Everything posted by புலவர்
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
ஆக விஜய்ண்ணா சொன்னதைப்போல இரண்டு முனைப் போட்டிதான் போல! த வெ க எதிர் திமுக!
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? தென்னாபிரிக்கா ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2) இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4) பாகிஸ்தான் - வங்காளதேசம் 5) இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6) அவுஸ்திரேலியா - இலங்கை 7) இந்தியா - பாகிஸ்தான் 8) நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9) இங்கிலாந்து - வங்காளதேசம் 10) அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11) இந்தியா - தென்னாபிரிக்கா 12) நியூசிலாந்து - வங்காளதேசம் 13) இலங்கை - இங்கிலாந்து 14) அவுஸ்திரேலியா - இந்தியா 15) தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16) இலங்கை - நியூசிலாந்து 17) பாகிஸ்தான் - இங்கிலாந்து 18) அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19) இலங்கை - தென்னாபிரிக்கா 20) நியூசிலாந்து - பாகிஸ்தான் 21) இங்கிலாந்து - இந்தியா 22) இலங்கை - வங்களாதேசம் 23) பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24) அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25) இந்தியா - நியூசிலாந்து 26) இலங்கை - பாகிஸ்தான் 27) அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28) இங்கிலாந்து - நியூசிலாந்து 29) இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்காளதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா தென்னாபிரிக்கா இந்தியா நியூசிலாந்து 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34) இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) அவுஸ்திரேலியா 41, 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41, 42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? விசாகப்பட்டினம் 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? இந்தோர் 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38) இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? வங்காளதேசம் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 46) இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா பதில்கள் தடித்த கறுத்த எழுத்துக்களில் தந்துள்ளேன். கறுப்புத்தான் எனக்குப் பிடித்த கலரு!
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
ஒப்பீட்டுக்கும் உதராணத்திற்கும் வரைவிலக்கணம் தருக?உங்களால் முடியும் திராவிடக் கோமாளிகள் எதற்கும் ஒரு விளக்கம்தருவார்கள்.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
எந்த நெருக்கடி வந்த பொழுதும் கொண்ட கொள்கையில் தடுமாறாமல் உறுதியுடன் நின்ற புலிகளுடன் விஜையை ஒப்பிடுவதை என்வென்பது? Time to lead tittle போட்டு ஜெயலலிதா படத்துக்கு நெருக்கடி கொடுத்தவுடன் அப்பனும் மகனும் போய் ஜெயலலிதா காலில் விழுந்த விஜையை இந்திய அரசோடு மோத முடிவெடுத்த புலிகளுடன் ஒப்பிடுவதை என்னவென்பது?
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
அண்ணா எம்ஜியார் படத்தைப் போஐவது இரட்டை இலை வாக்குகளைம் உதயசூரியன் வாக்குகளையும் குறிவைத்துத்தான். விஜயகாந்தைப்பற்றிப் பேசியது தேதிமுக வாக்குகளை குறிவைத்துத்தான்.:ழத்தமிழர்கள் தொடர்பாக பட்டும்படாமலும் தொட்டுத்தொடாமலும் பேசியது நாதகவின் வாக்குகளைக் குறிவைத்துத்தான்.திமுகவை கடுமையாக எதிர்த்துக்கொண்டு காங்கிரசை விமர்சிக்காமல் இருப்பது.காங்கிரசுக்கான கூட்டணிக்கதவைத்திறந்து வைப்பதற்குத்தான்.பாஜகவை விமர்சித்து விட்டு அதன்கூட்டணிக்கட்சியான அதிமுகவை விமர்சிக்காமல் இருப்பதும் அதே கூட்டணிக்கதவை திறந்துவைப்பதற்குத்தான்.விஜை கூட்டணி அமைத்தால் அவருக்கு எதிர்காலம் இருக்கிறது. தனித்து நின்றால் இந்தத் தேர்தலோடு படம் நடிக்கப் போய் விடுவார்.சீமான் இந்தத் தேர்தலில் தனித்து நின்று இப்போதிருக்கும் 8 வீதம் வாக்குகளை எடுத்தால் அவருக்கு அரசியலில் சிறப்பான எதிர்காலம் இருக்கும்.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
சீமான் அண்ணா, இவ்ளோ ஏமாளியா இருக்கியே அண்ணா. கால் % கூட இல்லாத communist கட்சிகள் கூட்டணிக்கு 25 கோடி single payment வாங்குறான். 1% இல்லாத தேமுதிக 100 கோடி வசூல் போடுறான். 2% இல்லாத விசிக சொளையா 400 கோடி ஒவ்வொரு தேர்தலுக்கு வாங்குறான். பெட்டி மணி சொல்லவே வேணாம். எடப்பாடியார் 2000 கோடி துணை முதல்வர் பதவி கொடுக்க ரெடி ஆ இருந்தும் solid ஆ 8.22% வாக்கு இருந்தும், பாஜக முதல்வர் வேட்பாளர் அளவுக்கு lobby செய்தும், இது எதுவுமே வேணாம்னு தனியாக நிக்குற. தொகுதிக்கு தொகுதி சில்லற வியாபாரம் பாக்குறார்னு வாடகை வாயனுங்க அளந்து விடுறானுக. டேய் கொஞ்சம் rate ஏத்தி சொல்லுங்க டா திராவிட எச்சைகளா! இது எக்ஸ் தளத்தில் வந்த ஒரு பதிவு
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
விஜையின் கொள்கை என்ன?அரசியல் எதிரிகள் எதற்காக திமுகவைக் குறிப்பிடுகிறார்.(காங்கிரசைக்குறிப்பிடவில்லை).அரசியல் எதிரிக்கும் கொள்கை எதிரிக்கும் உரிய வரை விலக்கணம் என்ன?.திமுகவுடன் கூட்டு வைக்கலாம் என்றால் திமுக அலருடைய கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டு வைத்த தீட்டு அழிந்து விட்டதா? இனியும் கூட்டு வைக்க மாட்டார்கள் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா?பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டு வேலைத்தூக்குவதெல்லாம் என்ன மாதிரியான கொள்கை.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
https://youtu.be/oG0BMyTwW5o?si=BBzF3ucsuyB0NDW5 https://www.youtube.com/watch?v=oG0BMyTwW5o
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
