Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. ஜப்பானிடம் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவமே உள்ளது (ஜப்பானிற்கு இராணுவ அச்சுறுத்தல் ஏற்படும் போது அதனை காக்கும் கடமை அமெரிக்க அரசிற்குரியதாக உள்ளது), ஜப்பானிய ஜென் நாணயம் 6% ரிசர்வ் நாணயமாக பயன்படுத்தப்படுகிறதல்லவா? மிகவும் பொருளாதார உறுதித்தன்மை கொண்ட நாடாக சிங்கப்பூர் இருந்தும் ஏன் அதன் நாணயம் கையிருப்பு நாணயமாக அமெரிக்க நாணயத்தினை புறந்தள்ள முடியவில்லை? பொது நாணய அங்கீகாரம் அமெரிக்க நாணயத்திற்கு மட்டும் இல்லை, வேறு சில நாணயத்திற்கும் உள்ளது ஆனால் அவையினால் ஏன் அமெரிக்க நாணயம் போல் வர முடியவில்லை.
  2. உள்ளூரில் இணையவெளியின் பாவனையைக் கூட வெளிப்படையாக கையாளும் இயல்பில்லாத சீனாவின், ரஷ்யாவின் நாணயங்களை முட்டாள்கள் தான் நம்பிக் கையிருப்பு நாணயமாக ஏற்றுக் கொள்வர். தென்னாபிரிக்கா இன்னும் சமூக ஏற்றத்தாழ்வுகளில் இருந்து வெளிவராமல் தவிக்கிறது. இதையெல்லாம் புறக்கணித்து விட்டு"கடன்முறி, கடன்முறி" என்று நீங்கள் பல்லவி பாடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கருத்திற்கு நன்றி, நீங்கள் கூறும் இந்த அமெரிக்க பண்புகள் வேறு எந்த நாட்டிலும் இல்லையா? ஏன் அவ்வாறிருக்க அமெரிக்க நாணயத்தினை reserve currency ஆக பயன்படுத்துகிறார்கள் என்று எப்போதாவது சிந்த்தித்ததுண்டா?
  3. வங்கதேசத்திற்கெதிராக நுவான் துசாராவின் 5 விக்கெட்டுகள் டில்சான் மதுசங்கவின் பந்துவீச்சு.
  4. இந்திய அணி இலங்கை அணியினை பயிற்சி ஆட்டத்தில் துவைத்து எடுத்ததாக கூறுகிரார்கள், நல்ல வேளை இலங்கை அணி பந்து வீச்சாளர் நுவான் திசாரா காயமடைந்து வெளியேறியமை, வங்க தேச அணிக்கெதிராக 5 வெக்கெட்டுக்களை எடுத்த ஒரு போட்டியினூடாக பிரகாசித்தாலும் அவர் பத்திரன மலிங்க போல பந்தை வீசுபவர் ஆனால் அவருக்கு மற்றீடான தில்சான் மதுசங்க இடது கை பந்துவிச்சாளர் திறமையானவர் அவருக்கு பதிலாகவே உள்ளே வந்துள்ளார் ஆனால் அவர் திறமையின் பிரகாரம் நுவான் துசாராவிற்கு பதிலாக வந்திருக்க வேண்டியவர் அவரது ஆரம்ப பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு பொதுவாக வீசும் உள்ளே வரும் பந்து போல பந்தின் மேலாக விரல்களால் வீசும் நுணுக்கமான ஓப் கட்டர் வீரர்களை குழப்பும் திறன் வாய்ந்தது, ஆடுகளமும் வேகப்பந்து வீச்சிற்கு சாதகம், இலங்கை எதிர்பாரா வெற்றியினை பதிவு செய்யும் என கருதுகிறேன்.
