Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. பார்ப்பதற்கு ஏதாவது Link இருந்தால் போட்டு விடுங்கப்பா! https://kickstream.ru/2026/02/07/scotland-vs-west-indies/
  2. அந்தக் கோப்புகளில் பெயர் இடம்பெற்றவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்று நியாயமில்லை. ஆனால் ஒரு கொரடூரமான குற்றவாளிக்கு இவர்களைப்பற்றித் தெரிந்திருக்கிறது.இவர்களைச் சிபாரிசு செய்யும் அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்பது ஒரு நெருடலான விடயம்.எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டியதில்லை.இப்பொழுது வரை அவர்கள் இந்த விடயத்தில் நிபராதிகள்.
  3. பார்ப்பதற்கு ஏதாவது Link இருந்தால் போட்டு விடுங்கப்பா!
  4. வேலையோட வேலையாய் கொப்பி பேஸ்ட் பண்ணிவிட வேண்டியதுதானே.எர்போதும் முன்வரிசை உறுப்பினராக வருபவர் வராவிட்டால் போட்டி விறுவிறுப்பாக இருக்காதே.
  5. இந்தியாவால் மேற்கூறப்பட்டதனது எதிர்பார்ப்பை சிறிலங்காவில் நிறைவேற்றி இருக்க முடியாது என்று கருதுவது முட்டாள்த்தனமானது.இந்தியா உளப் பூர்வமாக நினைத்தால் இதைச் சுலபமாக நிறைவேற்றி இருக்க முடியும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்திய மலையாளிகள் தமிழர்களுக்கு கெளரவமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று அறவே விரும்பவில்லை.ஆனால் சிங்களம் யுத்தம் முடிந்ததும் இந்தியாவை ஓரம்கட்டி சீனாவை அணைத்துக் கொண்டது. அதன் பலாபலன்களை இந்தியா அனுபவிக்கப் போகின்றது.தமிழர்கள் அற்ப உரிமைகளைப் பெறக் கூடாது என்று செயற்பட்ட இந்தியா இப்பொழுது தன்னைச் சுற்றி சக்கர வியூகத்திற்குள் தானே விழுந்து விட்டது. கெடுவான் கேடு நினைப்பான்.ஒரு பிராந்திய வல்லரசு என்றால் தன்னைச்சுற்றியுள்ள நாடுகளை நட்பு நாடுகளாக வைத்திருக்க வேண்டும். இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த நாடும் இந்தியாவுக்கு நட்பு நாடு கிடையாது. இது இந்திய வெளியுறவுக் கொள்கையின் படு தோல்வி. யாழ்ப்பாணத்திற்கு வந்த சீனத்தூதுவர் இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்டது அவருக்கு தெரியாத விடை அல்ல. இந்தியாவை நாங்கள் நெருங்கி விட்டோம் என்பதை சூசகமாகச் சொன்னதுதான்.
  6. பொங்கலுக்கு தீர்வு வரும். தீபாவளிக்கு தீர்வு வரும் என்று ஒவ்வொரு பண்டிகைக்கும் தீர்வு வரும் என்று தமிழ்மக்களைப் பேய்க்காட்டினார்.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்பதவி சம்பந்தருக்கு புலிகளின் ஆதரவோடு கொடுக்கப்பட்டது. ஆனால் சம்பந்தர் புலிகளுக்கோ தனக்கு வாக்களித்த மக்களுக்கோநன்றி கெட்டதனமாக நடந்து கொண்டார். அதன் விளைவு அவர் இறந்த பிறகு அவருக்கு தமிழ்மக்கள் கொடுத்த ?மரியாதையில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
  7. புலிகள் அழிந்தால் தீர்வு கிடைக்கும் என்று கூறியவர் எந்தத்தீர்வையும் பெற்றுத்தரவில்லை. தனக்கு மட்டும்ழும்பில் அரசசெலவழல் வீட்டைப்பெற்றுக்கொண்டார். இது புலிகளின் அழிவு சம்பந்தருக்கு கவலையைக் கொடுக்க்கவில்லை. 2009 உச்ச கட்டப் போரின் போது இந்தியாவில் இருந்த சம்பந்தருக்கு தொலைபேசி எடுத்த போது தொலைபேசியைத் தூக்கிவைத்து விட்டு சம்பந்தர் தூங்கியதாக அவரது கட்சியைச்சேர்ந்த முன்னாள் எம்பி சந்திரகாந்தன் சந்திரநேரு சொல்லியது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்
  8. பையா ஏன் இவ்வளசவு சுணக்கம்? கொப்பியடிக்க ஆளில்லாமல் செம்பாட்டானை பிடிக்க வேண்டியாதாக இருக்கிறது.
