Everything posted by vasee
-
லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்!
இதனை படிக்கும் போது எனக்குள் ஒரு சிரிப்பு வந்தது😁. நானும் சும்மா நகைசுவைக்காவே அவ்வாறு எழுதுவது (இப்போதெல்லாம் சீரியசாக எதனையும் பார்க்க முடியுதில்லை😁). இலங்கை விமானநிலைத்தில் பதற்றம் எனும் திரியில் பதிவிட்டுள்ளேன். எனக்கு இலங்கை 5 ஆம் இடத்தில் சுற்றுலா செல்லும் நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்பதில் ஏதோ சிறிலங்கன் சுத்துமாத்து செய்துவிட்டார்கள் என்றே என்னை பொறுத்தவரையில் கருதுகிறேன். குறையாக கூறவில்லை நான் உணர்ந்ததினை நேர்மையாக கூறிவிட்டேன் அது ஒவ்வொருவர் நிலைக்கு ஏற்ப வேறுபடலாம் ஆனால் உங்களது பயணக்கட்டுரைக்கும் எனது ஏமாற்றத்திற்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லை என பொய் சொல்லமாட்டேன்😁.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
நீங்கள் கூறுவது சரிதான், நான் முதல் தடவையாக இலங்கை விமான நிலையத்தினூடாக பயணித்தேன் அத்துடன் அது ஒரு சுற்றுலா பயணமும் இல்லை, அத்துடன் நான் பழழையதை மறந்த மோசமான மனிதனாகிவிட்டேன் என நினைக்கிறேன். நான் இலங்கையினை விட்டு வரும்போது ஒரு வெளிநாட்டவர் நான் இலங்கையர் என கருதி விமானநிலையத்தில் அவருக்குள்ள அசெளகரியங்களை குறிப்பிட்டார் (அது உண்மையில் எனக்கு பேரிய விடயமாக இருக்கவில்லை) அதில் ஒன்று கழிவறை சுத்தமற்று ஈரமாக இருப்பதும், கை உலர்த்துவதற்கு வசதி இல்லை எனவும் குறிப்பிட்டார், அதற்கு இலங்கையர்களின் பார்வையில் ஏன் அவ்வாறு இருக்கிறது என விபரித்தேன், கழிவறையில் தண்ணீர் வசதி இருப்பதால் ஒவ்வொருவரும் அதனை பயன்படுத்துவதற்கு முன்னர் தாமாக சுத்தம் செய்வதும், ஒவ்வொருவரும் கைகுட்டை பாவிப்பதும் காரணமாக இருக்கலாம் என. ஒவ்வொருவரது அனுபவங்களும் எதிர்பார்ப்புகளும் வேறுபடலாம், ஆனால் மேலே நான் நகைசுவையாகவே பதிவிட்டேன் ஆனால் அந்த பதிவு ஒரு பதற்றநிலையினை ஏற்படுத்தும் என நம்பவில்லை (நீங்கள் சிறீலங்கன் விமானத்தரை இறக்கம் பற்றிய செய்திக்கான பதிவினை இதில் இட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்). அத்துடன் சுற்றுலா பயணங்களில் பெரிதாக ஆர்வமும் இல்லை, முன்பு சாகச விளையாட்டுக்களில் ஆர்வம் இருந்தது அதுவும் இப்போது இல்லை, பெரிதாக சுற்றுலா போவதற்கே விருப்பம் இல்லை, குழந்தைகளுக்காக போவது மட்டுமே, இவ்வாறான அனுபவங்கள் என பெரிதாக ஆர்வம் இல்லை.
-
லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்!