  5. உங்கள் கருத்திற்கு நன்றி, அமெரிக்காவிலே அதிக வருமானமீட்டும் மிக குறுகியதொகை பிரிவினரால் சமச்சீரற்ற பொருளாதார நிலையினால் அதிகளவில் உள்நாட்டு பொருளாதாரத்தில் சிக்கல்கள் நிகழ்கிறது ஆனால் அதனை மாற்றும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் கிடையாது எனவே நினக்கிறேன் அதனை தவிர்த்து அமெரிக்க வல்லாதிக்கத்தினை நிலைநிறுத்தும் நடவடிக்கைகள் கூட அண்மைக்காலங்களில் பெரிதாக எதிர்பார்த்த விளைவை உண்டாக்காமல் எதிர்மறை விளைவினை ஏற்படுத்தியுள்ளது. இதனை அமெரிக்க கொள்கைகளின் தோல்வியாக நான் கருதுகிறேன், உதாரணமாக 2014 முதல் உக்கிரேனை பல்லுப்புடுங்கிய பாம்பாக இருந்த இரஸ்சியாவிற்கெதிராக ஒரு பலச்சமனிலையினை பேணுவதற்காக எடுத்த முயற்சிகள் எதிர்பாராவிதமாக பின்விளைவின உருவாக்கி உலக பொருளாதாரத்தில் 7% சரிவினை அமெரிக்க பொருளாதாரத்தடைகள் ஏற்படுத்தியுள்ளது (ஐ எம் எப்) கருத்தின் பிரகாரம்) அதே போல் பல பிளவுபட்ட மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார மையங்களை தோற்றுவித்துள்ளது இந்த அமெரிக்க கொள்கை. இது உலக பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பினை இனிவரும் காலங்களில் ஏற்படுத்தலாம், மறுவளமாக அமெரிக்க பொருளாதாரம் பெரிய சவாலை எதிர்கொள்ள உள்ளது (இதனை சில ஆண்டுகளாக சொல்லி உள்ளேன்) இதனை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் சீர் செய்யலாம்? துரதிஸ்ரவசமாக எந்த கட்சியாலும் முடியாது எனவே நான் நினைக்கிறேன் ஏனெனெனில் இந்த உக்கிரேன் அமெரிக்க கொள்கை ஒரு வண்ணாத்தி பூச்சி இறக்கை செயலாக ஒரு பொருளாதார சுனாமி ஒன்றினை உருவாக்குகிறது, அதன் ஒரு அங்கமாக ஜப்பானிய பொருளாதார கொள்கையாக பார்க்கிறேன், அவர்கள் யதார்த்தத்திற்கேதிரான (எனது கருத்து) ஒரு போர் ஒன்றினை ஆரம்பித்துள்ளார்கள் அதன் முடிவு என்னவாக இருக்கும் என தெரியவில்லை.
  6. ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கமாக உங்கள் கருத்து உள்ளது, இவ்வாறு சிந்திக்கவில்லை, வாழ்க்கை அனுபவம் ஒரு Implicitly learning என்பார்கள், இதனாலேயே எமது கல்விசார் சமூகம்(Explicitly learning environment) மிகவும் தவாறான முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கிறார்களோ?
  7. 'No Tax for the Middle Class' ? இது ஒரு சவாலான விடயமாக இருக்கும், ஆனால் சுவாரசியமான தகவல்கள், அமெரிக்கா பாதீட்டிற்கான வரி வருமான இடைவெளி கிட்டதட்ட 2 ரில்லியன் குறைவாக உள்ளது இதில் வருகின்ற வருமான வரி மூலமான வரியில் தனிநபர் வருமான வரி (நிருவன வரி அல்ல 11% ?) 48% இதில் மத்திய தரத்தினரின் வருமான வரியினை தள்ளுபடி செய்வார்களா?
  8. உங்கள் கருத்திற்கு நன்றி, உங்கள் கதையினை குறுக்கிட மனதளவில் சங்கடமாகவே உணர்ந்தேன், பின்னர் ஒரு நகைசுவையாக அடுத்த தரப்பு எவ்வாறு சிந்திக்கலாம் என்பதாக எழுதியிருந்தேன்,பொதுவாக சில காலமாக கதைகள் வாசிப்பதில்லை ஆனால் உங்கள் கட்கை கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாக உணர்கிறேன் அதனால் வாசிப்பதுண்டு. பரவலாக உங்கள் கதை யாழில் நல்ல வரவேற்பை பெறுகிறது தொடர்ந்து எழுந்துங்கள் அத்துடன் வித்தியாசமான முயற்சிகளையும் செய்யுங்கள்.
