Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகிடி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பகிடி

  1. முஸ்லீம்கள் பற்றி இவ்வளவு பட்டறிவு இருந்தபின்னும் சட்டத்திட்டங்களை அலசி ஆராய்ந்து விட்டு சிக்கல் என்று தெரியக்கூடியவற்றை இல்லாமல் செய்துவிட்டு முஸ்லீம்கள் நீதிமன்றத்தை நாடியும் எதுவும் நடக்காது என்று உறுதிப்படுத்திவிட்டு இந்த சிலையை திறந்து இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் வேண்டும் என்றே முஸ்லீம்களுக்கு சட்ட ரீதியாக வெற்றியை வேண்டும் என்றே கொடுத்து விட்டு தமிழ் மக்களை சீண்டி விடவே அவசரத்தனமான சிலை திறக்கும் முடிவு. மேலே @alvayanசொல்ல வருபது போல் இதில் ஒரு இந்திய அரசின் பின்புலம் இருக்கலாம்
  2. இஞ்ச பாருங்கோ, அந்த நேரத்தில் சோசியல் மீடியா இல்லை, you tube இல்லை, வெளி உலகத்தில் தமிழ் சமூகத்துக்கு கேட்ட பெயர் கொடுக்கக் கூடாது என்று இந்தியர் போர்வையில் அதை செஞ்சோம். இப்ப என்ன செய்தாலும் வெளியில் விஷயம் வந்துவிடும் என்பதால் அடக்கி வாசிக்கின்றோம்.
  3. விருந்துக்கு அழைக்கும் பொழுது கொஞ்சம் பிந்தி கடைசி ஆளாகப் போனால்த் தான் எல்லோருக்கும் முன் நாம் தனியாகத் தெரிவோம், கொஞ்சம் பெரிய ஆள் மரியாதை கிடைக்கும். முகத்தை தொடர்ச்சியாக காட்டிக்கொண்டே இருந்தால் அல்லது எப்பொழுதும் வெளியே சீமான் போல் வறட்டுத் தொண்டையால் கத்திப் பேசிக்கொண்டே இருந்தால் எதிர்பார்ப்பு தானாகக் குறைந்து விடும், you tubers, meams போடுவோர் இவரை இப்பொழுதே கீழ் இழுத்து விடுவார்கள். 2026 தேர்தல் சமயத்தில் வெளியே எல்லோரும் வரும்பொழுது மட்டும் இவரும் வரும்பொழுது தான் எதிர்பார்ப்பு இவர் மீது அதிகரிக்கும். வேட்டை ஆரம்பிக்கும் பொழுது தான் புலிக்கு மரியாதை.
  4. நல்ல கட்டுரை, ஆனால் தயவு செய்து மொழிபெயர்ப்பாளர்கள் இனியாவது இரசாயன மற்றும் மருத்துவ சொற்களை எழுதும் பொழுது ஆங்கிலத்திலும் எழுதி விடவும்
  5. நீங்கள் மேலே குறிப்பிட்ட தமது பார்வையில் இருப்பது போல உலகம் இயங்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் 1940 களிலேயே படித்த சைவர்களுக்கோ அல்லது இன்றும் பல கிறிஸ்தவ குடும்பங்களிலோ ( சில தலைமுறையாக இருப்பவர்கள் ) இருப்பதாக சொல்ல முடியாது. காரணம் அவர்கள் தமது சுற்றம், வட்டம் மதம், கலாசாரம் தாண்டி இன்னும் அதிகமானவற்றை உள்வாங்கியத்தோடு மட்டும் அல்லாமல் அவற்றில் நடைமுறைக்கு உகந்ததை தமது வாழ்வியலாகவும் கொண்டு விட்டார்கள். மறுபுறம் மற்றவர்களோ யாழ்ப்பாணம் தாண்டி போனது கிடையாது, மட்டக்களப்பு, திருகோணமலை கூடப் போனது இல்லை. ஆகக் கூடியது கதிர்காமத்துக்கு ஒரு நடை. பிள்ளைகளை யாழ் பல்கலைக்கழகம் தான் அனுப்புவார்கள், கொழும்பு அல்லது கண்டிக்கு அனுப்பினால் பிள்ளைகள் கெட்டு விடுமாம், ஆக இவர்களின் பிள்ளைகள் நிலையும் அதுதான், வெளிநாடு வந்த பின்னரும் சேரும் கூட்டமும் அதே தமிழ்க் கூட்டம் தான், குமிஞ்சு போய் ஒரே இடத்திலேயே போய் இருப்பது, அதே சாப்பாட்டை தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பது என்று. இவர்களை திருத்தவே முடியாது, கேள்வி கேட்டால் இனம் கூடித்தான் வாழ வேண்டும் என்று கதையளப்பு. உழைத்துப் பொருள் சேர்த்தவர்களிலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை படிப்பும், கொஞ்சம் செல்வமும், மேலை நாட்டு நாகரிகமும் எமக்கு கொஞ்சம் பிந்திக் கிடைத்து இருந்தால் எங்களுக்கும் எதியோப்பியா எரித்திரியர்களுக்கும் வித்தியாசம் இருந்திருக்காது
  6. கடவுளால் மட்டுமே சாத்தியம்
  7. அப்படியெல்லாம் நேரடியாக நெஞ்சில் சுடுவது போல் கேட்கக்கூடாது. இப்படிக் கேட்டால் பள்ளிக்கூட வாத்தியாரின் ரசிகர் குஞ்சுகளாம் தீவிர தமிழ் தேசியவாதிகளின் திடீர் மாரடைப்புக்கு நீங்கள் காரணமாகி விடுவீர்கள்.