இந்த்த தேர்தலில் விஜை வெற்றி பெறுவார். தோற்றாலும் ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும்.கவலை வேண்டாம்.அடுத்த கமல்.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் தமிழ்த்தேசியம்.மரங்கள்>மலைகள்>இயற்கைவிவசாயம்>ஆடுமாடுவளர்ப்பு நீர்லோண்மை>ஆண்பெண்சமத்துவம்>கோவில்களில் தமிழில் குடமுழுக்கு>அனத்து இடங்களிலும் தமிழுக்கு முன்னுரிமை>ஆரியம்திராவிடத்தித்தின் முகமூடியைக் கிழித்தல்.வாக்குக்கு பணம்கொடுக்காமை கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டிஎன்று விஜை உட்பட எந்த அரசியல்வாதிகளும்பேசாத விடயங்களை நாதகவும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானும் செய்கின்றனர்.அதை விட்டவிட்டு விட்டீர்கள்.கச்ச தீவை இலங்கைக்கு கொடுத்த கட்சியும் அதற்கு மெளனமாக சம்மதம் கொடுத்த கட்சியும் ஒரே கூட்டணியில் இருக்கின்றனர். நீட்டுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டு விட்டோட் ஆட்சிக்கு வந்ததும் முதல்கையெழுத்து நீட்டை விலத்துவதற்கு என்று சொல்லிவிட்டு ஒன்றுமே செய்யாமல் இருப்பது. அரசியல் மேடைகளில் கவர்ச்சிப் பெண்களின் குத்தாட்டம்> காசு கொடுத்து கூட்டத்துக்கு ஆள் பிடிப்பது.குடும்ப அரசியல்>இப்படித்தில்லுமுல்லுகள்>எதிர்க்கட்சிகள் மீது ஊடகங்களை வைத்து பொய்ப்பிரச்சாரம் செய்தல். எதிர்க்கட்சிகளுக்கு ஊடக இருட்டடிப்பு.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
விஜியின் வழக்குகளளை ரத்து செய்ய கேட்டு சீமான் தொடுத்த வழக்கில் சீமானுக்கு சாதாகமான தீர்ப்பு வந்துள்ளது. விகடன் அதை சிறு கிசு கிசுவாகப் போட்டுள்ள செய்திக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்க இந்தத் தேர்தல் நேரத்தில் சீமான் நேரத்தை வீணடிப்பது அவசிமற்றது. திமுகவை எதிர்த்தால் பாஜகவின் B ரீம் விஜைய எதிர்த்தால் திமுகவின் B ரீம் இப்படியே சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதுதான். விஜை அரசியலுக்கு வருவதை வரவேற்ற சீமான். விஜை முதல் மாநாட்டில் திராவிடத்தேசியமும் தமிழ்த்தேசியமும் தனது அரசியல் கொள்கை என்று முரண்பட்ட தெளிவற்ற கொள்கையை வெளியிட்ட அன்று இரவே விஜையின் கருத்தை எதிர்த்து கருத்துத்தெரிவித்துள்ளார். 10 நிமிடப் பேச்சில் மேலோட்டமாக விஜை 30 செக்கனில் பேசிய விடயத்தை தூக்கிப்பிடிப்பவர்கள் ஒருமணி நேரத்துக்கும் மேலாக திமுக பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிவிட்டு ஒரு சில நிமிடங்கள் விஜைஜைப் பற்றிப் பேசியதும் அதுவும் எந்த ஊடகங்கள் சீமானை இருட்டடிப்புச்செய்தனவோ அதேதிமுக ஊடகங்கள் பெரிது படுத்துவதும் அதை அணில்குஞ்சுகள் காவித்திரிவதும் நகைப்புக்குரியது
-
பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரித்துள்ளது!
இது ஒரு நல்ல விடயம். ஆனால் இஸ்ரேல் இதைக் கடுமையாக எதிர்க்கும்.இன அழிப்புக்கு எதிராகப் போராடும் தேசங்களுக்கு இது முன்மாதிரியாக அமையும்.பிரித்தானியா அங்கீகரித்தாலும் பிரித்தானிய ஊடகங்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயலாக இருப்பதாக அறிக்கையிட்டுள்ளன. அவர்கள் எப்போதும் அப்படித்தான்.அமெரிக்கா விரும்பாத விடயத்தை ஊக்குவிக்க மாட்டார்கள். இதனைத் தொடர்ந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களும் தாம்சார்ந்த நாடுகளிடம் எமது சமஸ்டி தொடர்பிலான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
தேசியத்தலைவர் பேரைக் கூட சொல்லத்தைரியமில்லை.இருந்தாலும் அவர் பேசியதை வரவேற்கலாம். விஜை இந்த விடயத்தைப் பேசி இருப்பதால் அது ஊடக வெளிச்சம் பெறும். காலம்கடந்தாவது ஒப்புக்கு ஒரு வரி பேசி விட்டு கடந்து போயிருக்கிறார்.இதை எல்லா அரசியல்வாதிகளும் பேசியிருக்கிறார்கள். நாளைக்கு காங்கிரசுடன் கூட்டணி அமைப்பாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விகடன் வாங்கிய காசுக்கு ஒரு செய்தியை ஒரு ஓரமாகப் போட்டு விட்டு சிவனே என்று இருக்கிறது.மேற்கொண்டு அதை உறுதிப்படுத்த எந்தச் செய்தியைுயும் வெளிவிடவில்லை.சீமான் எதிர்ப்பாளர்கள் அதைப் பிடித்துத் தொங்கிக் கொணடு நிற்கிறார்கள்.
-
அமெரிக்க படையினர் இஸ்ரேலுக்கான ஆயுத விமானங்களை பறக்க மறுத்ததால் கைது –நீக்கப்படுவதற்கு முன் வீடியோவைப் பாருங்கள்!"
https://fb.watch/Ce88Q5X_Pd/ "அமெரிக்க படையினர் இஸ்ரேலுக்கான ஆயுத விமானங்களை பறக்க மறுத்ததால் கைது –நீக்கப்படுவதற்கு முன் வீடியோவைப் பாருங்கள்!" #USMilitary #HonourableMenAndWomen #RefuseToFly #NoArmsToIsrael #PentagonProtest #TruthBehindWar #StopTheWar #JusticeForPeace #VoiceOfSoldiers #ShareBeforeDelete See more in Video 0:21 'He's a great gentleman and a great King' 👑 #dailyexpress #kingcharles #trump Daily Express
-
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
இது ஒரு நொண்டிச்சாட்டு ஒரு வீதியை அகலப்படுத்துவதற்காக தனியார் காணியச் சுவீகரித்து அதில் இருக்கும் கட்டிடங்களை அகற்றும் அரசாங்கம் கண்ட கண்ட இடங்கள் எல்லாம் தொல்லியல்துறைக்கு சொந்தமானது என்று தாமே தாட்டு வைத்தை புத்தர் சிலைகளை எடுத்து புத்தசிலைகளை நிறுவும் வல்லமை வாய்ந்த தொல்லியல் துறை கேட்டும் தனியார் அனுமதிக்காதபடியால் பாதுகாக்க முடியவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழரின் அடையாளங்களை வேண்டுமென்றே அழிப்பதிலும் அழியவிடுவதிலும் சங்களவர்கள் காட்டும் அக்கறை நமக்குத் தெரியும். ஆனால் தமிழ்களும் இந்த அழிவுகளுக்கு துணைபேபவர்களே அதன் மதிப்பு த் தெரியாமல் கம்பியைக் களவாடிய கபோதிகளை என்ன வென்பது. கண்ணிரடும் சித்திரம் வாங்குவதில் தமழர்கள் வல்லவர்கள். எங்கள் கண்முன்னே நாங்கள் பாவித்த கலப்பை.மாட்டுவண்டிகள். உரல்உலக்கை எல்லாம் விறகுக்குப் போட்டுவிட்டு இப்போது அதுவும் வேண்டாம் என்று காஸ் அடுப்பில்சமைப்பவர்களதானே நம் இனம். இல்லையென்றால் தஞ்சைப் பெரிகோவிலைக்கட்டிய இராஜஇராஜ சோழனிற்கு சிறி கொட்டிலில் சமாதி என்ற பெயரில் ஒரு சிறிய கல்லை நட்டுவிட்டு சென்னைக் கடற்கரையைச் திராவிடச் சுடுகாடாக்கியவர்கள்தானே தமிழர்கள்.
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
கடைசியில் 2 பேர் மட்டுமே மிஞ்சும்
-
இலங்கை, வங்கதேசம் வரிசையில் நேபாளமா? - இந்தியாவின் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது?
