Jump to content

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11479
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by வாத்தியார்

  1. தீலிபன் அருந்ததி தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள் வாழ்க ❤️ வளத்துடன்
  2. நான் இலங்கையன் என்னும் எண்ணம் எனக்கு எப்போது வரும்? இது ஒரு முரண்பாடான கேள்வியாகவும் இருக்கலாம் அல்லது ஒரு சுலபமான கேள்வியாகவும் இருக்கலாம் சுலபமான கேள்விக்கு சரியான பத்தில் சிங்கள அரசு தமிழ் மக்களின் உரிமைகளை மதிக்கின்றதா என்ற கேள்விக்குள் அடங்கியுள்ளது முரண்பாடான கேள்விக்கான பதில் சிங்கள அரசு தமிழ் மக்களின் உரிமைகளைத் தருமா என்ற கேள்விக்குள் அடங்கியிருக்கின்றது
  3. பாஞ்ச் ஐயா அவர்களின் மனைவியார் விரைவில் பூரண சுகமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்🙏
  4. அனுபவம் எனக்குப் புதிதல்ல ஒன்றுக்கு மூன்று எனது கோட்பாடும் இது தான் பெண்கள் கல்வியில் என்றும் கவனமாக முன்னேறி வர வேண்டும் அதன் பின்னர் அவர்களே சமாளித்துக் கொள்வார்கள் மிக அவதானம் இப்போதெல்லாம் பெண்கள் தங்களை ஆண்களுடன் ஒப்பீடு செய்வதை விரும்புவதில்லை ஆண் பெண் எல்லாம் ஒன்றே என்ற பதில் தான் கிடைக்கின்றது
  5. இப்படி எந்த ஒரு தமிழ்த் தலைமையும் சிந்திக்க மாட்டாது..... ஒருவர் முதலில் உரிமை தான் வேண்டும் அபிவிருத்தி அதற்குப் பின்னர் தான் என்று கூறுவார். இன்னொருவர் அபிவிருத்தி தான் முதலில் உரிமைகளை பற்றிப் பின்னர் பேசலாம் என்பார், இதற்கிடையில்..... சிங்கள அரசு தமிழர் பகுதியில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் தங்கள் பிரதிநிதியை பட்டியல் மூலம் கொண்டு வந்து தலைவராக்கும். இப்போது ஏற்படும் இழுபறிகளால் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படாமல் கைவிடப்படும் . அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்ட நிதிகள் வேறு வழிகளால் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருக்கும் இழுபறியில் ஈடுபட்ட அதே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் . இது தான் இறுதிக்காலங்களில் நடைபெற்றுக் கொண்டு வந்தது ,
  6. தனியாக விருப்பு வாக்குகளை அளித்து தூய்மையான அரசியல் செய்யும் முறைமை ( தொகுதி ரீதியான ) ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகள் சென்றுவிட்டன . இப்போது விருப்பு வாக்குக்களை களவாடும் அரசியல்வாதிகளுக்கு சார்பான விகிதாசார முறைமை ....ஆகவே நீங்கள் அளிக்கும் விருப்பு வாக்குக்கள் அனைத்தும் ஊழலையும் லஞ்சத்தையும் தொழிலாகக் கொண்ட அரசியல்வாதிக்கே கிடைக்கும் அல்லது அவர்கள் அதனைத் தங்களுக்கானதாக அபகரித்துக் கொள்வார்கள். அதற்காகவே புதியவர்கள் என்ற பெயரில் அவர்களது பினாமிகளைப் பல கடசிகளும் குழுக்களும் தேர்தலில் வேட்பாளர்களாகத் தெரிவு செய்துள்ளார்கள் . தொகுதி ரீதியிலான தேர்தல்முறையில் ஊழல்வாதிகளை அடுத்த தேர்தலிலேயே அடித்து விரட்டி விடலாம் .
