Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. இல்லை இலங்கை மோசமான நிலையில் இருக்கும், இலங்கையினை விட எதியோப்பியா வளங்கல் நிறைந்த நாடு.
  2. அனைவரும் இந்தியா மோசமாக விளையாடிதுதான் இந்தியாவின் தோல்விக்குக்காரணம் எனும் நிலை காணப்படுகிறது, உண்மையில் நியுசிலாந்து திறமையாக விளையாடி எப்போதும் இந்தியாவினை அளுத்தத்தில் வைத்திருந்தது, அவர்களிடம் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களும் இல்லை, ஒரு சகல துறை ஆட்டக்காரர் பிரதான பந்துவீச்சாளராக செயற்படும் நிலை காணப்பட்டது. போட்டியில் பந்துவீச்சில் இரண்டு பக்கமும் அளுத்தம் கொடுப்பதற்காக பட்டேலையும் பிலிப்ஸையும் நியுசிலாந்து தொடர்ந்து பயன்படுத்தவேண்டிய நிலை காணப்பட்டது. தனது பலத்திற்கேற்ப மிக தெளிவாக் திட்டமிட்டு நியுசிலாந்து இந்தியாவினை வென்றுள்ளது, நியுசிலாந்திடம் தோற்றதனால் இந்தியா மோசமான அணி அல்ல இதே இந்திய அணி அவுஸில் சிறப்பாக விளையாடும், நியுசிலாந்து ஒவ்வொரு மட்டையாளரது பலவீனத்தினையும் குறிவைத்து அவர்களை அவுட்டாக்கியது.
  3. அதனை கணக்கு வைத்துத்தான் அப்படி கூறினேன்.😁
  4. பொதுவாக அனைத்து சமூக அடக்குமுறைகளுகும் மதத்தினை ஒரு கருவியாக அனைத்து மதங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது, ஏனென்றால் அதனை கேள்விக்குள்ளாக்க முடியாது, மதங்களின் அடிப்படையே அச்சத்தினடிப்படை (சாமி கண்ணை குத்தும்) ஆகும். எமது இந்து சமயத்தில் இப்போது கூட பெண்களின் உடற்கூற்றியலில் உள்ள விடயங்களை வைத்து தீட்டு என்பதன் மூலம் பெண்களை இரண்டாம் நிலையில் வைத்திருக்கும் நிலை காணப்படுகிறது. ஒவ்வொருவரும் அவர் மதம் கூறும் விடயங்களை கேள்விக்கிடமின்றி நம்பும் அதே வேளை மற்ற மதங்களை கேள்விக்குள்ளாக்குகிறோம். மதங்கள் காலத்திற்கேற்ப பரிணாமம் பெறவேண்டும், அதற்கு முதலில் ஒவ்வொருவரும் தத்தமது மதங்களில் உள்ள குறைபாட்டை களையவேண்டும், மாறாக மற்றவர்கள் அடுத்த மதங்களை விமர்சிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது என கருதுகிறேன். ஆனால் விமர்சிக்காமல் விட கூறவில்லை, இவ்வாறு விமர்சிக்காவிட்டால் அவர்களுக்கு தமது மதத்தில் உள்ள தவறுகள் தெரியவாய்ப்பில்லாமல் போகும் அதே நேரம் அந்த விமர்சனத்தில் வெறுப்பு இருக்க கூடாது.
  5. அப்படியென்றால் போட்டியில் முதலில் கலந்து கொண்ட முதல் நால்வருக்கு சிறப்பு புள்ளிகள் வழங்கவேண்டும்.😁
  6. விகிப்பீடியாவின் கருத்தினடிப்படையில் 887000 புலம் பெயர் தமிழர்கள் அண்ணளவாக உள்ளார்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையிலிருக்கும் தமது உறவுகளுக்கு உதவி செய்கிறார்கள் வெறும் நாலில் ஒரு பகுதி (200000) ஆண்டிற்கு $2000 (மாதத்திற்கு $166) உதவி செய்தால் இலங்கைக்கு $400000000 வெளிநாட்டு செலாவணி கிடைக்கும், அது தவிர தனியார் , மற்றும் தொண்டு நிறுவனங்களினூடாக செய்யும் இலங்கைக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் செய்யும் உதவியின் மூலம் இலங்கைக்கு பெருமளவான வெளிநாட்டு செலாவணி கிடைப்பதுடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கியமாக புலம்பெயர் தமிழ் மக்கள் உள்ளனர். இவர்களது முதலீடுகள் இலங்கையில் நேரடியாக ஏற்படுத்தப்பட்டால் இலங்கைக்கு அது மேலும் சாதகமாவதற்கான சூழ்நிலை உள்ளது.