  9. https://posts.voronoiapp.com/money/The-Price-of-a-Big-Mac-Around-the-World--1663 கடன் குடுக்கிற அமெரிக்காவினை விட உக்கிரேனில் வாழ்க்கை செலவு 48% குறைவாக உள்ளது!
  10. மன்னிக்கவும், எனக்கு இந்த அமெரிக்கர்களின் ஏலியன் சதிக்கோட்பாட்டில் நம்பிக்கை இல்லை😁.
  11. மன்னிக்கவும் நீங்கள் உண்மையாகவே விளங்காமல்தான் வினவுகிறீர்கள் என்ற புரிதலில்ல்லாமல் பதிலளித்தமைக்கு, நான் உட்படவே தவறு செய்தவர்கள் என கூறுகிறேன், மற்றது அந்த அரசியல்வாதியினை பற்றி அனைவருக்கும் தெரிந்த விடயத்தினை இனி கதைப்பதால் எந்த மாற்றமும் இல்லை, மாற்றம் எங்களிலிருந்து வருவேண்டும்.
  12. கோட்பாட்டின் சதி தொடருகிறது.......... அவர் மனைவி அவரிடம் வருகின்ற பஸ் எமது பஸ்தான் கையினை காட்டுங்கள் என அவரிடம் கூறுகிறார், ஆனால் அவர் பதிலுக்கு ஒரு நக்கலான புன்னகை ஒன்றினை உதட்டருகே தவளவிட்ட வண்ணம், இது என்ன ஊரென்றா நினைத்தீர்கள்? ஒவ்வொரு தரிப்பிடத்திலும் பஸ்ஸினை அவர்கள் நிறுத்தத்தான் வேண்டும் என்றார். இங்கு அப்படி நிறுத்தாமல் போனால் வாடிக்கையாளர் நீதிமன்றில் போய்தான் பஸ்ஸினை நிறுத்தவேண்டும் என்றார். பஸ்ஸின் குறிகாட்டி விளக்கு எரியும்போதே பஸ் தனது வேகத்தினை குறைத்து இவர்கள் பக்கமாக பஸ்ஸினை நிறுத்தியது, அவர் தனது மனைவியினை பார்த்து ஒரு வெற்றி புன்னகையினை வீசி விட்டு பஸ்ஸில் தனது குடும்பத்தினரை ஏற அனுமதித்து இறுதியாக பஸ்ஸில் ஏறினார். பஸ்ஸில் அவரை பார்த்து சாரதி கூறினார், எனக்கு எப்படித்தெரியும் நீ பஸ்ஸில் ஏறப்போகிறாயா இல்லையா? என, கை காட்டியிருக்கலாமே என கேட்டார், எங்கே தனது மனைவிக்கு கேட்டுவிடுமோ என பயந்த வண்ணம் ஓ அப்படியா என பதிலளித்த அதே நேரம் அவரது மனைவி அவரை திரும்பிப்பார்த்து ஒரு புன்னகை செய்தார். பஸ் சாரதி என்ன ஓ அப்படியா என்றால் என்ன அர்த்தம் என என்று கோபத்தோடு கேட்பது அவர் காதில் பின்னால் கரைந்து போனது ஏன் இந்த சின்ன விடயத்திற்கு இந்த பஸ் சாரதி அந்த ஒன்று கூடலிற்கு வந்த ரசோதரன் மாதிரி என்ன உலகம் உருண்டையா? என அலட்டிக்கொள்கிறார் என சிந்தித்தவாறே தனது இருக்கையை நோக்கி நகர்ந்தார்.
  13. இல்லை! நீங்கள் எதிர்பார்க்கும் கருத்தினை நான் பதியமாட்டேன் 😁.
