Everything posted by nochchi
-
தமிழரசுக் கட்சிக்குள் வலுக்கும் குழப்பங்கள்! மாவையை கடுமையாக விமர்சிக்கும் சாணக்கியன்
தலைமைப்பதவியை இலக்குவைத்துப் கட்சியின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் 'கோல்' போடாமல் விட்டால் சரி. அத்தோடு ஏலவே சிறிதரன் அவர்களைத் தலைவராக முன்மொழிந்தபோது இவர் என்ன செய்துகொண்டிருந்தார். அந்தத் தெரிவின் முடிவு என்ன? அவரை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற விளத்தத்தையும் இவர் கூறாதிருப்பதேன்? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
உங்கள் பெருந்தன்மைக்கும், மனதுக்கும் நன்றி ஐயா.
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
சரி, கேட்டதை அப்பிடியே நெடுந்தீவுக்கும் சேர்த்துப் போடச்சொன்னாப் புண்ணியமாப்போகுமெல்லே...
-
'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி
ஐக்கியத்துள் இனங்களின் தனித்துவத்தை அழித்துவரும் உலகினது வாய்ப்பாட்டைக் கையிலெடுத்து குர்துகளின் அரசியல் விடுதலையை மறுதலிக்கும் நிலைப்பாடாகவே தோன்றுகிறது. ஆனால், சிரியா கடந்து செல்லவேண்டியவை கடினமான திசைநோக்கியாதாகவே இருக்கும்.
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
தலைவர் தனது பதவிவிலகலை மீளப்பெற்றதால் தலைவரில்லையென்பது பொருத்தமா?
-
எக்னெலிகொடவின் கடத்தல் குறித்து விசாரணைகளை நடத்துமாறு எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வலியுறுத்தல் !
எக்னெலிகொடவின் கடத்தல் குறித்து விசாரணைகளை நடத்துமாறு எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வலியுறுத்தல் ! Posted on December 14, 2024 by தென்னவள் 8 0 ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்த விதத்திலும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (ரிப்போட்டர்ஸ் வித்தௌட் போர்டர்ஸ்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. ‘லங்கா ஈ-நியூஸ்’ என்ற இணைய செய்தித்தளத்தில் கேலிச்சித்திர ஓவியராகவும், (கார்ட்டூனிஸ்ட்) அரசியல் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றிய பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி ஹோமாகம நகரில் கடத்திச்செல்லப்பட்டார். அவரது கடத்தலுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட இராணுவ புலனாய்வு சேவை அதிகாரிகள் 9 பேர் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகள் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் தடைப்பட்டிருந்த நிலையில், அவ்விசாரணைகள் கடந்த 6 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் இதுபற்றிக் கருத்து வெளியிட்டிருக்கும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு, கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியாகத் தெரிவான அநுரகுமார திஸாநாயக்க, அரசியல் நோக்கங்களுக்காகப் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளை உரியவாறு நிறைவுசெய்யப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படும் என வாக்குறுதியளித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. ‘பிரகீத் எக்னெலிகொடவின் வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பில் உண்மையை