  7. 150 ஓட்டங்கள் என்பது கடினமாக இருக்கும் என முன்பே கூறியிருந்தேன்(முதல் நாள் ஆட்ட முடிவில்), அதற்குக்காரணம் ஆடுகளத்தின் தன்மை, இந்தியா சுழல் பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தினை முதல் நாளிலேயே உருவாக்கியுள்ளது (பொதுவாக 3 ஆம் நாளின் பின்னரே ஆடுகலம் சுழல் பந்துவீச்சிற்கு சாதகமாக மாறும்), அந்த ஆப்பு அவர்களுக்கே வந்து சேர்ந்துவிட்டது.
  8. நியுசிலாந்து இந்தியாவிற்கே போய் இந்தியாவிற்கு வெள்ளை அடித்துவிட்டது.😁
  9. இந்த ஆடுகளத்தினை சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக்கியுள்ளார்கள் இந்தியர்கள் என நினைக்கிறேன், முதல் நாள் ஆட்டத்திலேயே வேகப்பந்திற்கு பெரிதும் உதவவில்லை, நியுசிலாந்து இந்த ஆட்டத்தினை 3 ஆம் நாளுக்கு எடுத்து சென்றால் இந்தியாவின் நிலை இன்னும் மோசமாகும், ஒப்பீட்டளவில் இந்திய அணியே சிறந்த சுழல் பந்து வீச்சாளரைக்கொண்ட அணி இந்தியணிக்கு தற்போது வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளது ஆனாலும் நியுசிலாந்து அணியினை 150 ஓட்ட்டங்களுக்குள் சுருட்டி விட்டால் வெற்றி வாய்ப்புண்டு. இந்த ஆடுகளம் புனே ஆடுகளம் போல பந்து தரையில் பட்டு வேகமாகவோ அல்லது சமச்சீரற்ற பந்து எழுச்சி கொண்ட ஆடுகளம் அல்ல என கூறுகிறார்கள், பந்து தரையில் பட்டு மெதுவாக எழுவதாக கூறுகிறார்கள்(தூசி உள்ள) பெரும்பாலும் அதிக வெப்பம் காரணமாக தரை விரைவாக உடைய வாய்ப்புண்டு அத்துடன் பந்து வீச்சாளர்களின் பாதத்தடத்தினால் உருவாக்கப்படும் பகுதிகளில் பந்தினை கணிப்பது சிரமாகும், இந்தியா குறைந்த ஓட்டங்களில் விரைவாக நியுசிலாந்தினை அவுட்டாக்கினால் வெற்றி பெறலாம் என கருதுகிறேன்.
  10. இந்திய அணியினை நியுசிலாந்து போட்டு புரட்டி எடுப்பது என்பது அதுவும் இந்தியாவிலே என்பதால் இந்த தொடர் ஒரு ஆர்வ மிகுதியினை ஏற்படுத்தியுள்ளது அதனால் இதனை பின் தொடர்கிறேன், பெரும்பாலும் ஆட்ட முடிவில் நிலமையினை அவதானிப்பதுண்டு அல்லது யூரியூப்பில் சில வேளை கைலைற்ஸ் பார்பதுண்டு வேறு ஆட்டங்களை பின் தொடர்வதில்லை.
  11. நீங்கள் கூறியது சரிதான் ஐசிசி இணையத்தளத்தில் இரண்டு தொடர் மட்டும் குறிப்பிடப்பட்டதால் முன்பு பதிந்தது தவறென நினைத்து அவ்வாறு பதிவிட்டேன் மேல் உள்ள பதிவில் நியுசிலாந்து கேரல்டினை கூகிள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் பதிந்துள்ளேன் , அதில் இந்த இந்திய தொடரிலும் அவர் பணியாற்றுகிறார் எனப்தனை உறுதிப்படுத்தியுள்ளது.