  7. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)இல்லை 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)ஆம் 😎அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம் 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)ஆம் 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)இல்லை 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) யாழ் மாவட்டம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 3 28) வன்னி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 3 29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி3 30)திருமலை ஐக்கிய மக்கள் சக்தி 2 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி 2 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 4 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 4 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி 13 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) வைத்தியர் அர்ச்சுனா வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) மானிப்பாய் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 39) உடுப்பிட்டி தமிழரசு கட்சி 40) ஊர்காவற்றுறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 41) கிளிநொச்சி தமிழரசு கட்சி 42) மன்னர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 43) முல்லைத்தீவு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 44) வவுனியா ஐக்கிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு ஐக்கிய மக்கள் சக்தி 47) திருகோணமலை ஐக்கிய மக்கள் சக்தி 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 4 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 2 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54)தமிழரசு கட்சி 5 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 8 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 6 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 48 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 149 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 8 போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார் Edited 14 hours ago by கந்தப்பு
  8. தமிழரசு........ ஜனநாயக தமிழரசு..... சுதந்திரத் தமிழரசு தேசியத் தமிழரசு தேசிய மக்கள் தமிழரசு தேசிய ஜனநாயகச் சுதந்திரத் தமிழரசு தேசிய மக்கள் ஜனநாயக சுதந்திர தமிழரசு வீட்டின் ஒவ்வொரு கல்லும் ஒரு கட்சியாக வரப்போகின்றது பெயர்களை இப்போதே பதிவு செய்து வையுங்கள்
  9. குறைந்தது வடக்கு கிழக்கில் ஊழல் அற்ற சுகாதார சேவைகள் ஆவது இடம்பெற இப்படியான ஒரு சில ஆளுமை உள்ளவர்கள் தேவை.
  10. ஊழல் அற்ற ஆட்சி என்று NPP வரும் முன்பே இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வைத்திய சாலைகளில் நடக்கும் , நடந்த ஊழல்களை வெளியே கொண்டு வந்தவர் . சில விடயங்களில் வழிகாட்டிகளினால் தவறாக சென்றிருந்தாலும் தமிழ் பார் ஆளுமன்ற உறுப்பினர்களை விட இவர் பரவாயில்லை என்றுதான் நினைக்கின்றேன். ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கலாம்
  11. தமிழர்கள் அதுவும் இலங்கையில் வாழும் தமிழர்கள் யோசித்தே முடிவெடுப்பார்கள் என்பதை விட சிங்கள மக்கள் இப்படிச் செய்வார்கள் என்பதே வரலாறு. தமிழ் மக்கள் எத்தனை வீதம் தேசிய மக்கள் சக்தியை ஆதரிப்பார்கள் என்ற கேள்வி தான் இப்போது மேலோங்கி நிற்கின்றது சுமந்திரனின் அட்டகாசம் மக்களை தேசிய மக்கள் சக்தியை நோக்கியே அழைத்துச் செல்லும்
  12. தேர்தல் முடிந்து வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வாக்குகள் எண்ணப்படும் . வாக்குக்களை எண்ணும் போதே அந்த அந்தக் கட்சி வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளும் எண்ணப்படுமா? அல்லது ஒரு கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் மட்டும் முதலில் எண்ணப்படுமா? விருப்பு வாக்குகள் எண்ணும் முறை எப்படி என்று யாராலும் கூற முடியுமா ? அல்லது இங்கே கருத்து எழுதுபவர்கள் யாருக்காவது இலங்கையில் வாக்கு எண்ணும் பணியில் அனுபவம் உண்டா ? அல்லது வாக்கு எண்ணும் இடத்திலாவது எப்போதாவது இருந்தீர்களா குறிப்பாக விருப்பு வாக்குகள் எண்ணும்போது யாராவது அந்த இடத்தில் இருந்தது உண்டா ?
