-
Posts
14088 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by வீரப் பையன்26
-
இவர்கள் போராட்டத்தில் இணைந்த காலம் தொட்டு ஒற்றுமையாய் பயணித்த தளபதிகள் , இவர்களின் வரலாறுகளை எழுதிட்டே போகலாம் , வீரம் விளைந்த மண்ணில் பிறந்த வீரப்புதல்வர்கள்
-
-
பாடல் கிடைத்தால் கண்டிப்பாய் உங்களுக்கு வைப்பர் ஊடாக அனுப்பி வைக்கிறேன் அண்ணா ,
-
அண்ணா உங்கள் முற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் , படத்தை கொஞ்சம் கூட நேரம் எடுத்தா ஜரோப்பா கனடா அவுஸ்ரேலியா போன்ற நாட்டு திரையரங்கிகளில் வெளியிடலாம் , இதை ஏன் நான் சொல்லுறேன் என்றால் , இரண்டு வருடத்துக்கு முதல் எனது அண்ணா ( கூட்டாளி ) என்ற திரைபடத்தை எழுதி நடித்தார் , அந்த படமும் எம் போராட்டம் பற்றிய படம் தான் , அண்ணன் நடிச்ச படம் ஜரோப்பா நாட்டில் பல திரையரங்கில் ஓடினது / நோர்வே டென்மார்க் இங்லாந் சுவிஸ் ஜேர்மன் இப்படி பல நாட்டில் ஓடி எம் உறவுகள் படத்தை திரையரங்கில் போய் பார்த்தவை / அண்ணன் சீமான் தொட்டு இன்னும் பலரும் ( கூட்டாளி ) பட வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் , மேல் பட உதவிக்கு என் அண்ணனின் உதவி தேவை பட்டால் என்னை தனி மடலில் தொடர்வு கொள்ளுங்கோ தொடர்வை ஏற்படுத்தி தாறேன் / உங்களின் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்துங்கோ அண்ணா , மேல நீங்கள் எழுதின போல் தமிழர்களின் இரத்தத்தை குடிச்ச கூட்டம் மீண்டும் ஆட்சியை பிடிக்கனும் , நிலமை இப்ப இருக்கிர மாதிரி இருக்காது / அண்ணன் சீமான் மற்றும் திருமாளவன் அண்ணா , இவர்களின் ஆதரவு அண்ணனுக்கு இருந்த படியால் , சிரமம் இல்லாம படத்தை இயக்கி நடித்து வெளியிட்டார் , படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் அருமை படமும் பாராட்டும் படியாய் இருந்தது /
-
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்! அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்! அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்! வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்! உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்! உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்! வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்! சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது! சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது! எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது! எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது! எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்! உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்! அதை நிரைநிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்! அதை நிரைநிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்! உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்! தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்! தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்! எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்! எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்! எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே!
