பகிடி
கருத்துக்கள உறவுகள்-
Posts
426 -
Joined
-
Last visited
-
Days Won
2
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by பகிடி
-
உடன்படுகின்றேன். டிரம்ப் வெற்றி அடைய நான் அவதானித்த சில விடயங்கள் இவை இந்த முறை டிரம்ப்க்கு வாக்களித்த பலரில் லத்தீன் அமெரிக்கர்களும் கருப்பின மக்களும் அடங்கும். அதுவும் இதுவரைக்கும் ஜனநாயக கட்சியின் வாக்காளறாக இருந்தவர்கள் கூட டிரம்ப் க்கு வாக்களித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் ஆண்கள் என்றாலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெண்களும் உள்ளார்கள் Black life matter என்ற ஒரு சுலோகத்தோடு போன முறை நடைபெற்ற புரட்சி(?) உண்மையில் கருப்பின மக்களின் பிரச்னைகளை வெளிக்கொணர்ததை விட பாதிக்கப்படும் கறுப்பின மக்களின் பிரச்சனையின் வீரியத்தை குறைக்கவே பயன் பட்டது. பல கறுப்பின கனவான்கள் அதை அப்பொழுதே உணரத் தலைப்பட்டனர். இங்கே வந்து minimum salary க்கு வேலை செய்து கடினமாக உழைத்து அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறும் புலம் பெயர் மக்களில் பெரும்பான்மையானோர் குடியரசுக் கட்சி பக்கம் சாய்கின்றனர். வேலைக்குப் போகாமல் அரசு கொடுக்கும் வீட்டில் இருந்துகொண்டு வேலை இல்லை என்பதற்கு காரண காரியங்களை சொல்லிக்கொண்டு சோம்பேறி ஆகி போதைக்கு அடிமைப்பட்டு பின்னர் homeless நிலைக்கு ஆளாகும் மக்களின் அவல நிலைக்கு புறக்காரணிகள் மட்டுமே காரணம் என்றும் பாதிக்கபடுபவர்கள் வெறும் victims என்றும் அவர்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லை என்றளவுக்கு liberalism செயல்படுகின்றது.எந்த பெரிய நகரத்தின் Downtown பக்கமும் இப்பொழுது நிம்மதியாக போக முடிவதில்லை.இதனை உழைக்கும் மக்கள் ரசிப்பதில்லை. இதுவரைக்கும் சரி என்று நம்பிக்கொண்டு இருந்த விழுமியங்கள் left wing ideology பேசுவோரால் அசுர பலம் கொண்டு தாக்கப்படும் பொழுது கேள்விக்கு உடப்படுத்தப் படும் பொழுது எதிர்ப்பு வருவதை நிறுத்த முடியாது. எல்லாவற்றுக்கும் நேரம் கொடுக்கப்பட வேண்டும். முக்கியமாக நாம் சரி என்று நம்பும் விஷயங்கள் பிழையோ அல்லது இதை வேறு பரிமாணத்தில் பார்க்கலாமோ என்று எண்ண பக்குவப்பட்ட மனநிலை தேவைப்படுகிறது. இதற்க்கு திணிக்கப்படும் இடது சாரி அரசியல் உதவப் போவதில்லை. இதைத் தவிர கட்டுப்பாடு அற்ற illegal immigrants, மத்திய கிழக்கு மற்றும் ukraine போருக்கு அளிக்கப்படும் அபரிமிதமான நிதிஉதவி ஆகியவை நிஜமாகவே மத்திய தர குடும்பங்களை பாதித்து உள்ளது.