  9. அது திறந்தால்தானே?அதுக்கிடையில் எத்தனை தேர்தலை வைக்க வேண்டும். அந்த மாயமானைக்காட்டித்தான் வடக்கின் வாக்குகளை அள்ள வேண்டும். ஆகா பையன் வந்துட்டான்யா! வந்துட்டான்! இனி இந்தத்திரி பட்டாசுதான்!
  10. அரசியல் சுதந்திரம்: 2014-ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில், 2009 மே மாதத்திற்குப் பிறகு (யுத்தம் முடிவுக்கு வந்த பின்) அரசும் சரி, எதிர்க்கட்சியினரும் சரி, நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி, இன்று சுதந்திரமாகச் செயல்பட முடிவதற்குக் காரணம் "விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று இல்லாததுதான்" என்று அவர் தெரிவித்தார். கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை: தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) கூட விடுதலைப் புலிகளின் பிடியில் (clutches of the LTTE) இருந்து தற்போது சுதந்திரமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த நேர்காணலில் ஒப்புக்கொண்டார். முரண்பட்ட கருத்துக்கள்: அதே சமயம், மற்றொரு தருணத்தில் புலிகள் "மனித உரிமைகளை ஒருபோதும் மதிக்கவில்லை" ("never observed human rights") என்றும், அதுவே அவர்களின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது
  11. இதுவரையில் போட்டியில் இணைந்தவர்கள் எத்தனை பேர்?கிரிக்கட்டை நுனி விரலில் லவத்திருக்கும் @பையன் இணைந்து விட்டாரா?
  12. 2012 டிச 07 அன்று பாராளுமன்றத்தில் 2013ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் அவர்கள், விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்றும், அவர்கள் மனித உரிமைகளை மதிக்காத காரணத்தால் அழிந்து போனார்கள் என்றும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் இராணுவம் எக்காரணம் கொண்டும் வெளியேறவேண்டும் என்ற கொள்கை தமது கட்சிக்கு என்றைக்கும் இல்லையென்று, எந்த கூச்சமுமில்லாமல் பகிரங்கமாக வாக்குமூலம் கொடுத்திருந்தார். இது தமிழ் அரசியல் அரங்கில் ஞாபகசக்தி கம்மியானவர்களுக்கு பழைய செய்தியே, இருந்தும் தாக்கம் தமிழினத்துக்கு மிக மோசமானது என்ற உணர்வின் பிரதிபலிப்பே இந்த பதிவு. BBC News தமிழ்'விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம்'...நாங்கள் எவரையும் பகைக்கவில்லை. பகைமை எங்களுக்கு வேண்டாம். ஆனால் எமது மக்களின் உரிமைகளை கடைசி வரையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் சம்பந்தன்.'விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம்' - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பட மூலாதாரம்,விடுதலைப் புலிகள் 18 டிசம்பர் 2019 இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் . யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது ஒரு சர்வதேச ஒப்பந்தம். தன்னிச்சையாக ஒரு நாடு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாது. அது நிறைவேற்றப்பட வேண்டும். அது ஒரு சர்வதேசக் கடமை. 1988ஆம் ஆண்டு 13ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுதான் அரசியல் சாசன ரீதியாக ஏற்பட்ட முதல் ஆட்சி அதிகாரங்களைப் பொறுத்தவரையில் ஒரு திருத்தம். அது இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அது முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். அது நிறைவேற்றப்படுமென்ற பல வாக்குறுதிகளைப் பல அரசாங்கங்கள் கொடுத்திருக்கிறார்கள். அவற்றை அவர்கள் இன்னமும் நிறைவேற்றவில்லை. அரசாங்கம் சர்வதேச ரீதியாக வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கின்றது. அதைப் பாரதப் பிரதமருக்கும் கொடுத்திருக்கிறது. "மலேசிய முன்னாள் பிரதமரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?" - மூத்த அரசியல் தலைவர் கேள்வி முன்னாள் பெண் விடுதலைப் புலிகளின் துயர்மிகு வாழ்வும், அவர்கள் எதிர்பார்ப்பும் ஜனாதிபதியாக இருந்த போது மகிந்த ராஜபக்ஷசவும் அவருடைய வெளி விவகாரச் செயலாளர் பேராசிரியர் ஜி.எல்.