  13. ரணில் நாட்டின் பொருளாதாரத்தை சிறிய காலத்தில் மாற்றியமைத்தவர் என்பதால் வாக்களித்தார் என்று கூறிய அவர், தான் வாக்களித்தவர் வெல்ல மாட்டார் அல்லது வெல்லக்கூடாது என்று ஏற்கனவே தீர்மானித்து ரணிலுக்கு வாக்களித்திருக்கின்றார் எனக் கூறுவதை வைத்தே சில கருத்துக்களில் முரண்பாடு இருக்கின்றது இருந்தாலும் துணிந்து பல உண்மையான கருத்துக்களைக் கூறும் இவர் ஏன் தேர்தல் களத்தில் குதிக்கவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது
  14. இழப்பதை விரும்பாத மனிதன் இருப்பதை வைத்தே மகிழ்வுடன் வாழ்வான். இருந்ததை எல்லாம் இழந்துவிட்டு.... இப்போது.. எல்லாம் இருப்பதாக உலகம் எங்கும் அலைபவன், மீண்டும் தன் சொந்த மண்ணில் கால் வைக்கும் போதெல்லாம் எதையோ தெடிக் கொண்டுதான் இப்போதும் இருக்கின்றான்- எங்கும் கிடைக்காமல்... கவிதைக்கு நன்றி நொச்சி
  15. 2004 ஆம் ஆண்டையே தமிழர்கள் ஆகிய நாங்கள் கடந்து செல்லும் போது...... அந்த நாட்களில் ......... கிங்ஸ்லி மற்றும் ராஜன் ஆகியோர் யாருடைய ஆதரவாளர்கள்...... யாரால் அவர்கள் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டார்கள்...... ஏன்.... எதற்காக..... என்ன நடந்தது... என்பதை இப்போது அறிந்து யாருக்கும் இந்தப் பலனும் இல்லை கடந்து செல்வோம்......
  16. மறைந்த சம்பந்தர் அவர்கள் எல்லோராலும் போற்றப்பட்ட ஒரு தலைவராக வாழ்ந்த காலம் அவர் பாராளுமன்றத்தில் அங்கத்தவத்தை இழந்த காலம் மட்டுமே . அதன் பின்னர் அவர் பாராளுமன்ற அங்கத்துவத்தை மீண்டும் வெற்றி பெற்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒருங்கிணைந்த தமிழ்க் கட்சிகளின் தயவால் மட்டுமல்ல இந்தக் கூட்டமைப்புத் தான் விடுதலைப்புலிகளின் அரசியல் முகம் என்று அந்தத் தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனமாக அறிவிக்கப்பட்டதாலும் தான். அந்த நேரத்தில் அந்தகக் கூட்டமைப்பை உருவாக்கிய சிவில் அமைப்புக்கள் அதன் தலைமை கிழக்கிலிருந்து வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபடியால் தான் மறைந்த சம்பந்தன் ஐயா அவர்கள் தலைவராக பரிந்துரைக்கப்பட்டு அவரும் புலிகளை மக்களின் பிரதி நிதியாக ஏற்றுக்கொண்டு அவர்களின் அரசியல் முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட சம்மதித்து தலமைப் பதவியை ஏற்றுக் கொண்டார்.( இதையும் புலிகளின் வற்புறுத்தல் , கொலை மிரட்டல், ஏற்றுக்கொள்ளாவிட்டால் போட்டு வைத்திருப்பார்கள் என்ற பாணியில் யோசித்தால் அது உங்கள் யூகம் ) இது தான் உண்மை எப்படி எப்போது எதற்காக சம்பந்தன் ஐயா அவர்கள் தமிழர்களின் விடுதலைக் கோட்பாட்டிலிருந்து விலகினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அன்றிலிருந்தே சம்பந்தர் ஐயாவும் தமிழர்களை அவர்களின் மனதை எப்படியெல்லாம் வெல்லலாம் எனக் கணித்து சந்தர்ப்பம் கிடைத்த நேரம் எல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி விட்டு இப்படிச் சென்றுவிட்டார் . 50 களில் தமிழர்கள் திருகோணமலைக்கு யாத்திரை சென்று சிங்கள இனவாதத்திற்கான தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். 70 களில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் தனி நாடே தமிழர்களின் பாதுகாப்பு என நிறைவேற்றப்பட்டது 80 களின் பின்னர் 2009 வரை தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முன்னிலை வகித்து ஈழப்போராட்டம் உலக அரசியலாக மாற்றம் பெற்றது இப்படியே தமிழர்களின் அரசியல் மற்றும் உரிமைப் போராட்டம் ஒரு முன்னேற்றத்திற்கான பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில்... 2009 க்குப் பின்னரும் ஈழத் தமிழர்களின் தலைமை என் கையில் தான் இருக்கும்.... இருக்க வேண்டும்...... என்ற ஒரே கொள்கைப் பற்றுடன் வாழ்ந்த சம்பந்தர் ஐயா அ தே ஈழத்து தமிழர்களின் உரிமைக்காக போராடிய அல்லது அந்த உரிமையை வென்றெடுக்க முன்னெடுத்த ஒரு போராட்டத்தை யாரும் தெரிந்தால் கூறுங்கள்