அவரின் நடவடிக்கைகள் இதுவரை அவர் ஊழல் சம்பந்தமாக தொடர்பு பட்டதாக ஏதானும் ஆதாரங்கள் இருக்கின்றனவா. மேலும் ஊழல்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதையே தவிர்த்து வருகிறார். அவர்நினைத்தால் ஏதாவது ஒரு ஊழல்கட்சியுடன் கூட்டணியை அமைத்து பெருந்தொகைப்பணத்தையும் பெற்று குறிப்பிடத்தக்க அளவு உறுப்பினர்களை சட்டமன்றத்தில் பெற்றிருக்கலாம். எதிர்காலத்தில் ஊழல் செய்யக்கூடியவராக உங்களால் நம்பப்படும் அவர் ஏன் இப்போது கூட்டணி அதை;து பெருந்தொகைப்பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது?
-
இலங்கை, வங்கதேசம் வரிசையில் நேபாளமா? - இந்தியாவின் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது?
இந்தியாவின் அண்டைநாடுகளில் மக்கள் புரட்சியின் மூலம் ஊழல்ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டுள்ளனர். அதற்கான முதல்விதையை சிறிலங்கா துவக்கியிருக்கிறது. பெரும் ஊழல் பெருச்சாளிகள் அரசியிலில் கோலோச்சும் இந்திய அரசியலில் எப்போது மக்கள் புரட்சி வெடிக்கும். மன்னராட்சி நடத்திவரும்குடும்ப ஆட்சியாளர்கள் எப்போது துரத்தப்படுவார்கள். குறிப்பாக தமிழகத்தில் குடும்ப ஆட்சியாளர்களுக்கு எப்போது முடிவுக்கு வரும். தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்லியே குடும்ப ஆட்சிநடத்திவருபவர்களை ஆட்சியலிருந்து அகற்றுவதுமட்டுமல்ல அவர்களால் நிர்வகிக்கப்படும் முறையற்ற சொத்துக்களைப் பறிமுதல்செய்யும் காலம் எப்போது வரும்? தமிழகம் இதற்கு பிள்ளையார் சுழி போடுமா?
-
டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
பல்லக்கு ஏறுவதும் வாயாலே! பல்லுடைபடுவதும் வாயாலே! அவருடைய இனவாதப் பேச்சுக்கள் சகிக்க முடியாத ஒருவரே அவரைச் சுட்டிருக்கிறார். அமெரிக்க காவல்துறையால் சுட்டவரைப் இன்னும் பிடிக்க முடிவில்லை என்பது யாரும் அவரைக்காட்டிக் கொடுக்க விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது.
-
உலக அரங்கில் பெரியார்; ஆக்ஸ்ஃபோர்டு கருத்தரங்கமும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெரியாரின் திருவுருவப் படமும்
இது திராவிடநெறியா? தமிழ்நெறியா?இதிலிருந்தே திராவிடக் கட்டுரையாளரின் உருட்டுக்கள் தெரிய வருகிறது.
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 4
https://www.ezhunaonline.com/1949-1968-national-political-transformation-and-resistance-struggles-of-eelam-tamils-part-4/?fbclid=IwY2xjawMlZMVleHRuA2FlbQIxMABicmlkETB0MElRM2M2V0VxY3ZnUUF2AR7uFU-uioeOd-SHnslD1sRgljbk-gk2XoWrXqWLWL3xJApN6QDb5LDnaJlJkg_aem_azGvcdRkWsVOtS2coOUB3w 1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 4 September 3, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது தமிழரசுக்கட்சி தடை செய்யப்படுதலும் அதன் தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படலும் தமிழரசுக்கட்சி தடை செய்யப்பட்டதுடன் கே.எம்.பி. ராஜரட்னாவின் இயக்கமும் தடை செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பிரசார ஏடான ‘சுதந்திரன்’ பத்திரிகையும் தடை செய்யப்பட்டது. 1958 யூன் 05 ஆம் திகதி கட்சியின் தலைவர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட, அமிர்தலிங்கம், வன்னியசிங்கம், இராசவரோதயம், செ. இராசதுரை, வி.என். நவரத்தினம், வி. நவரத்தினம், செனட்டர் நடராசா என்போர் கொழும்பில் ஒரு வீட்டில் காவலில் வைக்கப்பட்டனர். மூன்று மாதங்களின் பின்னர் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் சுதந்திரன் பத்திரிகைக்கான தடை நீங்க மேலும் பல மாதங்கள் சென்றன. தடை நீங்கிய பின் செயற்குழுக் கூட்டம் 02.11.1958 இல் நடைபெற்றது. இதில், தொடர்ச்சியாக சாத்வீக வழியில் போராடுதல் என முடிவெடுக்கப்பட்டதுடன் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் யாழ் நகரத்திலுள்ள தேனீர்க் கடைகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதை ஒழிக்கும் பொருட்டு யாழ் நகரத் தேநீர்ச் சாலை உரிமையாளர்களின் மாநாடொன்றை நடாத்துவதென்றும், 24.11.58 தொடக்கம் ஒரு வாரம் தீண்டாமை ஒழிப்பு வாரமாக அனுஷ்டிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அ. அமிர்தலிங்கம், கு. வன்னியசிங்கம், சு. நடராசா என்போர் இவ்வேலைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். வன்னியசிங்கத்தின் அழைப்பின் பேரில் கூட்டப்பட்ட தேநீர்ச்சாலை உரிமையாளர்களின் மாநாட்டில் யாழ் நகர உணவு விடுதிகளில் சாதி பேதம் பார்க்கப்படுவதில்லை என ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரசாரம், சமபந்திப் போசனம் என்பனவும் மேற்கொள்ளப்பட்டது. மலைநாட்டுக் குழந்தைகளின் கல்வி உயர்கல்விக்கு வசதியற்ற மலைநாட்டுத் தமிழ்ப் பிள்ளைகள் 25 பேருக்கு உபகாரச் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்பட்டு, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். விடுதி வசதி, இலவசப் புத்தகங்கள் என்பன அவர்களுக்கு வழங்கப்பட்டன. இப்பணிகளில் கட்சியின் சார்பில் கு. வன்னியசிங்கம் ஈடுபட்டார். 1959 செப்டெம்பர் 17 இல் கு. வன்னியசிங்கம் மரணமடைந்தார். இதே மாதம் பண்டாரநாயக்காவும் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்ப நிலையால் பொதுத் தேர்தல் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியது. 1960 மார்ச் தேர்தலும் சிம்மாசனப் பிரசங்கத்தில் அரசாங்கம் தோற்கடிக்கப்படலும் 1959 புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 101 இலிருந்து 157 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் கீழ் 1960 மார்ச் இல் தேர்தல் நடைபெற்றது. அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு – கிழக்கில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 176, 492 வாக்குகளைப் பெற்று 15 தொகுதிகளில் வெற்றியீட்டியது. இதைவிட கட்சியின் ஆதரவினைப் பெற்ற இரு சுயேட்சை வேட்பாளர்கள் நிந்தவூர், பொத்துவில் தொகுதிகளில் வெற்றி பெற்றனர். ஐக்கிய தேசிய கட்சியும் 50 இடங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 46 இடங்களையும் கைப்பற்றியது. டட்லி ஆட்சியை அமைத்ததும் பாராளுமன்றத்தில் ஆதரவை நாடினார். தமிழரசுக்கட்சி இரு பெரும் கட்சிகளிடமும் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தது. அவையாவன: பண்டா – செல்வா உடன்படிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம் பிரதேச