Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. நான் வெளிநாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் வேலை செய்த நிறுவனத்தில் எனது கல்வித்தரமே மிக மோசமான கல்வித்தரம் (ஆரம்பத்தில் ஒரு சமையல்காரனாக வேலைக்குள் நுழைந்தேன்) இடைநிலை கல்வியினை கூட முடித்திருக்கவில்லை, நிறுவனதில் நடைபெறும் கூட்டங்களில் வாயே திற்க்காமல் ஒரு மூலையில் ஒழிந்திருப்பது (ஆங்கிலமும் ஒழுங்க்காகத்தெரியாது) ஆனாலும் எனது முதலாளி (பல சங்கிலித்தொடர் வர்த்தகங்களின் சொந்தக்காரர்) வாயை திறந்து பேசு என கத்துவார், அப்படி உன்னால் பேச முடியாவிட்டால் கூட்டத்திற்கு வராதே என கத்துவார். எடிசனின் ஆரம்பக்கல்வி காலத்தில் ஒரு நாள் அவரது ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதத்தினை கொண்டு வந்து அவரது தாயாரிடம் கொடுத்தாராம், அதனை பார்த்த அவரது தாயார் தனது கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு அந்த கடிதத்தினை உரத்து படித்தார் "உங்கள் மகன் ஒரு மேதை அவனுக்கு கல்வி கற்பிப்பதற்கு இந்த சிறிய பாடசாலையில் வசதியில்லை" என. அதன் பின்னர் எடிசனிற்கு அவரது தாயாரே வீட்டில் கல்வி கற்பித்தார், பின்னாளில் அவரது தாயார் இறந்த பின்னர் அந்த கடிதத்தினை தாயாரின் பெட்டியில் கண்டெடுத்து எடிசன் வாசித்தார் அதில் "உங்கள் மகன் சித்த சுவாதினமற்றவர் அவருக்கு எம்மால் கற்பிக்க முடியாது அதனால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்" என. எனது அபிப்பிராயத்தில் முட்டாள்கள் என எவரும் இல்லை.
  2. முள்ளிவாய்க்கால் போல ரபாவும் ஆகக்கூடாதெனும் நிலையிலேயே நீங்களும் உள்ளீர்கள் என நம்புகிறேன், இதனை திட்டமிட்டு நடத்துபவர்கள் இந்த படுகொலைகள் நிகழ்ந்த பின்பு முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த படுகொலை விசாரிப்பு எனும் நாடகத்தினை தொடர்வதை போல் ரபா படுகொல விசாரிப்பு நாடகத்தினை வருடக்கணக்காகத்தொடர்வார்கள், அவர்களிடமே போய் பதிலை கேட்டால் எந்த பிரயோசனமும் இருக்காது என கருதுகிறேன்.
  3. உங்களுக்கே தெரியும் அமெரிக்காவினது ஆதரவின்றி (ஆயுத, மற்றும் கொள்கை ரீதியானஆசியில்லாமல்) இந்த படுகொலைகள் நடத்தப்பட முடியாது என்று, இந்த திரியில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கப்பால் இதை ஒரு பேசு பொருளாக்கி விவாதிப்பதற்கு ஏற்ப மனநிலையில் நானும் இல்லை நீங்களும் இல்லை என தெரியும், எனது எதிர்பார்ப்பு அமெரிக்க மக்களால்தான் இந்த அழிவைத்தடுத்து நிறுத்த முடியும் அப்படி தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் அதற்காக குறைந்த பட்ச முயற்சியினையாவது யாழ்கள உறவுகள் முயற்சிக்கவேண்டும்.
  4. அமெரிக்காவில் வசிக்கும் மக்களது வரிப்பணத்தில்த்தான் இந்தப்படுகொலைகள் நிகழ்த்தப்படுகிறது, இதனை கண்டும் காணாமல் விட்டால் இந்த படுகொலைகளின் பாவம் அவர்களையும் வந்து சேரும். குறைந்த பட்ச மனித பண்புடைய மனிதர்கள் இதனை கண்டிப்பாக அனுமதிக்கமாட்டார்கள்.