சம்பந்தமில்லாத கருத்துக்களின் மூலம் இறந்துபோன உங்கள் திரியின் உயிர்ப்பிக்க முயற்சிப்பது போலுள்ளது, உங்கள் திரியினை வாசித்துவிட்டு இலங்கை தொடர்பான கனவுடன் இலங்கை சென்ற எனக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ததை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்னிடம் இலங்கை சுற்றுலாவுக்காக எனது கருத்தினை எதிர்பார்க்கும் வெளிநாட்டவர்களிடம் எதற்காக இலங்கையினை தெரிவு செதீர்கள் என்பதற்கு பெரும்பாலான பதில்கள் இணையத்தில் உள்ள கருத்துகளாக இருப்பதனை அவதானித்துள்ளேன். இவ்வாறு மிகைப்படுத்தப்படும் கருத்துகளால் பின் எதிர்மறையான விளைவுகளே ஏற்படும்.
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
சர்வதேச விமானநிலையத்தில் வைத்து தரக்குறைவாக ந்டக்குமளவிற்கு முட்டாள்களாகவா இருப்பார்கள்? அவர்களது விமானநிலையத்தில் இராணுவத்தினரை பணிக்கமர்த்துவதனால் இலங்கைக்கு சாதகம்தானே (தண்டமாகத்தானே இருக்கிறார்கள் எதுக்கு வீணா சம்பளம் கொடுத்து முகாமில் வைத்து பராமரிப்பதற்கு)? அவர்கல் தமிழர் பிரதேசத்தில் இருந்து தொல்லை கொடுக்காமல் அவர்கள் தலைநகரத்தில் இருந்து புலம்பெயர் தமிழருக்கு தொல்லை கொடுத்தால் பரவாயில்லைதானே. அண்மையில் ஒரு தவிர்க்கமுடியாத காரணத்தினால் (ஒரு துயர நிகழ்வொன்றிற்காக) 4 - 5 நாள்கள் பயணமாக இலங்கை சென்றிருந்தேன் மிக நீண்டகாலத்தின் பின்னர், பேனா எடுத்து செல்லவில்லை கணனியில் பதிவு செய்து சென்றேன், கடமையில் இருந்த பெண்மணி குடிவரவு அட்டையினை கேட்டார் கனனியில் பதிந்தாகக்கூறினேன் எந்த தொல்லையுமில்லை.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
அங்கு பெருமளவில் சுற்றுப்பயணம் செய்வது எம்மவார்கள், அதனால் இராணுவத்தினர் தமிழில் கதைப்பார்கள் ஏனென்றால் நிலமை அப்படி. இந்த குடிவரவு அட்டையினை நிரப்புவதற்கு பேனா கூட அந்த விமான நிலையத்தில் இருக்காது, பேசாமல் அங்குள்ள கணனியில் ETA இலக்கத்தினை பதிவிட்டால் அனைத்து விபரமும் கணனி திரையில் தோன்றும் தேவையான மாற்றம் (மாற்றம் இருப்பின் மட்டுமே) செய்து அதனை பதிவு செய்தால் இலகுவாக ஒரு நிமிடத்தில் செய்துவிடலாம். ஆனால் பெரும்பாலும் குடிவரவு அட்டைகளை நிரப்புவர்களாக உள்ளார்கள்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
போராட்டத்தினை வேண்டாம் என கூறவில்லை, ஆனால் எதிர்காலத்தில் இவ்வாறான சமூக அக்கறையுள்ளவர்கள் உயர் பதவிகளில் வருவதற்கு இடையூறாக தற்போதய நடவடிக்கைகள் அமைந்துவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும். பெரும்பாலும் கல்விகற்றவர்கள் உயர்பதவிகளை சுயநல அடிப்படையிலேயே குறிவைப்பார்கள், பின்னர் அவர்கள் ஊழல் போன்ற நடவடிக்கையிலும் ஈடுபடுபவர்களாகவும் மாறுகின்ற நிலை ஏற்படும். சமூக சிந்தனை உள்ளவர்கள் இந்த உயர்பதவிகளை பெற்றால் தேவையற்ற களைகள் சமூகத்தலைமைகளை பெறுவதனை தடுக்கலாம். உங்களிடம் ஒரு கேள்வி, சமுக சிந்தனை கொண்டவருக்கு சார்பாக கருத்திட்ட என்னிடம் கேள்வி கேட்ட நீங்கள், அவரையும் அவரது போராட்டத்தினையும் கேவலப்படுத்துகின்ற கருத்தாளர்களிடம் ஏன் எந்த கருத்தினையும் கூறவில்லை?