பிரீசும் இந்திய அரசாங்கத்திற்கு வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள். நாங்கள் 13ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவோம். அதற்கு மேலதிகமாக அதைக் கட்டியெழுப்பி அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துவதற்கு நாங்கள் வழிசெய்வோம் என்று. அது நடைபெற வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. இந்த விடயம் சம்பந்தமாக இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கை வெளி விவகார அமைச்சர் இந்திய வெளி விவகார அமைச்சின் பேச்சாளர்கள் பல முறைகளில் பேசியிருக்கின்றார்கள். பல வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பிறகு இந்தியாவினுடைய வெளி விவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு கூறிய செய்தி என்னவெனில் இங்கு எதிர்பார்க்கின்றதை இந்தியப் பிரதமர் எதிர்பார்க்கின்றார் நீங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் நீதியின் அடிப்படையில் கௌரவத்தின் அடிப்படையில் சமாதானத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வை நீங்கள் ஏற்படுத்த வேண்டுமென்று. இது சாதாரணமான சொற்கள் அல்ல. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது பிறப்புறுப்பை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணியால் "நத்தைக் காய்ச்சல்" - மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா? "ஏழு நாட்களுக்குள் வெளியேறுங்கள்" - மாஞ்சோலையில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து மக்கள் கூறுவது என்ன? பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் ஒரு அறிவிப்பால் ஆட்டம் கண்ட பங்குச்சந்தை புதினுக்கு எதிராக பேசிய ரஷ்ய செல்வந்தர்கள் என்ன ஆனார்கள்? - போரின் நடுவே நிலையற்ற சூழல் End of அதிகம் படிக்கப்பட்டது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு வாரத்திற்குள் இந்தியாவிற்குச் சென்ற போது இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது ஒரு கூட்டாக ஊடக சந்திப்பு நடைபெற்றது.அந்த ஊடக சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோதி இவ்விதமான ஒரு தீர்வை ஏற்படுத்தி தமிழ் மக்கள் இலங்கையில் கௌரவமாக வாழக் கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டுமென்று நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் கூறியிருக்கின்றோம் அதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று கூறியிருக்கின்றார்.இவை நடைபெற வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதுதான் எங்களது கடமை. இவற்றை எவராலும் நிறைவேற்ற முடியாது என்றில்லை. கற்பனையில் வாழ்கின்றவர்களால் நிறைவேற்ற முடியாது. இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் அத்துடன் முடிவடையவில்லை. தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கணிக்கப்படுகின்றார்கள். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்கு சமத்துவ அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கொடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியம். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது குறித்து முத்தையா முரளிதரன் பேசியது என்ன? முல்லைத்தீவில் வெடித்தது விடுதலைப் புலிகள் புதைத்து வைத்ததா? இலங்கை அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்த பொழுது உதவிய நாடுகள் நோர்வே, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஜப்பான், போன்ற நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருக்கின்றது. அதிகார பகிர்வின் ஊடாக நாட்டில் சமத்துவமாக மக்கள் வாழக் கூடிய வகையில் ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்துவோம் என்று. அந்த நாடுகளும் தங்களுடைய கருத்தகளைக் கூறியிருக்கின்றார்கள். அமைப்பு ரீதியாக மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ஆழமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அவ்விதமான மாற்றங்களின் ஊடாக ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். அமெரிக்கா தனிப்பட்ட முறையிலும் இலங்கைக்குக் கூறியிருக்கின்றது.உங்களுடைய பழைய நிலைமைகளில் உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பற்றிப் பேசியிருக்கின்றீர்கள். சமஷ்டியைப் பற்றிப் பேசியிருக்கின்றீர்கள், அதியுச்ச அதிகாரப் பகிர்வைப் பற்றிப் பேசியிருக்கின்றீர்கள். பட மூலாதாரம்,Str ஆனபடியால் அந்த அடிப்படையில் ஒரு தீர்வு வர வேண்டுமென்றும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.