  12. பிளாக் கேப்ஸ் சுற்றுப்பயணம்: இலங்கை பந்துவீச்சு ஜாம்பவான் ரங்கனா ஹெராத் பயிற்சியாளர் குழுவில் இணைந்தார் NZ ஹெரால்ட் 7 செப், 2024 06:49 காலைபடிக்க 2 நிமிடங்கள் சேமிக்கவும் பகிரவும் ரங்கனா ஹெராத்தின் ஈடுபாட்டால் அஜாஸ் படேல் மற்றும் கேரி ஸ்டெட் ஆகியோர் பயனடைவார்கள். புகைப்படம் / கெட்டி படங்கள் பிளாக் கேப்ஸ் ஆப்கானிஸ்தான், சிர்லங்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் விளையாட உள்ளது சக்லைன் முஷ்டாக்கின் வெற்றிடத்தை இலங்கை சுழற்பந்து ஜாம்பவான் ஒருவர் நிரப்பியுள்ளார் இந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, நவம்பர் இறுதியில் தொடங்கும் மூன்று டெஸ்ட்களில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது பிளாக் கேப்ஸ் ஆசியா வழியாக தங்கள் நீண்ட பயணத்தின் முதல் மூன்று சோதனைகளில் நிலைமைகளைக் கையாள உள்ளூர் நிபுணத்துவத்தைக் கொண்டு வந்துள்ளனர் . இலங்கையின் சுழல் ஜாம்பவான் ரங்கனா ஹெராத் - 433 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவமிக்கவர் - சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும் அணியுடன் பணியாற்றுவார். பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் பயிற்சியாளருமான சக்லைன் முஷ்டாக்கிற்குப் பதிலாக ஹெராத், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பதவியை வகிக்க பதவியில் இருந்து விலகியுள்ளார். ஹெராத் - விக்கெட்டுகள் அடிப்படையில் எல்லா காலத்திலும் மிகவும் திறமையான இடது கை ஆர்த்தடாக்ஸ் டெஸ்ட் ஸ்பின்னர் - அஜாஸ் படேல், மிட்செல் சான்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரருடன் நெருக்கமாக பணியாற்ற வாய்ப்புள்ளது. திங்கட்கிழமை இந்தியாவின் நொய்டாவில் தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் அவர் அணியுடன் இருப்பார், மேலும் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட அவர் அணியில் இருப்பார். பிளாக் கேப்ஸ் பின்னர் ஐசிசியின் இரண்டாவது தரவரிசை டெஸ்ட் அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளுக்காக இந்தியாவுக்குத் திரும்புகிறார். ஆப்கானிஸ்தான் டெஸ்டில் மட்டுமே ரத்தோர் அணியுடன் களமிறங்கினார். பயிற்சியாளர் கேரி ஸ்டெட், இந்த ஜோடி உள்ளூர் நிலைமைகள் பற்றிய நுண்ணறிவுகளுடன் குழுவிற்கு புதிய அறிவைக் கொண்டுவரும் என்றார். "ரங்கனா மற்றும் விக்ரம் ஆகியோரை எங்கள் சோதனைக் குழுவில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்," என்று அவர் கூறினார். “கிரிக்கெட் உலகில் இருவருமே உயர்வாக மதிக்கப்படுகிறார்கள், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பை எங்கள் வீரர்கள் உண்மையிலேயே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். “குறிப்பாக எங்களின் மூன்று இடது கை மரபுவழி சுழற்பந்து வீச்சாளர்களான அஜாஸ், மிட்ச் மற்றும் ரச்சின் ஆகியோருக்கு, துணைக் கண்டத்தில் மூன்று டெஸ்ட்களில் ரங்கனாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். "இலங்கைக்கு எதிரான எங்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் மைதானமான காலியில் ரங்கனா 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், எனவே அந்த இடத்தைப் பற்றிய அவரது அறிவு விலைமதிப்பற்றதாக இருக்கும்." 