Everything posted by மல்லிகை வாசம்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சுவியண்ணா, இதை இங்கே பகிரலாமோ தெரியவில்லை. இரு வர்ணப் பழைய பாடற் காட்சி; ஆனால் பாடல் ஹரீஸ் ஜெயராஜ் இசையமைத்தது! மீண்டும் வேறு யாரோ குரலில் பாடியதை இணைத்திருக்கிறார்கள். 😊
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் நிர்வாகம், வழமை போல நீண்ட நாட்களுக்குப் பின் இங்கு உள்நுளைந்ததால் என்னால் கருத்துக்கள் பதிய இயலவில்லை. தயவுசெய்து இக்குறையை நிவர்த்தி செய்வீர்களா? நன்றி 😊 பி.கு: யாழ் மூடப்படவிருந்த செய்தியை இன்று தான் படித்து அறிந்தேன்/ அதிர்ந்தேன். தொடர்ந்து இயங்கும் என அறிந்ததில் மிகுந்த மனநிறைவாக இருக்கிறது. நன்றி மோகன் அண்ணா மற்றும் நிர்வாகம். 🙏
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி இணையவன் அண்ணா. 🙂🙏
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
விருந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு போயிடோணும். கொஞ்ச நாள் தங்கிப் பார்த்தால் உபசாரமும், மரியாதையும் குறைஞ்சிடும். அப்படியா அண்ணை! 😀
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதுவும் சரி தான் அண்ணை. 😊 தொடர்ந்து யாழில் இருக்க விருப்பம் தான். ஆனால் மற்றவர்கள் குறிப்பிட்டது போல வேலைப் பழு தான் தடையாக உள்ளது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் நிர்வாகம், தானியங்கி மீண்டும் என் இயக்கத்தை மட்டுப்படுத்துது! 😀 தயவுசெய்து அதைச் சரி செய்வீர்களா? நன்றி 😊
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி நிழலி. 🙂
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சரி செய்யப்பட்டுள்ளது நன்றி மோகன் அண்ணா. மீண்டும் இதே நிலை. பல நாட்களாக எதுவும் பதிவிடாததால் வந்த வினை!😀 தயவுசெய்து நிவர்த்தி செய்வீர்களா?🙂
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மீண்டும் இக்குறை எனக்கு ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து இதனை நிவர்த்தி செய்வீர்களா மோகன் அண்ணா / நிர்வாகம். நன்றி
-
சமூகமும் ஓட்டமும்
சிறு வயதில் பஞ்சதந்திரக் கதைகளை விரும்பிப் படித்ததுண்டு. அதில் சொல்லப்பட்ட நீதிகளை விட கதை என்ற அம்சமே அப்போது என்னைக் கவர்ந்தது. இப்போது அவற்றை மீண்டும் படித்தால் இக்காலத்துக்கும் பொருத்தமான பல உள்ளார்ந்த அர்த்தங்கள் புலப்படும் என நினைப்பதுண்டு. கால ஓட்டத்தில் நாம் பெறும் அனுபவங்கள் நமது கண்ணோட்டத்தையும் தொடர்ச்சியாக மாற்றி பல புதிய விஷயங்களை நமக்குக் கற்பிக்கின்றன. அந்த வகையில் உங்களது இந்தத் திரி என்னை மிகவும் கவர்ந்தது விசுகு அண்ணா. உங்கள் கோணத்தில் இருந்து நீங்கள் பார்த்ததை படிக்க நானும் ஆவலாக உள்ளேன். தொடருங்கள்.
-
அன்புள்ள அம்மா....
இக்காலத்து நிதர்சனங்களைப் பதிவுகளாகத் தொடரும் குமாரசாமி அண்ணருக்கு மிக்க நன்றி. எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் அன்னைக்கு நிகரான சொந்தம் எதுவுமில்லை.
-
ஊர் வம்பும் கைபேசியும்..!