சபைகள் நிறுவப்படல் வேண்டும். அதற்கிடையில் தமிழ்ப்பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்றம் நிறுத்தப்படல் வேண்டும். பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகள் யாவும் தமிழ்மொழிக்குச் சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டும். இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தில் குறிப்பிட்ட திகதி என்பது நீக்கப்பட்டு இரண்டு தலைமுறைக்கு இந்நாட்டில் பிறந்தோர் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவதன் மூலம் ‘நாடற்ற தமிழர்’ என்ற நிலை நாளடைவில் மாற வேண்டும். குடியுரிமைப் பிரச்சினை தீரும் வரை 06 நியமனப் பிரதிநிதிகளில் 04 பேர் மலைநாட்டுத் தமிழ்மக்களின் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஸ்தாபனமான இலங்கை ஜனநாயக காங்கிரசினால் நியமிக்கப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். இதையொட்டிய விபரங்கள் ஆளும் கட்சிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படல் வேண்டும். அத்துடன் ஏற்றுக்கொண்ட விடயங்கள் சிம்மாசனப் பிரசங்கத்தில் இடம்பெற வேண்டும் எனக் கூறப்பட்டது. இக்கோரிக்கைகளை எழுத்தில் பெற்ற டட்லி அதனை நிராகரித்தார். அதேவேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட சீ.பி.டி. சில்வா, ஏ.பி. ஜெயசூரிய, மைத்திரிபால சேனநாயக்க, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க என்போர், கோரிக்கைகள் பண்டாரநாயக்காவின் கொள்கைகளுக்கு ஏற்ப இருப்பதால் அதனைத் தாம் ஏற்பதாகக் கூறினர். சிறீலங்கா சுதந்திரக் கட்சி உடனான உடன்பாட்டின்படி 1960 ஏப்ரல் 22 ஆம் திகதி சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பில் தமிழரசுக்கட்சி எதிர்த்து வாக்களித்தமையினால் அரசாங்கம் பதவி விலகியது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முற்பட்ட போது தமிழரசுக்கட்சியும் அதற்கு ஆதரவை வழங்கியது. இது தொடர்பான கடிதம் செல்வநாயகம், என்.எம். பெரேரா, எஸ்.ஏ. விக்கிரமசிங்க, சி.பி.டி. சில்வா என்போர் சார்பில் கையொப்பமிட்டு மகாதேசாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் மகாதேசாதிபதி இதனைக் கருத்திற் கொள்ளாமல் மரபை மீறி பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு ஏற்பாடு செய்தார். 1960 யூலை தேர்தலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வாக்குறுதிகளை மீறுதலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையினை சிறிமாவோ பண்டாரநாயக்கா ஏற்றார். இருப்பினும் 1960 யூலை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்கள் தம்மைத் தோற்கடித்தார்கள் என இனவாதப் பிரசாரத்தினை மேற்கொண்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஸ்ரீலங்கா சமஷ்டிக் கட்சி எனக் கேலி செய்தது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி 30 ஆசனங்களை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 75 ஆசனங்களைப் பெற்று தனியாக ஆட்சி பெறக்கூடிய நிலையை எய்தியது. தமிழரசுக் கட்சி 21 தொகுதிகளில் போட்டியிட்டு 218, 753 வாக்குகளைப் பெற்று 16 இடங்களைக் கைப்பற்றியது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியுடனான உடன்பாட்டை நிறைவேற்றப்போவதாகக் காட்டிக்கொண்டது. 1957 ஆம் ஆண்டு தனிச் சிங்களத்தில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிம்மாசனப் பிரசங்கத்தை பகிஷ்கரித்து வந்த தமிழரசுக்கட்சி இத்தடவை தமிழ் மொழிபெயர்ப்பும் உடன் வாசிக்கப்பட்டதால் பிரசங்கத்தில் கலந்துகொண்டது. எனினும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தது. தொண்டமான் நியமனப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார். உடன்பட்ட விடயங்களை அமுல்படுத்துவது பற்றி பிரதமர் தலைமையில் அமைச்சர் குழுவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே எவ்வித முன்னறிவிப்புமின்றி சிங்களத்தை நாடு முழுவதும் நீதிமன்ற மொழியாக்கும் சட்டத்தை நீதியமைச்சர் சாம்.பி.சி. பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனால் அரசிற்கும் தமிழரசுக் கட்சியிற்கும் இடையிலான உறவு சிதைவடைந்தது. சட்டமூலத்திற்கு தமிழரசுக்கட்சி பலமான எதிர்ப்பைத் தெரிவித்த போதும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதே சமயம் தமிழ்மொழி உபயோகச் சட்டத்தின் கீழ் மிகக்குறைந்த உரிமைகள் வழங்கும் சட்டத்தையும் நீதிமந்திரி சமர்ப்பித்தார். இருப்பினும் தமிழரசுக்கட்சியின் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டது. இரண்டாவது தடவையும் சிங்களத் தலைமைகள் வாக்குறுதிகளை கைவிட்டமையால் தமிழரசுக்கட்சி போராட்டத்திற்குத் தயாராகியது. 1961 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் வடக்கு – கிழக்கு உட்பட நாடு முழுவதும் தனிச் சிங்களச்சட்டம் பூரணமாக அமுல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதனால் சிங்கள உத்தியோகத்தர்களும் தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். தமிழரசுக்கட்சி நடாத்த இருந்த போராட்டத்தின் முதற்படியாக செல்வநாயகம் தலைமையில் மக்கள் ஊர்வலமாக யாழ் கச்சேரிக்குச் சென்று தமிழில் நிர்வாகம் நடாத்தப்படல் வேண்டும் என்று மனுச் சமர்ப்பித்தனர். தமிழரசுக்கட்சியின் ஏழாவது மாநில மாநாடு (1961 ஜனவரி, யாழ்ப்பாணம்) 1961 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வன்னியசிங்கம் அரங்கில் மாநாடு நடைபெற்றது. பட்டிருப்புத் தொகுதியைச் சேர்ந்த சி.மு. இராசமாணிக்கம் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து நேரடி நடவடிக்கைகளில் இறங்குவது என்றும், பெப்ரவரி 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் போராட்டத்தை ஆரம்பிப்பது என்றும், தொடர்ந்து மற்றைய மாவட்டங்களுக்கு விஸ்தரிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சத்தியாக்கிரகப் போராட்டம் (1961) சத்தியாக்கிரகத்தை ஒரு நாளைக்கு ஒரு தொகுதியின் மக்களினால் அத்தொகுதி உறுப்பினர் தலைமையில் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது (பொலிசார் கைது செய்யலாம் எனக் கருதியே இவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்டது). 1961 பெப்ரவரி 20 ஆம் திகதி செல்வநாயகம் தலைமையில் காங்கேசன்துறை தொகுதி மக்கள் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றினர். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் வெளியில் உதவிக்கு நின்றனர். முதலாம் நாள் திட்டமிட்டபடி யாழ் அரசாங்கச் செயலக வாசலில் எவரும் உள்ளே செல்லவிடாது தடுத்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் பிரதான வாயில் ஊடாக அலுவலர்கள் உள்ளே செல்வதற்கு பாதை அமைக்க முற்பட்ட போது எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களும், மக்களும் அவ்விடத்துக்குச் சென்று பாதைக்குக் குறுக்கே படுத்துக்கொண்டனர். பொலிஸார் பலாத்காரமாக சத்தியாக்கிரகிகளை தூக்கி அப்புறப்படுத்த முற்பட்டு மிருகத்தனமாகத் தூக்கி வீசினர். இதனைப் பார்த்துக்கொண்டு வெளியில் நின்ற மக்களும் நூற்றுக்கணக்கில் சத்தியாக்கிரகிகளோடு சேர்ந்தமையினால் பொலிஸாரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. அன்று பகல் 11 மணிக்கு மேல் நீதிமன்றத் திறப்புவிழா இடம்பெற்றது. அதற்குரிய ஆணையை அரசாங்கத்தின் சார்பில் அரசாங்க அதிபர் நீதியரசரிடம் கொடுப்பதற்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் அரசாங்க அதிபரின் வாசஸ்தலம் அமைந்திருந்த பழைய பூங்கா வாயிலிலும் சத்தியாக்கிரகவாசிகளினால் மறியல் போராட்டம் செய்யப்பட்டது. குண்டாந்தடிகளினால் சத்தியாக்கிரகிகளைத் தாக்கி அவர்களுக்கு ஊடாக அரசாங்க அதிபரின் வண்டியைக் கொண்டு செல்ல பொலிஸார் முற்பட்டனர். ஈ.எம்.வி. நாகநாதன் உட்பட பல சத்தியாக்கிரகிகள் காயங்களுக்கு உட்பட்டனர். 2 ஆம் நாள் சத்தியாக்கிரகம் வட்டுக்கோட்டைத் தொகுதி மக்களால் அ. அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது. முதலாம் நாள் பொலிஸாரின் அட்டூழியத்திற்குப் பலத்த கண்டனம் ஏற்பட்டதால் அவர்களின் அட்டூழியம் சற்றுக் குறைவடைந்தது. எனினும் அரச ஊழியர்களை சத்தியாக்கிரகிகளுக்கூடாக அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதற்கு அரச ஊழியர்களும் மறுப்புத் தெரிவித்தனர். 3 ஆம் நாள் வி.ஏ. கந்தையா தலைமையில் ஊர்காவற்துறை மக்களும், 4 ஆவது நாள் என். நவரத்தினம் தலைமையில் சாவகச்சேரி மக்களும் கலந்துகொண்டனர். இவ்வாறு தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்றமையினால் யாழ் மாவட்ட அரச நிர்வாகம் முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது. 1961 பெப்ரவரி 27 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சத்தியாக்கிரகம் விஸ்தரிக்கப்படல் 1961 பெப்ரவரி 27 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டமெங்கும் யாழ்ப்பாணத் தாக்குதலுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முகமாக ஹர்த்தால் நடைபெற்றது. 1961 பெப்ரவரி 28 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கச் செயலகத்தின் முன்னாலும் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. 1961 மார்ச் 4 ஆம் திகதி திருகோணமலையில் அரசாங்கச் செயலகத்தின் முன்னால் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் காயமடைந்ததுடன் மூதூரின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மார்ச் 22 ஆம் திகதி படுகாயமுற்ற ஏகாம்பரம் மரணமடைந்தார். தொடர்ந்து மன்னார், வவுனியா அரசாங்கச் செயலகங்களுக்கு முன்னாலும் சத்தியாக்கிரகம் விஸ்தரிக்கப்பட்டது. “இரண்டு மாகாணங்களிலும் அரசாங்கமே இல்லை” என பிரதமர் செனற் சபையில் கூறினார். சத்தியாக்கிரகத்தை நிறுத்துவது தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராகியது. அரசின் சார்பில் நீதி அமைச்சர் பி.எல். பெர்ணான்டோ பங்குபற்றினார். மு. திருச்செல்வத்தின் கொழும்பு இல்லத்தில் 1961 ஏப்ரல் 05 ஆம் திகதி இரவு பேச்சுவார்த்தை நடைபெற்றது. மொழியுரிமை தொடர்பாக மிகக்குறைந்த கோரிக்கைகளில் கூட உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தைத் தொடருவது எனத் தீர்மானிக்கப்பட்டது. தமிழ் அரசு தபால் சேவை போராட்டத்தின் தீவிரத்தினால் அரசாங்கம் பங்கீட்டு உணவு வழங்காது மக்களைப் பணியவைக்க முற்பட்டது. இதனால் போராட்டத்தை வேறு துறைகளிலும் விரிவாக்கும் நோக்கத்துடன், அரச தபால் சேவை சட்டத்தை மீறி, தமிழரசு தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1961 ஏப்ரல் 14 ஆம் திகதி பகல் 12 மணிக்கு செல்வநாயகம் இதனை ஆரம்பித்து வைத்தார். 10,000 பேர் வரிசையில் நின்று தமிழரசு தபால் தலைகளைப் பெற்றுக்கொண்டனர். தமிழரசு தபால் சேவையின் தபால் மா அதிபராக செனட்டர் நடராசா நியமிக்கப்பட்டார். தமிழரசு தபால் பெட்டிகள் பல இடங்களிலும் வைக்கப்பட்டது. அவசரகால, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படலும், இராணுவம் தாக்குதல்களை மேற்கொள்ளுதலும் 1961 ஏப்ரல் 17 ஆம் திகதி 12 மணிக்கு அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட அதேவேளை 48 மணிநேர ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. கச்சேரியின் முன் அமைதியாக இருந்த சத்தியாக்கிரகிகள் இராணுவத்தினால் தாக்கப்பட்டனர். பழனியப்பன் என்ற இளைஞரினது தொடை துளைக்கப்பட, அவர் மயக்க நிலையை எய்தினார். பெண் சத்தியாக்கிரகிகள் இராணுவத்தினால் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு பல மைல்களுக்கு அப்பால் தனிமையான இடத்தில் விடப்பட்டனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் – இராணுவ முகாம்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். வடக்கு – கிழக்கு இராணுவ ஆட்சியின் கீழ் விடப்பட்டது. திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் உட்பட தலைவர்களும் பிரதான தொண்டர்களுமாக 74 பேர் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். தமிழரசுக்கட்சி, சுதந்திரன் பத்திரிகை என்பன தடை செய்யப்பட்டதோடு சுதந்திரன் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பத்திரிகைத் தணிக்கை அமுலுக்கு வந்தது. இரகசிய ஏடுகள் பிரசுரமாதல் ‘சத்தியாக்கிரக’ என்ற ஆங்கில ஏடு மாதம் இருமுறை தட்டச்சில் வெளியாகியது. ‘தமிழன் கண்ணீர்’ என்ற தமிழ் ஏடும் வெளியாகியது. கோவில் பிரார்த்தனைகளை கட்சி ஒழுங்கு செய்தலும், எஞ்சியிருந்த தலைவர்கள் அதில் பேசுதலும் (கூட்டம் நடாத்துவது தடை செய்யப்பட்டிருந்தமையால்) இடம்பெற்றது. சத்தியாக்கிரகிகள் தாக்குதல் தொடர்பில் மலையகத்தில் எழுச்சி சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது தொண்டமான் நேரடியாகச் சென்று உற்சாகப்படுத்தினார். வவுனியா, மன்னார் பகுதிகளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் நேரடியாகவே பங்குபற்றினர். வவுனியா இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதி நடேசபிள்ளையும் தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார். சத்தியாக்கிரகம் நசுக்கப்பட்டதற்கு முதல் நாள், 1961 ஏப்ரல் 24 ஆம் திகதி தோட்டத்தொழிலை அத்தியாவசிய சேவையாக்கும் சட்டவிதிகளை அரசாங்கம் பிரகடனம் செய்தது. எனினும் 1961 ஏப்ரல் 25 ஆம் திகதி 5 லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். அன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமிழரசுக் கட்சியின் நான்கு அம்சக் கோரிக்கைகளை அரசுக்குச் சமர்ப்பித்தது. இதேவேளை தோட்டப்பகுதிக்கும் இராணுவம் அனுப்பப்பட்டது. 