-
நாங்கள் வெறுமனே டிரம்ப் என்பவர் மீது தனிமனித வெறுப்பின் காரணமாகவோ அல்லது அவரின் Right wing Ideology மீது பிடிப்பின்மை காரணமாகவோ இந்த வெற்றியை குறைத்து மதிப்பிடலாம், ஆனால் left wing அரசியல் பொதுவான மக்களிடம் மதிப்பிளந்து வருகின்றதை நாம் கவனிக்காமல் போய் விட முடியாது. Left wing அரசியலின் போலித்தனமும் அது குடும்ப அமைப்பு மீது செலுத்தும் அழுத்தமும் ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்தையும் பாதித்து உள்ளதை நேர்மையுடன் உணரத் தவறியதால் தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. கனடாவிலும் அதுவே நிலை Right here right nowஎன்ற ஒரு புத்தகம் முன்னால் கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அவர்களால் சில வருடங்கள் முன்னம் வெளியிடப் பட்டது. அதில் இந்த populism வளரக் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாதது. முடிந்தால் எல்லோரும் அதை வாங்கி வாசியுங்கள்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
பகிடி replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
வெறித்தனமாகப் பேசினால் நம்பி விடும் கூட்டம். நான் முகநூலில் பல வருடங்களுக்கு முன்னமே சீமான் போக்கு பிழை என்றும் அறிஞர் அண்ணாவை தெலுக்கர் என்று சொல்பது பிழை என்றும் சொன்னப்பொழுது கடிக்க வந்ததால் facebook கையே இழுத்து மூடி விட்டேன் -
10 மாதங்களில் 16 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை
பகிடி replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
முக்கால் வாசி இந்தியர்கள் தான் -
எனது அக்கா ( லண்டன் ) இல் வங்கியில் பெட்டகத்தில் வைத்திருந்த நகையை எடுத்து திருமண நிகழ்வு ஒன்றுக்கு போட வீட்டுக்கு எடுத்து சென்று, திருமணத்துக்கும் அணிந்து பின்னர் வேலை காரணமாக ஒரு நாள் பிந்தி மீண்டும் வங்கி பெட்டகத்தில் வைப்பம் என்று யோசித்து இருக்க, இவாவும் அத்தானும் பிள்ளைகளும் வீட்டில் இல்லாத நேரம் வீட்டை கோடாலி கொண்டு உடைத்து 35,000 pounds பெறுமதியான நகைகளைக் கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் நடந்து 2 வருஷம் இருக்கும்.
-
இந்த வயதில் சுன்னத்து ( circumcision) செய்தால் எப்படி நோகும் தெரியுமா? பத்து நாள் உள்ளாடை அணியாமல் நோவுடன் சாறம் கட்டிக்கொண்டு இருக்க வேண்டும். எங்கயும் ஆண்குறி முட்டுப் படாமல் நடக்க வேண்டும்.
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கமாட்டோம் - ஜனாதிபதி செயலக அதிகாரி
பகிடி replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
மனித உரிமை vs அதிகாரம். இந்த இரண்டும் நாட்டில் நல்லாட்சி நடைபெற அவசியம். மனித உரிமைகள் என்ற பெயரில் அதிகாரம் அற்ற அரசும் அல்லது கொஞ்சமும் மனிதாபிமானம் அற்ற அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் அரசும் இரண்டும் பலன் தரும் ஜனநாயக அமைப்புக்கு குந்தகம் விளைவிக்கும். -
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
பகிடி replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
விஜயகாந்துக்கு கொள்கைத் தெளிவு இருந்தாலும்? அதை வெளியில் சொல்லிக்கொள்ளவில்லை. மக்களுக்கு நன்மை செய்வம் என்று தான் சொன்னார். தவிர சோ பேச்சைக் கேட்டு ஜெயலலிதா வுடன் போய் சேர்ந்ததால் தான் வீழ்ந்தார். விஜய் அதில் மாறுப்பட்டு நிற்கிறார். கொள்கைத் தெளிவு இங்கே உண்டு -
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
பகிடி replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
@goshan_che என்ன கன காலம் காணவில்லை? மேலே நீங்கள் எழுதிய ஒவ்வொரு சொல்லும் அர்த்தபுஷ்டி உள்ளது. நான் விஜய் வருகை குறித்து வைக்கப்படும் பல அரசியல் கருத்துக்களைப் பார்க்கிறேன். அதில் நீங்கள் சொன்னதுதான் 100 புள்ளிகள் பெறும். சிறப்பு!❤️ -
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
பகிடி replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
ஆந்திராவின் NTR உம் உதவினார். வைகோ போன்றவர்களை தெலுக்கன் என்று ஏசும் அதே கூட்டம் தான் இங்கே சுமத்திரனை தமிழின விரோதி என்கிறது. தனது உண்மையான எதிரி யார் என்று தெரியாமல் தனக்கு நன்மை செய்ய விரும்புவனுக்கு எதிராக வாள் சுற்றும் கூட்டம் அது. -
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
பகிடி replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
ஒன்று தான் அல்லது திராவிட இயக்கம் பெற்ற பிள்ளை தான் தமிழ்த் தேசியம். சீமான் போன்றவர்கள் வெறுப்பு அரசியல் பேசுவாதால் இரண்டையும் பிரித்து விட முடியாது. -
நான் அப்படி எங்கும் சொல்லவில்லை @nunavilan. நீங்கள் ஏன் அப்படி விளங்கிக் கொண்டீர்கள் என்று தெரியவில்லை. நான் சொல்ல வந்தது சட்ட நுணுக்கம் அறிந்தவர்கள் தீர்வு கிடைக்கும் வரைக்கும் பாராளுமன்றம் செல்லட்டும் என்பது தான். தவிர திரு சம்பந்தன் , நீலன், சுமந்திரன் ஆகியோருக்கு வழக்கறிஞர் தொழில் வருமானமே அதிகம். வேறு வழியின்றி அரசியலுக்கு இவர்கள் வரவில்லை. சரி இப்பொழுது கூட்டமைப்பு சார்பில் போட்டி இடும் எந்த நபர் பிரச்சனைக்கு உரியவர்? கந்தையா பாஸ்கரன் முதலாளியாக இருக்கும் ஊடகங்கள் சொல்வதை மட்டுமே கேட்டால் எப்படி? ஆமாம், மக்கள் மூடர்கள் ஆக்கப் படுகின்றனர். உணர்ச்சிவசப்படுத்தலை ஊடகங்கள் திருப்ப திரும்ப செய்வதால் மக்கள் முடிவுகளை எடுக்கும் பொழுது உணர்ச்சி தூண்டுதலால் எடுக்கின்றார்களே ஒழிய தீர சிந்தித்து நிதானமாக எடுப்பதில்லை அல்லது எடுக்க அனுமதிக்கப் படுவதில்லை.