தொழிநுட்பம் வளர வளர வதந்திகளும் அதற்கேற்றால் போல் கடுகதியில் உலகெங்கும் பரப்பப்படுகின்றன. முன்னைய காலங்களிலாவது அந்தந்த ஊர்களுக்குள்ளேயே வதந்திகள் உலாவும். ஆனால் தற்போது உலகமே கைப்பேசியினுள் அடங்கிய நிலையில் இவ்வாறான வதந்திகள் சர்வதேசம் எங்கும் சில நொடி நேரங்களிலேயே பரப்பப்படுகின்றன என்பது வேதனையான ஒன்று. கிணத்தடி, கிடுகுவேலிப் பழக்கங்கள் தொழிநுட்ப வளர்ச்சியால் மாறிவிடுமா என்ன! விழிப்புணர்வு தரும் நல்லதோர் கவிதைக்கு நன்றி பசுவூர் கோபி.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நன்றி அக்கா. வித்தியாசமான நல்ல படங்களை இங்கு இணைக்கிறீர்கள். மேலே மாங்காய்க்குத் தான் பகிடியாய் ஏதோ எழுதினேன். உங்களுக்கல்ல. தவறாக நினைக்க வேண்டாம் அக்கா. ஆனாலும் அதன் வளர்ந்து முன்னேற வேணும் என்ற துடிப்பு எனக்குப் பிடிச்சிருக்கு!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
பிஞ்சில பழுத்தது என்பார்கள். விதையாய் மண்ணில் விழு முன் அப்படி என்ன அவசரம் முளைவிட! தாய் மரத்தின்ர உயரத்தை எட்டிப்பிடிக்க இந்தக் குறுக்குவழி எல்லாம் கூடாது பாருங்கோ! எப்படியோ கீழ விழுந்து தான் மறுபடி வளர வேணும். வாழ்த்துக்கள்! 😀 (இது நீங்கள் எடுத்த படமா ஜெகதா அக்கா? நல்லாயிருக்கு. இருந்தும் யாரோ photoshop பண்ணின போலயும் இருக்கு!)
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
கவி வரிகளை அவற்றுக்கேற்ப ஏக்கமான தொனியில் வழங்கியமையும், இசையும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் உதயன் அண்ணா.
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
இது நியாயம்... நன்றியுணர்வு இங்க தான் பிரச்சினை ஆரம்பம். பணம் கிடைச்சா மனம் என்னவெல்லாம் சொல்ல, செய்ய தூண்டும். கடவுளுக்கு நன்றியுணர்ச்சி, இதுவரை வேலை தந்த முதலாளிக்கு நடுவிரல். நல்ல ஆரம்பம் சிறி அண்ணா. தொடருங்கள்...
-
மாஸ்க் எடுத்தாச்சே
ஆக மொத்தத்தில மனுஷாள் யாரும் எப்ப கொறோனா ஒழியும் எண்டு கேட்கேல! வழமையான உங்கள் பாணியில் ஒரு நகைச்சுவைக் கதையைத் தந்தமைக்கு நன்றி புத்தன். மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.
-
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
இது போன்ற பெயர்க்குழப்பங்கள் எனக்கும் வந்ததுண்டு. இலங்கை கடவுச் சீட்டின் படி இங்க பல ஆவணங்களில என் பெயர் குடும்பப் பெயரா இருந்து, அப்பாவின் பெயர் கொண்டு என்னை அழைக்க இப்படி பல குழப்பங்களுக்குப் பிறகு இந்நாட்டு கடவுச்சீட்டு எடுக்கும்போது இக்குழப்பத்தைச் சரிசெய்து கொண்டேன். அதன்படி ஏனைய ஆவணங்கள் பலவற்றையும் சரிசெய்து நேரவிரயமாகியது. ஆனாலும் பெயர்க்குழப்பத்தால வாற சிக்கல்கள் இப்ப இல்லை.
-
பரிசு.
நான் இத்தனை நாளா வாலி மட்டும் தான் வாலிபக் கவிஞர் என்று நினைச்சிட்டிருந்தன். இப்ப தான் விளங்குது சுவி அண்ணாவுக்குள்ளும் ஓர் வாலிபக் கவி இருக்கிறார் என்று. வயதாக ஆக வாலிபர்களாவது அபூர்வம். வீட்டில திருஷ்டி சுத்தி போட சொல்லுங்கோ. காதல் ரசமுள்ள கவிதைக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் அண்ணா.