1961 ஐப்பசியில் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கட்சியின் தடை நீங்க மேலும் சில மாதங்கள் சென்றன. மீண்டும் சிங்கள ‘ஸ்ரீ’ பஸ்வண்டி 1958 ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் தமிழ்ப் பிரதேசத்தில் ஓடவிடப்படவில்லை. ஆனாலும் 1961 ஐப்பசியில் சிங்கள ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டது. பஸ்வண்டி வந்து சேர்ந்த மறுநாளே இளைஞர்கள் சிலர் பஸ் நிலையத்திற்குள் நுழைந்து காவலாளிகளையும் சுட்டுக்காயப்படுத்தி பஸ் வண்டியையும் தீக்கிரையாக்கினர். அடுத்த நாள் எஞ்சிய ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் மீளப் பெறப்பட்டன. தமிழரசுக் கட்சியின் 8 ஆவது மாநில மாநாடு – மன்னார் (1961 ஓகஸ்ட் 31, செப்டெம்பர் 1, 2) தமிழரசுக் கட்சியின் 8 ஆவது மாநில மாநாடானது மன்னாரில் 1961 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31 மற்றும் செப்டெம்பர் மாதம் 1, 2 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. சி.மு. இராசமாணிக்கம் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். 1963 ஏப்ரல் 17 ஆம் திகதிக்குப் பிந்தாமல் போராட்டத்தை ஆரம்பித்தனர். தோட்டத்தொழிலாளர்களுக்கு என கட்சியின் சார்பில் தொழிற்சங்கம் ஒன்றை அமைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்மூலம் இரண்டு சமூகங்களுக்கிடையேயும் அமைப்பு ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்தனர். இதன்படி ‘இலங்கைத் தொழிலாளர் கழகம்’ ஹட்டனில் 22.12.1962 (சனி) அன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக அ. தங்கதுரை தெரிவு செய்யப்பட்டார். இந்தியாவின் மீதான சீனாவின் படையெடுப்பில் இந்தியாவுக்கு ஆதரவு 1961 இறுதியில் சீனா இந்தியாவின் மீது படையெடுத்தது. இவ்விடயத்தில் சீனாவைக் கண்டித்து தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு 18.11.1961 இல் தீர்மானம் நிறைவேற்றியது. தீர்மானத்தின் விபரம்: சர்வதேசக் கண்ணியத்தையும் கௌரவமான நடத்தையை மீறியும் உலகத்திற்குத் தானும் பிரகடனப்படுத்திய பஞ்சசீலக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டும் கம்யூனிஸ்ட் சீனா, இந்தியா மீது நடத்தும் ஆக்கிரமிப்பை இலங்கைத் தமிழரசுக்கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் கம்யூனிஸ்ட் சீன ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆசியாக்கண்டத்தில் ஜனநாயகம் நிலைபெறவும், தனது நாட்டையும் தேசிய கௌரவத்தையும் காப்பாற்றவும் நடாத்தப்படும் இப்போரில், இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் தனது ஆதரவை அளிப்பதுடன் இந்திய மக்களுடன் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கிருக்கும் ஐக்கியத்தையும் காட்ட, கட்சி விரும்புகின்றது. ஏகாதிபத்தியச் சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் தனது சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடும் இந்தியாவிற்கு ஆதரவு நல்க வேண்டுமென்றும் இலங்கை அரசாங்கத்தை இக்கட்சி கேட்டுக்கொள்கிறது. தனது பாதுகாப்பிற்குப் போதிய ஆட்பலம் இந்தியாவிடம் இருப்பினும், மாண்புமிக்க கொள்கைகளுக்காகவே இந்தியா போரிடுவதால், மனித சுதந்திரத்திற்காக நடத்தப்படும் இப் புனிதப்போரில் ஒரு சிறிதளவேனும் பங்கெடுக்க விரும்புவதனால், இப்போரில் பங்கெடுப்பதற்காக இலங்கைவாழ் தமிழ்பேசும் இளைஞர்களைத் தொண்டர்களாகச் சேரும்படி இக்கட்சி அழைக்கின்றது. மந்திரிமார் வருகைக்கு மீண்டும் எதிர்ப்பு தமிழரசுக்கட்சியை மீண்டும் போராட்டத்திற்கு தயார்ப்படுத்தும் வகையில், 24.02.1963 இல் கட்சிச் செயற்குழு மந்திரிகள், அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு – கிழக்கிற்கு வரும்போது, வருகையை எதிர்ப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. அவர்கள் வடக்கு – கிழக்கிற்கு கோலாகல விஜயங்கள் செய்யின் கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் அமைச்சர் ரி.பி. இலங்கரத்தின வருகைதந்த போது கறுப்புக்கொடி காட்டினர். நூற்றுக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பருத்தித்துறை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத் திறப்புவிழாவிலும் அணிவகுத்து நின்று கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர். இவ்வார்ப்பாட்டத்தின் போது ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் வி.ஏ. கந்தையா உட்பட பல ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டனர். தாக்குதலினால் பாதிக்கப்பட்ட வி.ஏ. கந்தையா 4.06.1963 இல் மரணமடைந்தார். தொடர்ந்து வ. நவரத்தினம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ‘எல்லாம் தமிழ் இயக்கம்’ உருவாதல் சிங்களத் திணிப்பை எதிர்ப்பதற்கும், தமிழ் மக்களை அரசுடனான தம் கருமங்களைத் தமிழில் ஆற்றத் தூண்டுவதற்குமாக எல்லாம் தமிழ் இயக்கத்தை 1963 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 8 ஆம் திகதியில் உருவாக்கினர். இதன்படி தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள தபால் நிலையங்கள், வேறு அரசாங்க அலுவலகங்கள் ஆகியவற்றின் முன் போராட்டக்காரர்கள் விண்ணப்பங்கள், தந்திகள், முகவரிகள் என்பவற்றை தமிழில் எழுதுமாறு தூண்டினர். தேவையானவர்களுக்கு தாமே எழுதிக்கொடுத்தனர். அரசாங்கம் 1964 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி சத்தியாக்கிரகத்தால் கைவிடப்பட்ட தனிச்சிங்கள சட்டத்தை வடக்கு – கிழக்கில் அமுல்படுத்தப்போவதாக அறிவித்தது. தமிழரசுக் கட்சி முழுச் சக்தியையும் திரட்டி இதனை எதிர்ப்பது என 30.6.1963 இல் கொழும்பில் தீர்மானித்தது. அரசாங்கம் தீர்மானித்தபடியே சிங்கள அரசாங்க ஊழியர்களை வடக்குக்கு அனுப்ப முயற்சி செய்யப்பட்டது. அதேவேளை தமிழ்ப் பாடசாலைகளில் சிங்களத்தைத் திணிக்கும் நோக்கில் 2000 சிங்கள ஆசிரியர்களையும் வடக்கு – கிழக்கிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி இதனைப் பகிஷ்கரிப்பது என்றும் இப்போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்களை