இவை நிறைவேற்றப்பட வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதற்கு நாங்கள் திட்டங்களை வகுத்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் என்ன விதமாகச் செயற்படப் போகின்றோம் என்பதை முடிவெடுத்து அதைச் செய்ய வெண்டும். அது தான் எங்களுடைய கடமை. அது தான் எங்களுடைய எதிர்காலம். அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் பல தேவையான அதிகாரங்களை நாங்கள் பெற்று எமது மக்கள் சமத்தவமாக நீதி பெற்றவர்களாக சமாதானமாகக் கௌரவமாக வாழக் கூடிய நிலைமை ஏற்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான சர்வதேச சமூகம் விசேசமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி புரிந்தார்கள். அதுவொரு நிபந்தனையின் அடிப்படையில் தான்.தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பிறகு நாங்கள் ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வை காண்போம் என்று. ஆனால் தற்பொழுது அந்த வாக்குறுதிகளிலிருந்து தப்பிக்க முயல்கின்றார்கள்.அதற்கு சர்வதேச சமூகம் இடமளிக்கக் கூடாது. அதற்கு சர்வதேச சமூகம் இடமளித்தால் அதனுடைய அர்த்தம் என்னவென்றால் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அவர்களும் உதவுகின்றார்கள் என்று தான். அந்த நிலைமை இருக்க முடியாது. அந்த நிலைமை இருக்கக் கூடாது. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையினுடைய தீர்மானங்கள் சிவில் அரசியல் உரிமைகள் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையுண்டு. அது மறுக்கப்பட்டால் அதற்கு வெளியக சுயநிர்ய உரிமையுண்டு. இதைச் சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். நாங்கள் எவரையும் பகைக்கவில்லை. பகைமை எங்களுக்கு வேண்டாம். ஆனால் எமது மக்களின் உரிமைகளைக் கடைசி வரையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
  13. தமிழ்மக்களிடம் வாக்கரசியல் செய்து கொண்டே பாராளுமன்றத்தில் புலிகளை அழித்ததற்காக மகிந் அரசுக்கு நன்றி சொன்னவர் சம்பந்தர்.
  14. சிறியருக்கு தமிழரசுக்கட்சியின் தலைமைப் பொறுப்பை பெறுவதற்கு ஆதரவு தருவதாக ஆசை காட்டினார்.தமிழரசுக்கட்சியின் தலைமையை ஏற்கத்தயார் என்று சிறியர் அறிக்கையும் விட்டார். அந்தத்தேர்தலில் சுமத்தரனோடு சேர்ந்து கட்சித்தலைவர் மாவைக்கு எதிராக வேலை செய்து மாவை தோற்கடிக்கப்பட்டார்.. தேர்தலில் வென்றதும் கட்சித்தலைவர் மாவைக்குத் தெரியாமல் சிறிதரனும் சுமத்திரனும் கலையரசனை தேசிய பட்டியல் எம்பியாகத் தெரிவு செய்தனர். கட்சித் தலைமைக்குத் தெரியாமல் அறிவிக்காமல் செயற்பட்ட சுமத்தரன் இன்று கட்சி யாப்பு பற்றியும் ஒழுங்கு நடவடிக்கை பற்றியும் பெரிதாக அலட்டுகிறார். உண்மையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்நபர் சுமத்தனும் சம்பந்தருமே. கட்சியில் அவர்களின் அதிகாரத்துக்குப் பயந்து எல்லோரும் வாயை கூடிக்கொண்டு இருந்ததன் விளைவு இன்று சிறியருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. வேடிக்கை என்ன வென்றால் கலையரசனும் சிறயருக்கு எதிராக திரம்பியிரக்கிறார். சிறியரின் நழுவல்தனமான மதில்மேல் பூனை போன்ற அரசியளுக்கு இந்த நிலமை தேவை. வினை விதைத்தவர் வினை அறுக்கிறார்.
  15. 3வது தடுப்பூசிக்குப் பின் நான் தடுப்பூசி போடவில்லை. பொதுமக்கள் தடுப்பூசியினால் வரும் பின்விளைவுகளின் அச்சத்தினால் மேற்கொண்டு தடப்பூசி போடுவதனை நிறுத்தி விட்டார்கள். மருந்து விறபனையாகாமல் நட்டத்தில் போவதால் இப்படி செய்தியைக்கசிய விடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
  16. அவரது கட்சியில் இருப்பவர்கள் அவரை விட மோசமானவர்களாக இருப்பதால் உள்ளத்திற்குள் தமிழ்த் தேசிய் பேசுகிறார் என்று அவரைத் தெரிவுசெய்கிறார்கள். இவர் அரசியலில் வந்த காலத்தில் இருந்து இப்படித்தான் வடக்கில் ஒன்று சபசுவார். தெற்கில் சம்பந்தர் சுமத்திரன் கிழிச்ச கோட்டைத் தாண்டாமல் அரசு செய்து வந்தார்.தமிழரசுக்கட்சியின்தலைவர் ஆசைவந்து சுமத்திரனுக்கும் சிறிதரனுக்கும் இடையே பகைவந்ததில் இருந்து அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பெரிது படுத்தப்படுகின்றன.அவர் ஒரு மதில்மேல் பூனை.கழுவுறமீனில நழுவுறமீன்.