  5. முன்னாள் ஐநா தூதரின்(நிக்கி கெய்லி) கேவலமான செயல். அமெரிக்காவினது உண்மையான முகம் இதுதான்.
  6. ஈரான் மீதான பொருளாதார தடை மிக நீண்டகால நடைமுறையிலுள்ளது, இந்த தடைகளின் பாதிப்பிலிருந்தும் ஒரு சவால் விடும் தேசமாக உள்ளது. பலஸ்தீன இஸ்ரேல் போர் ஆரம்பத்தில் இந்தியா தனது ஆதரவினை இஸ்ரேலிற்கு வழ்ங்கியிருந்தது, அதற்கு கார்கில் போரில் இந்தியாவிற்கு தேவையான ஆட்லறி குண்டுகளை இரஸ்சியாவிடமிருந்து இஸ்ரேல் மூலமாக உடனடியாக பெற்றுகொண்டது என பல காரணங்கள் கூறப்பட்டது. ஆனால் இஸ்ரேல் எதிர்யான ஈரானின் ஜனாதிபதி மரணத்திற்கு இந்தியா தற்போது துக்கதினம் அனுஸ்டிக்கிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தியாவின் வெளியுறவு கொள்கை என்பது இந்திய நலன் என கூறுகிறார், இந்த இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டிற்கு ஆசான் இலங்கைதான், மேற்கு சீனா, இந்தியா, பாகிஸ்தான், இரஸ்சியா என எதிர் எதிரணிகளுடன் ஒரே நேரத்தில் நல்லுறவினை பேணும் அதே நேரம் ஒரு குறித்த தரப்பு அழுத்தம் கொடுக்கும் போது அவர்களது எதிர்ப்பாசறையில் இருந்து இலங்கைக்கு ஆதரவாகவும் அழுத்தம் கொடுப்பவர்களுக்கு கண்டனம் கொடுக்கும் நிலையில் இலங்கை உள்ளது. ஏன் ஈரானின் அதிபருக்கு இலங்கை கூட அஞ்சலி செலுத்துகிறது ஏன் இவ்வாறு நாடுகள் ஈரானிற்கு திடீர் ஆதரவு செலுத்துகின்றன. தாராள மய பொருளாதாரத்தின் அடிப்படை தங்குதடையற்ற வர்த்தகம், ஆனால் தற்போதுள்ள உலகம் பொருளாதார தடையினை ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் ஒரு புது வாய்ப்பினை வளர்ந்து வரும் நாடுகளுக்கு உருவாக்கிவிட்டுள்ளது அது இடைத்தரகர்களாக வர்த்தக செயற்பாட்டில் ஈடுபடுவது, இதனை ஐ எம் எப் இணைப்புநாடுகள் என அழைகிறது, இதன் மூலம் பொருளாதார தடைகளால் உலக பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பினை இந்த நாடுகள்நிவர்த்தி செய்கின்றன, இவை வர்த்கக தடை உள்ள நாடுகளுக்கு பொருள்களை பெற்றுக்கொடுப்பதுடன் அவர்களது பொருள்களை பொருளாதார தடைவிதித்த நாடுகளுக்கே வழ்ங்குகின்றன அவற்றில் மெக்சிக்கோ, வியட்நாம், இந்தியா என்பன முன்னிற்கின்றன இந்த ஓட்ட போட்டில்யில் இலங்கையும் இணைய விரும்புகிறது, இலங்கை மட்டுமல்ல வேறு நாடுகளும் விரும்புகிறன. மறுவளமாக இஸ்ரேலின் நிலை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிறது. எமது பிரச்சினைகான தீர்வினை இந்தியா மூலமாகத்தான் பெறுவோம் ஒரு சாராரும் மேற்கு நாடுகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் எனும் ஒரு சாராரும் கறுப்பு வெள்ளையாக சிந்தித்து ஒரே வட்டத்திற்குள் நாம் இருக்க உலகம் எம்மை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. நாமும் மாறவேண்டும்,