  14. எனது விருப்பமும் வெறுப்புகளை விட்டு ஒற்றுமையினை உருவாக்குதல்தான், அதற்கு உங்கள் விருப்பு இருப்பது மகிழ்ச்சி.
  15. சங்கரின் போய்ஸ் படமும் இளவட்டங்கள் நடித்த படம்தான், சிறப்பான ஒலி, ஒளிப்பதிவுகள், காட்சி அமைப்புக்கள், மற்றும் பாடல்கள் மிக பிரபலமானது ஆனால் படம் தோல்வியான படம் என நினைக்கிறேன். இந்த படத்தில்தான் தமிழில் முதல் முதலாக நேரத்துண்டுகள் (Time slice) தொழில்னுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்த தொழில்னுட்பத்திற்கு இந்த காணொளியில் 55 புகைப்படக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் கதாநாயகி தனது காதலை சொல்ல சங்கர் பயன்படுத்திய தொழில்னுட்பம் இது சங்கரின் இந்த திரைப்பட பாடலில் 60 புகைப்படக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது, இரண்டு ஒளிப்பதிவுக்கருவிகள் இரண்டும் நேரெதிராக 180 பாகையில் அமைந்திருக்க 60 புகைப்பட கருவிகளும் அரைவட்டமாக (முதலாவது காணொளியில் உள்ளது போல) அமைந்திருக்கும் அந்த 2 ஒளிப்பதிவுகருவிகளும் 60 புகைப்பட கருவிகளும் ஒரு குறித்த காட்சியினை படம்பிடிக்கும் அதனை தொகுக்கும்போது ஒளிப்பதிவு கருவி #1 இலிருந்து 60 புகைப்பட கருவிகள் வரிசையாக தொகுக்கப்பட்டு இறுதியாக ஒளிப்பதிவு கருவி #2 இல முடிவடையும். 60 புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக வைக்கும்போது கிட்டதட்ட அந்த காட்சி 2.5 நொடிகள் நீடிக்கும் (24fps).
  16. இன்று இந்த மறைந்த அரசியல்வாதிக்கெதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று மக்களை ஒருங்கிணைக்கதவறியமை. 2009 முள்ளிவாய்க்கால் நிகழ்வின் மூலம் தமிழ் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நசுக்கிய பின் இங்கு சிட்னியில் இலங்கை தொலைக்காட்சி படப்பிடிப்பினை மேற்கொண்டது (ஒவ்வொரு வளர்ந்த நாடுக்ளிலும் இவ்வாறு படப்பிடிப்பினை மேற்கொண்டதாக கூறப்பட்டது). அந்த படப்பிடிப்பின் நோக்கம் இலங்கை உள்நாட்டு போரினை முடிவிற்கு கொண்டு வந்துவிட்டது அடுத்தது இவ்வாறு வளர்ச்சி அடைவதுதான் என்பதாக அவர்களது கருத்தாக இருந்தது. சிறுபான்மை தமிழர்களின் உரிமையினை இரும்புக்கரம் கொண்டு அடக்கி 15 வருடங்களின் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலமையிலிருந்து வெளிவருவது பற்றி கதைப்பதிலேயே காலம் போகிறது. மக்களை பிளவுபடுத்துவதால் அரசியல் இலாபம் பெறலாம் ஆனால் அதனால் நாட்டிற்கும் மக்களுக்கும் தீமைதான் ஏற்படும். சிறுபான்மை சமூகமாகிய நாம் பல பிரிவுகளாக பிரிந்திருப்பதால் மேலும் பலவீனமாகிறோம், ஆனால் அதற்கு எமக்குள் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யாமல் குற்றம் சாட்டுவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார் அதற்கு பலிக்கடா இந்த அரசியல்வாதி.