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
சமூக நீதிக்காக போராடுபவர்கள் சுயநலமாக இருப்பதில்லை, ஆனால் இதனால் இப்படியானவர்கள் மற்றவர்களுக்காக சில வேளைகளில் தமது கல்வி, எதிகாலம் என்பவற்றை தூக்கி எறிந்துவிடுவார்கள், அப்படி இல்லாமல் தனது கல்வியினை இந்த குழந்தை சிறப்பாக முடித்து எதிர்காலத்தில் ஒரு மிக சிறந்த ஆளுமை நிறைந்த தலைமத்துவங்களை பெற்றால் சமூகத்திற்கும் மிக உதவியாக இருக்கும்.
-
அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் பெண்களுடன் ஆபாச உரையாடல் - இரண்டு வருட சிறைத்தண்டனை
https://9now.nine.com.au/a-current-affair/sydney-conman-gerard-vamadevan-harassment-fraud-fake-celebrity-agent/4b733047-e8be-40dc-8b18-080a0493ae54
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
-
பொது வேட்பாளர் இனவாதத்தைத் தூண்டுவாரா? நிலாந்தன்!
ஓடுமீன் ஓட உறுமீன் வர காத்திருக்குமாம் கொக்கு, பொறுமை காத்தால் மொத்த இலங்கையினையும் குறைந்த விலையில் வாங்கலாம்😁.
-
இனிமேல் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகர வீதி சமிஞ்சைகளுக்கருகில் காத்திருக்கும் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்
இனப்படுகொலை செய்த ஒரு அரசு இப்போது ஒரு வர்க்கப்படுகொலை செய்கிறது, திடீரென இவ்வாறான அறிவுறுத்தல் மூலம் அம்மக்களுக்கு எந்த மாற்றீடு செய்யாமல் ஏற்கனவே நடுத்தெருவில் உள்ள மக்களை மீண்டும் மோசமான நடுத்தெருவில் விடுகின்றனர்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பாமர மக்களின் உணர்ச்சியினை தூண்டி தமது சுய அரசியல் இலாபம் தேடுபவர்கள், இதற்கு மதம் இனம் என்பவற்றினை பயன்படுத்துகிறார்கள். அதிக கல்வியறிவுள்ள நாடாக இருந்தும்இலங்கையில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக சிங்கள பாமர மக்களை தூண்டிய அரசியல்வாதிகளால் இலங்கை எனும் நாடு உருவாகி 75 ஆண்டுகளின் பின்னர் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனையாகி கொண்டிருக்கின்ற கண்கூடான உதாரணத்தினை பார்த்தும் இந்திய அரசியல்வாதிகள் இலங்கை அரசியல்வாதிகளை பின்பற்றுகின்றனர். ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் மக்கள் ஒற்றுமை முக்கியம், இவர்களுக்கு ஊர் இரண்டுபட்டால்தான் இலாபம், இப்படியான அரசியல்வாதிகள் பெரும்பான்மை பெறுவது யார் தவறு?