  7. நன்றி ரஞ்சித் உங்கள் மொழிபெயர்ப்பிற்கு, ஆங்கிலத்தில் உரையாடப்பட்ட காணொளியில் ஒரு பகுதியினை பார்த்தேன் மிக நீளமாக இருப்பதனால் மிகுதியினை பிறகு பார்க்க முடிவு செதுள்ளேன். இலங்கையில் கல்விகற்ற பெரும்பான்மை சமூகம் கூட புரிந்துணர்வற்ற நிலையிலேயே இருக்கிறார்கள், இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்கள் (சில பெரும்பான்மை மக்களும் இதற்குள் விதிவிலக்காக அடங்ககூடும்) போர் முடிந்தபின்னரான இக்காலத்திலும் அநீதியான முறையில் இலங்கயின் சட்டத்திற்குட்பட்ட முறையில் துன்புறுத்தப்படுகின்ற பாதுகாப்பற்ற நிலையில்தான் உள்ளார்கள், இதற்கு காரணம் இலங்கை எனும் நாட்டில் ஒரு பொதுவான சட்டம் இல்லை, இந்த காணொளியில் கூறுவது போல பெரும்பான்மை சமூகம் தான் நினைத்த மாத்திரத்தில் புத்த ஆலயங்கள், காணி அபகரிப்புகள் என எதை வேண்டுமானாலும் செய்யலாம் அதனை எதிர்ப்பவர்களை கைது ஆணைப்பத்திரம் (அரஸ் வாரண்ட்) இல்லாமல் கைது செய்து காலவரையற்று தடுத்து வைக்கும் அவசரகால சட்டம் என்பவை உள்ளது. அரகலய நிகழ்வு பொருளாதார சீர்கேட்டினாலேயே உருவானது, பெரும்பான்மை வாதம் போரினால் சிறுபான்மையின தமிழ் மக்களை வென்றதன் பரிசாக அது நிகழ்ந்தது, பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்தால் உலகம் இருண்டுவிடும் என்பது போல இலங்கையின் பொருளாதார பிரச்சினை முடிவடைந்து விட்டதாக நினைக்கிறார்கள், அதனால் இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கை மக்களின் பாதுகாப்பிற்காக சட்டம் பேணப்படவேண்டும் என்பதனை அவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை. கடந்தகாலத்தில் தவறுகள் நிகழ்ந்துவிட்டது என்பதனை ஏற்று சிறுபான்மை மக்கள் ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு நிகழாது எனும் நம்பிக்கையுடன் ஒன்றித்து பயணிக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டாலே இலங்கை இந்த புதை மணலிற்குள்ளிருந்து மீழ முடியும், அதற்கான அரசியல் தீர்வுகள் காணப்படவேண்டும். இலங்கை 2032 இல் தனது கடனினை மொத்த தேசிய வருமானத்தில் 95% கொண்டுவரமுடியும் என நம்புகிறது (தற்போது 104%) அதாவது ஆண்டொன்றிற்கு கிட்டதட்ட 1%, இலங்கை தொடர்ச்சியாக ஒரு விளிம்பு நிலையிலேயே நீண்டகாலத்திற்கு இருக்கும், கடந்தகாலத்தில் பொருளாதார வங்குரோத்தான நாடுகள் மீண்டும் வங்குரோத்தாகும் பொதுவான காரணி ஊழல், பாதுகாப்பான சட்டம்ற்ற சூழல், உள்நாட்டுப்பிரச்சினை காரணமாகிறது, இந்த அனைத்துப்பண்புகளூம் ஒருங்கே கொண்டதுதான் இலங்கை, அதனால் இவற்றிற்கான தீர்வு எட்டப்படாவிட்டால் இலங்கை மீண்டும், மீண்டும் வங்குரோத்தாகும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது. பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்தால் உலகம் இருண்டுவிடும் எனும் மனப்பாண்மையில் இருந்து இலங்கையர்கள் வெளிவரவேண்டும், அதனால் எந்த இலாபமும் இராது நட்டம்தான் ஏற்படும்.