-
😁😂 இந்த காமெடி சின்ன பெடியனாய் இருக்கேக்க பார்த்த காமெடி , இணைப்புக்கு நன்றி புரட்சி அண்ணா / 2004ம் ஆண்டில் இருந்து தமிழ் படங்கள் பார்ப்பது இல்லை , அதுக்கு முதல் பார்த்த நல்ல படங்கள் நிறைய இருக்கு 🤞
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வீரப் பையன்26 replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
அது தெரியும் தாத்தா , எனக்கு சிங்களவனுக்குள் கீழ் அடிமை வாழ்க்கை வாழ பிடிக்காது , படத்தில் இருப்பது போல் எங்க ஊரிலும் நிறைய அழகான இடம் இருக்கு 😁😉 / -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வீரப் பையன்26 replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
இப்படி ஒரு அழகான கிராம புரத்தில் ஒரு வீடு கட்டி போட்டு வாழ்ந்தா வாழ்க்கை சொர்க்கமாய் இருக்கும் தாத்தா இந்த படம் எனக்கு மிகவும் பிடிச்சு இருக்கு 😍😍😍😍😍😍😍 , -
இணைப்புக்கு நன்றி விசுகு அண்ணா , ராயூ அண்ணாவின் காணொளியோடு ஒரு பாட்டு இருக்கு , என்ர கைபேசியில் இருந்து அத யாழில் இணைக்க முடிய வில்லை / பாட்டையும் காணொளியையும் பார்க்க கண்ணீர் கூடவே வருது , ராயூ அண்ணாவோடு ஒன்னா பயணிச்ச நண்பர்கள் இந்தியன் ஆமியுடனான சண்டையில் வீரச் சாவு அடைந்தவை , பின்னாளில் அவைக்கு சிலை கட்ட பட்டது , சிலையை சுற்றி இந்தியன் ஆமியுடனான சண்டையில் வீரச்சாவு அடைந்த எம் ஊர் போராளிகளின் புகை படங்கள் வைக்க பட்டது / அந்த சிலைக்கு பெயர் ( உத்தமன் சிலை ) பின்னாளில் நாங்கள் வளந்து அந்த சிலை அடியால் அதிகம் போய் வருவோம் / இந்தியன் ஆமி எங்கட ஊரில் வந்து இருந்த போது எங்க ஊர் போராளிகளுக்கு எனது பெற்றோர் அடைக்கலம் குடுத்தவை எங்கள் வீட்டில் , கூட இரவு நேரங்கள் மத்தியான நேரங்களில் போராளிகளின் வருகை அதிகம் , பின்னுக்கு தோட்ட காணிகள் , போராளிகள் தலைமறைவாய் இருக்கிறதுக்கு நல்ல இடம் , பல விதத்தில் உதவினவை போராளிகளுக்கு/ எங்கட வீட்டில் தங்கி இருந்த போராளிகளும் இல்லை போராளிகளுக்கு அடைக்கலம் குடுத்த எனது பொற்றோரும் இல்லை , ராயூ அண்ணாவும் இல்ல , எல்லாத்தையும் நினைச்சு பார்த்தா சோகம் கலந்த வேதனை தான் வருது 😓/
-
எவளவு தியாகங்களை செய்து விட்டு அமைதியாக கண் மூடி தூங்கினம் 😓/
-
படங்கள் மிக அழகு , தமிழ் சிறி அண்ணா 🙏
-
கேணல் ராயூ அண்ணாவுக்கு வீர வணக்கம் 🙏 / தமிழீழ போராட்டத்தில் கேணல் ராயூ அண்ணாவின் திறமை எம் போராட்டத்துக்கு மிகவும் பலம் சேர்த்தது , ஏழாலை எனும் அழகான ஊரில் பிறந்து வளந்து போராட்ட களம் நோக்கி சென்ற தளபதி எங்கள் ராயூ அண்ணா 🙏🤞/ தமிழீழ தேசிய தலைவரின் அன்பு தம்பி , தலைவர் அருகில் கூடவே இருந்து வளந்த திறமையான அறிவான தளபதி ராயூ அண்ணா 🙏 / எம் போராட்டத்துக்காக இரவு பகல் என்று பாராமல் அயராது பாடு பட்ட தளபதி ராயூ அண்ணா 🙏/ புற்றுநோய் வந்த போதும் உயிரை பற்றி யோசிக்காம போராட்டத்தை நேசித்த தளபதி ராயூ அண்ணா 😓 ராயூ அண்ணாவை நேரில் பார்க்கும் சர்ந்தப்பம் எனக்கு கிடைக்கல , ராயூ அண்ணா அருகில் நின்ற அவரின் தம்பிகள் இப்பவும் மெளவுனமாய் இருக்கினம் , ஆம் அவரின் தம்பிகள் அவரிடம் இருந்து கற்று கொண்ட அனுபவங்களை அவர்கள் மறக்க வில்லை 🙏🤞/ ராயூ அண்ணாவை இன்னும் உயிருக்கு உயிராக நேசிக்கும் தம்பி மார்கள் பலர் இருக்கினம் புலம் பெயர் நாட்டிலும் மற்றும் தமிழீழத்திலும் 🤞/ ராயூ அண்ணா பிறந்த வளந்த எங்க ஊரில் , காலம் நேரம் கூடி வரும் போது ராயூ அண்ணாவின் பெயரில் ஏழாலையில் பெரிய அழகான பூங்கா ஒன்று கட்டி அத ராயூ அண்ணாவுக்கு சமர்ப்பிக்க உள்ளோம் 🙏🤞 பொறுத்தார் பூமி ஆள்வார் , எங்களின் கனவு ஒரு நாள் நனவாகும் 🙏/ பதிவு பையன்26 🙏
-
உண்மை தான் சுவி அண்ணா / பிள்ளைகளை பெத்த தாய் மாருக்கு தான் , பிள்ளைகளின் பிரிவு தாங்கி கொள்ள முடியாத வலியையும் வேதனையையும் குடுக்கும் / ஏன் இந்த பதிவு எழுதும் போது கூட என் கண்கள் கலங்கினது 😓, காரனம் மச்சான் மார் மீது உள்ள பாசத்தினாலும் சிறு வயதில் அவங்களுடன் பழகின நினைவுகளினாலும் 😓/
-
👏
-
உண்மை தான் பிரோ அதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை/ வவுனியாவில் ஒரு ஜயாவுக்கும் அம்மாவுக்கும் ஏழு பெண் பிள்ளைகள் / ஏழு பெண் பிள்ளைகளும் போராளிகள் , அதில் ஒரு பிள்ளை கரும்புலி , இனத்துக்காக நேரம் பார்த்து உயிர் தியாகம் செய்தவா / எனது முதல் மச்சான் வீரச்சாவு அடையும் போது , எம் போராட்டம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது , ஆனையிறவு எந்த திசையில் இருக்கு என்று கூட தெரியாது / உறவினர்கள் சொன்னதை தான் மனசில் வைச்சு அப்படியே எழுதினான் 😓 , மற்ற இரண்டு மச்சான் மார் போராட்டத்தில் இணையும் போது எம் போராட்ட வரலாறு நல்லாவே தெரியும் 🙏/
-
( வணக்கம் யாழ் உறவுகளே ) எம் தமிழீழ போராட்டத்தில் 25000 ஆயிரம் மாவீர செல்வங்களை இழந்து இருக்கிறோம் / எம் போராட்டத்தில் எனது மச்சான் மான் மூன்று பேர இழந்து இருக்கிறேன் , அவர்களுடன் சிறு வயதில் பழகின அன்பனா நினைவுகளை சுறுக்கமாய் எழுதுகிறேன் 😓/ எனது முதலாவது மச்சான் 1990ம் ஆண்டு போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டார் , மச்சானுக்கு மூன்று வயதாய் இருக்கும் போது அத்தை இறந்து விட்டா , தாயில்லா பிள்ளை என்று சொந்தங்கள் மச்சான் மேல் அளவு இல்லா பாசமும் அன்பையும் காட்டி வளத்து விட்டவை / 1990ம் ஆண்டு யாருக்கும் சொல்லாம தன்னை போராட்டத்தில் இணைத்து கொண்டார் , மன வேதனையுடன் உறவினர்கள் ஏன் மச்சான் இப்படி செய்தார் என்று தங்களுக்குள் அழுது கொண்டு இருந்தார்கள் கவலையில் , 1991ம் ஆண்டு ஆனையிறவுவில் சிங்கள இரணுவத்தினருடனான நேரடி மோதலின் போது , சிங்கள இரணுவம் தந்திரமாய் வைச்ச மிதிவெடியில் கால வைச்சு இரண்டு கால்களையும் இழந்து அந்த இடத்திலே வீரச்சாவு அடைந்தார் மச்சான் 😓😓😓/ போராளிகள் எங்க வீட்டுக்கு வந்து சொல்லிச்சினம் ( திருவேரகன் ஆனையிறவில் நடந்த சண்டையில் வீரச்சாவு அடைந்து விட்டார் என்று 😓 ) அம்மா அப்பம்மா அத்தை மார் எல்லாரும் கதறி அழுதிச்சினம் மச்சானின் இறந்த செய்தி கேட்டு 😓 / போராளிகளின் பேருந்து வீட்டுக்கு முன்னுக்கு வந்து நின்றது , மச்சானின் உடல் கோப்பாய் துயிலும் இல்லத்தில் வைக்க பட்டது உறவினர்களின் பார்வைக்கு 😓 , மச்சானுடன் சேர்ந்து இன்னும் ஜந்து போராளிகளின் உடலும் வைக்க பட்டு இருந்தது 😓/ மச்சானின் இரண்டு கால் இல்லா இடத்தை போராளிகள் அதிக பூ போட்டு இருந்தார்கள் 🌹🌻🌼/ பின்னாளில் அம்மா சொல்லி சொல்லி அழுவா மச்சானின் பிரிவை நினைத்து , தூக்கி வளத்தவைக்கு தானே பிள்ளைகளின் பிரிவு தாங்க முடியாத வலியை குடுக்கும் 😓/ பின்னாளில் போராளிகள் (மச்சான் நடந்து திரிந்த சாலைக்கு ) செனித் வீதி என்று பெயர் வைச்சவை 🙏 , (செனித் மச்சானின் இயக்க பெயர் 🙏) இரண்டாவது மச்சான் இவன் கூட அதிகம் பழகி இருக்கிறேன் , பயம் என்ன என்று தெரியாம வளந்தவன் , சிறு வயதிலே நல்லா நீந்துவான் , இந்த மச்சானும் போராட்டத்தில் தானா விரும்பி தான் தன்னை இணைந்து கொண்டார் , 2000ம் ஆண்டு ஆனையிறவு மீட்பு பேரில் தளபதிகளின் வழி நடத்தலில் சிங்கள ஆமியை சக போராளிகளுடன் சேர்ந்து விரட்டி அடிச்சவன் , 2001ம் ஆண்டு நடந்த தீச்சுவாலை சண்டையில் ஆமி அடிச்ச செல் பீஸ் மச்சானின் ஒரு கண்ணை காவு கொண்டு போனது 😓, போர் களத்தில் இருந்து அப்புற படுத்த பட்டார் மச்சான் / ஒரு கண்ண போர் களத்தில் இழந்ததால் மச்சான் வீடு வந்து சேர்ந்தார் போராட்டத்தில் இருந்து விலகி 🙏/ எத்தனையோ போர் களத்தில் சண்டை பிடிச்சு போகாத உயிர் , 2006ம் ஆண்டு கண் குடுத்து பார்க்க முடியாத ஒரு விபத்தில் இறந்து போனார் 😓😓( அந்த நாள் நான் புலம் பெயர் நாட்டில் தனிமையில் இருந்து அழுத நாள் 😓 ) போர் களத்தில் மச்சானின் உயிர் போய் இருந்தா மச்சானின் படத்தை இந்த இரண்டு மச்சான் மாரின் படத்தோடு இணைத்து இருப்பேன் / மூன்றாவது மச்சான் , தமிழீழ போராளிகளின் உடையில் நிப்பவர் தான் மூன்றாவது மச்சான் , சின்னனின் ஒன்றாய் படுப்போம் ஒன்றாய் விளையாடுவோம் , ஒன்றாய் கோயிலை கூட்டி சாமியை கழுவுவோம் , இப்படி சொல்லிட்டு போகலாம் எனது மூன்றாவது மச்சானுடனான நினைவுகளை / 2005ம் ஆண்டு தானாக விரும்பி போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டார் , 2008ம் ஆண்டு மன்னாரில் சிங்கள இரணுவத்துடன் ஏற்பட்ட மோதலின் போது வீரச்சாவு / மச்சான் மாருக்கும் மற்றும் மச்சான் மாருடன் வீரச்சாவை தழுவிய சக போராகளுக்கும் வீர வணக்கம் 🙏/ பதிவு பையன்26 😓/