அறிந்துகொள்வதற்காக அவரது குடும்பத்தினர் 14 ஆண்டுகளாகத் தவிப்புடன் காத்திருக்கிறார்கள். எனவே இச்சம்பவம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் முன்னெடுக்கப்படவேண்டும் என உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்துகின்றோம். இச்சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் எவரெனினும், அவர்கள் கொண்டிருக்கக்கூடிய அரசியல் மற்றும் இராணுவத்தொடர்புகளுக்கு அப்பால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதுமாத்திரமன்றி சாட்சியாளர்கள் மற்றும் விசாரணையாளர்களைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்’ என்றும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. https://www.kuriyeedu.com/?p=642470
-
அரசியலமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒருதரப்பாக பயணிப்பது அவசியம் என்கிறார் சத்தியலிங்கம்
க.பொ.வின் முயற்சி கண்ணுக்கை குத்துதுபோலும். அதனால், பழயை நட்பைப் புதுப்பிக்கிறாராம். தாங்கள் முந்தியே கூட்டு. இதில இவரென்ன புதுசா என்பதுதான் அவரது வியாக்கியானமாக இருக்கலாம். நாங்கள் இழவுவீட்டிலும் பிணமாக இருக்க வேண்டும் என்ற மனநிலையுடையோராக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
திருவள்ளுவருடைய சிலை 07.12.24 அன்று திறந்து வைக்கப்பட்ட விழா - டோட்முண்ட் , யேர்மனி
டோட்முண்ட் நகரத்திலே பெரும்பாலும் தமிழரது கடைத்தொகுதிகள் அமைந்துள்ள Marten சுரங்கரயில் தரிப்பிடத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவருடைய சிலை திரைநீக்கம் செய்யப்பட்ட விழா தொடர்பான காணொளி. நன்றி-யூரூப்
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
அநுரவும் தேர்தல் ஆணையாளரும் எடுக்கவேண்டிய முடிவென்றல்லவா நான் நினைத்தேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
தமிழ்சிறியவர்களது கருத்தே இதற்கான பதிலாகப் பொருந்திப்போகிறது. உலகவல்லாதிக்க சக்திகள் தமது இருப்பிற்காக மக்களைக்கொன்றொழித்து, வளங்களை சுரண்டிப்பெருத்துவருகின்றன. அணுஆயுதம் வைத்திருப்பதாகக் கூறி ஈராக்கினுள் புகுந்து எதைச்செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். குர்துகளைக் கொன்றதாக சதாமைத் தூக்கில்போட்ட இவர்களால், மகிந்தவையோ மற்றும் நெத்ன்யாகுவையோ அப்படிச் செய்ய முடியுமா? சீனாவில் சிறுபான்மைகள் நசுக்கப்படுவதாகக் கூப்பாடு. ஏன் காஸா அழிவைத் தடுக்காது பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பல தொடர்கள் உள்ளன. இதுவரை ஆதிக்கசக்திகளுக்குப் பயங்கரவாதிகளாகத் தெரிந்தோரை வைத்து மற்றொரு ஆதிக்கசக்தியை வீழ்த்தியுள்ளனர். இதிலே நாடு எப்படியாக வேண்டும் என்பது மக்களின் முடிவு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
தமிழர்களது பலத்தை அணுஅணுவாகச் சிதைக்காது ஓயாரென்று சொல்கிறீர்கள் என்று எடுக்கலாமா?
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
உலக வல்லாதிக்கங்கள் தாம் நினைத்தவாறு நீண்டகாலம் ஆடமுடியாதென்றும் கூறலாம் அல்லவா?
-
தமிழ்த்திறன் மாநிலப் போட்டி- 2024
தமிழ்த்திறன் மாநிலப் போட்டி- 2024 Posted on December 7, 2024 by சமர்வீரன் 32 0 https://www.kuriyeedu.com/?p=640869