  17. தம்பர் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். நாங்கள்(அமெரிக்கா)இல்லாவிடால் எல்லோரும் ஜேர்மன் மொழியையும் ஒரளவு யப்பானிய மொழியையும் பேசிக் கொண்டிருப்பார்கள். அதில்பாதி உண்மை. ஐரோப்பா ஹிட்டலருக்கு கோழிக்குஞ்சு யானையைச் சாப்பிட்டால்தான் பசியாறும் என்று சம நேரத்தில் ரஸ்யாவுக்குள் போய் எல்லாப் பக்கமும்அடிவாங்கியது மாதிரி ட்ரம்ப் அடிவாங்கி விட்டார்.
  18. நான் அப்பவே சொன்னேன் தம்பர் தனிமைப்படப் போறார் என்று இவ்வளவு சீக்கிரம் குத்துக்கரணம் அடிப்பார் என்று நினைக்க வில்லை.ஈயு>நேட்டோ நாடுகள் போட்டதுக்கே இப்படி என்றால் ரஸ்யா >சீனா எல்லாம் பின்னால் வெயிற்றிங்.அமெரிக்காவின் அதிபர் வாயில் இருந்து வரும்வார்ததைகள் எவ்வளவு நிதானமாக இருக்க வேண்டும். ஆனால் ட்ரம்ப் அமெரிக்காவின் மானத்தை வாங்கி விட்டார். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். தமிழன் அப்பவே சொல்லி விட்டான். என்ன செய்வது மக்கள் தத்திகளைத் தெரிவு செய்து விட்டு அதன்பலன்களை அனுபவிக்கிறார்கள். இப்போது மெல்ல மெல்ல விழித்துக் கொள்கிறார்கள்.
  19. சிறியர் கழுவுறமீனில நழுவுறமீன் தமழரசுக்கட்சியையும் வீட்டுச்சின்னத்தையும் விட்டு வரமாட்டார்..ஏனெ;றால் அந்தக்கட்சியில்தான் தலைவர் பதவிக்கு போட்டியிடவாவது முடிந்தது. இப்ப தமிழரசுக்கட்சி உட்பட எல்லாக்கட்சிகளும் வண்மான் ஆர்மிதான். சனம் வெறுப்படைந்து என்பிபிக்கு வாக்களிச்சு என்பிபி வேட்பாளர் மாகாணசபை முதலமைச்சராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  20. அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் முறுகல் போக்கைத் தொடர்ந்தால் நிலமை மிகவும் மோசமாகும்.ஐரோப்பியநாடுகள் பொருளாதார வலிமை மிக்க நாடுகள்.அமெரிக்ககண்டத்தில் அமெரிக்க கனடா தவிர பெரிய பொருளாதாரம் மிக்க நாடுகள் இல்லை. ஐரோப்பிய நாடுகள் உக்கிரைன் விடயத்தில் ரஸ்யாவை எதிர்த்தாலும் ரஸ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகின்றன.இந்தியா சீனா போன்ற நாடுகளும் ரஸ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகின்றன.அமெரிக்கா வரிகளை விதித்தால் இந்த வரத்தகம் மேலும் கூடும்.அனைத்து நாடுகளுக்கும் சகட்டுமேனிக்கு வரிவிதித்தால் அமெரிக்க வர்த்தகத்தைப்புறக்கணித்து நிலைக்கு ஐரோப்பிய நாடுகள் வேறு வழிகளில் அதனை அடைய முயற்சிக்கும்.அமெரிக்கா தனித்து விடப்படும். இந்த நிலமை தொடர்ந்தால்என்னதான்அமெரிக்கா வலிமையான நாடாக இருந்தாலும் தனித்து விடப்படும்.அப்போது அதன்நிலை மோசமாகும். அனால் அப்படி எல்லாம் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. ஒரு உடன்பாட்டு வந்து விடுவார்கள். ட்ரம்புக்கு இன்னும் 3 ஆண்டுகள்தான் இருக்கின்றன.
  21. கடைசியில் சுமத்திரன்மட்டுந்தான் கட்சியில் மிஞ்சுவார் போல இருக்கிறது. அரியநேந்திரனுக்கு சங்கு. உன்னோட சேர்ந்து நான் செய்யும் காரியம் ரொம் பயங்கரமாக இருக்கும் என்ற வாக்கிற்கு அமைய சங்குக் கூட்டணியும் பத்தி எழுத்தாளர்களும் அரிநேந்திரனுக்கு சங்கு ஊதிவிட்டு பின்வாசல் வழியாக சுமத்திரனோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.