  8. போரில் தோற்ற மக்களின் நிலைதான் சிரட்டை கையுமாக அலைய வைக்கவில்லை, இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் நிலையும் சிரட்டையும் கையுமாக அலையும் நிலியில்தான் தற்போது இலங்கை உள்ளது (அதனை ஏற்றுகொள்ள மனம் மறுத்தாலும் அதுதான் உண்மை), இதற்கு காரணம் மக்களிடையே தமது குறுகிய அரசியல் இலாபத்திற்காக இனவாதம் எனும் குரோதத்தினை வளர்த்த, வளர்க்கின்ற அரசியல்வாதிகள்தான் காரணம்.
  9. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தற்போது ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டை மீறமுடியாது, அப்படி மீறினால் சட்ட ரீதியான சிக்கலில் இலங்கை மாட்டிக்கொண்டு அபராத தொகை கட்டவேண்டிய நிலை உருவாகும் ஆனால் ஐ எம் எப் இனை வெளியேற்றலாம். அப்படி வெளியேற்றுவது இலங்கைக்கு புதிய கடன் பெறுவதில் மேலும் சிக்கலை உருவாக்கும் எனவே ஐ எம் எப் இனை வெளியேற்றுவது என கூறுவது மக்களை ஏமாற்றுவதற்காக கூறப்படுவதாக இருக்கலாம். இலங்கை விரும்பினாலும் இனி ஐ எம் எப் இனை தவிர்க்கமுடியாது என்பதே நிதர்சனம், ஐ எம் எப் வெளியேற்றம் என்பது நடைமுறை சாத்தியமற்ற விடயம் இலங்கை அரசியலில்.
  10. ஐ எம் எப் நேரடியாக தனியார் முதலீட்டாளர்களுடன் இலங்கைக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில்லை என நினைக்கிறேன் ஆனால் பாரிஸ் கிளப் (கடன் வழங்கும் நாடுகள்) உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது அதில் எட்டப்படும் உடன்பாடுகள் நேரடியாக முதலீட்டாளர்களை வததடைகிறது. ஐ எம் எப் இலங்கை கடனை மீள செலுத்துவதற்கான புறச்சூழலை உருவாக்குகிறது அதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. இலங்கை அரசு தற்போது இணங்கிய 30 கடன் தள்ளுபடியினை மேலும் அதிகரிக்க வலியுறுத்துகிறது இலங்கையின் GDP 80 பில்லியனுக்கு கீழ் செல்லும்போது மேலும் 20% கடன் தள்ளுபடியினை வலியுறுத்தியுள்ளது(Haircut) அதாவது மொத்தமாக 50 விகித கடன் தள்ளுபடி(55 பில்லியன்? கடனில் பாதியளவினைதான் இலங்கை திருப்பி செலுத்தும்). ஆனால் இலங்கை அரசு பொதுத்துறை சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதனை ஒரு அலகாக ஐ எம் எப் கடன் வழங்குனர் வலியுறுத்துகிறார்கள், பொருளாதார வளர்ச்சியுடன்(GDP) அதன் வளர்ச்சி விகிதத்திற்கு ஏற்ப வரிவிகித கணிப்பில் ஊழல் கண்காணிப்பினை ஒரு அலகாக இணைக்கிறார்கள்(Governance linked bond). இந்த நடாவடிக்கையால் நேரடியாக பாதிப்படைவது அரசியல்வாதிகளும் பொதுத்துறை ஊழல்வாதிகளும்தான் ஆனாலும் அதிகரித்த வரி விகித அதிஅகரிப்பு பொதுத்துறை ஊழியர்கள் பணிநீக்கம் என்பவற்றால் மக்களும் [பாதிப்படைவார்கள். அண்மையில் இலங்கை அன்னிய செலாவணியில் நிகர வருமானம் பெற்றதாக செய்தி வாசித்த நினைவுள்ளது அது போல பொருளாதார வளர்ச்சி தொடர்பான தகவலை திரித்து வெளியிட்டு மேலதிக கடன் தள்ளுபடி செய்ய முயன்றால் ஆர்ஜென்ர்ரினா அரசு போல் அபராத தொகை செலுத்தவேண்டும். பெரும்பாலும் ஐ என் எப் இன் நடவடிக்கையினால் இலங்கைக்கு நன்மைதான் ஏற்படும் வரி விகித அதிகரிப்பினால் மக்கள் பாதிப்படையக்கூடும் நீண்டகாலத்தில் அது ஒரு பிர்ச்சினையாக இருக்காது என கருதுகிறேன்.