இணைப்பது என்றும் தீர்மானித்தது. தமிழரசுக் கட்சியின் போராட்ட அச்சத்தினால் சிங்கள ஊழியர்கள், ஆசிரியர்கள் வடக்கு – கிழக்குக்குச் செல்ல மறுத்தனர். இதனையொட்டி, அரசு 01.01.1964 அன்று அறிவித்தமைக்கு எதிரான மாபெரும் கண்டன ஊர்வலங்களை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், வவுனியா என்பவற்றில் நடாத்தியது. அவ்வவ் மாவட்டக் கச்சேரிகளுக்கு முன்னால் தனிச்சிங்களச் சட்டப்பிரதிகளையும் எரித்தது. பாதயாத்திரை சாதி பேதத்தை ஒழிக்கவும் கட்சியின் இலட்சியங்களை மக்கள் முன் பிரசாரம் செய்யவும் என பாதயாத்திரை நடாத்தப்பட்டது. செல்வநாயகம் தலைமையில் காங்கேசன்துறை தொகுதியிலிருந்து பாதயாத்திரை ஆரம்பமானது. பலவாரங்களாக நடைபெற்ற பாதயாத்திரையின் போது தங்கிநிற்கின்ற இடங்களில் தீண்டாமை ஒழிப்பின் அவசியம் பற்றியும், தமிழ் மக்களின் அரசியல் நிலை பற்றியும் கருத்தரங்குகளை நடாத்தினர். அரசு மீண்டும் சமரசப்பேச்சுக்கு வருதல் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் தலைமையில் தொழிற்சங்கங்கள் 21 கோரிக்கைகளை சமர்ப்பித்து பெரிய போராட்டத்துக்கு ஆயத்தங்களைச் செய்தன. இந்நேரம் தமிழரசுக்கட்சியின் ஆதரவை அரசாங்கம் வேண்டி பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. சிறீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் பிரதான அமைப்பான லங்கா சமசமாஜக் கட்சியை தன்னுடன் இணைப்பதில் வெற்றி கண்டது. இதன்பின்னர் தொழிற்சங்கப் போராட்டமும் நின்றுபோனது. தமிழரசுக் கட்சியுடனான பேச்சுவார்த்தையும் நின்றுபோனது. தமிழரசுக் கட்சியின் ஒன்பதாவது மாநில மாநாடு தமிழரசுக் கட்சியின் ஒன்பதாவது மாநில மாநாடு 1964 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 21, 22, 23 ஆம் திகதிகளில் திருகோணமலை இடம்பெற்றது. இம்மாநாட்டில் செல்வநாயகம் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இதன்போது தொடர் போராட்டம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தம் 1964 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 30 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் சார்பில் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும், இந்தியாவின் சார்பில் அப்போதைய இந்தியப் பிரதமர் லாவ்பகதூர் சாஸ்திரியும் கையொப்பமிட்டனர். இலங்கையில் வாழ்ந்த மலையகத் தமிழர்கள் 975,000 பேரில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதென்றும் 300,000 பேரை இலங்கை ஏற்றுக்கொள்வதென்றும் முடிவிற்கு வந்தனர். மீதி 15,000 பேர் பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் உடன்பாட்டிற்கு வந்தனர். 1967 இல் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டத்தின் மூலம் இது நடைமுறைக்கு வந்தது. திருப்பி அனுப்பப்படும் செயன்முறை 15 வருட காலத்திற்குள் இடம்பெற வேண்டும் எனத் தீமானிக்கப்பட்டது. மலையக மக்கள் மத்தியில் பலம் வாய்ந்த அமைப்பாக விளங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் எந்தவிதக் கலந்தாலோசனையும் மேற்கொள்ளாமலே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் தலைவர் தொண்டமான் நியமன உறுப்பினராக இருந்தபோதும் அவருடன் எந்தக் கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது விட்டனர். தமிழரசுக் கட்சி இதனைக் காரசாரமாக எதிர்த்தது. இந்தியா தன்னுடைய நலன்களுக்காக மலையக மக்களை விலையாகக் கொடுத்த நிகழ்வாக இது இருந்தது. மலையக மக்களின் அரசியல் பலம் பலவீனமடைந்தது. இது பற்றி மனோகணேசன் கூறும் போது “இந்தியா முழு மலையக மக்களையும் இந்தியாவிற்கு அழைத்திருக்க வேண்டும் அல்லது முழுப்பேரையும் இலங்கையில் விட்டிருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். அரசாங்கம் கவிழ்தல் அரசாங்கம் ஏரிக்கரை பத்திரிகையை தேசியமயமாக்கும் மசோதாவைக் கொண்டுவந்தது. அரசாங்கக் கட்சியின் சபை முதல்வர் சி.பி.டி. சில்வா தலைமையில் பல உறுப்பினர்கள் இதனை எதிர்த்து எதிர்க்கட்சிக்கு மாறினர். இந்நிலையில் அமைச்சர்கள் பலர் தமிழரசுக்கட்சியின் உதவியை நாடினர். ஆனால் முன்னைய அனுபவத்தினால் அதனை கட்சி நிராகரித்தது. மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது தமிழரசுக்கட்சி எதிர்த்து வாக்களித்தது. இதனால் அரசாங்கம் கவிழ்ந்தது. 1965 மார்ச் பொதுத்தேர்தல் இத்தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 217,986 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களைக் கைப்பற்றினர். ஐக்கிய தேசியக் கட்சி 66 இடங்களையும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி 41 இடங்களையும் கைப்பற்றியது. ஐக்கிய தேசிய கட்சியினர் தமிழரசுக்கட்சியின் ஆதரவை நாடினர். இதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி அரசில் சேர்ந்தது. டட்லி – செல்வா ஒப்பந்தம் 1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி டட்லி – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழ்மொழியில் நிர்வாகம் நடத்துவதற்கும், தமிழிலேயே பதிவதற்கும், தமிழ் பேசும் மக்கள் நாடு முழுவதிலும் அரச கருமங்கள் விடயத்தில் தமிழில் தொடர்பு கொள்வதற்கும், வடக்கு – கிழக்கிலுள்ள நீதிமன்ற அலுவல்களைத் தமிழில் நடாத்தவும் ஏற்றவகையில் தமிழ்மொழி உபயோகச் சட்டத்தைக் கொண்டு வந்தனர். அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையில் மாவட்ட சபைகளை உருவாக்குதல், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படும் போது; முதலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள காணியற்றவர்களுக்கு வழங்குதல், இரண்டாவதாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கு வழங்குதல், மூன்றாவதாக இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ்பேசும் இனத்தவர்களுக்கு முதலிடம் கொடுத்த பின்னர் ஏனையவர்களுக்கு வழங்குதல் என்பன ஒப்பந்தத்தில் உள்ளடங்கியிருந்தன. இவ் ஒப்பந்தத்தின் பின்னர் தமிழரசுக்கட்சி அரசாங்கத்தில் சேந்தது. இதில் திரு.