  17. மக்களிடையே அவருக்கு இருக்கும் ஆதரவு எல்லோருக்கும் தெரியும்
  18. பச்சை மட்டை அடி நல்லாத்தான் இருக்கு எப்ப எங்கை விலாசம் தேவையா இது அதற்கு ஏற்ற திரி அல்ல
  19. நான் மக்களிடம் உங்களுக்குத் தீர்வை வாங்கித் தருவேன் எனக்கு வாக்குப் போடுங்கள் என்று இலங்கையில் எந்த தேர்தலிலும் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கவில்லை. அரசியலில் இருந்தாவது இன்றுவரை விலகி இருக்கின்றேன். முடிந்தவர்களை.... நீங்கள் முயற்சியுங்கள் என்று அவர்களுக்கு வழி விட்டிருக்கினேறேன். கட்டப்பொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பன் துரோகி என்று சொல்லும் யோக்கியம் இன்னொரு எட்டப்பனுக்கு இருக்காது
  20. 1977 இல் நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு வென்றவர் . அப்போது யாழ் மாவட்டத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். பட்டு வெட்டி பட்டு சேட்டு குங்குமப் போட்டு மனுஷனின் அழகோ அழகு. அவரைப் பார்க்கவென்றே கூட்டங்களில் பெண்கள் குவிந்திருப்பார்கள் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு தமிழர்களின் அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை செல்வாவிற்குப் பின்னர் பிரிந்திருந்த தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்துக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது ஒரு பெரும் தலைவராக உருவெடுத்தவர். ஈழத்து தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் உலக அரசியலில் ஒரு மாற்றத்தை விடுதலைப் புலிகளின் காலத்தில் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தும்----- அதை உதறித் தள்ளிவிட்டு ரணிலுடன் சேர்ந்து சிங்கக் கொடி அசைத்து தன் நலமே முன்னே என்று சுயநல அரசியலில் மூழ்கியவர் . இன்று ஈழத்து தமிழ் மக்களிடையே தேசத்து துரோகி என்ற பட்டத்துடன் விடை பெற்றுக் கொண்டார்
  21. போட்டியில் வென்ற பிரபாவிற்கும் அடுத்த நிலைகளில் வந்த ஈழப்பிரியன் அண்ணா மற்றும் கந்தப்பு அண்ணைக்கும் வாழ்த்துக்கள்🙌 போட்டி முடியும் வரை திரியைக் கலகலப்பாக வைத்திருந்த பையன் , ரசோதரன் மற்றும் ஈழப்பிரியன் அண்ணா மற்றும் அனைவருக்கும் நன்றிகள்❤️👍 போட்டியில் ஒரு தவறு நடந்து விட்டது எனக் கந்தப்பு அண்ணை எழுதிய பொது "கிருபர் ஜீ நீங்களே முடிவெடுத்து புள்ளிகளை வழங்குங்கள் " என எந்தவிதமான எதிர்ப்பையும் வைக்காமல் சகல போட்டியாளர்களும் ஒன்றாக நின்றமை உண்மையிலேயே களத்தில் கிருபர் ஜீ வேறை லெவல் என்பதைக் காட்டுகின்றது. அதற்காக அனைத்துப் போட்டியாளர்களுக்கு நன்றிகள்🙏 தொய்வில்லாமல் புள்ளிகளை உடனுக்குடன் வழங்கி அடுத்து யார் யாரைத் தெரிவு செய்திருக்கின்றார்கள் அடுத்து யார் யாருக்கு புள்ளி கிடைக்க சந்தர்ப்பம் உள்ளது என ஆவலுடன் அடுத்த போட்டியைம் பார்க்க வைக்கும் விதத்தில் போட்டியை நகர்த்திய கிருபர் ஜீ உண்மையிலேயே நீங்க வேறை லெவல் 🙌
  22. மைதானத்திலிருந்து மழை நம்ம இடத்தை நோக்கி நகர்ந்து விட்டதால் மைதானத்தில் விளையாட்டு மீண்டும் ஆரம்பிக்கின்றது
  23. எதோ ஒரு மாதிரி மில்லரை அவுட்டாக்கி வேண்டு விட்டுட்டாங்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.