  8. மேலே குறிப்பிட்ட இந்தத் தகவலால் போரின் பொழுது மருத்துவ மனை மீது தாக்குதல் நடத்தியது சரி தான் என்று வாதிட இலங்கை அரசுக்கு வாய்ப்பாகி விடப் போகின்றது
  9. மிக அருமையாக எழுதப்பட்ட கட்டுரை. ஏதாவது செய்து நாட்டை மீண்டும் இரத்த பூமியாக்க முனையும் தீவிர தேசியவாதிகளின் முகத்திரையை கிழித்த கட்டுரை
  10. ஊரில் முதியவர்களைப் பார்க்க வேலைக்கு ஆட்கள் இல்லை, சரியான மேசன், தச்சு வேலை தெரிந்தவர்கள் இல்லை, கடைகளில் வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு, கட்டட வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு, மருத்துவ உதவியாளார்கள் போதவில்லை. இந்த வேலையெல்லாம் இவர்கள் செய்ய மாட்டார்களா? லூசுகள்
  11. நிலைமையை உன்னிப்பாக அவதானித்தபின் எதிர்வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இலங்கையை சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் எடுப்பதால் அது இந்து சமுத்திர பொருளாதார மற்றும் பாதுகாப்புக்கு சிக்கல்களை உருவாக்கும் என்பதால் அழகிய இலங்கையை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார். அது இலங்கை தீவு மக்களுக்கு நிலையான சமாதானத்தைக் கண்டடையவும் அதன் பொருளாதார சுபீட்சத்துக்கும் உதவும் என்றும் கூறியுள்ள அவர் இலங்கை மக்கள் அதேயே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்
  12. @RishiKரிஷிகள் அப்படித்தான். வழி காட்டிவிட்டு சென்று விடுவர், ஆனால் நாம் தான் ரிஷி மூலம் பார்க்கப்படாது.
  13. கடைசியா சண்டை சாவகச்சேரியில் வந்து நிற்கின்றது. சாவாகச்சேரி எனது ஊர். இனி இங்க என்ன நடந்தாலும் நான் இனி என்ர ஊர் ஆக்களோட தான் 😄
  14. உண்மை இந்த பெரியாரைப் பற்றிய திடீர் குற்றச்சாட்டை சீமான் சொன்னதற்குக் காரணம் விவசாயி அல்லது புலி சின்னம் கிடைக்க மத்திய ஆளும் வர்க்கத்தின் ஆசியை வேண்டி இருக்கலாம்
  15. எனது பல தமிழ் புரட்டஸ்டாண்ட் கிறிஸ்தவ நண்பர்கள் பலரும் இன்றும் பொங்கல் கொண்டாடுவது இல்லை. அவர்கள் சொல்லும் காரணம் பொங்கல் பண்டிகையில் சூரியனுக்கு வணக்கம் செலுத்தப் படுகின்றது என்பதால் கடந்து சென்று விட வேண்டும்
  16. ஊரில் எங்கள் வீட்டில் இருந்தது. விக்ஸ் மரம் என்போம்
  17. பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி ஆகிய அறுவடை நாள் விழாக்களுக்கும் அந்த மக்களின் மதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோற்றம் பெற்ற தனித்தமிழ் இயக்கம் மற்றும் திராவிட இயக்கத்தினரால் வட இந்திய வேத மரபில் வந்த தீபாவளி போன்ற கொண்டாட்டங்களுக்கு எதிராக, தமிழர்களுக்கு என்று தாம் ஒரு தனி இனம் எனக் காட்டிட, ஒரு கொண்டாட்டம் தேவை எனும் புரிதல் ஏற்பட்டது. அதற்காக பொங்கல் பண்டிகையின் மத அடையாளம் மறைக்கப்பட வேண்டிய தேவை அன்றைய தமிழ் ஆர்வலர்களுக்கு இருந்தது. இதற்கு உதவியாக பண்டைய சில தமிழ் செய்யுள்கள் அமைந்து விட்டது அவர்களுக்கு தமது காரியத்தை செயல்படுத்த இலகுவாக்கி விட்டது . எமது முன்னோர்கள் அதை வேத பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராகவும் தமிழரை ஒற்றுமைப் படுத்தவுமே செய்தார்கள்