  17. நானும் சும்மா ஒரு நகைசுவைக்காகவே இந்தியன் 3 பற்றி குறிப்பிட்டேன், ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பு இவ்வாறான ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதனை அறிவேன். ஒரு திரைப்படம் பெயர் அலைகள் ஓய்வதில்லை என நினக்கிறேன் அதில் கார்த்திக் அறிமுகமான படம், அந்த படத்தில் இறுதித்தருணத்தில் இரண்டு காதலர்களும் தமக்கு மதம் வேண்டாம் என மதத்தினை புறந்தள்ளியதாக படம் முடிவடையும் என நினைக்கிறேன், அந்த படத்திற்கு ஏகோபித்த ஆதரவு அக்காலத்தில் கிடைத்ததாக கேள்விப்பட்டேன். அந்த படத்தின் இயக்குனர் பாரதிராஜா, ஆனால் அந்த கதை அவரது துணை இயக்குனரான மணிவண்ணனின் கதை என கூறப்படுகிறது. சிறப்பான படத்திற்கு படத்தின் காட்சி அமைப்புகள் இசை என்பன இரண்டாம் பட்சம், ஆனால் மூலக்கதை (கரு - அதனை ஒரு வரியில் கூறுவார்கள் ) முக்கியம், ஆனால் ஜனரஞ்சகமான (மசாலா) திரைப்படத்திற்கு மூலக்கதை முக்கியமில்லை என நினைக்கிறேன், இந்த இயக்குனர் முக்கியமாக இந்தவகை மசாலா பட இயக்குனராக இருந்தாலும் இவரது கதையில் ஒரு கருத்தினை வலியுறுத்தி வருவதன் மூலம் சிறந்த திரைப்படத்திற்குரிய மூலக்கதையினையும் தொட்டு செல்ல முயற்சிப்பவர். இந்த திரைப்படத்தில் இந்த விடயம் சரி வரவில்லை போல இருக்கிறது (திரைப்படம் பார்க்கவில்லை), அதே நேரம் பிழையான இடத்தினை சுட்டி காட்டினால் நிலமை இன்னும் மோசமாகும் உதாரணமாக அலைகள் ஓய்வதில்லை படத்தில் இரண்டு மதத்தில் ஒரு சிறுபான்மை மதத்தினை சேர்ந்தவரை வில்லனாக காட்டி இருப்பார்கள் அதனையே எமது இந்து மதத்தினை சேர்ந்த ஒருவரை வில்லனாக காட்டியிருந்தால் பெரும்பான்மையானவர்களினது ஆதரவு இந்தளவிற்கு இருக்காது என கருதுகிறேன்,
  18. இந்தியன் 3 நன்றாக உள்ளதாக கூறுகிறார்கள்!
  19. இந்த வைத்தியர்களை இலங்கை சார்பாக ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டிக்கு அனுப்பினால் சில பதக்கங்களாவது கிடைக்கும்.
  20. நீங்கள் இந்த விடயத்தினை தொட்டு சென்ற வகையில் நீங்கள் ஒரு விபரமான சமையல்காரர் என கருதுகிறேன்,வழமை போல தெரியாத விடயமாக காட்ட முயற்சிக்கிறீர்களோ எனும் சந்தேகம் எனக்கு உள்ளது அல்லது உண்மையிலேயே உங்களுக்கும் என்னை போல சமையல் எட்டா(?)பொருத்தமோ தெரியவில்லை, நான் உங்களை தவறாக புரிந்துள்ளேனோ தெரியவில்லை. குறுக்காக வெட்டிய வெங்காயமும் நீட்டாக வெட்டிய வெங்காயமும் தன்மையிலும் (Texture), சுவையிலும் வித்தியாசம் உள்ளதென கூறுவார்கள், அதே போல வெட்டு அளவுகளும் சுவை மற்றும் தன்மையில் மாற்றத்தினை காட்டும், அது காய்கறிக்கும் பொருந்தும் அத்துடன் அசைவ உணவுகளில் கலக்கப்படும் காய்கறி மற்றும் மற்ற சுவையூட்டிகளின் அளவீடுகள் என்பவற்றைனையும் குறிப்பிடுவார்கள்.