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
இதனை எதிர்கொள்ளக்கூடியவாறு தமிழ்த்தலைமைகள் இல்லாதது பெருந்துயரம். நாடாளுமன்றக் கொள்கைவிளக்க உரையில் அநுர தமிழரது பிரச்சினைகுறித்துத் தொட்டுக்கூடப்பார்க்கவில்லை. க.பொ.வைத்தவிர அனைவரும் சபையில் பாராட்டுத்தெரிவித்துவிட்டு வந்துள்ளார்கள். அங்கே வைத்து எமது பிரச்சினைகளை விவாதித்தால் சிங்கள மக்களையும் சென்றடையும் என்றுகூட யோசிக்கவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
உண்மையான நிலை இதுதான். ஆனால், சிங்களமக்கள் எதிர்காவிடினும் ரில்வின் மற்றும் பிக்குகளை வைத்துச் சிங்களக் கடும்போக்குவாதிகளையும், சிங்களவரையும் இணைத்துப் போராட வைத்து ஏதோ பெரிதாக அதிகாரப்பகிர்வு தமிழருக்குக் கொடுப்பதாக உலகுக்குக்காட்டித் தமிழருக்கு நாமம் போடும் இலக்கை அடையக்கூடும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
குமாரசாமி ஐயா நல்லது, நாம் கடந்த 100 ஆண்டுகளாகச் சிங்கள ஆதிக்கத்தின் கீழ் இருந்துவருகின்றோம். ஈழத்தீவிலே சீனர்களது வருகை நீண்டது. ஆனால், 1960இன் பின் சிறிமாவோ அவர்களது ஆட்சிக்காலத்திலேதான் அரசியல் மட்டத்தில் நெருங்கினார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால், இந்தியா வல்லரசு என்று கூவ வெளிக்கிடவும், பொருண்மியத்தில் வளர்நிலையில் இருந்த சீனா முதலில் சந்தைப்பொருண்மியத்தில் தொடங்கி இன்று பொருண்மிய ஆதிக்கமாக வளர்ந்துள்ளதைக் காண்கின்றோம். இங்கே இந்தியா மிகமிக அருகில்; தமிழனத்தின் சுயநிர்ணயஉரிமைக்கு மிகப்பெரும் தடைக்கல்லாகவும் இருக்கிறது. திபெத்தை ஆதரிக்கும் இந்தியா எம் அரசியல் உரித்தை எதிர்க்கிறது. அதற்காகத் தமிழீழத்தைச் சீனா ஏற்றதாகக்கூறவில்லை. எப்படிக் கருணாநிதியைச் சோனியா சத்தம்போடாமற் தமிழகத்தை வெச்சிருக்க வைத்து இனஅழிப்புக்கு துணைபோனாவோளூ அதேபோல் 13ஐத் தூக்கேக்க நீங்களும் சத்தம்போடக்கூடாது என்று அரசியல்மொழியிலை சொல்லப்போறார். சீனா ஓர் நேர்மையான எதிர்நிலையென்றால், இந்தியா சூழ்ச்சித்தனமான ஆதரவுநிலை. சிங்களத்தின் கொண்டையைப் பிடிக்க தமிழரைக் கொக்கியாகப் பார்க்கிறது. ஆனால், அதனைக் கடப்பதே ஜனதா விமுக்தி பெரமுனவினது (JVP)மறுவடிவான ஜாதிய ஜன பலவேகயவினது(NPP) இன்றைய நிலைப்பாடு என்றே எண்ணுகின்றேன். அதன்பின்; யாழுறவுகள் சுட்டுவதுபோல் எல்லோரும் இலங்கையர் என்று தமிழரைச் சிங்களத்துள் கரைத்துவிடுதல். தமிழினம் தமது நட்புச்சக்திகளை இனங்காண்பது அல்லது நட்புச்சக்திகளை கண்டடைவது என்ற அரசியல் தொலைநோக்குச் செயற்பாடுகள் மிகமிக அவசியமானது. ஆனால், புலம்பெயர் தேசத்திலும்(கனடா தவிர்த்து)ஈழத்திலும் அதற்கான அறிகுறிகளையே காணவில்லை என்பது பெரும் பலவீனமாகும். சிலவேளை கடன்கொடுத்த சக்திகளான இந்தியா, சீனா மற்றும் மேற்குலகக் கூட்டு ஈழத்தீவை மூன்றாகப் பிரித்தெடுத்தாலும், எடுக்கலாம். ஆனால் அவர்கள் இப்படிப் பிரித்தால் நல்லது. யாழ்ப்பாண அரசு, கண்டியரசு மற்றும் கோட்டையரசு என்றால் சிறப்பு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