  11. ரஞ்சித் கூறுவது சரிதான், எப்போதும் பிச்சைக்காரர்களுக்கு தெரிவு இருப்பதில்லை எனும் நிலையில்தான் இலங்கை உள்ளது, இலங்கையினால் IMF இனை தவிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம், ஒரு காலத்தில் இனப்பிரச்சினை தீர்வுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இலங்கை தரப்பு தற்போது கடன் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது(இதுவும் ஒரு வகை அமைதிப்பேச்சுவார்த்தைதான்😁). இலங்கை கடனை திருப்பி செலுத்த தவறிய நிலையில் ஐ எம் எப் இன் உதவியினை நாடியுள்ளது, ஐ எம் எப் இலங்கை தரப்பினையும் கடன் கொடுத்தோரையும் இணக்கப்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிக்கிறது. கடனினை செலுத்த தவறியதால் இலங்கை அரசு மேலதிகமாக கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டது, அதனால் பல அடிப்படை அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இலங்கை அரசு ஐ எம் எப் உடன் உடன்படிக்கை மூலம் நிதியுதவியினை பெற்றுக்கொண்டு அதன் மூலம் தனது தேவைகளை பூர்த்தி செய்தது, இந்த இடைப்பட்ட காலத்திற்குள் கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்தி மீண்டும் கடன் பெறுவதற்காக கடன் மறு சீரமைப்பு மூலம் அதனை எட்டுவதுதான் இலங்கை தரப்பினது நோக்கம், இது பல கடனை உடைய ஒருவர் அதனை ஒரே ஒரு ஒரு தனிப்பட்ட கடன்(Personal loan) மூலம் எட்ட முயற்சிப்பது போலாகும், தனிப்பட்ட கடனில் வட்டியும் முதலும் ஒரே அளவாக தவணை அடிப்படையில் செலுத்தவேண்டும் ஆனால் இங்கு கடன் மீழழிப்பு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் (Macro Linked Bonds). இலங்கை அரசு 30 விகித கடன் தள்ளுபடியினை வலியுறுத்துகிறது(Haircut), அண்மையில் இலங்கை அமைச்சர் அலி சப்ரி 17 பில்லியன் கடன் தள்ளுபடி கிடைக்கலாம் என கூறியுள்ளார். கடன் கொடுத்தோர் இந்த கணிப்பீடினை (Macro Linked Bonds) இலங்கைக்கு சார்பான ஐ எம் எப் இன் கணிப்பு அல்லாமல் மாற்றீடான கணிப்பினை வலியுறுத்துகிறார்கள். இலங்கை தரப்பு பொருளாதார வளர்ச்சி ஏற்படாமல் எதிர்பாரா பொருளாதார பாதிப்பினை கருத்தில் கொண்டு கடன் செலுத்தும் திட்டம் இருக்கவேண்டும் என கோருகிறது (குடுத்த கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்கக்கூடாது😁). ஆனால் இலங்கை; எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியினை விட அதிகமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் அதற்கேற்ப திருப்பி செலுத்தும் தொகையினை அதிகரிக்க கூடாது என இலங்கை நிபந்தனை வைக்கிறது இது கொஞ்சம் வடிவேலுவின் எனக்கு வந்தா தக்காளி சட்னி உனக்கு வந்தா இரத்தம்தான் (கடன் பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தனின் நிலையில் இலங்கைக்கு