நடவடிக்கைகள் கூட அண்மைக்காலங்களில் பெரிதாக எதிர்பார்த்த விளைவை உண்டாக்காமல் எதிர்மறை விளைவினை ஏற்படுத்தியுள்ளது. இதனை அமெரிக்க கொள்கைகளின் தோல்வியாக நான் கருதுகிறேன், உதாரணமாக 2014 முதல் உக்கிரேனை பல்லுப்புடுங்கிய பாம்பாக இருந்த இரஸ்சியாவிற்கெதிராக ஒரு பலச்சமனிலையினை பேணுவதற்காக எடுத்த முயற்சிகள் எதிர்பாராவிதமாக பின்விளைவின உருவாக்கி உலக பொருளாதாரத்தில் 7% சரிவினை அமெரிக்க பொருளாதாரத்தடைகள் ஏற்படுத்தியுள்ளது (ஐ எம் எப்) கருத்தின் பிரகாரம்) அதே போல் பல பிளவுபட்ட மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார மையங்களை தோற்றுவித்துள்ளது இந்த அமெரிக்க கொள்கை. இது உலக பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பினை இனிவரும் காலங்களில் ஏற்படுத்தலாம், மறுவளமாக அமெரிக்க பொருளாதாரம் பெரிய சவாலை எதிர்கொள்ள உள்ளது (இதனை சில ஆண்டுகளாக சொல்லி உள்ளேன்) இதனை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் சீர் செய்யலாம்? துரதிஸ்ரவசமாக எந்த கட்சியாலும் முடியாது எனவே நான் நினைக்கிறேன் ஏனெனெனில் இந்த உக்கிரேன் அமெரிக்க கொள்கை ஒரு வண்ணாத்தி பூச்சி இறக்கை செயலாக ஒரு பொருளாதார சுனாமி ஒன்றினை உருவாக்குகிறது, அதன் ஒரு அங்கமாக ஜப்பானிய பொருளாதார கொள்கையாக பார்க்கிறேன், அவர்கள் யதார்த்தத்திற்கேதிரான (எனது கருத்து) ஒரு போர் ஒன்றினை ஆரம்பித்துள்ளார்கள் அதன் முடிவு என்னவாக இருக்கும் என தெரியவில்லை.
  24. ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கமாக உங்கள் கருத்து உள்ளது, இவ்வாறு சிந்திக்கவில்லை, வாழ்க்கை அனுபவம் ஒரு Implicitly learning என்பார்கள், இதனாலேயே எமது கல்விசார் சமூகம்(Explicitly learning environment) மிகவும் தவாறான முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கிறார்களோ?
  25. 'No Tax for the Middle Class' ? இது ஒரு சவாலான விடயமாக இருக்கும், ஆனால் சுவாரசியமான தகவல்கள், அமெரிக்கா பாதீட்டிற்கான வரி வருமான இடைவெளி கிட்டதட்ட 2 ரில்லியன் குறைவாக உள்ளது இதில் வருகின்ற வருமான வரி மூலமான வரியில் தனிநபர் வருமான வரி (நிருவன வரி அல்ல 11% ?) 48% இதில் மத்திய தரத்தினரின் வருமான வரியினை தள்ளுபடி செய்வார்களா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.