செல்வம் மற்றும் சுரேஸ் இவர்கள் இருவரையும் இயக்குவது இந்தியாவின் RAW என்று அழைக்கப்படும் வெளியகப் புலனாய்வு அமைப்பாகும். எனவே இங்கு நடைபெறும் அனைத்து உரையாடல்களும் அப்படியே கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள். எனவே கூடியவரை வெளிப்படைத்தன்மையோடு நடந்து ஊடகங்கள்வரை சென்றடைவது ஒன்றுபட முனையும் தமிழ்த் தரபு;புகளுக்குச் சாதகாமாக அமையும். இவர்கள் நாளை இந்தியாவின் சொல்கேட்டு குழப்பிவிடக்குகூடிய சூழலையும் கருத்திலே எடுக்க வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
ஜனதா விமுக்தி பெரமுனவினது (JVP)மறுவடிவான ஜாதிய ஜன பலவேகயவினது(NPP) அரசியல் நிகழ் நிரலில் அவர்கள் முதலில் கையிலெடுப்பது 13ஆவது நீக்கமாகவே இருக்கும்.(இது ஏலவே கள உறவுகளால் யாழில் குறிப்பிடப்பட்டது) அவர்கள் அதனை ரில்வின் சில்வாவூடாக நூல்விட்டுப்பார்க்க, எங்கள் இந்திய முகவர்களான தமிழ்த்தலைமைகள் உட்படத் தமிழ்த் தேசியத் தலைமைகளும் வாய்விட்டு கொக்கரித்து நிற்கின்றார்கள். 13கிடையாது என்பதை இந்தியப் பயணத்தின் பின்னர் அனுர அரசு உறுதியாகக் கூறும். அதற்குப்பதிலாக நேரடியாக இந்தியாவோடு பொருண்மிய மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்து தமிழரது அரசியலை ஒடுக்கிவிடும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
குருதியாற்றில் மிதந்தமிழ்ந்துபோய் அவலத்துள் வாடும் தமிழீழத்தவரே இன்னும் தமது அரசியலைச் சரியாகப் புரிந்துகொண்டு கடந்த 15 ஆண்டுகளில் கையிலெடுத்தாளவில்லை. இந்தநிலையில், சுயமாகச் சிந்திக்காது திரைக்கவர்ச்சியில் அள்ளுண்டு வாழும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள தமிழக அரசியலைத் தமிழீழத்தவர் நம்பிப் போராடப் புறப்படவில்லையென்றே நினைக்கின்றேன். தமிழகம் மொழி,கலை மற்றும் பண்பாட்டால் எமது தார்மீகப் பின்தளமாகவும், ஒருகூட்டுணர்வின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்தின் தூணாகவும் நின்று காக்கவேண்டிய கடமையை நேர்மையோடு எந்தவொரு தமிழக அரசியல் தலைமைகளும் அணுகவில்லை. ஜோ.பெர்னாண்டஸ் போன்றோ, தமிழக முதல்வராயிருந்த ம.கோ.இராமச்சந்திரன் போன்றோ தற்துணிவோடு எவரும் அணுகவில்லை. இன்று இருப்பதைத் தக்கவைக்கவே தமிழினம் போராடவேண்டிய புறநிலையைத் தமிழகத்திலுள்ள, தமிழீழத்தவர்மீது உண்மையான அக்கறையுள்ள தலைவர்கள் தமது கட்சியரசியலைக்கடந்து சிந்திப்பதாகவும் இல்லை. இந்தநிலை தமிழகத்தில் மாறப்போவதில்லை. தமிழீழ ஆதரவு அமைப்பென்று மு.கருணாநிதி தலைமையில் தமது சுயநல அரசியலுக்காக 1985இல் தொடங்கப்பட்ட அமைப்பினது செயற்பாடுகளைத் திரும்பிப்பார்த்தாலே புரிந்தககொள்ளமுடியும். தமிழீழ மக்கள் முதலில் தம்மைத் தாம் நம்பவேண்டும். தற்போதுள்ள சூழலை எப்படி எதிர்கொள்வதென்பதை சிந்திக்க வேண்டும். தாயகக்கட்சிகள் ஒரு பொதுவேலைத்திட்டத்தில் ஒருங்கிணைய (அண்மைய சிறீதரன் மற்றும் கயேந்திரகுமார் சந்திப்பு) தமிழ் உறவுகள் அழுத்தம் கொடுத்து ஒன்றிணைக்க வேண்டும். அதற்கான புறநிலையாக அண்மைய தேர்தலைத் தமிழ்த் தலைமைகள் நோக்குவதோடு, சுயபுராணப் பந்தாக்களைக்களைந்து ஆரோக்கியமான அரசியலை நோக்கிச்செல்ல முனையாவிடின் தமிழர் தாயகத்தில் மாற்றுச் சக்திகள் பலம்பெறுவது தவிர்க்கமுடியாததாகும். தமிழினத்தின் அழிவையும் தடுக்க முடியாது போகும். தமிழின விடுதலைக்கான குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ள தமிழக அரசியலுள் எம்மால் ஏதாவது செய்ய முடியுமா? இல்லைத்தானே. ஆதரவு தருவோரை அரவணைத்தவாறு நாம் அதனைக் கடந்துசெல்வதே சரியானது. தமிழர் தயாகத்தில் இனி இரத்த ஆறு ஓடாது. ஒரே பிரித்தோதும் சத்தமே கேட்கும் நிலையாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