கடன் கொடுத்தோரின் நிலை😁). இந்த கடன் மறு சீரமைப்பில் உண்மைத்தன்மையாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இருந்தாலே முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை பெறமுடியும் ஆனால் இலங்கை இதுவரை வரலாற்றில் இல்லாத முறையில் சீனாவுடன் ஒரு உடன்படிக்கையும் (சீனாவுக்கு சாதகமாக) மற்ற தரப்புகளுடன் ஒரு உடன்படிக்கைக்கு முயற்சிக்கிறது இது நிலமையினை சிக்கலாக்கும். 2027 இல இந்த புதிய பணமுறி வெளியிடப்படும் என்பதாக நினைவுள்ளது அதுவரை இலங்கை கடனை திருப்பி செலுத்தாமல் சந்தோசமாக செலவு செய்யலாம் அதுவரை இலங்கைக்கு தேவையான 2.9 பில்லியன் கடனை (சரியாகநினைவில்லை) பகுதி பகுதியாக ஐ எம் எப் வழங்கும், இங்கு ஐ எம் எப் இனை துரத்தினால் இலங்கை 2027 வரை தாக்குபிடிக்கமுடியாது (இலங்கையில் மீண்டும் மக்கள் மாட்டு வண்டியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் (உல்லாச பயணிகள் முன்பு மாட்டு வண்டியில் பயணித்ததுபோல😁) அத்துடன் கடன் மறு சீரமைப்பும் தடைப்பட்டுவிடும், இதனால் இலங்கைக்கு வேறு தெரிவில்லை ஆனால் 2027 பின் துரத்தினால் பிரச்சினை இல்லை என கருதுகிறேன் (இலங்கை அதை செய்யும் என நம்புகிறேன், அந்த வரலாற்று சாதனையினை இலங்கை படைத்தால் உலகம் முழுவது இலங்கையினை பார்த்து வியப்பார்கள்😁),
  12. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பார்கள், ஏற்கனவே அமெரிக்க கவச வாகனங்கள் உக்கிரேன் போரில் மோசமாக அடிவாங்கி அதன் பெய்ர் பாதிக்கப்பட்டிருக்க அது பத்தாது எண்டு செலன்ஸ்கி அமெரிக்க விமானங்களுக்கும் எப்படியாவது அவ்வாறான நல்ல பெயர் வாங்கிக்கொடுக்க துடிக்கிறார், இதில ஆயுதத்தை இப்ப விக்காட்டில் கொஞ்ச காலத்திற்கு பிறகு 50% கழிவு 80% கழிவு என பிளக் பிரைடே சேல்ஸ் மாதிரித்தான் விற்கவேண்டி வரும்😁. அல்லது போர் தீவிரமாகும்போது டிமாண்ட் அதிகரிக்க, அதிகரித்த விலையில் விற்பதற்காக அமெரிக்கா தற்போதய விற்பனையினை நிறுத்தி வைத்திருக்கலாம்😁.
  13. இலங்கை படையினர் ஒருவர் உக்கிரேனுக்காகவும் போரிட்டு இறந்ததாகவும் அவருக்கு அந்த மக்கள் அஞ்சலி செலுத்தியததாகவும் யாழில் செய்தி வந்திருந்தது. இலங்கை படையினரை தனது அமைதி முயற்சிக்கான ஐ நா படையில் இணைத்துக்கொள்ள அங்கே போய் (ஆபிரிக்க நாடுகளில் ஏதோ என்று என நினைக்கிறேன்) தமது மனித உரிமை மீறலை செய்து ஐ நாவிற்கும் லங்கா மாதாவிற்கும் பேரும் புகழும் பெற்றுக்கொடுத்த படையினரை இணைத்து இன்னும் எத்தனை மனித உரிமை மீறல்களுக்காக ரஸ்சியாவும் உக்கிரேனும் சொந்த செலவில் சூனியம் செய்கிறார்கள்?
  14. இந்த பகுதியில் கூலி வேலைகளுக்கு சென்றுள்ளேன், காலை உணவாக அவித்த மரவள்ளி கிழங்கும் பிளேன்ரியும் (கட்டன் சாயா என அழைப்பார்கள் என்பதாக நினைவுள்ளது?) வழங்குவார்கள்.