-
75% சிங்கள மக்களோடு சேர்ந்து வாழும் தீர்வு என்று வரும்பொழுது அங்கு விட்டுக்கொடுப்புக்கள் இரண்டு பக்கமும் தேவைப்படுகிறது. சிங்கள இனவாதிகளின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு அங்கு சிங்கள மக்களில் உள்ள மிதவாதிகள் அரசை அமைக்கும் நிலை வரும் பொழுது இங்கே எமது பக்கத்தில் சீமான் வகையறாக்களை, இந்திய அருவருடிகளை, புலிகளின் பணத்தை கொள்ளையடித்த கூட்டத்தின் சொல் கேட்டு நடக்கும் ஆட்களை வைத்துக்கொண்டு ஒரு தீர்வு நோக்கி நகர முடியாது. அதற்கு அப்படிப்பட்டவர்களை மண்டையில் போடவும் கூடாது. ஆகவே தான் மெதுவாக கட்சியில் இருந்ததை அகற்றப்பட வேண்டியவர்கள் ஆகின்றார்கள். நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள், தீர்வு என்று வரும் பொழுது குதிரை கஜேந்திரன்கள் , மருத்துவம் மட்டுமே படித்த சட்ட நுணுக்கங்கள் தெரியாதவர்கள், பள்ளிக்கூட அதிபர்கள், முன்னாள் கொலையாளிகளை எல்லாம் அனுப்பலாமா? இதே பதிலை நீங்கள் செல்வம் அடைக்கலன்நாதனுக்கும், விக்கிக்கும், கஜேந்திர குமார் பொன்னம்பலதுக்கும் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.
-
தமிழ் மக்கள் பிரச்சனையின் தீர்வு முயற்சிக்கு இரு வகை சிந்தனைகள் உண்டு 1)இரத்தம் சிந்தித் தான் விடுதலை என்பது ஒரு சிந்தனை 2)சிங்கள மக்களோடு இணைந்து ஒரு தீர்வுக்கு இரத்தம் சிந்தாமல் வர முடியும் என்பது இன்னொரு வகையான சிந்தனை இப்போது சுமத்திரனை எதிர்பவர்கள் இதில் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்? இரத்தம் சிந்தி போராடுவது தான் முதல் நிலைப்பாடு என்றால் அதில் ஒரு நேர்மை உண்டு. மதிக்கவேண்டும். ஆனால் அப்படி ஒரு சூழல் இல்லாத பொழுது இரண்டாவது சிந்தனை தான் சரி என்றாகும் பொழுது அப்பொழுதும் சுமந்திரன் வெறுப்பு என்பதற்கு காரணம் பின்வருமாறு 1) தமிழ் இனத்தை இப்படியே ஒரு பதை பதைப்பில் வைத்துக்கொண்டு பெரிய கனவுகளை காண சொல்லி நலிவடைந்த இனமாக எம்மை மாற்றுவது. 2) புலிகள் பெயரில் கொள்ளை அடித்த பணத்தை மக்கள் கேட்டு விடக்கூடாது என்ற பயம். 3) சரியாக பேசி விட்டால் நண்பகளை இழக்க வேண்டும் என்ற பயம்.அதனால் நாலு பேர் சொல்வதை வழிமொழிகிறேன் கூட்டம் 4) புலிகள், மாவீரர்கள் அவர்களின் தியாகம் ஆகியவற்றில் உள்ள பெரும் மதிப்பு. இவர்கள் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். இவர்கள் நிலை புரிந்து கொள்ளத் தக்கது. ஆனாலும் காலம் இவர்களின் சிந்தனையை மாற்றி விடும். இது புதிய அரசியல் அமைப்பு சாசன மாற்றத்தில் திரு சம்பந்தன் சுமந்திரன் ஆகியோரோடு சேர்த்து இயங்கிய திரு ஜெயம்பதி விக்ரமரட்ண வின் செவ்வி. சிங்கள மக்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மிதவாதிகள் உண்டு. நம்பிக்கையோடு பயணம் செய்தால் நல்ல வளமான இலங்கையை கட்டி எழுப்பலாம்.