தமிழினத்தின் ஒரு பகுதி வீசிய வாக்குச்சாட்டையடியின் பின்னாவது சிந்திக்காவிடின் இவர்கள் தமிழருக்கான அரசியல்வாதிகளல்ல என்பதை உறுதிப்படுத்தும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
பௌத்தர்களை பிரிக்க பெரும் சதி முயற்சி; புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நிதி உதவி
வடமாணத்தில் 3ஆசனங்களைப் பெற்றதன் வாயிலாகச் சிங்களம் பெரும் திருப்தியோடு நகர்கின்ற அதேவேளை, சிங்களத்தின் கடைசி இலக்காக உள்ள புலம்பெயர்ஸ்(சிலர் இங்கு குறிப்பிடுவதுபோல்)ஸை நோக்கிச் சுட்டுவிரலைப் பிக்கு தெளிவாகக் காட்டுகிறார். தமிழர் பகுதிகளில் புலம்பெயர் தமிழரது தொண்டுகளைத் திரிபுபடுத்தி, அதற்கு இப்படியொரு முத்திரையைக் குத்துவதன் ஊடாகத் தமிழரை தொடர்ந்து சிங்களத்திடம் கையேந்துவோராக வைத்திருக்க முனைகிறார்கள். கையேந்துவோராக இருந்தால்தான் பிக்குகள் என்ற பெயரில் மாறுவேடத்தில் உலவும் நவீன நிலப்பறிப்பாளர்களான சிங்களவர்கள் எல்லைகளில் உள்ள கிராமங்களில் நுளைந்து மதமாற்றம் மற்றும் நிலப்பறிப்பு என்பவற்றைச் செய்யமுடியும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
இலங்கையில் மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்
இது சிலவேளை சிலபேருக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் எதிர்பார்த்தேன். அதேவேளை 18.11.2024 அன்று'வடக்கு பறிபோனது கிழக்கு பலமடைந்தது' எழுதிய கருத்தில் 13க்கு என்ன நடக்கும் என்பதைச் சுட்டியிருந்தேன். அநுரவின் இனவாதமுகம் இவளவு விரைவாக வெளித்தெரியவரும் என்று எண்ணவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தேசியத் தலைவரின் 70வது அகவை! பலெர்மோ கேக் வெட்டி கொண்டாட்டம்!
நன்று,நன்றி... இதுதான் மேற்குநாடுகள், புலம்பெயர் அமைப்புகளைப்பார்த்து யோசிக்க வைக்கிறது.பிரபாகரக் கோட்டுபாடு இளையோரிடையே ஆழப்பதிந்து ஆக்ரோசமாக எழுந்துவிடுமோ என்ற ஆய்வுகளைச் செய்கிறார்கள். எடுத்துக்காட்டிற்காக ஒரு விடயத்தைக் குறிப்பிடலாம். யேர்மனியத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பாடநூல்கள் உரியவர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் அறிந்துகொண்டேன். யேர்மனியிலும் சில இளையோரது பற்றை அவதானிக்கும்போது, அதிசயமாக இருக்கிறது. காணவில்லை.பேசவில்லை.பழகவில்லை.ஆனால் தலைவர்மீது அளவிடமுடியாத பற்று. பிரபாகரம் அழிவற்றது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தேசியத் தலைவரின் 70வது அகவை! பலெர்மோ கேக் வெட்டி கொண்டாட்டம்!
உண்மையிலே சிறப்பு.
-
'எங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை, இந்தியாவின் நட்பின்றி முன்னோக்கி செல்ல முடியாது" - டில்வின் சில்வா
அரசினது பிரதிப்பேச்சாளரது குத்துக்கறணத்தை எமது மாக்கள் பார்க்க வேண்டும். இன்னும் வரும். ஏதோ இடதுசாரிகள், எமது துன்பங்களைப் புரிந்துகொண்டவர்கள்...... என்று சொன்னார்கள். ஆனால், நடப்பது நம்பமுடியாததாக இருக்கப்போகிறது என்பதை இவரது கூற்று உறுதிசெய்கிறது.