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து ஆண்கள் துணைக் கண்டத்தில் ஆறு நேரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தடவையாக இந்த காவியச் சுற்றுப்பயணம் அமைந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில், இலங்கைக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றதற்கும் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்ததற்கும் இடையே எட்டு மாத இடைவெளி இருந்தது. பாகிஸ்தான். இந்திய தொடருக்கும் கேரத்தும், ரத்தோரும் பயிற்சியாளராக உள்ளார்கள் என்பதனை நியுசீலன்ற் கேரல்ட் உறுதி செய்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது, இந்த போட்டியிலும் நியிசிலாந்து அணிக்காக கேரத் தனது பங்களிப்பினை செய்துவருகிறார் என நினைக்கிறேன், ஜெஸ்வால் அவுட்டாகிய அந்த ரிவர்ஸ் சுவீப் பந்து வீச்சு (முழுமையான காட்சி பார்க்கவில்லை காணொளி துணுக்கு மட்டும் பார்த்தேன்) இலங்கை அணிக்கெதிரான போட்டியில் நியுசிலாந்து அணியின் பந்து வீச்சாளரான அஜாஸ் பட்டேலிடம் கேரத் ஆட்ட நடுவில் பேசிய பின் இடது கை ஆட்டக்காரரான டிமுத் கருணாரட்னவிற்கு ஸ்கொயார் லெக்கில் ஒரு களத்தடுப்பாளரை வைத்து பந்தை கிடாயாக வீசி மட்டையாளரை இரட்டை மன நிலையில் வைத்து அவுட்டாக்கியது போலவே இதே போட்டியில் அதே லனில் அதே போல ஒரு சுவீப் ஆடும் பந்தை ஜைஸ்வாலுக்கு சோர்ட் லெக்கில் களத்தடுப்பாலரை வத்து இரையாக பந்தை கிடயாக விசி ஜைஸ்வாலை அவுட்டாக்கியுள்ளார். முன்னால் இந்திய மட்டை பயிற்சியாளரும், இலங்கை சுழற்பந்து வீச்சாளரின் உதவியுடன் நியுசிலாந்து இந்த தொடரை வெள்ளை அடித்தாலும் ஆச்சரிய பட முடியாது, ஆனால் இந்தியா தனது முதலாவது இனிங்ஸில் குரைந்த பட்சம் 300 ஓட்டங்களாவது பெறவேண்டும் ஏனென்றால் 4 ஆவதாக ஆடும் இந்தியணிக்கு 150 ஒட்டங்களே இமாலய இலக்காக இருக்கும்.
  13. மன்னிக்கவும் ரங்கன கேரத் ஆப்கான் இலங்கை தொடர்களுக்கும் மட்டும் தற்காலிக சுழற்பந்துவீச்சு பயிற்சியாளாரக இருந்துள்ளார். நியுசிலாந்து 235 அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது, சுழல் பந்துவீச்சாளர்கள் 9 விக்கெடுக்களை கைப்பற்றி உள்ளனர் முதல் நாள் ஆட்டத்திலேயே, இந்த போட்டியில் சான்ட்னர் விளையாடவில்லை.
  14. இன்னும் என்ன தயக்கம் சரி எனத்தெரிந்தால் உடனே செய்துவிடவேண்டியதுதானே?
  15. லண்டனில் முன்ன்னால் போராளி (இந்திய இராணுவ காலத்தில் தலைமைக்கு தெரியாமல் நிதி மோசடியில் ஈடுபட்டு பின்னர் பிடிபடும் நிலை ஏற்பட்டவுடன் தப்பி இங்கிலாந்து வந்ததாக கூறப்படுகிறது) ஒருவரின் தாயார் ஊருக்கு போகும் போது அங்குள்ள பிள்ளைகளுடன் சேர்ந்து படம் எடுத்து வந்து அந்த படத்தினை வைத்து தனது உணவுப்பொருளை விற்கும் கடையில் அந்த உணவு பொருளிற்கு விளம்பரமாக பயன்படுத்தினதாகவும், அந்த பொருள் விற்பனையால் வரும் நிதி போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு செல்வதாக கூறி விறபனை செய்வதாக கூறினாலும், அதனால் வரும் வருமானத்தில் உள்ளாச பிராயாணத்தில் ஈடுபடுவதாக அவருக்கெதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது அது போல இல்லாமல் இருந்தால் சரிதான்.😁
  16. விமசனங்களின் எதிர்பார்ப்புகள் எதுவிமின்றி படம் பார்த்தால், இர்சிக்க கூடியதாக இருக்கும் என நினக்கிறேன்.