-
லொக்டவுண்
லொக்டௌன் காலத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட நல்ல ஒரு கதையாக்கம் அக்கா. தண்டப்பணத்துடன் முடிந்திருந்தாலாவது ஆறுதல் கொள்ளலாம். அதற்குப் பின்னர் நடந்த சம்பவங்கள் தான் வேதனை. விதியோ, சதியோ அன்றைய நாளில் அந்தக் குடும்பத்தில் நிகழ்ந்த எதிர்பாராத இந்த துரதிஷ்டமான நிகழ்வுகள் அவர்கள் வாழ்வையே புரட்டிப்போட்டிருக்கும். நாட்டுச் சூழல் தெரிந்தும் கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்த வதனியைக் குற்றம் சொல்ல நினைத்தால், அவள் தன் கணவன் மேல் வைத்த அளவுகடந்த அன்பு நாட்டின் சட்டதிட்டங்களை மறக்கச் செய்துவிட்டது என்பது தான் உண்மை. எனவே அவளை நொந்து பயனில்லை. எனினும் பலருக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கும். மறுபுறம், எதிர்பாராத கொண்டாட்டம், பின்னர் வந்த பொலீஸார், தண்டப்பணம், ஊராரின் அவச்சொல் இவற்றால் ஏற்பட்ட திடீர் மன அழுத்தம் வதனியின் கணவனைப் பாதித்திருக்கும். அதன் விளைவே பின்னர் நடந்த துரதிஷ்டமான நிகழ்வுகள். அதற்காகக் குடும்ப வன்முறை தான் தீர்வு என்றில்லை. கொஞ்சம் நிதானத்தைக் கடைப்பிடித்திருந்தால் கணநேரத்தில் வந்த கோபத்தால் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகளைத் தவிர்த்திருக்க முடியும். கணநேரக் கோபம் என்றாலும் பலகாலம் சேகரிக்கப்பட்ட மன அழுத்தத்தின் ஒட்டுமொத்த விளைவாகவும் அவனுக்கு வந்த அடக்கமுடியாக் கோபத்தைப் பார்க்கலாம். எனவே இது கணவன்மார்களுக்கான wake up call. இவை பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அவசியம். கோவிட் லொக்டௌன் காலத்தில் குடும்ப வன்முறை கணிசமான அளவு அதிகரித்ததாக இங்குள்ள பத்திரிகைகளில் படித்தேன். இது பல நாடுகளிலும் நிகழ்ந்திருக்கலாம் என நினைக்கிறேன். உங்கள் கதை இதற்கு ஒரு உதாரணம். காலத்துக்கேற்ற கதைக்கு நன்றி அக்கா.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
'மாசிலா உண்மைக் காதலே... மாறுமோ செல்வம் வந்த போதிலே!' (இப்பாடலில் பானுமதி அம்மா எம்.ஜி.ஆருக்காகவும் சேர்த்து நல்ல அபிநயங்கள் காட்டி நடித்துள்ளமை சிறப்பு! 😀)
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
2009 இற்குப் பிறகு நான் உட்படப் பலருக்கும் இதே மனநிலை வந்திருக்கும் சபேஷ். போதாக்குறைக்கு முகநூலின் தாக்கம் வேறு. யாழில் செய்திகள் அதிகமாகப் பகிரப்பட்டாலும் நானும் மேலோட்டமாக வாசித்துவிட்டுப் போய்விடுவேன். அவை தவிர்ந்த அம்சங்களுக்கும் யாழில் இடமிருப்பது என் போன்றோருக்கு மகிழ்ச்சியே. 2008 அல்லது 2009இல் உங்களை இங்கு கண்டது நினைவிருக்கிறது. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. இணைந்திருங்கள். (இப்படிச் சொல்லுற நானும் இடையிடையே காணாமல் போய்விடுவதுண்டு! 😀)
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஊரில நாங்கள் கற்பூரவள்ளி, தூதுவளை எண்டு சளிக்குப் பாவிக்கிறனாங்கள். எனினும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்கிறது இப்படியான மூலிகை மருந்துகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'
-
மரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.!
வீர வணக்கங்கள் 🙏