  21. உங்கள் கருத்டிற்கு நன்றி, இந்த கருத்துக்களை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் அதனால் சில தெளிவுகளை நாங்கள் அனைவரும் வருவதற்கு இந்த கருத்தாடல் அவசியாமாகிறது என கருதுகிறேன். நீங்கள் நினைப்பது போல இந்து சமயமோ எந்த மதமோ மக்களை பிரிக்கவோ அல்லது அவர்களை அடிமைப்படுத்தவோ நிச்சயமாக விரும்பாது, ஆனால் பிராமணர்கள் தமது சுய இலாபத்திற்காக உருவாக்கிய ஒரு முறைமையினை 2 நூற்றாண்டிற்கு முன் நாங்கள் இறக்குமதி செய்து பிராமணர்களால் சூத்திரர்கள் என விழிக்கப்படும் நாங்கள் அதனை எமக்கு சாதகமாக அதே வர்ணாச்சிரம தர்மத்தினை(?) பயன்படுத்தி எம்மவர்களுக்குள்ளேயே பல பிரிவுகளை ஏற்படுத்தி ஒரு பிரிவு நிலச்சுவாந்தர்களாக உருவாக மற்றவர்கள் அடிப்படை கல்வியினை பெறமுடியாதநிலைக்கும் அடிப்படை பொருளாதார வசதிகளும் பெற முடியாதநிலையினை ஏற்பட்டுத்தியுள்ளார்கள், சாதியம் பற்றிய தவறான புரிதலால் அது இந்து சமயத்தின் ஒரு பகுதி எனும் விம்பத்தினை உருவாக்கிவிட்டுள்ளார்கள், இதனை பற்றி பேசுவது இந்து மதத்திற்கு எதிரான கருத்தாக உணர வைக்க முயற்சிக்கிறார்கள். இந்து மதம் இந்த சுயநலமிகளை புறந்தள்ளி வர்ணாச்சிரம தர்மத்தினை தடை செய்யவேண்டும். எமது சமூகம் தற்போது போரினால் பொருளாதார ரீதியாக மிக பின்னடைவினை சந்திதுள்ளது, விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையான 1. கல்வி 2. தாரளமயப்படுத்தப்பட்ட பொருளாதர முறைமை 3. அடிபடை கட்டுமானம் (Investment Led - Growth model) 4. வெளிநாட்டு முதலீடு இந்த 4 அடிப்படை காரணிகளினை இந்த சாதிய முறைமை கடுமையான பாதிபினை ஏற்படுத்துகிறது இதனை உடனடியாக கருதிற்கொள்ளாவிட்டால் நிலமை மிக மோசமாகிவிடும்.
  22. தமிழ் மக்களின் பொருளாதார ரீதியான பின்னடைவிற்கு காரணம் இந்திய சமூக பிற்போக்குதனங்களை அப்படியே தமது சுயநலனுக்க்காக சிலர் ப்யன்படுத்துகிறார்கள், இந்தியா எப்போதும் சீனாவை போல பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய முடியாது, இரு நாடுகளும் ஒரே பொருளாதார வளர்ச்சி விகிதத்தினை 80 களில் ஜொண்டிருந்தன இந்தியாவும் சீனாவும் ஒரே மாதிரியான இடது சாரி பொருளாதார கொள்கைகளை 80 களில் பின்பற்றியிருந்தன இதற்கு ஒரு காரணமாக இந்த சாதிய அடக்குமுறைகள் காரணம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மிக வறுமையான மானிலமான பீகாரில் பல வேலையற்ற பட்டதாரிகள் காணப்படுகின்ற நிலையில் பல வேலைக்குரிய நியமனங்கள் வழங்காமல் இருப்பதற்கு குறிப்பிட்ட சாதிய அமைப்பு காரண்மாக கூறப்படுகிறது. இது பொதுத்துறையில் அதிகளவில் காணப்படுவதால் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றது (இது இந்திய பொருளாதார வள்ளுனர்களின் கருத்து). எமது பகுதிகளில் திட்டமிட்டு ஒரு