-
திட்டுபவர்கள் இதையும் பார்த்து விடவும்.
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
பகிடி replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ரஜினி திரணகம துரோகி கதிர்காமர் துரோகி நீலன் துரோகி ரட்ன ஜீவன் கூல் துரோகி சம்பந்தன் துரோகி கருணாநிதி துரோகி ப சிதம்பரம் துரோகி இப்போது சுமந்திரனும் துரோகி ஆக பாலசிங்கம் கொஞ்ச நாள் உயிரோடு இருந்து இருந்தால் அவரும் துரோகி ஆக யாரெல்லாம் தமிழ் மக்களுக்குள் உலக ஒழுங்கை மனதில் கொண்டு கொஞ்சம் நிதானமாக சிந்திக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் துரோகி. -
தனிநபரின் கம்பனியாக மாறியுள்ள தமிழரசுக் கட்சி - கே.வி.தவராசா
பகிடி replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நாம் ஆங்கிலேயேருக்கு அடிமைப் பட்ட காலம் முதல் எதிர்த்து நின்றாலும் இயலுமான வரைக்கும் எங்களை மேற்கொண்டவர்களிடம் இணங்கியே போனோம், அதனால் தான் ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டுப்போன பின் சிங்களவரை விட கல்வியிலும் பொருளாதாரதிலும் சனத்தொகையிலும் நல்ல நிலையில் இருந்தோம். இன்றும் ஆயுதப் போராட்டத்துக்குப் பின் நாம் தோல்வி அடைத்து விட்டோம் என்பதை ஏற்போம், கிட்டத்தட்ட வெள்ளையர்கள் சில நூற்றாண்டுக்கு முன் எம்மை அடிமைப் படுத்த வந்த காலம் போல் ஆகி விட்டது நம் நிலை, ஆகவே இனி இணக்க அரசியல் தான் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பயன் தரும்.அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கு இனி தமிழ் தேசியம் என்பதன் பொருள் கல்வி, பொருளாதாரம் தான் . அதனை அடிபட்டு பிரிவினை பேசி விட்டுக்கொடுக்காமல் இருந்தால் அடைய முடியாது. முக்கியமாக இந்தியா என்கின்ற நாடு உடையாமல் அது நடக்காது.எங்களின் உண்மையான பகையாளிகள் சிங்களவர் அல்லர், மாறாக இன்றைய உலக ஒழுங்கும் அருகில் உள்ள இந்தியா என்ற நாடுமே ஆகும். இந்த உலக ஒழுங்கு மாறும் வரைக்கும் நாம் பொறுத்துத் தான் ஆக வேண்டும்.ஆகவே இன்றைய தமிழ் அரசுக் கட்சி மற்றவர்கள் போல் அரசியல் செய்யாமல் சிங்களாவரோடு ஒத்து இணங்கி நாம் இருக்கும் நம் நிலம் மற்றும் பொருள் வளத்தை காப்பாற்ற முயல வேண்டும். பிரியாணிக்கு ஆசைப்பட்டு பட்டினி கிடந்தது போதும், கிடைக்கும் சாப்பாட்டை இப்போது சாப்பிடுவோம். -
நன்றி அண்மையில் நான் ஒரு கட்டுரை ஒன்றை வாசித்தேன். Noyal நடேசன் எழுதியது. உங்கள் கேள்விக்கு அது பதிலாக அமையலாம். // சிங்கள மக்கள் விடயத்தில் உண்மையான யதார்த்தமுள்ளது. அவர்களது 2500 வருட இந்திய எதிர்ப்பு உண்மையானது. சேர சோழ பாண்டிய நாயக்க அரசுகளின் படையெடுப்பால் காலம் காலமாக இலங்கை மக்கள் அழிந்தது உண்மை . அதேபோல் அவர்கள் தங்களது பவுத்த மதத்திற்கு இந்தியாவால் ஆபத்துவருமென்று எண்ணியதால் மகாவம்சம் உருவாகியது. அதையும் பொய் எனச் சொல்லமுடியாது. தென்னிந்தியாவில் இருந்து