  15. கோசன் பதிவிட்ட கருத்தினை கொண்ட திரியினை தேடிய போது கண்ட இன்னொரு திரி (அந்த திரி காணவில்லை), இதில் இலங்கை சீனாவுடன் ஒரு ஒப்பந்தினையும் மற்ற கடன் வழங்கும் நாடுகளுடன் இன்னொரு ஒப்பந்தத்திலும் ஈடுபட முனைவதாக கூறப்படுகிறது.
  16. https://www.bilibili.com/video/BV1hH4y1N7SS/?buvid=YA41D4A2800104D54100BF395D146E754284&from_spmid=main.space-contribution.0.0&is_story_h5=false&mid=OtB05gw9mksSY4DcBCOFBA%3D%3D&p=1&plat_id=116&share_from=ugc&share_medium=iphone&share_plat=ios&share_session_id=3843C766-F363-41B0-AAA2-2A6EB38AD0A4&share_source=COPY&share_tag=s_i&spmid=main.ugc-video-detail.0.0&timestamp=1713860897&unique_k=UjFf8MR&up_id=249228804 இலங்கையில் வாழ்க்கை செலவு அதிகம் என்பதாக குறிப்பிடப்படுகிறது இந்த காணொளியில் அதன் பின்னூட்ட பகுதியில் மிகவும் சுவாரசியமான ஆனால் பக்கசார்பற்ற கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன. இலங்கையில் வெளித்தெரியும் பிரச்சினைகளை மூடி மறைக்கும் பூச்சு வேலைகளில் இரங்குவதில் கவனம் செலுத்துகின்றனர் இதன்போது ஏற்படும் பாதிப்புகளின் ஒரு பகுதியாக இந்த விவசாயிக்ள் பாதிப்படையக்கூடும் திட்டமிட்டு விவசாயிகளை பாதிப்படைய செய்கிறார்களா எனத்தெரியவில்லை. நீங்கள் கூறுவது விளங்கவில்லை, அல்லது தவறுதலாக வேறு திரி கருத்தினை பதிந்துவிட்டீர்களா?
  17. இந்த விடயத்தினை கோசான் அந்த திர்யில் மேற்கோள் காட்டியிருந்தார், பொதுவாக அந்த திரியில் முக்கியமான பகுதியே அந்த குறிப்பிட்ட பகுதிதான் கோசான் மேற்கோள் காட்டி தனது கருத்தினை தெரிவித்திருக்காவிட்டால் என்னால் அதனை கவனித்திருக்க மாட்டேன் எனவே நினைக்கிறேன், ஆனால் அந்த திரி நினைவில்லை.
  18. உங்களது இணைப்பு மொழி ஜேர்மைனில் உள்ளது என நினைக்கிறேன், கோவிட் தடுப்பூசிகளுக்காக பல நாட்டரசுகள் தமது வரிப்பணத்தினை இந்த நிறுவனத்திற்கு வழங்கியிருந்தார்கள், இதில் அஸ்ரா செனிக்கா மட்டுமே தனது உற்பத்தி செலவுடன் தடுப்பூசியினை வழங்க பைசர் போன்ற நிறுவனங்கள் இலாபமீட்டியிருந்தனர்.
  19. இது தற்போதய அரசின் ஒரு தந்திரம் உண்மையான நீண்டகால தொலைநோக்கோடு உள்நாட்டு அபிவிருத்தியினை ஏற்படுத்த உள்நாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்காமல் குறுங்காலத்தில் இறக்குமதி மூலம் அத்தியாவசிய பொருள்களின் விலையினை குறைத்து மக்கள் வாழ்க்கை செலவினை குறைத்து இரணில் அரசு நிலமையினை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது எனும் ஒரு மாயையினை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெறுவதனை நோக்கமாக கொண்டு செய்யப்படுகிறது. இதனால் நீண்டகால பாதிப்பு ஏற்படுவதனை தவிர்க்கமுடியாது, இலங்கை தொடர்ச்சியாக இந்த் நச்சுவட்டத்திலேயே தொடர்ந்திருக்கும்.