பகுதி மக்களை தொடர்ச்சியாக வறுமைக்கோட்டிற்கீழ் வைத்திருந்து அவர்களை அடிமையாக நடத்துவதற்கு காலனித்துவ காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை தமக்கு சாதகமாக்கி தொடர்ச்சியாக 200 வருடங்கள் மக்களை அடிமையாக்கியுள்ளார்கள் அதற்கு சமயங்களை தமது சுய இலாபத்திற்காக பயன்படுத்தியுள்ளார்கள். சமயத்தினை பயன்படுத்தும் போது மக்கள் கேள்வி கேட்பதில்லை என்பதால் மிக தந்திரமாக இதை கையாண்டுள்ளார்கள், அப்படியான சமூக விரோதிகளை சமய தொண்டர்களாக விம்பப்படுத்துவதிலும் வெற்றி பெற்றுள்ளார்கள், ஆனால் அதிர்ச்சியான விடயம் என்னவென்றால் இப்படியான சமூக விரோதிகளை தற்காலத்திலும் கொண்டாடுகின்ற நிலைதான், அதனை விட மோசம் தாம் அடக்கப்படுவதற்கு மதம் ஒரு காரணமாக பயன்படுத்தப்படுகின்றது என தெரிந்தும் அந்த மதத்தினை பாதிக்கப்படுகின்ற மக்கள் தொடர்ச்சியாக பின்பற்றுவதனால் அவர்கள் மீதான பிடியினை இந்த சாதி வெறியர்கள் விடப்போவதில்லை என்ற புரிதல் இல்லாமை. இந்த இறுக்கமான சாதிய கட்டமைப்பு இருக்கும் வரை எந்த விதமான பொருளாதார முன் முயற்சிகளும் பெரிதளவில் எமது சமூகத்தில் பொருளாதார சமூக முன்னேற்றத்தினை ஏற்படுத்தாது, எமது சமூகத்தில் மாற்றம் ஏற்படாமல் எந்த வளர்ச்சியும் ஏற்படாது.
  23. உங்கள் கருத்திற்கு நன்றி, மன்னிக்கவும் உங்கள் கருத்துடன் உடன்பாட்ட்ற்கு வரமுடியாமைக்கு, சில கோட்பாடுகளை எந்த வித பின்புலத்தினையும் கவனத்தில் கொள்ளாமல் அவ்வாறே உள்வாங்குதல் எனும் முறைமையிலான கற்கை நெறியினை Kind learning என அழைக்கிறார்கள், இந்த வகையிலேயே வரலாற்றினையும் (பொதுவான வரலாறாக இருந்தாலும் மத சார்பிலான வரலாறாக இருந்தாலும்) அணுகிறார்கள். இதனால் திரைமறைவில் காணப்படும் உள்குத்துக்களை அறிய முடிவதில்லை அல்லது அறிய விரும்புவதில்லை இது நீண்ட கால நிலைத்தன்மையினை பாதிக்கிறது. இந்த வரலாற்று புரளிகள் உள்ளடி வேலைகளை அறிந்து கொள்வதற்கு புரிந்துணர்வு ஏற்படுத்தக்கூடிய பாரம்பரியமற்ற கற்கைநெறி வேண்டும் என கூறப்படுகிறது இதனை Wicked learning என அழைக்கிறார்கள், இந்த பாரம்பரியமற்ற கற்கை நெறியினை பின்வரும் உதாரணத்தில் கூறலாம். நாம் பாரம்பரிய முறை கற்றல் நெறிகளின் பின்புலம் கொண்டவர்களாக இருப்பதால் சில நடைமுறை ஒவ்வாத விடயங்களுக்கான விடைகளை காண முயற்சிப்பதில்லை அல்லது விரும்புவதில்லை என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). எனது கருத்து சில தற்பொது எமக்கு பிடிக்காத விடயங்களை கடந்து போவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படாது அதனை எதிர்கொள்ள எமது வரலாற்று தவறுகளை கற்று கொள்ளவேண்டும் என மற்றவர்கள் கூறும் விடயம் சரியாக இருக்கும் என கருதுகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.