பவுத்த மதம் அழிந்துபோனதை அவர்கள் கண்டார்கள். அப்படி தங்களுக்கு வரலாம் என நினைக்கிறார்கள் . அந்தப் பயம் உண்மையா என்பது விவாதமில்லை போராட்ட இயக்கங்களுக்கு போர் பயிற்சி இந்தியாவில் நடந்தது உண்மையானது பின்பு ராஜீவ் – ஜேஆர் ஒப்பந்தம் என்பன இந்தியாவின் திணிப்பு நடவடிக்கையே. பிற்காலத்தில் விடுதலைப்புலிகளைத் தேவையற்றபோது ஒடுக்குவதற்கு உதவினார்கள் என்பது அவர்களுக்கு வசதியானபோதே செய்தார்கள் . தற்போது தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் கூட ஒருகாலத்தில் இலங்கைமீதான இந்தியாவின் ஆதிக்கத்தில் பணயக் கைதிகளாக முடியும். இப்படியான தன்மைகளால் சிங்கள மக்கள் கிராமத்திற்குள் வழிதவறி வந்து மூலைக்குள் ஒதுங்கிய காட்டு மிருகத்தின் நிலைக்கு தள்ளப்படுகிறாரகள். இதுபோதாதென்று இலங்கையில் நடந்த இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஈஸ்டர்குண்டு வெடிப்பும் அவர்களை மேலும் பல பக்கங்களிலுமிருந்து வரும் அபாயமெனப் பயமுறுத்துகிறது. கடைசியாக நடந்த தேர்தல்களின் தெரிவுகள் இதையே காட்டுகின்றன. 75 வீதமான சிங்கள பவுத்த மத மக்கள் கொண்ட இலங்கையில் சமாதானம், இனங்களின் பரஸ்பர நல்லிணக்கத்தாலேதான் உருவாகமுடியும். மற்றைய தீர்வுகள் எந்த உருவில் வந்தாலும் எதுவும் நடைமுறைச்சாத்தியமற்றது. இதுவரை வட கிழக்கு தமிழருக்கு மட்டும் இருந்த நூடில்ஸ் போன்ற சிக்கல் இஸ்லாமியர்களும் இந்த விடயத்தில் சேர்ந்து இடியப்ப சிக்கலாகிறார்கள். நடைமுறைச்சாத்தியமற்றது. இதுவரை வட கிழக்கு தமிழருக்கு மட்டும் இருந்த நூடில்ஸ் போன்ற சிக்கல் இஸ்லாமியர்களும் இந்த விடயத்தில் சேர்ந்து இடியப்ப சிக்கலாகிறார்கள். தமிழர்களுக்கு, அரசியல்வாதிகளின் மடியைத் தடவி பால்கறக்க 20 வருடம் தேவைப்பட்டது. ஆனால் இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் இந்த வேகத்தில் போனால் பாதிக்காலம்தேவைப்படாது. மூன்று இனங்களும் இனவாதத்தால் கூர்மையாக்கப்படும்போது யாருக்கும் நன்மை வராது தொடர்ச்சியான முறுகல் நிலை ஏற்பட்டால் பாதிப்புகள்தான் தொடரும் . இலங்கை மீதோ அல்லது சிங்கள மக்கள் மீதோ உலக நாடுகளால் எந்த முடிவையும் திணிக்கமுடியாது. ஆனால், இலங்கையை ஒரு ஏமன் அல்லது சோமாலியாவாக்க முடியும்.//
-
பயப்படக் காரணம், இங்கே கொஞ்ச அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால் அதை வைத்து கிடைக்கும் சுதந்திரத்தில் இந்தியாவின் உதவியுடன் மீண்டும் இங்கே ஒரு தமிழ் கிளர்ச்சிக் குழு உருவாகும் என்ற பயம் தான். நாம் தமிழர்களாக இருக்கும் அதே நேரம் இந்தியாவுக்கு செம்படிக்காத நல்ல இலங்கையர்களாகவும் இருப்பதை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு உறுதிப் படுத்த வேண்டும். அப்பொழுது பெரும்பான்மை மக்களுக்கு எமக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க விருப்பம் வரலாம்.