  17. உழைகிற காசிற்கு மேலாக ( நாட்டின் வருமானம்) வட்டி கட்டும் நிலையில், புலம் பெயர்ந்தவர்களின் உதவி இல்லாவிட்டால், ஏழ்மை பட்டினி போசாக்கின்மை என ஒரு எதிர்கால தலைமுறையினையே இந்த இலங்கையின் பொருளாதாரத்தினால் பாதிக்கப்படும் நிலை. அதனால் புலம்பெயர்ந்தவர்களின் உதவி இலங்கைக்கு தேவையாக உள்ளது (உங்களது உதவி). இதனைதான் யாரோ ஒரு கவிஞர் "கண்ணே உன் விழியால் பிறர் அழுதால் கண்ணீரும் ஆனந்தம்" என்று பாடி இருக்கிறார் (சினிமா பாடல்) அதாவது பிறருக்காக அழுவது கூட நல்ல விடயமாம். இப்படிக்கு "நல்ல புலம்பெயர்ஸ் ஏ.கே.டி தோழர்கள் தேசிய கூட்டமைப்பு"
  18. நீங்கள் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர் என நினைக்கிறேன் அதற்கு தோதாக ஒருவரை பிடித்து போட்டுவிடுங்கள்.
  19. இரஸ்சியாவிற்கும் உக்கிரேனுக்குமிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது, ஒருவருக்காக மற்றவர் தேவை ஏற்படும் போது போரில் ஈடுபட ஆனால் உக்கிரேன் நேட்டோவில் கூட இல்லை பாதுகாப்பு ஒப்பந்தமும் இல்லாமையால் நேரடியாக போரில் ஈடுபட முடியாது என நினைக்கிறேன். ஆனால் உக்கிரேனியர்கள்தான் இந்த போரினால் இழப்பினை சந்திக்கிறார்கள் என செலன்ஸ்கி வருத்தப்பட்டுள்ளார், அதற்கு காரணம் மேற்கு உக்கிரேனினை நம்ப வைத்து கடைசியில் கைவிட்டு விட்டது.
  20. உங்களால் கண்டுபிடிக்க முடியாது😁.
  21. நியுசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னால் இலங்கை இடது கை சுழல் பந்து வீச்சாளரான ரங்கன கேரத் உள்ளார்.
  22. நல்ல வேளை *** மாதிரி இருக்கார் என சொல்லவில்லை (*** இன்னொரு நடிகர் யார் என்பதனை உங்கள் ஊகத்திற்கு விட்டுள்ளேன்).
  23. இந்த காணொளியில் 135 ஆசனங்கள் அனுரவுக்கி கிடைக்கும் எனவும் மேலதிகமாக 15 ஆசனங்கள் சும், கஜே குழுவினர் மூலம் கிடைக்கும் எனகூறப்பட்டுள்லது,
  24. தோழர் அனுரவுக்கு எனது நட்பின் அடையாளமக உடுக்கை இழந்தவன் கை போலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பென்பதற்கிணங்க ஒரு இடுப்பு பட்டி எனது உபயம், 135 ஆசனங்கல் கிடைக்குமாம் என தேசிய புலனாய்வு கூறியிருக்காம் சுமோ, கஜேக்கு மொத்தமாக 15 கிடைக்குமாம், கூட்டணி அமைச்சால் 150 வருமாம், அதனால நான் உங்கள் நண்பர் (யாழ்கள உறவுகள் அனைவரும் நண்பர்களே) உங்கள் நண்பர் எனக்கும் நண்பர்தானே? அனுரவுக்கு மட்டும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் சும்மும், கஜேயும் அந்த அணியில் இருப்பதால் ஒரு பாதுகாப்பிற்கு அந்த இடுப்பு பட்டி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.