  20. கடன் மறுசீரமைப்பு மூலம் செய்யப்படுவது, ஆனால் இதனால் அதிகளவில் பாதிப்புள்ளாகும் நாடுகள் இலங்கைக்கு அதிகளவில் கடன் கொடுத்த சீனா அல்ல கொஞ்சகாலத்திற்கு முன்னர் பாரிஸ் கிளப் சந்திப்பிற்கு முன்னராக சீனாவுடன் மட்டும் தனியாக இலங்கை ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்தது, இதனை இலங்கைக்கு கடன் வழங்கியிருந்த நாடுகளின் சார்பாக இந்தியா தனது கண்டனத்தினை தெரிவித்திருந்த்தது (இது கடந்த ஆண்டு நிகழ்ந்தாதாக நினைவுள்ளது) அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய அமைச்சர் இலங்கை வெளித்தன்மையாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். சுருக்கமாக கூறுவதாயின் இலங்கைக்கு அதிக கடனை கொடுத்த சீனாவுக்கு சாதகமாக எந்த வித கழிவுகளும் இன்றி இலங்கை கடன் மறு சீரமைப்பு செய்து ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளின் தலையில் இலங்கை மிளகாய் அரைக்க உள்ளது. கடன் கொடுத்தவர்களுக்கு வேறு தெரிவு இல்லை, நட்டம் அவர்களுக்குதான், ஆனால் ஒன்றுமில்லாமல் போவதைவிட ஏதோ கிடைக்கிறதே என சந்தோசப்படவேண்டியதுதான்.
  21. ஒரு புறம் பாரிய அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை கொடுத்துக்கொண்டு மறுபுறம் பொதுமக்களை கொல்லவேண்டாம் என கண்துடைப்பு நாடகம் நடத்தும் அமெரிக்க அரசு எதற்காக பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறது என தெரியவில்லை இதே போலவே இலங்கையிலும் பொதுமக்கள் அழிவிற்குக்காரணமான ஆயுதங்களையும் பயிற்சிகளையும் இந்த தரப்புகளே வழங்கியது, இரஸ்சியாவுடனான யுத்தத்திற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இரஸ்சியாவினால் பாதிப்பு ஏற்படலாம் என நியாயம் கூறினால் இலங்கையிலும் பலஸ்தீனத்திலும் நிகழ்த்தபட்ட, நிகழ்த்தப்படுகின்ற படுகொலையினால் அமெரிக்காவிற்கு என்ன இலாபம் என்பது புரியவில்லை. அமெரிக்கா புதிதாக உலகை அழிப்பதற்கு புதிய ஒரு திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளதா? அல்லது அமெரிக்க உலக ஒழுங்கிற்கு வைரஸ் வந்துவிட்டதா? உண்மையில் அமெரிக்க குடிமக்கள் தம் கண்ணுக்கு முன்னால் நிகழும் படுகொலைகளை கண்டும் காணாமல் இருக்கும் சிந்தனையற்றவர்களாக இருப்பார்களா? எனும் சந்தேகமாக இருக்கின்றது (அவர்களது வரிப்பணத்தில்தான் இந்த படுகொலைகள் நிகழ்கின்றது அதனால் அவர்களும் இதற்கு தார்மீக பொறுப்புள்ளவர்கள்). குறைந்த பட்ச எதிர்ப்பாக இந்த இடது சாரி அரசினை வரும் தேர்தலில் தூக்கியெறியவேண்டும் அதையாவது செய்வார்களா? ஆனால் எந்த அரசு வந்தாலும் அவர்களது கொள்கைகளில் பெரிதாக மாற்றம் வராது ஏனெனில் எரியிற வீட்டில் பிடுங்குவதுதான் அவர்களது கொள்கை.
  22. இதுவும் ஒருவகை உருவக்கேலிதான். அவரது மீசை அவருக்கு மூக்கரிப்பினை ஏற்படுத்தியிருக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.