-
சிட்னியில் கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் கொலை செய்யவும் உயிரிழக்கவும் தயாராகயிருந்தனர் - அவுஸ்திரேலிய காவல்துறை
வயது குறைவானவர்களுக்கு தண்டனை தளர்வு உள்ளது என கருதுகிறேன், இந்த வயதில் சரி எது தவறு என தெரியாதவர்களாக பொதுவாக உள்ளனர் ஆனால் பெற்றோர் முடிந்தவரை சரியானவற்றையே தமது குழந்தைகளுக்கு வலியுறுத்துகிறார்கள், ஆனாலும் இந்த வயதில் அறியாமையால் செய்யும் தவறுகளுக்கு சட்ட தளர்வு வழங்குகிறார்கள். குறித்த மதத்தில் குழந்தைகளை எவ்வாறு எம்மவர்கள் கல்வியினை திணிப்ப்தனை போல மதத்தினை திணீக்கிறார்கள், அவர்களாக சுயமாக எந்த தெரிவும் இருப்பதில்லை, இவ்வாறு வலிந்து திணிக்கப்படும் விடயங்களினால் உள்ள சில தவறான முடிவுகளை அதில் தீமைகளை பற்றி தெரியாமல் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்காகவே பெற்றோர்கள் இவ்வாறு மதம், கல்வி என்ப்வற்றினை திணிக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதனை பின்பற்றி எடுக்கும் தவறான முடுவுகளுக்கு பெற்றோர்களே பொறுப்பெடுக்கவேண்டும், சாகச காட்சிகளை செய்பவர்கள் இதனை நீங்களாக வீட்டில் செய்யகூடாது என எச்சரிப்பது போல பெற்றவர்கள் தாம் தமது குழந்தைகளிடம் திணிக்கும் விடயங்களினால் அவர்கள் தவறான முடிவினை எடுக்காது கவனிக்கும் பொறுப்பு பெற்றவர்களுக்கு உள்ளது. உண்மையான தண்டனை பெற்றவர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும், ஏனெனில் அவ்வாறு ஒரு விடயத்தினை அவர்கள் பின்பற்றி இருக்காவிட்டால் அவர்கள் பின்னர் அந்த மதத்தின் பேரால் தவறான முடிவுகளை எடுத்திருக்கமாட்டார்கள்.
-
அரச வருமானம் தொடர்பில் நெருக்கடி நிலை! பணத்தை அச்சிட முடியாத நிலையில் இலங்கை
https://www.bilibili.com/video/BV1hH4y1N7SS/?buvid=YA41D4A2800104D54100BF395D146E754284&from_spmid=main.space-contribution.0.0&is_story_h5=false&mid=OtB05gw9mksSY4DcBCOFBA%3D%3D&p=1&plat_id=116&share_from=ugc&share_medium=iphone&share_plat=ios&share_session_id=3843C766-F363-41B0-AAA2-2A6EB38AD0A4&share_source=COPY&share_tag=s_i&spmid=main.ugc-video-detail.0.0×tamp=1713860897&unique_k=UjFf8MR&up_id=249228804 ஒரு சீன நண்பர் எனக்கு இந்த பதிவை அனுப்பி, இலங்கையில் செலவு அதிகமா எனக்கேட்டார். கருத்திடும் பகுதியில் பல பக்க சார்பற்ற சுவாரசியமான தகவல்கள் உண்டு (எச்சரிக்கை சில பார்வையாளர்களின் மனதை புண்படுத்தலாம்).
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
யாழ்ப்பாணம் மயோசின் காலத்தில் கடல் உயிரினங்களின் இறந்த உடல்களின் எச்சங்கள் மூலம், பின்னர் தரை உயர்வால் உருவாக்கப்பட்டதாக கூறுகிறார்கள் (கிட்டதட்ட 20 மில்லியன் ஆண்டுகள்). அதனால் யாழ்ப்பாணம் சுண்ணாம்புக்கல் நிலப்பிரதேசம் என வகைப்படுத்துகிறார்கள் (அதனால நிலத்தடி நீர் கொண்டுள்ளது). இந்த சுண்ணாம்புக்கற்கள் உறுதியானவை இல்லை, அதனாலேயே சில குகை அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் இலகுவாக காணப்படுகிறது. இந்த சீமெந்து தயாரிப்பு நிலத்தடி நீரினையும் யாழ்ப்பாண நிலப்பரப்பின் உறுதித்தன்மையினையும் பாதிக்கும் அத்துடன் காற்று மாசுபட்டுதலலால் மக்களுக்கு பெருமளவில் சுவாச சம்பந்தமான நோய் ஏற்படுவதுடன் புற்றுநோயும் ஏற்படலாம். தற்போது சுவாச சம்பந்தமான நோய் உலகில் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது, இந்த துறை ஒரு செல்வம் கொழிக்கும் ஒரு துறையாக உள்ளது இந்த நோய் ஒரு நீண்ட கால நோயகிவிடுவதால் இந்த வியாதிகளுக்கான மருந்து உற்பத்தி ஒவ்வொரு ஆண்டிற்கும் அதிகரித்து செல்லுகிறது. இந்த வேலை வாய்ப்புகள் மூலம் பெறுவதினை விட பல மடங்கு அந்த மக்கள் இழப்பார்கள். ஆனாலும் யாழ்ப்பாணத்திலிருந்து முன்னரும் கிளிங்கரில் (சீமெந்தாக இல்லாமல்) தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக நினைவுள்ளது சின்ன வயதில் தெருவில் பச்சை சிறிய கற்கள் பார்த்த நினைவுள்ளது. மக்கள் சிந்தனையில்லாத தலைவர்கள் இருக்கும்வரை மக்கள் போராட்டங்களால் எந்த பிரயோசனமும் கிடையாது என்றே நினைக்கிறேன், கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதைபட்டே ஆகவேண்டும் எனும் நிலையில் எமது மக்களின் நிலை!
