🙏🏾 🙏🏾 🙏🏾
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமான் மகாராஜாதி ராஜா,
ராஜாகம்பீர ராஜமார்த்தாண்ட ராஜகுலோத்துங்க,
ராஜகுலதிலக ஈரேழு பதின்நான்கு லோகத்தின் அதிபதி,
நாடாளும் நாயகன்,
அழகன்,புளகன் ,ஆனந்த வித்தன் நல்லூர்ப்பதி காவலன்,
நல்லூர் அடியார் காதலன்,
அரண் அண்டசராசர பிரபன்சோர்ப்பபத்தினிமித்த காரணன் வேதத்தின் நாயகன்,
வேள்வியின் தாயவன்,
முறையாகவப்பொருளவன் முத்தமிழ் ஆனவன்
நல்லூர்க்கந்தசாமியார் பரியேறி வாறார்
🙏🏾 🙏🏾 🙏🏾
பெரும்பாலும் ஆவணி மாதத்துடன் நல்லூர் திருவிழா முடிவடைகின்றது. யாழ்ப்பாண இராசதானியே இந்த ஒரு மாதமாக விழாக்கோலம் பூண்டிருந்ததது. முகப்பு புத்தங்களில் கூட நல்லூர்பற்றிய புகழே பரவியிருந்தது [அதன் முகாமைத்துவம், நேரம் தவறாமை போன்ற விடயங்கள் உள்ளடங்கி இருந்தன] . ஆனால் பலரும் கவனிக்கத்தவறிய விடயம் நல்லைக்கந்தனின் அலங்காரம். நல்லூர்க்கந்தனுக்கு மறுபெயர் அலங்கார கந்தன். அவருடைய ஓவ்வொரு திருவிழாவிலும் முருகப்பெருமானே அலங்காரகளுடன் நேரில்வந்தது தரிசனம் தருவது போன்ற அலங்கரிப்பு. அதிலும் தேர்த்திருவிழா அன்று ஆறுமுகம் சுவாமிகளை தரிசிப்பதற்கு 1000 கோடி கண்கள் வேண்டும். முருகு என்றால் இளமை அல்லது அழகு என்பதற்கு நல்லூர் தேர்த்திருவிழா அன்றே அர்த்தம் கற்பிக்கப்படுகின்றது.
அன்றைய தினம் கைதூக்கி கும்பிடாதவன் கூட தனை மறந்து கைதூக்கி கும்பிடுவான். மெய் சிலிர்க்க வைக்கும் தங்கநகைகளுடனும் பூக்களுடனும் கூடிய இந்த அலங்காரத்தை இலங்கையில் எந்தவொரு ஆலயத்திலோ அல்லது தேவாலயத்திலோ காணமுடியாத ஒன்றாகும். இந்த உலகப்புகழ் வாய்ந்த அலங்காரமானது நல்லூர் ஆலயத்தின் பிரதமகுருவான வணக்கத்துக்குரிய சிவாச்சாரியார் வைகுந்தன் ஐயா அவர்களின் தலைமையிலேயே இடம்பெறுகின்றது என்பது பலருக்கும் தெரியாத விடயமாகும். இறைவனுக்கு உருவம் கொடுக்கும் இவர் பெயர் முகப்பு புத்தகங்களிள் இடம்பெறுவதில்லை . அத்துடன் திருவிழாக்காலங்களில் முருகப்பெருமான் வீதி உலா வரும்போது இவர் முன்னாள் வாள் பிடித்து நடந்துவரும் காட்சியானது எம்பெருமான் பின்னால் வர தலைமை சேனாதிபதி முன்னாள் செல்வது போன்ற உணர்வை தருகிறது. இது நல்லூர் இராசதானிக்கே வீரத்தை தருகின்ற விடயமாகும். இவர் எமது பிரதேசமான திருநெல்வேலி சிவன் ஆலயத்தை சேர்ந்தவர் என்பது எம் அனைவருக்கும் பெருமை தரும் விடயமாகும்.