மு. திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகப் பொறுப்பேற்றார். தமிழரசுக்கட்சியின் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன. அதன் வரலாற்றுப் பாத்திரமும் முடிவு பெற்றது. தமிழரசுக்கட்சி அரசில் சேர்ந்ததினால் அரச ஊழியர்களில் பழையவர்களுக்கு சிங்களத் தேர்ச்சியின்றி, சம்பள உயர்வு, பதவி உயர்வு என்பன வழங்கப்பட்டன. புதிய ஊழியரின் சிங்களத் தேர்ச்சி 8 ஆம் தரமாக்கப்பட்டது. ஆனால் திறைசேரி அதிகாரிகள் 9 ஆம் தரச் சோதனையை 8 ஆம் தரம் என நடத்திச் சலுகையை முறியடித்தனர். நிதியமைச்சர் வன்னி நாயக்கா, பிரதமரோடு தமிழரசுக் கட்சி நடாத்திய மாநாட்டில் இதனை ஒத்துக்கொண்டார். தமிழ்மொழி உபயோகச் சட்டவிதிகள் மசோதா – 1966 ஜனவரி 08 1958 இல் பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட தமிழ்மொழி உபயோகச்சட்டத்தின் கீழ் அதன் இயங்கு விதிகள் தொடர்பான சட்ட மூலம் தமிழரசுக்கட்சியின் நிர்ப்பந்தத்தின் கீழ் 1966 ஜனவரி 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன்படி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழையும் நிர்வாக மொழியாகவும், நாடு முழுவதிலும் தமிழ்பேசும் மக்கள் தமிழில் அரசாங்கத்தோடு கருமமாற்றவும் ஒழுங்கு செய்யப்பட்டது. இதனை சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இடதுசாரிக் கட்சிகள் உட்பட சிங்கள எதிர்க்கட்சிகள் யாவும் காரசாரமாக எதிர்த்தன. இச்சட்டவிதிகள் மூலச்சட்டத்தின் எல்லையை மீறியுள்ளன எனக் கூறப்பட்டது. அரச தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு எதிர்க்கட்சிகள், கொழும்பு விகாரமாதேவி பூங்காவிலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் நடத்தியது. ஊர்வலம் கட்டுக்கடங்காமல் சென்றதால் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ரத்தினசாரதேரோ என்ற பௌத்தபிக்கு சூடுபட்டு மரணமடைந்தார். எனினும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் பெரிதாகச் செயற்படவில்லை. இடதுசாரிக் கட்சிகள் இதன்மூலம் தமது இனவாதப் போக்கினை வெளிக்காட்டின. மாவட்ட சபை தொடர்பான வெள்ளை அறிக்கை தமிழ்ப் பிரதேசங்களுக்கு ஓரளவு அதிகாரம் பகிரக்கூடிய சட்டமூலத்திற்காக வெள்ளை அறிக்கை மு. திருச்செல்வத்தினால் தயாரிக்கப்பட்டது. பல மாதங்கள் பிரதமரினாலும் அமைச்சர்களினாலும் கட்சித் தலைவர்களினாலும் ஆராயப்பட்ட வெள்ளை அறிக்கை பராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள், பௌத்த பிக்குகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வெதிர்ப்புக்கு அஞ்சிய பிரதமர் டட்லி சேனநாயக்க “மாவட்ட சபை மசோதவை தாம் பராளுமன்றத்தில் நிறைவேற்ற மாட்டோம்” எனக் கூறினார். தமிழரசுக்கட்சியின் பத்தாவது மாநில மாநாடு (1966 யூன் 23, 24, 25 – கல்முனை) தமிழரசுக் கட்சியின் 10 ஆவது மாநில மாநாடானது 1966 ஆம் ஆண்டு யூன் மாதம் 23, 24, 25 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் தலைவராக ஈ.எம்.வி. நாகநாதன் தெரிவு செய்யப்பட்டார். முதன்முறையாக பிரதமர் டட்லி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். “இலகுவில் வாக்குக்கொடுக்க மாட்டேன், கொடுத்தால் நிறைவேற்றத் தவறமாட்டேன்” என டட்லி மாநாட்டில் உறுதிமொழி அளித்தார். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டத்தை அரசாங்கம் இயற்ற முற்பட்ட போது தமிழரசுக் கட்சியினதும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசினதும் முயற்சியினால் ஆட்சேபத்திற்குரிய அம்சங்கள் நீக்கப்பட்டது. விருப்பத்திற்கு மாறாக யாரையும் இந்தியப் பிரஜையாகப் பதிவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியா திரும்பியோரின் வீதத்திற்கே இலங்கைப் பிரஜையாகப் பதிவு செய்யும் திட்டம், இலங்கைப் பிரஜைகளாகப் பதிவு செய்தோரை தனிவாக்காளர் இடாப்பில் அடக்கும் அம்சம் என்பனவே நீக்கப்பட்டன. ஆட்களைப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்குவதற்கான சட்டமும் மாற்றப்பட்டது. பிரஜை, நாடற்றவர் என்ற பேதமின்றி இந்நாட்டில் சட்டபூர்வமாக வாழும் 18 வயதிற்கு மேற்பட்டோர் எல்லோரையும் பதிந்து அடையாள அட்டை வழங்குவதற்கு சட்டமியற்றப்பட்டது. இச்சட்டங்களை தமிழரசுக்கட்சியின் ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர்கள் வ. நவரத்தினம் ஏற்றுக்கொள்ளவில்லை; எதிர்த்து வாக்களித்தார். இதனால் 24.04.1968 இல் கூடிய கட்சியின் பொதுச்சபை வ. நவரத்தினம் அவர்களைக் கட்சியிலிருந்து ஏகமனதாக வெளியேற்றியது. இதன்பின்னர் வ. நவரத்தினம் ‘தமிழர் சுயாட்சிக் கழகம்’ எனும் புதிய கட்சியை உருவாக்கினார். மு. திருச்செல்வம் அமைச்சர் பதவியைத் துறத்தல் திருகோணமலை கோணேசர் கோவிலைச் சார்ந்த பிரதேசத்தை புனித பிரதேசமாக்க மு. திருச்செல்வம் முயற்சித்தார். இதற்காக தமிழர், சிங்களவர், பறங்கியர் என மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. சேருவல பௌத்த ஆலயத் தலைமைப் பிக்கு இதை எதிர்த்தார். பிரதமர் டட்லி சேனநாயக்க மு. திருச்செல்வத்துடன் கலந்தாலோசிக்கமாலே குழுவை நிறுத்தி வைத்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1968 புரட்டாதி மாதம் 16 ஆம் திகதி மு. திருச்செல்வம் அமைச்சர் பதவியை இராஜனாமாச் செய்தார். இதன் பின்னரும் தமிழரசுக் கட்சி சில மாதங்கள் அரசாங்கத்தில் நீடித்தது. 1968 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகியது.
-
ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?
சீனா சிறிலங்காவின் நண்பன்..அதேவேளை இந்தியாவும் ரஷ்யாவும் சிறிலங்காவின் நண்பர்களே. இந்தக் கூட்டில் சிறிலங்காவும் விரவில்இணைய வேண்டும்.மறு பக்கம் இந்தக் கூட்டிணைவு க்கு பயந்து ட்ரம் ப் வரிகளைக் குறைக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். இந்தச் செய்தி இந்தியாவுக்கு மிக அண்மையில் ஒரு இஸ்ரேலைக் கட்டி எழுப்ப வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு வந்திருக்கிறது.அந்த இஸ்ரேலுக்குரிய அனைத்து தகமைகளும்.கேந்திர முக்கியத்துவம் வாயந்த இடங்களும் இருக்கின்ற பிரதேசம் தமிழர்தாயகமே.
-
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்!
- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
ரணிலுக்கு இருக்கும் வருத்தங்கள் எவ்வளவு காலமாக இருக்கிறது?பல ஆண்டுகளாக இருக்கிறதா?அல்லது கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னரா? பல ஆண்டுகளுக்கு முன்னர் என்றால் எப்படி ஜனாதிபதியாகப் பதவியில் இருந்தார்?மீண்டும் எப்படி ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டார்.இந்த வருத்தங்களுடன் ரணிலை நாளை ஜனாதிபதியாக பதவியேற்கச் சொன்னால் ரணில் ஏற்றுக் கொள்வாரா?அல்லதுசகவீனத்தைக் காரணம் காட்டி மறுப்பாரா?மேலும் சிறைச்சாலையில் இருக்கும் மருத்துவ சிகிச்சையெப் பெறுவதற்கு என்ன தயக்கம்? - முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
Important Information
By using this site, you agree to our Terms of Use.