-
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
இதற்கு காரணம் மேற்கு நாடுகளின் தடைதான் என கூறுகிறார்கள், தடைக்கு முன்னரான கால கட்டத்தில் இரஸ்சிய பண முதலைகள் தமது வளங்களை மேற்கு நாடுகளில் முடக்கியுள்ளார்கள் (அதனால் மேற்கு நாடுகளுக்கும் நன்மை) தற்போது இந்த நிலமை இல்லாததால் அந்த வளஙகல் உள்நாட்டிலேயே அதன் வளர்ச்சிக்கு பயன்படுகிறது.
-
விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு
தயவு செய்து நான் குறிப்பிட்டதாக கூறிய விடயத்தினை குறிப்பிட்டுக்காட்ட முடியுமா? நான் கூறிய விடயம் பலர் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு ஐ எம் எப் இலங்கையினை கட்டாயப்படுத்தும் என்பதாக கூறியதற்கு, ஐ எம் எப் ஒரு வட்டிக்கு காசு கொடுப்பவன் போல அவன் தனது காசினை மீழ பெறுவதற்கு (முதலுக்கு மோசமில்லாமல்) குறித்த நாடு நிகர பாதீடு, வரி அதிகரிப்பு, அரச உடமையினை தனியார் மயப்படுத்தல் என செலவினை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுட வலியுறுத்தும். படை குறைப்பு, செலவு குறைப்புத்தான் அதனை ஐ எம் எப் கோருவது சகஜமான விடயமே ஆனால் உள்நாட்டு பாதுகாப்பு விடயத்தில் தலையிடும் அளவுக்கு ஐ எம் எப் இருக்குமா? என அந்த காலகட்டத்தில் சந்தேகம் இருந்திருக்கலாம் அதனால் அவ்வாறு கூறினேனோ தெரியாது ஆனால் எனது நினைவில் நீங்கள் கூறுவது போல எதுவும் இல்லை அதனாலேயே நான் கூறிய விடயத்தினை மீள் பதிவிட்டீர்களென்றால் நன்றாக இருக்கும். எனது தவறினை சுட்டிக்காட்டியதில் எனக்கு மிகுந்த சந்தோசமே (உண்மையாகத்தான் கூறுகிறேன்) ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டினாலேயே (அப்பதிவினை) எந்த அடிப்படையில் கூறினேன் என்பதனை நானே உணர அதன் மூலம் வழிகிடைக்கும். நான் எப்போதும் கூறுவது போல எனது கருத்து தவறானவையாக இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதால் அதனை ஒரு கருத்தாகவே பார்க்கவேண்டும் (ஆலோசனையாக அல்ல😁).