  18. ஜெயலிதா புலிகளை எதிர்த்ததே ஈழம் கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான்
  19. திராவிட ஆட்சியாளர்களுக்கு நான் இங்கு ஒன்றும் வக்காலத்து வாங்கவில்லை, ஆனால் அதற்கு மாற்று சீமான் வகையறாக்கள் இல்லை என்கிறேன். சட்டியில் இருந்து நெருப்புக்குள் விழும் நிலை அது. சமூக பொருளாதார நிலையில் தமிழ் நாட்டு மக்களை அடுத்த கட்டம் நோக்கி உயர்த்தி விட்டதில் திராவிட கட்சிகளின் பங்களிப்பை தமிழ் நாட்டில் உள்ள 80% வீத மக்கள் மறக்கவில்லை. இன்னும் அதிகம் செய்து இருக்கலாம் என்ற குறை எனக்கும் உண்டு தவிர வடலி வளர்த்து கள்ளு குடிக்கும் காம பரம்பரைகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்? தமிழ் மக்களில் கள்ளு இறக்கி வாழும் மக்களை சொல்கிறீர்கள் என்றால் அவர்களில் நான் இல்லை, ஆனால் உங்கள் சொற்களை கவனமாய்ப் பாவியுங்கள் அது குறிப்பிட்ட அம்மக்களை காயப்படுத்தி விடும்
  20. நீங்கள் மேலே உள்ள இரண்டு வகையினரில் முதல் வகையினருக்குள் வருவீர்கள். சீமானும் அந்த வகை தான்
  21. உண்மை! இது அரைகுறைகளுக்கான காலம். சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர் பின்வரும் வகைக்குள் வருவர் 1) ஆழ்ந்த சிந்தனைகளும், பக்குவமான பேச்சுக்களும் இவர்களிடமோ அல்லது இவர்கள் சார்ந்த குடும்ப அங்கத்தவர்களிடமோ இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு வைரஸ் தாக்குவது போல் இவர்களுக்கு சீமானின் தாக்கம் வந்து விடுகின்றது. 2) மத வெறியர்கள் இவர்களுக்கு கருணாநிதி, திராவிட இயக்கம் என்றாலே ஆரம்பில் இருந்தே கசப்புத் தான். சரியான சமயம் வரும்வரை காத்து இருந்தார்கள், ஈழ யுத்தம் முடிய போரின் தோல்விக்கு திராவிட இயக்கம் மேல் பழியைப் போட்டு விட்டார்கள். போரின் பொழுது இவர்கள் பிரபாகரனுக்கு பயந்து அடக்கி வாசித்தார்கள். இவர்களுக்கு இப்பொழுதும் சீமான் மேல் எந்தக் காதலும் இல்லை, மாறாக சீமானைக் கொண்டு தமிழ் இனத்தில் எஞ்சி இருக்கும் மிச்சம் மீதியையும் இந்துத்துவாவுக்குள் அடக்கப் பிரயசைப்படுகிறார்கள்
  22. எந்தத் தலைவரையும்/ நபரையும் அவரவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மற்றவர்களோடும், அப்போது நடந்த சம்பவங்களோடும், சமூக பிரச்சனைகளோடும் சேர்த்தே அணுக வேண்டும். ஈவேரா என்ற நபர் சொன்ன எழுதிய விடயங்களில் பிரச்சனைகள் இருக்கிறது, ஆனால் அதற்காக அவர் முற்றிலும் புறக்கணிக்கத்தக்கவரும் அல்லர். அவராலும் சமூகத்துக்கு சில பல நன்மைகள் கிடைத்து இருக்கிறது என்பதால் அவரை சீண்டாமலும் அதே சமயம் அளவுக்கு மீறி துதி பாடாமலும் விடுவதே புத்திசாலித்தனம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.