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
கப்பித்தான் கூறியுள்ள இலக்கம் 1 இலக்கம் 2 அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டதாக கட்டாயம் இருக்கவேண்டும், ஒருவர் பொதுவான அதிகாரம் ஒன்றினை வழங்கியுள்ளார் அங்குள்ளவர் அவரது காணியினை சுயமாக விற்றுவிட்டதாக ஒரு வதந்தி உலவுகிறது அது அதன் உரிமையாளருக்கே தெரியாது என்பதாக. POWER OF ATTORNEY REVOCATION DOCUMENT Principal's Information: Name: [Your Full Name] Address: [Your Address] Contact Information: [Your Phone Number and Email Address] Attorney-in-Fact's Information: Name: [Attorney-in-Fact's Full Name] Address: [Attorney-in-Fact's Address] Contact Information: [Attorney-in-Fact's Phone Number and Email Address] Original Power of Attorney Details: Date of Execution: [Date the Original Power of Attorney was Signed] Place of Execution: [Place where the Power of Attorney was executed] Revocation Statement: I, [Your Full Name], hereby revoke, cancel, and annul all powers and authority granted to [Attorney-in-Fact's Full Name] under the power of attorney executed on [Original Date of Execution], effective immediately. This revocation applies to all acts, whether financial, legal, or otherwise, that were authorized under the aforementioned power of attorney document. Reason for Revocation (Optional): [Briefly state any reasons for the revocation, if you wish to disclose them] Notification: A copy of this revocation will be provided to [Attorney-in-Fact's Full Name] and all third parties with whom the power of attorney may have been previously shared or registered, including [list any banks, financial institutions, government agencies, etc.]. Signature: Signed on this ___ day of [Month], [Year]. [Your Full Name, as Principal] Witnesses (If required by law): Witness Name: __________________________ Address: ________________________________ Signature: ______________________________ Date: __________________________________ Witness Name: __________________________ Address: ________________________________ Signature: ______________________________ Date: __________________________________ Notarization (If required by law): On this ___ day of [Month], [Year], before me, a notary public, personally appeared [Your Full Name], known to me (or satisfactorily proven) to be the person whose name is subscribed to the within the instrument and acknowledged that they executed the same for the purposes therein contained. In witness whereof, I hereunto set my hand and official seal. [Notary Public's Signature] [Notary's Printed Name] My Commission Expires: ___________________ Instructions: Make sure to fill in all brackets ([ ]) with the relevant information. Check if your state or country requires the revocation to be witnessed or notarized. Distribute copies as described in the "Notification" section to ensure all relevant parties are informed of the revocation. This document template should help you formally cancel the power of attorney. For complex situations or legal advice, consult with a qualified attorney. மேலே இணத்துள்ள ஆவணம் ஒரு முழுமையான சட்ட ஆவணம் அல்ல, ஒரு மாதிரி ஆவணம் மட்டுமே, மேலே குறிப்பிட்டது போல யாராவது முழு அதிகாரம் வழங்கியிருப்பின் அதனை இரத்து செய்வதற்கான மாதிரி வடிவம் மட்டுமே.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
பவளப்பாறை பாதுகாப்பிற்காக மேலை நாடுகளில் (கடல் விலங்கியல்) பெருமளவு பணம் நேரம் என்பவற்றை செலவு செய்து அதனை காப்பாற்றுகிறார்கள், ஆனால் 3ஆம் உலக நாடுகளில் ஒரு தொலைநோக்கு சிந்தனை இன்றி தமது மண்ணை அழிப்பதற்கு முன்னிற்கும் பனத்திற்காக விலைபோன அம்மக்களின் பிரதிநிதிகள், இதுதான் எமது மக்களின் நிலை.
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை..
இல்லை, எனக்கு யாரிவர் என்றே தெரியாது, சும்மா பொதுவாகக்கூறினேன்.
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
கோசான் கவனத்திற்கு, டக்ளஸ் பயணம் செல்லும் பாதை மண் சாலையாக உள்ளது😁,
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை..
இது ஒரு முகாமைத்துவம் சம்பந்தப்பட்டதல்லவா? இதற்கு நல்ல தலமைப்பண்புள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதே சிறப்பாகும் என கருதுகிறேன்.